சங்கப்பாடல்களில் சிவன்
(அண்ணல் ஆலவாயன்)
(அண்ணல் ஆலவாயன்)
சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள தெய்வ வழிபாடுகளுக்குள் தலைமையானது சிவ வழிபாடு ஆகும்.
சங்க இலக்கியத்தில் சிவன் என்ற சொல்லே இல்லை எனலாம். ஆனால் சங்க இலக்கியங்கள் சிவபெருமானை “அண்ணல்” என்று போற்றுகின்றன. அண்ணல் என்றால் தலைவன் தலைமை என்று பொருள். சங்கப்பாடல்களில் 79 பாடல்வரிகளில் அண்ணல் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. மேலும் சிவபெருமான் ஆதிரையான், ஆலமர் செல்வன், ஆனேற்றுக் கொடியுடையான், ஈசன், ஈர்ஞ்சடை அந்தணன், காலக் கடவுள், தாழ்சடைப் பெரியோன், நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன், மணிமிடற்றன், முக்கட் செல்வன் என்ற பெயர்களால் அழைக்கப் பெற்றுள்ளனான்.
மதுரையின் மத்தியில் சிவன்கோயில் -
திருமாலின் தொப்புளில் தாமரைப் பூ தோன்றி மலர்ந்துள்ளது. அந்தத் தாமரைப் பூவைப் போன்று அழகாக உள்ளது கூடல் (மதுரை). அந்தப் பூவின் அக இதழ்களைப் போன்று தெருக்கள் உள்ளன. தாமரைப் பூவின் மத்தியில் அதன் பொகுட்டு இருப்பது போன்று, இந்த ஊரின் மத்தியில் அண்ணல் (சிவபெருமானின்) கோயில் உள்ளது. தாமரைப் பூவின் பூந்தாதுக்களைப் போன்றவர் இனிய தமிழ்க்குடி மக்கள். அந்தத் தாதுக்களை உண்ணும் பறவைகளைப் போன்றவர் பரிசில் பெற்று வாழும் புலவர்கள். அந்தத் தாமரைப் பூவில் தோன்றிய பிரமதேவனுடைய நாவில் பிறந்த நான்கு வேதங்கள். இந்த நான்கு வேதங்களையும் கேள்வியால் கற்றவர்கள் அதிகாலை வேளையில் இந்த வேதங்களை ஓதுகின்றனர். இவர்கள் ஓதும் குரலைக் கேட்டு, மிக்க இன்பமான துயிலிலிருந்து மதுரை மக்கள் எழுகின்றனர். வாழ்த்துப் பெற்ற வஞ்சியும் உறைந்தையும் போல கோழி கூவும் போது மதுரை மக்கள் எழுவதில்லை.
பரி பாடல் 30
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை
பூவொடு புரையும் சீர் ஊர் பூவின்
இதழ்_அகத்து அனைய தெருவம் இதழ்_அகத்து
அரும் பொகுட்கு அனைத்தே அண்ணல் கோயில் - பரி 30/4
தாதின் அனையர் தண் தமிழ் குடிகள்
தாது உண் பறவை அனையர் பரிசில்_வாழ்நர்
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம இன் துயில் எழுதல் அல்லதை
வாழிய வஞ்சியும் கோழியும் போல
கோழியின் எழாது எம் பேர் ஊர் துயிலே
-------------------------------------------
1) அண்ணல் யானைக்கு அன்றியும் கல் மிசை - நற் 194/5
2) அண்ணல் நெடு வரை ஆடி தண்ணென - நற் 236/8
3) வண்ணம் மிகுந்த அண்ணல் யானை - நற் 273/6
4) அண்ணல் உள்ளமொடு அமர்ந்து இனிது நோக்கி - நற் 372/7
4) மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை - குறு 260/5
5) திரி மருப்பு இரலை அண்ணல் நல் ஏறு - குறு 338/1
6) அண்ணல் யானை அணி முகம் பாய்ந்து என - குறு 343/2
7) புலம் பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு - குறு 344/3
8) கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு - குறு 363/1
9) அண்ணல் நெடு வரை சேறி ஆயின் - குறு 392/3
10) நெடும் தோள் அண்ணல் கண்டிகும் யாமே - ஐங் 198/4
11) அண்ணல் யானை அரசு விடுத்து இனியே - ஐங் 466/2
12) அண்ணல் மழ களிறு அரி ஞிமிறு ஓப்பும் - பதி 12/12
13) அண்ணல் அம் பெரும் கோட்டு அகப்பா எறிந்த - பதி 22/26
14) அண்ணல் மரையா அமர்ந்து இனிது உறையும் - பதி 23/14
15) இறும்பூதால் பெரிதே கொடி தேர் அண்ணல்/வடி மணி அணைத்த பணை மருள் நோன் தாள் - பதி 33/1,2
