மச்சவதாரம் கிருதமால் வையை மதுரை கூடல் பாண்டியன்
Saturday, 23 April 2022
மணலூர் கூடல் முடத்திருமாறன் பற்றிய தகவல்
செந்தமிழ் பக்கம் 246
ஆகவே ஒவ்வொரு மன்னனது ‘சராசரி’ ஆட்சிக்காலம் சற்றேறக் குறைய முப்பத்தெட்டு ஆண்டுகளாகும். கடைச் சங்க காலத்துப் பாண்டியர் நாற்பத்தொன்பதின்மருள் சிலரது பெயர்களே நற்றினை, குறுந்தொகை, பரிபாடல், அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களால் அறியப்படுகின்றன. அவர்களுள் பாண்டியன் முடத்திருமாறன் என்பவனே மிகப் பழமை வாய்ந்தவன் என்பது களவியலுரையால் பெறப்படுகின்றது. எனவே அவன் வரலாற்றை முதலில் ஆராய்வோம்.
பாண்டியன் முடித்திருமாறன் -
குமரிநாடு கடல்கோளால் அழிந்த பின்னர், குமரியாற்றிற்கும் தாம்பிரபருணியாற்றிற்கும் இடையிலுள்ள நிலப்பரப்பில் தங்கியிருந்த தமிழ்மக்களுக்குத் தலைநகராயிருந்த கபாடபுரத்தில் வீற்றிருந்து அரசாண்ட பாண்டிய அரசர் ஐம்பத்தொன்பதின்மருள் இவ்வேந்தனே இறுதியில் வாழ்ந்தவன் ஆவன். ஆகவே, இவன் இடைச்சங்கத்தின் இறுதியில் இருந்தவன் ஆதல் வேண்டும்.
இவன் காலத்தில் நிகழ்ந்த ஒரு கடல்கோளால் பாண்டியநாட்டின் பெரும்பகுதியும் அதன் தலைநகராகிய கபாடபுரமும் அழிந்தொழிந்தன.(இறையனார் அகப்பொருளுரை - பக்கம் 5)
இக்கடல்கோளினால் எண்ணிறந்த தமிழ்நூல்கள் இறந்தன. இச்செய்தியை,
“ஏரண முருவம் யோக மிசைகணக் கிரதஞ் சாலந்
தாரண மறமே சந்தந் தம்பநீர் நிலமு லோகம்
மாரணம் பொருளென் றின்ன மானநூல் யாவும் வாரி
வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள”
என்னும் பழைய பாடலும் உணர்த்துதல் காண்க. தமிழ்மக்கள் செய்த தவப்பயனால் எஞ்சிநின்ற நூல் தொல்காப்பியம் ஒன்றேயாகும். இக் கடல்கோளுக்குத் தப்பியுய்ந்த பாண்டியன் முடத்திருமாறனும் செந்தமிழ்ப் புலவர்களும் சிறிது வடக்கே சென்று மணலூர் என்னும் ஒரு சிறு நகரத்தில் தங்கினார்கள். இவர்கள் சிலகாலம் அந்நகரில் தங்கியிருந்து, பின்னர், மதுரை என்று தற்காலத்து வழங்கும் கூடன்மா நகரையடைந்தனர். இப்பாண்டியனும் அந்நகரை வளம்படுத்தித் தனக்குரிய தலைநகராகக் கொண்டு கடைச் சங்கத்தை அங்கு நிறுவினான்(இறையனார் அகப்பொருளுரை - பக்கம் 5)
பல நல்லிசைப் புலவர்கள் தமிழாராய்ச்சி செய்யத் தொடங்கிப் பற்பல அரிய செந்தமிழ் நூல்கள் இயற்றுவாராயினர். இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழும் உயர்நிலை எய்தின. எனவே, கடைச் சங்கத்தை ........
-----------------------------------------------
நன்றி - இத் தகவலை வழங்கியவர்
சிந்துவெளி முத்திரைகள் தமிழ் எழுத்துக்களே என நிறுவி வரும்,
திருச்சிராப்பள்ளி ஐயா “போஸ்” அவர்கள்
Wednesday, 11 March 2020
அகரம் தமிழரின் சிகரம்
திருப்புவனம்: கீழடி அருகே அகரம் கிராமத்தில் அகழாய்வு பணிகள் இன்று துவங்க உள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு பணி ஜன. 19ம் தேதி முதல் நடந்து வருகிறது. கீழடியை தொடர்ந்து கொந்தகை, அகரம், மணலூர் பகுதிகளிலும் அகழாய்வு நடக்கும் என தமிழக அரசு அறிவித்தது. கொந்தகையில் தற்போது மயானத்திற்கு அருகே அகழாய்வுப்பணிகள் நடந்து வருகிறது. மணலூர் அருகே கழுகேர்கடை ஊராட்சியை சேர்ந்த அகரம் கிராமத்தில் அகழாய்வுக்கான இடத்தை தொல்லியல் அலுவலர்கள் சென்று பார்வையிட்டனர்.
அகரம் துவக்கப்பள்ளி அருகே உள்ள ஊருணிக்கு எதிரே அக்ரஹாரம் என்றும், கோட்டை மேடு என்றும் கிராமத்தினரால் அழைக்கப்படும் அரசுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் ஆய்வு செய்ய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் நேற்று கிராமத்தினர் கழுகேர்கடை ஊராட்சி தலைவர் கோட்டைச்சாமி தலைமையில் பூமி பூஜை நடத்தி ஆயத்தப்பணிகளை துவக்கினர். இன்று முதல் அகழாய்வுப்பணிகள் துவங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=570636
---------------------------------------------------
அகரம் தமிழரது சிகரம் - பாண்டியர் சந்திரவம்சத்தவர். எனவே சிவலிங்கத்திற்கு அஃனி மூலையிலே இவர்களது அரண்மனையை அமைத்துக் கொள்வர். இந்தவிதியின் படி, மேலேயுள்ள படத்தில் குறிப்பிட்டுள்ள புதையுண்டுள்ள கோயிலுக்குத் தென்கிழக்கே சந்திர மூலையிலே (அஃனி மூலையிலே) பாண்டியர்களது அரண்மனையே புதையுண்டு இருக்கும். மிகவும் சரியாகச் சொல்வதென்றால், புதையுண்டுள்ள கோயிலுக்கு அஃனிமூலையில் அகரம் என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்திற்கு அடியிலே சங்க காலப் பாண்டியர்களது அரண்மனை இருக்கும்.
கோட்டைக் கருப்பணசாமி (https://goo.gl/maps/mehVBn8rudFYgDzM6)
அகரத்தில் உள்ள கோட்டைக்கருப்பணசாமியின் இருப்பிடத்தின் கீழே பண்டைய பாண்டியரின் கோட்டையும் கொத்தலமும் புடையுண்டிருக்க வேண்டும்.
கூடல் மாநகரில் பாண்டியரின் அரண்மனை இருந்த இடமே அகரம் என்பது எனது கருத்தும் நம்பிக்கையும் ஆகும். தொல்லியல் ஆய்வுகள் சிறக்கட்டும்.
https://thiruvillayadalpuranam-kalairajan.blogspot.com/2019/09/blog-post_25.html
தொல்தமிழர் போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்,
கூடல்மாநகர் போற்றவோம்,
அகரம் போற்றுவோம்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
Monday, 30 December 2019
கீழடி - கூடல் என்ற கைவிடப்பட்ட நகரம்
மதுரைக்குத் தென்கிழக்கே சுமார் 12கி.மீ. தொலைவில், சிவகங்கை மாவட்டம் கீழடி என்ற ஊருக்கு அருகே உள்ள பள்ளிச்சந்தை கொந்தகை மணலூர் அகரம் என்ற கிராமங்களில் தொல்லியல்துறையினர் அகழாய்வு செய்து வருகின்றனர். இங்கே பூமிக்குள் புதைந்துள்ள மிகவும் தொன்மையான 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகர் ஒன்றைக் கண்டறிந்து வெளிக் கொணர்ந்துள்ளனர். சிறப்பாகச் செயல்பட்டு தமிழரின் தொன்மையான நகரைக் கண்டறிந்து உலகறியச் செய்த மத்திய மற்றும் மாநிலத் தொல்லியல் துறையினரைப் போற்றுவோம், அவர்களுக்கு நமது நன்றிகைளைத் தெரிவித்துக் கொள்வோம்.
மணலூர்க் கண்மாய்க்கு அருகே உள்ள தென்னந்தோப்பில் முதன்முதலாகத் தொல்லியல் ஆய்வைத் திரு அமர்நாத் அவர்கள் தொடங்கி வைத்தார்.
மணவூரும் மதுரையும் -
மணவூரைப் பற்றிய குறிப்புகள் திருவிளையாடற் புராணத்தில் கீழ்க்கண்ட மூன்று பாடல்களில் உள்ளன.
1) திருவிளையாடல் புராணம் பாடல் எண் 473
இன் நரம்பு உளர் ஏழிசை எழான் மிடற்று அளிகள்
கின்னரம் பயில் கடம்பமா வனத்தினின் கீழ் சார்த்
தென்னகர் சேகரன் எனும் குலசேகரன் உலக
மன்னர் சேகரன் அரசு செய்து இருப்பது மணவூர்.
(பொருள் - இனிய நரம்புகளைத் தடவுதலினால் உண்டாகின்ற ஏழிசை போன்று, கண்டத்திலிருந்து உண்டாகும் ஓசையினையுடைய வண்டுகள், கின்னரம் என்ற இசைபாடுகின்ற பறவையும், பெரிய கடம்பவனத்தின் கிழக்குப் பகுதியைச் சார்ந்த இடத்தில், உலகின்கண் உள்ள மன்னர்களுக்கு முடிபோல்பவனும், பாண்டிய மரபிற்கு மகுடம் என்று சொல்லப் படுபவனுமாகிய, குலசேகரபாண்டியன் ஆட்சி புரிந்து இருப்பதற்கு இடமாக உள்ளது மணவூராகும்.)
தீம் தண் புனல் சூழ் வடபுலத்து மணவூர் என்னும் திருநகர்க்கு
வேந்தன் பரிதி திரு மரபின் விளங்கும் சோம சேகரன் என்று
ஆய்ந்த கேள்வி அவனிடத்துத் திருமாது என்ன அவதரித்த
காந்திமதியை மணம் பேச இருந்தார் அற்றைக் கனை இருள்வாய்.
(பொருள் - இனிய தண்ணீரால் சூழப்பட்ட வடக்கே (வடதிசையில்) உள்ள மணவூர் (மணம் -- திருமணம் -- கல்யாணம்) என்னும் அழகிய நகரத்துக்கு, சூரியனது திருக் குலத்தில் வந்து விளங்கா நின்ற சோமசேகரன் அரசனாவான் என்று கருதி, ஆராய்ந்த கேள்வியினையுடைய அம்மன்னனிடத்து, திருமகளைப் போல அவதரித்திருந்த காந்திமதியை மணம் பேசக் கருதியிருந்தார்கள்; அன்று செறிந்த இருளை யுடைய நள்ளிரவில் .....)
