Monday 29 October 2018

கங்கை என்ற விண் நீர்க்கோள், Ganga Puranam Theory

கங்கை என்ற விண்ணீர்க் கோள் பூமியில் இமயமலைத் தொடரின் பள்ளத்தாக்கில் இறங்கி யுள்ளது.


கங்கை பூமியில் இறங்கும்போது அதிலிருந்து எரியும் தன்மையுடைய பொருட்கள் எல்லாம் எரிந்து பூமியில் விழுந்த காரணத்தினால் பூமியில் மிகப்பெரிய பாலைவனங்கள் தோன்றியுள்ளன.

கங்கை இமயமலைப் பகுதியில் இறங்கிய காரணத்தினால், கங்கையிலிருந்த களிமண் படிந்து பாறைகளா இறுகி இமயமலையை ஒரு மடிப்புமலையாக மாற்றியுள்ளது.


இமயமலை முகடுகளில் இருந்து கங்கை வழிந்து ஓடியபோது அதிலிருந்த களிமண் படிந்து பர்மா, இந்தோனியா, தாய்லாந்து, ஜாவா, சப்பான் நிலத்திட்டுகள் உருவாகி உள்ளன. 


கங்கை விழுந்த இடம் தக்களமேகன் பாலைவனமாக மாறியுள்ளது.  அதிவேகமானப் பூமியில் இறங்கிய கங்கை பூமியைத் துளைத்துச் சென்ற இடம் தக்களமேகன் பாலைவனமாக மாறியுள்ளது.  கங்கை துளைத்துச் சென்ற காரணத்தினால் தக்களமேகன் பாலைவனம் மிகவும் ஆழமான பாலைவனமாக உள்ளது.  

அதிவேகமாகப் பூமியில் இறங்கிய கங்கை என்ற வீண்ணீர்க்கோளானது  பூமியைத் துணைத்துச் சென்று மரினாடிரன்ச் என்ற இடத்தில் வெளியே வந்துள்ளது.  பூமியைத் துளைத்துச் சென்ற கங்கைநீர் வெளியே வந்த காரணத்தினால் மரினாடிசன்ச் மிகவும் ஆழமான கடலாக உள்ளது.
  

மரினாடிரன்ச் பகுதியிலிருந்து பூமியில் பரவிய கங்கைநீர் ஆல்ப்ஸ்மலையைக் கடந்து சென்று அதை ஒரு மடிப்புமலையாக மாற்றியுள்ளது.



கங்கை என்ற விண்ணீர்க்கோள் பூமியில் இறங்கிய காரணத்தினால் பூமியின் கடல்நீர் உப்புநீராக மாறியுள்ளது.  பூமியின் கடல்நீரின் அளவு கூடியுள்ளது.  கடல்மட்டம் பூமி யெங்கும் உயர்ந்துள்ளது.  பூமி யெங்கும் மடிப்புமலைகளும் மண்மலைகளும் தோன்றியுள்ளன.


அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

Sunday 28 October 2018

மதுரைக்கு அருகே விண்கற்கள் விழுந்துள்ளனவா?

மதுரைக்கு அருகே 
விண்கற்கள் விழுந்துள்ளனவா ?


விண்கற்கள் விழுந்த காரணத்தினால் திங்களில் (சந்திரனில்) வட்டவட்டமாகப் பள்ளத்தாக்குகள் தெரிகின்றன.  திங்களில் தெரிவது போன்றே மதுரைக்கு அருகிலும் வட்டவடிவிலான மலைகள் சூழ்ந்திருக்கும் பள்ளத்தாக்குகளைக் காணமுடிகிறது.

மதுரையைச் சுற்றிலும் விண்கற்கள் விழுந்ததற்கான அடையாளங்கள் இன்றும் காணக்கிடைக்கின்றன.  விண்கற்கள் விழுந்த இடங்களாக ஐந்து இடங்களைச் சிவப்பு மையினால் குறித்து இத்துடன் இணைத்துள்ளேன்.


தமிழகத்தில் காணப்படும் இந்த வட்டவடிவிலான மலைகள் விண்கற்கள் விழுந்து உருவானவையா?  அப்படியானால் அங்கே விழுந்த விண்கற்கள் எங்கே?  சங்கம் வைத்துத் தமிழாய்ந்த தமிழர் விண்கற்களை ஆராய வில்லையா?




எரியோடு என்ற ஊர் உள்ள இடம் எரிகல்ஓடு விழுந்த இடமாக இருக்கக் கூடும்.   ஓடு விழுந்ததனால் அங்கே பள்ளம் ஏதும் ஏற்படவில்லை.  எரியோடு ஊருக்கு அருகில் கடவூர் இடையபட்டியில் உள்ள சுமார் 8 கி.மீ. அளவு விட்டம் கொண்ட வட்டவடிமான மலைப்பள்ளத்தாக்குப்பகுதியே எரிகல் விழுந்த இடமாக இருக்கக்கூடும். எரிகல் விழுந்த காரணத்தினால்தான் அது ஒரு வட்டவடிமான பள்ளத்தாக்காக உள்ளது. 

குமரிக்கோட்டைக் கொடுங்கடல் கொண்டபோது தமிழகத்தைத் தாக்கிய கடல்வெள்ளத்தினால் (பெருஞ் சுனாமியினால்) அடித்துவரப்பட்ட sedimentsஆல் இந்த 8 கி.மீ. அளவு விட்டம் கொண்ட வட்டவடிவமான பள்ளத்தாக்கு மூடப்பெற்றுள்ளது.  கடல்வெள்ளம் வடிந்து வெளியேறிய வழித்தடங்கள் இப்போது கணவாய்களாக (பாதைகளாக) மாறியுள்ளன என்பது எனது கருத்து.

மதுரையிலும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  திருவீழிமிழலையிலும் உள்ள கோயிலின் கருவறை விமானங்கள் விண்கற்களால் ஆனவையாம்.   இந்த இரண்டு விமானக் கற்களும் விண்ணில் இருந்து வந்து சேர்ந்த காரணத்தினால், இவற்றை “விண்ணிழி விமானம்“ எனத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகின்றது.

தொல்லியலாளர் போற்றுவோம்,
தமிழரின் தொன்மை போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
...............................................

வாசிக்கப் பட்டவை...

(1)
திருவாலவாய்க் காண்டம்
நாற்பத் தொன்பதாவது திருவாலவாயான படலம்

“தேனிழி குதலைத் தீஞ்சொற் சேனெடுங் கண்ணி கோயில்
வானிழி விமானம் பொற்றா மரைவிளை யாட்டின் வந்த
கானிழி யிடபக் குன்றங் கரிவரை நாகக் குன்றம்
ஆனிழி வரைவ ராக வரைமுத லழிவி லாத“

(2)
திருவிளையாடற் புராணம்
பாம்பு எல்லைகாட்டிய படலம் பாடல் எண் 2340

“நுண்ணிய பொருளினு நுண்ணி தாயவர்
விண்ணிழி விமானநின் றெழுந்து மீனவன்
திண்ணிய வன்பினுக் கெளிய சித்தராய்ப்
புண்ணிய அருட்கடல் ஆகிப் போதுவார்“


4. திருப்புகலியும் திருவீழிமிழலையும்
291

ஏகபெ ருந்தகை யாயபெம்மா
னெம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
மேகமு ரிஞ்செயில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே. 4

38. சந்தள றேறுத டங்கொள்கொங்கைத்
தையலொ டுந்தள ராதவாய்மைப்
புந்தியி னான்மறை யோர்களேத்தும்
புகலி நிலாவிய புண்ணியனே
எந்தமை யாளுடை யீசவெம்மா
னெம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
வெந்தவெண் ணீறணிவார்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே. 5

---------------------------------------------------------------------------
திஇந்து பத்திரிக்கைச் செய்தி,

-----------------------------------------------------------------------------

Monday 22 October 2018

திருவிளையாடல் புராணத்தில் திருப்“பூவணம்”


திருவிளையாடல் புராணத்தில்
திருப் 'பூவணம்'  ஊரின் பெயர்
இடம் பெற்றுள்ள பாடல்களின் தொகுப்பு

93.         
கொங்கையே பரங்குன்றமும் கொடும்குன்றும் கொப்பூழ்
அங்கமே திருச் சுழியல் அவ்வயிறு குற்றலம்
செம் கை ஏடகம் மேனியே பூவணம் திரள் தோள்
பொங்கர் வேய் வனம் திருமுக மதுரை ஆம் புரமே.

1857.    
பரும் கை மால்வரைப் பூமியன் பைந்தமிழ் நாட்டின்
இரங்கு தெண் திரைக் கரங்களால் ஈர்ம் புனல் வைகை
மருங்கில் நந்தனம் மலர்ந்த பன் மலர் தூ உய்ப் பணியப்
புரம் கடந்தவன் இருப்பது பூவண நகரம்.

