Monday, 13 January 2025

தை 1 - குழந்தை வரம் பெரும் நாள், யானைக்குக் கரும்பு கொடுக்கும் நாள்

 தை முதல்நாள்

கல்யானை கரும்பு தின்ற நாள்

எல்லாம் வல்ல சித்தர்  அபிடேகபாண்டியனுக்கு

குழந்தை வரம் அருளிச் செய்தநாள்

தை முதல் நாள் அபிடேக பாண்டியன் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட்டு வலம் வரும்போது எல்லாம் வல்ல சித்தரைக் கண்டான்.  சித்தரின்  அருட்பார்வையால் கல்யானை  பாண்டினின் கையிலிருந்த கரும்பைத் தின்றது.  இந்தக் கதையை நாம் அனைவரும் அறிவோம்.    இவ்வாறான சிறப்புடைய  தை முதல்நாளிலே எல்லாம் வல்ல சித்தர் பாண்டியனுக்கு குழந்தை வரம் அருளிச் செய்தார்.    

எனவே  தை முதல் நாளில்
1) மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபடுதல் சிறப்பு
2) யானைக்குக் கரும்பு கொடுப்பது சிறப்பு.
3) எல்லாம் வல்ல சித்தரை வணங்கிக் குழந்தை வரம் வேண்டிப் பெறலாம்.  
வாருங்கள் நாமும் அபிடேக பாண்டியனைப் போன்று தை முதல்நாள் வழிபட்டு வரங்கள் பல பெருவோம்.
----------------------------------------------
திருவிளையாடற் புராணம் - 
ஆனந்த சித்தர் தமைக்காண்பலென் றன்பு கூர்ந்த
மீனந் தரித்த கொடிவேந்தன் குறிப்பு நோக்கி
மோனந் தரித்த சிவயோகரு முந்தித் தம்பொன்
மானந் தனக்கு வடமேற்றிசை வந்தி ருந்தார் ( பாடல் எண் 1359)

அருகாத செல்வத் தவனன்றுதைத் திங்க டோற்றம்
வருகால மாக மதுரேசனை வந்து வந்தித்
துருகா தரத்தாற் கழிந்துள்வல மாக மீள...... (பாடல் எண் 1360)

தைமாதம் முதல் நாள் அன்று சொக்கநாதரை வழிபட வேண்டி அபிடேகபாண்டியன் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவர் கோவிலுக்குச் சென்றான். பாண்டியனின் வருகையை அறிந்த எல்லாம்வல்ல சித்தர் வடமேற்கு திசையில் சென்று அமர்ந்திருந்தார்.  அபிடேகபாண்டியன் சொக்கநாதரை வழிபட்டு உள் வலமாக வந்தபோது சித்தரைக் கண்டு, சித்தரிடம் “சித்தரே, தாங்கள் யார்? தங்களது ஊரும், நாடும் எவை? நீங்கள் எதனை எதிர்பார்த்து இங்கு வந்து சித்து வேலைகளை மதுரை மக்களுக்கு காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்? என்னால் உங்களுக்கு ஆகவேண்டியது ஏதும் உளதா?” என்று கேட்டான்.

இதனைக் கேட்ட சித்தர் சிரித்துக் கொண்டே “அப்பா எல்லா நாட்டிலும், எல்லா ஊரிலும் நாம் திரிவோம். நான் தற்போது காசியை சொந்த ஊராகக் கொண்டுள்ளேன்.  எதிலும் பற்றுஇல்லாமல் பிச்சை எடுத்து வாழும் அடியவர்களே என்னுடைய உறவினர்கள். நாம் எந்நாளும் வித்தைகள் செய்கின்ற சித்தராவோம்.  தில்லைவனம் உள்ளிட்ட சிவதலங்களை வணங்க வந்தோம். இம்மையில் வளமான வாழ்கையையும், மறுமையில் வீடுபேற்றினை அளிக்கும் மதுரையம்பதியில் தற்போது தங்கியுள்ளேன்.

உன்நாட்டு மக்கள் என்னிடம் என்ன கேட்கிறார்களோ அதை தருவது போல் உனக்கும் நீ வேண்டியதைக் கொடுக்கிறேன். அறுபத்திநான்கு கலைகளிலும் நாம் நன்கு தேர்ச்சியுடையோம்.  விண்ணுலகத்தில் உள்ளவற்றை மண்ணுலகத்திற்கு கொண்டு வரும் ஆற்றலை உடையவன். ஆதலால் பாண்டியனே உன்னிடத்தில் நாம் பெறத்தக்கது ஒன்றும் இல்லை.” என்று கூறி புன்னகைத்தார்.

சித்தரின் வார்த்தைகளைக் கேட்ட அபிடேகபாண்டியன் அதிர்ச்சி அடைந்து ‘இவருடைய செருக்கு, பெருமிதம், இறுமாப்பு ஆகியவற்றை கண்டிப்பாக சோதித்து அறிய வேண்டும்’ என்று எண்ணினான்.

கல்யானைக்கு கரும்பு அளித்தல்

அப்போது அங்கே ஒரு உழவன் செங்கரும்பினைக் கொண்டு வந்து அரசனை வணங்கினான்.  அபிடேகபாண்டியன் அக்கரும்பினைப் பெற்றுக் கொண்டு “வல்லோர்களில் வல்லோர் என்று உம்மை மதித்துக் கொண்டவரே, நீர் இங்கு நிற்கும் இக்கல்யானைக்கு இக்கரும்பினைக் கொடுத்து அதனை உண்ணச் செய்தால் எல்லா வல்ல சித்தரும் நீரே, இங்கு குடிகொண்டிருக்கும் சொக்கநாதரும் நீரே என்பதை நான் ஒப்புக் கொள்வேன். நீர் விரும்பிதை அளிப்பேன்.” என்று கூறினான்.

பாண்டியன் கூறியதைக் கேட்ட இறைவனார் சிரித்துக் கொண்டே, “பாண்டியனே எமக்கு உன்னால் வரும் பயன் ஏதேனும் இல்லை. இருப்பினும் நீ கூறியவாறே இதே இக்கல்யானை இப்பொழுதே இக்கருப்பினை கடித்து உண்பதைப் பார்” என்று கூறி கல்யானையைப் பார்த்தார்.

இறைவனின் கண் அசைவினால் கல்யானை உயிர்பெற்று தன்னுடைய கண்களை உருட்டியது. வாயினைத் திறந்து கோவில் அதிரும்படி பிளிறியது. அபிடேக பாண்டியனின் கையிலிருந்த கரும்பினைப் பிடுங்கியது. பின்னர் அதனுடைய கடைவாயில் கரும்புச்சாறு ஒழுகுமாறு கரும்பினை மென்று தின்றது.

பின்னர் சித்தமூர்த்தி கல்யானையை மீண்டும் பார்த்தார். உடனே கல்யானை தன்னுடைய துதிக்கையால் பாண்டியன் அணிந்திருந்த முத்தாலாகிய மாலையை பிடுங்கியது.  இதனைக் கண்ட மெய்காவலர்கள் யானை அடிக்க கம்பினை உயர்த்தினர். சித்தமூர்த்திகள் கோபம் கொண்டு மெய்காவலர்களைப் பார்த்தார்.  அதற்குள் கல்யானை முத்துமாலையை விழுங்கி விட்டது. இதனைக் கண்ட பாண்டியன் மிக்க கோபம் கொண்டான். உடனே மெய்காவலர்கள் சித்தமூர்த்தியை அடிக்க நெருங்கினர்.

உடனே சித்தமூர்த்தி புன்னகையுடன் “நில்லுங்கள்” என்று கூறினார். உடனே அவ்வீரர்கள் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் அப்படியே அசைவின்றி நின்றனர். இதனைக் கண்ட பாண்டியனுக்கு கோபம் மாறி பயம் உண்டாகியது.

புத்திரப் பேறு பெறுதல் 

சித்தமூர்த்திகளின் காலில் விழுந்து வணங்கி “அடியேனின் பிழையைப் பொறுத்தருளுங்கள்.” என்று கூறினான். சித்தமூர்த்தி “பாண்டியனே நீ வேண்டும் வரம் யாது?” என்று கேட்டார்.

அதற்கு அபிடேகபாண்டியன் “நற்புத்திரப் பேறு அருளுக” என்று வேண்டினான். சித்தமூர்த்தியும் “அவ்வாறே ஆகுக” என்று அருள்புரிந்தார்.

கல்யானையின் மீது சித்தமூர்த்தி தன்னுடைய கடைக்கண் பார்வையைச் செலுத்தினார். உடனே யானை தனது துதிக்கையை நீட்டி பாண்டியனின் முத்துமாலையை திருப்பிக் கொடுத்தது.

பாண்டியனும் அதனை வாங்கி அணிந்து கொண்டான். அப்போது சித்தமூர்த்தி மறைந்து அருளினார். யானையும் மீண்டும் கல்யானையாகி அசைவற்று நின்றது.

இறைவனின் திருவிளையாடலை எண்ணிய அபிடேகபாண்டியன் மீண்டும் சொக்கநாதரை வணங்கி அரண்மனை திரும்பினான்.

சித்தமூர்த்தியின் திருவருளால் அபிடேகபாண்டியனுக்கு விக்ரமன் என்ற புதல்வன் பிறந்தான். விக்ரமன் வளர்ந்து பெரியவனானதும் அபிடேகபாண்டியன் விக்ரமனுக்கு அரசாட்சியை அளித்து இறைவனின் திருவடியை அடைந்தான்.

-------------------------------

Wednesday, 10 April 2024

தமிழ் வருடப் பிறப்பு, தமிழ் ஆண்டு, சித்திரை 1 சிறப்பு, தமிழ்ப் புதுவருடம்

பாரதத்தின் விஞ்ஞானப் பூர்வமான
வருடப் பிறப்புக் கணக்கு

சித்திரை 1
தமிழ்ப் புதுவருடம்



சூரியனின் தீர்காம்சக் கணக்கு, தினகதி ஆகியவற்றிலிருந்து சூரியனின் 'கிரக பாதசாரம்', கணக்கிடப்படுகின்றது. கிரக பாதாசாரம் என்பது ஒரு ஆண்டில் ஒவ்வொரு நாளும் ஒரு கிரகமானது வானத்தில் எந்த தீர்காம்ச கோணத்தில் நிலைபெற்றுள்ளது என்பதைக் காட்டும் பட்டியல் ஆகும். இப்பட்டியலில் கிரகத்தின் பாதசாரமானது கோண அளவில் கொடுக்கப்படாமல், ராசி மற்றும் நட்சத்திரங்களின் பாதக் கணக்கில் கொடுக்கப்பட்டிருக்கும். நட்சத்திரங்களின் பாதசார அளவில் கிரகங்களின் நிலையான இடத்தை இப்பட்டியல் காட்டுவதால், இப்பட்டியல் கிரக பாதசாரம் என்று சொல்லப்படுகின்றது. ஜனன ஜாதகத்தை எளிதாக ஜோதிடர்கள் கணிப்பதற்கும், கிரகங்களின் இருப்பிடத்தை ஜாதகத்தில் எளிதாக அறிவதற்கும் வசதியாக இப்பட்டியல் ராசி மற்றும் நட்சத்திரப் பாத கணக்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

முதலாவதாக சூரியனின் கிரகபாத சாரத்தை நாம் சிந்திக்கலாம். சென்ற நான்கு ஆண்டுகளுக்கான (விக்ரம, விஷு, சித்ர பானு, சுபானு) மற்றும் கடந்த தாரண வருடத்தில் சூரியனின் கிரகபாத சாரம் அந்தந்த வருடத்தில் பஞ்சாங்கத்தில் கிரகபாத சாரம் (Dr. M. L. ராஜா – வானசாஸ்திரம் பக்கம் – 130)

என்ற பட்டியலில், 'சூரியன்' என்ற தலைப்பில் தேதி, நாழிகை, விநாழிகை (விநாடி), நட்சத்திரப் பாதம், ராசி, அம்சம் என்ற விவரங்களின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் சூரியன் ஒவ்வொரு ஆண்டும் என்ன தேதியில் எத்தனை நாழிகை, எத்தனை விநாழிகைக்கு மேஷ ராசியில் பிரவேசிக்கின்றது என்பதும் கொடுக்கப்பட்டிருக்கும். சூரியனின் இந்த மேஷ ராசிப் பிரவேசம் என்பது பூமி தனது சூரியச் சுற்றுப் பாதையில் 360 டிகிரி கோண அளவிலான ஒரு முழு வட்டம் சற்றி முடிந்த பின்பு 361 வது டிகிரி (அடுத்த சுற்றின் முதல் டிகிரி) கோண அளவிற்குள் நுழைவதைக் குறிக்கின்றது. இதுவே புத்தாண்டுத் துவக்கம் ஆகும். இந்தக் கணக்கீடும் வானத்தில் கிரஹங்களின் இயக்கத்தை ஒட்டியே, நமது முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டதாகும். இதனைக் கீழ்க்கண்ட நம் நாட்டின் பண்டைய வான சாஸ்திர நூல்கள் தெரிவிக்கின்றன. இன்றைக்கு 1109 ஆண்டுகளுக்கு முன்பு (கி.பி. 904-ல்) வடேச்வரர் எழுதிய “வடேச்வர ஸித்தாந்தம்“ என்ற வான சாஸ்திர நூலின் “மத்யக த்ய அதிகாரம்” என்னும் முதல் அதிகாரத்தின் 2-ம் அத்தியாயமான மாந விவேக: என்பதன் 8-ம் ஸ்லோகம்,

'த்ருட்யா(தி பத் மோத்பவ ஜீவிதாந்த :

காலா: ஸமம் தேந ஜ ஷ அஜ ஸந்தெள

லங்கா குஜஸ்தத்யுசரை: ப்ரவ்ருத்த:

ச நேர் திநே சைத்ர ஸிதாதி த அயம் ||

என்று குறிப்பிடுகின்றது.