நென்னல் எல்லை மணம் பேச நினைந்தவாறே அமைச்சர் மதி
மன்னர் பெருமான் தமரோடு மணவூர் நோக்கி வழி வருவார்
அன்ன வேந்தன் தனைக் கண்டார் அடல் வேல் குமரன் அனையான் எம்
தென்னர் பெருமான் குமரனுக்கு உன் திருவைத் தருதி என அனையான்.
(பொருள் - நேற்றைப் பொழுதில் மணவினை பேசுதற்கு நினைந்த வண்ணமே, சந்திர மரபில் வந்த அரசர் பெருமானாகிய சுந்தரபாண்டியன் தன்னுடைய அமைச்சரோடும் சுற்றத்தாரோடும், மணவூரை நோக்கி வழி வருகின்றார்கள். மணவூருக்கு மன்னனான சோமசேகரனைக் கண்டார். வெற்றி பொருந்திய வேலை யேந்திய முருகக் கடவுளை ஒத்தவனாகிய, எங்களது பாண்டிய மன்னர் பெருமானின் திருப்புதல்வனாகிய உக்கிரவழுதிக்கு, உன் புதல்வியைத் தருவாய் என்று கூற, அம் மன்னன் .....)
மணவூரைச் சூரியகுலத்தில் தோன்றிய சோமசேகரன் என்ற மன்னன் ஆண்டு வருகிறான். இவனது மகளாகிய காந்திமதியை உக்கிரப் பெருவழுதிக்குப் பெண்கேட்டுத் திருமணம் செய்து வைத்தனர் என்ற செய்தியை இந்தப் பாடல்களின் வழியா அறிய முடிகிறது.
மேலும் இங்கே குறிப்பிடப்படும் மணவூரானது பாண்டியர்களது தலைநகருக்கு வடக்கே உள்ளது என்ற செய்தியையும் அறிய முடிகிறது.
இந்த ஊரை மணலூர் என்று பெரும்பற்றப் புலியூர் நம்பியின் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது. இந்நாளிலும் இந்த ஊரானது மணலூர் என்றே அழைக்கப்படுகிறது. மணலுரைப் பெருமணலூர் என்றும் மணவூர்புரம் என்றும் மகாபாரதம் குறிப்பிடுகிறது. இந்தப் பாடல்களின் வழியாகப் பாண்டியர் தலைநருக்கு வடக்கே மணலூர் என்ற மணவூர் இருந்துள்ளதை அறிய முடிகிறது.
அன்பன்
கி.காளைராசன்
Wednesday, 4 December 2019
கீழடி - புதையுண்டுள்ள நகரம் எப்போது அழிந்தது? எப்படி அழிந்தது?
புதையுண்டுள்ள இந்த நகரத்தின் ஈமக்காடானது கொந்தகை அருகே சாலையின் ஓரத்தில் உள்ளது என்று திரு அமர்நாத் அவர்கள் குறிப்பிடுகிறார். இங்கே ஏராளமான முதுமக்கள்தாழிகள் உள்ளன. இது புதையுண்டுள்ள நகரம் உயிருடன் இருந்தபோது இங்கு வாழ்ந்த மக்களின் ஈமக்காடு ஆகும். இந்த ஈமக்காட்டில் வரும் ஆண்டில் (2020) தொல்லியல் ஆய்வுகள் நடைபெறவுள்ளன என அறிகிறேன்.
இந்த ஈமக்காட்டில் பழந்தமிழரின் பெயர்கள் அடங்கிய முதுமக்கள் தாழிகள் நிறையக் கிடைத்திட வாய்ப்புகள் உள்ளன. நடைபெறவுள்ள இந்த ஆய்வின் வழியாகப் பழந்தமிழரின் உணவுப் பழக்கவழங்களும், நீத்தார்வழிபாட்டு முறைகளும் அறிவியல் அடிப்படையில் தெரியவரும் என எதிர்பார்க்கிறேன்.
புதையுண்டுள்ள இந்நகரில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே இந் நகரம் அழிந்திருந்தால், இங்கு வாழ்ந்த மக்களும் அவர்களது உடைமைகளும் ஒன்றுசேரப் புதையுண்டு போயிருக்க வேண்டும். ஆனால் மக்களின் எலும்புகள் ஏதும் இந்நகரில் இதுவரை கிடைக்காத காரணத்தினால் இந்நகரம் அழியும்போது இங்கு மக்கள் யாரும் வசிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
இந்நகரம் மண்ணால் புதையுண்டு அழிந்திருப்பதற்கு இரண்டு காரணிகள்தான் இருக்கமுடியும். 1) கடல்கோள் அல்லது சுனாமி (இதற்குத் திருவிளையாடல் புராணத்தில் சான்றுகள் உள்ளன. 2) வைகை யாற்றுப் பெருக்கு (வைகை யாற்றுப் பெருக்கிற்கு இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன. ஆனால் ஆற்றுப் பெருக்கால் நகரம் ஏதும் அழிந்ததாகக் குறிப்புகள் இல்லை).
இந்த நகரம் எவ்வாறு அழிந்தது? கடல்கோளாலா அல்லது ஆற்றுப் பெருக்காலா? என இதுநாள்வரை அறிவியல் அடிப்படையில் ஆராயப்படவில்லை. முறையினா அறிவியல் ஆய்வுகள் நடைபெற்று முடிவுகள் தெரியவரும்போதுதான், இந்நகரம் அழிந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும். அதுவரை பண்டைய புராணக் கருத்தைப் புளுகு என்று கற்பனையாகக் கருதி ஒதுக்கிவிட இயலாது.
கடல்கோளால் இந்நகரம் அழிவைச் சந்தித்திருந்தால், கிழக்கிலிருந்து வந்த கடல்நீரினால் இங்கு வசித்த மக்கள் மேற்குநோக்கி அடித்துச் செல்லப்பட்டிருப்பர். எனவே அவர்களது உடல்கள் இந்த நகருக்கு மேற்கே புதையுண்ட கிடக்க வாய்ப்புகள் உள்ளன. மேலும், இந்த நகரின் சிதையுண்டுள்ள மதில்களும் அவற்றின் இருப்பிடத்திற்கு மேற்கே புடைபெயர்ந்து கிடக்க வாய்ப்புகள் உள்ளன.
மேற்கிலிருந்து பாய்ந்து வரும் வைகை ஆற்றுப்பெருக்கினால் இந்நகரம் அழிந்திருந்தால், இந்நகரில் வசித்தவர்களின் உடல்கள் கிழக்கே அடித்துச் செல்லப்பட்டு இந்த நகருக்குக் கிழக்கே புதையுண்டு கிடக்கும் வாய்ப்புகள் உள்ளன. மேலும், இந்த நகரின் சிதையுண்டுள்ள மதில்களும் அவற்றின் இருப்பிடத்திற்குக் கிழக்கே புடைபெயர்ந்து கிடக்க வாய்ப்புகள் உள்ளன.
அப்படி எந்தவொரு தடயமும் இதுநாள் ஆராயப்படவில்லை. இங்கு படிந்துள்ள மண் அல்லது மணற் திட்டுக்கள் கிழக்கிலிருந்து மேற்காகப் படிந்துள்ளனவா? அல்லது மேற்கிலிருந்து கிழக்காகப் படிந்துள்ளனவா? எனக் கண்டறியப்பட வில்லை.
மேலும், இதுவரை நடைபெற்ற ஆய்வுகளில், வாழ்ந்துகொண்டிருந்த மனிதர்களோ மிருகங்களோ இறந்துபோன தடயங்கள் ஏதும் கிடைக்கவில்லை. அதாவது வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்களின் எலும்போ அல்லது கால்நடைகளின் எலும்போ கண்டறியப்பட வில்லை..
எனவே, திருவிளையாடற் புராணத்தில் கூறப்பட்டுள்ளபடி, இந்நகரில் வாழ்ந்த மக்கள் புலம்பெயர்ந்து சென்ற பின்னரே, இந்நகரம் அழிந்துள்ளது என்பது உறுதி.
நகரின் காலக்கணிப்பு
பண்டைய ஆலவாய் என்ற மதுரை நகரம் அழிந்ததை ஊழிக்காலம் என்று புராணமும் பரிபாடலும் கூறிப்பிடுகிறன. ஊழிக்குப் பின்னர் கலிகாலம் தோன்றி 5112 ஆண்டுகள் ஆகின்றன என்று பஞ்சாங்கக் கணிப்பு உள்ளது. ஊழிக் காலத்திற்குப் பின்னர் மீண்டும் பாண்டியர்கள் கூடல் என்ற மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துள்ளனர்.
எனவே, இவற்றின் அடிப்படையில் கீழடி யருகே புதையுண்டுள்ள இந்நகரம் (கூடல் என்ற மதுரை) தோன்றி 5112 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்பது எனது கருத்து.
குலசேகர பாண்டியனின் ஆட்சிக்காலத்தில், ஆலவாய் என்ற மதுரை இருந்த இடம் கண்டறியப்படுகிறது. அந்தத் தொன்மையான ஆலவாய் என்ற மதுரை இருந்த இடத்தில் புதிதாக மதுரை நகர் உருவாக்கப்படுகிறது.
கூடல் என்ற மதுரையில் இருந்த மக்கள் அனைவரும் புதிதாக உருவாக்கப் பெற்ற மதுரைக்கு சென்று குடியேறுகின்றனர். அதனால் இந்தக் கூடல் என்ற மதுரை நகரம் கைவிடப்பட்ட நகரமாக மாறிவிடுகிறது.
பின்னாளில், மற்றொரு கடல்கோள் (சுனாமி) உண்டாகியுள்ளது. இந்தக் கடல்கோளில் இப்போதிருக்கும் மதுரையின் எழுகடல்தெருவில் உள்ள வாவி (குளம்) வரை கடல்நீர் வந்து சேர்ந்தது என்கிறது திருவிளையாடல் புராணம். எழுகடல்தெருவரை மட்டுமே வந்து திரும்பிய இந்தக் கடல்வெள்ளத்தால் இன்றிருக்கும் மதுரை அழியவில்லை. ஆனால் மதுரைக்குக் கிழக்கே யிருந்தன எல்லாமும் கடல்வெள்ளத்தில் சிதைந்து அழிந்து போயுள்ளன.
இந்தக் கடல்கோளால்தான் (சுனாமியினால்தான்) கீழடியருகே கைவிடப்பட்ட கூடல் என்ற மதுரைநகரும் அழிந்து புதைந்துள்ளது. புதையுண்டுள்ள நகரம் (கூடல் என்ற மதுரை) அழிந்த காலம் இன்னதென்று தெரியவில்லை. தொல்லியலாளர்கள் கண்டுபிடித்தால்தான் உண்டு.
ஆலவாய் என்ற மதுரை போற்றுவோம்.
கூடல் என்ற மதுரை போன்றுவோம்,
மதுரை போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
Tuesday, 3 December 2019
கீழடி, தொலைந்து போனவைகளே தோண்டி எடுக்கப்படுகின்றன
கீழடி அகழாய்வில் தங்கத்திலான பொருட்களும் கிடைத்துள்ளன. யானைத் தந்தத்தினால் ஆன சீப்பு கிடைத்துள்ளது. மிருகங்களின் எலும்புகள் கிடைத்துள்ளன. சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட குழாய்களும், பானைகளும், பானைஓடுகளும் நிறையவே கிடைத்துள்ளன. ஆனால் மனித எலும்புக்கூடுகள் கிடைக்கவில்லை.
