Tuesday, 28 April 2020

திருவிளையாடல் புராணத்தில் வேதியர்

திருவிளையாடல் புராணத்தில்  
'வேதியர்' 
என்ற சொல் உள்ள பாடல்களின் தொகுப்பு

100.
சீத வேரி உண்டு அளி முரல் கமலம்மேல் செருந்தி
போத வேரியும் மலர்களும் சொரிவன புத்தேள்
வேத வேதியர் செம் கரம் விரித்து வாய் மனுக்கள்
ஓத வேமமும் அதகமும் உதவுவார் அனைய.
828.
கன்னியர்க்கு அரசு ஆயினாள் கடிமனை புகுந்த
மின் இயல் கடை மாதவர் வேதியர் ஏனோர்
எந் நிலத்து உள மன்னவர் யாவர்க்கும் முறையே
பொன் இயல் கலத்து அறு சுவைப் போனகம் அருத்தா.
908.
துங்கக் கலை வேதியர் தொல் மறை நூல்
சங்கற்ப விதிப்படி தன் துணைக்கை
அம் கைத் தளிர் பற்றி அகத்து உவகை
பொங்கப் புணரிப் புனல் ஆடினளே.
1073.
ஆதி இவ் இலிங்கம் தீண்டல் அருகர் அல்லாத வேத
வேதியர் முதலோர் இட்ட இலிங்கத்து இவ்விதியால் அர்ச்சித்து
ஓதிய விரதம் நோற்க அர்ச்சனைக்கு உரியர் அல்லாச்
சாதியர் பொருள் நேர்ந்து ஆதி சைவரால் பூசை  செய்தல்.
1078.
புலர்ந்த பின் நித்த வினை முடித்து அரம்பை பொதுளும் பாசிலை பதின் மூன்றின்
நலம் தரு தூ வெள்ளரிசி பெய்து இனிய நறிய காய் கறியொடு பரப்பி
அலந்தர வான் பால் நிறை குடம் பதின் மூன்று அரிசி மேல் வைத்தான் அடியில்
கலந்த அன்பினராய்ச் சிவாஅர்ச் சனைக்கு உரிய கடவுள் வேதியர் களை வரித்து.
1157.
வந்த வேதியனை இருந்த வேதியர்கள் வர எதிர்ந்து  இறைஞ்சி வேறு இருக்கை
தந்த வேலையில் அம் மறையவன் முனிவர் தமை முகம்  நோக்கி ஈது உரைப்பான்
பந்த வேதனை சாலவா வெறுப்பு இகந்த பண்பினன் ஆயினிர் நீவிர்
சிந்தை வேறு ஆகி முகம் புலர்ந்து இருக்கும் செய்தி யாது என அவர் சொல்வார்.
1353.
சித்த யோகிகள் செய்கின்ற ஆடல் மேல் செலுத்தி
வைத்த கண்களும் சிந்தையும் வாங்கலர் திகைத்துத்
தந்த மாள் வினைத் தொழில் மறந்து இருந்தனர் தகைசால்
முத்த வேதியர் ஆதிய முதுநகர் மாக்கள்.
1449.
இல் பூட்டிப் போயினர் எமரங்கள் எனக் கௌரி  இயம்ப மேரு
வில் பூட்டிப் புரம் பொடித்த வேதியர் நின் கை  தொட்டு விடு முன் யாத்த
கொல் பூட்டு விடும் திறந்து கடிது அடிசில் சமைத்து இடுதி எனக் குமரி தாளில்
அல் பூட்டு மடவாலும் அவ்வாறே அட்டில் புகுந்து அடிசில் ஆக்கி.
2005.
முக்கண் நாயகன் பொருட்டு என வேள்விகள் முடித்துத்
தொக்க வேதியர் இவர் புனல் சாலை இத் தொடக்கத்
தக்க பேர் அறம் புகழ் பயன் தமை நன்கு மதிக்கும்
பொக்க மாறிய நிராசையால் புரிந்தவர் இவர் காண்.
2757.
அண்ணல் வேதியர் ஒழுக்கமும் அன்பும் கண்டு யாக்கை
உள் நிலா உயிர் பொருள் புனலுடன் கவர்ந்து உள்ளக்
கண் இலான் மலம் கழீஇப் பத கமலமும் சூட்டி
வண்ண மாமலர்ச் செம்கரம் சென்னி மேல் வையா.
2861.
ஒல்லையில் அது மன்னற்கு உரையுமின் என மேரு
வில்லவன் அருள் பெற்ற வேதியர் பெருமான் போய்ச்
செல்லது தளை இட்ட திரு மகன் அருகு எய்தி
மல் அணி திணி தோளாய் வருவன பரி என்றார்.
2927.
நெருங்கு தூரிய முழக்கமும் தானையும் நிமிர
மருங்கு இலாதவர் வந்து எதிர் மங்கலம் ஏந்த
அரம் கொல் வேலினான் அருளிய வரிசை யோடு அணைந்து
புரம் கொல் வேதியர்க்கு அன்பர் தம் திரு மனை புகுந்தார்.
2970.
கண்ணும் இடும் கவசமும் போல் காரியம் செய்து   ஒழுகியதும் காலம் பார்த்து எம்
எண்ணரிய நிதி ஈட்டம் கவர்வதற்கோ நின் அமைச்சின் இயற்கை நன்று ஆல்
புண்ணிய வேதியர் மரபில் பிறந்தன என்று ஒரு பெருமை பூண்டாயே நீ
பண்ணிய காரியம் பழுது பிறரால் தண்டிக்கப் படுவர் என்றான்.
2976.
என்று ஏறிய புகழ் வேதியர் இரங்கும் துதி செவியில்
சென்று ஏறலும் விடை ஏறு சுந்தரன் மற்று இவர் செயலை
மன்று ஏறவும் முடிமேல் நதி மண் ஏறவும் முதியாள்
அன்று ஏறிய தேரோடும் விண் அடைந்து ஏறவும் நினைந்தான்.
3243.
இன்னமும் பல் நாள் எம்மை இடம் தொறும் பாடி எஞ்சும்
புன் நெறி ஒழுகுவாரை வென்று நம் புனித வீடு
பின்னர் நீ பெறுதி என்னா ஏடு தந்து ஆசி பேசி
மின் என மறைந்து நின்றார் வேதியர் ஆய வேடர்.
3255.
ஆதி ஆலயத்து அடலை கொண்டு ஆழி சூழ் காழிச்
சோதி வேதியர் பாண்டியன் சுரம் தணித்து உடலில்
பேதியாத கூன் நிமிர்த்தலால் பிறங்கு கற்பாதிப்
பூதி யாவினும் சிறந்தது அவ் வட்டில் வாய்ப் பூதி.

