Sunday, 30 June 2019

What is the meaning for the word Hindu?, Hindustan?, India?.

What is the meaning for the word Hindu?
What is the meaning for the name Hindustan ? 
What is the meaning for the name India ?




இந்து என்றால் என்ன பொருள்?
இந்துஸ்தான் என்றால் என்ன பொருள்?
இந்தியா என்றால் என்ன பொருள்?

இந்து என்றால் திங்கள், சந்திரன் என்று பொருள்.
சிவனது முக்கண்ணில் ஒன்று சூரியனாகவும், மற்றொன்று சந்திரனாகவும், மூன்றாவதான நெற்றிக்கண் தீயாகவும் (அக்னியாகவும்) கூறப்படுகிறது.  சோழர்கள் சூரியவம்சம் என்றும், பாண்டியர்கள் சந்திரவம்சம் என்றும், சேரர்கள் அக்னி வம்சம் என்றும் சிவபெருமானது அம்சங்களாக அவதரித்துத் தேசம் ஆண்டு வந்துள்ளனர்.

சந்திரனின் அம்சமான பாண்டியர்கள் பாரததேசத்தை முழுமையையும் ஆண்ட காரணத்தினால் இந்தப் பாரதநாட்டிற்கு இந்துதேசம் (இந்துஸ்தான்) என்று பெயர்.   இந்தியாவின் பண்டைய பெயர் இந்துஸ்தான் என்பதாகும்.  இந்தியாவிற்கு அருகே, பாக்கிஸ்தான் கிர்கிஸ்தான் கசகஸ்தான் அசர்பைஸ்தான் துர்க்மெனிஸ்தான் ஆப்கானிஸ்தான் உஷ்பெக்கிஸ்தான் பலுக்கிஸ்தான்  என்று பெயரில் நாடுகள் உள்ளன.  "ஸ்தானம்" என்றால் வடமொழியில் இடம் என்று பொருள். "ஸ்தான்" என்ற சொல் நாட்டைக் குறிக்கிறது.  பாக்கிசுத்தான் முதலான நாடுகளுக்கு அந்தப் பழைய பெயர்களே நிலைபெற்றுள்ளன.  ஆனால் இந்துதேசம் என்ற இந்துஸ்தானை மட்டும் இந்தியா என்ற தவறான பொருளற்ற பெயரில் வழங்கி வருகின்றனர். 

முத்தமிழ் ஆராய்ந்து தமிழ்வளர்த்த பண்டைய பாண்டியரின் தேசமே பாரததேசமாகும்.  இந்து (சந்திரன்) வம்சத்தினரான பாண்டியர் ஆண்ட காரணத்தினால் பாரததேசத்திற்கு இந்துஸ்தான் என்று பெயர்.
சிந்து நதியை அடுத்து இந்துஸ்தான் இருந்த காரணத்தினால் சிந்துநதிக்கு அப்பால் உள்ள இந்துஸ்தான் மக்களை இந்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியா என்ற சொல் பொருளற்றது.  இந்துஸ்தான் என்ற சொல்லே பொருளுடையது.

இந்தியா என்றால் இந்துஸ்தான்.
இந்து என்றால் சந்திரன்.
இந்துஸ்தான் என்றால் சந்திரகுலத்தவரான பாண்டியர்களது தேசம் என்று பொருள்.
இந்துக்கள் என்றால் இந்துஸ்தானை ஆண்ட சந்திரகுலத்தவரான பாண்டியர் என்று பொருள்.


கம்பராமாயணத்தில் 
இந்து என்ற சொல் இடம் பெற்றுள்ள 
பாடல் வரிகள் (22)
கம்பராமாயணத்தில் 22 இடங்களில் இந்து என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

எங்கு நின்று எழுந்தது இந்த இந்து வந்து என் நெஞ்சு உலா - பால:13 51/1
இடை உறு திரு என இந்து நந்தினான் - பால:19 67/2
இணை நெடும் கண் ஓர் இந்து_முகத்தி பூ - பால:21 29/1
எஞ்சல்_இல் பொன் போர்த்து அன்ன இளவலும் இந்து என்பான் - அயோ:6 4/2
இந்து_மோலி அன்னானும் இரங்கினான் - அயோ:14 1/3
இந்து சூரியரை ஒத்து இருவரும் பொலியவே - ஆரண்:1 36/4
இந்து நன்_நுதல்-தன்னொடும் ஏகினார் - ஆரண்:3 26/4
இந்து காந்தத்தின் ஈர நெடும் கலும் - ஆரண்:6 73/3
இந்து நோக்கிய நுதலியை காத்து அயல் இருண்ட - ஆரண்:6 83/3
அயிர் உற கலந்த தீம் பாலாழி-நின்று ஆழி இந்து  செயிர் உற்ற அரசன் ஆண்டு ஓர் தேய்வு வந்துற்ற போழ்தில் - ஆரண்:10 107/1,2
ஒப்பு உடை இந்து என்று உதித்த ஊழி தீ - ஆரண்:14 99/2
இந்து வான் உந்துவான் எரி கதிரினான் என - கிட்:1 38/4
இந்து வான் ஓடலான் இறைவன் மா மௌலி போல் - கிட்:14 3/3
இந்து_நுதல் நின்னொடு இவண் எய்தி இகல் வீரன் - சுந்:5 9/1
இந்து ஆர் எயிறுகள் இறுவித்தார் சிலர் எரி போல் குஞ்சியை இருள்வித்தார் - சுந்:10 41/4
இந்து வெண்குடை நீழலில் தாரகை இனம் பூண்டு - சுந்:12 42/3
இந்து அன்ன நுதல் பேதை இருந்தாள் நீங்கா இடர் கொடியேன் - யுத்1:1 8/1
இந்து விண் நின்று இழிந்துளதாம் என - யுத்1:14 42/3
இந்து வெள் எயிறு இமைத்திட குருதி யாறு ஒழுக்கல் கொண்டு எழு செக்கர் - யுத்2:16 342/2
என்றுதான் அடியனேனுக்கு இரங்குவது இந்து என்பான் - யுத்2:17 9/1
இந்து வெள் எயிற்று அரக்கரும் யானையும் தேரும் - யுத்3:22 110/2
இந்து மண்டிலத்தின்-மேல் இரவி மண்டிலம் - யுத்4:37 61/3
நன்றி = http://tamilconcordance.in/KAMBANconc-1-i1.html#இந்து

பாக்கிஸ்தான் கிர்கிஸ்தான் கசகஸ்தான் அசர்பைஸ்தான் துர்க்மெனிஸ்தான் ஆப்கானிஸ்தான் உஷ்பெக்கிஸ்தான் பலுக்கிஸ்தான்  என்ற நாடுகளின் பெயர்கள் எல்லாம் அப்படியே பழைமை மாறாமல் இருக்க, இந்துஸ்தான் என்ற பெயரை மட்டும் இந்தியா என்று ஏன் மாற்றி வைத்தார்கள் என்று இப்போது புரிகிறதா?

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

No comments:

Post a Comment