Sunday, 9 February 2025

இந்து என்றால் சந்திரன், இந்து என்ற சொல் இடம் பெற்றுள்ள திருவிளையாடல் புராணம் பாடலடிகள்

இந்து என்றால் சந்திரன்

 திருவிளையாடல் புராணத்தில்

' இந்து' என்ற சொல் உள்ள பாடலடிகள்

 


திருவிளையாடற் புராணத்தில் இந்து என்ற சொல் 16 பாடலடிகளில் இடம் பெற்றுள்ளது.  இந்து என்றால் சந்திரன் என்று பொருள்.  சந்திரனைச் சிவபெருமான் தலையில்  சூடியுள்ளான் என்றும், திங்கள் கிழமையை இந்துவாரம் என்றும் புராணம் குறிப்பிடுகிறது.


212.

அந்த வேலையில் அச்சிவ தீர்த்தத்தில்

வந்து மூழ்கி அம் மண்டபத்து ஏறியே

சந்தி ஆதி தவம் முடித்து ஈறு இலா

 இந்து சேகரன் தாள் நினைந்து ஏத்தியே.

 

285.

பொரு அரிய தகர்த் திங்கள் துலாத் திங்கள் இவை  உதிக்கும் போது மூழ்கின்

ஒரு பதினாயிர மடங்காம் சுறவு கவைத் தாள் அலவ உதிப்பின் மூழ்கின்

இருபதினாயிர மடங்காம்  இந்து ரவியிடத்து ஒடுங்கு  இந்து வாரம்

வருவது அறிந்து ஆடி மனு ஓதல் செயின் அனந்த மடங்கு உண்டாகும்.

  

300.

மனிதரில் உயர்ந்தோர் ஆதி மறையவர் தேவர் தம்மில்

பனிதரு திங்கள் வேணிப் பகவனே உயர்ந்தோள்  வேட்டோர்க்கு

இனிது அருள் விரதம் தம்முள் அதிகம் ஆம்  இந்து  வாரம்

புனித மந்திரங்கள் தம்முள் போத ஐந்து எழுத்து  மேலாம்.

 

542.

மகவு இன்றிப் பல பகல்யான் வருந்தி அரும் தவம்  புரிந்தேன் மைந்தன் பேறு

தக இந்த மகம் செய்தேன் அதுவும் ஒரு பெண்  மகவைத் தந்தது அந்தோ

முக  இந்து நிலவு ஒழுக வரு பெண்ணு முலை மூன்றாய்  முகிழ்த்து மாற்றார்

நக வந்தது என்னேயோ என்று வகை இலனாகி  நலியும் எல்லை.

 

692.

விரவு வானவர் நெருக்கு அற ஒதுக்குவான் வேத்திரப் படை ஓச்சி

அரவு வார் சடை நந்தி எம் பிரான் அவர் அணிமணி முடி தாக்கப்

பரவு தூளியில் புதைபடு கயிலை அம் பருப்பதம் பகல் காலும்

இரவி மண்டலத்து ஒடுங்கும் நாள் ஒடுங்கிய  இந்து மண்டலம் மானும்.

 

932.

மாசு அறத் துறந்தோர் உள்ளம் ஆன வான் களங்கம் நீங்க

ஈசர் தம் கிழமை என்னும்  இந்து ஆதிரை நாள் செய்த

பூசையின் பயன் தான் எய்த எரி பசும் பொன் கோள்வந்து

தேசு ஒடு கேந்திரத்தில் சிறந்த நல் ஓரை வாய்ப்ப.

 

946.

இன்னணம் களிப்ப மூதூர்  இந்து ஆதிரை நல் நாளில்

பொன்னவன் கேந்திரித்த புனித லக்கினத்தில் போந்த

தென்னவர் பெருமான் சேய்க்குச் சாதகச் செய்தி ஆதி

மன்னவர்க்கு இயன்ற வேத மரபினால் வயங்க ஆற்றி.

 

1106.

 இந்து இரண்டு அனைய கூர்அம்பல் இருள் வரை நெஞ்சு போழ்ந்த

மைந்தனின் வலிய காளை வரைந்து எறி நேமி சென்னி

சிந்திடாது ஆகி அம் பொன் மணி முடி சிதறச் சோம

சுந்தர நாதன் பூசைத் தொழில் பயன் அளித்தது என்னா.

 

1321.

வந்து நான் மாடம் ஆகி வளைந்து நால் திசையும் சூழ்ந்து

சந்து வாய் தெரியாது ஒன்றித் தாம் ஒரு குடிலாய்  மாடப்

பந்தி கோபுரம் செய் குன்றம் கால்கள் போல் பரிப்பப்  போர்த்த

 இந்து வார் சடையோன் ஏய எழிலிமா நகரம் எங்கும்.

 

1789.

சந்து சூழ் மலயச் சிலம்பர் தவம் புரிந்த இயக்கி மார்க்

அந்த நால் இரு சித்தி தந்தது அறைந்தனன் அடி தொழா

வந்து மீன் வளவன் பொருட்டு வடாது வாயில் திறந்து  அழைத்து

 இந்து சேகரன் விடை இலச்சினை இட்டவாறு விளம்புவாம்.

 

1964.

இய மானன்  இந்து ரவி எரி வான் இலஞ்சல் இல   எறிகால் எனும் பகுதி இரு நால்

மயமான சுந்தரனை மனம் வாய் மெய் அன்பின் இறை  வழிபாடு அடைந்து வர குணனாய்ச்

சய வேளை வென்ற வடிவினன் ஈறு இல் வென்றி பெறு சத வேள்வி இந்திரனை நிகர்வோன்

இயன் மேனி கொண்ட ஒளியினில் ஏழ் பசும் புரவி இனன் தேசு வென்ற வர குணனே.

 

2130.

வந்து மதுரைப் பெருமானை வணங்கிக் கொணர்ந்த நிதி எல்லாம்

 இந்து மருமான் நகர் உள்ளார் யாவும் அறிய யாவர்க்கும்

முந்தை வேத முதல்வர்க்கும் புலவோர் தமக்கு முறை  நல்கிச்

சந்த யாழின் இசைப்பாணர் தருமம் அனையான் வைகினான்.

 

2453.

கலையினால் நிறைந்த  இந்து காந்த மண்டபத்தும் செய்த

மலையினும் எழுது மாட மருங்கினும் நெருங்கு சோலைத்

தலையினும் கமல வாவித் தடத்தினும் தண் முத்து ஆரம்

முலையினும் அன்றிக் கோடை முடிவிடம் காணார் மைந்தர்.

 

2691.

நந்தி நாதனும் இனையனாய் அம் கயல் நாட்டத்து

 இந்து வாண் நுதலாளும் அங்கு அனையளாய் இருப்பத்

தந்தி நால் இரண்டு ஏந்திய தபனிய விமானத்து

உந்து நீர்ச் சடையார் மணம் உன்னினார் மன்னோ.

 

2801.

சிந்துர நுதன் மால் யானைச் செல்வப் பரிக்கு வேறு

மந்துறை அகன்ற ஆக வகுக்க சூழ் தண்ணீர் ஊட்ட

நந்து உறை தடங்கள் வேறு தொடுக நீள் நகரம் எங்கும்

 இந்து உறை மாடம் எல்லாம் அழகு செய்திடுக என்றார்.


நன்றி = பாடல் தொகுப்பு உதவி https://www.tamilvu.org/

No comments:

Post a Comment