1859.    
கிளிஉளார் பொழில் பூவணக் கிழவர் தம் கோயில்
தளி உளார் தவப் பேறு எனா அடாது கு பூந்தார்
அளி உளார் குழல் அணங்கு அனாள் அந்தரத்தவர்க்கும்
களி உளார் தர மயக்கு உறூம் கடல் அமுது அனையாள்.

1862.    
திருத்தர் பூவண வாணரைச் சேவித்துச் சுத்த
நிருத்தம் ஆடி வந்து அடியரைப் பொருள் என நினையும்
கருத்தளாய் அருச்சித்து அவர் களிப்ப இன் சுவை ஊண்
அருத்தி எஞ்சியது அருந்துவாள் அஃது அவள் நியமம்

1863.    
மாதர் இந் நெறி வழங்கும் நாள் மற்று அவள் அன்பை
பூதலத்து இடைத் தெருட்டு வான் பொன் மலை வல்லி
காதல் நாயகன் திரு உருக் காணிய உள்ளத்து
ஆதரம் கொடுத்து அருளினார் பூவணத்து ஐயர்.    

2346.    
தென் திசைப் பரங் குன்றமும் வடதிசை இடபக்
குன்றமும் குடக் கேடக நகரமும் குணபால்
பொன்றல் அம் கிழித்து எழு பொழில் பூவண நகரும்
என்று நால் பெரு வாயில் கட்கு எல்லையாய் வகுத்தான்.

________________________________________

திருவிளையாடல் புராணப் பாடல்களை மின்னாக்கம் செய்து பதிவு செய்து வைத்துள்ள தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திற்கு நன்றி.
http://www.tamilvu.org/library/libindex.htm

“யானை” என்ற சொல் இடம் பெற்றுள்ள திருவிளையாடல் புராணப் பாடல்களின் தொகுப்பு


திருவிளையாடல் புராணத்தில்
யானைஎன்ற சொல் இடம் பெற்றுள்ள பாடல்களின் தொகுப்பு


60.         
சாறு அடு கட்டி எள்ளுச் சாமை கொள் இறுங்கு தோரை
ஆறு இடு மத மால் யானைப் பழுக்குலை அவரை ஏனல்
வேறு பல் பயறோடு இன்ன புன்னில விளைவு மற்றும்
ஏறொடு பண்டி ஏற்றி இரு நிலம் கிழிய உய்ப்பார்.  

113.       
மகர வேலை என்று யானை போல் மழை அருந்து அகழிச்
சிகர மாலை சூழ் அம் மதி திரைக் கரம் துழாவி
அகழ ஓங்கு நீர் வைகையால் அல்லது வேற்றுப்
பகைவர் சேனையால் பொரப் படும் பாலதோ அன்றே.   

