|
145. | வழுக்கு அறு வாய்மை மாண்பும் கங்கை தன் மரபின் வந்த விழுக்குடி பிறப்பு மூவர் ஏவிய வினை கேட்டு ஆற்றும் ஒழுக்கமும் அமைச்சாய் வேந்தர்க்கு உறுதி சூழ் வினையும் குன்றா இழுக்கு அறு மேழிச் செல்வர் வள மறுகு இயம்பல் உற்றாம். | 54 |
|
| உரை |
243. | கங்கை காளிந்தி வாணி காவிரி கண்ண வேணி துங்க பத்திரை தீம் பாலி தூய தன் பொருநை முன்னாச் சங்கையில் நதிகள் முற்றும் ஆடிய தவத்தின் பேறும் மங்கல மதுரை தன்னில் வைகலும் வதிவோர்க்கு எய்தும். | 11 |
|
| உரை |
257. | ஆற்றினுக்கு அரசு ஆம் கங்கை காவிரி ஆதி ஆறும் வேற்று உருவாய் முந்நீர் வேலையும் பிறவும் காரும் தோற்றுமுன் தன்னை ஆட்டச் சுந்தர மூர்த்தி செம்கண் ஏற்றினன் கண்ட தீர்த்தம் ஆகும் ஈது எவ்வாறு என்னின். | 2 |
|
| உரை |
263. | ஐய இங்கிலிங்க மூர்த்திக்கு ஆட்டவும் அடியே மூழ்கி உய்யவும் கங்கை ஆதி நதிகளும் உலகத்து உள்ளோர் மைஅறு தடாக நீரும் மற்று இலை இருமைப் பேறும் செய்ய ஓர் திர்த்தம் இங்கு உண்டாக்கு என செப்ப லோடும். | 8 |
|
| உரை |
288. | முன்னவன் அருளிச் செய்த காரண முறையால் அன்றி இன்னம் இப் புனித வாவிக்கு ஏதுவால் எய்து நாமம் மின் அவிர் சடையான் சென்னி மேவிய கங்கை நீரில் பின்னது கலந்த நீரால் பெறும் சிவகங்கை என்றும். | 33 |
|
| உரை |
413. | கங்கைமுதல் அளவு இறந்த தீர்த்தம் எலாம் போய் படிந்து காசி காஞ்சி அம் கனக கேதார முதல் பதிகள் பலபணிந்து அவுணன் கொன்ற பொங்கு பழி விடாது அழுங்கி அரா உண்ண மாசுண்டு பொலிவு மாழ்கும் திங்களனை யான் கடம்ப வனத்து எல்லை அணித்தாகச் செல்லு மேல்வை. | 70 |
|
| உரை |
555. | மங்கல தூரியம் முழங்க மால் யானை உச்சி மிசை வந்த பூத கங்கை முதல் ஒன்பது தீர்த்தமும் நிரப்பிக் கதிர் விடு பொன் கடம் பூசித்துப் புங்கவரை மந்திரத்தீ வளர்த்து அமுதம் அருத்தி எரி பொன்னால் செய்த சிங்க மணி ஆதனத்தை நேசித்துப் பூசித்துத் தெய்வம் ஏற்றி. | 37 |
|
| உரை |
608. | கிடைப்பன உருளால் பாரைக் ஈண்டு பாதலத்தின் எல்லை அடைப்பன பரந்த தட்டால் அடையவான் திசைகள் எட்டும் உடைப்பன அண்டம் உட்டி ஒற்றிவான் கங்கை நீரைத் துடைப்பன கொடியால் சாரி சுற்றுவ பொன் திண்தேர்கள். | 9 |
|
| உரை |
658. | அம் கனகம் செய் தசும்பின வாடை பொதிந்தன தோடு அவிழ் தொங்கல் வளைந்தன மங்கையர் துள்ளிய கவரியின் உள்ளன கங்கையும் வாணியும் யமுனையும் காவிரியும் பல துறை தொறும் மங்கல தூரிய மார்ப்பன மதமலை மேலன வருவன. | 59 |
|
| உரை |
708. | கங்கை காவிரி ஆதிய நவநிதிக் கன்னியர் குளிர் தூங்கப் பொங்குவார் திரைக் கொழுந்து எனக் கவரிகள் புரட்ட வெண் பிறைக் கீற்றுத் துங்க வாள் எயிற்று இருள் உடல் குழி விழிச்சுடர் அழல் செம்பங்கிச் சங்கவார் குழைக் குறிய குண்டோதரன் தண் மதி குடை தாங்க. | 109 |
|
| உரை |