நன்றி - http://www.tamilvu.org/ta/library-l41d0-html-l41d0ind-139511

பாடல் தொகுப்பு
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஆராய்ச்சி அமைப்பாளர்
திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம்

திருவிளையாடல் புராணத்தில் வேதியன்

'வேதியன்' என்ற சொல் உள்ள திருவிளையாடற் புராணம் பாடல்களின் தொகுப்பு

270.
விண்ணவர் தம்மின் மேலாம் வேதியன் ஆகி நின்ற
பண்ணவன் தான் அந்நீரில் படிந்து தன்ன உச்சையாலே
அண்ணல் அம் கணத்தி நோரை மூழ்கு வித்து அனாதி ஆய
புண்ணிய விலிங்கம் தன்னுள் புகுந்து இனிது இருந்தான் மன்னோ.
776.
விண் தலத்து அவருள் ஆதி வேதியன் பாத தீர்த்தம்
முண்டகத் அவனும் மாலும் முனிவரும் புரந்தர் ஆதி
அண்டரும் நந்திதேவு அடுகணத்தவரும் ஏனைத்
தொண்டரும் புறம்பும் உள்ளும் நனைத்தனர் சுத்தி செய்தார்.
856.
அனையன் ஆகியும் நீர் நசை ஆற்றலன் வருந்தும்
வினையன் ஆகி வானதிச் சடை வேதியன் பாதத்து
இனைய நாதனும் தன் திரு முடியின் மீது இருக்கும்
நனைய நாள் மலர் ஓதியைப் பார்த்து ஒன்று நவில் வான்.
1156.
பிரணவம் உதித்தது அதன் இடை வேதம் பிறந்தன நைமி சாரணியத்து
அருள் நிறை முனிவர் கண்ணுவர் கருக்கர் ஆதியோர் அதிகரித்து அவற்றின்
பொருள் நிலை தெரியாது உள்ளமும் முகமும் புலர்ந்தனர் இருப்பவர் போதத்
இருள் மல வலி வென்றவன் அரபத்தன் என்று ஒரு வேதியன் வந்தான்.
1424.
மாதங்கம் தடிந்து தட்டாலை மண்டபத்து இருந்த வீரன்
பாதங்கள் கையால் பற்ரிப் பாண்டியன் இரந்து வேண்டிப்
போதங்கள் கடந்தாய் என்றும் பொலிய இங்கு இருத்தி என்ன
வேதங்கள் அருத்தம் சொன்ன வேதியன் அதற்கு நேர்ந்தான்.
1435.
பிச்சை வேண்டினான் அவற்குத் தன் பெண்ணினைக் கொடுப்பான்
இச்சை கூர்ந்து அரும் தவத்தினால் வருந்தி ஈன்று எடுத்த
விச்சை வேதியன் மனையொடு சுற்றமும் வினவாது
அச்சம் இன்றி நீர் எடுத்து அவன் அங்கையில் பெய்தான்.
1462.
வேந்தன் மீன வண் கொடியவன் ஆகிய விக்கிரமன் தன் தோள்
வந்து மண் பொறை இராச சேகரன் புயத்து இறக்கி ஐந்தரு நாடன்
பூம் தண் மா மலர் வேதியன் மாதவன் புரத்தின் மேல் பொலிந்து ஓங்கும்
சாந்த நீறு எனக் கண்ணித்த புண்ணியத் தனி முதல் நகர் சார்ந்தான்.
1508.
வாயில் உளார் தம் மன்னவன் முன் போய் மன்னா நம்