கீழடியருகே சுமார் 100 ஏக்கர் பரப்பளவுள்ள தொல்லியல் மேட்டைத் திரு அமர்நாத் அவாகளது தலைமையிலான தொல்லியல்துறையினர் கண்டறிந்து அகழ்வாராய்ச்சி செய்தனர். தொடர்ந்து தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறையினர் அகழாய்வு செய்து வருகின்றனர். 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள தொல்லியல்மேட்டில் சுமார் 8 ஏக்கர் அளவுள்ள இடத்தில் மட்டுமே இதுவரை தொல்லியல் அகழாய்வு நடைபெற்றுள்ளது. எல்லா இடங்களையும முழுமையாகத் தோண்டிக் கண்டறிய இன்னும் சுமார் 10 ஆண்டுகள் ஆகலாம் என்று திரு அமர்நாத் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
“இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்களில மனித எலும்புக்கூடுகள் ஏதும் கிடைக்கவில்லை. இந்தக் காரணத்தினால் இது ஒரு கைவிடப்பட்ட நகரநாகரிகமாக இருக்கலாம்” என்று கருதுகின்றனர்.
கைவிடப்பட்ட நகரத்தில் தங்கத்தினால் ஆன அணிகலன், மணிகளால் ஆன அணிகலன்கள், தந்தத்தினால் ஆன சீப்பு எப்படிக் கிடைக்கும்? என்ற ஐயம் எழுகிறது.
பண்டைய மதுரையின் அருகே வடக்கே மணவூர் (மணலூர்) இருந்தது என்றும், மதுரையை ஆண்ட சுந்தரபாண்டியனின் மகனான உக்கிரசேன பாண்டியனுக்கு மணவூரில் வசித்த காந்திமதியைத் திருமணம் செய்து வைத்தார்கள் என்றும். பாண்டியர்களின் குலவழிவந்த குலசேகரபாண்டியன் மணவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான் என்றும், இந்தக் குலசேகரபாண்டியன் இப்போதிருக்கும் மதுரையைப் புதிதாக உருவாக்கினான் என்றும், அப்போது இங்கே வசித்த மக்களை யெல்லாம் புதிதாக உருவாக்கப்பட்ட மதுரைக்கு அழைத்துச் சென்று குடியமர்த்தினான் என்றும் திருவிளையாடல் புராணம் குறிப்பிடுகிறது. இங்கிருந்த மக்கள் எல்லோரும் புதிதாக உருவாக்கப்பட்ட மதுரைக்குச் சென்று குடியேறிவிட்ட காரணத்தினால், இது “கைவிடப்பட்ட நகரம்” ஆகிறது.
மதுரை நகருக்குக் குடியேறுவதற்கு முன்பு, இங்கு வசித்த மக்களால் தொலைக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட பொருட்களே இன்று தொல்லியலாளர்களால் கண்டெடுக்கப்படுகின்றன எனக் கருதவேண்டியுள்ளது. தங்கம் மற்றும் தந்தத்தால் ஆன பொருட்கள் தொலைக்கப்பட்ட பொருட்களில் அடங்கும். பானைகள் கைவிடப்பட்ட பொருட்களில் அடங்கும் எனவும் கருதுகிறேன்.
(குறிப்பு - இது தொல்லியல் ஆய்வுக் கருத்து அல்ல, எனது தனிப்பட்ட கருத்து ஆகும்)
தொல்லியலாளர் போற்றுவோம்,
மாமதுரை போற்றுவோம்,
சங்கத் தமிழ் போற்றுவோம்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கார்த்திகை 17 (03.12.2019) செவ்வாய்கிழமை.
Tuesday, 15 October 2019
கீழடி, சங்ககால மதுரையா ? குடியிருப்பா அல்லது தொழிற்கூடமா ?
தொல்லியலாளர் திரு கி.அமர்நாத் அவர்கள் கீழடியைத் தோண்டிக் கண்டறிவதற்கு முன்பும்(1986), கண்டறிந்த போதும்(2015), இந்நாளிலும் (2019) தொடர்ந்து நேரில் பலமுறை சென்று முயன்று பார்த்து வருகிறேன்.
எனது பார்வையில்... கருத்தில் ....
தொல்லியலாளர் திரு கி. அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் கொண்டிருக்கும் கோணம் மிகவும் சரியானது என்பதே எனது கருத்து.
திரு அமர்நாத் அவர்களால் கீழடி யருகே கண்டறியப்பட்டுள்ள நகரமானது மதுரையல்ல என்றும், அந்த இடம் ஒரு தொழிற்கூடம் என்றும் சான்றில்லாத கருத்துக்களைச் சிலர் பரப்பி வருகின்றனர். இவை தவறான கருத்துகளாகும். இக்கருத்துக்களைக் கொண்டுள்ளோர் தமிழ்ச் சங்க இலக்கியங்களையும் தமிழில் உள்ள புராணங்களையும் படித்து அறிந்து கொள்ள வேண்டும். பலாப்பலத்தின் தோலை நீக்கிவிட்டு உள்ளேயுள்ள பலாச்சுளையைச் சாப்பிடுவது போன்று, சங்கத் தமிழ் இலக்கியங்களிலும் புராணங்களிலும் கூறப்பட்டுள்ள புனைவுகளை (பலாப் பழத்தின் தோலை ) நீங்கிவிட்டு, அதில் பொதிந்துள்ள கருத்துகளை அனைவரும் விருப்பு வெறுப்பின்றி (பலாச்சுளையை)க் கருத்திற் கொள்ள வேண்டும்.
கீழடிதான் பண்டைய மதுரையா ....
அகநானூறும் புறநானூறும் நக்கீரரும் திருப்பரங்குன்றத்திற்குக் கிழக்கே பாண்டியர்களின் தலைநகரான கூடல் என்ற மதுரை மாநகர் உள்ளது என்று பாடியுள்ளனர். ஆனால் இப்போதுள்ள மதுரை மாநகரமானது திருப்பரங்குன்றத்திற்கு வடக்கே உள்ளது.
திருப்பரங்குன்றத்திற்குக் கிழக்கே அவனியாபுரம் உள்ளது. அவனியாபுரம் அருகே கோவலன் பொட்டல் உள்ளது. எனவே இப்போதுள்ள அவனியாபுரமே சங்ககாலத்து மதுரையாக இருக்க வேண்டும் எனத் தமிழ்அறிஞர்கள் பலரும் ஆராய்ந்து பார்த்துள்ளனர். இவர்களுள் பேராசிரியர் தெய்வத்திரு சங்கரராஜீலு அவர்களும் ஒருவர். இவர் அழகப்பா பல்கலைக்கழகத்தின் முதல் பதிவாளராகப் பணியாற்றினார். 1986ஆம் ஆண்டில் அவனியாபுரம் மற்றும் புதூர் மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள இடங்களை எல்லாம் நேரில் சென்றுபார்த்துப் பெரிதும் முயன்று ஆராய்ந்தார்.
சங்கப்பாடலில் குறிப்பிடப்படும் கூடல்மாநகரின் பரப்பளவிற்குச் சமமான பரப்பளவு உள்ள தொல்லியல் மேடு எதையும் அவனியாபுரம் அருகே கண்டறிய முடியவில்லை. எனவே அவனியாபுரம் சங்ககாலக் கூடல் மாநகரமாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறினார். அதற்காக அவரைத் திராவிடர் என்றும் கூறி அவரது முடிபைப் புறந்தள்ளினர் சிலர்.
கீழடி அருகே தொல்லியலாளர் திரு அமர்நாத் அவர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ள நகரம் திருப்பரங்குன்றத்திற்கு நேர் கிழக்கே உள்ளது. சுமார் 800 மீட்டர் நீளத்திற்குச் செங்கலாலான மதில்சுவர் இங்கே கண்டறியப்பட்டுள்ளது. மேலு ஆற்றுமணல் திட்டுகளும் உள்ளன. கூடல் நகரின் பல்வேறு சிறப்புக்களையும் இந்தப் புதையுண்டுள்ள நகரம் கொண்டுள்ளது. எனவே நக்கீரரும் சங்கத்தமிழ்ப் புலவர் பலரும் பாடியுள்ள “கூடல்” மாநகர் இதுதான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஐயந்திரிபற அறிவியல் அடிப்படையில் கூறிட வேண்டுமென்றால், தொல்லியலாளர்கள் தோண்டும் இடத்திற்கு அருகே சுமார் 500 மீட்டர் கிழக்கே தொன்மையான சிவலாயம் ஒன்று புதையுண்டுள்ளது. அதைத் தோண்டிக் கண்டறிந்தால் அதில் சங்ககாலக் கல்வெட்டுகள் இருக்க வாய்ப்புகள் உண்டு.
இது குடியிருப்பா அல்லது தொழில் நகரமா ....
இங்கே கண்டறிப்பட்டுள்ள கட்டுமானங்கள், நெசவுத்தொழிற் கூடமாக அல்லது குயவர்களின் பானைத் தொழிற்கூடமாக இருக்கலாம் எனப் பலரும் கூறிவருகின்றனர். ஆனால் இவர்கள்யாரும் இக்கருத்துகளுக்குச் சான்றுகள் எதையும் குறிப்பிடவில்லை.
திரு அமர்நாத் அவர்கள், “இத் தொழில்கள் நடைபெற்றதற்கான எச்சங்கள் ஏதும் இங்கே கிடைக்கப்பெறவில்லை. எனவே இந்த இடம் தொழிற்கூடமாக இருக்க வாய்ப்பில்லை” என்று விளக்கம் அளித்துள்ளர்.
ஆனால் இந்தப் குறிப்பிட்ட கட்டுமானமானது குடியிருப்பும் அல்ல, தொழிற்சாலையும் அல்ல. இது ஒரு மாட்டுத் தொழும், மாட்டுப் பண்ணை என்பது எனது கருத்து. இங்கே கண்டறிப்பட்டுள்ள அடுக்குப் பானைகள் மாடுகளுக்குத் தீவனமும் தண்ணீரும் வைக்கப் பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.
உறைகிணறு – சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை வைகை ஆற்றுப் படுகைகளில் வாழ்வோர், வைகையின் ஊற்றுநீரை உண்டே வாழ்ந்தனர். எனவே, மாடுப்பண்ணை, மாட்டுத் தொழுவங்களுக்கு உறைகிணறு பயன்படுத்தப் பெற்றிருக்கலாம். இங்கே வாழ்ந்த பழந்தமிழர் வையை ஆற்றின் ஊற்றுநீரை உண்டு வாழ்ந்திருக்கலாம் எனவும் கருதவேண்டியுள்ளது.
