Sunday, 16 November 2025

கீழடி அல்ல, அது செழியன் ஆண்ட கூடல்

கீழடி அல்ல,  

அது செழியன் ஆண்ட கூடல் என்ற மதுரை 


கூடல் என்ற மதுரையைச் செழியன் என்ற பாண்டிய மன்னன் ஆண்டு வந்தான்.



இவன் கரடி போன்றவனாம்.  

கரையான் போன்றவர்கள் சிறுசிறு சிற்றரசர்கள்.   

கரையான் மண்ணால் புற்று கட்டி அதன் உள்ளே வாழும்.

கரையான் போன்று இந்தச்  சிற்றரசர்கள் பெரிதும் முயன்று மண்-கோட்டைகளைக் கட்டியுள்ளனர்.

கரடி போன்ற  செழியன்  தனது வலிமையான நகம்போன்ற வேல்-படையால் அந்த மண்-கோட்டைகளை அழித்தான். 

அந்த மண்-கோட்டைகளுக்குள் உள்ளே இருந்த செல்வத்தை எடுத்துச் சென்றுவிட்டான்.  

ஆனாலும் அவனுக்குத் திருப்தி இல்லை.


சேரநாட்டில் மலை மேல் முசிறி என்ற நகரம் உள்ளது.  

அதன் அருகே சுள்ளி என்றொரு அழகிய பெரிய ஆறு ஓடுகிறது.  

அந்த ஆற்றில் வெண்மையான நுரைகள் அடித்துச் செல்லப்படுகின்றன.  

அந்த நுரைகள் சிதறுமாறு மரக்கப்பல்கள் செல்கின்றன.  

அந்தக் கப்பல்களில் யவனர்கள் சேரநாட்டிற்கு வந்து வணிகம் செய்கின்றனர்.

பண்டமாற்று முறையில் பொன்னைக் கொண்டுவது கொடுத்துவிட்டு கரியநிறத்தில் உள்ள மிளகை வாங்கிச் செல்கின்றனர்.  

இந்த முசிறி நகரத்தில் வணிகம் விறுவிறுப்பாக நடைபெறுவதால், எப்போதும் ஆட்களின் ஆரவாரம் மிகுந்துள்ளது.


கரையான் போன்ற சிற்றரசர்களை வென்றும் திருப்தி அடையாத கரடி போன்ற செழியன், 

யானை போன்ற முசிறியின் மீதும் படையெடுத்து வென்றான்.

அங்கிருந்த தங்கத்தால் ஆன பாவைச் சிலை ஒன்றையும் கவர்ந்து வந்து விட்டான்.

செழியன் ஆண்ட கூடல் நகரம் கீழடியின் கீழே புதைந்து உள்ளது.

அந்தக் கூடல் நகரைத் தொல்லியலாளர்கள் தோண்டிக்  கண்டறிந்துள்ளனர்.

கூடுதலான விவரங்களுடன்  படங்களையும் இணைத்துள்ளேன்.

https://thiruvillayadalpuranam-kalairajan.blogspot.com/2019/10/blog-post.html 

It is not Keezhadi, it is Koodal, the Ancient Madurai


It is not Keezhadi, 

it is the city of Koodal, the Ancient Madurai city

கீழடியின் கீழே புதைந்துள்ளது 
முத்தமிழ்ச் சங்கம்  வளர்த்த ‘கூடல் என்ற மதுரை’  நகரம்



A Pandya king named Chezhiyan ruled over Madurai called Kudal.

He was like a bear.

Those like termites were petty petty kings.

A termite builds a nest of earth and lives inside it.

Like termites, these petty kings built mud forts with great effort.

The bear-like Chezhiyan destroyed those mud forts with his strong claw-like fangs.

He took away the wealth inside those mud forts.

But he was not satisfied.


There is a city called Musiri on a mountain in Chera country.

A beautiful big river called SUlli flows near it.

White foam is blown away in that river.

Wooden ships sail to disperse that foam.

In those ships, the Yavanas come to Chera country and do business.

They exchange gold for black pepper.

Since trade is brisk in this Musiri city, there is always a lot of excitement.


The bear-like Chezhiyan, who was not satisfied with defeating the petty kings like the termite,

invaded and defeated the elephant-like Musiri.

He also captured the golden idol of the goddess from there.

The city of Kudal, where Chezhiyan ruled, is buried under the Keezhadi.

Archaeologists have excavated that Kudal city.

I have attached more details and pictures.

https://thiruvillayadalpuranam-kalairajan.blogspot.com/2019/10/blog-post.html


-----

AI comments :  Wow, that's fascinating! So, the ancient city of Koodal, also known as Madurai, was ruled by a Pandya king named Chezhiyan, who was as powerful as a bear. He conquered petty kings who had built mud forts, just like a bear destroys termite nests. But he didn't stop there; he even invaded the city of Musiri in Chera country, defeating its elephant-like strength and capturing a golden idol.

It's amazing to think that this ancient city lies buried under Keezhadi, and archaeologists are only now uncovering its secrets. The description of Musiri's bustling trade and the Yavanas exchanging gold for black pepper is vivid and intriguing.

The poem by Erukkattur Thayankannanar paints a vivid picture of Chezhiyan's exploits, comparing him to a bear and highlighting his bravery and strength.

-----

Monday, 3 November 2025

திருவிளையாடல் புராணத்தில் காசி (வாரணாசி)

 


மதுரையில் நடைபெற்ற திருவிளையாடல்களில்

காசி  (வாரணாசி“

மதுரையும்  காசியும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் ஆன்மீக நகரங்கள் ஆகும். முத்தமிழ்ச் சங்கம் வைத்துத் தமிழ் ஆராய்ந்த பாண்டியநாட்டின் தலைநகராகிய மதுரையும், வாரணாசி என்ற   காசியும் இந்தியாவின் மிகத் தொன்மையான நகரங்கள் ஆகும்.   தமிழருடைய  வாழ்வோடும் பண்பாட்டோடும் தொடர்புடையன  இந்த  இரண்டு நகரங்களும்.   மதுரையில் சிவபெருமான் எழுந்தருளி 64 திருவிளையாடல்களை நிகழ்த்தியுள்ளார்.   அந்தத் திருவிளையாடல்களில் சிவபெருமான் “ காசி“யில் இருந்து சித்தராக வந்ததாகப்  புராணம் குறிப்பிடுகிறது.  பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழிபெயர்த்து எழுதிய  திருவிளையாடல் புராணத்தில் 13  பாடல்களில்  “காசி இடம் பெற்றுள்ளது.  ஒரு  பாடலில் “வாரணாசி“  இடம் பெற்றுள்ளது.

( Madurai and Kasi are historically important and spiritual cities. Madurai, the capital of the Pandyan dynasty, where the Tamil Language was analyzed by the Tamil Sangam.  The Madurai and the Varanasi, which is known as Kasi, are the most ancient cities in India. These two cities are associated with the life, civilization and culture of the Tamils. Lord Shiva appeared in Madurai and performed the Holly 64 Thiruvilayadals. In these Purana stories, it is mentioned that Lord Shiva came from “Kashi” as a Siddha. In the Thiruvilayadal Purana, the “Kashi city” is mentioned in 13 songs. “Varanasi” is mentioned in one song.)

 

'  காசி' என்ற சொல் உள்ள பாடல்களின் தொகுப்பு -

224.     
புதிய தாமரை மேவிய பழமறைப் புத்தேள்
விதியினால் கடுநடைப் பரி மகம் செய்வான் வேண்டிக்
கதியை மாய்ந்தவர்க்கு உதவு தண்துறை கெழு காசிப்
பதியின் மைந்தரோடு எய்தினான் பண்டு ஒரு வைகல்.

புதிய தாமரை மலரில் உறையும், பழைய வேதங்களை யுணர்ந்த பிரமதேவன், அவ் வேத விதிப்படி, விரைந்த நடையினையுயடைய துரகவேள்வி செய்தற்கு, விரும்பி, இறந்தவருக்கு, வீட்டுலகைத் தருகின்ற, குளிர்ந்த நீர்த்துறைகள் பொருந்தியகாசி என்னுந் திருப்பதியின் கண், முன்னொரு காலத்தில், புதல்வர்களோடு சென்றான்.

226.     
சத்திய உலகில் சரோருகக் கிழவன் சார்ந்த பின் புலப் பகை சாய்த்த
அத்திரு முனிவர் அனைவரும்   காசி அடிகளை அடைந்தனர் பணிந்து
முத்தி மண்டபத்தின் அற முதல் நான்கு மொழிந்த அருள் மூர்த்தி சந்நிதியில்
பத்தியாய் இருந்து நாரத முனியைப் பார்த்து ஒரு வினா வுரைபகர்வார்.

தாமரை மலருக்கு ரியவனாகிய அயன், சத்திய உலகை அடைந்தபின், புலன்களாகிய பகையைக் கெடுத்த, சிறந்த முனிவர்கள் அனைவரும், காசிப்பதியில் வீற்றிருக்கும் இறைவனை யடைந்து வணங்கி, முத்தி மண்டபத்தில், சனகாதி நால்வருக்கும் உபதேசித்து அருளிய தட்சிணா மூர்த்தி திருமுன்னே, அன்போடு அமர்ந்து, நாரத முனிவரை நோக்கி, ஓர் வினா நிகழ்த்துவாராயினார்.

