17/09/2026
முகநூலில் CHAAR என்பவரின் பதிவு இது. அவர்களுக்கு நன்றி.
திருவிளையாடல் புராணம்
Sunday, 20 September 2026
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஸ்ரீ பொன்னனையாள் சிற்பம்
Friday, 19 June 2026
15. மேருவைச் செண்டால் அடித்த படலம்
பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தின் 'உக்கிர பாண்டியனுக்கு வேல், வளை (வளரி), செண்டு கொடுத்த படலம்' என்ற பகுதியில் இந்த நிகழ்வு மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
- ஆயுதங்கள் வழங்கியவர்: சுந்தரேசுவரர் (சிவபெருமான்)
- பெற்றவர்: உக்கிரசேன பாண்டியன் (மதுரையை ஆண்ட மன்னன்)
- ஆயுதங்கள்: வேல், வளரி (வளை) மற்றும் செண்டு
- வேல்: அசுரர்களையும் பகைவர்களையும் அழிக்கவும், இந்திரன், வருணன் போன்றவர்களின் எதிர்ப்பை முறியடிக்கவும் வழங்கப்பட்டது. (பின்னாளில் கடலை வற்றச் செய்யவும் உக்கிர பாண்டியன் இந்த வேலைப் பயன்படுத்தினார்).
- வளை (வளரி): இது பண்டைய தமிழர்களின் பாரம்பரிய மற்றும் போர்க்குறிப்புடைய ஆயுதமாகும். இந்திரனின் தலைமேல் எறிந்து அவனது கர்வத்தை அடக்க சிவபெருமான் இந்த ஆயுதத்தை வழங்கினார்.
- செண்டு: இது மேருமலையை அடக்கவும், எதிரிகளைத் தண்டிப்பதற்கும் பயன்படும் ஒரு தண்டாயுதம் போன்ற ஆயுதமாகும்.
திருவிளையாடற் புராணத்தில் 'செண்டு' என்ற சொல் உள்ள பாடல்கள்
331.
அந்தரர் கோன் ஆதனத்தில் உறை மலயத் துவசனை மீண்டும் அழைத்த
வாறும்
சுந்தர உக்கிர குமரன் அவதரித்த வாறும் வளை சுடர் வேல் செண்டு
தந்தை இடத்து அவன் பெற்ற வாறும் அவன் அவ்வடிமேல் சலதி வீறு
சிந்த விடுத்தது மகவான் முடியை வளை யெறிந்து இறைவன் சிதைத்த
வாறும்.
967.
உருக்கும் திறல் உக்கிர குமரன் உதயம் இது வான் மதியும் நதிப்
பெருக்கும் கரந்த சடைக் கற்றைப் பெரும் தேர்ச் செழியர் பிரான்
அவற்குச்
செருக்கும் செல்வ மணம் முடித்துச் செவ்வேல் வளை செண்டு அளித்து உள்ளம்
தருக்கு முடி தந்து அரசு உரிமை தந்த செயலும் சாற்றுவாம்.
1033.
வளை யொடு செண்டு
வேல் மைந்தற்கு அஞ்சுரும்
பனைய வேம்பு அணிந்த கோன் அளித்த வாறிதத்
தளை அவிழ் தாரினான் தனையன் வேலை மேல்
இளையவன் என்ன வேல் எறிந்தது ஓதுவாம்.
1112.
அண்டர் அஞ்ச அமர் உழந்த அமரர் கோனை அரசர் கோன்
வண்டு அலம்பு மவுலி சிந்த வளை எறிந்து வெந் புறம்
கண்ட வண்ணம் இன்ன தன்ன கன்னி நாடன் மேருவில்
செண்டு எறிந்து வைப்பு
எடுத்த செயலு நன்கு செப்புவாம்.
15. மேருவைச் செண்டால் அடித்த படலம்
அண்ட
ரஞ்ச வமரு ழந்த வமரர் கோனை யரசர்கோன்
வண்ட
லம்பு மௌலி சிந்த வளையெ றிந்து வெந்புறங்
கண்ட
வண்ண மின்ன தன்ன கன்னி நாடன் மேருவிற்
செண்டே றிந்து வைப்பெடுத்த
செயலு நன்கு செப்புவாம்.