16) அண்ணல் யானை அடு போர் குட்டுவ - பதி 42/8
17) ஆடு நடை அண்ணல் நின் பாடு_மகள் காணியர் - பதி 44/7
18) வெள் வேல் அண்ணல் மெல்லியன் போன்ம் என - பதி 51/23
19) குடவர் கோவே கொடி தேர் அண்ணல்/வாரார் ஆயினும் இரவலர் வேண்டி - பதி 55/9,10
20) காண்கு வந்திசின் கழல் தொடி அண்ணல்/மை படு மலர் கழி மலர்ந்த நெய்தல் - பதி 64/15,16
21) தொல் கடன் இறுத்த வெல் போர் அண்ணல்/மாடோர் உறையும் உலகமும் கேட்ப - பதி 70/22,23
22) வேறு புலத்து இறுத்த வெல் போர் அண்ணல்/முழவின் அமைந்த பெரும் பழம் மிசைந்து - பதி 81/18,19
23) பாடுநர் புரவலன் ஆடு நடை அண்ணல்/கழை நிலை பெறாஅ குட்டத்து ஆயினும் - பதி 86/8,9
24) ஆண் எழில் அண்ணலோடு அரும் சுரம் முன்னிய - கலி 9/10
25) ஆர மார்பினை அண்ணலை அளியை - கலி 52/15
26) செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்/இருவர் தாதை இலங்கு பூண் மாஅல் - பரி 1/30,31
27) மு கை முனிவ நால் கை அண்ணல்/ஐம் கைம் மைந்த அறு கை நெடுவேள் - பரி 3/36,37
28) கடம்பு_அமர்_செல்வன் கடி நகர் பேண
மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த
நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம் - பரி 8/127
29) மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ - பரி 9/7
அவையும் நீயே அடு போர் அண்ணால்/அவை_அவை கொள்ளும் கருவியும் நீயே - பரி 13/15,16
30) ஒருதிறம் அண்ணல் நெடு வரை அருவி நீர் ததும்ப - பரி 17/14
31) இகழ் கடும் கடா களிற்று அண்ணலவரோடு/அணி மிக வந்து
இறைஞ்ச அல் இகப்ப பிணி நீங்க - பரி 23/65,66
32) கணம்_கொள் சுற்றத்து அண்ணலை வணங்கி - பரி 23/86
33) மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை
பூவொடு புரையும் சீர் ஊர் பூவின்
இதழ்_அகத்து அனைய தெருவம் இதழ்_அகத்து
அரும் பொகுட்கு அனைத்தே அண்ணல் கோயில் - பரி 30/4
தாதின் அனையர் தண் தமிழ் குடிகள்
தாது உண் பறவை அனையர் பரிசில்_வாழ்நர்
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம இன் துயில் எழுதல் அல்லதை
வாழிய வஞ்சியும் கோழியும் போல
கோழியின் எழாது எம் பேர் ஊர் துயிலே
34) அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ - அகம் 23/8
35) இரு திரி மருப்பின் அண்ணல் இரலை - அகம் 34/4
36) அண்ணல் யானை வெண் கோடு கொண்டு - அகம் 61/9
37) மண் உடை கோட்ட அண்ணல் ஏஎறு - அகம் 64/11
38) அண்ணல் நெடு வரை ஆம் அற புலர்ந்த - அகம் 75/8
39) அண்ணல் யானை அடு போர் சோழர் - அகம் 96/13
40) பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை - அகம் 115/13
41) வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு - அகம் 146/1
42) அண்ணல் யானை ஈயும் வண் மகிழ் - அகம் 208/4
43) தட கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு - அகம் 238/7
44) மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை - அகம் 251/15
45) வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு - அகம் 304/9
46) அண்ணல் யானை அடு போர் வேந்தர் - அகம் 373/16
47) ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின் - புறம் 42/1
48) கறை_மிடற்று_அண்ணல் காமர் சென்னி - புறம் 55/4
49) ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல்/நாடு தலையளிக்கும் ஒண் முகம் போல - புறம் 67/2,3
