Wednesday 16 November 2022

திருவிளையாடற் புராணத்தில் 'சுந்தர' என்ற சொல் உள்ள பாடல்களின் தொகுப்பு

 


திருவிளையாடற் புராணத்தில்

'சுந்தர' என்ற சொல் உள்ள பாடல்களின் தொகுப்பு

11.

சடை மறைத்துக் கதிர் மகுடம் தரித்து நறும் கொன்றை அம் தார் தணந்து வேப்பம்

தொடை முடித்து விட நாகக் கலன் அகற்றி மாணிக்கச் சுடர்ப் பூண் ஏந்தி

விடை நிறுத்திக் கயல் எடுத்து வழுதி மரு மகன் ஆகி மீன நோக்கின்

மடவரலை மணந்து உலக முழுது ஆண்ட சுந்தரனை வணக்கம் செய்வாம்.

27.

நாயகன் கவிக்கும் குற்ற நாட்டிய கழக மாந்தர்

மேய அத் தலத்தினோர்க்கு என் வெள்ளறி உரையில்  குற்றம்

ஆயுமாறு அரிது அன்றேனு நீர் பிரித்து அன்னம்  உண்ணும்

தூய தீம் பால் போல் கொள்க சுந்தரன் சரிதம்   தன்னை.

30.

அல்லை ஈது அல்லை ஈது என மறைகளும் அன்மைச்

சொல்லின் ஆற்றுதித் திளைக்கும் இச் சுந்தரன் ஆடற்கு

எல்லை ஆகுமோ என் உரை என் செய்கோ இதனைச்

சொல்லுவேன் எனும் ஆசை என் சொல் வழி கேளா.

32.

கறை நிறுத்திய கந்தர சுந்தரக் கடவுள்

உறை நிறுத்திய வாளினால் பகை இருள் ஒதுக்கி

மறை நிறுத்திய வழியினால் வழுதியாய்ச் செங்கோன்

முறை நிறுத்திய பாண்டிய நாட்டு அணி அது  மொழிவாம்.

36.

சுந்தரன் திரு முடி மிசைத் தூய நீர் ஆட்டும்

இந்திரன் தனை ஒத்த கார் எழிலி தென் மலை மேல்

வந்து பெய்வ அத்தனி முதல் மௌலிமேல் வலாரி

சிந்து கின்ற கைப் போது எனப் பல் மணி தெறிப்ப.

185.

சுரந்து தேன் துளித்து அலர்களும் சொரிந்து வண்டு   அரற்ற

நிரந்து சுந்தரற்கு ஒரு சிறை நின்ற பூம் கடம் பு

பரந்து கண் புனல் உகப் பல மலர்கள் தூய்ப் பழிச்சி

இரந்து நின்று அருச்சனை செயும் இந்திரன் நிகரும்.

233.

நாட்டம் ஒரு மூன்று உடைய நாயகனுக்கு அன்பு உடையீர் நயந்து நீவிர்

கேட்ட தலம் ஈண்டு உரைத்த திருவால வாய் அதனுள் கிளைத்துப் பொன்னம்

தோட்டலர் தாமரை முளைத்த தொரு தடமும் சுந்தரச்  செம் சோதி ஞான

ஈட்டம் என முளைத்த சிவலிங்கம் ஒன்று உள இன்னும் இசைப்பக் கேண்மின்.

234.

திருவால வாய்க்கு இணையா ஒருதலமும் தெய்வ மணம் செய்ய பூத்த

மருவார் பொன் கமல நிகர் தீர்த்தமும் அத் தீர்த்தத்தின் மருங்கின் ஞான

உருவாகி உறை சோம சுந்தரன் போல் இகபரம் தந்து உலவா வீடு

தருவானும் முப்புவனத் தினும் இல்லை உண்மை இது சாற்றின் மன்னோ.

257.

ஆற்றினுக்கு அரசு ஆம் கங்கை காவிரி ஆதி ஆறும்

வேற்று உருவாய் முந்நீர் வேலையும் பிறவும் காரும்

தோற்றுமுன் தன்னை ஆட்டச் சுந்தர மூர்த்தி செம்கண்

ஏற்றினன் கண்ட தீர்த்தம் ஆகும் ஈது எவ்வாறு என்னின்.  

258.

அகளமா உலகம் எல்லாம் ஒடுக்கி அந் நெறியே யார்க்கும்

நிகளம் ஆம் விருத்தி தோன்ற நினைவு அற   நினைந்து நிற்கும்

துகள் இலா அறிவானந்த சுந்தரச் சோதி மேனாட்

சகள மா உருவம் கொண்டு தான் ஒரு    விளையாட்டாலே.

271.

