மதுரை மாநகருக்குக் கடம்பவனம், ஆலவாய், சிவபுரம், மன்றல், மதுரா நகர், வான்நகர், வளநகர், விழவுநகர், திருநகர், கடிநகர், முதுநகர், முத்துநகர், தொல்நகர், தூங்கா நகர் முதலான பல்வேறு சிறப்புப் பெயர்கள் உள்ளன. அவற்றுள் “நான்மாடக் கூடல்“ என்ற பெயரும் ஒன்று. பரஞ்சோதி முனிவர் வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து எழுதிய திருவிளையாடற் புராணத்தை எழுதியுள்ளார்.
திருவிளையாடல் புராணத்தில் 105 பாடல்களில் ‘நான்மாடக் கூடல்‘ என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இந்தப் பாடல்கள் கீழே இணைக்கப் பெற்றுள்ளன.
332.
பொன் அசலம் தனைச் செண்டால் புடைத்து நிதி எடுத்ததுவும் புனிதர்க்கு ஈசன்
பன்னரிய மறைப் பொருளைப் பகர்ந்ததுவும் மாணிக்கம் பகர்ந்த வாறும்
தொல் நகர் மேல் நீர்க் கிழவன் வர விடுத்த கடல் சுவறத் தொலைத்த வாறும்
அன்ன தனித் தொன் மதுரை நான் மாடக் கூடல் நகரான வாறும்.
1309.
கதிர் மதி மிலைந்த வேணிக் கண்ணுதல் வருணன் ஏய
அதிர் கடல் வறப்பச் செய்த ஆடல் ஈது அனையான் ஏய
முதிர் மழை ஏழின் மேலும் முன்னை நால் முகிலும் போக்கி
மதுரை நான் மாடக் கூடல் ஆக்கிய வண்ணம் சொல்வாம்.
1332.
வன் திறல் வருணன் விட்ட மாரியை விலக்க ஈசன்
மின் திகழ் சடையினின்று நீங்கிய மேகம் நான்கும்
குன்று போல் நிவந்து நான்கு கூடமாக் கூடலாலே
அன்று நான் மாடக் கூடல் ஆனது ஆன் மதுரை மூதூர்.
மேற்கண்ட 332, 1309 மற்றும் 1332 ஆவது பாடல்களில், மதுரைக்குக் “கூடல்“ என்ற பெயர் ஏற்பட்டதற்கான காரணம் விளக்கப்பட்டுள்ளது.
1596.
விரை செய் தார் அவன் யான் அங்கம் வெட்டினேன் அல்லேன் நீங்கள்
உரை செய்வது எவன் யார் என்போல் சித்தனை உடன்று மாய்த்து
வரை செய் தோள் விந்தைக்கு ஈந்தார் மற்று இது சுற்றம் வைகைத்
திரை செய் நீர்க் கூடல் எந்தை திரு உளச் செயல் கொல் என்றான்.
மேலே கண்ட 1596 ஆவது பாடலில் வைகைநீர் கூடல் செய்த இடம் மதுரை என்ற குறிப்பு உள்ளது.
மன்னவன் அறிவு தோன்ற இன்று ஒரு வயமா வீரன்
தன்னை நாம் கண்டு எழுந்து தடம் கரம் கூப்பி நின்ற
என் எனத் தவிசின் மீள இருந்திட நாணி நின்றான்.
3001.
வளைந்த மெய் உடைய அந்த மாதவ நரை மூதாட்டிக்கு
அளந்த பங்கு அடைப்பான் கூலி ஆள் கிடையாமல் ஆற்றத்
தளர்ந்து இனி என்னே மன்னன் தண்டிக்கின் என் செய்கேன் என்று
உளம் தடுமாறிக் கூடல் உடைய நாயகனை உன்னா.
3049.