வெள்ளைநிறத்தில் படிகம் போன்றுள்ள ஒரு பொருளை நாக்கில் தடவிப் பார்த்துவிட்டு அது உப்பாக உள்ளது என்று கூறுவது அறிவியல் அல்ல. அந்தப் பொருளை ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பிவைத்து அவர்கள் இதைச் சோதனை செய்து, “இது உப்பு” என்று சொல்ல வேண்டும். இதுவே அறிவியல் ஆய்வு முடிவாக அமையும். எனவே இந்த இடத்தில் கண்டறியப்பெற்றுள்ள பானைகளின் உள்ளே இருந்த பொருட்கள் என்னென்ன என்ற ஆய்வு முடிவுகளை வெளியிட வேண்டும். அதுவே அறிவியல் அடிப்படையிலான சரியான முடிவாக இருக்கும். இந்த அறிவியல் ஆய்வு முடிவுகளே இங்கே இருந்தது குடியிருப்பா? தொழிற்கூடமா? அல்லது மாட்டுப் பண்ணையா? என்பதை உறுதி செய்யும்.
மேலும் சான்றுகள் கிடைக்கும் பொழுது முடிவுகள் தெளிவாகக் கூடும்.
இந்த தொல்லியல்மேடு சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இப்போதுதான் சுமார் 5 ஏக்கர்வரை தோண்டிக் கண்டறிந்துள்ளனர்.
இன்னும் அகரம், மணலூர், கொந்தகை யெல்லாம் தோண்டிக் கண்டறியப்பெற வேண்டும்.
அகரம் “கோட்டைக் கருப்பணசாமி” உள்ள இடமே பண்டைய கூடல் மாநகரின் கோட்டைக் கிழக்குவாயிலாக இருக்க வேண்டும் என்பது எனது யூகம். இந்தக் கோயிலுக்கு மேற்கே சற்றொப்ப 50 மீட்டர் மேற்கே உள்ள மேடான பகுதியானது பாண்டின் செழியனின் அரண்மனையாக இருந்திருக்கலாம்.
சங்கத் தமிழ் போற்றுவோம்,
சங்கம் வளர்த்த கூடல் மாநகர் போற்றுவோம்,
தொல்லியலாளர் போற்றுவோம்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா. கி. காளைராசன்
புரட்டாசி 28 (15.10.2019) செவ்வாய் கிழமை.
Saturday, 12 October 2019
தமிழரின் தென்மதுரை, மதுரை, ஆலவாய், கூடல்
6) மதுரை(3)யின் அடியிலே மதுரை(1) புதையுண்டுள்ளது.
Monday, 7 October 2019
கீழடி அல்ல, இது சங்கத்தமிழரின் கூடல் மாநகரம்
கீழடி அருகே தொல்லியலாளர் தொன்மையான நகரநாகரிகத்தைத் தோண்டிக் கண்டறிந்துள்ளனர். புதையுண்டுள்ள இந்த நகரமானது தற்போதுள்ள கீழடி என்ற ஊரின் அருகே உள்ளது. இக் காரணத்தால், இந்தத் தொன்மையான நகரத்தையும் கீழடி என்றே அனைவரும் குறிப்பிட்டுப் பேசியும் எழுதியும் வருகின்றனர். ஆனால் புதையுண்டுள்ள இந்த நகரத்தின் பெயர் கூடல் என்றும் ஆலவாய் என்றும் அழைக்கப் பெற்ற பண்டைய மதுரை ஆகும்.
பண்டைய பாண்டியரின் தலைநகரம் மதுரை. மதுரையில் தமிழ்ச் சங்கம் வைத்துத் தமிழாய்ந்துள்ளனர். மதுரைக்கு எத்தனையோ பெயர்கள் உள்ளன. அவற்றில் ஆலவாய், கூடல், மதுரை என்ற மூன்று பெயர்களே சிறப்புப் பெற்றுள்ளன.
(1) கபாடபுரம். இது தொல்காப்பியருக்கும் முந்திய அகத்தியர் காலத்தது. இது கடல்கோளால் அழிந்தது.
(2) ஆலவாய் என்பது முதல் மதுரையாகும். இதுவும் கடல்கோளால் அழிந்தது என்கிறது திருவிளையாடற் புராணம்.
(3) கூடல் என்பது இரண்டாவது மதுரையாகும். இதுவும் கடல்கோளால் அழிந்தது என்கிறன திருவிளையாடற் புராணமும் திருஞானசம்பந்தரின் தேவாரமும்.
(4) மதுரை என்பது மூன்றாவது மதுரையாகும். இது பண்டைய ஆலவாய் என்ற முதல்மதுரை இருந்த அதே இடத்திலேயே புதிதாக உருவாக்கப் பெற்ற நகரமாகும்.
இதுவே இன்றைய மதுரை மாநகரமாகும் என்கிறது திருவிளையாடற் புராணம்.
புதையுண்டுள்ள இந்தத் தொன்மையான கூடல் நகரைச் சங்கத் தமிழ்ப்பாடல்களும் பக்திஇலக்கியப் பாடல்களும் வெகுவாக விவரித்து எழுதியுள்ளன.
புதையுண்டுள்ள இந்தத் தொன்மையான நகரமே முத்தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவன் நக்கீரன் வாழ்ந்த கூடல் மாநகரமாகும்.
இதுவே செண்பக பாண்டியன் சங்கம் கூட்டித் தமிழாய்ந்த தமிழ்கூடல் நகரமாகும்.
இதுவே செழியன் பாண்டியனின் தலைநகராகும்.
இதுவே கண்ணகி எரித்த கூடல் என்ற மதுரை ஆகும்.
கடல்வாய்ச் சென்ற ஆலவாய் போற்றுவோம்.
சங்கம் வளர்த் கூடல் போற்றுவோம்.
மதுரை மாநகர் போற்றுவோம்.
தொல்லியலாளர் போற்றுவோம்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
புரட்டாசி 21 (08.10.2019) செவ்வாய் கிழமை.
-------------------------------------------------------------------
கற்றவை -
1) மதுரை என்ற சொல் இடம் பெற்றுள்ள சங்கப்பாடல்களின் தொகுப்பு
மிக்கு புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை/சினை தலைமணந்த சுரும்பு படு செம் தீ - மது 699,700
இடை நெறி தாக்கு_உற்றது ஏய்ப்ப அடல் மதுரை/ஆடற்கு நீர் அமைந்தது யாறு - பரி 11/48,49
வந்து மதுரை மதில் பொரூஉம் வான் மலர் தாஅய் - பரி 12/9
குன்றுதல் உண்டோ மதுரை கொடி தேரான் - பரி 31/3
பொய் ஆதல் உண்டோ மதுரை புனை தேரான் - பரி 32/3
கோத்தை உண்டாமோ மதுரை கொடி தேரான் - பரி 33/3
மதுரை பெரு முற்றம் போல நின் மெய் கண் - கலி 96/23
மகிழ் நனை மறுகின் மதுரையும் வறிதே அதாஅன்று - சிறு 67
மாட மதுரையும் தருகுவன் எல்லாம் - புறம் 32/5
2) கூடல் என்ற சொல் இடம்பெற்றுள்ள சங்கப்பாடல் வரிகளின் தொகுப்பு.
மாடம் மலி மறுகின் கூடல் குட வயின் - திரு 71
மாடம் பிறங்கிய மலி புகழ் கூடல்/நாள்_அங்காடி நனம் தலை கம்பலை - மது 429,430
பெரும் பெயர் கூடல் அன்ன நின் - நற் 39/10
பொன் தேர் செழியன் கூடல் ஆங்கண் - நற் 298/9
மூன்று உடன் கூடிய கூடல் அனையை - பதி 50/7
குன்றத்தான் கூடல் வரவு - பரி 8/28
குன்றம் உடைத்த ஒளிர் வேலோய் கூடல்/மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ - பரி 8/29,30
யாம் வேண்டும் வையை புனல் எதிர்கொள் கூடல்/ஆங்க அணி நிலை மாடத்து அணி நின்ற பாங்காம் - பரி 10/40,41
மதி மாலை மால் இருள் கால்சீப்ப கூடல்/வதி மாலை மாறும் தொழிலான் புது மாலை - பரி 10/112,113
வருந்தாது வரும் புனல் விருந்து அயர் கூடல்/அரும் கறை அறை இசை வயிரியர் உரிமை - பரி 10/129,130
ஆடல் தலைத்தலை சிறப்ப கூடல்/உரைதர வந்தன்று வையை நீர் வையை - பரி 12/31,32
கூடலொடு பரங்குன்றின் இடை - பரி 17/23
கொய் உளை மான் தேர் கொடி தேரான் கூடற்கும்/கை ஊழ் தடுமாற்றம் நன்று - பரி 17/45,46
புலத்தினும் போரினும் போர் தோலா கூடல்/கலப்போடு இயைந்த இரவு தீர் எல்லை - பரி 19/8,9
குன்றொடு கூடல் இடை எல்லாம் ஒன்றுபு - பரி 19/15
கூடல் விழையும் தகைத்து தகை வையை - பரி 20/26
நெடு நீர் மலி புனல் நீள் மாட கூடல்/கடி மதில் பெய்யும் பொழுது - பரி 20/106,107
காமரு வையை சுடுகின்றே கூடல்/நீர் அணி கொண்டன்று வையை என விரும்பி - பரி 24/4,5
பொன் தேரான் தானும் பொலம் புரிசை கூடலும்/முற்று இன்று வையை துறை - பரி 24/26,27
பணிவு இல் உயர் சிறப்பின் பஞ்சவன் கூடல்/மணி எழில் மா மேனி முத்த முறுவல் - பரி 24/46,47
உரு கெழு கூடலவரொடு வையை - பரி 24/92
சேய் மாட கூடலும் செவ்வேள் பரங்குன்றம் - பரி 34/2
நெடு மாட கூடற்கு இயல்பு - பரி 35/6
புலம் பூத்து புகழ்பு ஆனா கூடலும் உள்ளார்-கொல் - கலி 27/12
ஆனா சீர் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை - கலி 30/11
நீள் உயர் கூடல் நெடும் கொடி எழவே - கலி 31/25
நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாட கூடலார்/புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ - கலி 35/17,18
பூ தண் தார் புலர் சாந்தின் தென்னவன் உயர் கூடல்/தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண்கண் - கலி 57/8,9
கனவினால் சென்றேன் கலி கெழு கூடல்/வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையை - கலி 92/11,12
வாடா வேம்பின் வழுதி கூடல்/நாள்_அங்காடி நாறும் நறு நுதல் - அகம் 93/9,10
பொய்யா விழவின் கூடல் பறந்தலை - அகம் 116/14
கொடி நுடங்கு மறுகின் கூடல் குடாஅது - அகம் 149/14
பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின் - அகம் 231/13
பொன் மலி நெடு நகர் கூடல் ஆடிய - அகம் 253/6
மலை புரை நெடு நகர் கூடல் நீடிய - அகம் 296/12
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன் - அகம் 315/7
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண் - அகம் 346/20
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே - புறம் 58/13
இரு பேர் யாற்ற ஒரு பெரும் கூடல்/விலங்கு இடு பெரு மரம் போல - புறம் 273/5,6
குண்டு நீர் வரைப்பின் கூடல் அன்ன - புறம் 347/6
3) கூடல் என்ற சொல் இடம்பெற்றுள்ள சிலப்பதிகாரம் பாடல் வரிகளின் தொகுப்பு.
