திருவிளையாடற் புராணத்தில்
' தருமம் ' என்ற சொல் உள்ள
பாடல்களின் தொகுப்பு.
85.
பொதியிலே
விளைகின்றன சந்தனம் பொதியின்
நதியிலே
விளைகின்றன முத்தம் அந் நதி சூழ்
பதியிலே
விளைகின்றன தருமப் அப்
பதியோர்
மதியிலே
விளைகின்றன மறை முதல் பத்தி.
90.
வெம்மையால்
விளைவு அஃகினும் வேந்தர் கோல் கோடிச்
செம்மை
மாறினும் வறுமை நோய் சிதைப்பினும் சிவன்
பால்
பொய்ம்மை
மாறிய பத்தியும் பொலிவு குன்ற வாய்த்
தம்மை
மாறியும் புரிவது தருமம் அந்நாடு.
127.
மருமச்
செம்புனல் ஆறிட அடு கோட்டுப்
பருமச்
செம் கண் மால் யானையின்
பனைக்கையும் மறைநூல்
அருமைச்
செம் பொருள் ஆய்ந்தவர்க்கு அரும் பொருள் ஈவோர்
தருமச் செம் கையும்
ஒழுகுவது ஆன நீர் ஆறு.
190.
முன்னவன்
அரசு இருக்கையால் அந் நகர் முளரிப்
பொன்னை
ஈன்ற தால் அது பல
பொருள் நிறை செல்வம்
தன்னை
ஈன்றதால் அது பல தருமம்
என்று க்கும்
மின்னை
ஈன்ற அஃது ஈன்றதால் விழுத்
தகு புகழே.
196.
கலவி
வித்தாக ஊடிக் கட்புனல் குளிக்கும் நல்லார்
புலவி
தீர் செவ்வி நோக்கிப் புனர் முலைப் போகம் துய்த்தும்
நிலை
நிலையாமை நோக்கி நெறிப்படு தரும தானம்
கலைஞர்
கைப்பு எய்தும் காலம் கழிப்பவர் எண் இலாதார்.
228.
மால்
அய மாதவனை அடைந்து கைதொழுது வாழ்த்தி வாதாவி வில்வலனைக்
கொலை
புரி தரும மூர்த்தியே விந்தக்
குன்று அடக்கிய தவக் குன்றெ
அலைகடல்
குடித்த அருள் பெரும் கடலே அரும் தமிழ்க்
கொண்டலே தென்பார்
துலை
பெற நிறுத்த களைகணே என்று சுருதி ஆயிரம் எனத் துதித்தார்.
235.
அவ்வகைய
மூன்றின் முதல் தலப் பெருமை தனைச்
சுருக்கி அறையக்
கேண்மின்
எவ்வகைய
உலகத்தும் தருமதலம் அதிகம்
அவற்று ஈறு இலாத
சைவ
தலம் அதிகம் அவற்று அறுபத்து எட்டு அதிகம் அவை தமில் ஈர் எட்டு
தெய்வ
தலம் அதிகம் அவற்று அதிக தல நான்கு
அவற்றைச் செப்பக்
கேண்மின்.
290.
தரும முன்னாகு நான்கும் தருதலால் தரும தீர்த்தம்
அருமை
சால் அருத்த தீர்த்தம் அரும் பெறல் காமதீர்த்தம்
இருமை
சேர் முத்தி தீர்த்தம் என்பதாம் இனைய தீர்த்தம்
வெருவரு
பாவம் என்னும் விறகினுக்கு எரியாம் அன்றே.
301.
மின்மை
சால் மணியில் சிந்தாமணி வரம் விழுப்ப நல்கும்
தன்மை
சால் அறங்கள் தம்மில் மிகும் சிவ தருமம் என்ப
இன்மை
சால் நெறிநின் றோருக்கு ஏற்கு நற்கலங்கள் தம்மின்
நன்மை
சான்றவரே முக்கணா தனுக்கு அன்பு பூண்டோர்.
405.
பொன்
உயிர்த்து அனைய காட்சிப் புண்ணிய
குரவன் முன்போய்
மின்
உயிர்த்து அனையாள் நின்று விளம்புவாள் இது என் கொல்
கெட்டேன்
என்னுயிர்த்
துணைவன் ஆங்கே இருக்க மற்று ஒருவன் என்னைத்
தன்
உயிர்த் துணையாக் கொள்கை தருமமோ அடிகள் என்றாள்.
474.
குலவு
அப் பெரும் பதி இளம் கோக்களில்
ஒருவன்
நிலவு
மா நிதி போல அருச்சனை
முதன் நியதி
பலவு
ஆம் சிவ தருமமும் தேடுவான் பரன்
பால்
தலைமை
சான்ற மெய் அன்பினான் தனஞ்சயன்
என்பான்.
516.
உத்தம
குலத்து நாற்பெரும் குடியும் உயர்ந்தவும் இழிந்தவும் மயங்க
வைத்தவும்
ஆன புறக்குடி மூன்று மறை வழுக்கா மனு
வகுத்த
தத்தம
நெறினின்று ஒழுக வைதிகமும் சைவமும்
தருமமும் தழைப்பப்
பைத்தெழு
திரைநீர் ஞால மேல் திலகம்
பதித்து என நகர்வளம் படுத்தான்.
522.
கண்ணுதலை
முப் பொழுதும் வந்து பணி கற்றோன்
எண்
இல் பல நாள் மகவு
இலா வறுமை எய்திப்
பண்ணரிய
தான தருமம் பலவும்
ஆற்றிப்
புண்ணியம்
நிரம்பு பரி வேள்வி புரி
குற்றான்.
577.
இன்னிலை
ஒழுகும் தொல்லோர் இயற்றிய தருமம் வேறும்
அந்
நிலை நிறுத்தும் வேள்வி அறம் பல ஆக்கம்
செய்ய
நன்னிதி
அளித்தும் வேள்வி நடாத்தியும் செல்வம் கல்வி
தன்
இரு கண்களாகத் தழைத்திட வளர்க்கும் நாளும்.
639.
உடையான்
அடி தாழ்ந்து இவை ஓதலும் ஓத
நீத்தச்
சடையான்
இள வாண் நகை செய்து
தருமச் செம்கண்
விடையான்
சிலையான் இகல் வென்றி விளைக்கும்
தெய்வப்
படையான்
எழுந்தான் அமர் ஆடிய பாரில்
சென்றான்.
881.
மானதமே
வாசிகமே காயிகமே என வகுத்த
ஈனம்
இல் தவம் மூன்றம் இவற்றின்
ஆனந்தம் தருமது
தான
மிசை மதி வைத்தறயவு பொறை
மெய் சிவனை
மோனம்
உறத் தியானித்தல் ஐந்து அடக்கல் முதல் அனந்தம்.
882.
வாசிக
ஐந்து எழுத்து ஓதன் மனுப் பஞ்ச
சாந்தி மறை
பேசுசத
உருத்திரம் தோத்திரம் த்தல் பெரும்
தருமம்
காசு
அகல எடுத்து ஓதன் முதல் அனந்தம்
ஆயிகங்கள்
ஈசன்
அருச்சனை கோயில் வலம் செய்கை எதிர்வணங்கல்.
931.
புண்ணிய
முனிவர் வேத பண்டிதர் போந்து
வேந்தர்க்கு
கண்ணிய
சடங்கு மூதூர் அரும் கடி வெள்ளத்து ஆழ
எண்ணிய
திங்கள் தோறும் இயற்ற இக் கன்னித் தேயம்
பண்ணிய
தருமச் சார்பால்
படுபயன் தலைப்பாடு எய்த.
942.
தரும மா தவத்தின் பேறோ
வருத்த மாதவத்தின் பேறோ
பெருமை
சால் காமன் நோற்ற பெருந்தவப் பேறோ எய்தற்கு
அருமை
ஆம் வீடுநோற்ற அரும்தவப் பேறோ இந்தத்
திருமகன்
என்று தம்மில் வினாய் மகிழ் சிறப்பச் சென்றார்.
1034.
திங்களின்
உக்கிரச் செழியன் வெண் குடை
எங்கணும்
நிழற்ற வீற்று இருக்கும் நாள் வயில்
சங்கை
இல்லாத மா தரும வேள்விகள்
புங்கவர்
புடைதழீஇப் போற்ற ஆற்றும் நாள்.
1188.