வன்பு தாழ் மனத்தோர் வலி செய இன்ன மன்னான் மறுக்கம் உண்டேயோ
முன்பு போகிய ஆள் என் செய்தான் என்னாய் முடியுமோ இனி எனத் திரங்கி
என்பு போல் வெளுத்த குழலினாள் கூடல் இறைவனை நோக்கி நின்று இரங்க
அன்பு தேன் ஆக வருத்திய சிற்றூண் அமுது செய்து அருளினார் அருளால்.
3058.
அச்சம் உற்று உவகை ஈர்ப்ப அதிசய வெள்ளத்து ஆழ்ந்து
பொச்சம் இல் அன்பர் எங்கு உற்றார் எனப் புகுந்து தேடி
நச்சு அரவு அசைத்த கூடல் நாயகன் கோயில் நண்ணி
இச்சையில் இருக்கின்றாரைக் கண்டு போய் இறைஞ்சி வீழ்ந்தான்.
3110.
துண் துழாவும் கைம்மாவும் வெறுக்கைக் குவையும் மணிக் குவையும்
வண்டு வீழும் தார் அளக வல்லி ஆய மொடு நல்கிக்
கண்டு கூடல் கோமகனைக் காலில் வீழ்ந்து தன்னாடு
பண்டு போலக் கைக் கொண்டு போனான் தேன் ஆர் பனம் தாரான்.
3119.
பொய் உரை பிதற்றும் இந்தப் புன் சமண் களைகட்டு ஈண்டு
மெய் உரை வேத நீதி வியன் பயிர் தலைச் செய்து ஓங்கச்
செய்யுநர் எவரோ என்று சிந்தையில் கவலை பூண்டு
நையுநர் ஆகிக் கூடல் நாதனை வணங்கப் போனார்.
3121.
வேதியன் ஒருவன் கண்டி வேடமும் பூண்டோன் மெய்யில்
பூதியன் புண்டரிக புரத்தினும் போந்தோன் கூடல்
ஆதியைப் பணிவான் வந்தான் மங்கையர்க்கு அரசியாரும்
நீதிய அமைச்சர் ஏறு நேர்பட அவனை நோக்கா.
3137.
செம்பியன் நாடு நீந்தித் தென்னவன் நாடு நண்ணி
வெம்பிய சுரமும் முல்லைப் புறவமும் மேக வில்லைத்
தும்பிகை நீட்டி வாங்கும் மலைகளும் துறந்து பாகத்
தம்பி கையுடையான் கூடல் நகர்ப் புறம் அனுகச் செல்வார்.
3150.
சிட்டர் நோக்கி அத் தீயினை தென் தமிழ்க் கூடல்
அட்ட மூர்த்தியை அங்கு இருந்து அரு மறைப் பதிகம்
துட்டர் பொய் உரை மேற் கொண்டு தொல் முறை துறந்து
விட்ட வேந்தனைப் பற்று எனப் பாடினார் விடுத்தார்.
3230.
கண்டு கூடல் கோமகனும் கற்பும் நிறைந்த பொற்புடைய
வண்டு கூடும் தார் அளக வளவன் மகளும் மந்திரியும்
தொண்டு கூடி மடியாரும் காழிக்கு அரசைத் தொழுது துதி
விண்டு கூடற்கு அரிய மகிழ் வெள்ளத்து அழுந்தி வியந்தனர் ஆல்.
3237.
இன்று நீர் இட்ட ஏடு இங்கு யாவரும் காண நேரே
சென்றதே எங்கே என்றான் அதனை யாம் செம்பொன் கூடல்
மன்றவர் அருளால் இன்னே வருவிப்பம் என்று வாது
வென்றவர் நதியின் மாடே மேல் திசை நோக்கிச் செல்வார்.
3250.
வட புலது உள்ள ஈசன் பதிகளும் வணங்கிப் பாடக்
கடவம் என்று எழுந்து கூடல் கண் நுதல் பெருமான் தன்னை
இடன் உறை கயல் கண்ணாளை இறைஞ்சிப் பல்வரனும் பெற்று
விடை கொடு தமிழ் நாடு எங்கும் பணிந்தனர் மீண்டு போவார்.