பொருள். (1) த்ரு டி = மிக மிகச் சிறு கால அளவு (2) பத்ம = தாமரைப்பூ (3) உதபவ = பிறத்தல், தோன்றுதல் (4) ஜீவிதாந்த கால: = வாழ்நாள் (5) ஸமம் = ஒன்றாக, ஒருசேர,  (6) (Dr. M. L. ராஜா – வானசாஸ்திரம் பக்கம் – 131)

தேத = இவ்விதமாக (7) ஜஷ மீன்= மீன ராசி, (8) அஜு ஆடு = மே ராசி, (9) ஸத்தௌ = சந்திப்பு (10) லங்கா லங்கை, (11) குஜ தொடுவானம் (கு = பூமி, ஜ = பிறப்பு) (12) ஸ்த = நிலை பெற்றிருத்தல், (13) த்யுசரை = கிரஹங்களால் (த்யு = வானம், சர = நகர்கின்ற) (14) ப்ரவ்ருத்தி = சுற்றத் துவங்குதல் (15) சநேர் திதே = சனிக்கிழமையில் (16) சைத்ர = சித்திரை மாதம் (17) ஸித = வெண்மை, சுக்லபக்ஷம் (வளர்பிறை), (18) ஆதித =இது முதலாக.

மிக மிகச் சிறு கால அளவான த்ருடி முதல், மிகப்பெரும் காலமான ப்ரம்மாவின் வாழ்நாள் வரை உள்ள காலத்தின் துவக்கமானது, ஒரு சனிக்கிழமையில், கோள்கள் தங்களின் சுழற்சி இயக்கத்தை (REVOLUTION), வானத்தில் மீனம் மற்றும் மேஷ ராசிகளின் சந்திப்பில், சித்திரை மாத துவக்கமான வளர்பிறையின் ஆரம்பத்தில் லங்கா என்னும் இடத்தின் தொடுவானத்தில் துவங்கும் போது, நிகழ்கின்றது என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள் ஆகும்.

(த்ருடி = 1/1,12,500 நலீன செகண்ட், ப்ரம்மாவின் வாழ்நாள் = 311,04,000 கோடி வருடங்கள். லங்கா மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜயினி நகரத்தின் தீர்காம்ச ரேகையானது பூமத்திய ரேகையை வெட்டுகின்ற இடம்).

இதே போன்று, இன்றைக்கு 2013 ஆண்டுகளுக்கு முன்பு (கி.மு.0). ப்ரம்ம குப்தரால் எழுதப்பட்ட “ப்ரம்ஹ ஸ்புட ஸித்தாந்தம்” என்ற நம் நாட்டின் பண்டைய வானசாஸ்திர நூலின் மத்யமாதிகார என்னும் முதல் அத்தியாயத்தின் 4 -ம் ஸ்லோகம்,

'சைத்ர ஸிதாதேர் உதயாத்பா நோர் திந மாஸ வர்ஷயுக கல்பா: | - ஷ்ட்யாதௌ லங்காயாம் ஸமம் ப்ரவ்ருத்தாதி நேள்கஸ்யா"  என்று குறிப்பிடுகின்றது. (Dr. M. L. ராஜா – வானசாஸ்திரம் பக்கம் – 132)

பொருள்- (1) சைத்ர = சித்திரை மாதம், (2) ஸிதா =  வெண்மை, சுக்ல பக்ஷம் (வளர்பிறை), (3) உதயாத் = உதயத்தின்போது, (4) பாநு அர்கா = சூரியன்,  (5) திந = தினம், நாள், (6) மாஸா = மாதம்,  (7) வர்ஷ = வருடம், (8) யுக = யுகங்கள், (9) கல்ப = கல்ப காலம், (10) ஸ்ரு ஷ்டி ஆதௌ = படைப்பிலிருந்து. (11) லங்கா = லங்கை, (12) ஸமம் = ஒரு சேர, (13) ப்ரவ்ருத்தா = சுற்றத் துவங்குதல்,  (14) திந அர்கஸ்ய = ஞாயிற்றுக் கிழமையின், தினம், மாதம், வருடம், யுகம் மற்றும் கல்பம் எனப்படும் கால அளவுகள். இந்த பிரபஞ்சத்தின் (பேரண்டம், அண்டசராசரங்கள், ஜகத் - UNIVERSE), படைப்பிலிருந்து, ஒரு சேர, சித்திரை மாதத்தின் துவக்கமான வளர்பிறையின் ஆரம்பத்தில், லங்கா என்ற இடத்தில் சூரிய உதயத்தின் போது துவங்குகின்றன என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

கல்பம் = 432 கோடி வருடங்கள், மத்வந்தரம் = 30,84,48000 வருடங்கள், கல்பம், மந்வந்தரம் மற்றும் யுகங்களின் துவக்கத்தில், ராகு தவிர இதர நவகிரஹங்கள் தங்களது சுழற்சி இயக்கங்களை, மீன ராசியின் முடிவில், மேஷ ராசியின் துவக்கத்தில், சித்திரை மாதத் துவக்கத்தில், லங்கா என்ற இடத்தில் சூரிய உதயம் நிகழும் போது தினம், மாதம், வருடம் என்ற கால அளவுகளில் ஒரு சேர துவங்குகின்றன என்பது இந்த ஸ்லோகங்களின் விரிவான பொருள் ஆகும். இந்தபிரபஞ்சத்தின் படைப்பின் போதும், கல்பம், மந்வந்தரம் மற்றும் யுகங்கள் போன்ற கால அளவுகளின் துவக்கத்தின் போதும், ராகு தவிர இதர நவகிரஹங்கள், வானத்தில் எந்த இடத்தில் அதாவது மேஷராசியின் துவக்கத்தில் தங்களது சுழற்சி இயக்கத்தைத் துவக்குகின்றனவோ, அந்த மேஷ ராசியின் துவக்கத்தையே, பூமியின் சூரியச் சுற்று இயக்கத்தால் தோன்றுகின்ற சூரியனின் தோற்றப் பூர்வமான சுற்றுப் பாதையின் முதல் டிகிரி கோண அளவாக விஞ்ஞானப் பூர்வமாகவே நமது முன்னோர்களால் கணக்கிடப்   (Dr. M. L. ராஜா – வானசாஸ்திரம் பக்கம் – 133)

பட்டது.  இந்த நிகழ்வுகள் நிகழ்கின்ற நாளான சித்திரை முதல் நாளே புதுவருடத் துவக்கமாகவும் நமது முன்னோர்களால் விஞ்ஞானப் கணக்கிட பட்டது. ஆகவே, சூரியனின் தோற்றப் பூர்வமான சுற்றுப் பாதையில் 360 வது டிகிரி கோண அளவு முடிந்து அடுத்த சுற்றின் முதல் டிகிரி துவக்கமும், புதுவருடத்தின் துவக்கமாக சித்திரை முதல் நாள் என்று கணக்கிடப் பட்டதும், விஞ்ஞானப் பூர்வமவே, வானத்தில் நவகிரஹங்களின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டவை ஆகும். ஆகவே, நமது பாரதீயக் காலக் கணக்கில் புத்தாண்டுத் துவக்கம் என்பது வானத்தில் பூமியின் சூரியச் சற்று இயக்கத்தை அடிப்படையக் கொண்டு கணிக்கப்படுகின்றது.  இதையே பஞ்சாங்கம் பயன்படுத்துகின்றது. இருப்பினம் இதை நாம் விஞ்ஞானப் பூர்வமற்ற மூடநம்பிக்கை என்று கேலி செய்கின்றோம்.  ஆனால் நாம் அலுவலகத்தில் பயன்படுத்தும் ஆங்கில வருட கணக்கு மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு செயற்கையான விஞ்ஞான பூர்வமற்ற ஒன்று என்பதை உணராது. இதையே  விஞ்ஞானமயமானது என்று உயர்த்திப் பேக்கின்றோம்.

ஆனால், இந்த ஆங்கில் வருடக் காலக் கணக்கில் எவ்வித விஞ்ஞானமும் இல்லை. இதில் இயற்கையின் எந்த ஒரு நிகழ்வும் சம்பத்தப்பட்டிருக்கவில்லை. திசம்பர் 31 முடிந்தவுடன் ஜனவரி 1 வந்து விடும். சூரியன் மற்றும் பூமியின் இயக்கத்தில் ஏற்படும் மாறுபாட்டை ஒட்டி வருவதில்லை.  அதாவது பூமி 360 டிகிரி (அடுத்த சுற்றின் முதல் டிகிரி)க்கு வரும் போதுதான்  ஜனவரி 1 வரும் என்ற வரைமுறை ஏதும் இல்லை.  பூமியின் சூரியச் சுற்றுப்பாதைக் கோண அளவினைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், திசம்பர் 31 முடிந்து, (Dr. M. L. ராஜா – வானசாஸ்திரம் பக்கம் – 134)

அடுத்த நாள் ஜனவரி 1 என்று செயற்கையாக கணக்கிட்டுள்ளனர். இதனாலேயே லீப் வருடங்களும் அதை ஒட்டி 2000 ஆம் ஆண்டிஸ் பிப்ரவரி மாதத்திற்கு 28 நாட்களா அல்லது 29 நாட்களா என்று எண்ணற்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன. ஏனென்றால் இந்த ஆங்கில வருடக் கணக்கு முற்றிலும் செயற்கையானது, விஞ்ஞாளப் பூர்வமற்றது.

இதற்கு நேர்மாறாக நாம் எதை மூட நம்பிக்கை என்று தாழ்த்திச் சொல்லுகின்றோமோ, அந்தப் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தமது பாரதீய காலக் கணக்கு வானத்தில் கிரகங்களின் இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்பட்ட ஒரு விஞ்ஞாளப் பூர்வமான காலக் கணக்கு ஆகும். ஆகவே, இதில் லீப் வருடக் குழப்பங்கள் ஏற்படுவதில்லை. இதனை நன்கு புரிந்துகொள்ள பின்வரும் விளக்கத்தை ஒரு முறைக்கு இருமுறை நன்கு ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். உதாரணமாக விஷு வருடம், சித்திரை முதல் நாள் அன்று துவங்குகின்றது. ஆனால் சூரியன் மேஷ ராசியில் முந்திய நாளிலேயே (விக்ரம ஆண்டு பங்குனி மாதம் கடைசி நாள்) 38 நாழிகை 14 விநாழிகையில் முதல் டிகிரி கோண அளவிற்குள் பிரவேசிக்கின்றது. ஆகவே, பூமி தனது விக்ரம ஆண்டிற்கான 360 டிகிரி கோண அளவு கொண்ட ஒரு முழு சூரியச் சுற்று வட்டத்தை முடித்த பின்பு, விக்ரம் ஆண்டு பங்குனி மாதம் கடைசி நாளில், அன்றைய சூரிய உதயத்திலிருந்து 38 நாழிகை 14 விநாழிகையில் 361 டிகிரி கோண அளவிற்கு (விஷு வருடச் சூரியச் சுற்றின் முதல் டிகிரி) வந்து விடுகின்றது. ஆனால் இந்த நிகழ்வு, பங்குனி மாதக் கடைசி நாளில், பகல் பொழுது முடிந்து இரவுப் பொழுதில், சூரியன் உதயமாகி 30 நாழிகை கழிந்த பின்பு, சூரிய அஸ்தமனத்திற்குப் பின்புதான் நடக்கின்றது. புத்தாண்டு இரவில் துவங்குவதைவிட பகல் ....  ....  ....

(Dr. M. L. ராஜா – வானசாஸ்திரம் பக்கம் – 135)






Dr. M. L. ராஜா அவர்களின் வானசாஸ்திரம் கட்டுரை நிறைவு.
-------------------------------------------------------------------


மேலேயுள்ள கட்டுரை தொடர்பாக
காசிசீர் முனைவர் கி. காளைராசனின் குறிப்பு -  

இலங்கை வேந்தன் இராவணனுக்கும் மண்டோதரிக்கும் பிறந்த மகன்கள் இந்திரசித்து, அட்சயகுமாரன், திரிசிரன், அதிகாயன், பிரகஸ்தன் மற்றும் நராந்தகன் - தேவாந்தகன் ஆகியோர்.
    இராவணன் தனது சொந்த விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் அர்ப்பணிப்புள்ள மகனை பெற்றெடுக்க விரும்பினான்,   அதனால், ஒன்பது கோள்களையும் அழைத்து, மண்டோதரி குழந்தையை ஈனும் நேரத்தில்  (இந்திரஜித் பிறக்கும் நேரத்தில்) கேது தவிர்த்து மற்றபிற 8 கோள்களும்  11ஆவது ராசியில் இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டான் என்றும், ஆனாலும் 8 கோளில்களில் 8ஆவது கோளான சனிகோள் மட்டும் சற்று வக்கிரமாகி அடுத்த ராசியில் காலை வைத்துவிட்டது என்றும் ஒரு கதை உண்டு.
        இலங்கை வேந்தனின் மகன் இந்திரஜித் பிறந்த நேரத்தில்  கோள்கள் அனைத்தும் ஒரே இராசியில் இருந்துள்ளன என்ற கதைக்கும்,  தமிழர்களின் வருடப்பிறப்பிற்கும் தொடர்பு இருப்பதை அறிய முடிகிறது.



(வயாங் என்ற தோல்பாவையில் இந்திரஜித்தின் உருவம் 
ta.wikipedia.org/s/xcn )

    இதனால் மேற்கண்ட வானியல் அறிவின்படியும்,  இந்திரஜித் பிறந்தநாள் தொடர்பான கதையின்படியும், இப்போது நாம் கொண்டாடி வரும் சித்திரை -1 வருடப்பிறப்பானது இலங்கை வேந்தன் இராவணனின் மகன் இந்திரஜித் பிறந்தநாளில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது எனக் கருதலாம்.

அன்பன்
காசிசீர் முனைவர் கி. காளைராசன்
    

Tuesday, 26 September 2023

திருவிளையாடற் புராணத்தில் இவுளி குதிரை பரி புரவி

 


குதிரைக்குப் பரி புரவி இவுளி என்ற பெயர்களும் உண்டு.   திருவிளையாடற் புராணத்தில் இந்த நான்கு சொற்களுமே இடம் பெற்றுள்ளமை சிறப்பு.

 

திருவிளையாடற் புராணத்தில் இவுளி  குதிரை  பரி  புரவி என்ற சொற்கள் இடம் பெற்றுள்ள பாடல்களின் தொகுப்பு

 

117.       

எள்ளி யேறு நரை இவுளி மார்பு இற எறிந்து குண்டு அகழி இடை விழத்

தள்ளி மீளும் உருள் கல்லிருப்பு முளை தந்து வீசி உடல் சிந்தும் ஆல்

கொள்ளி வாய் அலகை வாய் திறந்து கனல் கொப்பளிப்ப உடல் குப்புறத்

துள்ளி ஆடுவன கைகள் கொட்டுவன தோள் புடைப்ப சில கூளியே.

242.       

எள் இழுது அன்னம் கன்னி இவுளி தேர் யானை இல்லம்

வெள்ளியான் பொன் பூண் ஆடை விளைவொடு பழனம் உன்னாத்

தள்ளரும் அடிமை ஆதி தானங்கள் செய்த பேறும்

வள்ளறன் காசி ஆதிப் பதிகளில் வதிந்த பேறும்.

612.       

எண் புதைத்து எழுந்த வீரர் இவுளி தேர் யானை வெள்ளம்

மண் புதைத்தன பதாகை மாலை வெண் கவிகை பீலி

விண் புதைத்தன நுண் தூளி வெயில் விடு பரிதி புத்தேள்

கண் புதைத்தன பேர் ஓதை கடல் ஒலி புதைத்தது அன்றே.

653.       

அடுகரி சிந்துரம் அப்புவார் அழல் மணி ஓடை மிலைச் சுவார்

கடு நடை இவுளி கழுத்து அணி கால் அணி கலனை திருத்துவார்

சுடர் விடு தேர்  பரி பூட்டுவார் தொடை ஒடு கவரிகள் தூக்குவார்

வடுவறு பொன்கல நவமணி மங்கல தீபம் இயற்றுவார்.

1688.    

வார் கெழு கழல்கால் நந்தி மாகாளன் பிருங்கி வென்றித்

தார் கெழு நிகும்பன் கும் போதரன் முதல் தலைவர் யாரும்

போர் கெழு கவசம் தொட்டுப் புண்டரம் நுதலில் திட்டிக்

கூர் கெழு வடிவாள் ஏந்தி குதிரைச் சேவகராய்ச் சூழ.

1796.    

கேட்டு வேந்தன் விழித்து உணர்ந்து கிளர்ந்த அற்புதன் ஆகிய

ஈட்டு சேனை அமைச்சுளார் பிறர் யாரும் இன்றி வழிக் கொளீஇ

நாட்டம் மூன்றவன் ஆம்வாள் கொடு நல் அருட் துணையாய் வழி

காட்ட அன்பு எனும் இவுளி மேல் கொடு கங்குல் வாய் வருவான் அரோ.

2786.    

மன்னர் பெருமான் எதிர் வந்த மறையோர் பெருமான் வழிபாடு

முன்னர் முறையால் செய்து ஒழுகி முன்னே நிற்ப முகம் நோக்கித்

தென்னர் பெருமான் எவ்வளவு செம் பொன்கொடுபோய் எவ்வளவு

நன்னர் இவுளி கொண்டது எனக் கேட்டான் கேட்ட நால் மறையோர்.

2874.    

அண்டம் எலாம் ஆதாரம் ஆகத் தாங்கும் ஆனந்தத்  தனிச் சோதி அண்டம் தாங்கும்

சண்ட மறைப்  பரிதனக்கு ஆதாரம் ஆகித் தரிக்க ஒரு காலத்து அசைவு இலாத

புண்ட ரிகத் தாள் அசையப் பாசம் நீக்கும் புனை கரத்தால்  பரி பூண்ட பாசம் பற்றிக்

கொண்டு அரசன் எதிர் போந்து மன்னா எங்கள் குதிரை ஏற்றம் சிறிது காண்டி என்றார்.               

2888.    

முட்டிய சமர் இடை முகத்தில் வாளினால்

வெட்டினும் எதிர்ப்பதாய்க் குரங்கு வேங்கை தோல்

பட்டிமை நரி அரி சரபம் பாய் முயல்

எட்டிய கதியின இவுளி என்பவே.

2890.    

திணி தரு கழுத்தினில் சிறந்த தெய்வதம்

அணி உளது ஆகி எண் மங்கலத்து ஆய்

அணி தரு பஞ்சகல்யாணம் உள்ளதாய்க்

குனிதரு நீரது குதிரை ஆவதே.

2898.    

இந்நிலை அலமரும் இவுளி மேல் ஒரு

மின்னிலை வேலினான் வினவத் தம் கையின்

மன்னிய கங்கணம் விடுத்து மா நகர்

தன் நிலை காட்டிய தன்மை ஒத்ததே.

2901.    

தேவரும் மனிதரும் திருந்து கூடலார்

யாவரும் உவப்பு உற இவுளி விட்டு மண்

காவலன் முன் குறீஇக் கருணை மாக் கடல்

மா வரும் திறன் எல்லாம் வகுத்துத் தோற்றும் ஆல்.

2902.    

வளம் கொள் காம் போசம் இப் பரி இம்மா மந்தரம் இந்தவாம் புரவி

விளங்கு காந்தாரம் இக் குரங்கு உளை வான்மீக மிக் கந்துகம் சிந்து

துளங்கு இல் பாஞ்சலம் இக் கன வட்டம் துளுவம்  இக் குதிரை இத்துரகம்

களங்கம் இல் இமயம் பருப்பதம் இந்த கற்கி இம் மண்டிலம் கலிங்கம்.

2903.    

ஆரியம் இந்தப் பாடலம் இந்த அச்சுவம் கூர்ச்சரம் இந்தச்

சீரிய துரங்கள் கேகயம் இந்த திறல் உறு கொய் உளை யவனம்

வேரி அம் பணை சூழ் மக்கம் இக் கொக்கு விரி பொழில் வனாயுசம் இந்தப்

போர் இயல் இவுளி பல்லவம் இந்தப் பொலம் புனை தார் நெடும் பாய் மா.

2918.    

நூறு விரல் உத்தமம் ஆம்  பரிக்கு உயர் ஈர் எட்டு வில் நூறு நீக்கிக்

கூறு விரல் மத்திமம் ஆம்  பரிக்கு அறுபத்து ஒன்று தமக் குதிரைக்கு என்ப

ஈறு இல் புகழாய் பொரு நரிப்  பரியைப் பூசனம் செய்து இறைஞ்சிப் பாசம்

மாறுவார் என மணித்தார் சதங்கை சிலம்பு அணிவித்து மதிக்கோ மாறன்.

2921.    

வாசி வாணிகர்க்குத் தென்னன் வெண் துகில் வரிசையாக

வீசினான் பாணற்கு ஏவல் செய்தவர் வெள்கு வாரோ

கூசிலா நேசர்க் காப்பான் குதிரையின் இழிந்து ஏற்றம் தத்

தூசினை இரண்டாம் கங்கை என முடி சூடி நின்றார்.

2965.    

அருகு இருக்கும் தொல் அமைச்சர் தமை நோக்கி வாதவூர் ஆளி என்னும்

கருகு இருட்டு மனக்கள்வன் நம் முடைய பொருள்  முழுதும் கவர்ந்து காட்டில்

குருதி நிணக் குடர் பிடுங்கித் தின்று திரி நரிகன் எல்லம் குதிரை ஆக்கி

வரவிடுத்தான் இவன் செய்த மாயம் இது கண்டீரோ மதி நூல் வல்லீர்.

3044.    

பாண்டியன் முதுகில் பட்டது செழியன் பன்னியர் உடம்பினில் பட்டது

ஆண் தகை அமைச்சர் மேனி மெல் பட்டது அரசு இளம் குமரர் மேல் பட்டது

ஈண்டிய கழல் கால் வீரர் மேல் பட்டது இவுளி மேல் பட்டது பருமம்

பூண்ட வெம் கரிமேல் பட்டது எவ் உயிர்க்கும் போதன் மேல் பட்ட அத் தழும்பு.

 

----------------------------------------------

 

 

'புரவி' என்ற சொல் உள்ள பக்கங்கள்

 

104.       

இரவி ஆழி ஒன்று உடைய தேர் ஈர்த்து எழும் இமையாப்

புரவி நா நிமிர்த்து அயில்வன பொங்கர் வாய்த்தளிர்கள்

கரவு இலார் அகத்து எழு புகை கற்பக நாட்டில்

பரவி வாட்டுவ பனி எனப் பங்கயப் பொய்கை.

136.       

தேர் ஒலி கலினப் பாய் மான் சிரிப்பு ஒலி புரவி பூண்ட

தார் ஒலி கருவி ஐந்தும் தழங்கு ஒலி முழங்கு கைம்மான்

பேர் ஒலி எல்லாம் ஒன்றிப் பெருகு ஒலி அன்றி என்றும்

கார் ஒலி செவி மடாது கடி மணி மாடக் கூடல்.

299.       

பொருப்பினுள் தலைமை எய்தும் பொன் நெடும்  குடுமிமேரு

தருக்களில் தலைமை சாரும் தண் நறும் தெய்வதாரு

விருப்புறு வேள்வி தம்முள் மேம் படும் புரவி மேதம்

அருள் படு தானம் தம்முள் விழுமிதாம் அன்ன தானம்.

309.       

விண் இடைப்  பரிதிப் புத்தேள் மேலை நீர் குளிக்கும்  எல்லை

அண்ணலை வணங்கில் கோடி ஆன் இனத் தானப்  பேறோம்

பண்ணவர் பரவும் பாதி இருள் வயில் பணியப்  பெற்றால்

வண்ண வெம் புரவி மேத மகம் புரி பெரும் பேறு  எய்தும்.

313.       

புழைக்கை வரை தொலைத்தானை தரிசித் தோர்  ஆயிரம் ஆம் புரவி வேள்வி

தழைத்த பெரும் பயன் பெறுவர் உருத்திர சூத்தம் அதனால் தவ வானோர்கள்

தொழற்கு அரியான் தனைத் துதித்தோர் கணத்துக்கு ஆயிரம் ராசசூய யாகம்

இழைத்த பெரும் பயன் பெறுவர் சமட்டி வடிவாகிய அவ் இலிங்கம் தன்னை.

610.       

ஒலிய வார் திரையின் அன்ன ஒழுங்கின யோக மாக்கள்

வலியகால் அடக்கிச் செல்லும் மனம் எனக் கதியில் செல்வ

கலிய நீர் ஞாலம் காப்பான் கடை உக முடிவில் தோற்றம்

பொலியும் வாம் புரவி ஒன்றே போல்வன புரவி வெள்ளம்.

621.       

கயபதி ஆதி ஆய வடபுலக் காவல் வேந்தர்

புயவலி அடங்க வென்று புழைக்கைமான் புரவி மான்தேர்

பயன் மதி நுதல் வேல் உண்கண் பாவையர் ஆய ம்ஓடு

நயமலி திறையும் கொண்டு திசையின் மேல் நாட்டாம் வைத்தாள்.

625.       

சலிக்கும் புரவித் தம் தேர் உடைத் தம் பிராட்டி

கலிக்கும் பல தூரியம் கைவரை தெய்வத் திண்தேர்

வலிக்கும்  பரி மள்ளர் வழங்கு ஒலி வாங்கி நேரே

ஒலிக்கும் படி கிட்டினள் ஊழிதோர் ஓங்கு ஓங்கல்.

980.       

புரவி வெள்ளமும் போர்க் கரி வெள்ளமும்

வரவில் கால் வலி மள்ளரின் வெள்ளமும்

விரவி ஆழிய வெள்ளமும் உள் உற

இரவி தன் வழித் தோன்றல் வந்து எய்தினான்.

1684.    

தெருட்டு அரு மறைகள் தேறா சிவபரம் சுடரோர் அன்பன்

பொருட்டு ஒரு வடிவம் கொண்டு புரவி மேல் கொண்டு போதும்

அருள் படை எழுச்சி காண்பான் போல ஆர் கலியின் மூழ்கி

இருட்டுகள் கழுவித் தூய இரவி வந்து உதயம்  செய்தான்.

1786.    

ஈசன் என முத் தொழிலும் தன் இச்சை வழி செய்து எழு புரவித்

தேசன் முதல் கோள் பணி கேட்பத் திகழ்வது  தீசத்துவம் ஆகும்

பூசல் அவுணர் புள் விலங்கு பூத மனிதர் முதல் உலகும்

வாச வாதி எண் மருந்தன் வசமாக் கொள்கை வசித்துவம் ஆம்.

1844.    

விளை மத ஊற்று மாறி வெகுளியும் செருக்கும் மாறித்

துளை உடைக் கைமான் தூங்கு நடைய வாய்ச் சாம்பிச்  சோர்ந்த

உளர் தரு ஊழிக் காலினோடும் ஆம் புரவி எய்த்துத்

தளர் நடை உடைய வாகித் தைவரும் தென்றல் போன்ற.

1906.    

மீனவன் மதுரை மூதுர் மேல் திசைக் கிடங்கில் வீழ

மான வெம் புரவி யோடும் வளவனும் வீழ்ந்தான் கூடல்

கோன் அவன் அருளால் வானோர் குரை கடல் கடையத் தோன்றும்

ஆனையின் எழுந்தான் தென்னன் கோழிவேந்து ஆழ்ந்து போனான். 

1964.    

இய மானன் இந்து ரவி எரி வான் இலஞ்சல் இல எறிகால் எனும் பகுதி இரு நால்

மயமான சுந்தரனை மனம் வாய் மெய் அன்பின் இறை வழிபாடு அடைந்து வர குணனாய்ச்

சய வேளை வென்ற வடிவினன் ஈறு இல் வென்றி பெறு சத வேள்வி இந்திரனை நிகர்வோன்

இயன் மேனி கொண்ட ஒளியினில் ஏழ் பசும் புரவி இனன் தேசு வென்ற வர குணனே.