726. | திங்கள் என்று எழுந்து நம்மைச் சுடுவது என் செம் தீ என்பார் புங்கவன் சென்னி மீதும் கிடப்பதே போலும் என்பார் அங்கு அவற்கு இந்த வெப்பம் இலை கொல் என்று அயிற்பார் ஆற்றக் கங்கை நீர் சுமந்தான் என்பார் அதனையும் காண்மின் என்பார். | 127 |
|
| உரை |
747. | மங்கல மகளி ரோடும் காஞ்சன மாலை வந்து கங்கையின் முகந்த செம்பொன் கரக நீர் அனையார் ஆக்கத் திங்கள் அம் கண்ணி வேய்ந்த சிவபரம் சோதி பாத பங்கயம் விளக்கி அந்நீர் தலைப் பெய்து பருகி நின்றாள். | 148 |
|
| உரை |
814. | கங்கை ஆறு அலம்பும் ஓசை கடுக்கை வண்டு இரங்கும் ஓசை மங்கல முழவின் ஓசை மந்திர வேத ஓசை செம்கை ஆடு எரியின் ஓசை திருவடிச் சிலம்பின் ஓசை எங்கணும் நிரம்பி அன்பர் இரு செவிக்கு அமுதம் ஊற்ற. | 16 |
|
| உரை |
875. | தீர்த்தன் இதழிச் சடை நின்றும் இழிந்து வரலால் சிவகங்கை தீர்த்தன் உருவம் தெளி வோர்க்கு ஞானம் தரலால் சிவஞான தீர்த்தம் காலில் கடுகி வரும் செய்தியாலே வேகவதி தீர்த்தம் கிருத மாலை என வைகை நாமம் செப்புவர் ஆல். | 27 |
|
| உரை |
884. | திருத்த யாத்திரை அதிகம் அவற்ற அதிகம் சிவன் உருவாம் திருத்த ஆம் கங்கை முதல் திரு நதிகள் தனித் தனி போய்த் திருத்த மாடு அவதரித்த திரு நதிகள் தனித் தனி போய்த் திருத்தமாய் நிறைதலினால் அவற்று இகந்து திரை முந்நீர். | 9 |
|
| உரை |
1003. | செம் கை நீண்டு உருண்டு கணுக்கள் பெற்று அடைவே சிறுத்திடில் செல்வமோடு இன்பம் தங்கும் வள் உகிர் சேந்து உருண்டு கண் உள்ளம் கவர்வதாய்ச் சர சரப்பு அகன்றால் அங்கு அவை நல்ல அகங்கை மெல் எனச் சேந்து இடை வெளி அகன்று இடை உயர்ந்து மங்கலமாய்ச் சில் வரைகளின் நல்ல இலக்கண வரை உள மாதோ. | 37 |
|
| உரை |
1130. | அந் நெடு நாடு நீங்கி ஆடல் ஏறு உயர்த்த தோன்றல் பொன் நெடும் சடையில் தாழ்ந்து புனிதம் ஆம் தீர்த்தக் காசி நல் நெடு நகரம் எய்தி நளிர் புனல் கங்கை நீந்திக் கல் நெடு நெறி அநேக காவதம் கடந்த பின்னர். | 19 |
|
| உரை |
1198. | சிறிது நாள் கழிந்து அகன்ற பின் கங்கையில் சிறந்த மறுவிலா வடமீன் புரை கற்பினாள் வயிற்றில் குறிய ஆல வித்து அங்குரம் போன்று ஒரு குமரன் நிறையும் நீர் உலகு உருட்டு குடை நிழற்ற வந்து உதித்தான். | 4 |
|
| உரை |
1319. | விடையினை ஆலம் உண்ட மிடற்றினை கங்கை தாங்குச் சடையினை கூற்றை வென்ற தாளினை மேரு சாபப் படையினை அடியேம் துன்பப் பாட்டினை நீக்கி ஆளும் நடையினை ஆகி எங்கள் நல் உயிர் காத்தல் வேண்டும். | 13 |
|
| உரை |
1325. | புனித நீராடிக் கண்டி பூண்டு வான் கங்கை ஆதி வனிதையர் பசும் பொன் கும்ப வாசநீர் வடித்து நீட்டப் பனிமலர் சந்தம் கந்தம் அணிகலன் பசும் பொன் ஆடை இனையன பிறவும் ஈன்று கற்பகம் எடுத்துக் காட்ட. | 19 |
|
| உரை |
1490. | ஈறு இலான் செழியன் அன்புக்கு எளியவன் ஆகி மன்றுள் மாறி ஆடிய கூத்து என்சொல் வரம்பினது ஆமே கங்கை ஆறுசேர் சடையான் தான் ஓர் அரும் பழிக்கு அஞ்சித் தென்னன் தேறலா மனத்தைத் தேற்றும் திருவிளை ஆடல் சொல்வாம். | 1 |
