கூடல் மாநகர் கோயில்கள் எங்கெங்கு உள்ளன
கீழடியில் தொல்லியல் ஆய்வாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ள நகரம் உள்ள இடத்தில் புதைந்துள்ள நந்தி.
---------
கூடல் மாநகர் கோயில்கள் எங்கெங்கு உள்ளன என்பதற்குத் தெளிவான பதிகல்கள் கல்லாடத்தில் உள்ளன.
கீழேயுள்ளது திரு நூ த லோ சு ஐயா அவர்களின் பதிவு.
9 Oct 2019, 20:13:52
to vallamai, mintamil, தமிழ் மன்றம், thamizayam, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, SivaKumar, ara...@gmail.com, Seshadri Sridharan, Kanaka Ajithadoss, Suresh Kumar, Thenee MK, thirumurai, Raji M, Muthu muthali
நூ த லோ சு
மயிலை
இந்த கூடல் மாநகரருகு கோயில்கள் எப்படி எங்கெங்கு இருந்தன என்பது காட்டும் சீரிய தமிழ் மொழி நூல் >> கல்லாடம் >> ஏறக்குறைய 10 ம் நூற்றாண்டு வாழ்ந்ததாக கருதப்படும் கல்லாடர் எனும் 'தமிழ் கெழுகூடல்' நகரில் வாழ்ந்திருக்கக்கூடிய புலவரின் வாய்வழி பெற்ற வரிகள் இவை கற்பனை கலவாத நூறு சதம் தமிழன் தன் கண்முன் கண்ட காட்சிகள் விளக்கும் வரிகள்
(1) வடதிருஆலவாய் // (2) திருநடுவூர்
(3) வெள்ளியம்பலம் // (4) நள்ளாறு // (5) இந்திரை//
(6) பஞ்சவனீச்சரம் // அஞ்செழுத்து அமைத்த
(7) சென்னிமாபுரம் // (8) சேரன்திருத்தளி 25
(9)கன்னிசெங்கோட்டம் // (10)கரியோன்திருவுறை
விண்ணுடைத்(து) உண்ணும் கண்ணிலி ஒருத்தன்
மறிதிரைக் கடலுள் மாஎனக் கவிழ்ந்த
களவுடல் பிளந்த ஒளிகெழு திருவேல்
பணிப்பகை ஊர்தி அருட்கொடி இரண்டுடன் 30
முன்னும் பின்னும் முதுக்கொள நிறைந்த
அருவிஅம் சாரல் ஒரு (11)பரங்குன்றம்
சூழ்கொள இருந்த கூடல்எம் பெருமான்
கூடல் என தனியாக கோயில் ஏதும் இல்லை எல்லாம் சூழ்ந்து அமைந்துள்ள கூடல் நகரம்
மிகவும் பின்னாளில் இயற்றப்பெற்ற ஓர் புராணத்துள் சொக்கப்பெருமான் ஓர் பாம்பினை எறிந்து நகர எல்லையை வளைத்து விளக்கினான் என்றும் நான்மாடக் கூடலாகிய படலத்தில் நான்மாடம் (பிழை) நாண்மாடம் = நால்மாடம் = தொங்குகின்ற மாடங்கள் (balcony) உடைத்த கட்டிடங்கள் படைத்ததாய் நன்கு வளர்ந்த நகரம் ஆகியது எனவரும் என்பது வேறு
-----------
வடதிரு ஆலவாய்
இதனில் (வட=ஆலமரமும் வடக்கு நோக்கில் இருந்ததும் ஆகலாம் - ஆலம் எனும் சொல் வழி ஓர் நீரோடும் துறையின் வாயிலில் = வையை அருகு அமைந்தது ஆகும்) சிவனுறை கோயில் தேவாரம் (ஆவணம்) குறிப்பிபடும் தேவகுலம் (இறையனார் களவியலூரை சொல் ) ஆகும்
வெள்ளியம்பலம் = வெள்ளி எனும் ஓர் மாழை யால் செய்த கூறை ஏற்ற சிவனின் மன்றம் என பொருட் காட்ட தயக்கம் உள்ளது . ஏனெனில் வெள்ளில் எனும் ஓர் வகை வில்வ மரம் அதன் கீழமைந்த அம்பலம் எனும் எளிமையே சிறப்பு என்பேன் ஆடல்வல்லான் உருவ வழிபாடு கொண்டது என பொருள் காட்ட பாடல் எண் 33 இல் "வெள்ளி அம்பலத்து துள்ளிய பெருமான்" எனபதால் அறியமுடியும் அப்போதும் கடை லகர மெய் குறைந்தது எனபது கருத்து வெள்ளி(ல்) தான் மூலம் என்பேன் மேலும் கால் மாறி ஆடிய கருத்து பிற்கால புராணம் சார்ந்தது எனல் வேண்டும்
பஞ்சவனீச்சரம் // சென்னிமாபுரம் // சேரன்திருத்தளி இம்மூன்றும் ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றில் ஆண்ட மன்னர்களின் பெயரால் எழுந்தவை. ஈச்சரம் = சிவன் / புரம் பாதுகாப்பு அமைந்த இடம்/ இவர்கள் கட்டினோர் பெயரால் அமைந்தன என்பதுதான் எளிமையான கருத்து ஏனைய புறத்த பொருள / பஞ்சவன்=பாண்டியன் // சென்னி = சோழன் (காவிரியின் அருகும் பரந்தும் ஆன புலம் // சேரன் >> மேலை தமிழ் நாட்டினன்// தளி கருங்கல்லால் அமைந்தது எனக் காட்டக்கூடும்