கூடல் காவதம் கூறு_மின் நீர் என - சிலப்.மது 13/114
கார் கடல் ஒலியின் கலி கெழு கூடல் ஆர்ப்பு ஒலி எதிர்கொள ஆர் அஞர் நீங்கி - சிலப்.மது 13/149,150
ஓங்கு உயர் கூடல் ஊர் துயில் எடுப்ப - சிலப்.மது 14/6
வருந்தாது ஏகி மன்னவன் கூடல் பொருந்து உழி அறிந்து போது ஈங்கு என்றலும் - சிலப்.மது 14/60,61
கலி கெழு கூடல் செவ்வணி காட்ட - சிலப்.மது 14/95
கொண்டலொடு புகுந்து கோ_மகன் கூடல் வெம் கண் நெடு வேள் வில்_விழா காணும் - சிலப்.மது 14/110,111
மன்னவன் கூடல் மகிழ் துணை தழூஉம் - சிலப்.மது 14/116
கோடையொடு புகுந்து கூடல் ஆண்ட - சிலப்.மது 14/123
கூடல் மகளிர் கோலம் கொள்ளும் - சிலப்.மது 16/9
கூடல் மகளிர் ஆடல் தோற்றமும் - சிலப்.மது 16/131
வை வாளின் தப்பிய மன்னவன் கூடலில் தெய்வமும் உண்டு-கொல் தெய்வமும் உண்டு-கொல் - சிலப்.மது 19/58,59
கூடலான் கூடு ஆயினான் - சிலப்.மது 20/101
நல் தேரான் கூடல் நகர் - சிலப்.மது 21/57
தீ தரு வெம் கூடல் தெய்வ கடவுளரும் - சிலப்.மது 21/60
கலி கெழு கூடல் பலி பெறு பூத - சிலப்.மது 22/101
மா பெரும் கூடல் மதுராபதி என்பேன் - சிலப்.மது 23/22
நிலை கெழு கூடல் நீள் நெடு மறுகின் - சிலப்.மது 23/123
கோ_முறை நீங்க கொடி மாட கூடலை தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடுகம் - சிலப்.வஞ்சி 24/111,112
கொங்கையான் கூடல் பதி சிதைத்து கோவேந்தை - சிலப்.வஞ்சி 29/112
கலி கெழு கூடல் கதழ் எரி மாண்ட - சிலப்.வஞ்சி 30/149
----------------------------------------
4) கூடல் ஆலவாய் - திருஞானசம்பந்தரின் பாடல் வரிகளின் தொகுப்பு
ஆடக மாடம் நெருங்கு கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:65/4
அம் களக சுதை மாட கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:66/4
அண்ணலின் பாடல் எடுக்கும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:67/4
ஆவினில் ஐந்து உகந்து ஆட்டும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:68/4
அம்புதம் நால்களால் நீடும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:69/4
ஆகம் உடையவர் சேரும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:70/4
ஆவண வீதியில் ஆடும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:71/4
அலங்கல் நல்லார்கள் அமரும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:72/4
அணி கிளர் வேந்தர் புகுதும் கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:73/4
அடுக்கும் பெருமை சேர் மாட கூடல் ஆலவாயின்-கண் அமர்ந்த ஆறே - தேவா-சம்:74/4
அன்பு உடையானை அரனை கூடல் ஆலவாய் மேவியது என்-கொல் என்று - தேவா-சம்:75/1
மன வஞ்சர் மற்று ஓட முன் மாதர் ஆரும் மதி கூர் திரு கூடலில் ஆலவாயும் - தேவா-சம்:188
ஆடல் ஏற்றினான் கூடல் ஆலவாய் - தேவா-சம்:1018/1
கூடல் ஆலவாயிலாய் குலாயது என்ன கொள்கையே - தேவா-சம்:3350/4
கொட்டு இசைந்த ஆடலாய் கூடல் ஆலவாயிலாய் - தேவா-சம்:3351/3
குற்றம் நீ குணங்கள் நீ கூடல் ஆலவாயிலாய் - தேவா-சம்:3352/1
கோலம் ஆய நீள் மதிள் கூடல் ஆலவாயிலாய் - தேவா-சம்:3354/1
கொன்றை அம் முடியினாய் கூடல் ஆலவாயிலாய் - தேவா-சம்:3355/3
கோவண உடையினாய் கூடல் ஆலவாயிலாய் - தேவா-சம்:3358/2
கூற்று உதைத்த தாளினாய் கூடல் ஆலவாயிலாய் - தேவா-சம்:3359/3
கூடலர் ஆடலர் ஆகி நாளும் குழகர் பலி தேர்வார் - தேவா-சம்:3920/2
கூடல் ஆலவாய்_கோனை விடை கொண்டு - தேவா-சம்:3966/1
Tuesday, 18 December 2018
மதுரைக்குக்குக் ‘கூடல்’ என்றும் ‘நான்மாடக் கூடல்‘ என்றும் எதனால் பெயர் உண்டானது?“
திருவிளையாடல் புராணத்தில் 105 பாடல்களில் ‘நான்மாடக் கூடல்‘ என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இந்தப் பாடல்கள் கீழே இணைக்கப் பெற்றுள்ளன.
பொன் அசலம் தனைச் செண்டால் புடைத்து நிதி எடுத்ததுவும் புனிதர்க்கு ஈசன்
பன்னரிய மறைப் பொருளைப் பகர்ந்ததுவும் மாணிக்கம் பகர்ந்த வாறும்
தொல் நகர் மேல் நீர்க் கிழவன் வர விடுத்த கடல் சுவறத் தொலைத்த வாறும்
அன்ன தனித் தொன் மதுரை நான் மாடக் கூடல் நகரான வாறும்.
அதிர் கடல் வறப்பச் செய்த ஆடல் ஈது அனையான் ஏய
முதிர் மழை ஏழின் மேலும் முன்னை நால் முகிலும் போக்கி
மதுரை நான் மாடக் கூடல் ஆக்கிய வண்ணம் சொல்வாம்.
--------------------------------------------------------
திருவிளையாடல் புராணத்தில் கூடல் என்ற சொல் இடம் பெற்றுள்ள பாடல்களின் தொகுப்பு
332.
பொன் அசலம் தனைச் செண்டால் புடைத்து நிதி எடுத்ததுவும் புனிதர்க்கு ஈசன்
பன்னரிய மறைப் பொருளைப் பகர்ந்ததுவும் மாணிக்கம் பகர்ந்த வாறும்
தொல் நகர் மேல் நீர்க் கிழவன் வர விடுத்த கடல் சுவறத் தொலைத்த வாறும்
அன்ன தனித் தொன் மதுரை நான் மாடக் கூடல் நகரான வாறும்.
1309.
கதிர் மதி மிலைந்த வேணிக் கண்ணுதல் வருணன் ஏய
அதிர் கடல் வறப்பச் செய்த ஆடல் ஈது அனையான் ஏய
முதிர் மழை ஏழின் மேலும் முன்னை நால் முகிலும் போக்கி
மதுரை நான் மாடக் கூடல் ஆக்கிய வண்ணம் சொல்வாம்.
1332.
வன் திறல் வருணன் விட்ட மாரியை விலக்க ஈசன்
மின் திகழ் சடையினின்று நீங்கிய மேகம் நான்கும்
குன்று போல் நிவந்து நான்கு கூடமாக் கூடலாலே
அன்று நான் மாடக் கூடல் ஆனது ஆன் மதுரை மூதூர்.
1596.
உரை செய்வது எவன் யார் என்போல் சித்தனை உடன்று மாய்த்து
வரை செய் தோள் விந்தைக்கு ஈந்தார் மற்று இது சுற்றம் வைகைத்
திரை செய் நீர்க் கூடல் எந்தை திரு உளச் செயல் கொல் என்றான்.
மதுரைக்குக் “கூடல்“ என்ற பெயர் இடம் பெற்றுள்ள திருவிளையாடற் புராணப் பாடல்கள்
அறுகால் பேடு இசைபாடும் கூடல் மான்மியத்தை அரும் தமிழால் பாடி
அறுகால் பீடு உயர் முடியார் சொக்கேசர் சந்நிதியில் அமரர் சூழும்
அறுகால் பீடத்து இருந்து பரஞ்சோதி முனிவர் அரங்கு ஏற்றி னானே.
136.
தார் ஒலி கருவி ஐந்தும் தழங்கு ஒலி முழங்கு கைம்மான்
பேர் ஒலி எல்லாம் ஒன்றிப் பெருகு ஒலி அன்றி என்றும்
கார் ஒலி செவி மடாது கடி மணி மாடக் கூடல்.
165.
காசறு கனக மாடம் சந்திர காந்த மாடம்
மாசு அற விளங்கு மின்ன மாட நீண் மாலைக் கூடல்
பாசிழை மடந்தை பூண்ட பன் மணிக் கோவை அன்ன.
253.
முத்தி புரம் கன்னிபுரம் திருவால வாய் மதுரை முடியா ஞானம்
புத்தி தரும் பூவுலகில் சிவலோகம் சமட்டி விச்சாபுரம் தென் கூடல்
பத்திதரு துவாத சாந்தத் தலம் என்று ஏது வினால் பகர்வர் நல்லோர்.
312.
பிறவி வினை அறு நினைந்தான் ஊறு பெரும் பவப் பாவப் பிணி போம் கூடல்
இறைவனை இன்று இறைஞ்சுதும் என்று எழுந்து மனைப்புறம் போந்தால் ஈரைஞ்நூறு
மறமுறு வெம் பவத்து இழைத்த பாதக வல் வினை அனைத்தும் மாயும் மன்னோ.
321.
குரு காலு மலர்த் தடம் சூழ் கூடல் நாயகற் பணிவோர் கோல் ஒன்று ஓச்சி
பொருகாலின் வரு பரித்தேர் மன்னவராய் வரும் தம் புடைவந்து எய்தி
இருகாலும் தலைவருட எக்காலும் தமை வணங்க இருப்பர் அன்றே.
325.
தேன் மருவி உறை சோம சுந்தரன் தேன் செவ்வழியாழ் செய்யப் பூத்த
கான் மருவு தடம் பொழில் சூழ் ஆலவாய்ச் சுந்தரன் மீன் கணங்கள் சூழப்
பால் மதி சூழ் நான் மாடக் கூடல் நாயகன் மதுரா பதிக்கு வேந்தன்.
326.
புர நாதன் பூஉலக சிவ லோ காதிபன் கன்னி புரேசன் யார்க்கும்
வரம் நாளும் தரு மூல லிங்கம் என இவை முதலா மாடக் கூடல்
அரன் நாமம் இன்னம் அளப்பு இலவாகும் உலகு உய்ய வவ்வி லிங்கம்.
332.
