Wednesday, 26 June 2019

இந்து என்றால் ?

இந்து என்றால் ?




“இந்து என்றொரு மதமே கிடையாது.   துப்பாக்கி முனையில் நம் தேசத்தை ஆண்டு வெள்ளைக்காரனே இந்து மதத்திற்கு இந்து என்ற பெயரை வைத்தான்” என்று சிலர் சொல்லியும் எழுதியும் வருகின்றனர்.

இந்து, இந்துகள், இந்துஸ்தான் என்றால் என்ன பொருள்?
இந்து என்றால் சந்திரன் என்று பொருள்.

சிவனது ஒரு கண் சூரியன் ஆகும்,
சிவனது மறு கண் சந்திரன் ஆகும்,
சிவனது நெற்றிக்கண் அக்னி ஆகும்.

வாளொடு முன்தோன்றிய மூத்த குடியினாகிய தமிழர்கள் மொழியால் ஒருதாய் மக்களாக வாழ்ந்தாலும்,  சோழர்கள் தங்களைச் சூரியகுலத்தவர்  என்றும், பாண்டியர்கள் தங்களைச் சந்திரகுலத்தவர் வம்சத்தினர் என்றும், சேரர்கள் தங்களை அக்னி வம்சத்தினர் என்றும் கூறிவந்துள்ளனர்.
இந்து என்றால் சந்திரன் என்று பொருள்.
இந்துக்கள் என்றால் சந்திரகுலத்தவர் (பாண்டியர்) என்று பொருள்.


இந்துஸ்தான் என்றால்  பாண்டியநாடு அல்லது பாண்டிநாடு அல்லது (திருதராஷ்டிரனின் தம்பியும், விதுரனின் அண்ணனுமான பாண்டுவின்நாடு) பாண்டுநாடு என்று பொருள்.
--------------------------------------------

இந்திரன் இந்துராணி என்ற பெயர்கள் தேவர்களின் தலைவனையும் தலைவியையும் குறிக்கின்றன..
இந்திரன் என்ற சொல் சங்கத் தமிழ்ப்பாடல்களில் உள்ளன.
இந்திர விழவின் பூவின் அன்ன - ஐங் 62/1
உண்டால் அம்ம இ உலகம் இந்திரர்/அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது என - புறம் 182/1,2
ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உரும் என - பரி 8/33
இந்திரன் பூசை இவள் அகலிகை இவன் - பரி 19/50

இந்திரன் ஆடும் தகைத்து - பரி 24/97

“ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி” (திருக்குறள் 25)

இந்திர தானம் பெறினும் இகழாரே - ஆசாரக் 34/3
இந்திரன் போல் வந்தான் இடத்து - திணை150:5 145/4
இந்திரனா எண்ணிவிடும் - நாலடி:35 6/4

இந்து என்ற சொல்  உள்ள தமிழ்ப் பாடல்கள்.
இந்தின் கரு வண்ணம் கொண்டன்று எழில் வானம் - கார்40 40/3
இந்து உருவின் மாந்தி இரும் கொண்மூ முந்து உருவின் - திணை150:3 104/2
"இந்து வார்சடை எம்மிறையே"- திருஞான சம்மந்தர்.
இந்து சூரியனை ஒத்து இருவரும் பொலியவே "- கம்பராமாயணம்.
"செக்கர்அத் தீயவன் வாயில் தீர்ந்து ; உக்கவான்  தனிஎயிறு  ஒத்த இந்து" -மூவருலா
"பொன்துவரை இந்துமரபில் இருக்கும் திருக்குலத்தில் வந்து மனுக்குலத்தை வாழ்வித்த"-மூவருலா.
--------------------------------------------------------------

பண் :காந்தார பஞ்சமம்
பாடல் எண் : 4
பூசு ரர்தொழு தேத்திய பூந்தராய்
ஈசன் சேவடி யேத்தி யிறைஞ்சிடச்
சிந்தை நோயவை தீர நல்கிடும்
இந்து வார்சடை யெம்இ றையே.