அருமறை
நால் வேறு ஆகையால் வருண ஆச்சிரமங்களும்
நான்காம்
தருமம் ஆகதி கருமமும்
மறையின் தோன்றின மறையும்
கரும
நூல் ஞான நூல் என
இரண்டாம் கரும நூல் இவன் அருச்சனைக்கு
வரும்
வினை உணர்த்து ஞான நூல் இவன்
தன் வடிவு இலா
வடிவினை உணர்த்தும்.
1191.
கருமத்தான்
ஞானம் உண்டாம் கருமத்தைச் சித்த சுத்தி
தருமத்தால் இகந்த சித்த சுத்தியைத் தருமம் நல்கும்
அருமைத்து
ஆம் தருமத்தாலே சாந்தி
உண்டகும் ஆண்ட
பெருமைத்து
ஆம் சாந்தியாலே பிறப்பது அட்டாங்க யோகம்.
1356.
மன்னன்
முன் அமைச்சர் சித்தர் மறுத்து மாற்றம் கூற
முன்னவன்
அருள் பெற்று இம்மை மறுமையும் முனிந்த யோகர்
இந்
நில வேந்தர் மட்டோ இந்திரன் அயன் மால் ஏனோர்
தன்னையும்
மதிப்பரோ என்று இருந்தனன் தரும வேந்தன்.
1673.
வான்
நாடர்க்கு அவி உணவின் வகை
முந்நூல் மன்றல் முதல்
நானா
ஆம் சிறு வேள்வி நான்
மறையோர்க்கு அறுசுவையின்
ஆனாத
பேர் உண்டி துறவு அடைந்தோர்க்கு அருத்துபலி
தான்
ஆதி பல வேறு தருமம் நனி தழைவித்தான்.
1706.
வள்ளல்
குல பூடணன் திங்கள் வாரம் தொடுத்து சிவ தருமம்
உள்ள
எல்லாம் வழாது நோற்று ஒழுகும் வலியால் தன் நாட்டில்
எள்லல்
இல்லா வேதியரை இகழ்ந்தான் அதனான் மழை மறுத்து
வெள்ளம்
அருக வளம் குன்றி விளைவு
அஃகியது நாடு எல்லாம்.
1709.
அந்த
உலகில் உயிர்க்கு உயிர் நீ அல்லையோ அவ் உயிர்
உயிர் பசியால்
எய்த்த
வருத்தம் அடியேனை வருத்தும் மாறு என் யான்
ஈட்டி
வைத்த
நிதியம் தருமத்தின் வழியே
சென்றது இளியடிகள்
சித்த
மலர்ந்து என் இடும் பை
வினை தீர அருள்கண் செய்க
என.
1716.
மும்மைப்
புவனங்களும் உய்ய முத்தீ வேட்கும்
இவர் தம்மை
நம்மைப்
போலக் கண்டு ஒழுகி நாளும் நானா வறம் பெருக்கிச்
செம்மைத் தருமக் கோல்
ஓச்சித் திகிரி உருட்டி வாழ்தி என
உம்மைப்
பயன் போல் எளி வந்தார்
உலவாக் கிழி ஒன்று உதவுவார்.
1910.
அனையான்
அறத்திற்கு அருள் போன்றவள் ஆன்ற கற்பின்
மனையாள்
மரபின் வழுவாத தரும சீலை
எனையாரும்
நன்கு மதிக்கும் இருக்கும் நீராள்
தனை
ஆள் பதிக்குக் கதிக்குத் தனிச் சார்பு போல்வாள்.
1921.
நீ
நாளும் பூசித்து அதில் வேண்டிய கொண்டு நித்தம்
ஆனாத
அன்பர்க்கு அமுது ஊட்டி எவர்க்கும் அன்ன
தானாதி
நானா தருமங்களும் செய்தி
வீடு
மேல்
நாள் அளிக்கின்றனம் என்று விசும்பில் கூற.
1946.
அரசன்
இங்கு இல்லை கொல்லோ ஆன்றவர் இல்லை கொல்லோ
குரை
கழல் வேந்தன் செங்கோல் கொடியதோ கோது இல்
நூல்கள்
செயும்
தெய்வம் தானும் இல்லை கொல் உறுதியான
தருமம் எங்கு ஒளித்ததே
கொல் என்று அறத் தவிசில் சார்வார்.
1954.