49) அண்ணல் யானை அடு_களத்து ஒழிய - புறம் 93/13
50) அண்ணல் எம் கோமான் வை நுதி வேலே - புறம் 95/9
51) அண்ணல் யானை வேந்தர்க்கு - புறம் 115/5
52) அண்ணல் நெடு வரை ஏறி தந்தை - புறம் 116/15
53) அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய - புறம் 126/20
54) ஆஅய் அண்டிரன் அடு போர் அண்ணல்/இரவலர்க்கு ஈத்த யானையின் கரவு இன்று - புறம் 129/5,6
55) அண்ணல் யானை எண்ணின் கொங்கர் - புறம் 130/5
56) வென் வேல் அண்ணல் காணா ஊங்கே - புறம் 141/7
57) அரசு உடன் பொருத அண்ணல் நெடு வரை - புறம் 158/2
58) நீ தோன்றினையே நிரை தார் அண்ணல்/கல் கண் பொடிய கானம் வெம்ப - புறம் 174/23,24
59) திண் தேர் அண்ணல் நின் பாராட்டி - புறம் 198/6
60) வேளிருள் வேளே விறல் போர் அண்ணல்/தார் அணி யானை சேட்டு இரும் கோவே - புறம் 201/12,13
61) இகழ்ந்ததன் பயனே இயல் தேர் அண்ணல்/எவ்வி தொல் குடி படீஇயர் மற்று இவர் - புறம் 202/13,14
62) இன்னாது அம்ம இயல் தேர் அண்ணல்/இல்லது நிரப்பல் ஆற்றாதோரினும் - புறம் 203/6,7
63) கடல்-வயின் குழீஇய அண்ணல் அம் கொண்மூ - புறம் 205/11
64) அகல் நாட்டு அண்ணல் புகாவே நெருநை - புறம் 249/7
65) பொலம் புனை ஓடை அண்ணல் யானை - புறம் 287/5
66) அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மடுத்து - புறம் 288/2
67) பலர் குறை செய்த மலர் தார் அண்ணற்கு/ஒருவரும் இல்லை மாதோ செருவத்து - புறம் 311/4,5
68) அண்ணல் யானை அணிந்த - புறம் 326/14
69) ஆர் கலியினனே சோணாட்டு அண்ணல்/கவி கை மண் ஆள் செல்வர் ஆயினும் - புறம் 337/1,2
70) வினவல் ஆனா வெல் போர் அண்ணல்/யார் மகள் என்போய் கூற கேள் இனி - புறம் 353/6,7
71) அண்ணல் யானை வழுதி - புறம் 388/15
72) அண்ணல் யானை வேந்தர் - புறம் 390/27
73) மலர் தார் அண்ணல் நின் நல் இசை உள்ளி - புறம் 393/9
74) திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என - மலை 319
75) அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப - சிறு 200
76) கொன் ஒன்று கிளக்குவல் அடு போர் அண்ணல்/கேட்டிசின் வாழி கெடுக நின் அவலம் - மது 207,208
77) அண்ணல் யானை அடு போர் வேந்தர் - மது 348
78) அண்ணல் நெடும் கோட்டு இழிதரு தெண் நீர் - குறி 54
79) அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின் - குறி 171
------------------
நன்றி - பாடல் வரிகள் தொகுப்பு உதவி http://tamilconcordance.in/
-----------------------
பரங்குன்றை வாழ்த்தல்
125
“உடம் புணர் காதலரும் அல்லாரும் கூடி,
கடம்பு அமர் செல்வன் கடி நகர் பேண
மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த
நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம்,
மண் பரிய வானம் வறப்பினும், மன்னுகமா,
தண் பரங்குன்றம்! நினக்கு”
மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த - பரி 8/127
--------------------------------------------
“விரி சடைப் பொறை ஊழ்த்து, விழு நிகர் மலர் ஏய்ப்ப,
தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி
மணி மிடற்று அண்ணற்கு, மதி ஆரல் பிறந்தோய்! நீ.
மை இரு நூற்று இமை உண்கண் மான் மறிதோள் மணந்த ஞான்று
ஐ இருநூற்று மெய்ந் நயனத்தவன் மகள் மலர் உண்கண்”
மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ - பரி 9/7
-----------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment