Monday, 26 January 2026

மதுரை கோட்டை, கான்பாளையம், கான்சாமேடு

 


kanmani tamil

7 Nov 2017, 23:34:03
to mintamil
  1751ம் ஆண்டு ஆலம்கான் மதுரைக் கோட்டையைக் கைப்பற்றினான் .(அவன் பாடியமைத்துத் தங்கிய இடம் )
    1755ல் முஹம்மது யூசுப் கான்என்ற கிழக்கிந்திய கம்பெனியின் அலுவலர் 2000சிப்பாய்களுடன் மதுரைக்கோட்டையைக் கைப்பற்றினான். 
    இவன் மதுரை மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவன். பிறப்பால் திருநெல்வேலி சைவப்பிள்ளை. குழந்தையாக இருந்தபோதே பெற்றோரை 
இழந்த  இவனை ஒரு இஸ்லாமியன் யூசுப் கான்  என்று பெயரிட்டு வளர்த்தான்.  வாலிபனானவுடன் கிழக்கிந்தியக் கம்பெனியில் சிப்பாயாகச் சேர்ந்தான்.     ஒரு பிரெஞ்சு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். 1756ல் கோட்டையைச் செப்பனிட்டான். ஆங்கிலேயருக்கு எதிராகத் திரும்பி விட்டான்.
    1757ல் கெயலார்ட் என்னும் தளபதியின் தலைமையில் ஆங்கிலேயர் கோட்டையை இருமுறை முற்றுகை இட்டனர்.  பயனில்லை.
  யூசுப் கான் கோட்டையை மீண்டும் செப்பனிட்டான்.
    1757ன் இறுதியில் ஹைதர் அலி பல நாட்கள் மதுரைக்கோட்டையை முற்றுகையிட்டான். அதன் பலத்தைப் பார்த்து பின்வாங்கினான்.
     1763ல் தளபதி பிரெஸ்டன் தலைமையில் பெரும்படை மதுரையைத் தாக்கியது. யூசுப் கான் வெடிமருந்தை சிறு சிறு பொட்டலங்களாகக் கட்டிப் பற்ற   வைத்து கோட்டையின் மேலிருந்து எதிரிகளின் மேல் வீசி எறிய வைத்தான். பகைவர்  தோற்று ஓடினர். 
அதே ஆண்டில் செப்டெம்பர் 2ம் நாள் தளபதி மான்சன் தலைமையில் ஒரு தாக்குதல் நடந்தது.  கோட்டையை கைப்பற்ற இயலவில்லை .
அதே மாதத்தில் 24ம் நாள்  ஆங்கிலப்படையும் வாலாஜாப் படையும் சேர்ந்து வந்து தாக்கியும் மதுரைக்கோட்டையையும் யூசுப் கானையும் வெல்ல இயலவில்லை.
    1764ல் மேஜர் டொனால்டு காம்பெல் தன் படையுடன் வந்து தாக்கி தோற்றுப் போனார் .

கான் சாகிபு என்று மக்கள் அழைத்த யூசுப் கானை அவனுக்கடியில் இருந்த பிரெஞ்சு தளபதி ஒருவன் வஞ்சகமாக ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்ததால் மதுரைக்கோட்டை ஆங்கிலேயர் வசம் வந்தது. (இவ்வரலாற்றைத் தான் கமலஹாசன் திரைப்படமாக எடுக்க முனைந்து அது பாதியில் நின்று விட்டது. )

சிறு திருத்தம்  
ஆலம்கான் பாடியமைத்துத் தங்கிய இடமே கான்பாளையம் .
யூசுப்கான் நினைவாக இன்றும் மதுரையில் உள்ள இடம் கான்சாமேடு ஆகும்.

கண்மணி 

கூடல் மாநகர் கோயில்கள் எங்கெங்கு உள்ளன

கூடல் மாநகர் கோயில்கள்  எங்கெங்கு உள்ளன


கீழடியில் தொல்லியல் ஆய்வாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ள நகரம் உள்ள இடத்தில் புதைந்துள்ள நந்தி.
---------

கூடல் மாநகர் கோயில்கள்  எங்கெங்கு உள்ளன என்பதற்குத் தெளிவான பதிகல்கள் கல்லாடத்தில் உள்ளன.


கீழேயுள்ளது திரு நூ த லோ சு ஐயா அவர்களின் பதிவு.

N D Logasundaram

9 Oct 2019, 20:13:52
to vallamai, mintamil, தமிழ் மன்றம், thamizayam, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, SivaKumar, ara...@gmail.com, Seshadri Sridharan, Kanaka Ajithadoss, Suresh Kumar, Thenee MK, thirumurai, Raji M, Muthu muthali

நூ த லோ சு
மயிலை
 இந்த கூடல் மாநகருகு   கோயில்கள் எப்படி எங்கெங்கு இருந்தன என்பது காட்டும் சீரிய தமிழ் மொழி நூல் >> கல்லாடம் >> ஏறக்குறைய 10 ம் நூற்றாண்டு வாழ்ந்ததாக கருதப்படும் கல்லாடர் எனும் 'தமிழ் கெழுகூடல்' நகரில் வாழ்ந்திருக்கக்கூடிய புலவரின் வாய்வழி பெற்ற வரிகள் இவை கற்பனை கலவாத நூறு சதம் தமிழன் தன் கண்முன் கண்ட காட்சிகள் விளக்கும்  வரிகள்