கோயிலின் மாடு ஓர் வேதியன் மாதைக் கொலை செய்தான்
ஆயினன் என்று ஓர் வேடனை முன் விட்டு அவிந்தாளைத்
ஆயினன் வந்து இங்கு இட்டு அயர் கின்றான் தமியன் என்றார்.
1510.
வேதியன் நிற்கும் தன்மை தெரிந்தான் மெலிவு உற்றான்
சாதியின் மிக்காய் வந்தது உனக்கு என் தளர் கின்றாய்
ஓதுதி என்னக் காவலனைப் பார்த்து உரை சான்ற
நீதி உளாய் கேள் என்று உரை செய்வான் நிகழ் செய்தி.
1536.
வெருவும் காய் சின மாறிய வேதியன்
மருவும் காதல் மனை எனும் பேரினாள்
திருவும் காமன் நல் தேவியும் மண் புனை
உருவும் காமுறு ஒப்புஇல் வனப்பினாள்.
1574.
அழிந்த வேதியன் மா பாதகம் தீர்த்தது அறிந்து வேந்து அமைச்சர் ஊர் உள்ளார்
ஒழிந்த பார் உள்ளார் வான் உளார் வியப்பம் உற்று நல் உரை உணர்வு எல்லாம்
கழிந்த பேர் அருளிக் கயவன் மேல் வைத்த காரணம் யாது எனக் கண்ணீர்
வழிந்து நான் மாடக் கூடல் நாயகனை வழுத்தினார் மகிழ்ச்சியுள் திளைத்தார்.
1575.
வேதகம் தரத்து முக்கண் வேதியன் மறையோன் செய்த
பாதகம் தவிர்த்தவாறு பகர்ந்தனம் விஞ்சை ஈந்த
போதகன் மனைக்குத் தீங்கு புந்தி முன்னாகச் செய்த
சாதகன் தனைப் போர் ஆற்றித் தண்டித்த தண்டம் சொல்வாம்.
1975.
விழி ஆயிரத் தோன் பழி தீர்த்தனை வேதியன் தன்
கழியாத மாபாதகம் தீர்த்தனை கௌவைக் கங்கைச்
சுழி ஆறு அலைக்கும் சடையாய் எனைத் தொட்டு அலைக்கும்
பழியான் அதுந் தீர்த்து அருள் என்று பணிந்து வீழ்ந்தான்.
2333.
வெள்ளநீர் வறப்ப ஆதி வேதியன் ஞாலம் முன்போல்
உள்ளவாறு உதிப்ப நல்கி உம்பரோடு இம்பர் ஏனைப்
புள்ளொடு விலங்கு நல்கிக் கதிர் உடல் புத்தேள் மூவர்
தள்ளரு மரபின் முன் போல் தமிழ் வேந்தர் தமையும் தந்தான்.
2524.
உணர்ந்த கேள்வியார் இரரோடு ஒல்லை போய்ப்
புணர்ந்த ஆயிரம் பொன்னும் இன் தமிழ்
கொணர்ந்த வேதியன் கொள்க இன்று என
மணந்த தாரினான் மகிழ்ந்து நல்கினான்.
2649.
மின் திரித்து அன்ன வேணி வேதியன் இடைக்காடன் பின்
சென்று மீண்டனை யான் கொண்ட பிணக்கினைத் தீர்த்த வண்ணம்
இன்று உரை செய்து முந்நீர் எறிவலை வீசி ஞாழன்
மன்றல் அம் குழலினாளை மணந்து மீள் வண்ணம் சொல்வாம்.
3121.
வேதியன் ஒருவன் கண்டி வேடமும் பூண்டோன் மெய்யில்
பூதியன் புண்டரிக புரத்தினும் போந்தோன் கூடல்
ஆதியைப் பணிவான் வந்தான் மங்கையர்க்கு அரசியாரும்
நீதிய அமைச்சர் ஏறு நேர்பட அவனை நோக்கா.