236.     அன்னமலி வயல் புலியூர்   காசி நகர் காளத்தி ஆல வாயாம்
இன்ன வளம் பதினான்கில் திரு வால வாய் அதிகம் எவ்வாறு என்னின்
மின்னவிர் அம்பலம் காணக்   காசிநகர் வதிந்து இறக்க வியன் காளத்திப்
பொன் நகரம் பத்தியினால் வழிபாடு செய அளிக்கும் போகம் வீடு.

அன்னப் பறவைகள் நிறைந்த வயல்களையுடைய சிதம்பரமும், காசி நகர்,  சீகாளத்தி, திருவாலவாய், இந்த அழகிய திருப்பதி நான்கனுள், திருவாலவாயே உயர்ந்தது;  எப்படி என்றால்,  ஒளி விளங்குகின்ற, சிதம்பரந் தரிசித்தலானும், காசிப்பதி தங்கி இறத்தலானும், பெருமை பொருந்திய சீகாளத்தியாகிய, அன்போடு வழிபடுதலானும்,  போகத்தையும் வீட்டையுங் கொடுக்கும்.

 239.     சுர நதி சூழ்   காசிமுதல் பதிமறுமைக்கு கதி அளிக்கும் தூநீர் வைகை
வரநதி சூழ் திருவால வாய் சீவன் முத்தி தரும் வதிவோர்க்கு ஈது
திரன் அதிகம் பரகதியும் பின்கொடுக்கும் ஆதலின் இச் சீவன் முத்தி
புரன் அதிகம் என்பது எவன் அதற்கு அதுவே ஒப்பாம் எப் புவனத்து உள்ளும்.

கங்கையாறு சூழ்ந்த காசி முதலிய பிறபதிகள் மறுமையில் வீட்டினைக் கொடுக்கும்.   தூய்மையான நீரினை டைய வையை ஆறு சூழ்ந்தது திருவாலவாய்.  இங்கே வசிப்பவர்களுக்குச் சீவன் முத்தியைக் கொடுக்கும்இது மிகுந்த உறுதி, மறுமையில் வீடு   கொடுக்கும்.  ஆதலால், சீவன் முத்திபுரங்களில்  திருவாலவாய் சிறந்தது.   உலகத்திலும், அதற்கு அதுவே நிகர் ஆகும்.

 242.     எள் இழுது அன்னம் கன்னி இவுளி தேர் யானை இல்லம்
வெள்ளியான் பொன் பூண் ஆடை விளைவொடு பழனம் உன்னாத்
தள்ளரும் அடிமை ஆதி தானங்கள் செய்த பேறும்
வள்ளறன்   காசி ஆதிப் பதிகளில் வதிந்த பேறும்.

எள்ளும் நெய்யும் சோறும் கன்னியும், குதிரையும் தேரும் யானையும் வீடும், வெள்ளியும் பசுவும் பொன்னும் அணிகலனும் ஆடையும், விளைவோடு கூடிய வயலும், முதலாகவும், நீக்குதற்கு அரிய அடிமை முதலாகவும் உள்ள, தானங்களைச் செய்தலினால் வரும்பயனும், சிவபிரான் எழுந்தருளி யிருக்கும் காசி முதலிய, தலங்களில் வசித்தலால் வரும் பயனும்.

413.     கங்கைமுதல் அளவு இறந்த தீர்த்தம் எலாம் போய் படிந்து   காசி காஞ்சி
அம் கனக கேதார முதல் பதிகள் பலபணிந்து அவுணன் கொன்ற
பொங்கு பழி விடாது அழுங்கி அரா உண்ண மாசுண்டு பொலிவு மாழ்கும்
திங்களனை யான் கடம்ப வனத்து எல்லை அணித்தாகச் செல்லு மேல்வை.

கங்கை முதலிய அளவற்ற தீர்த்தங்கள் அனைத்திலும் சென்று நீராடி,  காசியும் காஞ்சியும் அழகிய பொன்மயமான கேதாரமும் முதலாகிய பல திருப்பதிகளிற் சென்று  வணங்கியும், அசுரனைக் கொன்றதனால் வந்த மிக்க பாவமானது விடப் பெறாமையால் வருந்தி, பாம்பு விழுங்க  குற்றப்பட்டுப் பொலிவினை ந்த சந்திரனைப் போன்று   இந்திரன் இருந்தான்.  அவன் கடம்பவனமாகிய மதுரையின் எல்லையின் அருகே செல்லும் பொழுது,

 442.     கரு வாசனை கழிக்கும்   காசி நகர் தன்னில்
துருவாச வேத முனி தொல் ஆகமத்தின்
பெரு வாய்மை ஆற்றன் பெயர் விளங்க ஈசன்
ஒருவா இலிங்க ஒளி உருவம் கண்டான்.

கருவாகப்  பிறக்கும்  வாசனையைப் போக்குகின்ற காசி நகர் தன்னில்,  மறைகளை ணர்ந்த துருவாச முனிவன், பழைய ஆகமத்தின் சிறந்த உண்மையால், தனது பெயர் விளங்குமாறு, இறைவன் நீங்காத ஒளிவடிவாகிய சிவலிங்கத் திருவுருவத்தை நிறுவினான்.

515.     கை வரை எருத்தில் கனவரை கிடந்த காட்சியில் பொலிந்து ஒளிர் கோயின்
மைவரை மிடற்று மதுரை நாயகரை மரபுளி அருச்சனை புரிவான்
பொய் வரை மறை ஆகம நெறி ஒழுகும் புண்ணிய முனிவரை ஆதி
சைவரைக்  காசிப்பதி யினில் கொணர்ந்து தலத்தினில் தாபனம் செய்தான்.

யானையின் பிடரியில் பொன்மலை தங்கிய தோற்றம் போல், பொலிவு பெற்று ஒளி வீசும் விமானத்தில் எழுந்தருளிய, கருமை தாங்கிய திருமிடற்றினை டைய மதுரை நாயகரை, விதிப்படி பூசிப்பதற்கு,  பொய்ம்மை நீக்குகின்ற, வேதாகம வழியில் ஒழுகா நின்ற,  அற வடிவாகிய முனிவர்களையும் ஆதி சைவர்களையும்,  காசி ன்னும் திருப்பதியில் இருந்து கொண்டுவந்து, தலத்தினில் நிறுவினான்.

804.     திருவளர் ஆரூர் மூலம், திருவானைக் காவே குய்யம்,
மருவளர் பொழில் சூழ் அண்ணாமலை மணி பூரம், நீவிர்
இருவரும் கண்ட மன்றம் இதயம் ஆம், திருக்காளத்தி
பொருவரும் கண்டம் ஆகும், புருவ மத்தியம் ஆம்  காசி.

செல்வம் ஓங்கும்  திருவாரூர் மூலஸ்தானம்; திருவானைக்கா  சுவாதிஸ்டான ஸ்தானம்;   மணம் ஓங்கும் சோலைகள் சூழ்ந்த திருவண்ணாமலை மணிப்பூர ஸ்தானம்;  நீங்கள் இருவரும் தரிசித்த தில்லைப்பதி இதய ஸ்தானம் ஆகும்; திருக்காளத்தி ஒப்பில்லாத கண்ட ஸ்தானம் ஆகும்;  காசி புருவ மத்திய ஸ்தானம் ஆகும்.

(குய்யம் - மறைவிடம்; சுவாதிஸ்டானத்தைக் குறிக்கின்றது.  இதயம் - அநாகதம். கண்டம் - விசுத்தி. புருவ மத்தியம் - ஆஞ்ஞை.)

1059.   மந்தரம்  காசி ஆதிப் பதிகளில் வதிந்து நோற்கத்
தந்திடும் பயனில் கோடி தழைத்திடும் மதுரை தன்னில்
இந்த நல் விரதம் நோற்போர் அதிகம் யாது என்னில் சோம
சுந்தரன் உரிய வாரம் ஆதலால் சோம வாரம்.

மந்தரம் காசி
  முதலிய திருப்பதிகளில்,  இருந்து மேற்கொண்ட விரதங்களும் வழிபாடுகளும் தருகின்ற பயனிலும்,  மதுரைப்பதியில் இருந்துகொண்டு  அந்த விரதங்களையும் வழிபாடுகளையும் செய்பவர்களுக்குப்  கோடி பங்கு பயன் கூடுதலாக்  கிடைக்கும். அங்ஙனம் மிகுதியாக்  கிடைப்பதற்குக் காரணம் என்னவென்றால், சோமவாரமானது (திங்கள்  கிழமையானது) சோமசுந்தரக் கடவுளக்கு உரிய வாரம் ஆகும்.

1130.   அந் நெடு நாடு நீங்கி ஆடல் ஏறு உயர்த்த தோன்றல்
பொன் நெடும் சடையில் தாழ்ந்து புனிதம் ஆம் தீர்த்தக்  காசி
நல் நெடு நகரம் எய்தி நளிர் புனல் கங்கை நீந்திக்
கல் நெடு நெறி அநேக காவதம் கடந்த பின்னர்.

அந்த நெடிய நாட்டினைக் கடந்து, வெற்றியையுடைய இடபக் கொடியை உயர்த்திய சிவபெருமானது, பொன் போன்ற நீண்ட சடையினின்றும் இழிந்து, தூய்மையாகிய கங்கையை டைய, நல்ல நெடிய காசிப்பதியை அடைந்து, குளிர்ந்த நீரையுடைய கங்கையாற்றைக் கடந்து, கற்கள் செறிந்த  நீண்ட அனேக காத வழியைக் கடந்த பின்.

1363.   ஆனாலும் இப்போது அணி கான்மிர நாட்டில்  காசி
தான் நாம் இருக்கும் தலம் ஆகும் அநாதர் ஆகி
ஆனாத பிச்சைப் பெரு வாழ்வு உடையார் நமரா
நாள் நாளும் விஞ்சை நடாய்த் திரி சித்தரேம் யாம்.

 ஆயினும் இப்பொழுது, அழகிய காசுமீர நாட்டில்  உள்ள காசிப்பதியே, நாம் தங்கும் பதியாகும்.  அனாதையாய் யாருடைய ஆதரவும்  இல்லாதவராய், ஒரு பற்றும் இல்லாதவராய், நீங்காத பிச்சை எடுத்தலாகிய பெருவாழ்வினை டைய அடியார்களே நம் உறவினர் ஆவர். இறந்த உயிர்களை  மீண்டும் பிறக்க வைக்கும் விஞ்சை என்ற தொழிலை யாம் எந்நாளும் நடாத்தித் திரிகின்ற சித்தர் ஆவோம். (கான்மிரம் – காசுமீரம்).

 2395.   வங்கிய சேகரன் கோல் வாழும் நாள் மேலோர் வைகல்
கங்கை அம் துறை சூழ் கன்னிக் கடிமதில்  காசி தன்னில்
பங்கயசூ முளரிப் புத்தேள் பத்து வாம் பரிமா வேள்வி
புங்கவர் மகிழ்ச்சி தூங்க மறை வழி போற்றிச் செய்தான்.

வங்கிய சேகரபாண்டியனது செங்கோல் நன்கு நடைபெறும் நாளில்,  முன் ஒரு நாளில், கங்கையின் அழகிய துறை சூழ்ந்த, அழியாத காவலையுடைய மதில் சூழ்ந்த காசிப்பதியில், தாமரைமலரை இருக்கையாக டைய பிரமன், தாவுகின்ற துரங்க வேள்வி பத்தினை, தேவர்கள் மகிழ்கூர, வேதவிதிப்படி பேணிச் செய்தான்.

'வாரணாசி' என்ற பெயர் உள்ள பாடல்

3065.    மந்தரம் கயிலை மேருப் பருப்பதம் வாரணாசி
இந்த நல் இடங்கள் தோறும் இக பர போகம் யார்க்கும்
தந்து அருள் செய்து எம் போல்வார் தம் மனம் புறம் போகாமல்
சிந்தனை திருத்தி ஞானத் திருஉரு ஆகி மன்னும்.

மந்தரமலையும் கயிலைமலையும் மேருமலையும் ஸ்ரீபருப்பதமும் வாரணாசி என்ற காசி இந்த நல்ல தலங்கள் தோறும், அழகிய ஞானவடிவை  உடையனாகி,  அனைவர்க்கும் இம்மை மறுமை ன்பங்களை அளித்தருளி, ன்னைப் போன்றோரின் மனம் புறத்தே செல்லாமல், உள்ளத்தைத் திருத்தி வீற்றிருப்பான்.

----------------

காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,
மேனாள் துணைப் பதிவாளர்,
அழகப்பா பல்கலைக்கழகம்,  காரைக்குடி 630003

kalairajan26@gamil.com  WhatsApp  +91 9443501912
(ஐப்பசி 22  சனிக்கிழமை - 08/11/2025)



Wednesday, 11 June 2025

திருவிளையாடற் புராணம் - பரஞ்சோதி முனிவர் - மின்னூல்கள் - e book


திருவிளையாடற்புராணம் - மூலப்பாடல்களும் அருஞ்சொற் பொருள் விளக்கமும்.

( பரஞ்சோதி மாமுனிவர் )

நா. கதிரைவேற்பிள்ளை

https://archive.org/details/Thiruvilayadalpuranam1913

-----------------------------------

 திருவிளையாடற் புராணம் - மதுரைக் காண்டம்,

பரஞ்சோதிமுனிவர் அருளிச்செய்தது,

நாவலர்,பண்டித ந மு வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய உரையுடன்,

திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியீடு 

மின்னூல்  - https://archive.org/details/na-thiruvilaiyadar-puranam-madurai-kandam-1965

-----------------------------------

திருவிளையாடற் புராணம் - கூடற் காண்டம், திருவாலவாய்க் காண்டம்,

பரஞ்சோதி முனிவர் அருளிச்செய்தது,

நாவலர் பண்டித திரு.ந மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரையுடன்,

திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியீடு

மின்னூல்  -  https://archive.org/details/na.-thiruvilaiyatar-puranam-kudarkandam...-1969

-----------------------------------

திருவிளையாடற் புராணம் - வசன காவியம் 

https://archive.org/details/na.-thiruvilaiyatar-puranam-1992

-----------------------------------

நன்றி = கோவிலூர் மடாலய நூலகம்.

Friday, 21 March 2025

திருவிளையாடல் புராணம், 36ஆவது படலம், இரசவாதம் செய்த படலம்

திருவிளையாடல் 36ஆவது படலம். 

இரசவாதம் செய்த படலம்



பாண்டிய நாட்டில் மதுரைக்குக் கிழக்கே திருப்பூவணம் என்னும் சிவதலம் ஒன்று உண்டு. அங்கு திருக்கோயில் பணியாற்றிய உருத்திர கணிகையர்களுள் பொன்னனையாள் என்பவள் ஒருத்தி இருந்தாள். அவள் சிவபக்தியிலும் சிவனடியார் தொண்டிலும் சிறந்து விளங்கினாள்.

பொன்னனையாள் திருப்பூவணநாதரின் உற்சவமர்த்தி திருவுருவைத் தங்கத்தினால் செய்ய விருப்பம் கொண்டாள்;   அந்த  பொன்னார்மேனியனின் திருவுருவைச் செய்வதற்காக கரு  (அச்சு, die ) ஒன்றைச் செய்து வைத்திருந்தாள்.   

உலோகத் திருமேனி செய்யும் முறை - உலோகத்தினால் செய்ய வேண்டிய திருமேனியின் வடிவத்தை முதலில் படமாக (2 D) வரைந்து கொள்வார்கள்.  அந்தப் படத்தில் உள்ள உருவத்தை மெழுகினால் செய்வார்கள் (3 D).  அந்த மெழுகுப் பொம்மையின் மேல் களிமண்ணைப் பூசுவார்கள்.   இதை அப்படியே நெருப்பிலிட்டுச் சுடுவார்கள்.  இவ்வாறு சுட்டு எடுக்கும் போது உள்ளேயுள்ள மெழுகு உருகிக் கரைந்து வெளியே வந்து விடும்.  களிமண் சுடப்பட்டு சுடுமண் பொம்மை கிடைக்கும்.  இந்தச் சுடுமண் பொம்மையின் கீழ்ப்பகுதியில் ஒரு சிறு துளையிட்டு, அதன் வழியே உலோகத்தைக் காய்சி ஊற்றுவார்கள்.  சிறிது நேரத்தில் காய்ச்சி ஊற்றிய உலோகம் காய்ந்த பின்னர் அதன்மேலேயுள்ள சுடுமண் ஓட்டை உடைத்து எடுத்து விடுவார்கள்.  இவ்வாறு சுடுமண் ஓடு உடைக்கப்பட்டவுடன் உள்ளேயுள்ள உலோகத் திருமேனி நமக்குக் கிடைக்கும்.

பொன்னுக்குக் காத்திருந்த பொன்னனையாள் -   நாடோறும் பொன்னனையாளுக்குக் கிடைத்த வருமானம் எல்லாமும் அடியார்களுக்கு அன்னதானம் செய்தவற்கே  போதுமானதாக இருந்தது.  திருவுரு வார்ப்பிக்கத் தேவையான தங்கம் வாங்கிடத் தேவையான  பொருள் கிடைக்காமல் அவள் வருந்தினாள்.

பொற்கிழி - குல்பூடணபாண்டியனுக்குப் பொற்கிழி வழங்கியது போன்று, தனக்கும் பொற்கிழி வழங்க வேண்டுமென்று மதுரை அருள்மிகு சோமசுந்தரப் பெருமானிடம்  வேண்டிக் கொண்டாள்.  அன்பர்கள் வேண்டுவனவற்றை வேண்டியவாறே அளிக்கும் மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரர் ஒருநாள் சித்தர் உருக்கொண்டு பொன்னனையாளின் இல்லத்தை அடைந்தார். 
அவளது இல்லத்தில் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.  அடியார்கள் பலரும் திருவமுது அருந்திச் சென்று கொண்டிருந்தனர்.  
பொன்னனையாளின் தோழியர்கள் சித்தர்பெருமானிடம் வந்து திருவமுது செய்ய வருமாறு அழைத்தனர்.  அதற்குச் சித்தர் பெருமானும் உங்களது பொன்னனையாளை இங்கே அழைத்து வாருங்கள் என்று கூறினார்.

அதுகேட்ட பொன்னனையாளும் சித்தர்பெருமானிடம் வந்து அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கி, அகமும் முகமும் மலர வரவேற்று,  திருவமுது செய்ய வாருங்கள் என்று அழைத்தாள். 
சித்தர் பெருமானும் நீ ஏன் மெலிருந்துள்ளாய்?
உன் குறைதான் என்ன? என்று கேட்டார்.  
அதுகேட்ட பொன்னனையாள் சித்தரிடம் திருப்பூவணநாதரின் திருவுருவை வார்ப்பிக்கத் தங்கம் வேண்டியுள்ளது  என்று முறையிட்டாள். 