3300.
அல்லல் உற்று அழுங்கி நின்றாள் பரிவு கண்டு அம் தண் கூடல்
எல்லை இல் கருணை மூர்த்தி அருளினால் எவரும் காணத்
தொல்லையின் படியே அன்னாள் சொல்லிய கரிகள் மூன்றும்
ஒல்லை வந்து இறுத்த கோயில் உத்தர குணபால் எல்லை.
3313.
கோட்டம் சிலை குனித்த கூடல் பிரான் ஆடல்
கேட்ட அம் செவி படைத்த பேறு அடைந்தேம் கெட்ட படி
நாட்டம் களிப்ப நறுமலர் தூஉய்க் கண்டு இறைஞ்ச
வேட்டங்கள் யாங்கள் என ஓதினார் மெய்த் தவரே.
3318.
ஐம் புலனும் கூடல் பெருமான் அடி ஒதுக்கி
நம்பன் உரு ஐந்து எழுத்து நாவாடக் கை கூப்பித்
தம் புனித சைவ தவத் தெய்வத் தேர் மேல் கொண்டு
உம்பர் வழி நடக்கல் உற்றார்கள் நற்றவரே.
--------------------------------
திருவிளையாடற் புராணப் பாடல்களை இணையத்தில் வழங்கியுள்ள தமிழ் இணைப் பல்கலைக்கழகத்திற்கு http://www.tamilvu.org/ நன்றி.
--------------------------------------------------------------------------
(கலித்தொகை 92-10)
நனவினால் போலும் நறு நுதால் அல்கல்
கனவினால் சென்றேன் கலி கெழு கூடல்
வரை உறழ் நீள் மதில்வாய் சூழ்ந்த வையைக்
கரை அணி காவின் அகத்து
(கலித்தொகை-குறிஞ்சிக்கலி - 57-8)
பூம் தண் தார்ப் புலர் சாந்தின் தென்னவன் உயர் கூடல்
தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண்கண்
ஏந்து கோட்டு எழில் யானை ஒன்னாதார்க்கு அவன் வேலின்
சேந்து நீ இனையையால் ஒத்ததோ சின் மொழி
(அகநானூறு 315/7)
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன்
அருங்கடி வியன் நகர்ச் சிலம்பும் கழியாள்
சேணுறச் சென்று வறுஞ்சுனைக்கு ஒல்கி
ஓம்பு அரண் கடந்த அடு போர் செழியன்
பெரு பெயர் கூடல் அன்ன நின் 10
கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே
அரும்பு அவிழ் பூஞ்சினை தோறும் இருங் குயில்
ஆனாது அகவும் பொழுதினான் மேவர
நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும்
தேன் இமிர் காவில் புணர்ந்து இருந்து ஆடுமார்
ஆனா விருப்போடு அணி அயர்ப காமற்கு
வேனில் விருந்து எதிர்கொண்டு
நான்மாடக்கூடல் (65) – நச்சினார்க்கினியர் உரை – நான்கு மாடம் கூடலின் ‘நான் மாடக் கூடல்’ என்றாயிற்று. அவை திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர்
எம் மனை வாராயாகி முன்னாள்
நும் மனைச் சேர்ந்த ஞான்றை அம்மனைக்
குறுந்தொடி மடந்தை உவந்தனள் நெடுந்தேர்
இழை அணி யானைப் பழையன் மாறன்
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண் 20
வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த
கிள்ளி வளவன் நல் அமர் சாஅய்க்
கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி
ஏதின் மன்னர் ஊர் கொளக்
கோதை மார்பன் உவகையின் பெரிதே
நெடு நல் யானை அடு போர்ச் செழியன்
கொடி நுடங்கு மறுகின் கூடல் குடாஅது
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய 15
ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து
நன்றி
--------------------------------------------