வருடப் பிறப்புக் கணக்கு
சித்திரை 1
தமிழ்ப் புதுவருடம்
சூரியனின் தீர்காம்சக் கணக்கு, தினகதி ஆகியவற்றிலிருந்து சூரியனின் 'கிரக பாதசாரம்', கணக்கிடப்படுகின்றது. கிரக பாதாசாரம் என்பது ஒரு ஆண்டில் ஒவ்வொரு நாளும் ஒரு கிரகமானது வானத்தில் எந்த தீர்காம்ச கோணத்தில் நிலைபெற்றுள்ளது என்பதைக் காட்டும் பட்டியல் ஆகும். இப்பட்டியலில் கிரகத்தின் பாதசாரமானது கோண அளவில் கொடுக்கப்படாமல், ராசி மற்றும் நட்சத்திரங்களின் பாதக் கணக்கில் கொடுக்கப்பட்டிருக்கும். நட்சத்திரங்களின் பாதசார அளவில் கிரகங்களின் நிலையான இடத்தை இப்பட்டியல் காட்டுவதால், இப்பட்டியல் கிரக பாதசாரம் என்று சொல்லப்படுகின்றது. ஜனன ஜாதகத்தை எளிதாக ஜோதிடர்கள் கணிப்பதற்கும், கிரகங்களின் இருப்பிடத்தை ஜாதகத்தில் எளிதாக அறிவதற்கும் வசதியாக இப்பட்டியல் ராசி மற்றும் நட்சத்திரப் பாத கணக்கில் கொடுக்கப்பட்டுள்ளது.
முதலாவதாக சூரியனின் கிரகபாத சாரத்தை நாம் சிந்திக்கலாம். சென்ற நான்கு ஆண்டுகளுக்கான (விக்ரம, விஷு, சித்ர பானு, சுபானு) மற்றும் கடந்த தாரண வருடத்தில் சூரியனின் கிரகபாத சாரம் அந்தந்த வருடத்தில் பஞ்சாங்கத்தில் கிரகபாத சாரம் (Dr. M. L. ராஜா – வானசாஸ்திரம் பக்கம் – 130)
என்ற பட்டியலில், 'சூரியன்' என்ற தலைப்பில் தேதி, நாழிகை, விநாழிகை (விநாடி), நட்சத்திரப் பாதம், ராசி, அம்சம் என்ற விவரங்களின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் சூரியன் ஒவ்வொரு ஆண்டும் என்ன தேதியில் எத்தனை நாழிகை, எத்தனை விநாழிகைக்கு மேஷ ராசியில் பிரவேசிக்கின்றது என்பதும் கொடுக்கப்பட்டிருக்கும். சூரியனின் இந்த மேஷ ராசிப் பிரவேசம் என்பது பூமி தனது சூரியச் சுற்றுப் பாதையில் 360 டிகிரி கோண அளவிலான ஒரு முழு வட்டம் சற்றி முடிந்த பின்பு 361 வது டிகிரி (அடுத்த சுற்றின் முதல் டிகிரி) கோண அளவிற்குள் நுழைவதைக் குறிக்கின்றது. இதுவே புத்தாண்டுத் துவக்கம் ஆகும். இந்தக் கணக்கீடும் வானத்தில் கிரஹங்களின் இயக்கத்தை ஒட்டியே, நமது முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டதாகும். இதனைக் கீழ்க்கண்ட நம் நாட்டின் பண்டைய வான சாஸ்திர நூல்கள் தெரிவிக்கின்றன. இன்றைக்கு 1109 ஆண்டுகளுக்கு முன்பு (கி.பி. 904-ல்) வடேச்வரர் எழுதிய “வடேச்வர ஸித்தாந்தம்“ என்ற வான சாஸ்திர நூலின் “மத்யக த்ய அதிகாரம்” என்னும் முதல் அதிகாரத்தின் 2-ம் அத்தியாயமான மாந விவேக: என்பதன் 8-ம் ஸ்லோகம்,
'த்ருட்யா(தி பத் மோத்பவ ஜீவிதாந்த :
காலா: ஸமம் தேந ஜ ஷ அஜ ஸந்தெள
லங்கா குஜஸ்தத்யுசரை: ப்ரவ்ருத்த:
ச நேர் திநே சைத்ர ஸிதாதி த அயம் ||
என்று குறிப்பிடுகின்றது.