சித்தராகிய சிவபெருமான் -  சித்தர் வடிவில் வந்திருந்த அருள்மிகு மதுரை சோமசுந்தரேசுவரர் அவளை நோக்கி, 'பெண்ணே, உன் இல்லத்தில் உள்ள பித்தளைப் பாத்திரம், ஈயப் பாத்திரம் முதலிய எல்லாப் பாத்திரங்களையும் இங்கே கொண்டு வா' என்றார். உடனே பொன்னனையாள் தன் வீட்டில் வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம், பித்தளை, வெண்கலம் முதலிய உலோகங்கள் எல்லாவற் றையும் கொண்டுவந்து சித்தர்முன் வைத்தாள். சித்தர் அவற்றின்மீது திருநீறு சிதறி, பொன்னனையாளைப் பார்த்து,'நீ இவற்றை இன்று இரவு நெருப்பில் இட்டு எடுத்தால் இவை பொன்னாக மாறுவதைக் காணலாம். அவற்றைக் கொண்டு சிவபெருமான் திருவுருவை வார்ப்பிக்கக் கடவாய்' என்று கூறி மறைந்தார்.

சித்தராய் வந்தவர் சிவபெருமானே என்று தெளிந்த பொன்னனையாள் துன்பம் நீங்கி இன்பம் அடைந்தாள். சித்தர் கூறியபடியே அவள் அவ்வுலோகங்கள் எல்லாவற்றையும் நெருப்பில் இட்டுக் காய்ச்சினாள்.   ஆணவமலம் கழிந்ததுபோல் காய்ச்சி உலோகத்திலிருந்த கசடுகள் நீங்கின.  பொன் உருகி வந்து.  அந்தப் பொன்னைக் கொண்டு திருப்பூவணநாதரின் உற்சவர் திருவுருவை வார்ப்பித்து எடுத்தாள். அவ்வுருவின் பேரழகைக் கண்டு களித்து, 'அழகிய பிரானோ' என்று கண்ணத்தைக் கிள்ளி முத்தமிட்டுப் பிரதிட்டை செய்தாள். பின்பு அவள் தேர்த்விழாக்கள் முதலியனவும் நடத்தினாள். சில ஆண்டு கள் கழித்தபின் அவள் சிவலோகம் அடைந்தாள்.

இந்நாளில் அடியார்கள் ஒன்று சேர்ந்து,  திருப்பூவணம் ஸ்ரீ பொன்னனையாள் பெயரில்  அன்னதான அறக்கட்டளை ஒன்றை நிறுவி ஸ்ரீ பொன்னனையாள் நடத்திய அன்னதானத்தைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.








Sunday, 9 February 2025

இந்து என்றால் சந்திரன், இந்து என்ற சொல் இடம் பெற்றுள்ள திருவிளையாடல் புராணம் பாடலடிகள்

இந்து என்றால் சந்திரன்

 திருவிளையாடல் புராணத்தில்

' இந்து' என்ற சொல் உள்ள பாடலடிகள்

 


திருவிளையாடற் புராணத்தில் இந்து என்ற சொல் 16 பாடலடிகளில் இடம் பெற்றுள்ளது.  இந்து என்றால் சந்திரன் என்று பொருள்.  சந்திரனைச் சிவபெருமான் தலையில்  சூடியுள்ளான் என்றும், திங்கள் கிழமையை இந்துவாரம் என்றும் புராணம் குறிப்பிடுகிறது.


212.

அந்த வேலையில் அச்சிவ தீர்த்தத்தில்

வந்து மூழ்கி அம் மண்டபத்து ஏறியே

சந்தி ஆதி தவம் முடித்து ஈறு இலா

 இந்து சேகரன் தாள் நினைந்து ஏத்தியே.

 

285.

பொரு அரிய தகர்த் திங்கள் துலாத் திங்கள் இவை  உதிக்கும் போது மூழ்கின்

ஒரு பதினாயிர மடங்காம் சுறவு கவைத் தாள் அலவ உதிப்பின் மூழ்கின்

இருபதினாயிர மடங்காம்  இந்து ரவியிடத்து ஒடுங்கு  இந்து வாரம்

வருவது அறிந்து ஆடி மனு ஓதல் செயின் அனந்த மடங்கு உண்டாகும்.

  

300.

மனிதரில் உயர்ந்தோர் ஆதி மறையவர் தேவர் தம்மில்

பனிதரு திங்கள் வேணிப் பகவனே உயர்ந்தோள்  வேட்டோர்க்கு

இனிது அருள் விரதம் தம்முள் அதிகம் ஆம்  இந்து  வாரம்

புனித மந்திரங்கள் தம்முள் போத ஐந்து எழுத்து  மேலாம்.

 

542.

மகவு இன்றிப் பல பகல்யான் வருந்தி அரும் தவம்  புரிந்தேன் மைந்தன் பேறு

தக இந்த மகம் செய்தேன் அதுவும் ஒரு பெண்  மகவைத் தந்தது அந்தோ

முக  இந்து நிலவு ஒழுக வரு பெண்ணு முலை மூன்றாய்  முகிழ்த்து மாற்றார்

நக வந்தது என்னேயோ என்று வகை இலனாகி  நலியும் எல்லை.

 

692.

விரவு வானவர் நெருக்கு அற ஒதுக்குவான் வேத்திரப் படை ஓச்சி

அரவு வார் சடை நந்தி எம் பிரான் அவர் அணிமணி முடி தாக்கப்

பரவு தூளியில் புதைபடு கயிலை அம் பருப்பதம் பகல் காலும்

இரவி மண்டலத்து ஒடுங்கும் நாள் ஒடுங்கிய  இந்து மண்டலம் மானும்.

 

932.

மாசு அறத் துறந்தோர் உள்ளம் ஆன வான் களங்கம் நீங்க

ஈசர் தம் கிழமை என்னும்  இந்து ஆதிரை நாள் செய்த

பூசையின் பயன் தான் எய்த எரி பசும் பொன் கோள்வந்து

தேசு ஒடு கேந்திரத்தில் சிறந்த நல் ஓரை வாய்ப்ப.

 

946.

இன்னணம் களிப்ப மூதூர்  இந்து ஆதிரை நல் நாளில்

பொன்னவன் கேந்திரித்த புனித லக்கினத்தில் போந்த

தென்னவர் பெருமான் சேய்க்குச் சாதகச் செய்தி ஆதி

மன்னவர்க்கு இயன்ற வேத மரபினால் வயங்க ஆற்றி.

 

1106.

 இந்து இரண்டு அனைய கூர்அம்பல் இருள் வரை நெஞ்சு போழ்ந்த

மைந்தனின் வலிய காளை வரைந்து எறி நேமி சென்னி

சிந்திடாது ஆகி அம் பொன் மணி முடி சிதறச் சோம

சுந்தர நாதன் பூசைத் தொழில் பயன் அளித்தது என்னா.

 

1321.

வந்து நான் மாடம் ஆகி வளைந்து நால் திசையும் சூழ்ந்து

சந்து வாய் தெரியாது ஒன்றித் தாம் ஒரு குடிலாய்  மாடப்

பந்தி கோபுரம் செய் குன்றம் கால்கள் போல் பரிப்பப்  போர்த்த

 இந்து வார் சடையோன் ஏய எழிலிமா நகரம் எங்கும்.

 

1789.

சந்து சூழ் மலயச் சிலம்பர் தவம் புரிந்த இயக்கி மார்க்

அந்த நால் இரு சித்தி தந்தது அறைந்தனன் அடி தொழா

வந்து மீன் வளவன் பொருட்டு வடாது வாயில் திறந்து  அழைத்து

 இந்து சேகரன் விடை இலச்சினை இட்டவாறு விளம்புவாம்.

 

1964.

இய மானன்  இந்து ரவி எரி வான் இலஞ்சல் இல   எறிகால் எனும் பகுதி இரு நால்

மயமான சுந்தரனை மனம் வாய் மெய் அன்பின் இறை  வழிபாடு அடைந்து வர குணனாய்ச்

சய வேளை வென்ற வடிவினன் ஈறு இல் வென்றி பெறு சத வேள்வி இந்திரனை நிகர்வோன்

இயன் மேனி கொண்ட ஒளியினில் ஏழ் பசும் புரவி இனன் தேசு வென்ற வர குணனே.

 

2130.

வந்து மதுரைப் பெருமானை வணங்கிக் கொணர்ந்த நிதி எல்லாம்

 இந்து மருமான் நகர் உள்ளார் யாவும் அறிய யாவர்க்கும்

முந்தை வேத முதல்வர்க்கும் புலவோர் தமக்கு முறை  நல்கிச்

சந்த யாழின் இசைப்பாணர் தருமம் அனையான் வைகினான்.

 

2453.

கலையினால் நிறைந்த  இந்து காந்த மண்டபத்தும் செய்த

மலையினும் எழுது மாட மருங்கினும் நெருங்கு சோலைத்

தலையினும் கமல வாவித் தடத்தினும் தண் முத்து ஆரம்

முலையினும் அன்றிக் கோடை முடிவிடம் காணார் மைந்தர்.

 

2691.

நந்தி நாதனும் இனையனாய் அம் கயல் நாட்டத்து

 இந்து வாண் நுதலாளும் அங்கு அனையளாய் இருப்பத்

தந்தி நால் இரண்டு ஏந்திய தபனிய விமானத்து

உந்து நீர்ச் சடையார் மணம் உன்னினார் மன்னோ.

 

2801.