(இ - ள்.) அரசர் கோன் - மன்னர்
மன்னனாகிய
உக்கிரவழுதி, அமர் உழந்த அமரர் கோனை - தன்னுடன் போர்
புரிந்த
தேவர்க் கரசனை, அண்டர் அஞ்ச - தேவர்கள் அஞ்சுமாறு,
வண்டு
அலம்பு மௌலி சிந்த - வண்டுகள் ஒலிக்கும் (மாலை சூடிய)
முடி
தகர, வளை எறிந்து வெந் புறம் கண்ட வண்ணம் இன்னது -
திகிரிப்
படையை ஓச்சிப் புறங் கண்ட திருவிளையாடல் இதுவாகும்;
அன்ன
கன்னி நாடன் - (இனி) அந்தக் கன்னி நாடனாகிய
பாண்டியன், மேருவில் செண்டு எறிந்து - மேருமலையின் மேல்
செண்டினை
ஒச்சி, வைப்பு எடுத்த செயலும் நன்கு செப்புவாம் -
சேமநிதி
எடுத்த திருவிளையாடலையும் நன்கு கூறுவாம் எ - று.
உழத்தல் - வருந்திச் செய்தல். வண்டலம்பு என்னும்
அடையால்
மாலை சூடிய என வருவிக்கப் பட்டது. வெந், புறம் :
ஒரு
பொருளிரு சொல். இச் செய்யுளில் சந்த நலந் தோன்றச்
சீரெதுகை
பல அமைந்திருத்தல் காண்க. (1)
அகத்திய முனிவர் அறிவித்தபடி திங்கள் நாள் விரதத்தை விடாமல் தொடர்ந்து அனுஷ்டித்து வந்தமையால் மங்காத செல்வம் பெற்று உக்கிர பாண்டியன் வாழ்ந்து வந்தான்; காந்திமதியின் காதல் வாழ்க்கையில் வீரபாண்டியன் என்ற நன்மகனைப் பெற்றான். அவன் வளர்பிறை போல வளர்ந்து கலைகள் பலவும் கற்றுப் பூரண நிலவு போல முகப்பொலிவோடு விளங்கினான். இவ்வாறு வாழும் நாளில் நிலை திரிந்து பருவ மழை பெய்யாது நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது; கோள்கள் சூரியனை நோக்கி நிற்பதால் ஓர் ஆண்டுக்கு மழை பெய்யாது என்று சோதிடர்கள் தாள்கள் கொண்டு அவனுக்கு அறிவித்து வேதனை உண்டாக்கினர்.
சோதனை தந்த வேதத் தலைவனைத் தன் ஏதங்களை நீக்குமாறு வேண்டினான். காது கொடுத்துக் கேட்ட கடவுள் அவன் கண்குளிரச் சித்தராய்க் கனவில் வந்து விரும்பியதைப் பெற வழி காட்டினார்.
மழை வளம் குறைந்ததால் தானியங்கள் அருகி விட்டன; பொன்னையும் மணிகளையும் உயர் பண்டங்களையும் விற்று நாட்டு மக்கள் ஓடும் கையுமாக இருக்கும் நிலை அடைந்தனர்; குன்று போல் குவிந்திருந்த செல்வம் மணல்போல் கரைந்துவிட்டதால் இழந்த செல்வம் ஈட்ட வழியில்லாமல் வகையில்லாமல் விழித்தனர்.
மழை பெய்தால் அவர்கள் பசியற்று வாழ முடியுமேயன்றி வசியும் வளமும் பெற்று வாழ முடியாது. அதனால் வட புலத்தில் மேருமலையில் பொதிந்து கிடக்கும் பொன்னையும் உயர் மணிகளையும் மற்றும் வேண்டும் பொருள்களையும் வேண்டிய அளவு எடுத்து வரும்படி சித்தர் கனவில் கூறினார்.
அடியாத மாடு படியாது; அதனால் செண்டு கொண்டு அதன் சிகரத்தை அடித்தால்தான் கரம்குவித்துவேண்டியன நல்கும் என்று சொல்லி மறைந்தார். "உன் ஆணைக்கு அடி பணியும் மேருமலையில் தேவையானவற்றை எடுத்து வருக! மறுபடியும் அதை மூடி வைத்து உன் பொறியும் குறியும் பொறித்து விடுக” என்றும் கூறினார்.