பொழிப்புரை :
இப்பூவுலகில் தேவர்கள் போன்று பெருமையாகக் கருதப்படுகின்ற அந்தணர்கள் வணங்கிப் போற்றும் திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனின் செம்மை வாய்ந்த திருவடிகளைத் துதித்து இறைஞ்சிடச் சந்திரனை அணிந்த நீண்ட சடைகளையுடைய இறைவன் நம் மனக்கவலைகளைப் போக்கி அருள்புரிவான் . ` தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது ` ( குறள் - 7) என்ற வள்ளுவர் வாக்கு இங்கு நினைவு கூர்தற்குரியது .
நன்றி = sivam.org
---------------------------------------------------
கம்பராமாயணத்தில் இந்து என்ற சொல் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் (22)
எங்கு நின்று எழுந்தது இந்த இந்து வந்து என் நெஞ்சு உலா - பால:13 51/1
இடை உறு திரு என இந்து நந்தினான் - பால:19 67/2
இணை நெடும் கண் ஓர் இந்து_முகத்தி பூ - பால:21 29/1
எஞ்சல்_இல் பொன் போர்த்து அன்ன இளவலும் இந்து என்பான் - அயோ:6 4/2
இந்து_மோலி அன்னானும் இரங்கினான் - அயோ:14 1/3
இந்து சூரியரை ஒத்து இருவரும் பொலியவே - ஆரண்:1 36/4
இந்து நன்_நுதல்-தன்னொடும் ஏகினார் - ஆரண்:3 26/4
இந்து காந்தத்தின் ஈர நெடும் கலும் - ஆரண்:6 73/3
இந்து நோக்கிய நுதலியை காத்து அயல் இருண்ட - ஆரண்:6 83/3
அயிர் உற கலந்த தீம் பாலாழி-நின்று ஆழி இந்து
  செயிர் உற்ற அரசன் ஆண்டு ஓர் தேய்வு வந்துற்ற போழ்தில் - ஆரண்:10 107/1,2
ஒப்பு உடை இந்து என்று உதித்த ஊழி தீ - ஆரண்:14 99/2
இந்து வான் உந்துவான் எரி கதிரினான் என - கிட்:1 38/4
இந்து வான் ஓடலான் இறைவன் மா மௌலி போல் - கிட்:14 3/3
இந்து_நுதல் நின்னொடு இவண் எய்தி இகல் வீரன் - சுந்:5 9/1
இந்து ஆர் எயிறுகள் இறுவித்தார் சிலர் எரி போல் குஞ்சியை இருள்வித்தார் - சுந்:10 41/4
இந்து வெண்குடை நீழலில் தாரகை இனம் பூண்டு - சுந்:12 42/3
இந்து அன்ன நுதல் பேதை இருந்தாள் நீங்கா இடர் கொடியேன் - யுத்1:1 8/1
இந்து விண் நின்று இழிந்துளதாம் என - யுத்1:14 42/3
இந்து வெள் எயிறு இமைத்திட குருதி யாறு ஒழுக்கல் கொண்டு எழு செக்கர் - யுத்2:16 342/2
என்றுதான் அடியனேனுக்கு இரங்குவது இந்து என்பான் - யுத்2:17 9/1
இந்து வெள் எயிற்று அரக்கரும் யானையும் தேரும் - யுத்3:22 110/2
இந்து மண்டிலத்தின்-மேல் இரவி மண்டிலம் - யுத்4:37 61/3

நன்றி - இந்து, இந்திரன் சொற்கள் அடங்கிய பாடல் தொகுப்பு = http://tamilconcordance.in/

------------------------------------------------
நண்பர் திரு. கிருஷ்ணகுமார் அவர்களின் பதில் இது-

Krishna Kumar தொல்தமிழ் நூற்கள் வாயிலாக ஹிந்துஸ்தானத்திற்கு பொருள் புரிந்து கொள்ள நல்ல முயற்சி காசிஸ்ரீ காளைராஜன் ஐயா
हिमालयं समारभ्य यावातू इंदु सरोवरं
तं देवनिर्मितं देशं हिन्दुस्तनम प्रचक्षते
ஹிமாலயம் ஸமாரப்ய யாவத் இந்து ஸரோவரம்
தம் தேவநிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷதே
இமய மலையிலிருந்து ஹிந்து மஹா சமுத்திரத்திற்கு இடைப்பட்டதான தேவர்களால் நிர்மாணிக்கப்பட்ட நிலப்பரப்பு ஹிந்துஸ்தானம் என்று சொல்லப்படுகிறது என ப்ருஹன்நாரதீய புராணம் சொல்லுகிறது.
சிந்து நதிக்குக் கீழ் இருக்கும் நிலப்பரப்பை ஹிந்த் என்றே அராபிய பார்ஸியர்களும் அழைத்தனர். இச்சொல்பயன்பாடு BCE 500க்கு முன்னாலிருந்தே அராபிய பார்ஸியர்களால் கையாளப்பட்டுள்ளது.
பரங்கிக் கும்பினியர் இந்த நாட்டை ஹிந்துஸ்தானம் என்று சுட்டுவதற்கு முன்னரேயே இந்த நிலப்பரப்பை ஆக்ரமித்த அராபிய பெர்ஷியர்கள் சிந்து நதிக்கு கீழ் இருக்கும் நிலப்பரப்பை ஹிந்த் என்று குறிப்பிடுகின்றனர்.
ஹிந்துஸ்தானம் எனும் இந்த நிலப்பரப்பில் வாழும் மக்கள் அனைவரும் ஹிந்துக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
இங்கு வசிக்கும் இஸ்லாமிய க்றைஸ்தவர்களும் ஹிந்துக்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.
ஹிந்துஸ்தானத்திலிருந்து அரேபிய ஹஜ் யாத்திரை செல்லும் இஸ்லாமிய சஹோதரர்களை அரேபியாவில் ஹிந்தி / ஹிந்துக்கள் என்றே அழக்கின்றனர்.
நாட்டின் சட்டங்கள் முஸ்லீம், க்றைஸ்தவ, யஹூதி, பார்ஸி மதங்களை ஒழுகும் சஹோதரர்களல்லாத அனைத்து சமயங்களை ஒழுகும் சஹோதரர்களை ஹிந்துக்கள் என்றே சுட்டுகிறது.
----------------------------------
हिमालयं समारभ्य यावातू इंदु सरोवरं
तं देवनिर्मितं देशं हिन्दुस्तनम प्रचक्षते
ஹிமாலயம் ஸமாரப்ய யாவத் இந்து ஸரோவரம்
தம் தேவநிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷதே

இந்த சுலோகத்தில் சமுத்திரத்திற்கு “இந்து” என்ற பெயர் வருகிறது.
தேசத்தின் பெயரைக் குறிப்பிடும்போது ஹிந்து வருகிறது.
-------------------------------------------

No comments:

Post a Comment