Tuesday, 18 January 2022

ஊழி குறித்த திருவிளையாடல் புராணம்

ஞாலம் முடித்த ஊழி

(ஊழி குறித்த திருவிளையாடல் புராணம் 19 பாடல்களின் தொகுப்பு இது)


ஊழ் குறித்து ஓர் அதிகாரமே இருந்தாலும், ஊழி குறித்து ஒரேயொரு குறள் மட்டுமே உள்ளது. 

“ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி யெனப்படு வார் “

என்று ஊழியையும் ஆழியையும் தொடர்பு படுத்திக் குறள் கூறுகிறது.  திருக்குறள் போன்றே திருவிளையாடல் புராணமும் ஊழியையும் ஆழியையும் சேர்த்தே பாடுகிறது.


ஊழி குறித்த திருவிளையாடல் புராணம் 19 பாடல்களின் தொகுப்பு இது.

1) 202.

புரந்தர் ஆதி வானவர் பதம் போதுறை புத்தேள்

பரந்த வான் பதம் சக்கரப் படை உடைப் பகவன்

வரந்த வாதுவாழ் பதம் எலாம் நிலை கெட வரு நாள்

உரம் தவாது நின்று ஊழி தோறும் ஓங்கு அவ் ஓங்கல்.


2) 265.

அவ்வழிப் புறம்பு சூழ்ந்து கிடந்த ஆழி ஊழிப்

பௌவ நீர் என்ன ஓங்கப் பாணியால் அமைத்து வேணித்

தெய்வ நல் நீரைத் தூவிக் கலந்து மா தீர்த்தம்  ஆக்கிக்

கை வரை கபாலி நந்தி கணத்தினை நோக்கிக் கூறும்.


3) 625.

சலிக்கும் புரவித் தம் தேர் உடைத் தம் பிராட்டி

கலிக்கும் பல தூரியம் கைவரை தெய்வத் திண்தேர்

வலிக்கும் பரி மள்ளர் வழங்கு ஒலி வாங்கி நேரே

ஒலிக்கும் படி கிட்டினள் ஊழிதோர் ஓங்கு ஓங்கல்.


4) 630.

சூலம் கண் மழுப் படை தோமரம் நேமி பிண்டி

பாலங்கள் கழுக் கடை வாள் படை தண்டம் நாஞ்சில்

ஆலம் கவிழ் கின்ற அயில் படை வீசி ஊழிக்

காலம் கலிக்கும் கடல் போன்ற களமர் ஆர்ப்பு.


5) 709.

இடிக்கும் வான் உரு மேறுயர் நெடும் கொடி எகின  வெண் கொடி ஞாலம்

முடிக்கும் ஊழி நாள் உளர் கடும் கால் என மூச் செறி விடநாகம்

துடிக்க வாய் விடு முவண வண் கொடி முதல் சூழ்ந்து  சேவகம் செய்யும்

கொடிக் குழாத்தின் உள் கொடி அரசாய் விடைக் கொடி புடை பெயர்ந்து ஆட.


6) 1037.

பொரும் கடல் வேந்தனைக் கூவிப் பொன் என

இரும் கடல் உடுத்த பார் ஏழும் ஊழிநாள்

ஒருங்கு அடு வெள்ளம் ஒத்து உருத்துப் போய் வளைந்து

அரும் கடி மதுரையை அழித்தியால் என்றான்.


7) 1039.

கொதித்தலைக் கரங்கள் அண்ட கூடம் எங்கும் ஊடு போய்

அதிர்த்து அலைக்க ஊழி நாளில் ஆர்த்து அலைக்கும் நீத்தம் ஆய்

மதித் தலத்தை எட்டி முட்டி வரும் ஓர் அஞ்சனப் பொருப்பு

உதித்தல் ஒத்து மண்ணும் விண்ணும் உட்க வந்தது உத்தியே.


8) 1154.

ஐம் பெரும் பூத நிலை திரிந்து ஈர் ஏழ் அடுக்கிய உலகொடு மயன் மால்

உம்பர் வான் பதமும் உதித்தவாறு ஒடுங்க உருத்தது  ஓர் ஊழி வந்து எய்தச்

செம் பொருள் மறையும் ஒடுங்கிய வழி நாள் செம் சுடர் கடவுள் முன் மலரும்

வம்பு அவிழ் கமலம் என அரன் திருமுன் மலர்ந்ததால் அகிலமும் மாதோ.


9) 1301.

சூலமோடு அழல் ஏந்தும் சொக்கர் திரு விளையாட்டின்

சீலமோ நாம் இழைத்த தீ வினையின் திறம் இது வோ

ஆலமோ உலகம் எலாம் அழிய வரும் பேர் ஊழிக்

காலமோ எனக் கலங்கிக் கடி நகரம் பனிப்பு எய்த.


