மச்சவதாரம் கிருதமால் வையை மதுரை கூடல் பாண்டியன்
Saturday, 23 April 2022
மணலூர் கூடல் முடத்திருமாறன் பற்றிய தகவல்
செந்தமிழ் பக்கம் 246
ஆகவே ஒவ்வொரு மன்னனது ‘சராசரி’ ஆட்சிக்காலம் சற்றேறக் குறைய முப்பத்தெட்டு ஆண்டுகளாகும். கடைச் சங்க காலத்துப் பாண்டியர் நாற்பத்தொன்பதின்மருள் சிலரது பெயர்களே நற்றினை, குறுந்தொகை, பரிபாடல், அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களால் அறியப்படுகின்றன. அவர்களுள் பாண்டியன் முடத்திருமாறன் என்பவனே மிகப் பழமை வாய்ந்தவன் என்பது களவியலுரையால் பெறப்படுகின்றது. எனவே அவன் வரலாற்றை முதலில் ஆராய்வோம்.
பாண்டியன் முடித்திருமாறன் -
குமரிநாடு கடல்கோளால் அழிந்த பின்னர், குமரியாற்றிற்கும் தாம்பிரபருணியாற்றிற்கும் இடையிலுள்ள நிலப்பரப்பில் தங்கியிருந்த தமிழ்மக்களுக்குத் தலைநகராயிருந்த கபாடபுரத்தில் வீற்றிருந்து அரசாண்ட பாண்டிய அரசர் ஐம்பத்தொன்பதின்மருள் இவ்வேந்தனே இறுதியில் வாழ்ந்தவன் ஆவன். ஆகவே, இவன் இடைச்சங்கத்தின் இறுதியில் இருந்தவன் ஆதல் வேண்டும்.
இவன் காலத்தில் நிகழ்ந்த ஒரு கடல்கோளால் பாண்டியநாட்டின் பெரும்பகுதியும் அதன் தலைநகராகிய கபாடபுரமும் அழிந்தொழிந்தன.(இறையனார் அகப்பொருளுரை - பக்கம் 5)
இக்கடல்கோளினால் எண்ணிறந்த தமிழ்நூல்கள் இறந்தன. இச்செய்தியை,
“ஏரண முருவம் யோக மிசைகணக் கிரதஞ் சாலந்
தாரண மறமே சந்தந் தம்பநீர் நிலமு லோகம்
மாரணம் பொருளென் றின்ன மானநூல் யாவும் வாரி
வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள”
என்னும் பழைய பாடலும் உணர்த்துதல் காண்க. தமிழ்மக்கள் செய்த தவப்பயனால் எஞ்சிநின்ற நூல் தொல்காப்பியம் ஒன்றேயாகும். இக் கடல்கோளுக்குத் தப்பியுய்ந்த பாண்டியன் முடத்திருமாறனும் செந்தமிழ்ப் புலவர்களும் சிறிது வடக்கே சென்று மணலூர் என்னும் ஒரு சிறு நகரத்தில் தங்கினார்கள். இவர்கள் சிலகாலம் அந்நகரில் தங்கியிருந்து, பின்னர், மதுரை என்று தற்காலத்து வழங்கும் கூடன்மா நகரையடைந்தனர். இப்பாண்டியனும் அந்நகரை வளம்படுத்தித் தனக்குரிய தலைநகராகக் கொண்டு கடைச் சங்கத்தை அங்கு நிறுவினான்(இறையனார் அகப்பொருளுரை - பக்கம் 5)
பல நல்லிசைப் புலவர்கள் தமிழாராய்ச்சி செய்யத் தொடங்கிப் பற்பல அரிய செந்தமிழ் நூல்கள் இயற்றுவாராயினர். இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழும் உயர்நிலை எய்தின. எனவே, கடைச் சங்கத்தை ........
