Friday 16 November 2018

கடும் பஞ்சம் ஏற்படக் காரணம் என்ன?

மழை பொய்த்துக் 
கடும் பஞ்சம் ஏற்படக் காரணம் என்ன? 


ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைக் கூறுவர்.  “சூரியனைப் பார்த்தபடி மற்றபிற கோள்கள் (கிரகங்கள்) நின்றால் அந்த ஆண்டு மழைபொய்த்துக் கடும் பஞ்சம் ஏற்படும்“ என்கிறது திருவிளையாடல் புராணம். 
உக்கிரவழுதியின் மகன் வீரபாண்டியன் ஆட்சிக் காலத்தில் மக்கள் நலத்திட்டங்கள் இல்லாமல் போனது.  சூரியனுக்கு எதிராகக் கோள்கள் நின்று சூரியனை உற்றுப் பார்த்த காரணத்தில், மழை குறைந்தது, நதிகளில் தண்ணீர் ஓடமாமல் வறட்சி கண்டன.  பருவங்கள் மாறுபட்டுன.   உணவு பொருட்கள் விளைச்சல் இல்லாமல் போனது. கடும் பஞ்சம் ஏற்பட்டது. உணவு இல்லாமல்  மனிதர்களும், விலங்குகளும், பறவைகளும், பூச்சி புழுக்களும் பசியால் வருந்தி மெலிந்தன.  நாடு முழுவதும் வறுமையும் துன்பமும் வருத்தின.
சோதிட நூல் முழுதும்  உணர்ந்து, அழியாத பிரம கற்பம் வரையும் கால அவளவைத்  தேர்ந்து உணர்ந்த புலவர்கள் பாண்டியனது அவையில் இருந்தனர். அவர்களிடம் மழை இல்லாமல் போனதற்குக் காரணம்  என்ன என்று பாண்டியன் அவையோர்களிடம் கேட்டான்.   
ஏனைய கோள்கள் ஞாயிறை (சூரியனை ) உற்று நோக்கும் படியாக நிற்கின்ற காரணத்தினால்  மழை பொய்த்தது என்று பாண்டியன் அவையில் இருந்த சோதிட வள்ளுனர்கள் கூறினர்.
“சூரியனைப் பார்த்தபடி மற்றபிற கோள்கள் (கிரகங்கள்) நின்றால் அந்த ஆண்டு மழைபொய்த்துக் கடும் பஞ்சம் ஏற்படும்“ என்கிறது 
திருவிளையாடல் புராணம். 

திருவிளையாடற் புராணம் பாடல்கள்
1116.
மல்கு மாறுஇல் கோள் திரிந்து மழை சுருங்கி நதியும்  நீர்
ஒல்கு மாறு பருவம் மாறி உணவு மாறி உயிர் எலாம்
மெல்குமாறு பசி உழந்து வேந்தனுக்கு விளைபொருள்
நல்கு மாறி இலமை இன்னல் நலிய வந்த நாடு எலாம்.
1117.
மழை வறந்தது என் கொல் என்று வழுதிகூற முழுது உணர்ந்து
அழிவு இலாத பிரம கற்பம் அளவு எல்லை கண்ட நூல்
உழவர் கோள்கள் இரவி தன்னை உற்று நோக்கி நிற்றலால்
தழையும் மாரி வருடியாது ஓர் வருடம் என்று சாற்றினார்.
     (பிரம கற்பம் - பிரமனுக்கு ஒருபகல்; பதினான்கு இந்திரர்
அழியுங்காலம். )
அன்பன்
கி.காளைராசன்
ஹேவிளம்பி ஐப்பசி 15ஆம் நாள் (15 நவம்பர் 2017) புதன்கிழமை.

No comments:

Post a Comment