Sunday 28 October 2018

மதுரைக்கு அருகே விண்கற்கள் விழுந்துள்ளனவா?

மதுரைக்கு அருகே 
விண்கற்கள் விழுந்துள்ளனவா ?


விண்கற்கள் விழுந்த காரணத்தினால் திங்களில் (சந்திரனில்) வட்டவட்டமாகப் பள்ளத்தாக்குகள் தெரிகின்றன.  திங்களில் தெரிவது போன்றே மதுரைக்கு அருகிலும் வட்டவடிவிலான மலைகள் சூழ்ந்திருக்கும் பள்ளத்தாக்குகளைக் காணமுடிகிறது.

மதுரையைச் சுற்றிலும் விண்கற்கள் விழுந்ததற்கான அடையாளங்கள் இன்றும் காணக்கிடைக்கின்றன.  விண்கற்கள் விழுந்த இடங்களாக ஐந்து இடங்களைச் சிவப்பு மையினால் குறித்து இத்துடன் இணைத்துள்ளேன்.


தமிழகத்தில் காணப்படும் இந்த வட்டவடிவிலான மலைகள் விண்கற்கள் விழுந்து உருவானவையா?  அப்படியானால் அங்கே விழுந்த விண்கற்கள் எங்கே?  சங்கம் வைத்துத் தமிழாய்ந்த தமிழர் விண்கற்களை ஆராய வில்லையா?




எரியோடு என்ற ஊர் உள்ள இடம் எரிகல்ஓடு விழுந்த இடமாக இருக்கக் கூடும்.   ஓடு விழுந்ததனால் அங்கே பள்ளம் ஏதும் ஏற்படவில்லை.  எரியோடு ஊருக்கு அருகில் கடவூர் இடையபட்டியில் உள்ள சுமார் 8 கி.மீ. அளவு விட்டம் கொண்ட வட்டவடிமான மலைப்பள்ளத்தாக்குப்பகுதியே எரிகல் விழுந்த இடமாக இருக்கக்கூடும். எரிகல் விழுந்த காரணத்தினால்தான் அது ஒரு வட்டவடிமான பள்ளத்தாக்காக உள்ளது. 

குமரிக்கோட்டைக் கொடுங்கடல் கொண்டபோது தமிழகத்தைத் தாக்கிய கடல்வெள்ளத்தினால் (பெருஞ் சுனாமியினால்) அடித்துவரப்பட்ட sedimentsஆல் இந்த 8 கி.மீ. அளவு விட்டம் கொண்ட வட்டவடிவமான பள்ளத்தாக்கு மூடப்பெற்றுள்ளது.  கடல்வெள்ளம் வடிந்து வெளியேறிய வழித்தடங்கள் இப்போது கணவாய்களாக (பாதைகளாக) மாறியுள்ளன என்பது எனது கருத்து.

மதுரையிலும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  திருவீழிமிழலையிலும் உள்ள கோயிலின் கருவறை விமானங்கள் விண்கற்களால் ஆனவையாம்.   இந்த இரண்டு விமானக் கற்களும் விண்ணில் இருந்து வந்து சேர்ந்த காரணத்தினால், இவற்றை “விண்ணிழி விமானம்“ எனத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகின்றது.

தொல்லியலாளர் போற்றுவோம்,
தமிழரின் தொன்மை போற்றுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
...............................................

வாசிக்கப் பட்டவை...

(1)
திருவாலவாய்க் காண்டம்
நாற்பத் தொன்பதாவது திருவாலவாயான படலம்

“தேனிழி குதலைத் தீஞ்சொற் சேனெடுங் கண்ணி கோயில்
வானிழி விமானம் பொற்றா மரைவிளை யாட்டின் வந்த
கானிழி யிடபக் குன்றங் கரிவரை நாகக் குன்றம்
ஆனிழி வரைவ ராக வரைமுத லழிவி லாத“

(2)
திருவிளையாடற் புராணம்
பாம்பு எல்லைகாட்டிய படலம் பாடல் எண் 2340

“நுண்ணிய பொருளினு நுண்ணி தாயவர்
விண்ணிழி விமானநின் றெழுந்து மீனவன்
திண்ணிய வன்பினுக் கெளிய சித்தராய்ப்
புண்ணிய அருட்கடல் ஆகிப் போதுவார்“


4. திருப்புகலியும் திருவீழிமிழலையும்
291

ஏகபெ ருந்தகை யாயபெம்மா
னெம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
மேகமு ரிஞ்செயில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே. 4

38. சந்தள றேறுத டங்கொள்கொங்கைத்
தையலொ டுந்தள ராதவாய்மைப்
புந்தியி னான்மறை யோர்களேத்தும்
புகலி நிலாவிய புண்ணியனே
எந்தமை யாளுடை யீசவெம்மா
னெம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
வெந்தவெண் ணீறணிவார்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே. 5

---------------------------------------------------------------------------
திஇந்து பத்திரிக்கைச் செய்தி,

-----------------------------------------------------------------------------

No comments:

Post a Comment