-----------------------------------------------
நன்றி - இத் தகவலை வழங்கியவர்
சிந்துவெளி முத்திரைகள் தமிழ் எழுத்துக்களே என நிறுவி வரும்,
திருச்சிராப்பள்ளி ஐயா “போஸ்” அவர்கள்
Tuesday, 3 March 2020
‘சுர்’ என்று வற்றிய சுனாமி (கடல்கோள்)
கடலுக்கு அரசன் வருணன். வருணனுக்குத் தலைவன் இந்திரன். இந்திரன் வருணனை அழைத்து, நீ விரைந்து சென்று, பெரிய கடல் சூழ்ந்த ஏழு தீவுகளையும், சினந்து வளைந்து, அரிய காவலையுடைய “மதுரையை அழிப்பாயாக” என்று கூறி ஏவினான் (பாடல் எண் 1037). கடலுக்கு அரசனாகிய வருணனும், பேயும் கண்ணுறங்கும் நடு இரவில், குருட்டிருளில் நேரத்தில், வளம் பொருந்திய கழனி சூழ்ந்த மதுரைப் பதியைச் சூழ்ந்து, விரைவாக அழிக்கக் கருதினான்.
கடலானது, கொதித்து பொங்கி, அலையாகிய கைகள், அண்டகூட முழுதும் ஊடுருவிச் சென்று, நடுக்க முண்டாக்கி வருத்த, ஊழிக்காலத்தில் ஆரவாரித்து அழிக்கும் வெள்ளமாய், சந்திர மண்டலத்தை எட்டிப் பொருந்தி, வருகின்ற ஒரு கரிய மலை தோன்னாற்போல, மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் அஞ்சுமாறு வந்தது(பாடல் எண் 1039).
கப்பல்கள் செல்லும் கடல்நீரானது மதுரை மாளிகைகள் மீது செல்லுதல் -
மரக்கலங்கள் செல்லும் கடலின் வெள்ளமானது, மாடங்களையுடைய மதுரைப்பதியின் மீது வருகின்ற தன்மை, இரவினிடத்ததாகிய சந்திரன்மேல், நஞ்சு பொருந்திய வாயினையுடைய, கரிய உடலையும் வெவ்விய கண்களையும் உடைய கொடிய இராசு என்னும் பாம்பானது, அதனை விழுங்குதற்கு விரைந்து வருதலைப் போலும்(பாடல் எண் 1040); இது மேகங்கள், மதுரையை மறைத்தற்கு வருதலைப் போன்று இருந்தது. இப்படியில்லாமல் இதை வேறு எப்படிக் கூறுவது?
பாண்டியனுடன் போருக்கு வந்த கடல் -
மேலும், வட்டமாகிய ஆமைகள் கேடகங்களாக, வாள்கள் எறிகின்ற வாளை மீன்கள் வாட் படைகளாக, சுறா மீன்கள் நெற்றிப் பட்டத்தையுடைய யானைகளாக, பரந்த அலைக்கூட்டங்கள் தாவுகின்ற குதிரைக் கூட்டங்களாக, ஓடவிட்ட தோணிகள் தேர்களாக, இத் தன்மையன விரவிய சேனையோடு, கடலானது எட்டுத் திசைகளிலும் சூழ்ந்து உக்கிர பாண்டியன்மேல் போருக்கு எழுந்ததைப் போன்று இருந்தது.
இங்ஙனம் எழுந்த கடலானது மதுரையை நெருங்கும் போது, முகில் உறங்கப் பெறும் மதில் சூழ்ந்த நல்ல அம்மதுரைப்பதியின், கிழக்குத் திக்கில் வந்து நெருங்கு மளவில், நடு இரவில், பாண்டி மன்னன் கனவில் கண், வெள்ளியம்பலவாணர்,ஒரு சித்த மூர்த்தியாய், முன்னே தோன்றி, அரும்புகின்ற புன்னகை தோன்ற மொழிகின்றார்.
சுர் என வற்றிய சுனாமி - (உடனே) எடுத்த வேற்படையை வலமாகச் சுழற்றி வீசியபோது, வேலின் நுதியிற் பொருந்திய கடலானது, சுஃறென்னும் ஒலியுண்டாக நீர் வற்றி, மிக்க வலியானது அழிய, நெருங்கி, மணம் பொருந்திய வெற்றி மாலை இல்லையாகத் தோல்வியுற்று அடிகளில் வணங்கும் பகைவரைப் போன்று, அந்த வேற்போரில் வல்ல உக்கிரவழுதியின் கணைக்காலின் அளவில் ஆயிற்று.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
திருவிளையாடற் புராணம் ஆராய்ச்சியாளர்,
திருப்பூவணப் புராணம் ஆராய்ச்சியாளர்,
காளையார்கோயில் புராணம் ஆராய்ச்சியாளர்.