உடனே உக்கிர பாண்டியன் உறக்கத்திலிருந்து விழித்து எழுந்து நித்திய கருமங்களை முடித்துக் கொண்டு நிமலனாகிய சோம சுந்தரக் கடவுளை வழிபட்டு நால்வகைச் சேனையோடு நான்கு வேதம் கற்ற வேதியர் வாழ்த்தி அனுப்பத் தேர் ஏறி வடநாடு புறப்பட்டான். பாண்டிய நாட்டையும் சோழ நாட்டையும் வேங்கடத்தையும் கருநாடகம், மாளவம், விராடம், மத்தியதேசம் கடந்து காசியை அடைந்தான். கங்கையில் முழுகிக் காசி விசுவநாதனை வழிபட்டுப் பின் குமரிக்கண்டத்தையும் பாரத கண்டத்தையும் கடந்து இமயத்தை அடைந்தான்; கிம்புருடம் ஏமகூடம், அரிவருடம், நிடதமலை, இளாவிருது வருடம் முதலிய இடங்களைக் கடந்து மேருமலையை அடைந்தான்.
படைகளை ஒரு புறம் நிறுத்தி விட்டுத் தான் மட்டும் தனியனாய் நின்று மேருமலைத் தலைவனை நேரில்வரும்படி அழைத்தான். உச்சி நிமிர்ந்த தலைவணங்காத அக்காவலன் இவன் ஏவலை மதிக்கவில்லை. சிவன் அனுப்பிய சிறுவன் என்று சொல்லியும் அவன் புறக்கணித்தான். வேறு வழியில்லை; தான் கொண்டு வந்த செண்டைக் கொண்டு அவன் சிண்டை அடித்தான். அந்த மண்டு வெகுண்டு எழாமல் வேண்டுவது யாது என்றான். அடி அடித்தால் அம்மியும் நகரும் என்னும் பழமொழி உண்மையாயிற்று. இம்மியும் நகராத அவன் இமைப்பொழுதில் வந்து ஏவல் கேட்டான்.
பொற்குவியல் இருக்கும் இடத்தைக் காட்டு என்றான்: "மாமர நிழலில் உள்ள பாறையின் கீழ் புதையல் இருக்கிறது." என்று மேருமலைத் தலைவன் சொல்ல அவன் கூறியபடியே பாறையைத் தள்ளி வேண்டிய அளவு வாரி எடுத்துக் கொண்டு மறுபடியும் பாறை கொண்டு அவ்வழியை மறைத்து தன் பெயரையும் பெருமையையும் பொறித்து வந்தான்.
பொற்சுமையைத் தன் தோளிலும் மற்றுமுள்ள வாகனங்களிலும் வைத்துக் காவலர் சூழப் பாண்டிய நாடு கொண்டு வந்து சேர்த்தான். சோம சுந்தரக் கடவுளை வணங்கி நன்றி நவின்று, கொண்டு வந்த பொருளைச் சேர்த்துப் பொதித்து வைக்காமல் அறங்களுக்கும் பொருள் அற்றவர்களுக்கும் வாரி வழங்கினான். நகையில்லாத முகத்தைக் காணமுடிந்தது; ஆனால் நகை அணியாத பெண்களைக்காண முடியாமல் அணிகலன்கள் அணிந்திருந்தனர்
கோள்கள் உரிய இடத்தில் நிலை பெற நாள்கள் நன்மை பெற்றன. மழை உரிய காலத்தில் பெய்ய வறிய நிலை மாறியது. மன நிறைவு பெற்று அவன் தன் கடமை முடிந்தது என்று கருதி ஆட்சியைத் தன் மகனின் கையில் ஒப்புவித்துப் பொறுப்புகளினின்று தப்புவித்துக் கொண்டான்; முதுமை தரும் ஓய்வு அவனுக்கு ஆறுதல் அளித்தது. உலக வாழ்லில் பற்று நீங்கி இறைத் திருவடிகளில் சேர்ந்து இறைவனோடு இரண்டறக் கலந்தான்.
Tuesday, 19 May 2026
youtube மலைகளின் மையத்தில் மதுரை
மலைகள் சந்திக்கின்ற மலைகளின் மையத்தில் மதுரை மாநகரம் உள்ளது.