|
| உரை |
1719. | செம் கண் அரி மான் பிடர் சுமந்த தெய்வ மணிப் பூந்தவிசு ஏற்றிச் சங்கம் முழங்க மறை முழங்கச் சாந்தம் திமிர்ந்து தாது ஒழுகத் தொங்கல் அணிந்து தசாங்க விரைத் தூப நறு நெய்ச் சுடர் வளைத்து கங்கை மிலைந்த கடவுள் எனக் கருதிப் பூசை வினை முடித்தான். | 15 |
|
| உரை |
1732. | காது வேல் அன்ன கண்ணார் கங்கை நீர் சுமந்தது ஏதுக்கு ஓதுமின் என்றார் நும்பால் உண் பலி ஏற்க என்றான் ஏது போல் இருந்தது ஐய இசைத்த செப்பு என்றார் ஈசன் கோது உறா அமுது அன்னீர் நும் கொங்கை போல் இருந்தது என்றான். | 9 |
|
| உரை |
1742. | கங்கை கரந்து மணி கண்டம் கரந்து நுதல் கண் கரந்து ஒரு பால் மங்கை வடிவம் கரந்து உழையும் மழுவும் கரந்து மழ விடை ஊர் அம் கண் அழகர் வளை வணிகர் ஆகி ஏனம் அளந்து அறியாச் செம் கமலச் சேவடி இரண்டும் திரை நீர் ஞால மகள் சூட. | 19 |
|
| உரை |
1936. | மாறு கொள் வழக்குத் தீர்க்க வல்லவர் அருளினாலே சீறு கொள் வடிவேல் கண்ணாள் சிறு துயில் அடைந்தாள் மெய்யில் ஊறு கொள் கரணம் ஐந்தும் உற்று அறி கனவில் கங்கை ஆறு கொள் சடையார் வேதச் செல்வராய் அடுத்துச் சொல்வார். | 11 |
|
| உரை |
1975. | விழி ஆயிரத் தோன் பழி தீர்த்தனை வேதியன் தன் கழியாத மாபாதகம் தீர்த்தனை கௌவைக் கங்கைச் சுழி ஆறு அலைக்கும் சடையாய் எனைத் தொட்டு அலைக்கும் பழியான் அதுந் தீர்த்து அருள் என்று பணிந்து வீழ்ந்தான். | 13 |
|
| உரை |
2044. | தறிந்த இந்தனம் தினந்தோறும் தாங்கி நீள் பங்கி பறிந்து தேய்ந்து அழுந்திய தலை உடையராய்ப் பரிந்து மறிந்த கங்கையும் பங்கு உறை மங்கையும் காணா தெறிந்த இந்தனச் சுமை திரு முடியின் மேல் ஏற்றி. | 14 |
|
| உரை |
2254. | துங்க மா முகம் ஒன்றுமே சூகர முகமா அங்கம் யாவையும் மானுட ஆக்கைய ஆக்கிக் கங்கை நாயகன் கடவுளர் நாயகன் கயல் கண் மங்கை நாயகன் கருணை ஆம் திரு உரு மறைந்தான். | 62 |
|
| உரை |
2395. | வங்கிய சேகரன் கோல் வாழும் நாள் மேலோர் வைகல் கங்கை அம் துறை சூழ் கன்னிக் கடிமதில் காசி தன்னில் பங்கயசூ முளரிப் புத்தேள் பத்து வாம் பரிமா வேள்வி புங்கவர் மகிழ்ச்சி தூங்க மறை வழி போற்றிச் செய்தான். | 2 |
|
| உரை |
2396. | நிரப்பிய வழி நாள் நவ் நீர் ஆடுவான் நீண்ட வீணை நரப்பிசை வாணி சாவித்திரி எனும் நங்கை வேத வரப்பிசை மநு ஆம் ஆயத்திரி எனும் மடவா ரோடும் பரப்பிசைக் கங்கை நோக்கிப் படருவான் எல்லை. | 3 |
|
| உரை |
2472. | பிணி அவிழ் கோதையாள் ஓர் பேதை தன் பதி தன் ஊடல் தணிய வந்து அடியில் வீழத் தன்னிழல் அனையான் சென்னி மணி இடைக் கண்டு கங்கை மணாளனை ஒப்பீர் எம்மைப் பணிவது என் என்று நக்குப் பரிவு மேல் பரிவு செய்தாள். | 40 |
|
| உரை |
2611. | குடைக்காடன் பசிக்கு அன்னக் குழி அருத்தி வேட்கை அறக் கொடுத்த கங்கைச் சடைக் காடன் புலவர் இகம் தணிவித்த முறை இது மேல் தன்னைப் பாடும் தொடைக் காடன் பகன் திகழ்ந்த தென்னவனை முனிந்து தன்னைத் தொழுது போன இடைக் காடன் உடன் போய்ப் பின்பு எழுந்து அருளிப் பிணக்கு அறுத்த இயல்பு சொல்வாம். | 1 |