1967.    

காலில் கடும் புரவி மேலிற் கடிந்து வரு காலக் கடம் தனில் ஓர் மறையோன்

மால் உற்று அயர்ந்து முகம் வேர்வைக் குறும் திவலை  வாரக் கிடந்து விழி துயில் வோன்

மேலக் கடும் புரவி கால் வைப்ப அந்தணனும் வீவுற்று அவிந்தனன் அறியான்

கோலில் செலும்  பரியின் மீனத்தனும் தனது கோயில்  புகுந்தனன் வளவே.

2219.    

பல் வகைக் சாதி உள்ள பன்றியில் கணங்கள் எல்லாம்

வெல் படைத் தறுங்கண் சேனை வீரராய் முன்பு செல்லச்

செல் எனத் தெழித்துச் செம் கண் தீயுக மானம் என்னும்

மல்லர் வாம் புரவி மேல் கொண்டு எழுந்தனன் வராகவீரன்.     

2363.    

அரவினன் நில அம்புயம் பொறை ஆற்று மீனவன்  ஆற்றல் கூர்

புரவியின் நிரை வையம் மேல் கொடு போந்த நேரியர்  வேந்தன் நேர்

விரவி மின்னிய முரசு இயம்ப மிடைந்து வெம்சமர் ஆடு மாறி

இரவி தன்னொடு மதியவன் பொர ஏகினான் நிகர் ஆகும் ஆல்.

2774.    

புரசை மா வயப் புரவிதேர் பொருநர் போய்ப் பொறி வண்டு

இரை செய்தார் முடி வேந்தன் முன் இறைஞ்சினார் உள்ளது

  செய்தார் அது கேட்டு ஒன்றும்  த்திலன் இருந்தான்

நிரை செய்து தார்ப்  பரி வரவினை நோக்கிய நிருபன்.  

2782.    

அந்த ஓலைப் பாசுரமும் அறையக் கேட்டு நின்று ஆங்கு  ஓர்

சிந்தை ஆனா மகிழ் சிறப்ப இருந்தான் புரவித் தேரோடும்

வந்த ஆதிச் செம் கதிரோன் மறைந்தான் அவனால்  வையம் எல்லாம்

வெந்த வேடை தணிப்பான் போல் முளைத்தான் ஆதி  வெம் கதிரோன்.

2787.    

பொன்னும் அளவோ விலை கொண்ட புரவித் தொகையும்  அனைத்து அவைதாம்

பின்னர் வரக் கண்டு அருளுதி எம் பெருமான் இதனால்  துரங்க பதி

என்னும் நாமம் பெறுதி மதி என்றார் என்ற மந்திரர்க்குத்

தென்னன் சிறந்த வரிசை வளம் செய்து விடுப்பச்   செல்கின்றார்.      

2789.    

மன்னே என்னை ஆட்கொண்ட மணியே வெள்ளி மன்று  ஆடும்

அன்னே அடியேன் வேண்டியவாறு அரசன் ஈந்த நிதி   எல்லாம்

முன்னே கொண்டு என் பணி கொண்டாய் முனியாது  அரசன் நனி மகிழ

என்னே புரவி வரும் வண்ணம் என்று வேண்டி  நின்றிடலும்.

2834.    

அண்ட கோடிகள் அனைத்தும் ஓர் பிண்டமா அடுக்கி

உண்ட நீரதா முதுகின் மேல் உப நிடக் கலனை

கொண்ட வாலிய வைதிகப் புரவி மேல் கொண்டான்

தொண்டர் பாச வன் தொடர் அவிழ்த்திட வரும் சோதி.    

2841.    

மிடைந்த மாயவாம்  பரித்திரள் மேல் திசை நோக்கி

நடந்த நாயகன் நான் மறைப் புரவியும் நாப்பண்

அடைந்ததால் எழும் தூளிகள் அண்டமும் திசையும்

படர்ந்த போம் வழி யாது என மயங்கினான்  பரிதி.             

2849.    

உத்தர திசைப் புரவி தெற்கு அடையுமாறும்

அத்தகைய தெற்கு உள வடக்கு அடையு மாறும்

அத்தகை குடக் கொடு குணக்கு அடையு மாறும்

சித்தர் விளையாடலின் வெளிப் படுதல் செய்யா. 

2869.    

என்று இரந்து இரங்கும் அன்பர் இரு செவி ஊடே ஏங்கும்

கன்று இளம் செவியின் நல் ஆன் கனை குரல் ஒசை போல

ஒன்றிய சின்னம் காளம் காகளம் ஒலிக்கும் ஓசை

வென்றி கொள் புரவிச் செந்தூள் திசை எலாம் விழுங்கக் கண்டார்.

2876.    

ஆண் தகை அவர் போல் நின்ற அடு கணத்தவரும் தம்  தம்

காண் தகு புரவி எல்லா நடத்தினர் காட்டாக் கண்டு

பாண்டியன் அவரை நோக்கி நுங்களில் பதி ஆம் தன்மை

பூண்டவர் யாவர் என்றான் இவர் என்றார் புரவி வீரர்.       

2877.    

சுட்டுதற்கு அரிய சோதி சுருதி வாம் புரவியோடு

மட்டு அவிழ் தாரினான் முன் வருதலும் கருணை நாட்டம்

பட்டுள மயங்கித் தன்னை மறந்து எழீஇப் பாண்டி வேந்தன்

தட்டு அவிழ் கமலச் செங்கை தலை மிசைக் கூப்பி  நின்றான்.

2885.    

பொருவில் சீர் இலக்கணப் புரவி ஒன்று தான்

ஒருவனது இடை வதிந்து உறையின் ஒல் என

மருவுறும் திருமகன் மல்லல் செல்வமும்

பெருகுறும் கீர்த்திகள் பல்கும் பெற்றியால்.

2893.    

அரணமும் துருக்கமும் ஆரும் தாண்டிடும்

முரண் அது ஆகி இம் முற்றிலக்கணப்

புரணம் எல்லாம் நிறை புரவி போந்தன

இரண வேலாய் வயது எட்டுச் சென்ற ஆல்.  

2895.    

வாம் பரி மறைக்கு எலாம் வரம்பு காட்டுவது

ஆம் படி கண்டவர் அறிவும் பிற்படப்

போம் படி முடுக்கினார் புரவி யாவையும்

வேம் பணி தோளினான் வியப்பும் எய்தியே.

2902.    

வளம் கொள் காம் போசம் இப் பரி இம்மா மந்தரம் இந்தவாம் புரவி

விளங்கு காந்தாரம் இக் குரங்கு உளை வான்மீக மிக்  கந்துகம் சிந்து

துளங்கு இல் பாஞ்சலம் இக் கன வட்டம் துளுவம்  இக் குதிரை இத்துரகம்

களங்கம் இல் இமயம் பருப்பதம் இந்த கற்கி இம்  மண்டிலம் கலிங்கம்.

2907.    

வெள்ளி நித்திலம் பால் சந்திரன் சங்கு வெண் பனி போல்வது வெள்ளைத்

துள்ளிய புரவி மாதுளம் போது சுகிர்ந்த செம் பஞ்சியின்   குழம்பில்

தெள்ளிய நிறுத்த செம்  பரி மாமை சிறைக் குயில் வண்டு கார் முகில் போல்

ஒள்ளிய கரிய  பரி எரி அழலான் உரோசனை நிறத்த பொன்  பரியே.

2912.    

இச் சுழி உடைய புரவி பந்தியில் யாத்து இருக்கினும்  பழுது இவை கிடக்க

அச்சம் இல்  பரிக்குப் பிராயம் நால் எட்டாம் அவத்தை  பத்தாகும் ஒவ் வொன்றில்

வைச்சது மூன்று வருடமும் இரண்டு மதியமும் பன்னிரு  நாளும்

நிச்சயித்து அளந்தார் இன்னமும் ஒரு சார் நிகழ்த்திடும்  இலக்கணம் அதுகேள்.

2913.     எவ்வண்ண பேதம் மிகுந்து இருந்தாலும் வெள்ளை  கலந்து இருந்தது ஆனால்

அவ்வண்ணப்  பரி நன்று கரும்புரவிக்கு அக டேனும்  அகன் மார்பேனும்

செவ்வண்ணம் இருக்கின் அது சயம் உளது அப்படி வெண்மை சேர்ந்தால் அந்த

மைவ் வண்ணப்  பரியின் பேர் வாருணம் ஆம் சயம் கொடுக்கும் மாற்றார் போரில்.        

2916.    

வந்தனவால் இவ்விரண்டு வகைப்  பரியும் புரவி அடிவைத்தால் ஒத்த

பந்து எனவும் நின்றாலோ மலை எனவும் ஒலித்தாலோ  பகடு சீறும்

வெம் தறுகண் அரி எனவும் வேகத்தால் காற்று எனவும்  மிதிக்கும் கூத்தால்

சந்த நடமகன் எனவும் நடக்கில் அரி களிறு எனவும்  தகையது ஆகி.

2920.    

உவநிடக் கலணை வாசி ஒன்று அலால் நின்ற மாயக்

கனவாம் புரவி எல்லாம் கொடுத்திடக் கவர்ந்து வீறு

தவனன் இல் விளங்கும் தென்னன் தன் பெரும் கோயில்  உய்ப்பப்

பவனமும் கடலும் போலக் கொண்டு போய்ப் பந்தி  சேர்த்தார்.

2923.    

அறம் தரு கோலான் வெவ்வேறு அடு பரி வயவர்  யார்க்கும்

நிறம் தரு கலிங்கம் ஈந்தான் நேர்ந்து அவை வாங்கி  அன்பில்

சிறந்து அருள் வடிவாய் வந்தார் செழு மறைப் புரவி  யோடு

மறைந்தனர் மறைந்தார் ஒக்க மாய வாம்  பரிமேல்  வந்தார்.

2925.    

ஏனை மந்திரரும் தம் தம் இல் புகப் புரவி பார்த்த

மா நகராரும் தம்தம் மனை புகப்  பரியின் பாகர்

ஆனவர் தாமும் கோயில் அடைந்து தம் விளையாட்டு  எல்லாம்

மீன் நெடும் கண்ணி னாட்கு விளம்பினர் இருந்தார்  அன்றே.

2969.    

குற்றம் ஏது அப் புரவிக்கு எனக் கேட்டார் கோமகனும்  குற்ற மேதும்

அற்றத்தால் அரை இரவில் நரியாகி அயல் நின்ற புரவி  எல்லாம்

செற்றுவார் குருதி உக நிணம் சிதறக் குடர் பிடுங்கித்தின்று  நேர்வந்து

உற்ற பேர்க்கு ஊற்றம் இழைத்து ஊர் கலங்க காட்டகத்தில்  ஓடிற்று அன்றே.

 

132.       

ஊடினார் எறி கலன்களும் அம்மனையுடன் பந்து

ஆடினார்  பரி ஆரமும் மடியினால் சிற்றில்

சாடினாரோடு வெகுண்டு கண்டதும் முத்து இறைப்ப

வாடினார்  பரி நித்தில மாலையும் குப்பை.

141.       

குரும்பை வெம் முலையில் சிந்து சாந்தமும் குழலில் சிந்தும்

அரும்பு அவிழ் மாலைத் தாது அளி நுகர்ந்து எச்சில் ஆகிப்

பொரும்  பரிக் காலில் தூளாய் போயர மாதர் மெய்யும்

இரும் குழல் காதும் சூழ்போய் இயன் மணம் விழுங்கும் அன்னோ.

169.       

மைந்தர்தம் நெருக்கில் சிந்து கலவையும் மகளிர் கொங்கைச்

சந்தமும் கூந்தல் சோர்ந்த தாமமும் சிவிறி வீச

சிந்துரப் பொடியும் நாறத் தேன் ஓடு எழுந்து செந்தூள்

அந்தர வயிறு தூர்ப்ப அடு பரி நடாத்து வார்கள்.

224.       

புதிய தாமரை மேவிய பழமறைப் புத்தேள்

விதியினால் கடுநடைப்  பரி மகம் செய்வான் வேண்டிக்

கதியை மாய்ந்தவர்க்கு உதவு தண்துறை கெழுகாசிப்

பதியின் மைந்தரோடு எய்தினான் பண்டு ஒரு வைகல்.

 

225.       

அகத்தியன் வியாதன் நாரதன் சனகன் ஆதி நான் முனிவர் கோதமன்நூல்

சிகைத் தெளி உணர்ந்த பராசரன் வாமதேவன் வான்மீகியே வசிட்டன்

சகத்து இயல் கடந்த சுகன் முதன் முனிவர் தம் மொடும் பத்து வெம் பரிமா

மகத் தொழில் முடித்து மற்று அவர்க்கு உள்ள மகிழுற வழங்கும் வழங்கா.

241.       

மற்றைய தலங்கள் தம்மில்  பரிமகம் வாச பேயம்

அற்றம் இல் சோடசாக அக்கினி இட்டு ஓமம் யார்க்கும்

முற்றரும் இராச சூய முதன் மக முடித்த பேறும்

செற்றம் இற ரிச பூர்ண முதல் இட்டி செய்த பேறும்.

309.       

விண் இடைப்  பரிதிப் புத்தேள் மேலை நீர் குளிக்கும்  எல்லை

அண்ணலை வணங்கில் கோடி ஆன் இனத் தானப்  பேறோம்

பண்ணவர் பரவும் பாதி இருள் வயில் பணியப்  பெற்றால்

வண்ண வெம் புரவி மேத மகம் புரி பெரும் பேறு  எய்தும்.

321.       

ஒருகால் அட்டாங்கமுடன் பஞ்சாங்கமுடன் நாத ஒண்  செம் கால் வெண்

குரு காலு மலர்த் தடம் சூழ் கூடல் நாயகற் பணிவோர்  கோல் ஒன்று ஓச்சி

பொருகாலின் வரு  பரித்தேர் மன்னவராய் வரும் தம்  புடைவந்து எய்தி

இருகாலும் தலைவருட எக்காலும் தமை வணங்க  இருப்பர் அன்றே.  