(1) வடதிருஆலவாய் // (2) திருநடுவூர்
(3) வெள்ளியம்பலம் // (4) நள்ளாறு // (5) இந்திரை//
(6) பஞ்சவனீச்சரம் // அஞ்செழுத்து அமைத்த
(7) சென்னிமாபுரம் // (8) சேரன்திருத்தளி                             25
(9)கன்னிசெங்கோட்டம் // (10)கரியோன்திருவுறை
விண்ணுடைத்(து) உண்ணும் கண்ணிலி ஒருத்தன்
மறிதிரைக் கடலுள் மானக் கவிழ்ந்த
களவுடல்  பிளந்த ஒளிகெழு திருவேல்
பணிப்பகை ஊர்தி அருட்கொடி இரண்டுடன்              30
முன்னும் பின்னும் முதுக்கொள நிறைந்த
அருவிஅம் சாரல் ஒரு (11)பரங்குன்றம்
சூழ்கொள இருந்த கூடல்எம்  பெருமான்
கூடல் என தனியாக கோயில் ஏதும் இல்லை எல்லாம் சூழ்ந்து அமைந்துள்ள கூடல் நகரம் 

மிகவும் பின்னாளில் இயற்றப்பெற்ற ஓர் புராணத்துள் சொக்கப்பெருமான் ஓர் பாம்பினை எறிந்து நகர எல்லையை வளைத்து விளக்கினான் என்றும் நான்மாடக் கூடலாகிய படலத்தில் நான்மாடம்  (பிழை) நாண்மாடம் = நால்மாடம் = தொங்குகின்ற மாடங்கள் (balcony)  உடைத்த கட்டிடங்கள் படைத்ததாய்  நன்கு வளர்ந் நகரம் ஆகியது எனவரும் என்பது வேறு  
-----------

வடதிரு ஆலவாய் 
இதனில் (வட=ஆலமரமும் வடக்கு நோக்கில் இருந்ததும் ஆகலாம் - ஆலம் எனும் சொல் வழி ஓர் நீரோடும் துறையின்  வாயிலில் = வையை அருகு  அமைந்தது ஆகும்) சிவனுறை கோயில் தேவாரம் (ஆவணம்)  குறிப்பிபடும் தேவகுலம் (இறையனார் களவியலூரை சொல் ) ஆகும் 

வெள்ளியம்பலம் = வெள்ளி எனும் ஓர் மாழை யால் செய்த கூறை ஏற்ற சிவனின் மன்றம் என பொருட் காட்ட தயக்கம் உள்ளது .  ஏனெனில் வெள்ளில் எனும் ஓர் வகை வில்வ மரம் அதன் கீழமைந்த  அம்பலம் எனும்  எளிமையே சிறப்பு என்பேன் ஆடல்வல்லான் உருவ வழிபாடு கொண்டது என பொருள்  காட்ட பாடல் எண்  33 இல் "வெள்ளி அம்பலத்து துள்ளிய பெருமான்" எனபதால் அறியமுடியும் அப்போதும் கடை லகர மெய் குறைந்தது எனபது கருத்து   வெள்ளி(ல்) தான் மூலம் என்பேன் மேலும்  கால் மாறி ஆடிய கருத்து பிற்கால புராணம் சார்ந்தது எனல் வேண்டும்   
 
பஞ்சவனீச்சரம் //  சென்னிமாபுரம் // சேரன்திருத்தளி     இம்மூன்றும் ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றில் ஆண்ட மன்னர்களின் பெயரால் எழுந்தவை. ஈச்சரம் = சிவன் / புரம் பாதுகாப்பு அமைந்த இடம்/ இவர்கள் கட்டினோர் பெயரால் அமைந்தன என்பதுதான் எளிமையான கருத்து   ஏனைய புறத்த பொருள / பஞ்சவன்=பாண்டியன் // சென்னி = சோழன் (காவிரியின் அருகும் பரந்தும் ஆன புலம்  // சேரன் >>  மேலை  தமிழ் நாட்டினன்// தளி கருங்கல்லால் அமைந்தது எனக்  காட்டக்கூடும் 

இந்திரை / கன்னி செங்கோட்டம்  = தமிழகமெங்கும் (ஏன் நாடெங்கிலும் கூட) எண்ணிக்கையால் மிக்கும் பரந்தும் செறிந்தும்  காணும் பலவித தாய் தெய்வ உருவ வழிபாடு கொண்டவை என்பதே பொருந்தும் 