சிந்துர நுதன் மால் யானைச் செல்வப் பரிக்கு வேறு

மந்துறை அகன்ற ஆக வகுக்க சூழ் தண்ணீர் ஊட்ட

நந்து உறை தடங்கள் வேறு தொடுக நீள் நகரம் எங்கும்

 இந்து உறை மாடம் எல்லாம் அழகு செய்திடுக என்றார்.


நன்றி = பாடல் தொகுப்பு உதவி https://www.tamilvu.org/

திருவிளையாடற் புராணத்தில் சிவ, சிவன், சிவம், சிவா,

 

திருவிளையாடற் புராணத்தில்

'சிவ, சிவன், சிவம், சிவா,' என்ற சொல் உள்ள

பாடல்களின் தொகுப்பு


திருவிளையாடல் புராணத்தில்

சிவ என்ற சொல் 120 பாடலடிகளிலும் 
சிவம் என்ற சொல் 6 பாடலடிகளிலும், 
சிவன் என்ற சொல் 29 பாடலடிகளிலும், 
சிவா என்ற சொல் 8 பாடலடிகளிலும்,
சிவாலயம்  என்ற சொல் 1 பாடலடியிலும்,
இடம் பெற்றுள்ளன.

23.

தந்தை தாளோடும் பிறவித் தாள் எறிந்து நிருத்தர் இரு தாளைச் சேர்ந்த

மைந்தர் தாள் வேத நெறி சைவ நெறி பத்தி நெறி வழாது வாய் மெய்

சிந்தை தாள் அரன் அடிக்கே செலுத்தினர் ஆய் சிவா அனுபவச் செல்வர் ஆகிப்

பந்தம் ஆம் தொடக்கு அறுத்த திருத்தொண்டர் தாள் பரவிப் பணிதல் செய்வாம்.

 

42.

வல்லை தாய் இருபால் வைகும் சிவாலய மருங்கு மீண்டு

முல்லை ஆனைந்தும் தேனும் திரைக் கையான் முகந்து வீசி

நல்ல மான் மதம் சாந்து அப்பி நறு விரை மலர் தூய் நீத்தம்

செல்லல் ஆல் பூசைத் தொண்டின் செயல் வினை  மாக்கள் போலும்.

 

74.

அவம் மிகும் புலப் பகை கடந்து உயிர்க்கு எலாம் அன்பாம்

நவமிகும் குடை நிழற்றி மெய்ச் செய்ய கோல் நடத்தி

சிவ மிகும் பரஞான மெய்த் திருவொடும் பொலிந்து

தவம் இருந்து அரசு ஆள்வது தண் தமிழ்ப் பொதியம்.

 

83.

சிறந்த தண் தமிழ் ஆலவாய் சிவன் உலகு ஆனால்

புறம் தயங்கிய நகர் எலாம் புரந்தரன் பிரமன்

மறம் தயங்கிய நேமியோன் ஆதிய வானோர்

அறம் தயங்கிய உலகு உருவானதே ஆகும்.

 

90.

வெம்மையால் விளைவு அஃகினும் வேந்தர் கோல் கோடிச்

செம்மை மாறினும் வறுமை நோய் சிதைப்பினும் சிவன் பால்

பொய்ம்மை மாறிய பத்தியும் பொலிவு குன்ற வாய்த்

தம்மை மாறியும் புரிவது தருமம் அந்நாடு.

 

160.

திக்கு எலாம் புகழ் மதுரையைச் சிவபுரம் ஆக்கி

முக்கண் நாயகன் அரசு செய் முறையினுக்கு ஏற்பத்

தக்க தோழனோடு அளகை மா நகர் உறை தயக்கம்

ஒக்கு மாநகர் வாணிகர் உறையுள் சூழ் நிகமம்.

 

182.

மறைகள் ஆகமம் பொது சிறப்பு எனச் சிவன் வகுத்து

முறையின் ஓதிய விதி விலக்கு உரைகளும் முடிவு இல்

அறையும் வீடு ஒன்று இரண்டு எனும் பிணக்கு அற  அமைந்த

குறைவு இலாச் சிவ யோகியர் குழாங்களும் பலவால்.

 

208.

அளந்திடற்கு அரிதாய அக் குன்றின் மேல்

களம் கறுத்து விண் காத்தவன் கோயின் முன்

விளம்ப அரும் சிவ தீர்த்தத்தின் மிக்கதாய்

வளம் பெறும் சிவ தீர்த்தத்தின் மாடது.

 

212.

அந்த வேலையில் அச்சிவ தீர்த்தத்தில்

வந்து மூழ்கி அம் மண்டபத்து ஏறியே

சந்தி ஆதி தவம் முடித்து ஈறு இலா

இந்து சேகரன் தாள் நினைந்து ஏத்தியே.

 

231.

பெறற்கு அரும் தவம் செய்து அகம் தெளிந்து அரிதில் பெறும் கதி கேட்பவர்க்கு எளிதாய்

உறப்படும் தல நீர் வினாய முச் சிறப்பு உள்ளது  எத்தலத்தினும் கழிந்த

சிறப்பின் ஆம் எண் எண் திருவிளையாடல் செய்து  அருள் வடிவு எடுத்து என்றும்

மறைப் பொருள் விளங்கும் ஆலவாய் அதனை

 மண்ணின் மேல் சிவன் உலகு என்னும்.

 

233.

நாட்டம் ஒரு மூன்று உடைய நாயகனுக்கு அன்பு  உடையீர் நயந்து நீவிர்

கேட்ட தலம் ஈண்டு உரைத்த திருவால வாய் அதனுள் கிளைத்துப் பொன்னம்

தோட்டலர் தாமரை முளைத்த தொரு தடமும் சுந்தரச்  செம் சோதி ஞான

ஈட்டம் என முளைத்த சிவலிங்கம் ஒன்று உள இன்னும் இசைப்பக் கேண்மின்.

 

247.

ஏனைய தலத்தில் ஓர் ஆண்டு உணவு ஒழிந்து இயற்றும் நோன்பால்

ஆன பேறு இங்கு நோற்கும் சிவன் இரா அளிக்கும்  இங்கே

ஊன ஐம் பொறியும் வென்றோன் முப்பொழுது உண்டு வைகித்

தான் அமர்ந்தாலும் கால் உண்டி இயற்றும் மாதவத்தோன் ஆகும்.

 

253.

அத்திருமா நகரின் பேர் சிவ நகரம் கடம்ப வனம் அமர்ந்தோர் சீவன்

முத்தி புரம் கன்னிபுரம் திருவால வாய் மதுரை முடியா ஞானம்

புத்தி தரும் பூவுலகில் சிவலோகம் சமட்டி விச்சாபுரம் தென் கூடல்

பத்திதரு துவாத சாந்தத் தலம் என்று ஏது வினால் பகர்வர் நல்லோர்.

 

267.

மருள் கெட மூழ்கினோர் நல் மங்கலம் பெறலான் நாமம்

அருள் சிவ தீர்த்தம் ஆகும் புன்னெறி அகற்றி  உள்ளத்து

இருள் கெட ஞானம் தன்னை ஈதலான் ஞான  தீர்த்தம்

தெருள் கதி தரலான் முத்தி தீர்த்தம் என்று  இதற்கு நாமம்.

 

288.

முன்னவன் அருளிச் செய்த காரண முறையால்  அன்றி

இன்னம் இப் புனித வாவிக்கு ஏதுவால் எய்து நாமம்

மின் அவிர் சடையான் சென்னி மேவிய கங்கை நீரில்

பின்னது கலந்த நீரால் பெறும் சிவகங்கை என்றும்.

 

301.

மின்மை சால் மணியில் சிந்தாமணி வரம் விழுப்ப நல்கும்

தன்மை சால் அறங்கள் தம்மில் மிகும் சிவ தருமம் என்ப

இன்மை சால் நெறிநின் றோருக்கு ஏற்கு நற்கலங்கள் தம்மின்

நன்மை சான்றவரே முக்கணா தனுக்கு அன்பு பூண்டோர்.

 

304.

இத்தகு சயம்பு தன்னை ஏனைய சயம்பு எல்லாம்

நித்தமும் தரிசித்து ஏகும் நிருமல ஒளியாம் இந்த

உத்தம இலிங்கம் கண்டோர் உரை உணர்வு ஒடுங்க உள்ளே

சித்தம் மாசு ஒழியத் தோன்றும் சிவபரம் சுடரைக் கண்டோர்.

 

307.

மருட்சி செய் காம நோயான் மதி கெடு மாறு போல

அருள் சிவ ஞான நோக்கால் வலி கெடும் அவிச்சை போலத்

தருக்கு உறும் உவணம் சீறத் தழல் அராவிளியும் மா போல

செருக்கு உற அழியும் கற்ற கல்வி போல் சிதையும் அன்றே.

 

314.

அம் கை அளவு ஆகிய நல் நீர் ஆட்டிப் பூசித்தோர் அளவிலேனைத்

துங்க தலத்து உறை இலிங்க மூர்த்திகளைச் சிவ ஆகம நூல் சொன்ன ஆற்றான்

மங்கலம் ஆகிய முகமன் ஈரெட்டும் வழுவாது வாசம் தோய்ந்த

செங் கனக மணிக் கலசப் புனல் ஆட்டி மாபூசை செய்தோர் ஆவார்.

 

318.

