Monday 12 December 2022

திருவிளையாடல் புராணத்தில் 'காசி'

திருவிளையாடல் புராணத்தில் 'காசி' என்ற சொல் உள்ள பாடல்கள்


224.

புதிய தாமரை மேவிய பழமறைப் புத்தேள் 
விதியினால் கடுநடைப் பரி மகம் செய்வான் வேண்டிக் 
கதியை மாய்ந்தவர்க்கு உதவு தண்துறை கெழுகாசிப் 
பதியின் மைந்தரோடு எய்தினான் பண்டு ஒரு வைகல்.

226.

சத்திய உலகில் சரோருகக் கிழவன் சார்ந்த பின்                                          புலப் பகை சாய்த்த 
அத்திரு முனிவர் அனைவரும் காசி அடிகளை                                        அடைந்தனர் பணிந்து 
முத்தி மண்டபத்தின் அற முதல் நான்கு மொழிந்த                                   அருள் மூர்த்தி சந்நிதியில் 
பத்தியாய் இருந்து நாரத முனியைப் பார்த்து ஒரு                                         வினா வுரைபகர்வார்.

236.அன்னமலி வயல் புலியூர் காசி நகர் காளத்தி ஆல 
                                                      வாயாம் 
இன்ன வளம் பதினான்கில் திரு வால வாய் அதிகம் 
                                             எவ்வாறு என்னின் 
மின்னவிர் அம்பலம் காணக் காசிநகர் வதிந்து இறக்க 
                                             வியன் காளத்திப் 
பொன் நகரம் பத்தியினால் வழிபாடு செய அளிக்கும் 
                                             போகம் வீடு.


239.சுர நதி சூழ் காசிமுதல் பதிமறுமைக்கு கதி அளிக்கும்
                                                 தூநீர் வைகை 
வரநதி சூழ் திருவால வாய் சீவன் முத்தி தரும்
                                             வதிவோர்க்கு ஈது 
திரன் அதிகம் பரகதியும் பின்கொடுக்கும் ஆதலின்
                                             இச் சீவன் முத்தி 
புரன் அதிகம் என்பது எவன் அதற்கு அதுவே ஒப்பாம்
                                             எப் புவனத்து உள்ளும்.


242.எள் இழுது அன்னம் கன்னி இவுளி தேர் யானை 
                                                      இல்லம் 
வெள்ளியான் பொன் பூண் ஆடை விளைவொடு
                                             பழனம் உன்னாத் 
தள்ளரும் அடிமை ஆதி தானங்கள் செய்த பேறும் 
வள்ளறன் காசி ஆதிப் பதிகளில் வதிந்த பேறும்.


413.கங்கைமுதல் அளவு இறந்த தீர்த்தம் எலாம் போய்                                             படிந்து காசி காஞ்சி 
அம் கனக கேதார முதல் பதிகள் பலபணிந்து                                              அவுணன் கொன்ற 
பொங்கு பழி விடாது அழுங்கி அரா உண்ண மாசுண்டு                                                பொலிவு மாழ்கும் 
திங்களனை யான் கடம்ப வனத்து எல்லை                                      அணித்தாகச் செல்லு மேல்வை.

442.கரு வாசனை கழிக்கும் காசி நகர் தன்னில் 
துருவாச வேத முனி தொல் ஆகமத்தின் 
பெரு வாய்மை ஆற்றன் பெயர் விளங்க ஈசன் 
ஒருவா இலிங்க ஒளி உருவம் கண்டான்.

515.கை வரை எருத்தில் கனவரை கிடந்த காட்சியில்                                        பொலிந்து ஒளிர் கோயின் 
மைவரை மிடற்று மதுரை நாயகரை மரபுளி அருச்சனை                                                   புரிவான் 
பொய் வரை மறை ஆகம நெறி ஒழுகும் புண்ணிய                                        முனிவரை ஆதி 
சைவரைக் காசிப்பதி யினில் கொணர்ந்து தலத்தினில்                                              தாபனம் செய்தான்.

804.திருவளர் ஆரூர் மூலம் திருவானைக் காவே குய்யம் 
மருவளர் பொழில் சூழ் அண்ணாமலை மணி பூரம்                                                        நீவிர் 
இருவரும் கண்ட மன்றம் இதயம் ஆம் திருக்காளத்தி 
பொருவரும் கண்டம் ஆகும் புருவ மத்தியம் ஆம்                                                        காசி.

1059.மந்தரம் காசி ஆதிப் பதிகளில் வதிந்து நோற்கத் 
தந்திடும் பயனில் கோடி தழைத்திடும் மதுரை தன்னில் 
இந்த நல் விரதம் நோற்போர் அதிகம் யாது என்னில்                                                        சோம 
சுந்தரன் உரிய வாரம் ஆதலால் சோம வாரம்.

1130.அந் நெடு நாடு நீங்கி ஆடல் ஏறு உயர்த்த தோன்றல் 
பொன் நெடும் சடையில் தாழ்ந்து புனிதம் ஆம்                                                      தீர்த்தக் காசி 
நல் நெடு நகரம் எய்தி நளிர் புனல் கங்கை நீந்திக் 
கல் நெடு நெறி அநேக காவதம் கடந்த பின்னர்.

1363.ஆனாலும் இப்போது அணி கான்மிர நாட்டில் காசி 
தான் நாம் இருக்கும் தலம் ஆகும் அநாதர் ஆகி 
ஆனாத பிச்சைப் பெரு வாழ்வு உடையார் நமரா 
நாள் நாளும் விஞ்சை நடாய்த் திரி சித்தரேம் யாம்.


2395.வங்கிய சேகரன் கோல் வாழும் நாள் மேலோர் வைகல் 
கங்கை அம் துறை சூழ் கன்னிக் கடிமதில் காசி தன்னில் 
பங்கயசூ முளரிப் புத்தேள் பத்து வாம் பரிமா வேள்வி 
புங்கவர் மகிழ்ச்சி தூங்க மறை வழி போற்றிச் செய்தான்.

2677.புலவு மீன் விலைப் பசும் பொனால் செய்த பல் பூணும் 
இலகு ஆரமும் பாசியும் காசி இடை இட்டுக் 
குலவு கோவையும் சங்கமும் குலத்தினுக்கு இசைய 
அலகு இலாதபேர் அழகினுக்கு அழகு செய்து அணிந்தாள்.

https://www.tamilvu.org/ta/library-l41d0-html-l41d0ind-139511

No comments:

Post a Comment