----------------------------------------------------------------------------
கடல்கோள் குறித்த திருவிளையாடற் பாடல்கள் -
பொருங்கடல் வேந்தனைக் கூவிப் பொள்ளென
இருங்கட லுடுத்தபா ரேமு மூழிநாள்
ஒருங்கடுவெள்ளமொத் துருத்துப் போய்வளைந்
தருங்கடி மதுரையை யழித்தியா லென்றான்.(1037)
விளைவது தெரிகிலேன் வேலை வேந்தனும்
வளவயன் மதுரையை வளைந்திட் டிம்மெனக்
களைவது கருதினான் பேயுங் கண்படை
கொளவரு நனந்தலைக் குருட்டுக் கங்குல்வாய்.(1038)
கொதித்த லைக்க ரங்க ளண்ட கூட மெங்கு மூடுபோய்
அதிர்த்த லைக்க வூழி நாளி லார்த்த லைக்கு நீத்தமாய்
மதித்த லத்தை யெட்டி முட்டி வருமொ ரஞ்ச னப்பொருப்
புதித்த தொத்து மண்ணும் விண்ணு முட்க வந்த துததியே.(1039)
வங்க வேள் வெள்ள மாட மதுரை மீது வருசெயல்
கங்குல் வாய திங்கண் மீது காரி வாய காருடல்
வெங்கண் வாள ராவி ழுங்க வீழ்வ தொக்கு மலதுகார்
அங்கண்மூட வருவ தொக்கு மல்ல தேது சொல்வதே.(1040)
வட்ட யாமை பலகை வீசு வாளை வாள்கள் மகரமே
பட்ட யானை பாய்தி ரைப்ப ரப்பு வாம்ப ரித்திரள்
விட்ட தோணி யிரத மின்ன விரவு தானை யொடுகடல்
அட்ட மாக வழுதி மேல மர்க்கெ ழுந்த தொக்குமே.(1041)
இன்ன வாறெ ழுந்த வேலை மஞ்சு றங்கு மிஞ்சிசூழ்
நன்ன கர்க்கு ணக்கின் வந்து நணுகு மெல்லை யரையிரா
மன்ன வன்க னாவின் வெள்ளி மன்ற வாணர் சித்தராய்
முன்னர் வந்தி ருந்த ரும்பு முறுவ றோன்ற மொழிகுவார்.(1042)
வழுதி யுன்ற னகர ழிக்க வருவ தாழி வல்லைணீ
எழுதி போதி வென்றி வேலெ றிந்து வாகை பெறுகெனத்
தொழுத செங்க ரத்தி னான்று திக்கு நாவி னானெழீஇக்
கழுது றங்கு கங்கு லிற்க னாவு ணர்ந்து காவலான்.(1043)
கனவில் வந்த வேடர் நனவில் வந்து காவலோன்
நினைவு கண்டு பொழுது தாழ நிற்ப தென்கொ லப்பனே
சினவி வேலை போல வந்த தெவ்வை மான வலிகெட
முனைய வேலெ றிந்து ஞால முடிவு தீர்த்தி யாலென.(1044)
எடுத்த வேல்வ லந்தி ரித்தெ றிந்த வேலை வேன்முனை
மடுத்த வேலை சுஃறெ னவ்வ றந்து மான வலிகெட
அடுத்து வேரி வாகை யின்றி யடிவ ணங்கு தெவ்வரைக்
கடுத்த வேல்வ லான்க ணைக் காலின் மட்ட மானதே.(1045)
எடுத்த வேல்வ லந்தி ரித்தெ றிந்த வேலை வேன்முனை
மடுத்த வேலை சுஃறெ னவ்வ றந்து மான வலிகெட
அடுத்து வேரி வாகை யின்றி யடிவ ணங்கு தெவ்வரைக்
கடுத்த வேல்வ லான்க ணைக் காலின் மட்ட மானதே.(1046)
சந்த வேத வேள்வி யைத்த டுப்ப தன்றி யுலகெலாஞ்
சிந்த வேறு சூழ்ச்சி செய்த தேவர் கோவி னேவலால்
வந்த வேலை வலிய ழிந்த வஞ்ச கர்க்கு நன்றிசெய்
திந்த வேலை வலியி ழப்ப தென்று முள்ள தேகொலாம்.(1047)
புண்ணிடை நுழைந்த வேலாற் புணரியைப் புறங்கண் டோன்பால்
மண்ணிடை நின்ற சித்தர் வானிடை மறைந்து* ஞானக்
கண்ணிடை நிறைந்து தோன்றுங் கருணையால் வடிவங் கொண்டு
விண்ணிடை யணங்கி னோடு விடையிடை விளங்கி நின்றார்.(1048)
முக்கணும் புயங்க ணான்கு முளைமதிக் கண்ணி வேய்ந்த
செக்கரஞ் சடையுங் காள கண்டமுந் தெரிந்து தென்னன்
பக்கமே பணிந்தெ ழுந்து பரந்தபே ரன்புந் தானுந்
தக்கவஞ் சலிசெய் தேத்தித் தரைமிசை நடந்து செல்வான்.(1049)
----------------------------------------------
Thursday, 29 August 2019
கீழடி (ஆலவாய் என்ற மதுரை) அழிந்தது எவ்வாறு?