திருநடுவூர் = பொருள் வெளிப்படை நகரின் நடுவண் அமைந்தது - இங்கு இறை சிவனே ஆகலாம் 

நள்ளாறு = 'நள்' எனும் தனித்த இரவுஓசை (இரீங்காரம்) மட்டும் சிறப்பக்கேட்க நகரின் ஒருபக்கமாக இருந்து சலசல என எழுப்பும் ஒலியின்றி நீரோடும் ஓர் புழை அருகு அமைந்த கோயில் ஆகவேண்டும் இறை = சிவன் தேவார காலத்திலேயே ஞான சம்பந்தரால் பாடப்பெற்றது
 இக்கோயில் பின்னாளில்  எனோ மறைந்தது போலும் அதனால் தான் சேக்கிழார் பெருந்தகை தன் அறியாமையால் (மன்னிக்க இது தனி நபர் போற்றாது பொய்யை பொய் மெய்யை மெய்யாகவே காட்டும்  நிலை) தன் புராணத்தில்  பனைஏடுகளை தீயிலிடும் வாதத்தில் முன்பே பாடிய பாடலின் சுவடியில் கயிறு சார்த்தி பெற்ற பாடலை தீயிலிட்டர் = என  நடக்காத ஒன்றை (புராண) தேவையால் புகுத்தினார் ஆனால் ஞானசம்பந்தர் பதிகத்தின் 11 ஆம் பாடலில் வெகு தெளிவாகவே ஐயமின்றி "நற்றிறம் உறுகழு மலநகர் ஞானசம் பந்தன் கொற்றவன் எதிரிடை எரியில் இட இவை கூறிய " என மன்னன் எதிரிலேயே நடக்கும் வாதத்தின் போதே நேரிடையாக இயற்றிய பதிகமாகத்தான் ஆவணச் சான்று காட்டுகின்றது அதுவன்றி திருஆலவாயும் திருநள்ளாறும் என இரு தலங்களை இணைத்து பாடிய ஓர் பதிகமும் உள்ளது அதனிலுள் மிக தெளிவாக அருகேயுள்ள கூடலில் உள்ளது போல் (ஒலியும் நடமாட்டமும்)  இல்லாது 'நள்- எனும் ஓசையுடன் ஆற்றின் ஓசையின்றி அமர்ந்ததாகவே பாடப் பெற்றுள்ளது காணலாம் ஆக நள்ளாறு சற்று தூத்தே ஓர் ஒல்லையூரில் அமைந்ததும்  ஆகலாம் 

கல்லாடர் வழி உள்ளது நள்ளாறு (10 ம் நூற்றாண்டு )
சேக்கிழார் வழிதான்  அறியாதது (12  ம் நூற்றாண்டு 
 சம்பந்தர் கல்லாடருக்கும் முந்தியவர் 
இவர் வைக்கும் சான்று இரண்டு உள்ளன 
எனவே உள்ளதுதான் சிறக்கும் 
இல்லாதது அய்யப்பாடுடையதான் இழியும்  

 நள்ளாறு எனும் பெயரில் ஆறுகள் சிலஇடத்தில் காணக்கூடும் என்பதால் குறைந்தது இரு சம்பந்தரின் நள்ளாற்றுப் பதிகங்கள் ( 1-7 நட்டபாடை) + ( 2-7 சாதாரி) பாண்டிய நாட்டினைச் சார்ந்ததுதான் சோழ நாட்டினது அல்ல (காரைக்கால்). இந்த கருத்துரை 52 ஆண்டுகளுக்கு முன் நான் மிக்க இளைய வயதில் திருமணம் ஆகாதவனாக இருந்தபோது சைவசித்தாந்த மகாசாமாசத்தின் பருவவெளியீடான 'சித்தாந்த'த்தில் வெளிவந்தது 
 (இங்கு இப்போது வரைந்ததும் ஓர் மீள்பதிவே புதியோருக்காக மற்றோர்க்கு நினைவூட்டல் என்க) 

கரியோன் திருஉறை  >> இன்றைய நகரத்தில் உள்ளது ஆழ்வார் குறித்ததாக்க காட்டடப்படும் ஓர் கூடல் அழகர் மிகப் பழமையானதாக தெரியவில்லை. திருமாலிருஞ்சோலை என சிறிதே  தூரத்திருந்தும் அந்த அழகரே பழமை தொடர்பும் பேர் பெற்றும்  விளங்குவதால் கல்லாடப் பாடல் காட்டுவது அதுவே எனலாம்.

திருப்பரங்குன்றம் =  இன்று  வடமேற்கு தென் கிழக்காக ஓடும் வையை ஆற்றினுக்கு தென் நோக்கு  10  கிமீ. ரில்  பலர் அறிந்து  பேர் பெறறும்   இயற்கையான ஓர் பாறைக் குடைவறைக் குகையிலும்  உள்ள முருகன்தலம் திருமுருகாற்றுப்படை குறித்த ஓர் படை வீடு சுந்தரரும் தன தேவாரத்தில் குறித்துள்ளார். மற்றவைகளுக்கு இல்லாது மேற்கண்ட கல்லாடப்பாடலில் முருகனை 6 வரிகளில் விளக்கியமை காண்க  
பல நூல்களில் சுட்டப்பெறும் பீடுடையதே.

Wednesday, 21 January 2026

Where was our South-Madurai, எங்கே என் தென்மதுரை

Where was our South-Madurai

The capital of the Pandyas was Madurai.

This city was destroyed by a great flood during the first great deluge.

To distinguish this very ancient Madurai from the present-day Madurai, it was called Then-Madurai(South Madurai).

The South-Madurai is named as Kavadapuram or Kapadapuram.