அந்தமா நீர் நந்தி ஆதியோர் விதியால் சோம

சுந்தரன் முடிமேல் ஆட்டித் துகள் அறப்பூசை ஆற்றிச்

சிந்தையில் விழைந்த எல்லாம் அடைந்தனர்  செம்பொன் கஞ்சம்

வந்தவாறு இது அத்திர்த்த மகிமையும் உரைப்பக்   கேண்மின்.

295.

இந்த மா இலிங்கத்து எண் நான்கு இலக்கண விச்சை  மேனி

அந்தம் இல் அழகன் பாகத்து உமையொடு அழகு  செய்து

சந்ததம் விளக்கம் செய்யும் தகைமையை நோக்கிச்  சோம

சுந்தரன் என்று நாமம் சாத்தினர் துறக்க வாணர்.

296.

திறப்படு உலகம் எங்கும் வியாபியாய்ச் சிறந்து  நிற்கும்

அறப் பெரும் கடவுள் சோம சுந்தரன் அதனால்  அன்றெ

கறைக் கதிர் வடிவேல் தென்னன் கையில் பொன்  பிரம்பு பட்ட

புறத் தடித் தழும்பு மூன்று புவனமும் பட்டது அன்றெ.

297.

சொற்ற இச் சமட்டி ஆன சோம சுந்தரனைக் காணப்

பெற்றவர் வியட்டி ஆன பிறபதி இலிங்கம் காணல்

உற்றவர் ஆவர் என்று உரைக்கின் வேர் ஊட்டு நீர்  போய்

மற்றைய சினைகள் எல்லாம் தழைவிக்கு மரத்தின்  மாதோ.

302.

தீயவான் சுவைப் பால் ஆவில் தேவர் அதிகம்  பல்வேறு

ஆய மா தீர்த்தம் தம்முள் அதிகம் ஆம் சுவணகஞ்சம்

மாய மாசு அறுக்க எல்லாத் தலத்திலும் வதிந்து  மன்னும்

தூய வானவரில் சோம சுந்தரன் சிறந்தோன் ஆகும்.

303.

அந்தமும் முதலும் இல்லா அகண்ட பூரணமாய்  யார்க்கும்

பந்தமும் வீடும் நல்கும் பராபரச் சோதி தானே

வந்தனை புரிவோர்க்கு இம்மை மறுமை வீடு    அளிப்பான் இந்தச்

சுந்தர லிங்கத்து என்றும் விளங்குவான் சுருதி ஏத்த.

315.

அவ் வண்ணம் சுந்தரனை ஐந்து அமுதம் ஆன்  உதவும் ஐந்தும் தீம் தேன்

செவ்வண்ணக் கனி சாந்தச் சேறு முதல் அட்டித்துத்    தேவர் தேறா

மெய் வண்ணம் குளிர விரைப் புனல் ஆட்டி மா   பூசை விதியால் செய்தோர்

மை வண்ண வினை நீந்தி அறம் அதனால் பொருள்    அடைந்து மன்னி வாழ்வார்.  

317.

நன் மலர் ஒன்று ஆலவாயான் முடிமேல் சாத்தினான்   நயந்து நூறு

பொன் மலர் கொண்டு அயல் பதியில் பூசித்த பயன் எய்தும் புனித போகத்

தன்மை தரு சுந்தரர்க்கு தூபம் ஒரு கால் கொடுப்போர்   தமக்குத் தாங்கள்

சொல் மனம் மெய் உறச் செய்த குற்றம் ஆயிரம்    பொறுப்பன் சுருதி நாதன்.  

324.

கருப்பூர் சுந்தரன் பூம் கடம்பன் சுந்தரன் உட்கரவாத்  தொண்டர்

விருப்பூரும் கலியாண சுந்தரன் அல் அறவடிவாய்    விளங்கு மேற்றுப்

பொருப்பூரும் அபிராம சுந்தரன் தேன் புடைகவிழ்ப்    பொன்னில் பூத்த

மருப்பூசு சண்பக சுந்தரன் மகுட சுந்தரன் தான் வாழி  மன்னோ.

325.

மான் மதச் சுந்தரன் கொடிய பழி அஞ்சு சுந்தரன்  ஓர் மருங்கின் ஞானத்

தேன் மருவி உறை சோம சுந்தரன் தேன் செவ்வழியாழ்  செய்யப் பூத்த

கான் மருவு தடம் பொழில் சூழ் ஆலவாய்ச் சுந்தரன்    மீன் கணங்கள் சூழப்

பால் மதி சூழ் நான் மாடக் கூடல் நாயகன் மதுரா   பதிக்கு வேந்தன்.

331.