ஆவலித்து
அழுத கள்வர் வஞ்சரை வெகுண்டு நோக்கிக்
காவலன்
செங்கோன் உண்நூல் கட்டிய தருமத்தட்டில்
நா
எனும் துலை நா விட்டு
எம் வழக்கையும் நமராய் வந்த
மேவலர்
வழக்கும் தூக்கித் தெரிகென விதந்து சொன்னார்.
2120.
தரும நீர்ப் பந்தரில் இருக்கும் தந்திரி
வரும்
இசைக் கிழவனைக்கண்டு வல்லை போய்த்
திரு
மகற்கு உணர்த்தினர் சேனை யோடு எழீப்
பெருமகன்
பாணர்தம் பிரானை நண்ணினான்.
2130.
வந்து
மதுரைப் பெருமானை வணங்கிக் கொணர்ந்த நிதி எல்லாம்
இந்து
மருமான் நகர் உள்ளார் யாவும்
அறிய யாவர்க்கும்
முந்தை
வேத முதல்வர்க்கும் புலவோர் தமக்கு முறை நல்கிச்
சந்த
யாழின் இசைப்பாணர் தருமம் அனையான்
வைகினான்.
2273.
இன்னவாறு
ஒழுகும் பன்னிரு வோரும் ஈகையும் தருமமும் புகழும்
தென்னர்
கோ மகற்கு வைகலும் பெருகத் திசை எலாம் விசயம்
உண்டாக்கிப்
பன்னக
ஆபரணன் சிவபுரம் அடைந்து பரன் கண நாதருள்
கலந்து
மன்னி
வீற்று இருந்தார் மன்னர் மன்னவனும் வான் பதம் அடைந்து
வீற்று இருந்தான்.
2278.
விடையவன்
நீறு பூசும் மெய்யவன் பூண்ட கண்டித்
தொடையவன்
புறம்பும் உள்ளும் தூயவன் குடையும் கையில்
உடையவன்
தரும தீர்த்த யாத்திரை
ஒழுக்கம் பூண்ட
நடையவன்
ஒருவன் அந்த நறும் தரு
நிழலில் சார்ந்தான்.
2630.
அல்லதை
என்று அமரால் என் பகைஞரால் கள்வரால் அரிய
கானத்து
எல்லை
விலங்கு ஆதிகளால் இடையூறு இன் தமிழ் நாட்டில் எய்திற்றலோ
தொல்லை
மறையவர் ஒழுக்கம் குன்றினரோ தவம் தருமம் சுருங்கிற்றாலோ
இல்லறனும்
துறவறனும் பிழைத்தனவோ யான் அறியேன் எந்தாய் எந்தாய்.
2710.
பெண்ணினை
வதுவைக்கு ஈந்த பெருந்துறைச் சேர்ப்பற்கு
அன்று
தண்
அளி சுரந்து நல்கித் தருமமால் விடைமேல் தோன்றி
விண்
இடை நின்றான் சென்றான் வேத்திரப் படையா னோடும்
உள்
நிறை அன்பரோடு உத்தர கோச மங்கை.
2831.
தருமம் ஆதி நால்
பொருள் எனும் தாளது ஞான
கரும
காண்டம் ஆம் செவியது காட்சியைக்
கடந்த
ஒருமை
ஆம் பரம பரமாம் உணர்வு
எனும் கண்ணது
அருமை
ஆம் விதி முகத்தது நிடேத
வால் அதுவால்.
3129.
அருமறை
வணங்கும் கோயில் கதவினை அடைக்கப் பாடிப்
பரன்
உறை பதிகள் எங்கும் தொழுதனர் பாடிப் பாடி
வரும்
அவர் நுங்கள் நாட்டு வணங்கவும் வருவார் என்னத்
தரும நூல் அணிந்த தெய்வத்
தாபதன் சாற்றலோடும்.
3307.
அருந்ததி
அனையாள் கேள்வற்கு ஆயுளும் ஆனாச் செல்வம்
பெருந்தன
நிறைவும் சீரும் ஒழுக்கமும் பீடும் பேறு
அரும்தவ
நெறியும் குன்றத் தருமமும் புகழும் பல்க
இருந்தனள்
கமலச் செல்வி என்ன வீற்று இருந்து
மன்னோ.
_________________________________
நன்றி =
பாடல்கள் தொகுப்பு உதவி - தமிழ் இணையப் பல்கலைக்கழகம்..
No comments:
Post a Comment