கீழடி அருகே தொல்லியல்துறையினரால் அகழாய்வு செய்யப்பட்டு வரும் இந்த ஊரின் பெயர் மதுரை என்றும், இப்போதுள்ள மதுரை நகரம் உருவாக்கப்பெற்ற பின்னர் இந்த நகரில் இருந்தோர் அனைவரும் இந்த ஊரைக் காலிசெய்துவிட்டுப் புதிதாக நிருமானிக்கப் பெற்ற இன்றைய மதுரைநகருக்குக் குடிபெயர்ந்து சென்றனர் என்றும் திருவிளையாடல் புராணம் குறிப்பிடுகிறது.
“வங்கக் கடல்வெள்ளத்தால், அதாவது கடல்கோளால் (பெருஞ் சுனாமியினால்) இந்த மதுரை மாநகரம் அழிந்தது” என்கிறது திருவிளையாடற் புராணம். ஆனால் இந்த நகரத்திற்குக் கிழக்கே சுமார் 100 கி.மீ. தொலைவில் வங்கக் கடல் உள்ளது. எனவே “இவ்வளவு பெருந்தொலைவு கடலானது தரையைக் கடந்து வந்து இந்த நகரை அழித்திருக்க வாய்ப்பு இல்லை” என்று அறிஞர் பலரும் கூறுகின்றனர்.
சில அறிஞர்கள் வைகை ஆற்றுப் பெருக்கால் அழிந்திருக்கலாம் என்று கருத்துத் தெரிவிக்கின்றனர்.
அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தப் பண்டைய மதுரை மாநகரம் எவ்வாறு அழிந்தது? என்பதே நம் முன் நிற்கும் கேள்வி.
புராணம் கூறுவது உண்மையா? அறிஞர்களின் கருத்து உண்மையா?
உண்மையில் நடந்தது என்ன எனக் கண்டறிய ஏதேனும் வழிவகை உள்ளதா?
உள்ளது.
புதைந்துள்ள இந்த நகரத்தில் கண்டுபிடிக்கப் பெற்றுள்ள கழிவுநீர்க் குழாயின் சிதைந்த பாகங்கள் எந்தத் திசையில் கிடக்கின்றன என்பதைக் கொண்டு, இந்த நகரம் கடல்கோளால் அழிந்ததா? அல்லது வைகை ஆற்று வெள்ளத்தால் அழிந்ததா? என்று எளிதில் கண்டறிந்து விடலாம்.
புதைந்துள்ள நகருக்குக் கிழக்கே வங்கக்கடல் உள்ளது. வைகை ஆறு மேற்கில் இருந்து கிழக்காக ஓடுகிறது.
எனவே கண்டுபிடிக்கப் பெற்றுள்ள கழிவூநீர்க்குழாய் அதனுடைய இருப்பிடத்திற்கு மேற்குத்திசையில் கண்டறியப்பட்டிருந்தால், இந்த நகரம் கிழக்கே யிருந்து வந்த கடல்வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு மேற்கே கிடக்கிறது என்பதை உறுதி செய்யலாம்.
மாறாக, இந்தக் கழிவுநீர்க் குழாயானது அதனுடைய இருப்பிடத்திற்குக் கிழக்குத் திசையில் கண்டறியப்பட்டால், இந்த நகரமானது மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்ந்து வந்த வைகை ஆற்று வெள்ளத்தால் அழிந்துள்ளது எனக் கண்டறிய முடியும்.
