Tuesday, 28 April 2020

திருவிளையாடல் புராணத்தில் வேதியன்

'வேதியன்' என்ற சொல் உள்ள திருவிளையாடற் புராணம் பாடல்களின் தொகுப்பு

270.
விண்ணவர் தம்மின் மேலாம் வேதியன் ஆகி நின்ற
பண்ணவன் தான் அந்நீரில் படிந்து தன்ன உச்சையாலே
அண்ணல் அம் கணத்தி நோரை மூழ்கு வித்து அனாதி ஆய
புண்ணிய விலிங்கம் தன்னுள் புகுந்து இனிது இருந்தான் மன்னோ.
776.
விண் தலத்து அவருள் ஆதி வேதியன் பாத தீர்த்தம்
முண்டகத் அவனும் மாலும் முனிவரும் புரந்தர் ஆதி
அண்டரும் நந்திதேவு அடுகணத்தவரும் ஏனைத்
தொண்டரும் புறம்பும் உள்ளும் நனைத்தனர் சுத்தி செய்தார்.
856.
அனையன் ஆகியும் நீர் நசை ஆற்றலன் வருந்தும்
வினையன் ஆகி வானதிச் சடை வேதியன் பாதத்து
இனைய நாதனும் தன் திரு முடியின் மீது இருக்கும்
நனைய நாள் மலர் ஓதியைப் பார்த்து ஒன்று நவில் வான்.
1156.
பிரணவம் உதித்தது அதன் இடை வேதம் பிறந்தன நைமி சாரணியத்து
அருள் நிறை முனிவர் கண்ணுவர் கருக்கர் ஆதியோர் அதிகரித்து அவற்றின்
பொருள் நிலை தெரியாது உள்ளமும் முகமும் புலர்ந்தனர் இருப்பவர் போதத்
இருள் மல வலி வென்றவன் அரபத்தன் என்று ஒரு வேதியன் வந்தான்.
1424.
மாதங்கம் தடிந்து தட்டாலை மண்டபத்து இருந்த வீரன்
பாதங்கள் கையால் பற்ரிப் பாண்டியன் இரந்து வேண்டிப்
போதங்கள் கடந்தாய் என்றும் பொலிய இங்கு இருத்தி என்ன
வேதங்கள் அருத்தம் சொன்ன வேதியன் அதற்கு நேர்ந்தான்.
1435.
பிச்சை வேண்டினான் அவற்குத் தன் பெண்ணினைக் கொடுப்பான்
இச்சை கூர்ந்து அரும் தவத்தினால் வருந்தி ஈன்று எடுத்த
விச்சை வேதியன் மனையொடு சுற்றமும் வினவாது
அச்சம் இன்றி நீர் எடுத்து அவன் அங்கையில் பெய்தான்.
1462.
வேந்தன் மீன வண் கொடியவன் ஆகிய விக்கிரமன் தன் தோள்
வந்து மண் பொறை இராச சேகரன் புயத்து இறக்கி ஐந்தரு நாடன்
பூம் தண் மா மலர் வேதியன் மாதவன் புரத்தின் மேல் பொலிந்து ஓங்கும்
சாந்த நீறு எனக் கண்ணித்த புண்ணியத் தனி முதல் நகர் சார்ந்தான்.
1508.
வாயில் உளார் தம் மன்னவன் முன் போய் மன்னா நம்
கோயிலின் மாடு ஓர் வேதியன் மாதைக் கொலை செய்தான்
ஆயினன் என்று ஓர் வேடனை முன் விட்டு அவிந்தாளைத்
ஆயினன் வந்து இங்கு இட்டு அயர் கின்றான் தமியன் என்றார்.
1510.
வேதியன் நிற்கும் தன்மை தெரிந்தான் மெலிவு உற்றான்
சாதியின் மிக்காய் வந்தது உனக்கு என் தளர் கின்றாய்
ஓதுதி என்னக் காவலனைப் பார்த்து உரை சான்ற
நீதி உளாய் கேள் என்று உரை செய்வான் நிகழ் செய்தி.
1536.
வெருவும் காய் சின மாறிய வேதியன்
மருவும் காதல் மனை எனும் பேரினாள்
திருவும் காமன் நல் தேவியும் மண் புனை
உருவும் காமுறு ஒப்புஇல் வனப்பினாள்.
1574.
அழிந்த வேதியன் மா பாதகம் தீர்த்தது அறிந்து வேந்து அமைச்சர் ஊர் உள்ளார்
ஒழிந்த பார் உள்ளார் வான் உளார் வியப்பம் உற்று நல் உரை உணர்வு எல்லாம்
கழிந்த பேர் அருளிக் கயவன் மேல் வைத்த காரணம் யாது எனக் கண்ணீர்
வழிந்து நான் மாடக் கூடல் நாயகனை வழுத்தினார் மகிழ்ச்சியுள் திளைத்தார்.
1575.
வேதகம் தரத்து முக்கண் வேதியன் மறையோன் செய்த
பாதகம் தவிர்த்தவாறு பகர்ந்தனம் விஞ்சை ஈந்த
போதகன் மனைக்குத் தீங்கு புந்தி முன்னாகச் செய்த
சாதகன் தனைப் போர் ஆற்றித் தண்டித்த தண்டம் சொல்வாம்.
1975.
விழி ஆயிரத் தோன் பழி தீர்த்தனை வேதியன் தன்
கழியாத மாபாதகம் தீர்த்தனை கௌவைக் கங்கைச்
சுழி ஆறு அலைக்கும் சடையாய் எனைத் தொட்டு அலைக்கும்
பழியான் அதுந் தீர்த்து அருள் என்று பணிந்து வீழ்ந்தான்.
2333.
வெள்ளநீர் வறப்ப ஆதி வேதியன் ஞாலம் முன்போல்
உள்ளவாறு உதிப்ப நல்கி உம்பரோடு இம்பர் ஏனைப்
புள்ளொடு விலங்கு நல்கிக் கதிர் உடல் புத்தேள் மூவர்
தள்ளரு மரபின் முன் போல் தமிழ் வேந்தர் தமையும் தந்தான்.
2524.
உணர்ந்த கேள்வியார் இரரோடு ஒல்லை போய்ப்
புணர்ந்த ஆயிரம் பொன்னும் இன் தமிழ்
கொணர்ந்த வேதியன் கொள்க இன்று என
மணந்த தாரினான் மகிழ்ந்து நல்கினான்.
2649.
மின் திரித்து அன்ன வேணி வேதியன் இடைக்காடன் பின்
சென்று மீண்டனை யான் கொண்ட பிணக்கினைத் தீர்த்த வண்ணம்
இன்று உரை செய்து முந்நீர் எறிவலை வீசி ஞாழன்
மன்றல் அம் குழலினாளை மணந்து மீள் வண்ணம் சொல்வாம்.
3121.
வேதியன் ஒருவன் கண்டி வேடமும் பூண்டோன் மெய்யில்
பூதியன் புண்டரிக புரத்தினும் போந்தோன் கூடல்
ஆதியைப் பணிவான் வந்தான் மங்கையர்க்கு அரசியாரும்
நீதிய அமைச்சர் ஏறு நேர்பட அவனை நோக்கா.


நன்றி - தமிழ் இணையப் பல்கலைக்கழகம் - http://www.tamilvu.org/ta/library-l41d0-html-l41d0ind-139511

பாடல் தொகுப்பு
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஆராய்ச்சி அமைப்பாளர்,
திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம்

No comments:

Post a Comment