பொருள். (1) த்ரு டி = மிக மிகச் சிறு கால அளவு (2) பத்ம = தாமரைப்பூ (3) உதபவ = பிறத்தல், தோன்றுதல் (4) ஜீவிதாந்த கால: = வாழ்நாள் (5) ஸமம் = ஒன்றாக, ஒருசேர, (6) (Dr. M. L. ராஜா – வானசாஸ்திரம் பக்கம் – 131)
தேத = இவ்விதமாக (7) ஜஷ மீன்= மீன ராசி, (8) அஜு ஆடு = மே ராசி, (9) ஸத்தௌ = சந்திப்பு (10) லங்கா லங்கை, (11) குஜ தொடுவானம் (கு = பூமி, ஜ = பிறப்பு) (12) ஸ்த = நிலை பெற்றிருத்தல், (13) த்யுசரை = கிரஹங்களால் (த்யு = வானம், சர = நகர்கின்ற) (14) ப்ரவ்ருத்தி = சுற்றத் துவங்குதல் (15) சநேர் திதே = சனிக்கிழமையில் (16) சைத்ர = சித்திரை மாதம் (17) ஸித = வெண்மை, சுக்லபக்ஷம் (வளர்பிறை), (18) ஆதித =இது முதலாக.
மிக மிகச் சிறு கால அளவான த்ருடி முதல், மிகப்பெரும் காலமான ப்ரம்மாவின் வாழ்நாள் வரை உள்ள காலத்தின் துவக்கமானது, ஒரு சனிக்கிழமையில், கோள்கள் தங்களின் சுழற்சி இயக்கத்தை (REVOLUTION), வானத்தில் மீனம் மற்றும் மேஷ ராசிகளின் சந்திப்பில், சித்திரை மாத துவக்கமான வளர்பிறையின் ஆரம்பத்தில் லங்கா என்னும் இடத்தின் தொடுவானத்தில் துவங்கும் போது, நிகழ்கின்றது என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள் ஆகும்.
(த்ருடி = 1/1,12,500 நலீன செகண்ட், ப்ரம்மாவின் வாழ்நாள் = 311,04,000 கோடி வருடங்கள். லங்கா மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜயினி நகரத்தின் தீர்காம்ச ரேகையானது பூமத்திய ரேகையை வெட்டுகின்ற இடம்).
இதே போன்று, இன்றைக்கு 2013 ஆண்டுகளுக்கு முன்பு (கி.மு.0). ப்ரம்ம குப்தரால் எழுதப்பட்ட “ப்ரம்ஹ ஸ்புட ஸித்தாந்தம்” என்ற நம் நாட்டின் பண்டைய வானசாஸ்திர நூலின் மத்யமாதிகார என்னும் முதல் அத்தியாயத்தின் 4 -ம் ஸ்லோகம்,
'சைத்ர ஸிதாதேர் உதயாத்பா நோர் திந மாஸ வர்ஷயுக கல்பா: | - ஷ்ட்யாதௌ லங்காயாம் ஸமம் ப்ரவ்ருத்தாதி நேள்கஸ்யா" என்று குறிப்பிடுகின்றது. (Dr. M. L. ராஜா – வானசாஸ்திரம் பக்கம் – 132)
பொருள்- (1) சைத்ர = சித்திரை மாதம், (2) ஸிதா = வெண்மை, சுக்ல பக்ஷம் (வளர்பிறை), (3) உதயாத் = உதயத்தின்போது, (4) பாநு அர்கா = சூரியன், (5) திந = தினம், நாள், (6) மாஸா = மாதம், (7) வர்ஷ = வருடம், (8) யுக = யுகங்கள், (9) கல்ப = கல்ப காலம், (10) ஸ்ரு ஷ்டி ஆதௌ = படைப்பிலிருந்து. (11) லங்கா = லங்கை, (12) ஸமம் = ஒரு சேர, (13) ப்ரவ்ருத்தா = சுற்றத் துவங்குதல், (14) திந அர்கஸ்ய = ஞாயிற்றுக் கிழமையின், தினம், மாதம், வருடம், யுகம் மற்றும் கல்பம் எனப்படும் கால அளவுகள். இந்த பிரபஞ்சத்தின் (பேரண்டம், அண்டசராசரங்கள், ஜகத் - UNIVERSE), படைப்பிலிருந்து, ஒரு சேர, சித்திரை மாதத்தின் துவக்கமான வளர்பிறையின் ஆரம்பத்தில், லங்கா என்ற இடத்தில் சூரிய உதயத்தின் போது துவங்குகின்றன என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.