அந்தரர் கோன் ஆதனத்தில் உறை மலயத் துவசனை மீண்டும் அழைத்த வாறும்

சுந்தர உக்கிர குமரன் அவதரித்த வாறும் வளை சுடர்   வேல் செண்டு

தந்தை இடத்து அவன் பெற்ற வாறும் அவன்  அவ்வடிமேல் சலதி வீறு

சிந்த விடுத்தது மகவான் முடியை வளை யெறிந்து இறைவன் சிதைத்த வாறும்.  

340.

சுந்தரன் என்று எழுதிய கூர் அம்பு எய்து செம்பியன்   போர் தொலைத்தவாறும்

செந்தமிழோர்க் இயற்பலகை அருளியதும் தருமிக்குச்   செம் பொன் பாடித்

தந்ததுவும் மாறுபடு கீரற்குக் கரை ஏற்றம் தந்தவாறும்

விந்தம் அடக்கிய முனியால் கீரன் இயல் தமிழ்   தெளிய விடுத்த வாறும்.

432.

இடர் உறப் பிணித்த வந்தப் பழியினின்று என்னை  ஈர்த்து உன்

அடி இணைக்கு அன்பன் ஆக்கும் அருள் கடல்    போற்றி சேல்கண்

மடவரல் மணாள போற்றி கடம்பமா வனத்தாய் போற்றி

சுடர் விடு விமான மேய சுந்தர விடங்க போற்றி.

440.

வந்த அர மங்கையர் கவரி மருங்கு வீச மந்தார்  கற்பகப் பூமாரி தூற்ற

அந்தர நாட்டவர் முடிகள் அடிகள் சூட அயிராணி  முலைத் தடம் தோய்ந்து அகலம்திண்தோள்

விந்தம் எனச் செம்மாந்து விம்முகாம் வெள்ளத்துள்    உடல் அழுந்த உள்ளம் சென்று

சுந்தர நாயகன் கருணை வெள்ளத்து ஆழ்ந்து தொன்  முறையின் முறை செய்தான் துறக்க நாடன்.

678.

ஏக நாயகி மீண்டபின் ஞாட்பிகந்து இரசத கிரி எய்தி

நாக நாயக மணி அணி சுந்தர நாயகன் உயிர்க்கு    எல்லாம்

போக நாயகன் ஆகிப் போகம் புரி புணர்ப்பு அறிந்து    அருணந்தி

மாக நாயகன் மால் அயன் உருத்திரர் வரவின் மேல் மனம் வைத்தான்.

711.

பந்த நான் மறைப் பொருள் திரட்டு என வட பாடல் செய்து எதிர் புட்ப

தந்தன் ஏத்த வான் உயிர் உண உருத்து எழு அடல்  விடத்து எதிர் நோக்கும்

அந்தம் ஆதி இலான் நிழல் வடிவமா ஆடியின் நிழல்    போல

வந்த சுந்தரன் சாத்து நீறொடு திரு மாலையும் எடுத்து    ஏந்த.

764.

சுந்தர வல்லி தன்னைச் சோபனம் என்று வாழ்த்தி

வந்து இருகையும் தங்கள் மாந்தளிர் கைகள் நீட்டக்

கொந்தவிழ் கோதை மாது மறம் எலாம் குடிகொண்டு    ஏறும்

அந்தளிர் செங்கை பற்றா எழுந்தனண் மறைகள்    ஆர்ப்ப.

766.

அடுத்தனல் சுந்தரி அம் பொன் அடைப்பை

எடுத்தனள் ஆதி திலோத்தமை ஏந்திப்

பிடித்தனள் விந்தை பிடித்தனள் பொன்கோல்

உடுத்த நெருக்கை ஒதுக்கி நடந்தாள்.

793.

அதிர் விடைக் கொடி அம் கயல் கொடியாக வராக்  கலன் பொன் கலனாகப்

பொதி அவிழ் கடுக்கை வேம்பு அலர் ஆக புலி   அதள் பொலம் துகிலாக

மதிமுடி வைர மணிமுடியாக மறை கிடந்து அலந்து மா   மதுரைப்

பதி உறை சோம சுந்தரக் கடவுள் பாண்டியன் ஆகி வீற்றிருந்தான்.

794.

விண் தவழ் மதியம் சூடும் சுந்தர விடங்கப் புத்தேள்

கொண்டதோர் வடிவுக்கு ஏற்பக் குருதி கொப்புளிக்கும்   சூலத்

திண் திறல் சங்கு கன்னன் முதல் கணத் தேவர்   தாமும்

பண்டைய வடிவ மாறி பார்த்திபன் பணியின் நின்றார்.

847.

நட்டம் ஆடிய சுந்தர நங்கை எம் பிராட்டி

அட்ட போனகம் பனி வரை அனையவாய்க் கிடந்த

தொட்டு வாய் மடுத்திடவும் என் சுடு பசி தணியாது

இட்டு உணாதவர் வயிறு போல் காந்துவது என்றான்.