335.       

அற வேற்றுப்  பரி உகைத்து மெய்க்காட்டுக் கொடுத்த விளையாட்டும் காட்டுக்

சுற ஏற்றுக் கொடியரசன் தனக்கு உலவாக் கிழி  கொடுத்த தொடர்பும் நாய்கர்

நறவேற்ற மலர்க்குழலார் மனம் கவர்ந்து வளை பகர்ந்த நலனும் மாறு

மற வேல்கண் மாதரார்க்கு அட்டமா சித்தி பெற வகுத்த வாறும்.

342.       

நரிகள்  பரி ஆக்கியதும்  பரிகள் நரி ஆக்கியது நாகம்  பூண்டோன்

அரிய திரு மேனியின் மேல் அடி சுமந்து மண் சுமந்த அருளும் தென்னன்

எரி அடு வெம் சுரம் தணித்த வாறும் அமணரைக் கழுவில் இட்டவாறும்

கரியது என வன்னிகிணறு லிங்கம் கூய் வணிக மகள்  காத்த வாறும்.

380.       

மறுத்தவா வஞ்சப் போரால் வஞ்சித்து வென்று போன

கறுத்தவாள் அவுணற் கொல்வான் கடும் பரி நெடும்  தேர் நீழல்

வெறுத்த மால் யானை மள்ளர் வேலை புக்கு எழுந்து  குன்றம்

அறுத்த வானவர் கோன் அந்த அவுணர் கோ  மகனைச் சூழ்ந்தான்.     

400.       

செருவினில் உடைந்து போன செம்கண் வாள்  அவுணன் அங்கோர்

அருவரை முதுகில் கார் போல் அடைந்து வான் நாடர்  செய்த

உருகெழு பாவம் தானோர் உரு எடுத்து இருந்து  நோற்கும்

 பரிசு என நோற்றான் இன்னும்  பரிபவ விளைவு  பாரான்.

403.       

விரைந்து அரன் திசை ஓர் வாவி வீழ்ந்து ஒரு கமல  நூலுள்

கரந்தனன் மகவான் இப்பால் கற்பக நாடு புல்லென்று

இருந்ததால் இருக்கும் எல்லை இம் பரின் நகுடன்  என்போன்

அரும்  பரி மேத வேள்வி ஆற்றினான் ஆற்றும்  எல்லை.

412.       

வாம் பரி உகைத்துத் தன்னால் வழிபடு குரவன்  வானோர்

தாம்  பரிவோடும் சூழத் தராதலத்து இழிந்து  செம்பொன்

காம் பரி தோளி பங்கன் கயிலை மால் வரையைத்  தாழ்ந்து

தேம்  பரி அலங்கல் மார்பன் தென்திசை நோக்கிச்  செல்வான்.

476.       

இரவி கண் மறைந்து ஏழ்  பரி இரதமும் தானும்

உரவு நீர்க் கரும் கடலில் வீழ்ந்து ஒளித்தனன் ஆக

இரவு நீள் மயங்கு இருள் வயின் தமியனாய் மெலியும்

அரவு நீர்ச் சடை அண்ணலுக்கு அன்பினோன் அம்கண். 

511.       

அரும் தவர் இருக்கை அந்தணர் உறையுள் அரசரா  வணங்குல வணிகப்

பெரும் தெரு நல் வேளாளர் பேர் அறம் சால் பெருங்குடி ஏனைய கரிதேர்

திருந்திய  பரிமா நிலைக்களம் கழகம் தீம் சுவை ஆறு  நான்கு உண்டி

இரந்தவர்க்கு அருத்து நல் அறச் சாலை இனையன  பிறவும் நன்கு அமைத்தான்.

522.       

கண்ணுதலை முப் பொழுதும் வந்து பணி கற்றோன்

எண் இல் பல நாள் மகவு இலா வறுமை எய்திப்

பண்ணரிய தான தருமம் பலவும் ஆற்றிப்

புண்ணியம் நிரம்பு  பரி வேள்வி புரி குற்றான்.

547.       

கல்யாண மணி மௌலி வேந்தரையும் கால் யாப்புக்  கழல நீத்துக்

கொல்யானை  பரி நெடும் தேர் அரசுரிமை தொன்  முறையால் கொடுத்துப் போக்கிப்

பல்லாரும் கொள்க எனப் பண்டாரம் தலை திறந்து பசும் பொன்னாடை

வில்லாரும் மணிக் கொடும் பூண் வெறுக்கை முதல் எனைப் பலவும் வெறுப்ப வீசி.            

548.       

தூமரபின் வரு பெரு மங்கல கவிகட்கு இரு நிதியம்  துகில் பூண்பாய்மா

காமர் கரி  பரித் தடம் தேர் முதலாய பல் பொருளும்  களிப்ப நல்கிக்

கோமறுகு களிதூங்கச் சுண்ணமொடும் எண்ணெய்  விழாக் குளிப்ப நல்கி

மாமதுரா நகர் அன்றி மற்றும் உள நகர் எங்கும் மகிழ்ச்சி தூங்க.

553.       

சொல் வாய்மைக் கலைத் தெளிவு முழுமதியைப்  பிளந்து இருபால் சொருகி அன்ன

பல் வாய்மைக் கடகரி தேர்  பரி உகைக்கும் திறனும்  அழல் பகழி தூர்க்கும்

வில் வாள் வச்சிரம் முதல் பல் படைத் தொழிலும்  கண்டு இளமை விழுங்கு மூப்பில்

செல்வாய்மைத் திறல் அரசன் திருமகட்கு முடி சூட்டும்  செய்கை பூண்டான்.

601.       

காய் இரும்  பரிதிப் புத்தேள் கலி இருள் உமிப்பச் சோதி

பாய் இரும் குடை வெண் திங்கள் படர் ஒளி நீழல் செய்ய

மாயிரும் புவனம் எல்லாம் மனுமுறை உலகம் ஈன்ற

தாய் இளம் குழவி ஆகித் தனி அரசு அளிக்கும் நாளில்.

605.       

தேம்  பரி கோதை மாதின் திரு உளச் செய்தி நோக்கி

ஆம்  பரிசு உணர்ந்த வேந்தர் அமைச்சரும் பிறரும்  போந்தார்

வாம்  பரி கடாவித் திண் தேர் வலவனும் கொணர்ந்தான்  வையம்

தாம்  பரி அகல வந்தாள் ஏறினாள் சங்கம் ஆர்ப்ப.

615.       

தேர் நிரை கனலாய்ச் செல்லப்  பரிநிரை திரையாய்த் துள்ள

வார் முரசு ஒலியாய்க் கல்ல வாள் கலன் மீனாய் கொட்பத்

தார் நிரை கவரிக் காடு நுரைகளாய் ததும்ப வேழம்

கார் நிரை ஆகத் தானை கடல் வழிக் கொண்டது அன்றே.

625.       

சலிக்கும் புரவித் தம் தேர் உடைத் தம் பிராட்டி

கலிக்கும் பல தூரியம் கைவரை தெய்வத் திண்தேர்

வலிக்கும்  பரி மள்ளர் வழங்கு ஒலி வாங்கி நேரே

ஒலிக்கும் படி கிட்டினள் ஊழிதோர் ஓங்கு ஓங்கல்.

651.       

நீள் இடை மணி மறுகு எங்கணும் நெடு நடைக் காவணம் நாட்டுவார்

பாளை கொள் கமுகு சுவைக் கழை பழுக் குலைவாழை ஒழுக்குவார்

கோள் நிறை கொண்டு என வாடிகள் கோத்து  அணிவார் இசைக் கொடி நிரை

வாள் அரி எழு பரி அடிபட மத்திகை நிரை என வைப்பர் ஆல்.

653.       

அடுகரி சிந்துரம் அப்புவார் அழல் மணி ஓடை  மிலைச் சுவார்

கடு நடை இவுளி கழுத்து அணி கால் அணி கலனை  திருத்துவார்

சுடர் விடு தேர்  பரி பூட்டுவார் தொடை ஒடு கவரிகள்  தூக்குவார்

வடுவறு பொன்கல நவமணி மங்கல தீபம் இயற்றுவார்.

655.       

அஞ்சனம் வேல் விழி தீட்டுவார் ஆடவர் மார்பு இடை நாட்டுவார்

பஞ்சுகள் பாதம் இருத்துவார்  பரிபுர மீது இருத்துவார்

வஞ்சியர் தேறல் அருந்துவார் மருங்கு குறளாட வருந்துவார்

கொஞ்சிய கனிமொழி கழறுவார் குழுவொடு குரவைகள் குழறுவார்.

868.       

திகழ் தரு கரி  பரி கவரிகள் செழு மணியொடு வருமாறு

திகழ் தரு குடபுல அரசர்கள் நெறி செய்து கவர்   திருவோடு

அகழ் தரு பதிபுகு மதிகுல அரசனை அதை அலதேல்

புகழ் தரு திறை இட வரு குடபுல அரசனும் நிகரும்.

982.       

கடலும் உள்ளமும் காற்றும் பல் வண்ணமும்

உடலம் கொண்டன வந்து உறு வாம்  பரிப்

படு கடல் உள்  பரிதியில் தோன்றினான்

அடு  பரிப் பதி ஆகிய வேந்தனே.

1035.    

அரும்  பரி மகம் தொண்ணூற்று ஆறு செய்துழிச்

சுரும்பு அரி பெரும் படைத் தோன்ற தண் அறா

விரும் பரி முரன்று சூழ் வேம்பின் அம் குழைப்

பொரும்  பரி வீரன் மேல் பொறாது பொங்கினான்.

1097.    

பண்ணுக தேர்  பரி பகடு வீரர் முன்

நண்ணுக கடிது என நடத்தி யாவர் என்று

எண்ணலன் மத மலை எருத்த மேல் கொடு

கண்ணகன் கடி நகர்க் காப்பு நீங்கு முன்.

1115.    

தென்னர் ஏறு சாதகாதி செய்து வீர பாண்டியன்

என்ன நாம வினை நிரப்பி எழுத ஓணாத கலை முதல்

பன்னு கேள்வி கரிகள் தேர்கள்  பரி படை கலம்  பயின்று

அன்ன காதலான் விளங்க அகம்மகிழ்ச்சி அடையும்  நாள்.

1235.    

திண்ணிய தாய் மேல் கீழ் சூழ் பக்கம் உற ஒளிவிடுதல் செய்தால் செவ்வே

அண்ணிய உத்தமம் முதல் மூன்று ஆம் என்பர்  சாதரங்கம் அணிவோர் விச்சை

புண்ணியவான் கன்னி அறுசுவை அன்ன முதலான  புனித தானம்

பண்ணியதும்  பரிமேத யாகம் முதல் மகம் புரிந்த பயனும் சேர்வர்.  

1264.    

முந்தியவிந்திர நீலம் விச்சுவ ரூபனை மகவான் முடித்த நாளின்

நந்தி அடு பழி தவிர்ப்பான் புரியும் மகப்  பரிமகத்தின் அறிய தூமம்

உந்தி அரும்  பரி இமையா நாட்ட நுழைந்து அளி சேற்றின் ஒழுகும் பீளை

சிந்திய ஆற்றிடைப் படும் ஒன்றி இந்திர வில் நிலம்  எனத் திகழும் நீலம்.       

1494.    

கலை பயின்று  பரி நெடும் தேர் கரி பயின்று பல  கைவாள்

சிலை பயின்று வருகுமரர் திறல் நோக்கி மகிழ்  வேந்தன்

அலை பயின்ற கடலாடை நில மகளை அடல் அணி  தோள்

மலை பயின்று குளிர் தூங்க மகிழ்வித்து வாழும் நாள்.

1682.    

மீனவன் காண மேரு வில்லி தன் தமரை வன்கண்

மான வேல் மறவர் ஆக்கி வாம்  பரி வீரன் ஆகத்

தானும் ஓர் கூத்துக் கோலம் சமைந்து வந்து ஆடவிட்ட

நீல் நிற எழினி போலக் கார் இருள் வந்தது எங்கும்.

1690.    

பல்லியம் ஒலிக்கும் மார்பும் பாய்  பரி கலிக்கும்  மார்ப்பும்

சொல் ஒலி மழுங்க மள்ளர் தெழித்திடும் மார்பும்  ஒன்றிக்

கல் எனும் சும்மைத்து ஆகிக் கலந்து எழு சேனை  மேனாள்

மல்லன் மா நகர் மேல் சீறி வருகடல் போன்றது  அன்றே.

1836.    

கரி உகைத்த பாகரோடு கரி உகைத்த பாகரே

 பரி உகைத்த மறவரோடு பகை உகைத்த மறவரே

கிரி உகைத்த வலவரோடு கிரி உகைத்த வலவரே

எரி உகைத்து எதிர்ந்த கால் எனக் கலந்து மலை வரால்.

1847.    

கொல் இபம்  பரி மான் தேரின் குறு நிழல் ஒதுங்கு வாரும்

அல் இருள் வட்டத் தோல் வெண் கவிகையுள் அடங்கு வாரும்

செல் இடம் பிறிது காணார் வீரவான் சென்றோர் நின்ற

கல்லுடன் நிழல் சேர்வாரும் ஆயினார் களமர் எல்லாம். 

1892.    

கல்லு மாறு அகன்ற மார்பன் கருவியின் சிறுமை நோக்கி

மல்லு மாறாத திண்தோள் வளவர் கோன் ஒருவன் காலில்

செல்லும் ஆயிரம்  பரிக்கு ஓர் சேவகன் என் போன் தானே

வெல்லும் மாறு எண்ணி வஞ்சி வேய்ந்து கொண்டு எழுந்து போந்தான்.

1896.    

எல்லி அம் கமலச் செவ்வி எனமுகம் மலர்ந்து நாதன்

அல்லி அம் கமலச் செம் தாள் அகம் தழீஇப் புறம்பு போந்து

பல்லியம் துவைப்பத் தானைப் பரவையுள்  பரிமா ஊர்ந்து

கொல்லி அம் பொருப்பன் சேனை கடல் எதிர் குறுகினானே.

