பகலில் சிறு இரவு
மார்கழி 10 (2612.2019) வியாழக்கிழமை. மதுரை, சிவகங்கை, காரைக்குடி, இராமேசுவரம், கோவை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், உதகை, கரூா், அவிநாசி, (சில பகுதிகள்) உள்ளிட்ட ஊர்களில் சூரியகிரகணம் முழுமையாக இருக்கும். சூரியகிரகணம் காலை 8.07 மணிக்கு தொடங்கி 11.16 மணி வரை இருக்கும். மூன்று நிமிடங்களுக்கு காலை 9.31 மணி முதல் 9.33 மணி வரை முழுமையாக இருக்கும். பிற பகுதிகளிலும் கிரகணம் தெரியும், ஆனால் முழுமையாக மறைத்த தோற்றத்தைக் காண முடியாது.
கண் பாதுகாப்பு அவசியம் -
குவியாடியைச் சூரியஒளியில் காட்டி அதையொரு தாளில் குவித்திட்டால், அந்தத் தாள் தீப்பிடித்து எரிவதைக் காணலாம். நமது கண்ணுக்கு உள்ளேயும் ஒரு குவியாடி (லென்ஸ்) உள்ளது. இதுவே ஒளியை நமது கண்ணுள் உள்ள விழித்திரையில் குவியச் செய்கிறது. சூரியக் கிரகணத்தின் போது, சூரியனை வெறுங் கண்ணால் பார்த்தால், சூரியஒளி நமது விழித்திரையில் குவிந்து விழித்திரையை கருக்கிவிடும் அபாயம் உள்ளது. இதனால் பார்வைக் கோளாறு ஏற்படும். எனவே சூரியனை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. அதுவும் உற்றுப் பார்க்கவே கூடாது, கூடாது.
சூரியகிரகணத்தைப் பாதுகாப்பாகப் பார்ப்பது எப்படி?
சற்று அகலமான காகிதஅட்டையில் ஒரு ஓட்டையைப் போட்டுக் கொள்ள வேண்டும். அதன் வழியாகச் சூரியஒளி ஊடுறுவி வரும்போது வட்டமாகத் தெரியும். அதில் கிரகணம் நன்றாகத் தெரியும், நிழலில் தெரியும் கிரணத்தை நன்றாகப் பார்க்கலாம்.
15 சனவரி 2010 அன்றும் இதுபோன்றதொரு சூரியகிரகணம் நிகழ்ந்தது. அப்போது எடுத்த எடுத்த படத்தை இணைத்துள்ளேன்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
No comments:
Post a Comment