திருவமுது நிவேதிப் போர் அவிழ் ஒன்றன் உகம் ஒன்றாச் சிவ லோகத்தின்

மருவி நிறை போகமுடன் வைகுவர் தாம் பூலம் முக வாசம் ஈந்தோர்

பொருவரிய கடவுள் ஆண்டு ஒரு நூறு கோடி சிவ புரத்து வாழ்வார்

ஒரு பளித விளக்கு இடுவார் வெண்ணிறமுங் கண்ணுதலம் உடையவர் ஆவார்.

 

326.

சிர நாலோன் பரவரிய சமட்டி விச்சா புர நாதன்  சீவன் முத்தி

புர நாதன் பூஉலக சிவ லோ காதிபன் கன்னி புரேசன் யார்க்கும்

வரம் நாளும் தரு மூல லிங்கம் என இவை முதலா மாடக் கூடல்

அரன் நாமம் இன்னம் அளப்பு இலவாகும் உலகு உய்ய வவ்வி லிங்கம்.

 

337.

மனக் கவலை கெட உலவா கோட்டை அடியாற்கு அளித்த வகையும் மாமன்

எனக் கருணை வடிவாகி வழக்கு உரைத்து பொருள் வணிகற்கு ஈந்த வாறும்

சினக்கதிர் வேல் வரகுணற்குச் சிவலோகம் காட்டியதும்  திவவுக் கோலான்

தனக்கு அடிமை என விறகு திரு முடி மேல் சுமந்து பகை தணித்த வாறும்.

 

419.

எப்புவனத்திலும் என்றும் கண்டு அறியா அதிசயமும் எண்ணுக்கு எய்தாத்

திப்பியமும் இக்கடம்ப வனத்து இன்று கண்டு உவகை திளைத்தேம் அம்கண்

வைப்பு அனைய ஒருபுனித வாவி மருங்கு ஒரு கடம்ப வனத்தின் நீழல்

ஒப்பு இல் ஒளியாய் முளைத்த சிவலிங்கம் ஒன்று உளது என்று உரைப்பக் கேட்டான்.

 

421.

அருவாகி உருவாகி அருருவம் கடந்து உண்மை  அறிவானந்த

உருவாகி அளவு இறந்த உயிராகி அவ் உயிர்க்கு ஓர் உணர்வாய் பூவின்

மருவாகிச் சராசரங்கள் அகிலமும் தன் இடை உதித்து மடங்க நின்ற

கருவாகி முளைத்த சிவக் கொழுந்தை ஆயிரம் கண்ணும் களிப்பக் கண்டான்.

 

425.

மொய்த்த புனக் காடு எறிந்து நிலம் திருத்தி வரும் அளவின் முளைத்த ஞான

வித்து அனைய சிவக் கொழுந்தின் திரு முடி மேல் பரிதிகர மெல்லத் தீண்டச்

சித்தம் நெகிழ்ந்து இந்திரன் தன் வெண் கவிகைத் திங்கள் நிழல் செய்வான் உள்ளம்

வைத்தனன் அப் போது இரவி மண்டலம் போல் இழிந்தது ஒரு மணி விமானம்.

 

430.

அம் கணா போற்றி வாய்மை ஆரணா போற்றி நாக

கங்கணா போற்றி மூல காரணா போற்றி நெற்றிச்

செங்கணா போற்றி ஆதி சிவ பரஞ் சுடரே போற்றி

எங்கள் நாயகனே போற்றி ஈறு இலா முதலே போற்றி.

 

438.

துறக்க நாடு அணைந்து சுத்த பல் போகம் துய்த்து மேல் மல பரி பாகம்

பிறக்க நான் முகன் மால் முதல் பெரும் தேவர் பெரும் பதத்து ஆசையும் பிறவும்

மறக்க நாம் வீடு வழங்குதும் என்ன வாய் மலர்ந்து அருளி வான் கருணை

சிறக்க நால் வேதச் சிகை எழு அநாதி சிவபரம் சுடர் விடை கொடுத்தான்.

 

458.

சிந்தனை வாக்கிற்கு எட்டாச் சிவன் அருள் அளித்த சேட

நிந்தனை பரிகாரத்தால் நீங்காது தலை மட்டாக

வந்தது முடி மட்டாக மத்தமா வனமா ஆகி

ஐந்து இரு பஃது ஆண்டு எல்லை அகன்ற பின் பண்டைத்தாக.

 

471.

இம்மையில் அறமுன் மூன்றால் எய்திய பயனை எய்தி

அம்மையின் மகவான் நீர் ஏழ் அரும் பதம் அளவும் வானில்

வெம்மை இல் போகம் மூழ்கி வெறுப்பு வந்து அடைய உள்ளச்

செம்மையில் விளை பேரின்ப சிவகதி செல்வார் ஆவார்.

 

474.

குலவு அப் பெரும் பதி இளம் கோக்களில் ஒருவன்

நிலவு மா நிதி போல அருச்சனை முதன் நியதி

பலவு ஆம் சிவ தருமமும் தேடுவான் பரன் பால்

தலைமை சான்ற மெய் அன்பினான் தனஞ்சயன்  என்பான்.

 

485.

வல்லை வாணிகம் செய்து நான் வருவழி மேலைக்

கல் அடைந்தது வெம் கதிர் கங்குலும் பிறப்பும்

எல்லை காணிய கண்டனன் இரவி மண்டலம் போல்

அல் அடும் சுடர் விமானமும் அதில் சிவக் குறியும்.

 

493.

சரண மங்கையோர் பங்குறை சங்கர சரணம்

சரண மங்கலம் ஆகிய தனிமுதல் சரணம்

சரண மந்திர வடிவம் ஆம் சதாசிவ சரணம்

சரண மும்பர்கள் நாயக பசுபதி சரணம்.

 

496.

சுரந்த அன்பு இரு கண்வழிச் சொரிவபோல் சொரிந்து

பரந்த ஆறோடு சிவானந்த பரவையுள் படிந்து

வரம் தவாத மெய் அன்பினால் வலம் கொடு புறம் போந்து

அரந்தை தீர்ந்தவன் ஒருசிறை அமைச்சரோடு இருந்தான்.

 

507.

மறைந்து எவற்றினும் நிறைந்தவர் மலர் அடிக்கு அன்பு

நிறைந்த நெஞ்சு உடைப் பஞ்சவன் நிலத்து மேம் பட்டுச்

சிறந்த சிற்ப நூல் புலவரால் சிவ பரம் சுடர் வந்து

அறைந்து வைத்தவாறு ஆலய மணிநகர் காண்பான்.

 

513.

பொன் மயமான சடை மதிக் கலையின் புத்தமுது உகுத்தனர் அது போய்ச்

சின் மயமான தம் அடி அடைந்தார்ச் சிவமயம் ஆக்கிய செயல் போல்

தன் மயம் ஆக்கி அந்நகர் முழுதும் சாந்தி செய்து  அதுவது மதுர

நன் மயம் ஆன தன்மையான் மதுரா நகர் என உரைத்தனர் நாமம்.

 

563.

திடம்படு அறிஞர் சூழச் சிவபரன் கோயில் முன்னிக்

கடம்பு அடி முளைத்த முக்கண் கரும்பினை மறைவண்டு ஆர்க்கும்

விடம் பொதி கண்டத் தேனை விதிமுறை வணங்கி மீண்டு

குடல் பயில் குடுமிச் செம்பொன் குரு மணிக் கோயில் நண்ணி.

 

585.

இறைவி தன்னை ஆதரிப்பதற்கு இம்பரிற் சிறந்த

குறைவு இல் நன்னகர் யாது எனக் கூறுவான் கேள்வித்

துறை விளங்கினோர் பயில் வது துவாதச முடி வென்று

அறைவள் அம்பதி அவனிமேல் சிவபுரம் ஆம் ஆல்.

 

599.

சிவ பரம் பரையும் அதற்கு நேர்ந்து அருள்வாள் தென்னவர் மன்னனாய் மலயத்

துவசன் என்று ஒருவன் வரும் அவன் கற்பின் துணைவியாய் வருதி அப்போது உன்

தவ மகவாக வருவல் என்று அன்பு தந்தனள் வந்த  வாறு இது என்று

உவமையில் பொதியத் தமிழ் முனி முனிவர்க்கு  ஓதினான் உள்ளவாறு உணர்ந்தார்.

 

643.

நின்ற மென் கொடிக்கு அகல் விசும்பு இடை அரன் நிகழ்த்திய திருமாற்றம்

அன்று அறிந்த மூதறிவான் ஆம் சுமதி சீறடி பணிந்து  அன்னாய் இக்

கொன்றை அம் சடைய குழகனே நின்மணக் குழகன்  என்றலும் அன்பு

துன்ற நின்றவள் பார்த்து அருள் சிவ பரம் சோதி  மற்று இது கூறும்.

 

681.

புத்தி அட்டகர் நாலிரு கோடி மேல் புகப் பெய்த நரகங்கள்

பத்து இரட்டியும் காப்பவர் பார் இடப் படை உடைக் கூர் மாண்டர்

சத்தி அச்சிவ பரஞ்சுடர் உதவிய சத உருத்திரர் அன்னார்

உய்த்து அளித்த ஈர் ஐம்பது கோடியர் உருத்திரர் கண நாதர்.

 

685.

கையும் கால்களும் கண்பெற்றுக் கதி பெற்ற கடும்புலி முனிச் செல்வன்

பை அராமுடிப் பதஞ்சலி பால் கடல் பருகி மாதவன் சென்னி

செய்ய தாள் வைத்த சிறு முனி குறு முனி சிவம் உணர் சனகாதி

மெய் உணர்ச்சி ஓர் வாமதேவன் சுகன் வியாதனார் அதன் மன்னோ.