“புதையுண்டுள்ள இந் நகரம் எவ்வாறு அழிந்தது?” என்று இந்தக் கழிவூநீர்க் குழாயிடம் கேளுங்கள், அது சொல்லும் இந்தத் தொன்மையான ஆலவாய் நகரம் எப்படி அழிந்தது என்று !
அன்பன்
காசீசீர், முனைவர், நா.ரா.கி.காளைராசன்
ஆவணி 12 (29.08.2019) விழாயன் கிழமை
பார்வை - திஇந்து நாளிதழ் செய்தி.
திருப்புவனம் - சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணில் செய்யப்பட்ட கழிவு நீர் குழாய் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கழிவு நீர் செல்ல தமிழர்கள் குழாய் வசதி ஏற்படுத்தியிருப்பது தொல்லியல் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு ஜூன் 13-ம் தேதி முதல் நடைபெறு கிறது. முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போதகுரு, நீதி ஆகியோரது நிலங்களில் 30 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதுவரை மணிகள், அணிகலன் கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருட்கள், செப்புக் காசுகள், உணவு குவளை, தண்ணீர் மக் உட்பட 700-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள் ளன. மேலும் அதிகளவில் சுவர் களும் கிடைத்தன. 2 தினங்களுக்கு முன் முரு கேசன் என்பவரது நிலத்தில் செங்கற் களால் கட்டப்பட்ட குளியல் தொட்டி கண்டெடுக்கப்பட்டது. நேற்று முன் தினம் நீதி என்பவரது நிலத்தில் வடிகால் சுவர் கண்டுபிடிக்கப் பட்டது.
மேலும் அவரது நிலத்தில் நேற்று சுடுமண்ணில் செய்யப்பட்ட கழிவு நீர் குழாய் கண்டுபிடிக்கப்பட்டது.
https://static.hindutamil.in/hindu/uploads/news/2019/08/29/large/513341.jpg
இதன் மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கழிவு நீர் செல்ல தமிழர்கள் குழாய் வசதி ஏற்படுத்தியிருப்பது தெரியவந்தது.
https://www.hindutamil.in/news/tamilnadu/513341-discovery-of-underground-hot-tub-1.html
Thursday, 27 June 2019
எழுகடல் தெரு பெயர்க்காரணம்
ஒருமுறை கடல் பொங்கி (சுனாமி) மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரர் திருக்கோயில் சந்நிதிவரை வந்து விட்டது என்றும், அதனால் அந்தத் தெருவிற்கு “எழுகடல் தெரு” என்று பெயர் உண்டானது என்றும் திருவிளையாடல் புராணம் குறிப்பிடுகிறது.
இறைவனது திருவுளம் அறிந்த ஏழு கடல்களும் ஆரவாரித்து, சந்திரனைத் துண்டு செய்தது போன்ற வடிவத்தை உடைய, சுரிந்த முகத்தினையுடைய சங்குகள் வாய்விட்டுச் சத்தம் எழுப்பும் படியாக அவற்றைத் தள்ளிக் கொண்டு, மிக வெள்ளிய நுரைகள் ததும்ப, ஆண் சுறாக்கள் மேலே சுழல, குளிர்ந்த முத்துக் கூட்டங்களை எடுத்து வீசிக் கொண்டு, அலையலையாக வரிசையாக, அண்டத்தின் நெடிய முகட்டினைத் தடவும் அளவிற்கு உயர்ந்து எழுந்தன. கடல் பொங்கி எழுந்து வருவதைக் கண்ட மதுரை நகர மக்கள் நடுங்கினர். கலியுக முடிவின் போது பிரமனுடைய படைப்புப் பொருள்கள் அழியுமாறு எழுதல் போல கடல்கள் பொங்கி எழுத்தன. பொங்கி எழுந்த ஏழு கடல்களும், பாம்பினையணிந்த சிவபெருமானது திருவடியைச் சென்று அடைந்தவர் போல, கிழக்கே இருந்த குளத்தில் சென்று அடங்கின. இதனால், பொன்னிறமுடைய தாமரை மலர்ந்து இருந்த அந்தக் குளத்தில், ஏழு கடலின் வெவ்வேறு நிறங்களும் கலந்து சிவபெருமானுடைய எட்டு வகையான வண்ணங்களில் அந்த குளம் விளங்கியது.