
இதே போன்று, நக்கீரர் காலத்திலும் 27 நட்சத்திரங்களையும் சந்திரனையும் அரண்மனை விதானத்தில் வரைந்துள்ளனர். நுண்ணிய களிமண் பூசி, அதற்கு மேல் மெழுகு பூசி, அதற்கு மேல் நட்சத்திரங்களின் வடிவங்களை வரைந்து வைத்துள்ளனர். அதில் ரோகிணி நட்சத்திரத்துடன் சந்திரன் சேர்ந்துள்ளது. அந்தக் காட்சியைத் தலைவி காண்கிறாள். ரோகிணியுடன் சந்திரன் சேர்ந்துள்ளான். சந்திர வம்சத்தின் தோன்றிய பாண்டியனாகிய தனது தலைவன் வந்து தன்னைச் சேரவில்லையே என்று தலைவி ஏங்குகிறாள். இதை முத்தமிழ்ச் சங்கத்தின் தலைமப் புலவன் நக்கீரன் நெடுநல்வாடையில் சிறப்பாகக் காட்சிப் படுத்திப் பாடியுள்ளார்.
*மதுரையின் சிறப்பு*
தமிழ் வருடப்பிறப்பு சித்திரை1
பாரததேசத்தின் பல பகுதிகளிலும் மற்றும் உலகின் பல நாடுகளிலும் ஆண்டாண்டு காலமாகக் கொண்டாப்பட்டு வருகிறது.
வருடம் 365.24 நாட்களைக் கொண்டது.
இத்தனை நாட்களுக்கும் சித்திரை 1 தலையானது.
சித்திரை 1 அன்று 12 இராசிகளில் *முதல் ராசியான வருடையில்* (ஆடு, மேழம், மேஷம்), 27 நட்சத்திரங்களில் *முதல் நட்சத்திரமான அசுவினியில்* சூரியன் தோன்றுகிறது.
சித்திரை 1 அன்று விண்ணில் நடைபெறும் இது ஒரு வானியல் நிகழ்வு.
12 இராசிகளில் மேஷ ராசி ஏன் தலையானது?
27 நட்சத்திரங்களில் அசுவினி ஏன் முதலாவது?
ஏனென்றால் வருடத்திற்கு 365 நாட்களில், சித்திரை 1 அன்றுதான்
கூடல் என்ற மதுரைக்கு (கீழடிக்கு) நேர் கிழக்கே சூரியன் உதிக்கிறது.
அன்று மதுரையின் உச்சியில் சூரியன் தோன்றும், நிழல் தெரியாது.
இதனால் 12 இராசிகளாகவும் 27 நட்சத்திரங்களாகவும் வானியலைப் பிரித்தவர் கூடல் மாநகரில் வாழ்ந்த நமது முன்னோரான *சங்கத் தமிழர்* என்பது உறுதியாகிறது.
*வானியல்* அறிவியலைத் தோற்றுவித்தவர் சங்கத் தமிழர் என்பதற்கு இதுவே சரியான சான்று ஆகும்.
சங்கத் தமிழரைப் போற்றுவோம்
சித்திரை 1 வருடப் பிறப்பைக் கொண்டாடுவோம்
கூடல் என்ற மதுரையைப் பேணிக் காப்போம்.
அன்புடன்
காசிஸ்ரீ முனைவர் கி. காளைராசன்



No comments:
Post a Comment