பொன் அசலம் தனைச் செண்டால் புடைத்து நிதி எடுத்ததுவும் புனிதர்க்கு ஈசன்
பன்னரிய மறைப் பொருளைப் பகர்ந்ததுவும் மாணிக்கம் பகர்ந்த வாறும்
தொல் நகர் மேல் நீர்க் கிழவன் வர விடுத்த கடல் சுவறத் தொலைத்த வாறும்
அன்ன தனித் தொன் மதுரை நான் மாடக் கூடல் நகரான வாறும்.
339.
வய ஏனக் குருளை களை மந்திரிகள் ஆக்கியதும் வலி உண்டாகக்
கயவாய்க்குக் குருமொழி வைத் அருளியது நாரைக்குக் கருணை நாட்டம்
தயவால் வைத்து அருண் முத்தி நல்கியதும் கூடல் நகர் தன்னைச் சித்தர்
புய நாகம் போய் வளைந்து திரு வால வாயாக்கிப் போந்த வாறும்.
1307.
பேதங்கள் அல்ல இவை அன்றி நின்ற பிறிது அல்ல என்று பெருநூல்
வேதம் கிடந்து தடுமாறும் வஞ்ச வெளி என்ப கூடல் மறுகில்
பாதங்கள் நோவ வளை இந்தன் ஆதி பகர் வாரை ஆயும் அவரெ.
1309.
அதிர் கடல் வறப்பச் செய்த ஆடல் ஈது அனையான் ஏய
முதிர் மழை ஏழின் மேலும் முன்னை நால் முகிலும் போக்கி
மதுரை நான் மாடக் கூடல் ஆக்கிய வண்ணம் சொல்வாம்.
1332.
மின் திகழ் சடையினின்று நீங்கிய மேகம் நான்கும்
குன்று போல் நிவந்து நான்கு கூடமாக் கூடலாலே
அன்று நான் மாடக் கூடல் ஆனது ஆன் மதுரை மூதூர்.
1334.
நாடரும் திரு எய்தி மேல் நல்ல வீடு எய்தக்
கூடல் அம் பதி மேவிய குணம் குறி கடந்த
வேடர் அங்கு ஒரு சித்த மெய் வேடராய் வருவார்.
1425.
மன்னும் சின் மயனை வந்து வந்தித்து வருநாள் காமன்
என்னும் சில் மலர்ப் பூம் தண்தார் இராச சேகரனைப் பெற்று
மின்னும் சில்லியம் தேர் வேந்தன் மேதினி புரக்கும் மன்னோ.
1459.
கோயிலாக் கொண்டு உறையும் கூடல் நாயகனை மனக் குறிப்பில் கண்டு
வேயில் ஆக்கிய தடம் தோள் கௌரி திரு மந்திரத்தை விளம்ப லோடும்
சேயிலாய்க் கிடந்து அழுத குழவி விசும்பு இடை மேல் தெரியக் கண்டாள்.
1492.
குரவன் செம்கோல் கைக் கொண்ட குலோத்துங்க வழுதி செம்கண்
அரவு அங்கம் பூண்ட கூடல் ஆதி நாயகனை நித்தம்
பரவு அன்பின் வழிபாடு ஆனாப் பத்திமை நியமம் பூண்டான்
இரவு அஞ்சும் கதுப்பின் நல்லார் ஈர் ஐயா இரவர் உள்ளான்.
1504.
மாண்டவளைத் தன் வெந் இடை இட்டான் மகவு ஒக்கல்
தாண்ட அணைத்தான் தாய் முலை வேட்டு அழும் தன் சேயைக்
காண் தொறும் விம்மாக் கண் புனல் சோரக் கடிது ஏகா
ஆண் தகை மாறன் கூடல் அணைந்தான் அளி அன்றான்.
1555.
கொலை இரும் பழிக்கு அன்று அஞ்சும் கூடல் எம் பெருமான் கொன்றை
மிலை இரும் குஞ்சி வேங்கை மெல் இணர்க் கண்ணி வேய்ந்து
கலை இரு மருப்பில் கோடிக் காது அளவோடும் தாடி
சிலை இரும் தடக்கை வேடம் திரு உருக் கொண்டு தோன்றி.
1571.
நாதனார் நவின்ற ஆற்றான் நல்நெறி விரதச் செய்கை
மாதவ ஒழுக்கம் தாங்கி வரு முறை மதிய மூன்றில்
பாதகம் கழிந்து தெய்வப் பார்ப்பன வடிவம் ஆனான்.
1574.
ஒழிந்த பார் உள்ளார் வான் உளார் வியப்பம் உற்று நல் உரை உணர்வு எல்லாம்
கழிந்த பேர் அருளிக் கயவன் மேல் வைத்த காரணம் யாது எனக் கண்ணீர்
வழிந்து நான் மாடக் கூடல் நாயகனை வழுத்தினார் மகிழ்ச்சியுள் திளைத்தார்.
1576.
கூர்த்த வெண் கோட்டி யாவைக் குலோத்துங்க வழுதி ஞாலம்
காத்து அரசு அளிக்கும் நாளில் கடிமதில் உடுத்த கூடல்
மாத் தனி நகருள் வந்து மறு புலத்தவனாய் யாக்கை
மூத்தவன் ஒருவன் வைகி முனைய வாள் பயிற்றி வாழ்வான்.
1583.
அறம் கடை நின்றாள் உள்ளம் ஆற்றவும் கடையன் ஆகிப்
புறம் கடை நின்றான் செய்த புலமை தன் பதிக்கும் தேற்றாள்
மறம் தவிர் கற்பினாள் தன் மனம் பொதிந்து உயிர்கள் தோறும்
நிறைந்த நான் மாடக் கூடல் நிமலனை நினைந்து நொந்தாள்.
1584.
தாதக நிறைந்த கொன்றைச் சடையவன் புறம்பு செய்த
பாதகம் அறுக்கும் கூடல் பகவன் எவ்வுயிர்க்கும் தானே
போதகன் ஆகித் தேற்றும் புண்ணியன் புலைஞன் செய்த
தீது அகம் உணர்ந்து தண்டம் செய்வதற்கு உள்ளம் கொண்டான்.
1596.
விரை செய் தார் அவன் யான் அங்கம் வெட்டினேன் அல்லேன் நீங்கள்
உரை செய்வது எவன் யார் என்போல் சித்தனை உடன்று மாய்த்து
வரை செய் தோள் விந்தைக்கு ஈந்தார் மற்று இது சுற்றம் வைகைத்
திரை செய் நீர்க் கூடல் எந்தை திரு உளச் செயல் கொல் என்றான்.
1598.
அம்மனை அருளிச் சொன்னபடி எலாம் அருளிச் செய்து
தெம் முனை அடுவாள் வீரர் சித்தனை மாய்த்தார் ஈது
மெய்மை ஆம் என்று கண்ட மைந்தரும் விளம்பக் கேட்டான்
எம்மை ஆளுடை கூடல் இறை விளையாடல் என்றான்.
1599.
கொடியை நேரிடையாள் ஓடும் கொற்ற வாள் இளைஞ ரோடும்
கடிய நான் மாடக் கூடல் கண்ணுதல் அடிக்கீழ்த் தாழ்ந்து
நெடியன் நான் முகனும் தேறா நெறியது சிறிய ஏழை
அடியனேன் அளவிற்றே நின் அருள் விளையாடல் என்றான்.
1613.
கண்டவர் கடிநகர் கடிது ஓடிக் கௌரியன் அடி தொழுது அடி கேள் அம்
கொண்டல் கண் வளர் மதில் வளை கூடல் குடவயின் ஒரு பெரு விடநாகம்
அண்டமும் அகிலமும் ஒரு வாய் இட்டு அயிர வருவதை என நீள் வாய்
விண்டு கொண்டு அனைவதை என லோடும் வெரு வலன் மதிகுல மறவீரன்.
1630.
குண்டு அழல் கணின் எழுந்த அக் கொடிய வெம் பசுவைப்
பண்டு போல் அவர் விடுத்தனர் கூடல் அம் பதிமேல்
உண்டு இல்லையும் எனத் தடுமாற்ற நூல் உரைத்த
பிண்டியான் உரை கொண்டு உழல் பேய் அமண் குண்டர்.
1648.
உலகு அறி கரியாத் தன் பேர் உருவினை இடபக் குன்றாக்
குல உற நிறுவிச் சூக்க வடிவினால் குறுகிக் கூடல்
தலைவனை வணங்க ஈசன் தண் அருள் சுரந்து பண்டை
இலகு உரு ஆகி இங்ஙன் இருக்க என இருத்தினானே.
1651.
அன்னது தெரிந்து விந்தம் அடக்கிய முனி அங்கு எய்தி
மன்னவற்கு ஆக்கம் கூறி மழவிடைக் கொடியோன் கூடல்
பன்னரும் புகழ்மை ஓது பனு வலை அருளிச் செய்ய
முன்னவன் பெருமை கேட்டு முகிழ்த்தகை முடியோன் ஆகி.
1680.
அடியவர் குறைவு தீர்த்து ஆண்டு அருள்வதே விரதம் பூண்ட
கொடி அணி மாடக் கூடல் கோ மகன் காமன் காய்ந்த
பொடி அணி புராணப் புத்தேள் புண்ணியன் அருளினாலே
இடி அதிர்விசும்பு கீறி எழுந்தது ஓர் தெய்வ வாக்கு.
1685.
பொருநரே அனையான் நேர்ந்து போந்து நான் மாடக் கூடல்
கருணை நாயகனைத் தாழ்ந்து கை தொழுது இரந்து வேண்டிப்
பரவி மீண்டு ஒளி வெண் திங்கள் பல் மணிக் குடைக்கீழ் ஏகிக்
குரு மதி மருமான் கோயில் குறுகுவான் குறுகும் எல்லை.
1702.
அறைந்தவர் கழல் கால் சேனை காவலன் அனிகம் தம்தம்
சிறந்த சேண் நாட்டில் செல்லத் செலுத்துவான் போன்று நிற்ப
நிறைந்த நான் மாடக் கூடல் நிருத்தன் அந் நிலை நின்று ஆங்கே
மறைந்தனன் மனித்த வேடம் காட்டிய மறவ ரோடும்.
1703.
கண்டனன் பொருனை நாடன் வியந்தனன் கருத்தா சங்கை
கொண்டனன் குறித்து நோக்கி ஈது நம் கூடல் மேய
அண்டர் தம் பெருமான் செய்த ஆடல் என்று எண்ணிக் கண்ணீர்
விண்டனன் புளகம் போர்ப்ப மெய்யன்பு வடிவம் ஆனான்.
உனக்கு எளி வந்தார் கூடல் உடைய நாயகரே என்றால்
எனக்கு அவர் ஆவார் நீயே என்று அவற்கு யாவும் நல்கி
மனக்கவல்பு இன்றி வாழ்ந்தான் மதி வழி வந்த மைந்தன்.
1710.
கோளா அரவம் அரைக்கு அசைத்த கூடல் பெருமான் குறை இரக்கும்
ஆளாம் அரசன் தவறு சிறிது அகம் கொண்டு அதனைத் திருச் செவியில்
கேளர் போல வாளாதே இருப்ப மனையில் கிடைத்த அமலன்
தாள் ஆதரவு பெற நினைந்து தரையில் கிடந்து துயில் கின்றான்.
1738.