127.       
மருமச் செம்புனல் ஆறிட அடு கோட்டுப்
பருமச் செம் கண் மால் யானையின் பனைக்கையும் மறைநூல்
அருமைச் செம் பொருள் ஆய்ந்தவர்க்கு அரும் பொருள் ஈவோர்
தருமச் செம் கையும் ஒழுகுவது ஆன நீர் ஆறு.   
162.       
தரங்க வேலைகள் தம்மையே தாள் உறப் பிணித்துத்
துரங்க மா எனத் தொகுத்து அமந்து உறை பல வருவி
இரங்கு ஓர் அறி உயிர் வரை யாவையும் பெயர்த்து
மரம்கொல் யானை போல் பிணித்த கூடம் பல மன்னோ.
164.       
தொளைய கல்லை மால் எனக் கொண்டு சுழற்றியும் செம் தூள்
அளையும் யானை போல் பாய்ந்து மல் ஆற்றியும் ஆற்றல்
விளைய வாளொடு கேடகம் வீசியும் வென்றி
இளையர் ஆடு அமர் பயில்வன எண் நிலாக் கூடம்.
230.       
அம் கயல் கண்ணி தன்னையும் எந்தை ஆல வாயானையும் இதய
பங்கயத்து இருத்திச் சமாதியில் இருந்து பரவசம் அடைந்து பார்ப் பதிக்குச்
சங்கரன் அருளிச் செய்த சங்கிதையை தாரகன் உடல் இரண்டாகச்
செம்கை வேல் விடுத்த சேவகன் எனக்குத் தெருட்டினான் அனைய சங்கிதையில்.    
242.       
எள் இழுது அன்னம் கன்னி இவுளி தேர் யானை இல்லம்
வெள்ளியான் பொன் பூண் ஆடை விளைவொடு பழனம் உன்னாத்
தள்ளரும் அடிமை ஆதி தானங்கள் செய்த பேறும்
வள்ளறன் காசி ஆதிப் பதிகளில் வதிந்த பேறும்.  
286.       
பிரயாகை தனின் மகரமதி நாள் முப்பதும் குடைந்து பெறும் பேறு இந்தத்
திரை ஆர் பைந் தடத்து ஒரு நாள் மூழ்குவோன் பெறும் விரத சீலம் பூண்டு
வரையாமல் ஒரு வருடம் படிந்து உமை ஐ அமரர்  சிகாமணியாம் வேத
உரையானை வழிபடுமேல் மலடிக்கு நன் மகப் பேறு உண்டாம் மன்னோ.  
306.       
கலி கடல் இரவி தோன்ற கருகு இருள் உடையு மாபோல்
ஒலி கெழு பெருங்காற் அள்ள உடைபடு மேகம் போல
வலி கெழு மடங்கல் சீற மாயும் மால் யானை போலக்
குலிசவல் ஏறு தாக்கப் பொடிபடும் குன்றம் போல.
380.       
மறுத்தவா வஞ்சப் போரால் வஞ்சித்து வென்று போன
கறுத்தவாள் அவுணற் கொல்வான் கடும்பரி நெடும் தேர் நீழல்
வெறுத்த மால் யானை மள்ளர் வேலை புக்கு எழுந்து குன்றம்
அறுத்த வானவர் கோன் அந்த அவுணர் கோ மகனைச் சூழ்ந்தான்.   
449.       
தீங்கு அரிய ஆசி மொழி செப்பித் தன் செம் கரத்தின்
நீங்கு அரிய தாமரையை நீட்டினான் மற்று அதனைத்
தாங்கு அரிய செல்வத் தருக்கால் ஓர் கை ஓச்சி
வாங்கி மத யானையின் மேல் வைத்தான் மதி இல்லான்.    
450.       
கீறிக் கிடந்த மதி அனைய கிம்புரி கோட்டு
ஊறிக் கடங் கவிழ்க்கும் மால் யானை உச்சியின் மேல்
நாறிக் கிடந்த நறு மலரை வீழ்த்தி உரல்
சீறிக் கிடந்த நெடும் தாளால் சிதைத்தது அன்றே.  
455.       
சேட்டானை வானவ நின் சென்னி செழியரில் ஓர்
வாள் தானை வீரன் வளையால் சிதறுக நின்
கோட்டான நால் கோட்டு வெண் நிறத்த குஞ்சரமும்
காட்டு யானை ஆக என விட்டான் கடும் சாபம்.   
463.       
தூம்பு உடை கையான் மொண்டு மஞ்சனம் தூ நீர் ஆட்டித்
தேம் புடை ஒழுகப் பள்ளித் தாமமும் தெரிந்து சாத்திப்
பாம்பு உடைத்து ஆய வேணிப் பரனை அர்ச்சிக்க உள்ளத்து
ஆம் புடை அறிந்த எந்தை யானையை நோக்கிக் கூறும். 
547.       
கல்யாண மணி மௌலி வேந்தரையும் கால் யாப்புக் கழல நீத்துக்
கொல்யானை பரி நெடும் தேர் அரசுரிமை தொன் முறையால் கொடுத்துப் போக்கிப்
பல்லாரும் கொள்க எனப் பண்டாரம் தலை திறந்து பசும் பொன்னாடை
வில்லாரும் மணிக் கொடும் பூண் வெறுக்கை முதல் எனைப் பலவும் வெறுப்ப வீசி.  
555.       
மங்கல தூரியம் முழங்க மால் யானை உச்சி மிசை வந்த பூத
கங்கை முதல் ஒன்பது தீர்த்தமும் நிரப்பிக் கதிர் விடு பொன் கடம் பூசித்துப்
புங்கவரை மந்திரத்தீ வளர்த்து அமுதம் அருத்தி எரி பொன்னால் செய்த
சிங்க மணி ஆதனத்தை நேசித்துப் பூசித்துத் தெய்வம்  ஏற்றி.   
556.       
திரு முடியை மதயானை மிசை வைத்து நகரை வலம் செய்து பூசித்து
அரு மணியால் சுடிகை இழைத் தடாகத்தால் குயிற்றியது ஓர் ஐவாய் நாகம்
பெரு மணி நீள் படம் பரப்பி மிசை கவிப்ப அச் சிங்க பீடத்து ஏற்றிக்
குரு மணி வாள் நகை மயிலைக் கும்பத்துப் புண்ணிய நீர் குளிர ஆட்டி.  
558.       
பால் அனைய மதிக் கவிகை மிசை நிழற்ற மதி கிரணம் பரப்பி அன்ன
கோல மணி கவரி புடை இரட்ட மலர் மழை தேவர் குழாம் உடூற்றக்