No clear literary evidence is available regarding this South-Madurai, which was destroyed by the first Big Tsunami flood.

If you look closely at Google Maps, a rectangular fort is visible centered around the present-day Mauritius island.

Similarly, a rectangular fort is also visible centered around Diego Garcia island.

Therefore, based on the Tamil Literature "Iraiyanar Kalaviyal" and Google Maps, that ancient South-Madurai where the ancient Tamils ​​lived

could be the present-day Mauritius island, or Diego Garcia island, or both.

This South-Madurai (Mauritius island), located near Madagascar in Africa, might be the place where the first humans originated.

I have attached the article with pictures. I would like to know the opinions of scholars.

https://thiruvillayadalpuranam-kalairajan.blogspot.com/2019/10/blog-post_46.html

.................... 


 பாண்டியர்களின் தலைநகரம் மதுரை.  

முதலாம் ஊழிக்காலத்தில் உண்டான கடல்கோளால் இந்நகரம் அழிந்துவிட்டது. 

மிகமிகமிகத் தொன்மையான இந்த மதுரையை இன்றைய மதுரையிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காகத் தென்மதுரை என்று அழைத்துள்ளனர்.

தென்மதுரை = கவாடபரம் அல்லது கபாடபுரம்.  

முதலாம் கடல்கோளால் அழிந்துபோன இந்தத் தென்மதுரை பற்றிய தெளிவான இலக்கியச் சான்றுகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.

கூகுள் புவிப்படத்தை உற்றுப் பார்த்தால், இன்றைய மொரிசியசு தீவை மையப்படுத்தி ஒரு செவ்வக வடிவமான கோட்டை தென்படுகிறது.

இதைப் போன்றே டிகோகார்சிகா தீவைமையப்படுத்தியு ஒரு செவ்வக வடிவமான கோட்டை தென்படுகிறது.

எனவே “இறையனார் களவியல்” மற்றும் கூகுள் புவிப்படம்  இவற்றின் அடிப்படையில்  பண்டைய தமிழர்  வாழ்ந்த தென்மதுரை என்பது

இன்றைய மொரிசியசு தீவு அல்லது டிகோகார்சிகா தீவு, அல்லது இரண்டுமாக இருக்கலாம்.

ஆப்பிரிக்காவில் மடகாசுக்கர் தீவிற்கு அருகில் உள்ள இந்தத் தென்மதுரையே (மொரிசியசு தீவு) ஆதிமனிதன் தோன்றிய இடமாக இருக்கலாம்.  

படங்களுடன் கட்டுரையை இணைத்துள்ளேன்.  அறிஞர் பெருமக்களின் கருத்தை அறிய விரும்புகிறேன்.

https://thiruvillayadalpuranam-kalairajan.blogspot.com/2019/10/blog-post_46.html


கடல் கொண்ட தென்மதுரை 

தென்மதுரை, பாண்டியர்களின் தொன்மையான தலைநகரம். கடல்கோளால் அழிந்துபோன இந்நகரம், இன்றைய மொரிசியசு தீவு அல்லது டிகோகார்சிகா தீவு என்று கருதலாம்.  காரணம், கூகுள் புவிப்படத்தில் இத்தீவுகளை மையமாகக் கொண்ட செவ்வக வடிவ கோட்டைகள் காணப்படுகின்றன.


இறையனார் களவியல் என்ற தமிழ் இலக்கியம், தென்மதுரையின் தொன்மையைப் பறைசாற்றுகிறது. பாண்டிய மன்னர்கள் தென்மதுரையை ஆண்டதாக வரலாறு கூறுகிறது. ஆனால், ஒரு பெரிய கடல்கோள் (பெருஞ் சுனாமி) குமரி மலைத் தொடரை (மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரை) தாக்கி இந்நகரம் கடலில் மூழ்கியதாக நம்பப்படுகிறது.

இவ்வளவு பெரிய கடல்கோளை (பெருஞ் சுனாமியை) சிலப்பதிகாரம் பதிவு செய்துள்ளது.  ".... பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள .... (சிலப்பதிகாரம்)". 

கூகுள் புவிப்படத்தில் மொரிசியசு தீவு மற்றும் டிகோகார்சிகா தீவை மையமாகக் கொண்ட செவ்வக வடிவ கோட்டைகள் காணப்படுகின்றன. இது தென்மதுரையின் அடையாளமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

தென்மதுரை, தமிழ் கலாச்சாரத்தின் தொட்டில் என்று கருதப்படுகிறது. தமிழரின் தொன்மை மற்றும் கலாச்சார சிறப்பைப் பறைசாற்றும் இந்நகரம், ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு புதிராகவே உள்ளது.

இக்கட்டுரையில், தென்மதுரையின் வரலாறு, கடல்கோள், கலாச்சாரம் மற்றும் ஆராய்ச்சி முடிவுகள் பற்றி விரிவாகக் காண்போம்.

தென்மதுரையின் வரலாறு  - தென்மதுரை, பாண்டியர்களின் தொன்மையான தலைநகரம். இந்நகரம், கடல்கோளால் அழிந்துபோனதாக நம்பப்படுகிறது. இறையனார் களவியல் என்ற தமிழ் இலக்கியம், தென்மதுரையின் தொன்மையைப் பறைசாற்றுகிறது.  அங்கு தமிழ்ப் புலவர்கள் ஒன்று கூடித் தமிழ்ச் சங்கம் அமைத்துத் தமிழ் மொழியை ஆராய்ந்ததாகக் குறிப்பிடுகிறது.