பொய் தவ வடிவாய் வந்து நம் மனைப் பொன்னின் அன்னார்
மெய் தழை கற்பை நாண வேரொடும் களைந்து போன
கைதவன் மாடக் கூடல் கடவுள் என்று எண்ணித் தேர்ந்தார்
செய் தவவலியால் காலம் மூன்றையும் தெரிய வல்லார்.
1739.
கற்புத் திரிந்தார் தமை நோக்கிக் கருத்துத் திரிந்தீர் நீர் ஆழி
வெற்புத் திரிந்த மதில் கூடல் மேய வணிகர் கன்னியராய்ப்
பொற்புத் திரியாது அவதரிப்பீர் போம் என்று இட்ட சாபம் கேட்டு
அற்புத் திரிந்தார் எங்களுக்கு ஈது அகல்வது எப்போது என முனிவர்.
1760.
கொத்து இலங்கு கொன்றை வேய்ந்த கூடல் ஆதி மாட நீள்
பத்தியம் பொன் மருகு அணைந்து வளைபகர்ந்த பரிசு முன்
வைத்து இயம்பினாம் இயக்க மாதர் வேண்ட அட்டமா
சித்தி தந்த திறம் இனித் தெரிந்த வாறு செப்புவாம்.
இரண்டு யோசனைப் புறத்து இறுக்கும் முன்னர் ஒற்றரால்
தெருண்டு தென்னனை மாட நீ கூடல் மேய சிவன் தாள்
சரண் புகுந்து வேண்டுக என்று சார்ந்து தாழ்ந்து கூறுவான்.
1848.
ஆயது ஓர் அமையம் தன்னில் அளவு இலா உயிர்க்கும் ஈன்ற
தாயனார் துலை போல் யார்க்கும் சமநிலை ஆய கூடல்
நாயனார் செழியன் தானை நனந்தலை வேத நாற்கால்
பாயதோர் தண்ணீர்ப் பந்தர் பரப்பி அப் பந்தர் நாப்பண்.
1889.
பலர் புகழ் சுந்தரேச பாத சேகரன் ஆம் தென்னன்
அலை புனல் உடுத்த கூடல் அடிகளுக்கு அன்பன் ஆகிக்
கொலை புணர் வேலால் வெம் கோல் குறும்பு எனும் களைகள் தீர்த்து
மலர் தலை உலகம் என்னும் வான் பயிர் வளர்க்கும் நாளில்.
1890.
பத்துமான் தடம் தேர் நூறு பனைக்கை மா நூற்றுப் பத்துத்
தத்துமான் அயுத மள்ளர் தானை இவ் அளவே ஈட்டி
இத்துணைக்கு ஏற்ப நல்கி எஞ்சிய பொருள்கள் எல்லாம்
சித்து உரு ஆன கூடல் சிவனுக்கே செலுத்தும் மன்னோ.
1898.
கடல் என வருமா ஊர்ந்து கைதவன் சேனை முன்போய்
அடல் அணி மேருக் கோட்டி ஆலவாய் நெடு நாண் பூட்டி
மடல் அவிழ் துழாய்க் கோன் ஆட்டி வாய் எரி புரத்தில் ஊட்டி
மிடல் அணி கூடல் கோமான் வேடு உருவாகி நின்றான்.
1906.
மீனவன் மதுரை மூதுர் மேல் திசைக் கிடங்கில் வீழ
மான வெம் புரவி யோடும் வளவனும் வீழ்ந்தான் கூடல்
கோன் அவன் அருளால் வானோர் குரை கடல் கடையத் தோன்றும்
ஆனையின் எழுந்தான் தென்னன் கோழிவேந்து ஆழ்ந்து போனான்.
1909.
பொடி ஆர்க்கும் மேனிப் புனிதர்க்குப் புனித ஏற்றுத்
கொடியார்க்கு வேதக் குடுமிக்கு இணையான கூடல்
படியார்க்கும் சீர்த்திப் பதி யேர் உழவோருள் நல்லான்
அடியார்க்கு நல்லான் அறத்திற்கும் புகழ்க்கும் நல்லான்.
1927.
கன்னி நான் மாடக் கூடல் கடி நகர் வணிக மாக்கள்
தன்னின் மா நிதிக் கோன் அன்னான் தனபதி என்னும் பேரான்
மன்னினான் அனையான் கற்பின் மடவரல் சுசீலை என்பாள்
பொன்னி நாள் முளரிச் சேக்கைப் புண்ணியத் திருவின் அன்னாள்.
1932.
விளை நிலன் அடிமை பைம் பூண் வெறுக்கை நல் பசுக்கள் ஏனை
வளனும் மாற்றவர் கைக் கொள்ள வன் சிறை இழந்த புள் போல்
தளர் உறு மகனும் தாயும் சார்பு இலாத் தம்மனோர்க்கு ஓர்
களை கணாய் இருக்கும் கூடல் கடவுளே சரணம் என்னா.
1961.
இம் எனப் பலரும் காண மறைந்தவர் இரும் தண் கூடல்
செம்மல் என்று அறிந்து நாய்கச் சிறுவனுக்கு உவகை தூங்க
விம்மிதம் அடைந்து வேந்தன் வரிசைகள் வெறுப்ப நல்கிக்
கைம் மறி வணிகர் கோயில் புதுக்கினான் கனகம் கொண்டு.
1973.
மறையோர்கள் பின்னும் பழி மேலிடு வண்ண நோக்கி
இறையோய் இது நான் முகன் சென்னி இறுத்த கூடல்
அற வேதியனைத் தினம் ஆயிரத் எண்கால் சூழல்
உறவே ஒழிக்கப் படும் இன்னம் உரைப்பக் கேட்டி.
1984.
நிரா மய பரமானந்த நிருத்த நான் மாடக் கூடல்
பராபர இமையா முக்கண் பகவ பார்ப்பதி மணாள
புராதன அகில நாத புண்ணிய மருதவாண
அரா அணி சடையா என்று என்று அளவு இலாத்துதிகள் செய்தான்.
1987.
திருப்பணி பலவும் செய்து தென் திசை வழிக் கொண்டு ஏகிச்
சுருப்பணி நெடு நாண் பூட்டுஞ் சுவைதண்டச் சிலையால்காய்ந்த
மருப்பணி சடையான் கோயில் வழி தொறும் தொழுது போற்றிப்
பொருப் பணி மாடக் கூடல் பொன்னகர் அடைந்தான் மன்னோ.
2037.
தென்னவர் பெரும யான் உன் திரு உள வலனும் கூடல்
முன்னவன் அருளும் ஊட்டும் முயற்ச்சியான் முயன்றுபாடி
அன்னவன் விருது வாங்கி அவனை வீறு அழிப்பன் என்றான்
மன்னவன் நாளைப் பாடு போ என வரைந்து சொன்னான்.
2064.
பாடல் மறையும் தெளியாப் பரமன்
கூடல் கோயில் கொண்டான் என்னே
கூடல் போலக் கொடி ஏனகமும்
ஆடல் அரங்கா அமர்ந்தான் என்னே.
காவலன் கனா நிகழ்ச்சியும் ஒத்தலில் கைக்கும்
பூ அலங்கலான் இஃது நம் பொன் நகர்க் கூடல்
தேவர் தம்பிரான் திரு விளையாட்டு எனத் தெளிந்தான்.
2103.
இத் தொழில் அன்றி வேறு தொழில் இவற்கு இன்மையாலே
பத்திரன் இலம்பாது எய்த பொறுப்பரோ பழனக் கூடல்
சித்தவெம் அடிகள் வேந்தன் பொன்னறைச் செல்வம் வௌவிப்
பத்தர் யாழ் இடத் தோள் ஏந்திப் பாடுவான் காணவைப்பார்.
2123.
மின் அவிரும் செம் பொன் மணி மாடக் கூடல் மேய சிவன் யாம் எழுதி விடுக்கும் மாற்றம்
நன்னர் முகில் எனப் புலவர்க்கு உதவும் சேர நரபாலன் காண்க தன் போல் நம்பால் அன்பன்
இன் இசை யாழ்ப் பத்திரன் தன் மாடே போந்தான் இருநிதியம் கொடுத்து வர விடுப்பதுஎன்னத்
தென்னர் பிரான் திரு முகத்தின் செய்தி நோக்கிச் சோர் பிரான் களிப்பு எல்லை தெரியான் ஆகி.
2141.
ஒண் நுதலாய் வெண் தலை கொண்டு உண் பலிக்கு நம் மனையின் ஊடேகூடல்
கண் நுதலார் உள் ஆளக் கானம் இசைத்து என் உள்ளம் கவர்ந்தார் போலும்
கண் நுதலார் பாடு அவி நயம் கண்டு ஆகம் கலப்பேன் பாதி
பெண் உருவமாய் இருந்தார் வெள்கி விழித்து ஆவி பெற்றேன் போலும்.
2149.
கூடல் அம் பதியில் ஆடக மேருக் கொடிய வில்குரிசில் அடியவனுக்குப்
பாடலின் பரிசில் ஆகிய செம் பொன் பலகை இட்டபடி பாடின மன்னான்
வீடரும் பொருவில் கற்புடையாள் ஓர் விறலி யைப் பரமன் இறை அருள் பற்றி
மாடகம் செறியும் யாழ் வழி பாதி வாது வென்ற வரலாறு இசைப்பாம்.
2156.
ஆடு அமைத் தடம் தோளினாய் அவளொடும் கூடப்
பாட வல்லையோ பகர் எனப் பாடினி பகர்வாள்
கோடரும் தகைக் கற்பும் இக் கூடல் எம் பெருமான்
வீடரும் கருணையும் எனக்கு இருக்கையால் வேந்தே.
2201.
என்னை ஆளுடைய கூடல் ஏக நாயகனே உங்கள்
அன்னையாய் முலைதந்து ஆவி அளித்து மேல் அமைச்சர் ஆக்கிப்
பின்னை ஆனந்த வீடு தரும் எனப் பெண் ஓர் பாகன்
தன்னை ஆதரித்தோன் சொன்னான் பன்னிரு தனயர் தாமும்.
2229.
நீநில் எனத் தன் பெடை தன்னை நிறுத்தி நீத்து என்
கானில் என வாழ் கருமாவின் கணங்கள் எல்லாம்
ஊனில் உயிர் உண்டனம் என்று இனி ஓடல் கூடல்
கோனில் என ஆர்ப்பவன் போலக் கொதித்து நேர்ந்தான்.
2235.
சத்திப் படைமேல் விடு முன்னர்த் தறுகண் வீரன்
பத்திச் சுடர் மாமணித் தார்ப் பரிமாவின் பின் போய்
மொத்திக் குடர் செம்புனல் சோர முடுகிக் கோட்டால்
குத்திச் செகுத்தான் பொறுத்தான் அலன் கூடல் வேந்தன்.
2258.
அனையராய் அவர் வைகு நாள் அறைபுனல் கூடல்
புனித நாயகன் அருள் திறம் உயிர்க்கு எலாம் பொதுவாய்
இனிய ஆவன என்பதை யாவரும் தேற
வனிதை பால் மொழி மங்கைதன் மணாளனை வினவும்.