கல்பம் = 432 கோடி வருடங்கள், மத்வந்தரம் = 30,84,48000 வருடங்கள், கல்பம், மந்வந்தரம் மற்றும் யுகங்களின் துவக்கத்தில், ராகு தவிர இதர நவகிரஹங்கள் தங்களது சுழற்சி இயக்கங்களை, மீன ராசியின் முடிவில், மேஷ ராசியின் துவக்கத்தில், சித்திரை மாதத் துவக்கத்தில், லங்கா என்ற இடத்தில் சூரிய உதயம் நிகழும் போது தினம், மாதம், வருடம் என்ற கால அளவுகளில் ஒரு சேர துவங்குகின்றன என்பது இந்த ஸ்லோகங்களின் விரிவான பொருள் ஆகும். இந்தபிரபஞ்சத்தின் படைப்பின் போதும், கல்பம், மந்வந்தரம் மற்றும் யுகங்கள் போன்ற கால அளவுகளின் துவக்கத்தின் போதும், ராகு தவிர இதர நவகிரஹங்கள், வானத்தில் எந்த இடத்தில் அதாவது மேஷராசியின் துவக்கத்தில் தங்களது சுழற்சி இயக்கத்தைத் துவக்குகின்றனவோ, அந்த மேஷ ராசியின் துவக்கத்தையே, பூமியின் சூரியச் சுற்று இயக்கத்தால் தோன்றுகின்ற சூரியனின் தோற்றப் பூர்வமான சுற்றுப் பாதையின் முதல் டிகிரி கோண அளவாக விஞ்ஞானப் பூர்வமாகவே நமது முன்னோர்களால் கணக்கிடப் (Dr. M. L. ராஜா – வானசாஸ்திரம் பக்கம் – 133)
பட்டது. இந்த நிகழ்வுகள் நிகழ்கின்ற நாளான சித்திரை முதல் நாளே புதுவருடத் துவக்கமாகவும் நமது முன்னோர்களால் விஞ்ஞானப் கணக்கிட பட்டது. ஆகவே, சூரியனின் தோற்றப் பூர்வமான சுற்றுப் பாதையில் 360 வது டிகிரி கோண அளவு முடிந்து அடுத்த சுற்றின் முதல் டிகிரி துவக்கமும், புதுவருடத்தின் துவக்கமாக சித்திரை முதல் நாள் என்று கணக்கிடப் பட்டதும், விஞ்ஞானப் பூர்வமவே, வானத்தில் நவகிரஹங்களின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டவை ஆகும். ஆகவே, நமது பாரதீயக் காலக் கணக்கில் புத்தாண்டுத் துவக்கம் என்பது வானத்தில் பூமியின் சூரியச் சற்று இயக்கத்தை அடிப்படையக் கொண்டு கணிக்கப்படுகின்றது. இதையே பஞ்சாங்கம் பயன்படுத்துகின்றது. இருப்பினம் இதை நாம் விஞ்ஞானப் பூர்வமற்ற மூடநம்பிக்கை என்று கேலி செய்கின்றோம். ஆனால் நாம் அலுவலகத்தில் பயன்படுத்தும் ஆங்கில வருட கணக்கு மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு செயற்கையான விஞ்ஞான பூர்வமற்ற ஒன்று என்பதை உணராது. இதையே விஞ்ஞானமயமானது என்று உயர்த்திப் பேக்கின்றோம்.