|
| உரை |
2838. | கங்கையைச் சடை முடியின் மேல் கரந்தனை அவள் போல் எங்கள் தம்மையும் கரந்திடு என்று இரந்து காவேரி துங்கபத்திரை ஆதி ஆம் நதிகளும் சூழப் பொங்க வீழ்வ போல் ஒலியலும் கவரியும் புரள. | 40 |
|
| உரை |
2843. | கொய்யுளைப் பரி எழுந்த தூள் கோப்ப வான் கங்கை வையை ஒத்த ஏழ் பசும் பரி செம்பரி மாவாச் செய்தது ஒத்தது சிந்துரம் திசைக் கய முகத்துப் பெய்தது ஒத்தது ஆல் ஒத்தது பெரும் பகல் மாலை. | 45 |
|
| உரை |
2921. | வாசி வாணிகர்க்குத் தென்னன் வெண் துகில் வரிசையாக வீசினான் பாணற்கு ஏவல் செய்தவர் வெள்கு வாரோ கூசிலா நேசர்க் காப்பான் குதிரையின் இழிந்து ஏற்றம் தத் தூசினை இரண்டாம் கங்கை என முடி சூடி நின்றார். | 123 |
|
| உரை |
2977. | கங்கைப் புனல் வடிவாகிய கவ்வைத் திரை வைகைச் சங்கச்சரி அறல் ஆம் மலர்த் தார் ஓதியை நோக்கா வங்கக் கடல் பேர் ஊழியில் வருமாறு என எவரும் இங்கு அற்புதம் அடையப் பெருக என்றான் அருள் குன்றான். | 52 |
|
| உரை |
2989. | அடுத்து ஆயிரம் குண்டோதரர் எதிர் ஏற்று இருந்து அகல் வாய் மடுத்தாலும் அடங்காது என மதிப்பார் இது தனையும் எடுத்து ஆயிரம் முக கங்கையின் இறைவன் சடை ஏறக் கொடுத்தால் அலது அடங்காது இதன் கொடும் கோபமது என்பார். | 64 |
|
| உரை |
3006. | குறட்கு நீர் அருத்தி வைகைக் குடிஞையாய் ஒழுகும் கங்கை அறம் குழல் பிரிவின் ஆற்றாது அன்பினால் அவளைக் காண்பான் மறக் கயல் நெடும் கணாளை வஞ்சித்து வடிவம் மாறிப் புறப்படு வாரைப் போலப் போதுவார் போத மூர்த்தி. | 15 |
|
| உரை |
3083. | வீதி தொறும் வீழ்ந்து வீழ்ந்து இறைஞ்சி ஆலயத்து எய்தி மெய்மை ஆன கோதி அறிவு ஆனந்தச் சுடர் உரு ஆம் சிவகங்கை தோய்ந்து மேனி பாதி பகிர்ந்தவள் காணப் பரானந்த தனிக் கூத்து பயிலா நிற்கும் ஆதி அருள் ஆகிய அம்பலம் கண்டு காந்தம் நேர் அயம் போல் சார்ந்தார். | 92 |
|
| உரை |
3226. | சிங்கம் அனையார் எழுது முறை எதிர் ஆற்று ஏற தெரிந்தமரர் அம் கண் நறும் பூமழை பொழிந்தார் அறவோர் துகில் விண் எறிது ஆர்த்தார் கங்கை அணிந்தார் திருத்தொண்டர் கண்ணீர்க் கடலில் அமிழ்ந்தினார் வெம் கண் அமணர் நடுங்கி உடல் வெயர்வைக் கடலில் அமிழ்ந்தினார். | 53 |
|
| உரை |
3317. | மங்கல ஓரை வருதினத்தில் வான் இழிந்த கங்கை படிந்து உலக நாயகனைக் கை தொழுது புங்கவர் முன் சங்கற்பம் செய்து அனுச்சை பூண்டு ஒழுகி அங்கு அவர் வாய் ஆசி மொழி கேட்டு அகம் மகிழ்ந்தே. | 7 |
|
| உரை |
3335. | சாம கண்டத்தன் தன்னைத் தான் அருச்சித்த தென்னர் கோமகன் பிரம சாயை குறைத்தது இப் பதியாம் கங்கை மா மகம் தோறும் வந்து வந்துதல் படிந்தோர் விட்டுப் போ மகம் போக மூழ்கும் புனித நீர்ப் பதியைக் காண்மின். | 25 |
|
| உரை |
No comments:
Post a Comment