2280.
ஓர் இடத்து இனைய மூன்று விழுப்பமும் உள்ளது ஆகப்
பார் இடத்து இல்லை ஏனை பதி இடத்து ஒன்றே என்றும்
சிர் உடைத்து ஆகும் கூடல் செழும் நகர் இடத்தும் மூன்றும்
பேர் உடைத்து ஆகும் என்றால் பிறிது ஒரு பதி யாது என்றான்.
2283.
ஆய் மலர்க் கான நீங்கி ஆடக மாடக் கூடல்
போய் மலர்க் கனக கஞ்சப் புண்ணியப் புனல் தோய்ந்து ஆம்பல்
வாய் மலர்க் கயல் உண் கண்ணாள் மணாளனை வலம் செய்து அன்பில்
தோய் மலர் கழல் இனானை அகத்தினால் தொழுது அர்ச்சித்தே.
2308.
தன் நிகர் தவத்தோர் யாரும் தடம் படிந்து ஏறி நித்த
மன்னிய கருமம் முற்றிச் சந்தியா மடத்தில் வைகி
மின்னிய மகுடம் சூடி வேந்தனாய் உலகம் காத்த
பொன்னியல் சடையான் கூடல் புராண நூல் ஒதுகின்றார்.
2309.
அண்ணல் எம் பெருமான் செய்த அருள் விளையாட்டும் ஆதிப்
பண்ணவன் சிறப்பும் கூடல் பழம் பதிச் சிறப்பும் தீர்த்தத்
தெண்ணரும் சிறப்பும் சேர்ந்தோர்க்கு எளிவரும் இறைவன் என்னும்
வண்ணமும் எடுத்துக் கூறக் கேட்டு அங்கு வதியும் நாரை.
2310.
மடம்படு அறிவும் நீங்கி வல்வினைப் பாசம் வீசித்
திடம்படு அறிவு கூர்ந்து சிவ பரஞ்சோதி பாதத்து
திடம்படு அன்பு வா என்று ஈர்த்து எழ எழுந்து நாரை
தடம் படு மாடக் கூடல் தனி நகர் அடைந்து மாதோ.
2310.
மடம்படு அறிவும் நீங்கி வல்வினைப் பாசம் வீசித்
திடம்படு அறிவு கூர்ந்து சிவ பரஞ்சோதி பாதத்து
திடம்படு அன்பு வா என்று ஈர்த்து எழ எழுந்து நாரை
தடம் படு மாடக் கூடல் தனி நகர் அடைந்து மாதோ.
2323.
வேதன் நெடு மால் ஆதி விண் நாடர் மண் நாடர் விரத யோகர்
மாதவர் யாவரும் காண மணி முறுவல் சிறிது அரும்பி மாடக் கூடல்
நாதன் இரு திருக் கரம் தொட்டு அம்மியின் மேல் வைத்தகையான் நாட்டச் செல்வி
பாதமலர் எழுபிறவிக் கடல் நீந்தும் புணை என்பர் பற்று இலாதோர்.
2324.
ஓலவாய் மறைகள் தேறா ஒருவன் தன் உலகம் தன்னைச்
சேலவாய் உழலும் நாரைக்கு அருளிய செயல் ஈது அம்ம
நீலவாய் மணி நேர் கண்ட நெடிய நான் மாடக் கூடல்
ஆலவாய் ஆகச் செய்த அருள் திறம் எடுத்துச் சொல்வாம்.
2388.
புரத்தினுள் உயர்ந்த கூடல் புண்ணியன் எழுதி எய்த
சரத்தினுள் அவிந்தார் சென்னிக்கு உற்றுழிச் சார்வாய் வந்த
அரத்தினை அறுக்கும் வை வேல் அயல் புல வேந்தர் நச்சு
மரத்தினை அடுத்து சந்துங் கதழ் எரி மடுத்தது என்ன.
2410.
மறையினால் ஒழுகும் பன்மாண் கலைகள் போல் மாண்ட கேள்வித்
துறையின் ஆறு ஒழுகும் சான்றோர் சூழ மீண்டு ஏகிக் கூடல்
கறையினார் கண்டத்தாரைப் பணிவித்துக் கரந்தார் ஒற்றைப்
பிறையினார் மகுடத் தோற்றத்தார் அறிஞராய் வந்த பெம்மான்.
2434.
மன்னவர் மன்னன் வங்கிய சூடா மணி மாறன்
தென்னவர் ஆகித் திகிரி உருட்டும் தென்கூடல்
முன்னவர் அன்னம் கண்டு அறியாத முடிக்கு ஏற்றப்
பன் மலர் நல்கு நந்தனம் வைக்கும் பணி பூண்டான்
2440.
அன்னது ஒர் நாமம் பெற்றனர் இன்று மணிக் கூடல்
முன்னவர் அந்தத் தாமம் அவர்க்கு முடிக்கு ஏற்றும்
இன்னது ஓர் நீரார் சண்பக மாறன் என்ற பேர்
மன்னி விளங்கினன் வங்கிய சூடா மணிதானும்.
2454.
நிலம் தரு திருவின் ஆன்ற நிழல் மணி மாடக் கூடல்
வலந்தரு தடம் தோள் மைந்தர் வானமும் வீழும் போக
நலம் தரு மகளிரோடு நாக நாடவர் தம் செல்வப்
பொலம் தரு அனைய காட்சிப் பூம் பொழில் நுகர் வான் போவார்.
2566.
சம்பக மாறன் என்னும் தமிழ்நர்தம் பெருமான் கூடல்
அம்பகல் நுதலினானை அங்கயல் கண்ணி னாளை
வம் பக நிறைந்த செந்தா மரை அடி வந்து தாழ்ந்து
நம்பக நிறைந்த அன்பால் பல் பணி நடாத்தி வைகும்.
2567.
கொன்றை அம் தெரியல் வேய்ந்த கூடல் எம் பெருமான் செம்பொன்
மன்றல் அம் கமலத்து ஆழ்ந்து வழிபடு நாவலோனை
அன்று அகன் கரை ஏறிட்ட அருள் உரை செய்தேம் இப்பால்
தென் தமிழ் அனையான் தேறத் தெருட்டிய திறனும் சொல்வாம்.
2568.
முன்பு நான் மாடக் கூடல் முழு முதல் ஆணையால் போய்
இன்புற அறிஞர் ஈட்டத்து எய்தி ஆங்கு உறையும் கீரன்
வன்புறு கோட்டம் தீர்ந்து மதுரை எம் பெருமான் தாளில்
அன்பு உறு மனத்தன் ஆகி ஆய்ந்து மற்று இதனைச் செய்வான்.
2571.
மையறு மனத்தான் வந்து வழிபடு நியமம் நோக்கிப்
பை அரவாரம் பூண்ட பரஞ்சுடர் மாடக் கூடல்
ஐயனும் அணியன் ஆகி அகம் மகிழ்ந்து அவனுக்கு ஒன்று
செய்ய நல் கருணை பூத்து திரு உளத்து இதனைத் தேர்வான்.
2634.
தென்னவன் இன்ன வண்ணம் ஏத்தினான் செம் பொன் கூடல்
மன்னவன் கேட்டா ஆகாய வாணியால் வைகை நாட
உன்னது சோத்த நாம் கேட்டு உவந்தனம் இனிய தாயிற்று
இன்னம் ஒன்று உளது கேட்டி என்றனன் அருளிச் செய்வான்.
2650.
அந்தம் இல் அழகன் கூடல் ஆலவாய் அமர்ந்த நீல
சுந்தரன் உலகம் ஈன்ற கன்னிஅம் கயல் கண்ணாள் ஆம்
கொந்து அவிழ் அலங்கல் கூந்தல் கொடிக்கு வேறு இடத்து வைகி
மந்தணம் ஆன வேத மறைப் பொருள் உணர்த்தும் மாதோ.
2656.
வரை பக எறிந்த கூர்வேல் மைந்தனும் தந்தை கையில்
உரை பெறு போத நுலை ஒல் எனப் பறித்து வல்லே
திரை புக எறிந்தான் ஆகச் செல்வ நான் மாடக் கூடல்
நரை விடை உடைய நாதன் நந்தியை வெகுண்டு நோக்கா.
2674.
பிள்ளை இன்மை யெற்கு இரங்கி எம் பிரான் தமிழ்க் கூடல்
வள்ளல் நல்கிய மகவு இதுவே என வலத்தோள்
துள்ள அன்பு கூர் தொடுத்து திருத் தோள் உறப் புல்லித்
தள்ளரும் தகைக் கற்பினாள் தனது கைக் கொடுத்தான்.
2785.
எழுந்தார் உடைய பெருந்துறையார் இருந்தாள் பணிந்தார் இனி இப் பிறப்பில்
அழுந்தார் வழிக் கொண்டார் அடைந்தார் அகன்றார் நெறிகள் அவிர் திங்கள்
கொழுந்தார் சடையார் விடையார் தென் கூடல் அடைந்தார் பாடு அளி வண்டு
உழும் தார் வேந்தன் பொன் கோயில் உற்றார் காணப் பெற்றார் ஆல்.
2823.
என்று இரங்குவோர் இரங்கு ஒலி இளம் சிறார் அழுகை
சென்று தாயார் தம் செவித் துளை நுழைந்து எனச் செல்லக்
குன்று இரும் சிலை கோட்டிய கூடல் நாயகன் கேட்டு
அன்று வன் சிறை நீக்குவான் திரு உளத்து அமைத்தான்.
2867.
நெஞ்சே உரையே செயலே எல்லா நின வென்றாய்
வஞ்சே போலும் அஃதேல் இன்று வாராயோ
பஞ்சேர் அடியாள் பாகா கூடல் பரமேட்டீ
அஞ்சேல் என்னாய் இது வோ அருளுக்கு அழகு ஐயா.
2878.
--------------------------------
பெரு பெயர் கூடல் அன்ன நின் 10
கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே
அரும்பு அவிழ் பூஞ்சினை தோறும் இருங் குயில்
ஆனாது அகவும் பொழுதினான் மேவர
நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும்
தேன் இமிர் காவில் புணர்ந்து இருந்து ஆடுமார்
ஆனா விருப்போடு அணி அயர்ப காமற்கு
வேனில் விருந்து எதிர்கொண்டு
நான்மாடக்கூடல் (65) – நச்சினார்க்கினியர் உரை – நான்கு மாடம் கூடலின் ‘நான் மாடக் கூடல்’ என்றாயிற்று. அவை திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர்
எம் மனை வாராயாகி முன்னாள்
நும் மனைச் சேர்ந்த ஞான்றை அம்மனைக்
குறுந்தொடி மடந்தை உவந்தனள் நெடுந்தேர்
இழை அணி யானைப் பழையன் மாறன்
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண் 20
வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த
கிள்ளி வளவன் நல் அமர் சாஅய்க்
கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி
ஏதின் மன்னர் ஊர் கொளக்
கோதை மார்பன் உவகையின் பெரிதே
நெடு நல் யானை அடு போர்ச் செழியன்
கொடி நுடங்கு மறுகின் கூடல் குடாஅது
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய 15
ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து