மதுரை மாநகரின் மையமாக மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உள்ளது. கோயிலின் மையமாகச் சுயம்புலிங்கம் உள்ளது.
https://youtu.be/ySnqdvWXT4U
Monday, 18 May 2026
மதுரைக்கு வந்த Tsunami
மதுரைக்கு வந்த சுனாமி
திருவிளையாடல் புராணத்தில் மதுரைக்கு வந்த ஆழிப்பேரலை எனப்படும் சுனாமிகள் குறித்து மூன்று பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலங்களில் முக்கியமாகப் பேசப்பட்டுள்ளது:
உக்கிர குமாரன் (படலம் 11):
சுந்தர பாண்டியனின் (சோமசுந்தரேசுவரரின்) மகனான உக்கிர குமாரன் ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு மிகப்பெரிய ஆழிப்பேரலை (சுனாமி) வந்தது. அப்போது மன்னன் உக்கிர குமாரன் தனது வேலை எறிந்து அந்தச் சுனாமியைத் தடுத்து நிறுத்தினார்.
அபிடேக பாண்டியன் (படலம் 17):
வீரபாண்டியனின் மகனான அபிடேக பாண்டியனது ஆட்சிக்காலத்தில் மீண்டும் ஒரு பேரூழி ஏற்பட்டது. அப்போது கடல் பொங்கி எழுந்து சுனாமியாக மதுரையை அழிக்க வந்தது. இந்த மன்னன் அந்தப் கடல் நீரை வற்றச் செய்து மதுரையைக் காப்பாற்றினார்.
கீர்த்திவீடணன்:
அதுல கீர்த்தியின் மகனான கீர்த்திவீடணன் ஆட்சிக் காலத்தில் ஒரு மிகப்பெரிய பிரளயம் ஏற்பட்டது. அப்போது ஏழு கடல்களும் பொங்கி எழுந்து ஆழிப்பேரலையாக (சுனாமியாக) மாறி உலகையே அழித்தன.
இந்த மாபெரும் பிரளயத்திற்குப் (சுனாமிக்குப்) பின்னரே, சந்திர குலத்தில் வந்த வங்கியசேகர பாண்டியன் என்ற மன்னன் இன்றைய மதுரை நகரைப் பண்டைய பெருமை விளங்கும் வகையில் மீண்டும் உருவாக்கினார்.
ஆய்வாளர்
காசிஸ்ரீ முனைவர் கி. காளைராசன்
மேனாள் துணைப் பதிவாளர்
அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி.
The Thiruvilayadal Puranam
prominently recounts the occurrences of massive tidal waves—referred to as Aazhipperalai (tsunamis)—that struck Madurai during the reigns of three specific Pandya kings:
Ugra Kumaran (Chapter 11): During the reign of Ugra Kumaran—the son of Sundara Pandian (Lord Somasundareswarar)—a colossal tidal wave (tsunami) surged toward Madurai. At that critical moment, King Ugra Kumaran hurled his spear, thereby halting and repelling the advancing tsunami.
Abisheka Pandian (Chapter 17): During the reign of Abisheka Pandian—the son of Veerapandian—another catastrophic deluge occurred. The sea rose in fury, manifesting as a tsunami that threatened to obliterate Madurai. This king intervened by causing the floodwaters to recede, thereby saving the city of Madurai.
Keerthiveedanan: During the reign of Keerthiveedanan—the son of Athula Keerthi—a monumental cosmic deluge (Pralayam) took place. On this occasion, the seven seas rose in unison, transforming into a massive tidal wave (tsunami) that engulfed and destroyed the entire world.
It was only after this colossal deluge (tsunami) that a king named Vangiyasekara Pandian—a scion of the Lunar Dynasty (Chandra Kulam)—rebuilt the city of Madurai as it stands today, restoring it to its former glory and ancient grandeur.
*****
Wednesday, 6 May 2026
Lord Nadarajar - the solar and lunar lineages
How do the solar and lunar
lineages affect the dance?
The solar and lunar lineages directly
influence which foot Lord Shiva plants during his cosmic dance, as they
represent the underlying masculine and feminine energies of the ruling
dynasties at each temple:
- The Solar Lineage (Cholas at Chidambaram): The Chola dynasty belonged to the Solar lineage, and the Sun is considered a hot, masculine planet. To reflect the vigor and masculinity of the sun, the dance at Chidambaram features Shiva with his right foot planted. Because the right side of Shiva's form represents the male half, this posture perfectly aligns with the solar dominance and authority of the Chola kings.
