Monday 22 October 2018

திருவிளையாடல் புராணத்தில் திருப்“பூவணம்”


திருவிளையாடல் புராணத்தில்
திருப் 'பூவணம்'  ஊரின் பெயர்
இடம் பெற்றுள்ள பாடல்களின் தொகுப்பு

93.         
கொங்கையே பரங்குன்றமும் கொடும்குன்றும் கொப்பூழ்
அங்கமே திருச் சுழியல் அவ்வயிறு குற்றலம்
செம் கை ஏடகம் மேனியே பூவணம் திரள் தோள்
பொங்கர் வேய் வனம் திருமுக மதுரை ஆம் புரமே.

1857.    
பரும் கை மால்வரைப் பூமியன் பைந்தமிழ் நாட்டின்
இரங்கு தெண் திரைக் கரங்களால் ஈர்ம் புனல் வைகை
மருங்கில் நந்தனம் மலர்ந்த பன் மலர் தூ உய்ப் பணியப்
புரம் கடந்தவன் இருப்பது பூவண நகரம்.

1859.    
கிளிஉளார் பொழில் பூவணக் கிழவர் தம் கோயில்
தளி உளார் தவப் பேறு எனா அடாது கு பூந்தார்
அளி உளார் குழல் அணங்கு அனாள் அந்தரத்தவர்க்கும்
களி உளார் தர மயக்கு உறூம் கடல் அமுது அனையாள்.

1862.    
திருத்தர் பூவண வாணரைச் சேவித்துச் சுத்த
நிருத்தம் ஆடி வந்து அடியரைப் பொருள் என நினையும்
கருத்தளாய் அருச்சித்து அவர் களிப்ப இன் சுவை ஊண்
அருத்தி எஞ்சியது அருந்துவாள் அஃது அவள் நியமம்

1863.    
மாதர் இந் நெறி வழங்கும் நாள் மற்று அவள் அன்பை
பூதலத்து இடைத் தெருட்டு வான் பொன் மலை வல்லி
காதல் நாயகன் திரு உருக் காணிய உள்ளத்து
ஆதரம் கொடுத்து அருளினார் பூவணத்து ஐயர்.    

2346.    
தென் திசைப் பரங் குன்றமும் வடதிசை இடபக்
குன்றமும் குடக் கேடக நகரமும் குணபால்
பொன்றல் அம் கிழித்து எழு பொழில் பூவண நகரும்
என்று நால் பெரு வாயில் கட்கு எல்லையாய் வகுத்தான்.

________________________________________

திருவிளையாடல் புராணப் பாடல்களை மின்னாக்கம் செய்து பதிவு செய்து வைத்துள்ள தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திற்கு நன்றி.
http://www.tamilvu.org/library/libindex.htm

No comments:

Post a Comment