860.

தந்திடப் பணித்து அருள் எனா தடம் புனல் செல்வி

சுந்தரப் பெரும் கடவுளை வரம் கொண்டு தொழுது

வந்த அளப்பு இலா வேகம் ஓடு எழுந்து மா நதியாய்

அந்தரத்து நின்று இழிபவளாம் எனவரும் ஆல்.

923.

தண் நிலா மௌலி வேய்ந்த சுந்தர சாமி ஞாலத்து

எண் இலா வைகல் அன்னது இணையடி நிழல் போல்   யார்க்கும்

தெண் நிலாக் கவிகை நீழல் செய்து அருள் செம்கோல்   ஓச்சி

உண்ணிலா உயிர் தானாகி முறை புரிந்து ஒழுகும்   நாளில்.

927.

இந்திர சால விச்சை காட்டுவான் என்னத் தன்பால்

செம் தழல் நாட்டம் ஈன்ற செல்வனைக் கருப்பம்   எய்தா

தம் தமில் உயிரும் ஞாலம் அனைத்தையும் ஈன்ற   தாயாம்

சுந்தரவல்லி தன்பால் தோன்று மாறு உள்ளம்   செய்தான்.

971.

அன்னம் இறை கொள் வயன் மதுரைச் சிவன் யாம்  அரச நீ ஈன்ற

பொன்னை அனையாள் தனை மதுரா புரியில்    கொடுபோய் மறு புலத்து

மன்னர் மகுட மணி இடற மழுங்கும் கழல் கால்  சுந்தரன் ஆம்

தென்னர் பெருமான் குமரனுக்குக் கொடுத்தி என்று   செப்புதலும்.

979.

முன்னர் மாலை முடி அணி சுந்தரத்

தென்னர் ஏற்றின் திருமுகம் கண்டு தாழ்ந்து

அன்ன வாசகம் உள் கொண்டு அயல் புல

மன்னர் மாதவர் யாரும் வருவர் ஆல்.

994.

விரை செய் தார் முடிச் சுந்தர மீனவன்

சுரர்கண் மாதவர் வேந்தர்க்குத் தொல் முறை

வரிசை நல்கி இருந்தனன் மன்னவன்

திரு மகன் மணம் செய் திறம் செப்புவாம்.

1014.

இரவி தன் மருமான் சோம சேகரன் என் பேர் திங்கள்

மரபினை விளக்க வந்த சுந்தர மாறன் மைந்தன்

உரவு நீர் ஞாலம் தாங்கும் உக்கிர வருமற்கு இன்று   என்

குரவு அலர்க் கோதை மாதைக் கொடுத்தனன் என நீர் வார்த்தான்.

1059.

மந்தரம் காசி ஆதிப் பதிகளில் வதிந்து நோற்கத்

தந்திடும் பயனில் கோடி தழைத்திடும் மதுரை தன்னில்

இந்த நல் விரதம் நோற்போர் அதிகம் யாது என்னில்  சோம

சுந்தரன் உரிய வாரம் ஆதலால் சோம வாரம்.

1066.

ஐந்து அமுது ஆவின் ஐந்து நறும் கனி ஐந்து  செம்தேன்

சந்தன தோயம் புட்பத் தண் புனல் மணி நீராட்டிச்

சுந்தர வெண் பட்டு ஆடை கருப்புரம் சுண்ணம்  சாந்தம்

கந்த மல்லிகை முன் ஆன வெண் மலர்க் கண்ணி  சாத்தி.

1083.

சொல்லிய நெறியால் சோம சுந்தரன் விரதம் நோற்பான்

வில் இடு மணிப் பூண் வேந்தர் முனிவனை விடைகொண்டு ஏகி

அல்லி அம் கனக கஞ்சத்து ஆடி அம் கயல் கண்  வல்லி

புல்லிய பாகன் தன்னை வழிபடீஇ போற்றி நோற்றார்.

1084.

சுந்தரன் தன்னைப் பூசைத் தொழில் செய்து வரம் பெற்று ஏகி

அந்தரத்து ஆறு செல்வார் அஃது அறிந்து அமரர் வேந்தன்

வந்தவர் இருக்க வேறு மடங்கல் மான் தவிசு மூன்று

தந்திடப் பணித்தான் இட்டார் தனது அரியணையில்    தாழ.

1106.

இந்து இரண்டு அனைய கூர்அம்பல் இருள் வரை   நெஞ்சு போழ்ந்த

மைந்தனின் வலிய காளை வரைந்து எறி நேமி சென்னி

சிந்திடாது ஆகி அம் பொன் மணி முடி சிதறச் சோம

சுந்தர நாதன் பூசைத் தொழில் பயன் அளித்தது   என்னா.