ஆனால், இந்த ஆங்கில் வருடக் காலக் கணக்கில் எவ்வித விஞ்ஞானமும் இல்லை. இதில் இயற்கையின் எந்த ஒரு நிகழ்வும் சம்பத்தப்பட்டிருக்கவில்லை. திசம்பர் 31 முடிந்தவுடன் ஜனவரி 1 வந்து விடும். சூரியன் மற்றும் பூமியின் இயக்கத்தில் ஏற்படும் மாறுபாட்டை ஒட்டி வருவதில்லை. அதாவது பூமி 360 டிகிரி (அடுத்த சுற்றின் முதல் டிகிரி)க்கு வரும் போதுதான் ஜனவரி 1 வரும் என்ற வரைமுறை ஏதும் இல்லை. பூமியின் சூரியச் சுற்றுப்பாதைக் கோண அளவினைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், திசம்பர் 31 முடிந்து, (Dr. M. L. ராஜா – வானசாஸ்திரம் பக்கம் – 134)
அடுத்த நாள் ஜனவரி 1 என்று செயற்கையாக கணக்கிட்டுள்ளனர். இதனாலேயே லீப் வருடங்களும் அதை ஒட்டி 2000 ஆம் ஆண்டிஸ் பிப்ரவரி மாதத்திற்கு 28 நாட்களா அல்லது 29 நாட்களா என்று எண்ணற்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன. ஏனென்றால் இந்த ஆங்கில வருடக் கணக்கு முற்றிலும் செயற்கையானது, விஞ்ஞாளப் பூர்வமற்றது.
இதற்கு நேர்மாறாக நாம் எதை மூட நம்பிக்கை என்று தாழ்த்திச் சொல்லுகின்றோமோ, அந்தப் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தமது பாரதீய காலக் கணக்கு வானத்தில் கிரகங்களின் இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்பட்ட ஒரு விஞ்ஞாளப் பூர்வமான காலக் கணக்கு ஆகும். ஆகவே, இதில் லீப் வருடக் குழப்பங்கள் ஏற்படுவதில்லை. இதனை நன்கு புரிந்துகொள்ள பின்வரும் விளக்கத்தை ஒரு முறைக்கு இருமுறை நன்கு ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். உதாரணமாக விஷு வருடம், சித்திரை முதல் நாள் அன்று துவங்குகின்றது. ஆனால் சூரியன் மேஷ ராசியில் முந்திய நாளிலேயே (விக்ரம ஆண்டு பங்குனி மாதம் கடைசி நாள்) 38 நாழிகை 14 விநாழிகையில் முதல் டிகிரி கோண அளவிற்குள் பிரவேசிக்கின்றது. ஆகவே, பூமி தனது விக்ரம ஆண்டிற்கான 360 டிகிரி கோண அளவு கொண்ட ஒரு முழு சூரியச் சுற்று வட்டத்தை முடித்த பின்பு, விக்ரம் ஆண்டு பங்குனி மாதம் கடைசி நாளில், அன்றைய சூரிய உதயத்திலிருந்து 38 நாழிகை 14 விநாழிகையில் 361 டிகிரி கோண அளவிற்கு (விஷு வருடச் சூரியச் சுற்றின் முதல் டிகிரி) வந்து விடுகின்றது. ஆனால் இந்த நிகழ்வு, பங்குனி மாதக் கடைசி நாளில், பகல் பொழுது முடிந்து இரவுப் பொழுதில், சூரியன் உதயமாகி 30 நாழிகை கழிந்த பின்பு, சூரிய அஸ்தமனத்திற்குப் பின்புதான் நடக்கின்றது. புத்தாண்டு இரவில் துவங்குவதைவிட பகல் .... .... ....
(Dr. M. L. ராஜா – வானசாஸ்திரம் பக்கம் – 135)
No comments:
Post a Comment