1901.    

சீறி ஆயிரம்  பரிக்கு ஓர் சேவகன் வந்தேன் என்னாக்

கூறினான் எதிர்த்தான் வெள்ளிக் குன்றவன் பத்து நூறு

மாறு இலாப்  பரிக்கு மட்டு ஓர் வயவன் நீ அன்றோ எண்ணில்

ஈறு இலாப்  பரிக்கும் ஒற்றைச் சேவகன் யானே என்றான்.

1902.    

என்ற சொல் இடி ஏறு என்ன இரு செவி துளைப்பக் கேட்டு

நின்றவன் எதிரே மின்னு நீட்டிச் செல் மேகம் போலச்

சென்று வேல் வலம் திரித்துச் செயிர்த்தனன் அதிர்த்துச் சீற

வன் திறன் நூற்றுப் பத்து வயப் பரிக்கு ஒருவன் அஞ்சா.

1903.    

யாம் இனி இந்த வேலால் இறப்பதற்கு ஐயம் இல்லை

யாம் என அகன்றான் மாவோடு ஆயிரம்  பரிக்கு ஓர் மள்ளன்

காமனை வெகுண்ட வேடன் மறைந்தனன் கங்குல் சோதி

மா மகன் அது கண்டு ஓடும் வளவனைத் துரத்திச் சென்றான்.  

907.       

பிலத்து அளவு ஆழ்ந்த கடி மலர்க் கிடங்கில் பெருந்தகை அவிந்தவன் துகில் பூண்

கலம் தரும் பேழை படை  பரி மான் தேர் கரி எலாம் கவர்ந்து தண் பொருனைத்

தலத்தவன் தங்கள் நாயகர் அணியத் தக்க தூசு அணி கலன் நல்கி

நலத்தகையவர் பேர் அருள் கடற்கு அன்பு நதி எனப் பெருகி வீற்று இருந்தான்.

1967.    

காலில் கடும் புரவி மேலிற் கடிந்து வரு காலக் கடம்

 தனில் ஓர் மறையோன்

மால் உற்று அயர்ந்து முகம் வேர்வைக் குறும் திவலை

  வாரக் கிடந்து விழி துயில் வோன்

மேலக் கடும் புரவி கால் வைப்ப அந்தணனும் வீவுற்று

 அவிந்தனன் அறியான்

கோலில் செலும்  பரியின் மீனத்தனும் தனது கோயில்

  புகுந்தனன் வளவே.

1976.    

எண்ணும் படியும் முறையால் வளைந்து ஏத்த ஐயன்

விண்ணின்று இயம்பும் அரசே  பரி மேத வேள்வி

நண்ணும் பயனோர் அடிவைப்பின் நண்ண வெம்மைப்

பண்ணும் வலத்தான் மகிழ்ந்தேம் பழி அஞ்சன் மன்னோ.

2128.    

மன்னன் தான் எண்ணிய ஆற்றால் வழங்க வழங்க மறுத்து மறுத்து

இன்னல் திரும் இசைக் கிழவன் இலங்கும் பொலம் பூண் இரு நிதியம்

பொன் அம் சிவிகை கரி  பரிமான் பொன் பட்டாடை பல பிறவும்

தன்ன என்னும் அளவு ஆற்றால் தானே கொள்ளத் தார் வேந்தன்.

2157.    

பாடி வெல்வதே அன்றி நான்  பரிபவம் உழந்து

வாடுவேன் அலேன் என்று   வழங்கலும் மதுக்கால்

ஏடு வார்குழல் அவளையும் இருக்கை உய்த்து இருந்தான்

நீடு வார் திரைப் பொருனை அம் தண் துறை நிருபன்.

2234.    

திண் தேர் மிசை நின்று அடல் நேமி திரித்து விட்டான்

கண்டு ஏன வேந்தன் விலக்கிக் கடும் காலில் பாய்ந்து

தண் தேர் உடையத் தகர்த்தான்  பரி தன்னில் பாய்ந்து

வண்டு ஏறு தாரான் விட வேலை வலம் திரித்தான்.

2235.    

சத்திப் படைமேல் விடு முன்னர்த் தறுகண் வீரன்

பத்திச் சுடர் மாமணித் தார்ப்  பரிமாவின் பின் போய்

மொத்திக் குடர் செம்புனல் சோர முடுகிக் கோட்டால்

குத்திச் செகுத்தான் பொறுத்தான் அலன் கூடல் வேந்தன்.

2361.    

சையம் ஒத்து எழு தேரினாரொடு சையம் ஒத்து எழு   தேரரும்

மையன் மைக்கரி வீர ரோடு எதிர் மையன் மைக்கரி   வீரரும்

கொய்யுளைப்  பரி வயவரோடு இகல் கொய்யுளைப்  பரி   வயவரும்

கை அழல் படை வீசி மின் விடு கார் எனப் பொருவார்   அரோ.

2368.    

மின்னல் அங்கு இலை வாளொடும் சிலை வில் இழந்தனர்  வீரரே

பன்னல் அம் புனை தேரொடும் கரி  பரி இழந்தனர்  பாகரே

தென்னவன் பொருவலி இழந்தனன் என்று செம்பியன்  வாகையும்

தன்னது என்று தருக்கு மேல் கொடு சங்கு எடுத்து  முழக்கினான்.

2376.    

பத்து அம்பு தொடுத்து நூற்றுப் பத்து மான் தேரைச்  சாய்த்தான்

பத்து அம்பு தொடுத்து நூற்று பத்து வெம் களிற்றை  மாய்த்தான்

பத்து அம்பு தொடுத்து நூற்றுப் பத்து வாம்  பரியைக்  கொன்றான்

பத்து அம்பு தொடுத்து நூற்றுப் பத்து மானுடரை   வென்றான்.

2377.    

நூறு அம்பு தொடுத்து நூற்று நூறு வெம்  பரிமேல் எய்தான்

நூறு அம்பு தொடுத்து நூற்று நூறு வெம் கரிமேல் பெய்தான்

நூறு அம்பு தொடுத்து நூற்று நூறு தேர் சிதைய விட்டான்

நூறு அம்பு தொடுத்து நூற்று நூறு சேவகரை அட்டான்.   

2378.    

ஆயிரம் வாளியான் நூறு ஆயிரம்  பரியைக் கொன்றான்

ஆயிரம் வாளியான் நூறு ஆயிரம் கரியை வென்றான்

ஆயிரம் வாளியான் நூறு ஆயிரம் தேரைச் சாய்த்தான்

ஆயிரம் வாளியான் நூறு ஆயிரம் பேரைத் தேய்த்தான். 

2395.    

வங்கிய சேகரன் கோல் வாழும் நாள் மேலோர் வைகல்

கங்கை அம் துறை சூழ் கன்னிக் கடிமதில் காசி தன்னில்

பங்கயசூ முளரிப் புத்தேள் பத்து வாம்  பரிமா வேள்வி

புங்கவர் மகிழ்ச்சி தூங்க மறை வழி போற்றிச் செய்தான்.

2455.    

மாத் தாண் மதமான் எருத்தின் மடங்கல் எனச் செல்வாரும்

பூத்தார் ஒலிவாம்  பரிமேல் புகர் மா எனப் போவாரும்

பார்த்தார்  பரிதி என வாம்  பரித்தேர் உகைத்து ஊர்வாரும்

தேத்தார் உளர் வண்டு அலம்பச் சிலம்பின் நடக்கின்றாரும்.

2456.    

நீலப் பிடிமேல் பிடிப்போன் நெறிக் கொள்வாரும் தரள

மாலைச் சிவிகை மிசை வெண் மலராள் எனச் செல்வாரும்

ஆலைக் கரும்பன் துணை போல் அணித்தார்ப்  பரியூர்வாரும்

கோலத் தடக்கை பற்றிக் கொழுநருடன் போவாரும்.

2458.    

கூந்தல் பிடியும்  பரியும் ஊர் வார் கொழுநர் தடம் தோள்

ஏந்தச் சயமாது என்னத் தழுவா இழிந்து பொழில் வாய்ப்

பூந் தொத்து அலர் பொன் கொடி தாது உகு மாறு என்னப்  புனைந்த

சாந்தக் கலவை புகப் போய் வனமங்கையர் போல்  சார்ந்தார்.

2472.    

பிணி அவிழ் கோதையாள் ஓர் பேதை தன் பதி தன்   ஊடல்

தணிய வந்து அடியில் வீழத் தன்னிழல் அனையான்  சென்னி

மணி இடைக் கண்டு கங்கை மணாளனை ஒப்பீர் எம்மைப்

பணிவது என் என்று நக்குப்  பரிவு மேல்  பரிவு செய்தாள்.

2613.    

ஆற்றல் மிகு பிரதப சூரியன் வங்கிசத்துவன் அளவு இல்  சீர்த்தி

சாற்ற அரிய இரிபும மருத்தனன் சோழ வங்கி சாந்தகன்  தான் வென்றி

மாற்ற அரிய புகழ்ச் சேர வங்கி சாந்தகன் பாண்டி வங்கி  கேசன்

தோற்றம் உறு  பரித்தேர் வங்கிச் சிரோமணி பாண்டீச் சுரன்  தான் மன்னோ.

2730.    

இன்ன செய்கையின் ஒழுகுவார் ஒரு பொழுது ஏகித்

தென்னர் தம்பிரான் அவை இடைச் சென்று எதிர் நின்றார்

அன்னபோது அடு  பரி நிரை காப்பவர் அரசன்

முன்னர் வந்து தாழ்ந்து ஒரு சிறை நின்று அது மொழிவார்.

2731.    

மறம் தவாத வேல் வலவ நம் வயப்  பரி வெள்ளத்து

இறந்தவாம்  பரி போக நின்று எஞ்சிய எல்லாம்

நிறைந்த நோயவும் நெடிது மூப்பு அடையவும் அன்றிச்

சிறந்தவாம்  பரி ஒன்று இலை தேர்ந்திடின் என்றார்.

2732.    

மன்றல் வேம்பனும் வாதவூர் வள்ளலை நோக்கி

இன்று நீர் நமது அறை திறந்து இருநிதி எடுத்துச்

சென்று வேலை அம் துறையில் வந்து இறங்குவ தெரிந்து

வென்றி வாம்  பரி கொடு வரப் போம் என்று விடுத்தான்.

2774.    

புரசை மா வயப் புரவிதேர் பொருநர் போய்ப் பொறி வண்டு

இரை செய்தார் முடி வேந்தன் முன் இறைஞ்சினார்  உள்ளது

  செய்தார் அது கேட்டு ஒன்றும்  த்திலன்  இருந்தான்

நிரை செய்து தார்ப்  பரி வரவினை நோக்கிய நிருபன்.  

2775.    

வள்ளல் வாதவூர் முனிகளும் மன்னவன்  பரிமாக்

கொள்ள நல்கிய பொருள் எலாம் குருந்தில் வந்து ஆண்ட

பிள்ளை வாண் மதிச் சடை முடிப் பெருந்துறை  மறையோர்க்கு

உள்ள ஆதரம் பெருக முன் வேண்டியாங்கு உய்ப்பார்.

2777.    

எல்லை கூறிய குளிர் மதி அடுக்கம் வந்து எய்த

வல்லல் யானையான் இன்னமும் வயப் பரி வந்தது

இல்லையால் இது என் என ஓலையும் எழுதிச்

செல்ல உய்த்தனன் வாதவூர் அமைச்சர் திருமுன்.

2780.    

என் நாயகனே பொன் நாடர் ஏறே ஏறு கொடி உயர்த்த

மன்னா தென்னா பெருந்துறை எம் மணியேவழுதி பொருள்  எல்லாம்

நின் ஆலயத்து நின் அடியார் இடத்தும் செலுத்தும் நெறி  அளித்தாய்

பின் நான் அவனுக்கு என் கொண்டு  பரிமாச் செலுத்தப்   பெறுமாறே.

2781.    

என்னா இறைஞ்சி எழுந்து ஏத்தி இரந்தார் எதிரே பெருந் துறையின்

மின்னார் சடைமேல் பிழைமுடித் தோன் விசும்பின் நிறைந்த  திருவாக் கான்

மன்னா அவற்குப்  பரி எல்லாம் வரும் என்று ஓலை விடுதி  எனச்

சொன்னான் அது கேட்டு அகத்து உவகை துளும்பி வரிந்து  சுருள் விடுத்தார்.

2783.    

அன்று துயிலும் வாதவூர் அடிகள் கனவில் சுடர் வெள்ளி

மன்று கிழவர் குருந்து அடியில் வடிவம் காட்டி எழுந்து   அருளி

வென்றி வேந்தன் மனம் கவரும் விசயப்  பரி கொண்டு   அணைகின்றேம்

இன்று நீ முன் ஏகுதி என்று அருளிச் செய்ய   எழுந்திருந்தார்.

2790.    

மெய் அன்பு உடையாய் அஞ்சலை நீ வேட்ட வண்ணம்   விண் இரவி

வையம்  பரிக்கும்  பரி அனைய வயமாக் கொண்டு   வருதும் என

ஐயன் திருவாக்கு அகல் விசும்பு ஆறு எழுந்தது ஆக   அது கேட்டுப்

பொய் அன்பு பகன்றார் சிவன் கருணை போற்றி  மனையில் போயினார்.  

2793.    

அரைசியல் அமைச்சு நீதி ஆய்ந்த நுங்கட்கு நாங்கள்  

 செய்வது எவன் நீர் செய்வது ஒன்று நன்று ஆவது  இல்லை

விரை செறி தாராற்கு இன்று வெம் பரி வருவது ஆக

வரையறை செய்தீர் நாளை என சொல் வல்லீர் ஐயா.

2797.    

ஊர் எலாம் அட்ட சோறு நம்மதே உவரி சூழ்ந்த

பார் எலாம் பாயல் துன்னல் கோவணம்  பரிக்கும் ஆடை

சீர் எலாம் சிறந்த சாந்தம் தெய்வ நீறு அணிபூண் கண்டி

நீர் எலாம் சுமந்த வேணி நிருத்தன ஆட் கொண்ட  அன்றே.