கடல்கோள் மற்றும் தென்மதுரை அழிவு - ஒரு கடல்கோள் ( a Big Tsunami) தாக்கி தென்மதுரை கடலில் மூழ்கியதாக நம்பப்படுகிறது. இந்தக் கடல்கோள், அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குக் கிழக்கே உள்ள  இந்தோனேசியா நிலத்திட்டில் கடலுக்குள் ஏற்பட்ட ஒரு பெரிய நிலச்சரிவினால் அல்லது நில-நடுக்கத்தால் உருவாகியிருக்கலாம்.  இதற்கு ஆதாரமாக, கூகுள் புவிப்படத்தில் இந்தப் பகுதியில் ஆழ்கடலில் ஒரு பெரும் நிலப்பரப்பு பூமிக்குள் புதைந்துள்ளதைக் காணமுடிகிறது.

தமிழ்த் தொன்மை மற்றும் கலாச்சாரம் - தென்மதுரை, தமிழ் கலாச்சாரத்தின் தொட்டில் என்று கருதப்படுகிறது. தமிழரின் தொன்மை மற்றும் கலாச்சார சிறப்பைப் பறைசாற்றும் இந்நகரம், ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு புதிராகவே உள்ளது.

முடிவுரை - தென்மதுரை, தமிழரின் தொன்மையான நகரம். கடல்கோளால் அழிந்துபோன இந்நகரம், இன்றைய மொரிசியசு தீவு அல்லது டிகோகார்சிகா தீவு என்று கருதப்படுகிறது. இந்நகரத்தின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் ஆராய்ச்சி முடிவுகள், தமிழரின் தொன்மையைப் பறைசாற்றுகின்றன. 


The Submerged South Madurai

Unveiling the Ancient Tamil Capital

South Madurai, the erstwhile capital of the Pandyas, is shrouded in mystery, with its existence veiled by the sands of time. Believed to have been ravaged by a massive tsunami, the city's remnants are speculated to lie beneath the waves, possibly near the Mauritius island or Diego Garcia island. Intriguingly, Google Maps reveal rectangular fort structures centered around these islands, fuelling speculation about the city's location.

Tamil literature, specifically "Iraiyanar Kalaviyal", alludes to South Madurai's antiquity, describing it as a thriving hub of culture and commerce. The Pandyas, one of the ancient Tamil dynasties, are said to have ruled from this city, leaving behind a rich legacy.

The rectangular structures on Google Maps have sparked intense interest among researchers, who believe that South Madurai might be the lost city. The city's strategic location, cultural significance, and historical importance make it a fascinating subject of study.

This article delves into South Madurai's history, the tsunami that ravaged it, its cultural significance, and the latest research findings.

History of South Madurai -  South Madurai was a prominent city in ancient Tamil Nadu, serving as the Pandyas' capital. The city's architecture, art, and culture reflected the dynasty's grandeur. However, a massive tsunami, possibly triggered by an earthquake off Africa's east coast, destroyed the city, submerging it underwater.

The Tsunami and South Madurai's Destruction - The tsunami that ravaged South Madurai is believed to have been a catastrophic event, altering the course of Tamil history. Researchers have found evidence of a massive tsunami that hit the southern coast of India, coinciding with the city's downfall.

Tamil Heritage and Culture -  South Madurai is considered the cradle of Tamil culture, showcasing the civilization's richness and diversity. The city's art, literature, and architecture have influenced Tamil culture, making it a vital part of the region's heritage.

Research Findings and Speculations  -  Recent research suggests that South Madurai might be located near the Mauritius island or Diego Garcia island. The rectangular structures on Google Maps, coupled with historical records and archaeological findings, support this theory. However, further research is needed to confirm the city's exact location.

Conclusion  -  South Madurai's history, culture, and legacy continue to captivate researchers and enthusiasts alike. The city's story serves as a reminder of the power of nature and the importance of preserving our cultural heritage. As research unfolds, we may finally uncover the secrets of this ancient Tamil capital. 




////////////////

The Submerged South Madurai: Unveiling the Ancient Tamil Capital


South Madurai, the ancient capital of the Pandyas, is believed to have been destroyed by a massive tsunami. The city is thought to be located in the present-day Mauritius island or Diego Garcia island. Google Maps reveal rectangular fort structures centered around these islands, supporting this theory.


The Tamil literature "Iraiyanar Kalaviyal" mentions South Madurai's antiquity. The Pandyas ruled from this city, but it was ravaged by a massive tsunami, submerging it underwater. The epic Silappathikaram records this event: "... பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள .... (Silappathikaram)".


This article explores South Madurai's history, the tsunami, its culture, and research findings.


History of South Madurai


South Madurai was the Pandyas' ancient capital. The city was submerged by a tsunami. "Iraiyanar Kalaviyal" mentions the city's antiquity and the Tamil Sangam held there.