1180.

உத்தம சயம்புக்கு உள்ளும் உத்தம தரமாய் மேலாம்

தத்துவம் ஆகும் இந்த சுந்தர சயம்பு லிங்கம்

நித்தம் ஆய் மறைகட்கு எல்லாம் நிதானம் ஆம்   பொருளாய் உண்மைச்

சுத்த அத்து விதம் ஆன சுயம் பிரகாசம் ஆகும்.

1181.

நிறை பாரற் பரம் விஞ்ஞான நிராமயம் என்று நூல்கள்

அறை பரம் பிரமம் ஆகும் இதன் உரு ஆகும் ஏக

மறை இதன் பொருளே இந்தச் சுந்தர வடிவாய் இங்ஙன்

உறைசிவ லிங்கம் ஒன்றெ என்பர் நூல் உணர்ந்த   நல்லோர்.

1183.

மலர் மகனாகி மூன்று வையமும் படைத்து மாலாய்

அலைவற நிறுத்தி முக்கண் ஆதியாய் ஆழித்தம் மூவர்

தலைவனாய் பரமாகாச சரீரியாய் முதல் ஈறு இன்றித்

தொலை வரும் சோதி ஆம் இச் சுந்தர இலிங்கம் தன்னில்.

1207.

மந்திரப் புரி நூலது வலம்படப் பிறழ

இந்திரத் திரு வில் என ஆரம் மார்பு இலங்கச்

சுந்தரக்குழை குண்டலம் தோள் புரண்டு ஆடத்

தந்திரம் தரு மறை கழி தாள் நிலம் தோய.

1283.

வேள் என வந்த நாய்கர் சுந்தர விடங்கர் ஆனால்

நாள்களும் கோளும் பற்றி நவமணி ஆக்கினாரோ

தாள்களும் தோளும் மார்பும் தரித்த நீள் நாகம் ஈன்ற

வாள் விடு மணியோ ஈந்தார் யாது என மதிக்கற்   பாலேம்.

1290.

நறிய நெய் ஆதி ஆர நறும் குழம்பு ஈறா ஆட்டி

வெறிய கர்ப்புர நீர் ஆட்டி அற்புத வெள்ளம் பொங்க

இறைவனை வியந்து நோக்கி ஏத்துவான் எறிநீர் வைகை

துறைவ நீ என் கர்ப்பூர சுந்தரனேயோ என்றான்.

1300.

கந்த மலர்த் தனிக் கடவுள் கற்பத்தும் அழியாத

இந்தவளம் பதிக்கு இடையூறு எய்திய எம் பதிக்கும்   இனி

வந்தது எனச் சுந்தரனை வந்து இறைஞ்சி வானவரும்

சிந்தை கலங் கினர் வருணன் செய்த செயல்   தெளியாதார்.

1304.

முறை இட்ட செழியன் எதிர் முறுவலித்து அஞ்சலை   என்னாக்

கறை இட்டு விண் புரந்த கந்தர சுந்தரக் கடவுள்

துறை இட்டு வருகடலைச் சுவறப் போய்ப் பருகும்    எனப்

பிறை இட்ட திருச் சடையில் பெயல் நான்கும் வர  விடுத்தான்.

1572.

சொல்பதம் கடந்த எந்தை சுந்தர நாதன் தாளில்

பல பல வடசொல் மாலை பத்தியில் தொடுத்துச் சாத்திச்

தற்பர அறிவு ஆனந்தத் தனி உரு உடைய சோதி

பொன் பத மருங்கில் புக்கான் புண்ணிய மறையோன் அம்மா.

1577.

வாள் வினைக் குரவன் அன்னான் வல் அமண் விடுத்த  வேழம்

தோள் வினை வலியால் அட்ட சுந்தரவிடங்கன்  தன்னை

ஆள் வினை அன்பும் தானும் வைகலும் அடைந்து  தாழ்ந்து

மூள் வினை வலியை வெல்லும் மூது அறிவு உடையன்  அம்மா.

1740.

அந்த மாட மதுரை நகர்க்கு அரசு ஆகிய சுந்தரக்   கடவுள்

வந்து நும்மைக் கைதீண்டும் வழி இச்சாபம் கழியும்   எனச்

சிந்தை தளர்ந்த பன்னியரும் தென்னர் மதுரைத்  தொல் நகரில்

கந்த முல்லைத் தார் வணிகர் காதல் மகளிராய்ப்   பிறந்தார்.

1803.