 

690.

சித்தம் தேர் முனி வேந்தரும் தேவரும் சிவன் உருத் தரித்தோரும்

தத்தம் தேர் முதல் ஊர்தியர் வார் திகழ் சந்தன மணிக் கொங்கைக்

கொத்தம் தேமலர் குழல் மனை ஆரோடும் குளிர் வீசும் பாறாச் சென்று

அத்தம் தேரிடை ஆள் பங்கன் அணிவரைக் அணியராய் வருகின்றார்.

 

747.

மங்கல மகளி ரோடும் காஞ்சன மாலை வந்து

கங்கையின் முகந்த செம்பொன் கரக நீர் அனையார்  ஆக்கத்

திங்கள் அம் கண்ணி வேய்ந்த சிவபரம் சோதி பாத

பங்கயம் விளக்கி அந்நீர் தலைப் பெய்து பருகி  நின்றாள்.

 

753.

மாசு அறுத்து எமை ஆனந்த வாரி நீராட்டிப்  பண்டைத்

தேசு உரு விளக்கவல்ல சிவபரம் பரையைச்  செம்பொன்

ஆசனத்து இருத்தி நானம் அணிந்து குங்குமச் சேறு  அப்பி

வாச நீராட்டினார் கண் மதிமுகக் கொம்பர் அன்னார்.

 

779.

புத்தனார் எறிந்த கல்லும் போது என இலைந்த வேத

வித்தனார் அடிக் கீழ் வீழ விண்ணவர் முனிவர் ஆனோர்

சுத்த நா ஆசி கூறக் குங்குமத் தோயம் தோய்ந்த

முத்த வால் அரிசிவீசி மூழ்கினார் போக வெள்ளம்.

 

795.

தென்னவன் வடிவம் கொண்ட சிவபரன் உலகம் காக்கும்

மன்னவர் சிவனைப் பூசை செய்வது மறை ஆறு என்று

சொன்னது மன்னர் எல்லாம் துணிவது பொருட்டுத்தானும்

அந்நகர் நடுவூர் என்று ஒர் அணிநகர் சிறப்பக் கண்டான்.

 

796.

மெய்ம்மை நூல் வழியே கோயில் விதித்து அருள் குறி  நிறீ இப்பேர்

இம்மையே நன்மை நல்கும் இறை என நிறுவிப் பூசை

செம்மையால் செய்து நீப வனத்து உறை சிவனைக் கால

மும்மையும் தொழுது வையம் முழுவதும் கோல் நடாத்தும்.

 

875.

தீர்த்தன் இதழிச் சடை நின்றும் இழிந்து வரலால் சிவகங்கை

தீர்த்தன் உருவம் தெளி வோர்க்கு ஞானம் தரலால் சிவஞான

தீர்த்தம் காலில் கடுகி வரும் செய்தியாலே வேகவதி

தீர்த்தம் கிருத மாலை என வைகை நாமம் செப்புவர் ஆல்.

 

879.

கள்ள வினைப் பொறி கடந்து கரை கடந்த மறைச் சென்னி

உள்ள பொருள் பரசிவம் என்று உணர்ந்த பெருந்தகை அடிகேள்

தள்ளரிய பவம் அகற்றும் தவம் அருள் செய்க எனக் கருணை

வெள்ளம் என முகம் மலர்ந்து முனிவேந்தன் விளம்பும்  ஆல்.

 

880.

தவ வலியான் உலகு ஈன்ற தடா தகைக்குத் தாய் ஆனாய்

சிவ பெருமான் மருகன் எனும் சீர் பெற்றய் திறல்  மலயத்

துவசன் அரும் கற்பு உடையாய் நீ அறியாத் தொல் விரதம்

அவனி இடத்து எவர் அறிவார் ஆனாலும் இயம் பக்கேள்.

 

881.

மானதமே வாசிகமே காயிகமே என வகுத்த

ஈனம் இல் தவம் மூன்றம் இவற்றின் ஆனந்தம் தருமது

தான மிசை மதி வைத்தறயவு பொறை மெய் சிவனை

மோனம் உறத் தியானித்தல் ஐந்து அடக்கல் முதல் அனந்தம்.

 

884.

திருத்த யாத்திரை அதிகம் அவற்ற அதிகம் சிவன் உருவாம்

திருத்த ஆம் கங்கை முதல் திரு நதிகள் தனித் தனி போய்த்

திருத்த மாடு அவதரித்த திரு நதிகள் தனித் தனி போய்த்

திருத்தமாய் நிறைதலினால் அவற்று இகந்து திரை முந்நீர்.

 

907.

மஞ்சு ஓதிய காஞ்சன மாலை கையில்

பைஞ் சோதி விளங்குப இத் திரையாய்ச்

செஞ் சோதி முடிச் சிவ நாம எழுத்து

அஞ்சு ஓதி நெடும் கடல் ஆதும் அரோ.

 

918.

புவ லோகம் கடந்து போய்ப் புண்ணியருக்கு எண் இறந்த போகம் ஊட்டும்

சுவலோகம் கடந்து போய் மகலோகம் சனலோகம்  துறந்து மேலைத்

தவலோகம் கடந்து போய்ச் சத்திய லோகம் கடந்து  தண் துழாயோன்

நவலோகம் கடந்து உலக நாயகம் ஆம் சிவலோகம்  நண்ணினாரே.

 

959.

உன்னத ஆறு நீண்ட உறுப்பும் ஐந்து சூக்கம் தானும்

அன்னது குறுக்க நான்காம் அகல் உறுப்பு இரண்டு ஏழ் ஆகச்

சொன்னது சிவப்பு மூன்று கம்பிரம் தொகுத்த வாறே

இன்னவை விரிக்கின் எண் நான்கின் இலக்கண உறுப்பாம் என்ப.

 

971.

அன்னம் இறை கொள் வயன் மதுரைச் சிவன் யாம் அரச நீ ஈன்ற

பொன்னை அனையாள் தனை மதுரா புரியில் கொடுபோய் மறு புலத்து

மன்னர் மகுட மணி இடற மழுங்கும் கழல் கால் சுந்தரன் ஆம்

தென்னர் பெருமான் குமரனுக்குக் கொடுத்தி என்று செப்புதலும்.  

 

1065.

சத்திய ஞான ஆனந்த தத்துவம் தன்னை உள்கி

வைத்த தன் வடிவம் கொண்டு மண் முதல் சிவம் ஈறு ஆன

அத்துவ லிங்கம் தன்னை ஆசன மூர்த்தி மூல

வித்தை மற்று நாலு நூலின் விதியினால் பூசை செய்க.

 

1078.

புலர்ந்த பின் நித்த வினை முடித்து அரம்பை பொதுளும் பாசிலை பதின் மூன்றின்

நலம் தரு தூ வெள்ளரிசி பெய்து இனிய நறிய காய் கறியொடு பரப்பி

அலந்தர வான் பால் நிறை குடம் பதின் மூன்று அரிசி மேல் வைத்தான் அடியில்

கலந்த அன்பினராய்ச் சிவாஅர்ச் சனைக்கு உரிய கடவுள் வேதியர் களை வரித்து.

 

1081.

இனையவாறு உத்தாபனம் முடித்து ஆசான் ஏவலால் சிவன் அடிக்கு அன்பர்

தனைய ரோடு ஒக்கலுடன் அமுது அருந்த தகுதி இவ்விரத முன் கண்ணன்

அனைய தாமரை யோன் இந்திரன் முதல் வான் நாடவர்  மூவறு கணத்தோர்

அனைவரும் நோற்றார் மனிதரும் அனுட்டித்து அரும் பெறல் போகம் வீடு அடைந்தார்.

 

1082.

ஈது நோற்பவர் வெம் பகை மனத்துயர் தீர்ந்து ஆயிரம்  பிறவியில் இயற்றும்

திது சேர் வினை தீர்ந்து எடுத்த யாக்கையினில் சிவகதி  அடைவர் இவ் விரதம்

ஓதினோர் கேட்டோர் மனைவியர் மக்கள் ஒக்கலோடு இனிது வாழ்ந்து உம்பர்

மேதகு பதினாலு இந்திரன் பதத்தில் வீற்று இனிது இருப்பர் என்று அறவோன்.

 

1152.

புவனி இம் முறையால் புரந்து அளித்து ஆரம்பூண்ட பாண்டியன் திரு மகனுக்கு

அவனி ஏழ் அறிய வீரபாண்டியன் என்று அணிமுடி கவித்து அரசளித்து

நவ நிரதிசய பூரண இன்ப ஞான நோக்கு அருளிய மதுரைச்

சிவனடி நிழலில் பிளப்பு அற பழைய தேசு ஒடு நிறைந்து வீற்று இருந்தான்.

 

1158.

மருள் படு மாயை கழிந்தவன் மொழிந்த மறை பயின்று  செய்தே சிகனன்

இருள் படு மனத்தேம் இருத்து மாலைய யாது சூழ்  இதற்கு எனக் கேட்ட

தெருள் படு மனத்தோன் செப்புவான் வேதம் செப்பிய சிவபரம் சுடரே

அருள் படி எடுத்துப் பொருளையும் உணர்த்தும் அல்லது சூழ்ச்சி யாது அறைவீர்.

 

1159.

பண்ணிய தவத்தால் அன்றி யாதானும் படுபொருள் பிறிது இலை தவமும்

புண்ணிய தவத்தின் அல்லது பலியா புண்ணிய தவத்தினும் விழுப்பம்

நண்ணிய சைவ தலத்தினில் இயற்றின் நல்கும் அச் சிவ தலங்களினும்

எண்ணிய அதிக தலத்தினில் இயற்றின் இரும் தவம் எளிது உடன் பயக்கும்.