The Tsunami and South Madurai's Destruction


A massive tsunami, possibly triggered by an earthquake or landslide in the Indonesian archipelago, destroyed the city. Google Maps show a submerged landmass in this region, supporting this theory.


Tamil Heritage and Culture


South Madurai is the birthplace of Tamil culture, reflecting the civilization's grandeur.


Conclusion


South Madurai's history, culture, and legacy continue to captivate researchers. The city's story serves as a reminder of Tamil civilization's antiquity. 😊


கடல் கொண்ட தென்மதுரை

தமிழரின் தொன்மையான தலைநகரம் 

தென்மதுரை, பாண்டியர்களின் தொன்மையான தலைநகரம். இந்நகரம் கடல்கோளால் அழிந்துபோனதாக நம்பப்படுகிறது. இதற்கு ஆதாரமாக, கூகுள் புவிப்படத்தில் மொரிசியசு தீவு மற்றும் டிகோகார்சிகா தீவை மையமாகக் கொண்ட செவ்வக வடிவ கோட்டைகள் காணப்படுகின்றன.

    இறையனார் களவியல் என்ற தமிழ் இலக்கியம், தென்மதுரையின் தொன்மையைப் பறைசாற்றுகிறது. பாண்டிய மன்னர்கள் தென்மதுரையை ஆண்டதாக வரலாறு கூறுகிறது. ஆனால், ஒரு பெரிய கடல்கோள் (பெருஞ் சுனாமி) குமரி மலைத் தொடரை (மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரை) தாக்கி இந்நகரம் கடலில் மூழ்கியதாக நம்பப்படுகிறது. இவ்வளவு பெரிய கடல்கோளை (பெருஞ் சுனாமியை) சிலப்பதிகாரம் பதிவு செய்துள்ளது: "... பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள .... (சிலப்பதிகாரம்)".

    கூகுள் புவிப்படத்தில் மொரிசியசு தீவு மற்றும் டிகோகார்சிகா தீவை மையமாகக் கொண்ட செவ்வக வடிவ கோட்டைகள் காணப்படுகின்றன. இது தென்மதுரையின் அடையாளமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

 தென்மதுரை, தமிழ் கலாச்சாரத்தின் தொட்டில் என்று கருதப்படுகிறது. தமிழரின் தொன்மை மற்றும் கலாச்சார சிறப்பைப் பறைசாற்றும் இந்நகரம், ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு புதிராகவே உள்ளது.

 இக்கட்டுரையில், தென்மதுரையின் வரலாறு, கடல்கோள், கலாச்சாரம் மற்றும் ஆராய்ச்சி முடிவுகள் பற்றி விரிவாகக் காண்போம்.

தென்மதுரையின் வரலாறு - தென்மதுரை, பாண்டியர்களின் தொன்மையான தலைநகரம். இந்நகரம், கடல்கோளால் அழிந்துபோனதாக நம்பப்படுகிறது. இறையனார் களவியல் என்ற தமிழ் இலக்கியம், தென்மதுரையின் தொன்மையைப் பறைசாற்றுகிறது. அங்கு தமிழ்ப் புலவர்கள் ஒன்று கூடித் தமிழ்ச் சங்கம் அமைத்துத் தமிழ் மொழியை ஆராய்ந்ததாகக் குறிப்பிடுகிறது.

கடல்கோள் மற்றும் தென்மதுரை அழிவு - ஒரு கடல்கோள் (a Big Tsunami) தாக்கி தென்மதுரை கடலில் மூழ்கியதாக நம்பப்படுகிறது. இந்தக் கடல்கோள், அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குக் கிழக்கே உள்ள இந்தோனேசியா நிலத்திட்டில் கடலுக்குள் ஏற்பட்ட ஒரு பெரிய நிலச்சரிவினால் அல்லது நில-நடுக்கத்தால் உருவாகியிருக்கலாம். இதற்கு ஆதாரமாக, கூகுள் புவிப்படத்தில் இந்தப் பகுதியில் ஆழ்கடலில் ஒரு பெரும் நிலப்பரப்பு பூமிக்குள் புதைந்துள்ளதைக் காணமுடிகிறது.

தமிழ்த் தொன்மை மற்றும் கலாச்சாரம் - தென்மதுரை, தமிழ் கலாச்சாரத்தின் தொட்டில் என்று கருதப்படுகிறது. தமிழரின் தொன்மை மற்றும் கலாச்சார சிறப்பைப் பறைசாற்றும் இந்நகரம், ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு புதிராகவே உள்ளது.

முடிவுரை  -  தென்மதுரை, தமிழரின் தொன்மையான நகரம். கடல்கோளால் அழிந்துபோன இந்நகரம், இன்றைய மொரிசியசு தீவு அல்லது டிகோகார்சிகா தீவு என்று கருதப்படுகிறது. இந்நகரத்தின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் ஆராய்ச்சி முடிவுகள், தமிழரின் தொன்மையைப் பறைசாற்றுகின்றன. 


The Submerged South Madurai: 

Unveiling the Ancient Tamil Capital

South Madurai, the ancient capital of the Pandyas, is believed to have been destroyed by a massive tsunami. The city is thought to be located in the present-day Mauritius island or Diego Garcia island. The reason is that Google Maps reveal rectangular fort structures centered around these islands.