நன்றி - தமிழ் இணையப் பல்கலைக்கழகம் - http://www.tamilvu.org/ta/library-l41d0-html-l41d0ind-139511

பாடல் தொகுப்பு
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஆராய்ச்சி அமைப்பாளர்,
திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம்

Sunday, 26 April 2020

இந்து என்ற வார்த்தை வெள்ளைக்காரன் சூட்டியதா?

இந்து என்ற வார்த்தை 
வெள்ளைக்காரன்  சூட்டியதா?
(ஆன்மிக மலர் (மெய் புக்) 1-15 ஜுலை 2019 )

சமீபத்தில் இந்து மதத்தின் மீதான தாக்கம் மிகப்பெரிய அளவில் தூண்டப்பட்டு வருகிறது, இதில் முக்கியமாக தமிழகத்தில் உருவான (பெரும்பாலான சிறு கட்சியின்
தலைவர்கள் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள், பெயரில் மட்டும் இந்து மற்றபடி மதம் மாறிய நரிக் கூட்டம்) சிறு கட்சி தலைவர்கள், பட வாய்ப்பு இல்லாமல் கரை ஒதுங்கி
நின்று சாப்பாட்டிற்கு வழி தேடியலையும் இயக்குநனர்கள், நடிகர்கள், போன்றவர்கள்  காசுக்காக இந்து மதத்தை பழித்து கூறுவது பெருகிவருகிறது.