2799.    

அரிகணை தொடுத்து வேழம் அட்டவன் செழியன் வாயில்

தெரி கலை அமைச்சர் ஏற்றைச் தேசிக வடிவத்து தீண்டி

வரிகழல் சூட்டி ஆண்ட வண்ணம் இவ் வண்ணம் ஐயன்

நரிகளைப்  பரிகள் ஆக்கி நடத்திய வாறும் சொல்வாம்.

2800.    

சுற்றம் ஆம் பாச நீவித் துகள் அறுத்து இருந்தார் தம்மை

மற்றை நாள் அழைத்து வேந்தன் வந்தில போலும் இன்னம்

கொற்றவாம்  பரிகள் என்னக் குறுமதி முடித்தான் அன்பர்

இற்றை நாண் முதனான் மூன்றில் ஈண்டுவ இறைவா என்னா.

2801.    

சிந்துர நுதன் மால் யானைச் செல்வப்  பரிக்கு வேறு

மந்துறை அகன்ற ஆக வகுக்க சூழ் தண்ணீர் ஊட்ட

நந்து உறை தடங்கள் வேறு தொடுக நீள் நகரம் எங்கும்

இந்து உறை மாடம் எல்லாம் அழகு செய்திடுக என்றார்.

2803.    

வரையறை செய்த மூன்று வைகளும் கழிந்த பின்னாள்

கரையறு  பரிமா வீண்டக் கண்டிலம் இன்னம் என்னா

விரையறை வண்டார் தண்டார் வேம்பனும் விளித்து வந்த

 யறை நாவினாரை ஒறுப்பவன் ஒத்துச் சீறா.

2804.    

என் இவன்  பரிமா கொண்டது என்று அவை வருவது  என்னாத்

தன் எதிர் நின்ற வஞ்சத் தறுகணார் சிலரை நோக்கிக் கொன்னும் இக் கள்வன் தன்னைக் கொண்டு போய்   தண்டம் செய்து எம்

பொன் எலாம் மறுவு கொண்டு வாங்குமின் போமின்  என்றான்.

2814.    

போதவா நந்தச் சோதி புனித மெய்த் தொண்டர்க்கு ஆக

நாதம் ஆம் முரசம் ஆர்ப்ப நரிப்  பரி வயவர் சூழ

வேத வாம்  பரிமேல் கொண்டு வீதியில் வரவு காணும்

காதலன் போலத் தேர் மேல் கதிரவன் உதயம் செய்தான்.

2824.    

நந்தி ஆதி ஆம் பெரும் கண நாதரை விளித்தான்

வந்து யாவரும் பணிந்தனர் மன்னவற்கு இன்று

முந்தி ஆவணி மூலநாள் வந்தது முனிவு

சிந்தியா முனம்  பரி எலாம் செலுத்துவான் வேண்டும்.   

2825.    

யாவரும் புனத்து இயங்கு குறு நரி எலாம் ஈட்டித்

தாவரும்  பரி ஆக்கி அத் தாம்  பரி நடாத்தும்

சேவகம் செய்வோர் ஆகி முன் செல்லும் முன் யாமும்

பாவகம் பட வருதும் அப்படியே எனப் பணித்தான்.             

2826.    

ஏக நாயகன் ஆணை பூண்டு எழு கணத்தவரும்

நாக நாடரும் வியப்பு உற நரி எலாம் திரட்டி

வேக வாம்  பரி ஆக்கி அவ் வெம்  பரி நடாத்தும்

பாகர் ஆயினார் அவர் வரும்  பரிசு அது பகர்வாம்.

2837.    

பிறக்கும் ஆசையோர் மறந்தும் இங்கு அணுகன் மின் பிறப்பை

மறக்கும் ஆசையோர் இம் என வம்மின் அன்பரை  வேந்து

ஒறுக்கும் நோய் களை வான் என ஒருவனும் பிறவி

அறுக்க வந்தனன் என்ப போல்  பரிச் சிலம்பு அலம்ப.

2839.    

வாவி நாறிய வால் இதழ்த் தாமரை மலரோன்

நாவிநாள் உமை நாயகன் நால் மறை  பரியா

மேவினான் எனத் தான் ஒரு வெண் குடை ஆகிப்

பாவினால் என முடியின் மேல் பால் நிலாக் கால.

2841.    

மிடைந்த மாயவாம்  பரித்திரள் மேல் திசை நோக்கி

நடந்த நாயகன் நான் மறைப் புரவியும் நாப்பண்

அடைந்ததால் எழும் தூளிகள் அண்டமும் திசையும்

படர்ந்த போம் வழி யாது என மயங்கினான்  பரிதி.

2842.    

பள்ளம் ஆக்குவ திடரினைப் பள்ளத்தை மேடு

கொள்ள ஆக்குவ பார் எலாம் விலாழி கொப்பளித்து

வெள்ளம் ஆக்குவ துளியால் வெள்ளத்தை வெறிதாய்

உள்ளது ஆக்குவ புள்ளுவ உருக் கொண்ட  பரிமா.

2843.    

கொய்யுளைப்  பரி எழுந்த தூள் கோப்ப வான் கங்கை

வையை ஒத்த ஏழ் பசும்  பரி செம் பரி மாவாச்

செய்தது ஒத்தது சிந்துரம் திசைக் கய முகத்துப்

பெய்தது ஒத்தது ஆல் ஒத்தது பெரும் பகல் மாலை.

2845.    

மட்புலம் திசை வான் புதை பூழியுள் மறைந்து

கொட் புறும்  பரி சதங்கை தார் ஒலியினும் குளிர் வான்

பெட்புறும் குரல் ஒலியினும் செவியினில் பிறிது

கட் புலங்களால் கண்டிலர் வழி வரக் கண்டோர்.   

2847.    

இம்பர் உலகு உள்ள வல பண்டினைய பாய்மா

உம்பர் உலகு ஆளி  பரியே கொல் அது ஒன்றே

வெம்  பரிதி வெம்  பரிகொல் ஏழ் அவைகள் ஏழும்

பைம்  பரிகள் யா இனைய பாய்  பரிகள் என் பார்.

2851.    

முந்தை ஒரு மந்திரி பொருட்டு அரசன் முன்னா

அந்தம் இல் அனீக மொடு அரும்  பரியில் வந்து ஆங்கு

இந்தமறை மந்திரி இடும்பை தணிவிப்பான்

வந்தனர் கொல் இப்  பரி வரும் பொருநர் என்பார்.              

2856.    

இச்சையால் வடிவு எடுப்பவன் இந்திர சால

விச்சை காட்டுவான் எனப்  பரி வீரனில் உலகைப்

பிச்சது ஏற்றிட மயக்கியும் காமனில் பெரிது

நச்சு மாதரை மயக்கியும் இங்ஙனம் நடந்தான்.

2858.    

துன்னும் இன்னிய முழக்கமும் துரகத ஒலியும்

அன்ன வீரர் வாய் அரவமும் திசை செவிடு அடைப்பக்

கன்னி மா மதில் சூழ் கடி நகர்க் கரைக் காதம்

என்ன எய்தினான் மறைப்  பரிப் பாகன் அவ் எல்லை.

2861.    

ஒல்லையில் அது மன்னற்கு  யுமின் என மேரு

வில்லவன் அருள் பெற்ற வேதியர் பெருமான் போய்ச்

செல்லது தளை இட்ட திரு மகன் அருகு எய்தி

மல் அணி திணி தோளாய் வருவன  பரி என்றார்.

2863.    

ஏந்து அரி அணை நீங்கி எழுதிய தலை வாயில்

போந்து அருகு ஒளிர் மாடம் புகுந்து அரி அணை மேவிக்

காந்தளின் விரல் நல்லார் கவரிகள் புடை வீச

ஆய்ந்தவர் புறம் சூழ வரு  பரி வரவேற்பான்.

2864.    

பரன் அருள் விளையாடல் காட்டிய  பரி வெள்ளம்

வருவன சிறு காலம் தாழ்த்தலும் மதி வேந்தர்

புரவலன் மனம் வெள்கிப் பொய் இது என உள்கி

அருகு அணை உழை யோரைக் குறித்தனன் அழல்  கண்ணான்.

2871.    

பாய் இருள் படலம் கீறிப் பல் கதிர் பரப்பித் தோன்றும்

சேய் இளம்  பரிதி வானோன் அனையராய்ச் சிறந்த காட்சி

மேயின பகரோடும் விலாழியால் பரவை செய்யும்

வாயின ஆகி வந்த மாய வாம்  பரிகள் எல்லாம்.

2872.     வண்டு உழு தாரினான் தன் மரபின் மன்னவரும் முன்  நாள்

கண்டு அறியாத காட்சிக் கவனவாம்  பரியை நோக்கி

அண்டர் நாயகன் போல் நாமும் ஆயிரம் கண் பெற்றாலும்

உண்டமை அரவென்று உள்ளக் குறிப் பொடும் உவகை  பூத்தான்.

2873.    

தான் என மகிழ்ச்சி என்னத் தலை தடுமாறி வேந்தன்

மான வெம்  பரிமேல் வந்த வயவரை வியந்து மிக்கார்

ஆனவர் இவருள் யார் என்று அமைச்சரை வினவ ஐயா

யான் அது அறியேன் என்றார் யாவையும் அறிய வல்லார்.

2874.    

அண்டம் எலாம் ஆதாரம் ஆகத் தாங்கும் ஆனந்தத்  தனிச் சோதி அண்டம் தாங்கும்

சண்ட மறைப்  பரிதனக்கு ஆதாரம் ஆகித் தரிக்க ஒரு   காலத்து அசைவு இலாத

புண்ட ரிகத் தாள் அசையப் பாசம் நீக்கும் புனை கரத்தால்    பரி பூண்ட பாசம் பற்றிக்

கொண்டு அரசன் எதிர் போந்து மன்னா எங்கள் குதிரை   ஏற்றம் சிறிது காண்டி என்றார்.

2880.    

வானவர் தமக்கே அன்றி மனிதருக்கு இசையத் தக்க

வானவன் அறிஞர் இட்ட விலை வரம்பு அகன்ற நூலின்

மானம் உள்ளவனாய் நல்ல வாசிகன் உனக்கு வந்த

ஊனம் இல்  பரிமா விற்கும் வாணிகம்  ப்பக் கேட்டி.

2881.    

இன்ன ஆம்  பரிகள் என்பால் இன்று நீ கயிறு மாறி

நின்னவாக் கொள்ளும் நீரான் இன்ன ஆம்  பரியே நாளை

என்னவாய் இருந்த வேனும் எனக்கும் உன் தனக்கும் கொண்டு

மன்னவா கருமம் இல்லை  பரிவிலை வழக்கு ஈது  என்றார்.

2883.    

உரகத வாரந் தோற்றாது உயர் மறைப்  பரிமேல் வந்தார்

மரகத நிறத்து நிம்ப மாலை தாழ் மார்பினார்க்குக்

குரகதம் கயிறு மாறிக் கொடுப்பவர் பொதுமை ஆய

துரகத இலக்கணங்கள் சொல்லுவான் தொடங்கினாரே.

2884.    

காயும் வேல் மன்ன ஒரிக் கடும்  பரி அமையம் வந்தான்

ஞாயிலும் தாண்டிச் செல்லும் நாட்டமும் நுழையாச் சால

வாயிலும் நுழையும் கண்ட வெளி எலாம் வழியாச் செல்லும்

தீய வெம் பசி வந்து உற்றால் தின்னாத எனினும் தின்னும்.          

2891.    

குங்குமம் கருப்புரம் கொழும் திண் கார் அகில்

பங்க மான் மதம் எனக் கமழும் பாலதாய்ச்

சங்கமும் மேகமும் சரபமும் கொடும்

சிங்கமும் போல் ஒலி செய்வதாம்  பரி.            

2894.    

பகைத் திறம் உருக்கும் இப்  பரிகள் மன்ன நீ

உகைத் திடத் தக்க என்று ஓதி வேத நூல்

சிகைத் தனிச் சேவகர் திரும்பித் தம்மனோர்

முகத்தினை நோக்கினார் மொய்த்த வீரரும்.            

2895.    

வாம் பரி மறைக்கு எலாம் வரம்பு காட்டுவது

ஆம் படி கண்டவர் அறிவும் பிற்படப்

போம் படி முடுக்கினார் புரவி யாவையும்

வேம் பணி தோளினான் வியப்பும் எய்தியே.             

2899.    

பல் நிறம் உடையவாம்  பரியும் வீதியுள்

பின்னிவா எனப் பின்னி வட்டமாய்த்

தன் நிகர் மதுரை ஆம் தையல் கை அணி

துன்னிய பல் மணித் தொடியும் போன்றவே.             

2900.    

இந்திய நுதலினார் இடித்த பொன் சுணம்

சிந்திய மருகிடை நடக்கும் திண்  பரிப்

பந்தியின் எழும் துள் சுவணப் பாரின் மா

உந்திய எழுந்த பொன் பூழி ஒத்ததே.  

2902.    

வளம் கொள் காம் போசம் இப் பரி இம்மா மந்தரம் இந்தவாம் புரவி

விளங்கு காந்தாரம் இக் குரங்கு உளை வான்மீக மிக்  கந்துகம் சிந்து

துளங்கு இல் பாஞ்சலம் இக் கன வட்டம் துளுவம்  இக் குதிரை இத்துரகம்

களங்கம் இல் இமயம் பருப்பதம் இந்த கற்கி இம்  மண்டிலம் கலிங்கம்.

2905.    

விரி பொழில் சாலி வேய் மிகு கிள்ளை வேறு தீவந்தரம்  இந்தக்

துரகதம் இந்தக் குரகதம் கொண்டல் சூழ் குருக்   கேத்திரம் இன்ன

பரவு பல் வேறு தேயமும் உள்ள  பரி எலாம் இவன் தரு  பொருளின்

விரவிய நசையால் கொணர்ந்து இவர் வந்தார் வேந்த  கேள் இந்த வாம்  பரியுள்.