    The Tamil literature "Iraiyanar Kalaviyal" mentions South Madurai's antiquity. The Pandyas ruled from this city, but it was ravaged by a massive tsunami, submerging it underwater. The epic Silappathikaram records this massive tsunami: "... பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள .... (Silappathikaram)".

    The rectangular structures on Google Maps have led researchers to speculate that South Madurai might be the lost city. The city is considered the cradle of Tamil culture, showcasing the civilization's richness.

    This article explores South Madurai's history, the tsunami, its culture, and research findings.

History of South Madurai - 
South Madurai was the Pandyas' ancient capital. The city was submerged by a tsunami. "Iraiyanar Kalaviyal" mentions the city's antiquity and the Tamil Sangam held there.

The Tsunami and South Madurai's Destruction -  A massive tsunami, possibly triggered by an earthquake or landslide in the Indonesian archipelago, destroyed the city. Google Maps show a submerged landmass in this region, supporting this theory.

Tamil Heritage and Culture - South Madurai is the birthplace of Tamil culture, reflecting the civilization's grandeur.

Conclusion - South Madurai's history, culture, and legacy continue to captivate researchers. The city's story serves as a reminder of Tamil civilization's antiquity. 

Sunday, 18 January 2026

Have meteorites fallen near Madurai?


Have meteorites fallen near Madurai?

The circular craters on the Moon are visible due to meteorite impacts. Similar to what is seen on the Moon, circular valleys surrounded by hills can be observed near Madurai.

Evidence of meteorite impacts around Madurai is still visible today. I have marked five locations where meteorites may have fallen with red ink and attached the map.

Are these circular hills found in Tamil Nadu formed by meteorite impacts? If so, where are the meteorites that fell there? Did the Tamils, who established the Sangam and studied Tamil literature, not investigate these meteorites?


The place where the village of Yeriyodu is located might be the site where a meteorite fell. No crater was formed there due to the impact. The circular valley area near Yeriyodu village in Kadavur Idaiyapatti, with a diameter of approximately 8 km, could be the site of a meteorite impact. It is a circular valley precisely because of the meteorite impact.

This 8 km diameter circular valley is covered by sediments brought in by the massive tsunami that struck Tamil Nadu when the sea engulfed Kumari Kottam. It is my opinion that the channels through which the floodwaters receded have now become mountain passes (pathways).

The sanctum sanctorum towers of the temples in Madurai and Thiruveezhimizhalai in Thiruvarur district are said to be made of meteorites. Because these two tower stones arrived from the heavens, the Thiruvilaiyadal Puranam refers to them as "Vinnizhi Vimanam" (heaven-descended towers).

Let us appreciate the archaeologists,

Let us appreciate the antiquity of the Tamils.

in tamil https://thiruvillayadalpuranam-kalairajan.blogspot.com/2018/10/blog-post_28.html

காசிஸ்ரீ முனைவர் கி. காளைராசன்
மேனாள் துணைப் பதிவாளர்
அழகப்பா பல்கலைக்கழகம்.

வாசிக்கப் பட்டவை...

(1)
திருவாலவாய்க் காண்டம்
நாற்பத் தொன்பதாவது திருவாலவாயான படலம்

“தேனிழி குதலைத் தீஞ்சொற் சேனெடுங் கண்ணி கோயில்
வானிழி விமானம் பொற்றா மரைவிளை யாட்டின் வந்த
கானிழி யிடபக் குன்றங் கரிவரை நாகக் குன்றம்
ஆனிழி வரைவ ராக வரைமுத லழிவி லாத“

(2)
திருவிளையாடற் புராணம்
பாம்பு எல்லைகாட்டிய படலம் பாடல் எண் 2340

“நுண்ணிய பொருளினு நுண்ணி தாயவர்
விண்ணிழி விமானநின் றெழுந்து மீனவன்
திண்ணிய வன்பினுக் கெளிய சித்தராய்ப்
புண்ணிய அருட்கடல் ஆகிப் போதுவார்“


4. திருப்புகலியும் திருவீழிமிழலையும்
291

ஏகபெ ருந்தகை யாயபெம்மா
னெம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
மேகமு ரிஞ்செயில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே. 4

38. சந்தள றேறுத டங்கொள்கொங்கைத்
தையலொ டுந்தள ராதவாய்மைப்
புந்தியி னான்மறை யோர்களேத்தும்
புகலி நிலாவிய புண்ணியனே
எந்தமை யாளுடை யீசவெம்மா
னெம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
வெந்தவெண் ணீறணிவார்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே. 5

Wednesday, 10 December 2025

கீழடியில் கிடைத்த மும்முலைப் பிராட்டி

 கீழடியில்  கிடைத்த  மும்முலைப் பிராட்டி




மும்முலைத் திருவழுமகள், மும்முலை நாயகி என மீனாட்சி அம்மன் அழைக்கப்படுகிறார்.

மதுரை மீனாட்சி அம்மன் (பார்வதி தேவியின் அம்சம்) மூன்று முலைகளுடன் பிறந்ததாகக் கூறப்படுகிறது. சிவபெருமானைக் கண்டதும், அந்த மூன்றாவது முலை மறைந்து, இரண்டு முலைகளுடன் அவள் திருமணத்திற்குத் தயாரானாள்.