நேற்று வரை ஓட்டான்டியாக தெருவில் வலம் வந்த இந்த கூட்டம் எவ்வளவுக்கதிகமாக இந்து மதத்தைப்பற்றி இழிவாக பேசுகிறதோ... அந்த அளவிற்கு சொகுசான வாழ்க்கை வாழ வழி கிடைப்பதால்,
வாய் புளித்ததோ.. காய் புளித்ததோ என்று, எதுவும் தெரியாமல் ஏதாவது ஒரு குழப்பத்தை இந்து மதத்தில் உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர்.

உண்மையில் இவர்களின் கல்வியறிவு பூஜ்யமாகத்தான் இருக்கும், ஆனால் மேதாவித்தனமாக பேசுவதைப் போன்ற நினைப்பில் இந்துமதத்தைப் பற்றி பேசி மாற்று மதத்தினரை குஷிப்படுத்துவது மட்டுமே இவர்களின் பணியாகும்.

மதம் மாறிய வைரமுத்து, ரஞ்சித், சீமான், டேனியல் காந்தி, கௌதமன், இந்த வகையில் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

இந்த மூடர் கூட்டத்தின் சமீபத்திய டாக் "இந்து என்ற பெயரை வெள்ளைக்காரன் வந்த பின்புதான் சூட்டப்பட்டது என்பதை பிரதானமாக கூறுகின்றனர்.

இதுபோன்ற அறிவு கெட்ட வாதத்தை பெரும்பாலான இந்து மக்கள் காது கொடுத்து கேட்பதில்லை, இருந்தாலும் இதுபோன்ற சில்லரைத்தனமான வாதத்திற்கு முற்றுபுள்ளி வைக்குமளவு இந்து
மதம் என்பது மிகப் பழமையான பெயர் என்பதை விவரிக்கிறது பல்வேறு புராண இதிகாசங்கள் உள்ளன.

அந்த வகையில், ப்ருஹஸ்பதி சாஸ்திரம், பவிஷ்ய புராணம், காலிகா புராணம், கல்பத்ரும, மாதவ திக் விஜயம், பாரிஜாத நாடகம், சப்த கோஷங்கள்
ஆகியவற்றில் ஹிந்து என்ற சொல் குறிக்கப்பட்டிருப்பதோடு, இந்து என்ற சொல்லிற்கு மிக உன்னதமான அர்த்தங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஹிம்ஸயா தூயதே யஸ்ச ஸதாசரண
தத்பர: வேத, கோ, ப்ரதிமா
ஸேகி ஸ ஹிந்து முகவர்ணபாக
(புத்தஸ்ம்ருதி கி.மு.4&ம் நூற்றாண்டு)
பொருள்:  யார் ஹிம்ஸிக்கப் பட்டாலும், எவன் துக்கமடைகிறானோ, ஒழுக்கமான வாழ்க்கை நடத்துவதில் முனைப் புடன் உள்ளானோ, வேதம், பசு, விக்ரஹங்கள் இவற்றை பக்தியுடன்வழிபடுகிறானோ அவனே ஹிந்து.

ஹிமாலயாத் ஸமாரப்ப யாவத் இந்து
ஸரோவரம்
தத்தேவ நிர்மிதம் தேசம்
ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷத
(ப்ருஹஸ்பத்ய ஆகமம்
கி.மு. 4&ம் நூற்றாண்டு)
பொருள்: ஹிமாலயம் முதல் ஹிந்து மஹா ஸாக ரம் வரை விரிந்து பரந்து கிடக்கும் தேவர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த தேசம் ஹிந்துஸ்தானம் என்றுஅழைக்கப்படுகிறது.

ஜானுஸ்தானே ஜைன ஸப்த ஸப்த
சிந்துஸ் ததைவ ச;
ஹப்த ஹிந்துர்யாவனிய புனர்ஞேயா
குருண்டிகா:
(பலிஷ்ய புராணம் 4&ம் நூற்றாண்டு)
பொருள்: ‘ஸ’ என்ற எழுத்து யவனர்களின் (கிரேக்கர் முதலான தேசத்தவர்கள்) பாஷையில் ‘ஹ’ என்று திரிகிறது.
எனவேதான், ‘ஸப்த ஸிந்து’ என்ற வாக்கியம் ‘ஹப்த’ ஹிந்து என்பதாக மாறியது.