காலை இளம் கதிர் கயிலை உதித்து என வெண் கடா யானைக் கழுத்தில் வேப்ப
மாலை முடிப் பெண் அரசை மங்கல துரியம் முழங்க வலம் செய்வித்தான்.    
609.       
செருவின் மா தண்டம் தாங்கிச் செல்லும் வெம் கூற்றம் என்ன
அருவி மா மதநீர் கால வரத்த வெம் குருதி கோட்டால்
கருவி வான் வயிறுக் ஈண்டு கவிழு நீர் ஆயம் காந்து
பருகிமால் வரை போல் செல்வ பரூஉப் பெரும் தடக்கையானை.    
612.       
எண் புதைத்து எழுந்த வீரர் இவுளி தேர் யானை வெள்ளம்
மண் புதைத்தன பதாகை மாலை வெண் கவிகை பீலி
விண் புதைத்தன நுண் தூளி வெயில் விடு பரிதி புத்தேள்
கண் புதைத்தன பேர் ஓதை கடல் ஒலி புதைத்தது அன்றே.    
781.       
காமரு சுரபித் தீம்பால் கற்பகக் கனி நெய் கன்னல்
நமரு சுவைய இன்ன நறு மது வருக்கம் செம் பொன்
ஆம் அணி வட்டத் திண்கால் பாசனத்து அமையப் பெய்து
தேமரு கொன்றை யானைத் திருக்கை தொட்டு அருள்க என்றார்.    
956.       
பங்கயச் செவ்வித்து ஆகித் கண் மனம் பருகு காந்தி
அங்கு அழல் காலும் சொன்ன அடைவினில் திரண்டு நீண்ட
சங்கமும் வட்டம் தோன்றச் செழு முழந்தாளும் நால் வாய்த்
துங்க ஈர்ங் கவுண் மால் யானைத் துதிக்கை போல் திரள் கவானும். 
1005.    
இடை மயிர் நரம்பு அற்று இருபதோடு ஒரு நான்கு எழில் விரல் அளவோடு வட்ட
வடிவு அதாய்ச் சிறுகி மெலிவது நிதம்ப மத்தகம் ஆமையின் புறம் போல்
படிவ நேர் ஒத்தல் நன்று இரு குறங்கும் படுமயிர் என்பு அகன்று யானைத்
தட உடைக் கையும் கரபமும் கதலித் தண்டு ஒத்து இருக்கின் நன்று என்ப.
1024.    
வான மதி சேர் முடி மறைத்த வழுதி மகனே இவன் என் என்றால்
ஆனை எழுத்தில் சிங்க இள அடலேறு என்ன வயல் வேந்தர்
செனை தழுவ வரும் பவனிக்கு ஒப்பு ஏது ஒப்புச் செப்பும் கால்
யானை மகளை மணந்து வரும் இளையோன் பவனிச் செல்வமே.   
1041.    
வட்ட ஆமை பலகை வீசு வாளை வாள் கண் மகரமே
பட்ட யானை பாய் திரைப் பரப்பு வாம் பரித்திரள்
விட்ட தோணி இரதம் இன்ன விரவு தானை யொடு கடல்
அட்டம் ஆக வழுதி மேல் அமர்க்கு எழுந்தது ஒக்குமே.  
1217.    
விடம் கலுழ் படைக்கலன் இன்றி விண்ணவர்
அடங்கலும் தழீஇக் கொள அடுத்துத் தானவ
மடங்கலை வருக என நோக்கி வானவக்
கடம் கலுழ் யானை போல் கரைந்து கூறுவான்.   
1313.    
ஊழிநாள் வெடிக்கும் அண்ட கடாகத்தின் ஒலிபோல் ஆர்த்துப்
பாழிவான் உருமு வீழப் பணாடவி மணிகள் சிந்தி  
ஆழி நீர் ஞாலம் தாங்கும் அரா உடல் நெளிய திக்கில்
சூழி மால் யானை நின்ற நிலை கெடத் துணுக்கம் கொள்ள.
1371.    
கடைக்கண் சிறிதே குறித்தார் முன் கடாக் கல் யானை
மடைக் கண் திறந்து மதம் மூன்றும் வழிய விண் வாய்
அடைக்கும் படிவாய் திறந்து ஆர்த்துப் புழைக்கை நீட்டித்
தொடைக் குன்று அனான் கைச் சுவைத் தண்டைப் பறித்தது அன்றே.
1379.    
முத்த மாலிகை வாங்குமுன் முன் நின்ற
சித்த சாமி திரு உருக் கண்டிலன்
மத்த யானை வடிவமும் ஏனைய
ஒத்தது ஆக உரவோன் வெருவினான். 
1386.    
கட்டு அவிழ் கடுக்கையர் கல்யானை கழை தின்ன
இட்டது இது பஞ்சவன் இடத்து அமணர் ஏவி
விட்ட மத யானை விழ மேவலர் புரத்தைச்
சுட்ட கணை விட்டு உயிர் தொலைத்த முறை சொல்வாம்.    
1399.    
கூற்று எழு தோற்றம் போல அஞ்சனக் குன்றம் போலக்
காற்று எழு செவியும் நால்வாய் கௌவிய மருப்பும் மாறா
ஊற்று எழு மதமும் ஊசல் ஆடிய ஒற்றைக் கையும்
ஏற்று எழு விடம் போல் சீறி எழுந்தது ஓர் தறுகண் யானை.  
1416.    
கொண்டலின் அலறிச் சீறி வீழ்ந்தது கொடிய வேழம்
பிண்டது பாரும் சேடன் சென்னியும் பிளந்த தண்டம்
விண்டது போலும் என்னத் துண் என வெருவிப் போன
பண்டைய தருக்கும் வீறும் படைத்தன திசை மால் யானை.   
1417.    
புதை படக் கரித்தோல் போர்த்த புண்ணிய மூர்த்தி தாளால்
உதை படக் கிடந்த கூற்றம் ஒத்தது மத்த யானை
சுதைபடு மதிக்கோ வேந்தன் தொழுகுலச் சிறுவன் ஒத்தான்
பதை படும் அமணர் கால படர் எனப் படரில் பட்டார்.   
1532.    
தெளியாதே யாம் இழைத்த தீத்தண்டம் பொறுத்தி என
விளி ஆவின் அருள் சுரந்து வேண்டுவன நனி நல்கி
அளி ஆனாம் மனத்து அரசன் அவனை அவன் இடைச் செலுத்திக்
கனி யானை விழ எய்த கௌரியனைப் போய்ப் பணிவான்.