- The
Lunar Lineage (Pandyas at Madurai): The Pandya dynasty, whose capital was Madurai, belonged
to the Lunar lineage. In contrast to the sun, the Moon is considered a cool,
feminine planet. Therefore, to give importance to this feminine lunar
energy, the dance in Madurai features Shiva with his left foot planted
and his right foot raised. Since the left side of his body represents
the female half, this unique posture beautifully harmonizes with the lunar
lineage of the Pandyas and highlights the greatness of femininity in a
region ruled by Goddess Meenakshi.
Comparison of Chidambaram dance with the Madurai dance
How
does the Chidambaram dance compare to the Madurai dance?
The cosmic dances of Lord Shiva in Chidambaram and Madurai differ significantly in their philosophical meanings, physical postures, and underlying spiritual principles:
- Cosmic and Chakra Principles: Chidambaram is
considered the 'Akasa' (space) element and represents the Anahatam
(heart) chakra, showcasing the peak vigor of the universe. In
contrast, Madurai represents the Dwadasantham, the highest yogic
point above the crown of the head. The dance at Madurai's Silver Hall is
described as a compassionate dance performed for the salvation of
the world.
- Foot Positioning and the Male-Female Principle:
In Chidambaram, Shiva dances with his right foot planted and left foot
raised. Since the right side of his androgynous form (Ardhanarishvara)
is male, this posture represents male dominance, valor, and wisdom. In
Madurai, Shiva dances with his left foot planted and right foot raised.
Because the left side represents the female half, this posture emphasizes
the greatness of femininity, which is deeply fitting for the Pandya
kingdom ruled by Goddess Meenakshi.
- Solar vs. Lunar Lineages: The dance in
Chidambaram is associated with the Chola dynasty, who belonged to the Solar
lineage (a hot, masculine planet), aligning with the fierce,
right-foot-planted dance. Madurai is the capital of the Pandya dynasty,
who belonged to the Lunar lineage (a cool, feminine planet),
further justifying the emphasis on the feminine left foot being planted.
- Respect for the Shivalinga: In Madurai,
Nataraja dances to the left of the Someswarar Shivalinga. If he were to
dance with his left foot raised as he does in Chidambaram, his foot would
point directly at the sacred Shivalinga. By switching his stance and
raising his right foot, his raised foot points towards the worshiping
devotees instead, maintaining respect for the Linga.
- The Devotee's Love: The physical change of
posture in Madurai was also a direct response to human devotion. The
Pandya King Rajasekara, who was a dancer himself, worried that Lord Shiva
would experience physical pain from constantly standing on one foot. Out
of compassion for the king's request, Shiva gracefully switched feet
மதுரையில் சிவபெருமான் கால்மாறி ஆடியதற்கான 4 காரணங்கள்
மதுரையில் சிவபெருமான் கால்மாறி ஆடியதற்கான 4 காரணங்கள்:
(1) மன்னனின் அன்பான வேண்டுகோள்.
(2) ஆண் - பெண் தத்துவம்:
சிதம்பரம் சிவபெருமானின் ஆண்பாகத்தின் (வலது கால்) ஆளுமை.
மதுரை மீனாட்சி அம்மையின் பெண்பாகத்தின் (இடது கால்) மேன்மை.
(3) சூரிய - சந்திர வம்சங்கள்:
சோழர்கள் சூரிய வம்சத்தினர் (ஆண் கிரகம்) வலது கால் ஊன்றிய நடனம்.
பாண்டியர்கள் சந்திர வம்சத்தினர் (பெண் கிரகம்) இடது கால் ஊன்றிய நடனம்.
(4) சிவலிங்கத்தின் மீதான மரியாதை:
மதுரையில் நடராசர் இடது காலைத் தூக்கி ஆடினால், அது சிவலிங்கத்திற்கு நேராகக் காலைத் தூக்குவது போல் அமைந்துவிடும். சிவலிங்கத்தின் புனிதத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும், தூக்கிய திருவடி பக்தர்களை நோக்கும் வகையிலும் நடராசர் கால்மாறி ஆடுகிறார்.
https://youtu.be/S2Kjc-txlfU



