எண்ணிய எண்ணி ஆங்கே யான் பெற முடித்தாய்    போற்றி

பண்ணியன் மறைகள் தேறா பால்மொழி மணாள    போற்றி

புண்ணியர் தமக்கு வேதப் பொருள் உரை பொருளே    போற்றி

விண் இழி விமான மேய சுந்தர விடங்க போற்றி.

1851.

சுந்தரப் புத்தேள் வைத்த துறு மலர் வாசத் தெண்ணீர்ப்

பந்தர் புக்கு அடைந்து நன்னீர் பருகி எய்ப்பு அகல  ஆற்றல்

வந்தபின் செழியன் தன்னோர் வளவன் மேல் ஏறிச்சீறி

அந்தம் இல் அனிகம் சிந்தித் தும்பை வேய்ந்து அடு  போர் செய்தார்.

1888.

மற்று இவன் குமரன் பாண்டி வங்கிய தீபன் அன்னான்

பொன் திணி தடம் தோள் மைந்தன் புரந்தர சித்தாம்    அன்னான்

வெற்றிகொள் குமரன் பாண்டி வங்கிய பதாகன் வீரம்

பற்றிய சுந்தரேச பாத சேகரன் அவன் சேய்.

1889.

பலர் புகழ் சுந்தரேச பாத சேகரன் ஆம் தென்னன்

அலை புனல் உடுத்த கூடல் அடிகளுக்கு அன்பன் ஆகிக்

கொலை புணர் வேலால் வெம் கோல் குறும்பு எனும் களைகள் தீர்த்து

மலர் தலை உலகம் என்னும் வான் பயிர் வளர்க்கும்    நாளில்.

1933.

வந்து வான் அகடு போழ்ந்த மணி முடி விமானக் கோயில்

சுந்தர நாதன் பாதத் துணை தொழுது இறைஞ்சி யார்க்கும்

தந்தையும் தாயும் ஆகும் தம்பிரான் நீரே எங்கள்

எந்தையும் யாயும் என்னா இரங்கி நின்று இனைய  சொல்வாள்.

1962.

பூத நாயகன் பூரண சுந்தரப் புத்தேள்

பாத சேகரன் வரகுண பாண்டியன் புயத்தில்

ஓத நீர் உலகின் பொறை சுமக்க வைத்து உம்பர்

நாதர் சேவடித் தாமரை நகை நிழல் அடைந்தான்.

1964.

இய மானன் இந்து ரவி எரி வான் இலஞ்சல் இல

 எறிகால் எனும் பகுதி இரு நால்

மயமான சுந்தரனை மனம் வாய் மெய் அன்பின் இறை

 வழிபாடு அடைந்து வர குணனாய்ச்

சய வேளை வென்ற வடிவினன் ஈறு இல் வென்றி பெறு

 சத வேள்வி இந்திரனை நிகர்வோன்

இயன் மேனி கொண்ட ஒளியினில் ஏழ் பசும் புரவி

 இனன் தேசு வென்ற வர குணனே.

1988.

தொடுபழி தொலை வித்து ஆண்ட சுந்தரத் தோன்றல் பாதக்

கடிமலர் அடைந்து நாளும் கைதொழுது உலகம் எல்லாம்

வடு அறு செங்கோல் ஒச்சும் வரகுணன் அறவோர் நாவால்

அடு சுவை அமுதம் அன்ன அரன் புகழ் செவி மடுப்பான்.

2010.

ஆதி சுந்தரக் கடவுளுக்கு ஆலயம் பிறவும்

நீதியால் அருச்சனை பிற பணிகளும் நிரப்பிப்

பூதி சாதன வழி நிலம் புரந்து இவண் அடைந்த

கோது இலாத நின் குடிவழிக் கொற்றவர் இவர்காண்.

2020.

தன் புலன்களும் கரணமும் தன்னவே ஆக்கி

அன்பு உடம்பு கொண்டு அவன் எதிர் அருள் சிவ லோகம்

பின்பு பண்டு போல் மதுரையாப் பிராட்டியும் தானும்

முன்பு இருந்தவாறு இருந்தனன் சுந்தர மூர்த்தி.

2028.

பூத நாயகன் சுந்தரன் புண்ணிய மூர்த்தி

ஆதலால் அன்ன தலத்து உறை அடியவர் அஞ்சிப்

பாதகம் செயாது ஒழுகு உறூஉம் படி நினைந்து இனைய

தீது உறூஉம் பழிதனை இடை மருதினில் தீர்த்தான்.

2029.

என்ற அகத்திய முனி இறை இறை கொடுத்து இயம்ப

நன்று எனச் சிரம் பணித்து மெய்ஞ் ஞான ஆனந்தம்

துன்றி நற்றவர் சுந்தரச் சோதி சேவடிக் கீழ்

ஒன்று அற்புத ஆனந்த உததியுள் குளித்தார்.