இந்திரை / கன்னி செங்கோட்டம் = தமிழகமெங்கும் (ஏன் நாடெங்கிலும் கூட) எண்ணிக்கையால் மிக்கும் பரந்தும் செறிந்தும் காணும் பலவித தாய் தெய்வ உருவ வழிபாடு கொண்டவை என்பதே பொருந்தும்
திருநடுவூர் = பொருள் வெளிப்படை நகரின் நடுவண் அமைந்தது - இங்கு இறை சிவனே ஆகலாம்
நள்ளாறு = 'நள்' எனும் தனித்த இரவுஓசை (இரீங்காரம்) மட்டும் சிறப்பக்கேட்க நகரின் ஒருபக்கமாக இருந்து சலசல என எழுப்பும் ஒலியின்றி நீரோடும் ஓர் புழை அருகு அமைந்த கோயில் ஆகவேண்டும் இறை = சிவன் தேவார காலத்திலேயே ஞான சம்பந்தரால் பாடப்பெற்றது
இக்கோயில் பின்னாளில் எனோ மறைந்தது போலும் அதனால் தான் சேக்கிழார் பெருந்தகை தன் அறியாமையால் (மன்னிக்க இது தனி நபர் போற்றாது பொய்யை பொய் மெய்யை மெய்யாகவே காட்டும் நிலை) தன் புராணத்தில் பனைஏடுகளை தீயிலிடும் வாதத்தில் முன்பே பாடிய பாடலின் சுவடியில் கயிறு சார்த்தி பெற்ற பாடலை தீயிலிட்டர் = என நடக்காத ஒன்றை (புராண) தேவையால் புகுத்தினார் ஆனால் ஞானசம்பந்தர் பதிகத்தின் 11 ஆம் பாடலில் வெகு தெளிவாகவே ஐயமின்றி "நற்றிறம் உறுகழு மலநகர் ஞானசம் பந்தன் கொற்றவன் எதிரிடை எரியில் இட இவை கூறிய " என மன்னன் எதிரிலேயே நடக்கும் வாதத்தின் போதே நேரிடையாக இயற்றிய பதிகமாகத்தான் ஆவணச் சான்று காட்டுகின்றது அதுவன்றி திருஆலவாயும் திருநள்ளாறும் என இரு தலங்களை இணைத்து பாடிய ஓர் பதிகமும் உள்ளது அதனிலுள் மிக தெளிவாக அருகேயுள்ள கூடலில் உள்ளது போல் (ஒலியும் நடமாட்டமும்) இல்லாது 'நள்- எனும் ஓசையுடன் ஆற்றின் ஓசையின்றி அமர்ந்ததாகவே பாடப் பெற்றுள்ளது காணலாம் ஆக நள்ளாறு சற்று தூத்தே ஓர் ஒல்லையூரில் அமைந்ததும் ஆகலாம்
கல்லாடர் வழி உள்ளது நள்ளாறு (10 ம் நூற்றாண்டு )
சேக்கிழார் வழிதான் அறியாதது (12 ம் நூற்றாண்டு
சம்பந்தர் கல்லாடருக்கும் முந்தியவர்
இவர் வைக்கும் சான்று இரண்டு உள்ளன
எனவே உள்ளதுதான் சிறக்கும்
இல்லாதது அய்யப்பாடுடையதான் இழியும்
நள்ளாறு எனும் பெயரில் ஆறுகள் சிலஇடத்தில் காணக்கூடும் என்பதால் குறைந்தது இரு சம்பந்தரின் நள்ளாற்றுப் பதிகங்கள் ( 1-7 நட்டபாடை) + ( 2-7 சாதாரி) பாண்டிய நாட்டினைச் சார்ந்ததுதான் சோழ நாட்டினது அல்ல (காரைக்கால்). இந்த கருத்துரை 52 ஆண்டுகளுக்கு முன் நான் மிக்க இளைய வயதில் திருமணம் ஆகாதவனாக இருந்தபோது சைவசித்தாந்த மகாசாமாசத்தின் பருவவெளியீடான 'சித்தாந்த'த்தில் வெளிவந்தது
(இங்கு இப்போது வரைந்ததும் ஓர் மீள்பதிவே புதியோருக்காக மற்றோர்க்கு நினைவூட்டல் என்க)
கரியோன் திருஉறை >> இன்றைய நகரத்தில் உள்ளது ஆழ்வார் குறித்ததாக்க காட்டடப்படும் ஓர் கூடல் அழகர் மிகப் பழமையானதாக தெரியவில்லை. திருமாலிருஞ்சோலை என சிறிதே தூரத்திருந்தும் அந்த அழகரே பழமை தொடர்பும் பேர் பெற்றும் விளங்குவதால் கல்லாடப் பாடல் காட்டுவது அதுவே எனலாம்.
திருப்பரங்குன்றம் = இன்று வடமேற்கு தென் கிழக்காக ஓடும் வையை ஆற்றினுக்கு தென் நோக்கு 10 கிமீ. ரில் பலர் அறிந்து பேர் பெறறும் இயற்கையான ஓர் பாறைக் குடைவறைக் குகையிலும் உள்ள முருகன்தலம் திருமுருகாற்றுப்படை குறித்த ஓர் படை வீடு சுந்தரரும் தன தேவாரத்தில் குறித்துள்ளார். மற்றவைகளுக்கு இல்லாது மேற்கண்ட கல்லாடப்பாடலில் முருகனை 6 வரிகளில் விளக்கியமை காண்க
பல நூல்களில் சுட்டப்பெறும் பீடுடையதே.
No comments:
Post a Comment