தினமலர் பத்திரிக்கைச் செய்தி - திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடந்து வரும் எட்டாம் கட்ட அகழாய்வில், சுடுமண் பானைகளால் கட்டப்பட்ட நீளமான சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கீழடியில் அகழாய்வு பணிகள் ஐந்து குழிகள் தோண்டப்பட்டு நடந்து வருகிறது. தொல்லியல் துறை இயக்குனர் (பொறுப்பு) சிவானந்தம் தலைமையில் அலுவலர்கள் ரமேஷ், அஜய், சுரேஷ், காவ்யா உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு புதிதாக தோண்டப்பட்ட குழியில் சுடுமண் பானைகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அருகில் செவ்வக வடிவில் சுடுமண் கற்களாலான நீளமான சுவர் வெளிப்பட்டது.இந்த சுவரின் கீழ்ப்பகுதியில் வரிசையாக மூன்று பானைகள் உள்ளன. பண்டைய காலத்தில் சுவர்களை தாங்க துாணிற்கு பதில் உறுதியான சுடுமண் பானைகள் பயன்படுத்தியிருக்க கூடும் என கருதப்படுகிறது.
மூன்று பானைகளும் சம அளவில் உள்ளதால், சுவர்களை தாங்குவதற்கு இந்த பானைகள் பயன்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.சுவர் முழுமையாக வெளிப்பட்டால் மட்டுமே பானைகளின் முழு பயன்பாடு தெரியவரும்.
https://www.dinamalar.com/news_detail.asp?id=3023216
No comments:
Post a Comment