2070.

முனிவரும் தவத்தர் ஆதி முத்தர் மாசித்தர் அன்பன்

துனி வரும் பழங்கண் தீர்ப்பான் சுந்தரத் தோன்றல் கீதம்

கனிவரும் கருணை என்னும் கடலில் அன்பு என்னும்  ஆற்றில்

பனி வரும் கண்ணீர் வெள்ளம் பாய்ந்திட இன்பத்து  ஆழ்ந்தார்.

2279.

இருந்தவன் சிலரை நோக்கி இயம்புவான் எர்க்கும் பேறு

தரும் தலம் தீர்த்தம் மூர்த்தித் தன்மையில் சிறந்த அன்பு

அரும் தமிழ் மதுரை பொன் தாமரைத் தடம் சுந்தரேசப்

பெரும் தகை என்று சான்றோர் பேசுவார் ஆதலாலே.

2314.

சுந்தரச் செம்மல் பாதத் துணை மலர் அன்பில் தோய்ந்து

சிந்தை வைத்து இருக்கும் எல்லை தேவரும் மறையும் செய்யும்

வந்தனைக்கு அரியா னாரை மன நினை வடிவாய்த் தோன்றி

எம் தமக்கு இனியாய் வேண்டும் வரம் என் கொல் இயம்புக என்றான்.

2355.

மாறன் அறிந்து இனி என் செய்தும் நேரியன் வன் படையோ அளவு இன்று

ஏறி எதிர்ந்து அமர் ஆடல் எனக்கு அரிது இக் குறையைப் பிறையோடு

ஆறு அணி பூரண சுந்தரன் எந்தை அடித்தல முன் குருகாக்

கூறி இரந்து வரம் பெறுகென் இறை கோயில் அடைந்தனன் ஆல்.

2370.

குன்ற வில் வேடன் சாபம் குழைவித்துச் சுந்தரேசன்

என்ற தன் நாமம் தீட்டி இட்ட கூர்ங் கணைகள் தூண்டி

வென்றனம் என்று வாகை மிலைந்து வெண்சங்கம் ஆர்த்து

நின்றவன் சேனைமீது நெறி படச் செலுத்தா நின்றான்.

2372.

அன்ன கூர் வாளி தன்னைக் கொணர்க என அதனை  வாசித்து

இன்னது சுந்தரேசன் என வரைந்திருப்பது ஈது

தென்னவற்கு ஆலவாயன் துணை செய்த செயல் என்று  அஞ்சிப்

பொன்னி நாடு உடையான் மீண்டு போகுவான்  போகுவானை.

2409.

தனி வரு புலவர் நீவிர் தண் தமிழ் ஆலவாய் எம்

நனி வரு கருணை மூர்த்தி கனைகழல் இறைஞ்சல் வேண்டும்

இனி வருகென்ன நீரே எங்களுக்கு அளவு இல் கோடி

துனி வரு வினைகள் தீர்க்கும் சுந்தரக் கடவுள் என்றார்.

2439.

அன்ன வியன் பொழில் மா மதுரேசர் அடித்தாழ் வோன்

பொன் அவிர் சண்பக மாலை புனைந்த புதுக் கோலந்

தன்னை வியந்து இவர் சண்பக சுந்தரர் தாம் என்னா

முன்னர் இறைஞ்சினன் நிம்பம் அணிந்த முடித் தென்னன்.

2441.

சண்பக மாறன் சண்பக சுந்தரர் தம் மாடே

நண்பக மாறா நல் பணி செய்யும் நல் நாளில்

பண்பகர் சொல்லார் தம் புடை மாரன் படுபோர் மூண்டு

எண்பக வெய்யவான் ஆகிய வந்தது அன்று இளவேனில்.

2530.

எந்தை இவ் விகழ்ச்சி நின்னது அல்லதை எனக்கு யாது என்னாச்

சிந்தை நோய் உழந்து சைவச் சிறுவன் இன்று இரங்க  யார்க்கும்

பந்தமும் வீடும் வேதப் பனுவலும் பயனும் ஆன

சுந்தர விடங்கன் ஆங்கு ஓர் புலவனாய்த் தோற்றம் செய்தான்.

2612.

இந்திரன் தன் பழி துரத்தி அரசு அளித்துப் பின்பு கதி    இன்பம் ஈந்த

சுந்தரன் பொன் அடிக்கு அன்பு தொடுத்து நறும்   சண்பகத்தார் தொடுத்துச் சாத்தி

வந்தனை செய் திருத்தொண்டின் வழிக்கு ஏற்பச் சண்பகப் பூமாற வேந்தன்

அந்தர சூட மணியாம் சிவ புரத்து நிறை செல்வம் அடைந்தான் இப்பால்.

