Friday, 18 January 2019

தமிழருடைய தமிழ் வருடப் பிறப்பு எது?

தமிழரது புதுவருடம்
வானியல் அடிப்படையில் 
சித்திரை முதல்நாளே  ஆகும்


உலகமெங்கும் எத்தனையோ மொழிகள் இருந்தாலும் சங்கம் வைத்துத் தமிழாய்ந்தது மதுரையில் மட்டுமே.  முதற்சங்கத்திற்குச் சிவபெருமானே தலைமை ஏற்றுத் தமிழாராய்ந்துள்ளார்.  சிவபெருமானை எந்நாட்டவர்க்கும் இறைவன் என்று சொன்னாலும், சிவபெருமான் திருவிளையாடல் செய்தருளியது மதுரையில் மட்டுமே ஆகும்.   

பரஞ்சோதிமுனிவர் மொழிபெயர்த்துப் பாடியுள்ள இந்தத் திருவிளையாடல் புராணத்தில் சித்திரை முதல்நாளே தமிழருடைய வருடப் பிறப்பு என்று தெளிவாகக் கூறப்பெற்றுள்ளது.  சித்திரை முதல் அடுத்த சித்திரை வரை 365 நாட்கள் என்றும் பாடப் பெற்றுள்ளது.

திருவிளையாடல் புராணம் பாடல் எண் 437. 
இருதுவில் சிறந்த வேனிலும் மதி ஆறு இரண்டில் சிறந்த வான் தகரும்
பொருவிறார் அகையில் சிறந்த சித்திரையும் திதியினில் சிறந்த பூரணையும்
மருவு சித்திரையில் சித்திரை தோறும் வந்து வந்து அருச்சித்தோர் வருடம் 
தெரியும் நாள் முந்நூற்று அறுபதும் ஐந்தும் செய்த அர்ச்சனைப் பயன் எய்தும்.



தைமுதல் நாள் பொங்கல் திருநாளைத்  தமிழரின் புத்தாண்டு என்று சொல்லி இரண்டு விழாக்களை ஒரே நாளில் மாற்றுகின்றனர். தமிழர்களது பொங்கல் திருநாளில் புத்தாண்டைக் கொண்டாடச் சொல்வது அன்னிய அரசியல் சதி என்பதைத் தமிழர் உணர வேண்டும்.  சமசுக்கிருதம் தமிழரால் உருவாக்கப்பட்ட மொழி.  தமிழரது வரலாறுகள் எல்லாம் தமிழரால் சமசுக்கிரதத்திலும் பாடப் பெற்றுள்ளன.  தமிழரது நூல்கள் பெரும்பகுதியும் கடல்கோளில் அழிந்து                 விட்டன.  சமசுக்கிருத்தில் நமது முன்னோர்கள் பதிவு செய்துள்ள நமது பண்டைய தமிழரின் பாரம்பரியங்களை மீட்பது நமது கடமை ஆகும்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

No comments:

Post a Comment