Monday, 31 December 2018

புராணக் கதைகள் ஏன் குடும்பக் கதைவடிவில் சொல்லப்பட்டுள்ளன? என்னிடம் கேட்டால்

புராணக் கதைகள் 
ஏன் குடும்பக் கதைவடிவில் சொல்லப்பட்டுள்ளன?

என்னிடம் கேட்டால்?


புராணக் கதைகள் அனைத்தும் அனைவரும் புரிந்துகொள்ளத்தக்க வகையில் குடும்பக்கதைகள் போலச் சொல்லப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு சந்திரனுக்கு 27 (நட்சத்திரங்கள்) மனைவிகள் என்று சொல்லப்பட்டிருக்கும்.  சூரியனுக்கு உஷா தேவி, சாயா தேவி என்ற இரண்டு மனைவியர் என்றும், சூரியனுக்கும் சாயாவிற்கும் பிறந்தவன் சனீசுவரன் என்றும் சொல்லப்பட்டிருக்கும்.

நமக்குத் தேவைப்படும் உணவோ மருந்தோ அப்படியே கொடுக்கப்படாது. மருந்தை அப்படியே விற்கவும் முடியாது, அப்படியே சாப்பிடவும் முடியாது.
மருந்துத் தயாரிப்பாளர் உற்பத்தி செய்த மருந்தை முதலில் ஒரு கூடு (capsule) போட்டு பத்திரப்படுத்தி வைப்பார்.  கூட்டு மாத்திரையை அப்படியே விற்க முடியாது. 10 எண்ணிக்கை கூட்டுமருந்தை ஒரு அட்டையில் அடைத்து வைத்து இருப்பார்கள். இதுபோல் 10 அட்டைகள் அடங்கியதை ஒரு காகித அட்டைப்பெட்டியில் அடைத்து வைத்து விற்பார்கள்.


இதுபோல் தான் புராணக்கதைகளும் இருக்கும், பல்வேறு படிநிலைகளைத் தாண்டி அது எல்லாக் காலத்திற்கும் எல்லோருக்கும் பயன் அளிக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கும்.

நாம் அட்டைகளை நீக்கி விட்டு கூட்டு மாத்திரையைச் சாப்பிடுகிறோம். நமது வயிறு கூட்டுமாத்திரையில் உள்ள மருந்தை மட்டும் எடுத்துக் கொள்ளும்.

நாம் புராணக்கதைகளை ஒன்றிக் கேட்டு அதன் அட்டைகளை நீக்கிவிட்டு கருத்தை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

No comments:

Post a Comment