சங்க இலக்கியங்களிலும், காப்பியத்திலும் வரும் இராமன் கதைக் காட்சிகளை கீழே நோக்குக.
(அகநானூறு:70)
கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென,
இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
குறுங் கண் அவ் வலைப் பயம் பாராட்டி,
கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன்
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே
அலர் வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்ற,
பலரும் ஆங்கு அறிந்தனர்மன்னே; இனியே
வதுவை கூடிய பின்றை, புதுவது
பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்
கானல் அம் பெருந் துறைக் கவினி மா நீர்ப்
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்
வென் வேற் கவுரியர் தொல் முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை,
வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த
பல் வீழ் ஆலம் போல,
ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.
(தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.)
- மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார்
(நன்றி - https://www.tamilvu.org/library)
--------------
(புறநானூறு: 378)
.இலம்பா(டு) இழந்தஎன் இரும்பேர் ஒக்கல்
விரல்செறி மரபின செவித்தொடக் குநரும்செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்
அரைக்(கு)அமை மரபின மிடற்றுயாக் குநரும்
மிடற்(று)அமை மரபின அரைக்குயாக் குநரும்
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாஅங்(கு)
அறாஅ அருநகை இனிதுபெற்(று) இகுமே"
---------------------------------------
(மதுரைக் காண்டம்: ஊர் காண் காதை வரிகள் 45 - 49)
தாதை ஏவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துய ருழந்தோன்
வேத முதல்வற் பயந்தோ னென்பது
நீயறிந் திலையோ நெடுமொழி யன்றோ
-------------------------------------------
(மதுரைக் காண்டம் - புறஞ்சேரியிறுத்த காதை - வரிகள் 63- 65)
பெருமகன் ஏவ லல்ல தியாங்கணும்
அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
-----------------------------------