10) 1313.

ஊழிநாள் வெடிக்கும் அண்ட கடாகத்தின் ஒலிபோல் ஆர்த்துப்

பாழிவான் உருமு வீழப் பணாடவி மணிகள் சிந்தி

ஆழி நீர் ஞாலம் தாங்கும் அரா உடல் நெளிய திக்கில்

சூழி மால் யானை நின்ற நிலை கெடத் துணுக்கம் கொள்ள.


11) 1608.

அத்து அழன்று எரி குண்டம் நின்றும் அகன் பிலத்து எழுவான் என

பத்து துஞ்சிருள் வாயும் வாய் இருபாலும் வலிய பகிர் மதிக்கு

ஒத்தும் நஞ்சு இனம் ஒழுகு பற்களும் ஊழி ஆரல்  விழிகளும்

வைத்து அசைந்து ஒரு வெற்பு வந்து என வந்துளான் ஒரு தானவன்.


12) 1761.

மின் அலங்கள் வாகை வேல் விழுப் பெரும் குலத்தினில்

தென்னவன் தன் ஆணை நேமி திசை எலாம் உருட்டும் நாள்

முன்னை வைகல் ஊழி தோறும் ஒங்கும் மொய்வரைக்கணே

மன்னு தண் பராரை ஆல நிழல் மருங்கு மறை முதல்.


13) 1844.

விளை மத ஊற்று மாறி வெகுளியும் செருக்கும் மாறித்

துளை உடைக் கைமான் தூங்கு நடைய வாய்ச் சாம்பிச் சோர்ந்த

உளர் தரு ஊழிக் காலினோடும் ஆம் புரவி எய்த்துத்

தளர் நடை உடைய வாகித் தைவரும் தென்றல் போன்ற.


14) 2074.

வாழிய உலகின் வானோர் மனிதர் புள் விலங்கு மற்றும்

ஆழிய கரணம் எல்லாம் அசைவு அற அடங்க ஐயன்

ஏழ் இசை மயமே ஆகி இருந்தன உணர்ந்தோர் உள்ளம்

ஊழியில் ஒருவன் தாள் புக்கு ஒடுங்கிய தன்மை ஒத்த.


15) 2637.

அறைந்தவித் தெய்வத்து ஆன அனைத்தும் ஓர் ஊழிக் காலத்து

இறந்த நம் தோழன் கண்ட இலிங்கமாம் அதனால் இங்கே

உறைந்தனம் உறைதலாலே உத்தர ஆலவாய் ஆய்ச்

சிறந்திடத் தகுவது இன்று முதல் இந்தத் தெய்வத் தானம்.


16) 2977.

கங்கைப் புனல் வடிவாகிய கவ்வைத் திரை வைகைச்

சங்கச்சரி அறல் ஆம் மலர்த் தார் ஓதியை நோக்கா

வங்கக் கடல் பேர் ஊழியில் வருமாறு என எவரும்

இங்கு அற்புதம் அடையப் பெருக என்றான் அருள் குன்றான்.


17) 3082.

வழுதியால் விடுக்கப் பட்ட வாதவூர் முனிகள் தம்மைப்

பழுது இலாப் பாடல் கொள்வார் பதி பல பணிந்து போந்து

முழுது உணர் மறையோர் வேள்விப் புகை அண்ட முடி கீண்டு ஊழி

எழு வட வரை போல் தோன்றும் எழில் தில்லை மூதூர் சேர்ந்தார்.


18) 3123.

ஏழ் இசை மறை வல்லாளர் சிவபாத இதயர் என்னக்

காழியில் ஒருவர் உள்ளார் கார் அமண் கங்குல சீப்ப

ஆழியில் இரவி என்ன ஒரு மகவு அளித்தி என்னா

ஊழியில் ஒருவன் தாளை உள்கி நோற்று ஒழுகி நின்றார்.


19) 3325.

அடி முடி விலங்கும் புள்ளும் அளந்திடாது அண்டம் கீண்டு

நெடுகிய நெருப்பு நின்ற நிலை இது முள்வாய்க் கங்க

வடிவு எடுத்து இருவர் நோற்கும் மலை இது பல்வேறு ஊழி

இடை உற முன்னும் பின்னும் இருக்கும் இக் குன்றைக் காண்மின்.


‘ஊழிற் பெருவலி யாவுள‘ :)

அன்பன்

காசிஸ்ரீ நா.ரா.கி. காளைராசன்

சித்திரை 31 (14.05.2017) ஞாயிற்றுக் கிழமை.

No comments:

Post a Comment