ஐராவதநல்லூரில்
பழமையான சிவலிங்கம் கண்டெடுப்பு
மதுரை தெப்பக்குளம் முதல் விரகனூர் இடையே 60 அடி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மதுரையில் சாலை பணியின் போது, ஐராவதநல்லூர் அருகே கொந்தகை கால்வாய் பகுதியில் சாலையை தோண்டியபோது, 2 அடி உயரமுள்ள சதுஸ்ர சிவலிங்க சிலை கண்டெடுக்கப்பட்டது.
இதனையடுத்து, அந்த சிவலிங்க சிலை, ஐராவதநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ் மூலமாக, தெற்கு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் மூலமாக மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள அரசு அருங்காட்சிய காப்பாளர் மருது பாண்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.
முதற்கட்ட ஆய்வில், சதுஸ்ர வடிவ லிங்க வழிபாடு கி.பி. 10 மற்றும் 11ஆம் நூற்றாண்டுகளில் பயன்பாட்டில் இருந்துள்ளது என்பதால் இது 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் முழுமையான ஆய்வுக்குப் பின்னர் தெயிவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நன்றி = https://www.instanews.city/tamil-nadu/madurai/madurai-south/shivalingam-found-during-road-works-madurai-1023321?infinitescroll=1
No comments:
Post a Comment