1628.    
உடைந்து போனவர் அனைவரும் ஓர் இடத்து இருள்போல்
அடைந்து நாமுன்பு விடுத்த மால் யானை போல் இன்று
தொடர்ந்த பாம்பையும் தொலைத்தனர் மேலினிச் சூழ்ச்சி
மிடைந்து செய்வதை யாது என வினயம் ஒன்று ஓர்வார்.
1665.    
வெவ்வியமும் மதயானை விறல் குல பூடணன் சமணர்
அவ்வியம் வஞ்சனை கடந்த அனந்த குணச் செழியன் பால்
செவ்விய செம் கோல் வாங்கித் திகிரி திசை செல உருட்டி
வவ்விய வெம் கலி துரந்து மண் காத்து வருகின்றான்.  
1711.    
அம்கண் வெள்ளி அம் பலத்துள் ஆடும் அடிகள் அவன் கனவில்
சங்கக் குழையும் வெண்ணிறும் சரிகோவணமும் தயங்க  உரன்
சிங்க நாதம் கிடந்து அசையச் சித்த வடிவா எழுந்து அருளி
வெம் கண் யானைத் தென்னவர் கோன் முன் நின்று இதனை விளம்புவார்.
1824.    
மருமகன் தன்னுடன் எழுந்து மாமனான வளவர் கோன்
பொரும் அகன்ற சேனை யானை புடை நெருங்க மதி வழித்
திரு மகன் தன் மேல் அமர்த் திறம் குறித்து முரசு அறைந்து
உரும் அகன்ற பல்லியம் ஒலிப்ப வந்துளான் அரோ.