கலினா பலினா கலிதகலௌ
நூம்தர்மா
யவனையோ ரதரமாக்ராஜதா
ஹிந்தவோ விந்த்ய மாவிஹன!!
(காலிகா புராணம் கி.பி. 5ம் நூற்றாண்டு)
பொருள்:  அதர்ம ஆகிரமிப்பாளர்களின்படை யெடுப்புகளினால் ஏற்படும் பாதிப்பு களிலிருந்து ஹிந்துக்கள் தப்பிக்க விந்தியமலையை பயன் படுத்தினர்.

சமஸகிருதம் மட்டுமின்றி, பல்வேறு தமிழ் இதிகாச புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது, அந்த வகையில்,
"இந்து வார்சடை எம்மிறையே"-  திருஞான சம்மந்தர்.
"வந்து மேருவினை நாள்தொறும் வலம் செய்து உழல்வோர்;
இந்து சூரியனை ஒத்து இருவரும் பொலியவே"-  கம்பராமாயணம்.
"செக்கர்அத் தீயவன் வாயில் தீர்ந்து; வேறு உக்கவான் தனிஎயிறு ஒத்த இந்து"- மூவருலா
"பொன்துவரை இந்துமரபில் இருக்கும் திருக்குலத்தில் வந்து மனுக்குலத்தை வாழ்வித்த"-  மூவருலா.

இதுபோன்று தமிழில் எழுதப்பட்ட புராணங்களில் இந்து மதம் பற்றி பல் வேறு தகவல்களை கூறியுள்ளது. நாம் ஒருசிலவற்றை மட்டும் கொடுத்துள்ளோம்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த, பழமை வாய்ந்த இந்து மதத்தை ஒருசில நரிக்கூட்டம் திட்டமிட்டே அழிக்க முற்படுகிறது.

அக்காலத்தில் இந்து மதத் தெய்வத்தை அழிக்க அரக்கர்கள் கூட்டம் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
ஆனாலும் தெய்வ சக்தி அந்த அரக்கர்கள் கூட்டத்தை அடியோடு அழித்து பண்பாடு மிகுந்த இந்து சமய மக்களை காப்பாற்றி வந்துள்ளதையும் புராணங்கள் வாயிலாக படித்திருப்போம்.
அதைப்போன்றுதான் இன்று இந்து மதத்தை அழிக்க அரக்கர்கூட்டங்களாக மாற்று மதத்தினரும், கையேந்திக் கூட்டங்களும் தேவையற்ற கருத் துக்களை, துவேஷ பேச்சுக்களை
இந்து மதத்தின் மீது பிரயோகித்து நவீன வகையிலான அரக்க யுத்தம் நடத்தி வருகின்றனர், ஒருபக்கம் இவர்கள் மதம் மாற்றுவது குறித்து பிரசாரமும் செய்து வருகின்றனர்.
ஆனால் நாட்டைச் சுரண்டிய முகலாயர், கிறிஸ்தவர்கள் போன் றோரின் படையெடுப்புகள், போர்கள், கட்டாய மத மாற்றங்கள் போன்ற கொடுர செயல்களால் அழியாத இந்து மதம் இந்த நவீன
வீணர்கனின் பேச்சால் அழியாது என்பது ஒவ்வொரு இந்துக்களின் நம்பிக்கை.
இனியாவது இதுபோன்ற மாற்று மதத்தவர்களின் கருத் துக்களை முறியடிக்க இந்து மதத்தைப் பற்றி இந்துக்கள் முழுவதும் அறிந்து

http://aanmeegamalar.com/ebooks/Aanmeegamalar-1-15%20July%202019.pdf