மதுரை மீனாட்சி அம்மனாக அவதரித்த தடாதகை பிராட்டியார் புராணக் கதையுடன் தொடர்புடையது, அவர் மூன்று மார்புகளுடன் பிறந்து, சிவபெருமானைக் கண்டதும் நடுவில் உள்ள முலை மறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது

 

 திருப்பரங்குன்றம் கோயிலில் உள்ள சிற்பம்


மும்முலை பெண் அரசி 

கல்லாடம் [செய்யுள்30]

20  முனிவர் செங்கரஞ் சென்னி யாக்க வுருப்பசி முதலோர் முன்வாழ்த் தெடுப்ப மும்முலை யொருத்தியை மணந்துல காண்ட25  கூடற் கிறைவ    னிருதா ளிருத்துங் கவையா வென்றி நெஞ்சினர் நோக்கப் பிறவியுங் குற்றமும் பிரிந்தன போலப் பீரமு நோயு மாறின் வாரித் துறைவற் கென்னா தும்மே.(உரை) கைகோள்: களவு. தலைவிகூற்று.

துறை: இன்னலெய்தல்.

     (இ-ம்.) இதற்கு, “மறைந்தவற் காண்டல்” (தொல். கள. 20) என்னும் நூற்பாவின்கண் ‘வெறியாட் டிடத்து வெருவின் கண்ணும்’ எனவரும் விதிகொள்க.

1-5: வள்ளுறை.........................வெறியில்

வலிய உறையினை நீக்கி; திரிகின்ற வேலையுடைய மகனாகிய வேலனும்; முறத்திலே பரப்பிய நெல்லினை மூன்றும் இரண்டும் ஒன்றும்படக் கையால் அள்ளிப்பிடித்து உதோ எமக்கு முருகனும் அவன் ஏறும் மயிலின் எருத்தும் அவனது கோழிக் கொடியும் தோன்றுகின்ற என்று கூறுகின்ற குறிசொல்லுதலையுடைய கட்டுவித்தியரும் அவர் இது தெய்வத்தினாலாயது என்று கூறியதனால்; நடுங்குதற்குக் காரணமான துன்பத்தினால் வந்த மெலிவினையுடைய எஞ்செவிலித்தாயருங் கூடி; நிகழ்த்தாநின்ற இவ்வெறியாடலாலே என்க.

     (வி-ம்.) வள்-வலிமை. துளக்குதல்-சுழற்றுதல். வேன்மகன்-வேலன் (பூசாரி) அன்பு-முருகன் அன்பு என்னும் சொற்கு முருகு என்பதும் பொருளாகலின் முருகனை அன்பு என்றாள். அன்பே கடவுள் என்பது ஈண்டு நினைக. கழுத்தையுடைய மயில் என மாறிக்கூட்டிப் பொருள் கொள்ளினுமாம். மலையடி-போர் செய்யும் இயல்புடையன ஆதல் உணர்க. கட்டுவித்தியர் முறத்தில் நெல்லைப் பரப்பி அதனைக் கையால் அள்ளிப் பிடித்துக்கொண்டு தெய்வமேறப்

 



கல்லாடம் 

31. இன்னல் எய்தல்

வள்ளுறை கழித்துத் துளக்குவேல் மகனும்
மனவுமயிற் கழுத்து மாலை யாட்டியும்
நெல்பிடித்து உரைக்கும் குறியி னோளும்
நடுங்கஞர் உற்ற பழங்கண் அன்னையரும்
அயரும் வெறியில் தண்டா அருநோய்       (5)

ஈயாது உண்ணுநர் நெடும்பழி போலப்
போகாக் காலை புணர்க்குவது என்னோ?
நான்கெயிற்று ஒருத்தல் பிடர்ப்பொலிவரைப்பகை
அறுகால் குளிக்கும் மதுத்தொடை ஏந்த
முள்தாள் செம்மலர் நான்முகத்து ஒருவன்       (10)

எண்ணிநெய் இறைத்து மணஅழல் ஓம்ப
புவிஅளந்து உண்ட திருநெடு மாலோன்
இருகரம் அடுக்கிப் பெருநீர் வார்ப்ப
ஒற்றை ஆழியன் முயலுடல் தண்சுடர்
அண்டம் விளர்ப்பப் பெருவிளக்கு எடுப்ப       (15)

அளவாப் புலன்கொள விஞ்சையர் எண்மரும்
வள்ளையில் கருவியில் பெரும்புகழ் விளைப்ப
முனிவர் செங்கரம் சென்னி ஆக
உருப்பசி முத‍லோர் முன்வாழ்த்து எடுப்ப
மும்முலை ஒருத்தியை மணந்துலகு ஆண்ட       (20)

கூடற்கு இறைவன் இருதாள் இருத்தும்
கவையா வென்றி நெஞ்சினர் நோக்க
பிறவியும் கூற்றமும் பிரிந்தன போலப்
பீரமும் நோயும் மாறில்
வாரித் துறைவற்கு என்னா தும்மே?       (25)

-------------  (நன்றி  = https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0244.html )