1839.    
தறிந்த தாள் தகர்ந்த சென்னி தரை உருண்ட வரை எனச்
செறிந்த தோள் சரிந்த தேர் சிதைந்த பல் படைக்கலம்
முறிந்த யானை கையிறா முழங்கி வீழ்ந்த செம்புனல்
பறிந்த பாரு பார் இடங்கள் பைத்த கூளி மொய்த்தவே.  
1854.    
அறவன் நீ அல்லையோ உன் அகத்தினுக்கு இசைந்த செய்கென
இறைவனது அருளால் வானின் எழுமொழி கேட்டு வைகைத்
துறைவனும் அறத்தின் ஆற்றால் சோழனைச் சிலமால் யானை
மற வயப் பரிபூண் மற்றும் வழங்கினான் விடுத்தான் பின்னர். 
1966.    
வேட்டம் செய் காதல் ஒரு நாட்டம் ஏகி வன மேட் டெங்கும்மா தடவி எரியா
நாட்டம் செய் காய் உழுவை நீட்டும் கை யானை முக நாட்டும் பல் ஏனம் இவை முதலா
ஓட்டம் செய் தேரி ரவி கோட்டின் கணேறி இருள் ஊட்டம் அந்தி மாலை வரும் அளவாக்
கோட்டம் செய்வார் சிலையின் மாட்டு அம்பின் ஊரியிர் கூட்டு உண்டு மா நகரில் வருவான். 
2033.    
பூழியர் பெருமான் கோயில் புகுந்து வேத்து அவையத்து எய்திச்
சூழி மால் யானை யானைத் தொழுது பல் புகழ் கொண்டாடி
ஏழ் இசை மழலை வீணை இடந்தழீ இச் சுருதி கூட்டி
வாழியின் இசைத்தேன் மன்னன் அரும் செவி வழியப் பெய்தான்.   


