ஆடிமாதம் 5ஆம் நாள், (21.07.2022), அசுபதி நட்சத்திரம், அட்டமி திதி, வியாழக்கிழமை
ஆடி மாதம், தேய்பிறை, கார்த்திகை நட்சத்திரம், அட்டமி திதி, வெள்ளிக்கிழமை சேர்ந்த நாளில் மதுரை மாநகரம் தீக்கிரையாகும் என்று ஓர் சாபம் மதுரைக்கு இருந்துள்ளது. அன்றைய தினத்தில் கண்ணகி மதுரையை எரித்தாள்.
மறந்தும்
பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு. ( குறள் எண் : 204 )
கோவலன் முற்பிறவியில் செய்த பாவம் மறுபிறவியில் அவன் கொலைக்கலன் பட்டான் என்கிறது சிலப்பதிகாரம்.
கட்டுரை காதை
ஆடித் திங்கள் பேரிருட் பக்கத்து
அழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண
உரைசால் மதுரையோடு அரைசுகே டுறுமெனும்
உரையு முண்டே நிரைதொடி யோயே - என்று பாண்டிய நெடுஞ் செழியன் முறை பிறண்டு நீதி செய்ததற்கான காரணத்தை மதுராபதித் தெய்வம் கண்ணகியிடம் கூறுகிறது.
No comments:
Post a Comment