2650.

அந்தம் இல் அழகன் கூடல் ஆலவாய் அமர்ந்த நீல

சுந்தரன் உலகம் ஈன்ற கன்னிஅம் கயல் கண்ணாள் ஆம்

கொந்து அவிழ் அலங்கல் கூந்தல் கொடிக்கு வேறு  இடத்து வைகி

மந்தணம் ஆன வேத மறைப் பொருள் உணர்த்தும்  மாதோ.

2809.

சுந்தர விடங்கர் அன்பர் சூழ் துயர் அகற்ற நேரே

வந்து எழு காட்சி போல வந்தது செக்கர் வானம்

இந்தவர் மார்பம் தூங்கும் ஏன வெண் கோடு போன்ற

அந்தர உடுக்கள் எல்லாம் அயன் தலை மாலை ஒத்த.

2813.

அந்தம் இல் அழகன் தன்னை அம் கயல் கண்ணியோடும்

சுந்தர அமளிப் பள்ளி உணர்த்துவான் தொண்டர் சூழ

வந்தனை செய்யும் ஆர்ப்பும் மங்கல சங்கம் ஆர்ப்பும்

பந்த நால் மறையின் ஆர்ப்பும் பருகினார் செவிகள் ஆர.

2815.

கயல் நெடும் கண்ணியோடும் கட்டு அவிழ் கடிப் பூம்    சேக்கைத்

துயில் உணர்ந்து இருந்த சோம சுந்தரக் கருணை    வெள்ளம்

பயில் நெடும் சிகரம் நோக்கிப் பங்கயச் செம்கை கூப்பி

நயன பங்கயம் நீர் சோர நாதனைப் பாடல் உற்றார்.

2832.

தந்திரங்களால் புறவணி தரித்தது விரிந்த

மந்திரங்களால் சதங்கை தார் மணிச் சிலம்பு அணிந்த

அந்தரம் சுழல் சேமனும் அருக்கனும் மிதிக்கும்

சுந்தரப் பதம் பொறை கொளத் தூங்கு இரு புடைத்தால்.

2931.

என்ற ஆதரம் தலைக் கொள இக பரத்து ஆசை

ஒன்றும் இன்றியே உணர் வினுக்கு உள் உணர்வாகத்

துன்று பூரணம் ஆகிய சுந்தரச் சோதி

மன்றுள் ஆடிய சேவடி மனம் புதைத்து இருந்தார்.

2976.

என்று ஏறிய புகழ் வேதியர் இரங்கும் துதி செவியில்

சென்று ஏறலும் விடை ஏறு சுந்தரன் மற்று இவர் செயலை

மன்று ஏறவும் முடிமேல் நதி மண் ஏறவும் முதியாள்

அன்று ஏறிய தேரோடும் விண் அடைந்து ஏறவும்  நினைந்தான்.

2988.

நம் கோமகன் செம் கோல் பிழைத் தனனோ என   நவில்வார்

அம் கோல் வளை பங்கன் விளையாட்டோ என   அறைவார்

இங்கு ஆர் இது தணிப்பார் என இசைப்பார் இது   தணிப்பான்

பொங்கு ஆலம் உண்டு அருள் சுந்தரன் அலது யார்   எனப் புகல்வார்.

3102.

அந்தணர் பெருமான் முன் போய் அரசன் மகளைப்  போகட்டி

இந்த நோய் நீரே தீர்க்க வேண்டும் என்று இரந்தான்  ஐயன்

சுந்தர நாதன் மன்றுள் துணைத்தாள் தன்னைத்

சிந்தை செய்து அருட் கண் நோக்கால் திருந்து இழை அவளை நோக்கா.

3210.

ஆறினோடு இரண்டு அடுத்த ஆயிரம் சமணரும்

வேறு வேறு தாம் முயன்ற மந்திரங்கள் வேறு வேறு

நீர் சுந்தர ஒலையில் பொறித்து ஒருங்கு போய்ச்

சீறி வான் நிமிர்ந்து எழுந்த தீயின் வாய் நிரப்பினார்.

3355.

மைந்தனி ஆழி மேரு மகவான் அகந்தை மடிவித்த    நித்த சரணம்

சுந்தர நாம வாளி பணி கொண்டு கிள்ளி தொகை வென்ற    வீர சரணம்

வெம் திறல் மாறன் முன் கல் உரு ஆனை கன்னல்    மிசைவித்த சித்த சரணம்

முந்திய கல்லின் மாதர் பெற அட்ட சித்த முயல் வித்த  யோகி சரணம்.

நன்றி = பாடல் தொகுப்பு உதவி 

தமிழ் இணையப் பல்கலைக்கழகம்