2379.     தடிந்தன தோளும் தாளும் தகர்ந்தன சென்னி மண்ணில்
படிந்தன மடிந்தோர் யாக்கை பரிந்தன தும்பைத் தாமம்
மடிந்தன மையல் யானை மாண்டன தாண்டும் பாய்மான்
ஒடிந்தன கொடிஞ்சி மான் தேர் ஒதுங்கின ஒழிந்த சேனை.    
2386.    
துடுவை வான் முறம் கால் தள்ளும் துணைச் செவி அரிசி கோட்டின்
உடுவை நேர் மணியின் குப்பை உரல் அடி உலக்கை திண்கோ
அடுகலம் கடம் திச் சோரி மத்தக அடுப்பு என்று யானைப்
படுகளம் விசயச் செல்வி அடுமடைப் பள்ளி மானும்.    

2560.    
பரும் கை மால் யானை ஏனம் பாய் புலி அரிமான் மீனம்
இரும் குறள் ஆமை கொண்ட இகல் வலி கடந்தாய் போற்றி
குரங்கு பாம்பு எறும்பு நாரை கோழி ஆண் அலவன் தேரை
கருங்குரீஇ கழுகின் அன்புக்கு இரங்கிய கருணை போற்றி.    
2632.    
பாத மலர் இணை போற்றி பன்னிரண்டு கையானைப் பயந்தாய் போற்றி
வேத முடி கடந்த பர ஞானத்தில் ஆனந்த விளைவே போற்றி
போத வடிவாய் நால்வர்க்கு அசைவிறந்து நிறைந்த பரம் பொருளே போற்றி
மாதவள நீறு அணிந்த மன்னா அம் கயல் கண்ணி மணாள போற்றி.
2777.    
எல்லை கூறிய குளிர் மதி அடுக்கம் வந்து எய்த
வல்லல் யானையான் இன்னமும் வயப்பரி வந்தது
இல்லையால் இது என் என ஓலையும் எழுதிச்
செல்ல உய்த்தனன் வாதவூர் அமைச்சர் திருமுன். 
2801.    
சிந்துர நுதன் மால் யானைச் செல்வப் பரிக்கு வேறு
மந்துறை அகன்ற ஆக வகுக்க சூழ் தண்ணீர் ஊட்ட
நந்து உறை தடங்கள் வேறு தொடுக நீள் நகரம் எங்கும்
இந்து உறை மாடம் எல்லாம் அழகு செய்திடுக என்றார். 
2924.    
இருமைக்கும் துணையாய் நின்ற இரு பிறப்பாளர்க்கு ஏற்ப
அருமை தாம் சிறப்பு நல்கி அவர் இடத்து அவரை உய்த்துப்
பருமத்த யானை வேந்தன் பகல் கதிர் வானத்து உச்சி
வரும் அப்போது எழுந்து செம் பொன் மாட நீள் கோயில் புக்கான்.   
2994.    
வெறித் தடக்கை மத யானை மந்திரிகள் வேறு வேறு பல குடிகளும்
குறித்து எடுத்து எழுதி எல்லை இட்டு அளவு கோல் கிடத்தி வரை கீறியே
அறுத்து விட்டு நகர் எங்கணும் பறை அறைந்து அழைத்து விடும் ஆள்எலாம்
செறித்து விட்டு அவர்க்கு அளந்த படி செய்மின் என்று வருவித்தனர்.
3113.    
கோது அறு குணத்தின் மிக்க குலச்சிறை என்பான் அங்கு ஓர்
மேதகு கேள்வியானை விடுத்தனன் ஈண்டு தென்னன்
காதலியோடு காவல் கடவுள் செம் பதுமக் கோயில்
மாதரை மணந்து செல்வான் போல் வந்து மதுரை சேர்ந்தான்.  
3220.    
ஊழின் வலியால் அமணர் அதற்கு உடன் பட்டார்கள் அஃது அறிந்து
சூழி யானைக் குலைச் சிறையும் தச்சர் பலரைத் தொகுவித்துக்
காழின் நெடிய பழு மரத்தில் சூல வடிவாய்க் கழு நிறுவிப்
பாழி நெடிய தோள் வேந்தன் முன்னே கொடு போய் பரப்பினார்.
3236.    
மற்று இவர் தம்மை ஊற்றம் செய்திலர் மடிந்தோர் யாரும்
சுற்றிய சேனம் காக நரிகள் நாய் தொடர்ந்து கௌவிப்
பற்றி நின்று ஈர்த்துத் தின்னக் கிடந்தனர் பரும யானை
வெற்றி கொள் வேந்தன் காழி வேந்தரைத் தொழுது நோக்கா.  
3254.    
ஞானமா மதநீர் சோர ஞான சம்பந்தர் என்னும்
மானமா யானை வந்து கடம்பமா வனத்தில் துன்னும்
ஊனம் ஆம் சமணர் என்னும் தருக்களை ஒடித்து வெண்ணீறு
ஆன மாப் பூழி அள்ளித் தூற்றியது அவனி எங்கும்.

3263.    
நாள் சில கழிந்த பின்னர் நாய்கர் ஏறு அனையான் அன்ன
வாள் புரை கண்ணியானை மதுரையில் கொடுபோய் அங்கு என்
கேளிர் முன் வேட்பல் என்று கிளந்து தன் மாமன் ஈட்டு
நீள் பெரும் பொருள்கள் மற்றும் கைக் கொண்டு நெறியில் செல்வான்.    
3311.    
கன்னிதன் வதுவைக் கரிகளாய் இலிங்கக் கடவுளும் கவைக்கரும் கோட்டு
வன்னியும் படுநீர்க் கூவலும் வந்த வழி இது மதுரை  நாயகனைக்
சென்னியில் வைத்த முனிவனைச் பூசை செய்து மாதவரொடு  ஒருங்கு எய்திப்
பன்னிற மலர் தூஉய் ஆலவா யானைப் பரவிய பரிசு அது பகர்வாம். 
3337.    
முடங்கு கால் சிலந்தி யானை மலை மகள் முளரி நாட்டத்து
தடங்கடல் வண்ணன் நோற்ற தவ நகர் இது முச் சென்னி
மடங்கல் ஏறு அனையான் நாம வரை இது குடைந்தோர் பாவம்
அடங்கலும் பருகும் பொன்னி ஆறு இது காண்மின் காண்மின். 
3346.    
மறுகு தோறும் பணிந்து எழுந்து வளைந்து வளந்து பொன் கோயில்
குறுகி விதியால் பொன் கமலம் குடைந்து செய்யும் குறை நிறுவி
உறுதி பெற ஐந்து எழுத்து எண்ணி ஊற்று மதத்து நால்தடம் தோள்
சிறுகு கண்ண ஐங்கரத்துச் சித்தியானை அடி வணங்கா. 
________________________________________

திருவிளையாடல் புராணப் பாடல்களை மின்னாக்கம் செய்து பதிவு செய்து வைத்துள்ள தமிழ்இணையப் பல்கலைக்கழகத்திற்கு நன்றி. http://www.tamilvu.org/library/libindex.htm