2906.    

வெண்ணிறம் சிவப்பு பொன் நிறம் கறுப்பு வேறு அற  விரவிய நான்கு

வண்ணம் உள்ளனவும் வேறு வேறு ஆய மரபு மை   வண்ணமும் வந்த

எண்ணிய இவற்றின் சிறப்பு இலக்கணத்தை இயம்புதும்  கேள் என இகல் காய்

அண்ணல் அம் களிற்றார் அரு மறை  பரிமேல் அழகியார்   அடைவு உற விரிப்பார்.           

2907.    

வெள்ளி நித்திலம் பால் சந்திரன் சங்கு வெண் பனி  போல்வது வெள்ளைத்

துள்ளிய புரவி மாதுளம் போது சுகிர்ந்த செம் பஞ்சியின்   குழம்பில்

தெள்ளிய நிறுத்த செம்  பரி மாமை சிறைக் குயில் வண்டு   கார் முகில் போல்

ஒள்ளிய கரிய  பரி எரி அழலான் உரோசனை நிறத்த   பொன்  பரியே.

2911.    

கள நடு இரட்டைச் சுழி உடைப்  பரிதன் கருத்தினுக்கு  அற இடி காட்டும்

அளவறு துன்ப மரணம் உண்டாக்கும் அவை  கணைக்காலில் உள ஆகில்

உள பயம் துன்பம் நிகள பந்தனம் மேல் உதடு முன்   காலடி கபோலம்

வளர் முழந்தாள் இந் நான்கினும் சுழிகள் மன்னினும்   தலைவனை வதைக்கும்.

2912.     இச் சுழி உடைய புரவி பந்தியில் யாத்து இருக்கினும்  பழுது இவை கிடக்க

அச்சம் இல்  பரிக்குப் பிராயம் நால் எட்டாம் அவத்தை  பத்தாகும் ஒவ்  வொன்றில்

வைச்சது மூன்று வருடமும் இரண்டு மதியமும் பன்னிரு  நாளும்

நிச்சயித்து அளந்தார் இன்னமும் ஒரு சார் நிகழ்த்திடும்  இலக்கணம் அதுகேள்.

2913.    

எவ்வண்ண பேதம் மிகுந்து இருந்தாலும் வெள்ளை கலந்து இருந்தது ஆனால்

அவ்வண்ணப்  பரி நன்று கரும்புரவிக்கு அக டேனும்   அகன் மார்பேனும்

செவ்வண்ணம் இருக்கின் அது சயம் உளது அப்படி   வெண்மை சேர்ந்தால் அந்த

மைவ் வண்ணப்  பரியின் பேர் வாருணம் ஆம் சயம்   கொடுக்கும் மாற்றார் போரில்.      

2915.    

நல் புறம் வான் முக மூன்றும் வெளுத்த  பரி வென்றி   தரும் நாபி தொட்டு

முன் புறம் எலாம்  பரிதி எனச் சிவந்து மதி எனப் பின்   முழுதும் வெள்கும்

பொற்புடைய வயப்  பரிக்குப் பகல் விசய மதி என முற்   புறம்பு வெள்கிப்

பின் புறம் எல்லாம் கதிர் போல் சிவந்த  பரிக்கு இரா   விசயம் பெருகும் அன்றே.

2916.    

வந்தனவால் இவ்விரண்டு வகைப்  பரியும் புரவி  அடிவைத்தால் ஒத்த

பந்து எனவும் நின்றாலோ மலை எனவும் ஒலித்தாலோ  பகடு சீறும்

வெம் தறுகண் அரி எனவும் வேகத்தால் காற்று எனவும்  மிதிக்கும் கூத்தால்

சந்த நடமகன் எனவும் நடக்கில் அரி களிறு எனவும்  தகையது ஆகி.

2918.    

நூறு விரல் உத்தமம் ஆம்  பரிக்கு உயர் ஈர் எட்டு வில்  நூறு நீக்கிக்

கூறு விரல் மத்திமம் ஆம்  பரிக்கு அறுபத்து ஒன்று தமக்  குதிரைக்கு என்ப

ஈறு இல் புகழாய் பொரு நரிப்  பரியைப் பூசனம் செய்து  இறைஞ்சிப் பாசம்

மாறுவார் என மணித்தார் சதங்கை சிலம்பு அணிவித்து  மதிக்கோ மாறன்.

2919.    

கொத்து அவிழ் தார் நறும் சாந்தம் கொண்டு செழும் புகை   தீபம் கொடுத்துப் பூசை

பத்திமையால் செய்து இறைஞ்சி எதிர் நிற்ப ஆலவாய்ப்   பரனை நோக்கிக்

கைத்தலம் தன் சிரம் முகிழ்த்து வாழி எனப்  பரி   கொடுத்தான் கயிறு மாறி

முத் தொழிலின் மூவராய் மூவர்க்கும் தெரியாத முக்  கண் மூர்த்தி.

2923.    

அறம் தரு கோலான் வெவ்வேறு அடு பரி வயவர்  யார்க்கும்

நிறம் தரு கலிங்கம் ஈந்தான் நேர்ந்து அவை வாங்கி  அன்பில்

சிறந்து அருள் வடிவாய் வந்தார் செழு மறைப் புரவி  யோடு

மறைந்தனர் மறைந்தார் ஒக்க மாய வாம்  பரிமேல்  வந்தார்.

2925.    

ஏனை மந்திரரும் தம் தம் இல் புகப் புரவி பார்த்த

மா நகராரும் தம்தம் மனை புகப்  பரியின் பாகர்

ஆனவர் தாமும் கோயில் அடைந்து தம் விளையாட்டு எல்லாம்

மீன் நெடும் கண்ணி னாட்கு விளம்பினர் இருந்தார்  அன்றே.   

2926      

ஞான நாயகன் அணையா நரி  பரி வெள்ளம்

ஆன வாரு   செய்து மீண்டு அப்  பரி நரியாய்ப்

போன வாறு கண்டு அமைச்சரைப் புரவலன் கறுப்ப

வான ஆறு போல் வைகை நீர் வந்தவாறு  ப்பாம்.

2930.    

நல்ல வாம் பரி செலுத்தினன் நமக்கு இனிக் கவலை

இல்ல வாம்படி ஆக்கினன் இன்னம் ஒன்று உலகை

வெல்ல வாம் படி தன் அருள் விளைக்கும் ஆனந்தம்

புல்லவாம் பதி எமைத் தவம் பூட்டுவான் வேண்டும்.

2932.    

நாளையும் திரு ஆலவாய் நாயகன் தமரை

ஆள மண் சுமந்து அருளும் என்று அதனையும் காண்பான்

ஊளை வெம் பரிப் பூழிப் போர்ப்பு உண்ட மெய் கழுவி

மீள வேண்டுவான் போல் கடல் குளித்தனன் வெய்யோன்.

2933.    

ஈசன் ஆடல் வெம்  பரிக் குழாத்து எழுந்த செம் தூளான்

மாசு மூழ்கிய அண்டத்தை வான் நிலா என்னும்

தூசினால் அறத் துடைப் பவன் என மணித் தொகுதி

வீசும் ஆழியுள் முளைத்தனன் வெண் மதிக் கடவுள்.

2935.    

கள் ஒழுக்கு தார் மீனவன் கடி மனை புகுந்த

புள்ளுவ அப்  பரி நள் இருள் போது வந்து எய்தப்

பிள்ளை ஆகிய மதி முடிப் பிரான் விளை யாட்டால்

உள்ளவாறு தம் வடிவு எடுத்து ஒன்றொடு ஒன்று சாவும்.  

2937.    

வாம்  பரித்திரள் ஆகி நாம் மனித்தரைச் சுமந்து

தாம்பு சங்கிலி தொடக்கு உண்டு மத்திகை தாக்க

ஏம்பல் உற்றனம் பகல் எலாம் இப்பொழுது ஈண்டு

நாம் படைத்தன நம் உரு நம் விதி வலத்தால்.            

2943.    

ஊளை ஓசை கேட்டு இம் என உறக்கம் நீத்து எழுந்து

காளை வீரராம் மந்துரை காப்பவர் நெரு நல்

ஆளி போல் வரு  பரி எலாம் நரிகளாய் மற்றை

ஒளி மா நிரை குடர் பறித்து உண்பன கண்டார்.

2949.    

கரியின் ஓசையும் பல்லிய ஓசையும் கடும் தேர்ப்

 பரியின் ஓசையும் இன் தமிழ் ஓசையும் பாணர்

வரியின் ஓசையும் நிரம்பிய மணி நகர் எங்கும்

நரியின் ஓசையாய்க் கிடந்தது விழித்தது நகரம்.

2960.    

கவன வெம் பரி செலுத்தி மேல் கவலை தீர்ந்து உள்ளே

சிவம் உணர்ந்தவர் சிந்தை போல் மலர்ந்த செம் கமலம்

உவமையில் பரம் பொருள் உணர்ந்து   இறந்து இருந்தோர்

மவுன வாய் என அடங்கின மலர்ந்த பைம் குமுதம்.

2962.    

காற்றினும் கடும் கதிய வாய்க் கண்களுக்கு இனிதாய்

நேற்று வந்த வாம்  பரி எலாம் நின்றவாம்  பரிக்குக்

கூற்று எனும் படி நரிகளாய் நகர் எலாம் குழுமி

ஊற்றம் செய்து போய் காட்டகத்து ஓடிய என்றார்.

2964.    

அமுதம் உண்டவன் நஞ்சம் உண்டால் என முதல் நாள்

சமர வெம் பரி மகிழ்ச்சியுள் ஆழ்ந்தவன் அவையே

திமிர வெம் குறு நரிகளாய்ச் சென்றவே என்னா

அமரர் அஞ்சிய ஆணையான் ஆர் அஞர் ஆழ்ந்தான்.

2967.    

அவ் வேலை மனக்கு இனிய  பரி செலுத்தி அரச காரியம்  நன்று ஆக்கி

வெவ் வேலை மனக் கவலை விடுத்தனம் என்று அக  மகிழ்ச்சி விளைவு கூர

மைவ் வேலை விடம் உண்ட வானவனை நினைந்து அறிவு  மயமாம் இன்ப

மெய் வேலை இடை வீழ்ந்தார் விளைந்தது அறியார்  வந்தார் வேந்தன் மாடே.

2968.    

வந்தவரைச் சிவந்த விழிப் பொறி சிதறக் கடுகடுத்து  மறவோன் நோக்கி

அந்தம் இலாப் பொருள் கொடுபோய் நல்ல வயப்  பரி  கொடு வந்த அழகு இதாகத்

தந்தனை அன்றோ அரச கருமம் முடித்து இசை நிறுத்த  தக்கோர் நின்போல்

எந்த உலகு உளரேயோ என வெகுண்டான் அது   கேட்ட ஈசன் தொண்டர்.

2974.    

ஐயவோ என்னுடைய அன்பவோ அன்பர்க்கு

மெய்யவோ மெய்யில் வினையேன் தலை வைத்த

கையவோ செய்ய கழல் காலவோ காலனைக் காய்

செய்யவோ வேதப்  பரியேறும் சேவகவோ.

2987.    

நேற்றும்  பரி நரியாயின நெடு மாநகர் எங்கும்

ஊற்றம் செய்த என்பார்களும் ஒரு காலமும் இந்த

ஆற்றின் பெருக்கு இலை என்று அயர்வாரும் கடல்  அரசன்

சீற்றம் கொடு முன்போல்வாரும் செயலே கொல் என்   பாரும்.

2992.    

பண் சுமந்த மறை நாடரும் பொருள் பதம் சுமந்த  முடியார் மனம்

புண் சுமந்த துயர் தீர வந்த  பரி நரிகளாய் அடவி  போன பின்

விண் சுமந்த சுர நதி எனப் பெருகு வித்த வைகை  இது  விடையவன்

மண் சுமந்து திரு மேனிமேல் அடி வடுச் சுமந்த கதை  ஓதுவாம்.

2996.    

கிட்டுவார்  பரி நிறுத்துவார் அரவு உருட்டுவார் அடி  கிடத்துவார்

இட்டுவார் தழை நிரப்பு வார் விளி எழுப்புவார் பறை  இரட்டுவார்

வெட்டுவார் மணல் எடுத்துவார் செல வெருட்டுவார் கடிது  துடும் எனக்

கொட்டுவார் கரை பரப்புவார் உவகை கூருவார் குரவை  குழறுவார்.

3054.    

அனையனை மறுக்கம் செய்தாய் அரும் பிணப் புலவுத்  தீவாய்

வன நரித் திரளை ஈட்டி வாம் பரி ஆக்கித் தந்தேம்

கனை இருள் கங்குல் போதில் கழிந்தன பின்னும் தண்ட

வினையர் பால் விடுத்துத் துன்பம் விளைத்தனை அது  பொறாதேம்.

3077.    

நரி யாவும்  பரி ஆக்கி நடத்தியும் அம்பரம் அன்றித்

தரியா யான் தரு துகிலைத் திரு முடிமேல் தரித்து  மறைக்கு

அரியாய் நீ என் பாசம் அறுக்க வரும் திரு மேனி

தெரியாதே  பரி ஆசை திளைத்து இறுமாந்து இருந்தேனே.

3139.    

தேம் படு குமுதச் செவ்வாய் சிர புரச் செல்வர் முன்னம்

போம்  பரி கனத்தார் தம்மில் பொன் நெடும் சின்னம் ஆர்ப்போர்

தாம் பர சமய சிங்கம் சமண் இருள் கிழியப் பானு

ஆம் படி வந்தான் என்று என்று ஆர்த்து எழும் ஒசை  கேளா.

--------------------------------------------------


நன்றி = பாடல்கள் தொகுப்பு உதவி - தமிழ் இணையப் பல்கலைக்கழகம்

நன்றி = படம் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது.  அதைப் பதிவு செய்தவருக்கு நன்றி..