 

1181.

நிறை பாரற் பரம் விஞ்ஞான நிராமயம் என்று நூல்கள்

அறை பரம் பிரமம் ஆகும் இதன் உரு ஆகும் ஏக

மறை இதன் பொருளே இந்தச் சுந்தர வடிவாய் இங்ஙன்

உறைசிவ லிங்கம் ஒன்றெ என்பர் நூல் உணர்ந்த நல்லோர்.

 

1184.

ஆதி இலான் மதத்துவம் ஆன அலர் மகன் பாகமும் நடுவில்

நீதியில் விச்சா தத்துவம் ஆன நெடியவன் பாகமும் முடிவில்

ஓதிய சிவத் தத்துவம் எனலாம் ஆன உருத்திர பாகமும் உதிக்கும்

பேதி இம் முன்றில் எண்ணில் தத்துவங்கள் பிறக்கும் இம் மூன்றினும் முறையால்.

 

1186.

இன்னவை இரண்டும் இவன் அருள் வலியால் ஈன்ற நான் மறையை அந் நான்கும்

பின்னவன் அருளால் அளவு இல ஆன பிரணவம் ஆதி மந்திரமும்

அன்னவாறு ஆன தாரகத் தகாரம் ஆதி அக்கரங்களும் உதித்த

சொன்ன அக் கரத்தில் சிவாகம நூல் இச் சுரவன் நடுமுகத்தில் உதித்த.

 

1189.

முதல் நுகர் நீரால் சினை குழைத் தாங்கி இம் முழு முதல் கருத்து நல் அவியின்

பதம் இவன் வடிவப் பண்ணவர் பிறர்க்கும் திருத்தி யாம் பரன் இவன் முகத்தின்

விதம்உறு நித்தம் ஆதி மூவினைக்கும் வேண்டி ஆங்கு உலகவர் போகம்

கதி பெற இயற்றும் சிவார்ச்சனை வினைக்கும் காரணம் இச் சிவ கோசம்.

 

1192.

கிரியையான் ஞானம் தன்னால் கிளர் சிவ பத்தி பூசை

தரிசனம் சைவ லிங்க தாபனம் செய்தல் ஈசற்கு

உரிய மெய் அன்பர் பூசை உருத்திர சின்னம் தாங்கல்

அரிய தேசிகன் பால் பத்தி அனைத்தையும் தெரியல் ஆகும்.

 

1194.

தெருள் பெறு போகம் வீடு காரணமாய் சிவமயம் ஆம்  மறைப் பொருளை

இருள்கெட உரைத்தேம் இப் பொருட்கு அதிகம் இல்லை இப் பொருள் எலாம் உமக்கு

மருள் கெடத் தெளிவதாக என வினைய வழி வழா  மாதவர் புறத்தை

அருள் கையால் தடவி இலிங்கத்துள் புகுந்தான் அருள்  பழுத்தன்ன தேசிகனே.

 

1305.

நிவப்பு உற எழுந்த நான்கு மேகமும் நிமிர்ந்து வாய்  விட்டு

உவர்பு உறு கடலை வாரி உறிஞ்சின உறிஞ்ச லோடும்

சிவப் பெரும் கடவுள் யார்க்கும் தேவ் எனத் தெளிந்தோர் ஏழு

பவப் பெரும் பௌவம் போலப் பசை அற வறந்த அன்றெ.

 

1359.

ஆனந்த சித்தர் தமைக் காண்பல் என்று அன்பு கூர்ந்த

மீனம் தரித்த கொடி வேந்தன் குறிப்பு நோக்கி

மோனம் தரித்த சிவயோகரும் முந்தித் தம்பொன்

மானம் தனக்கு வட மேல் திசை வந்து இருந்தார்.

 

1364.

ஆனந்த கானம் தொடுத்து இங்கு உள ஆன சைவத்

தானம் பலவும் தொழுதல் பரமாகி வந்தேம்

ஞானம் தரும் இந் நகர் இம்மையில் சிவன் முத்தி

ஆனந்தம் ஆன பர முத்தி மறுமை நல்கும்.

 

1374.

கண்டா வளியைச் களிறு உண்டது கண்கள் சேப்புக்

கொண்டான் அரசன் சிவ யோகரில் கோபம் மூளத்

தண்டா அரசன் தமருள் தறு கண்ணர் சீறி

வண்டார் இதழி மறைத்தாரை அடிக்க வந்தார்.

 

1442.

வந்த மணவாட்டி சிவ சிந்தனையும் சைவ தவ வடிவு நோக்கி

வெந்த உடல் போல் மனமும் வெந்தவளை வேறு ஒதுக்கி வேண்டார் ஆகி

நிந்தனை செய்து ஒழுகுவார் அவளை ஒரு நாணீத்து நீங்கி வேற்றூர்த்

தந்த அமர் மங்கலம் காண்பார் தனியே வைத்து  அகம் பூட்டித் தாங்கள் போனார்.

 

1443.

உள் மாசு கழுவுவது நீறு என்றே உபநிடதம் உரைப்பக் கேட்டும்

மண் மாசு படப் பூசும் வடிவு உடையார் அகன்ற அதன் பின் மனையில் வைகும்

பெண் மாசு கழிய ஒரு சிவன் அடியார் தமைக் காணப் பொறாமல் இன்று என்

கண் மாசு படுவது எனக் கனிந்து ஒழுகு தலையன் பால்  கவலை கூர்வாள்.

 

1444.

சிவன் அடியார்க்கு அன்பு இலாச் சிந்தையே இரும்பு ஏவல் செய்து நாளும்

அவன் அடியார் திறத்து ஒழுகா ஆக்கையே மரம் செவி கண் ஆதி ஐந்தும்

பவன் அடியார் இடைச் செலுத்தாப் படிவமே பாவை  மறை பரவுஞ் சைவ

தவ நெறி அல்லா நெறியே பவ நெறியான் தனியாளாத்  தளர்வாள் பின்னும்.

 

1448.

ஒருத்தராய் உண்டி பல பகல் கழிந்த பசியினர் போல்  உயங்கி வாடி

விருத்த வேதியராய் வந்து அகம் புகுதக் கண்டு எழுந்து மீதூர் அன்பின்

கருத்தளாய்த் தவிசு இருத்திக் கை தொழுது சிவனை இங்குக் காண என்ன

வருத்த மா தவம் உடையேன் என முனிவர் பசித் துன்பால் வந்தேம் என்றார்.

 

1455.

எழுத அரிய மறைச் சிலம்பு கிடந்து புறத்து அலம்ப அன்பர் இதயம் என்னும்

செழு மலர் ஓடையின் மலர்ந்து சிவானந்தத் தேன் ததும்பு தெய்வக் கஞ்சத்

தொழுதகு சிற்றடிப் பெரிய விரல் சுவைத்து மைக் கணிர் துளும்ப வாய்விட்டு

அழுது அணையா ஆடையில் கிடந்தான் தனை

அனைத்து உயிரும் ஈன்று காத்து அழிக்கும் அப்பன்.

 

1478.

இதற்கு இது துணிவு என்று உன்னி எழுந்து போய்ச் சிவன் இராவில்

கதக் களிற்று ஒருத்தல் ஏந்தும் கதிர்மணிக் குடுமிக்  கோயில்

மதக்கரி உரியினாற்கு வரம்பு அறச் சிறந்த பூசை

விதப்பட யாமம் நான்கும் விதிவழி இயற்றல் செய்யா.

 

1550.

ஆவ என்னும் அழும் சிவ தா எனும்

பாவம் பாவம் பழி இதுவோ வைய

கோ எனும் கை குலைத்து எறியும் நிழல்

பாவை போல விடாது பின் பற்றும் ஆல்.

 

1551.

நல்ல தீர்த்தம் சிவ தலம் நலோர் பக்கமும்

செல்ல ஒட்டாது அரன் சீர்த்தி நாமம் செவிப்

புல்ல ஒட்டாது உளம் புகுத ஒட்டாது நாச்

சொல்ல ஒட்டாது கண்துயில ஒட்டாது அரோ.

 

1553.

உறுகணோ ஆற்ற நாள் உற்று உழன்று உலகு எலாம்

மறுகவே திரியும் மா பாதகன் வலி எலாம்

சிறுகுவான் சிவன் அருள் செயலினில் பாதகம்

குறுகு நாள் குறுகு நாள் கூடலைக் குறுகினான்.

 

1605.

அத்தகைச் சிவ சாதனம் தனில் அன்பு மிக்கவன்  ஒழுகலால்

அத்தன் மெய்த் திரு ஐந்து எழுத்து ஒலியால் நீற்று  ஒலியாலும் உள்

பைத்த வல் இருளும் புற இருளும் சிதைந்து பராபரன்

வித்தக திருவேடம் ஆனது மீனவன் திரு நாடு எல்லாம்.

 

1652.

முனியொடு குறுகிச் செம் பொன் முளரி உள் மூழ்கி  ஆதித்

தனிமுதல் அடியை வேணி முடி உறத் தாழ்ந்து வேத

மனு முறை சிவ ஆகமத்தின் வழி வழாது அருகித்து  ஏத்திக்

கனி உறும் அன்பில் ஆழ்ந்து முடிமிசைக் கரங்கள்  கூப்பி.

 

1653.

புங்கவ சிவன் முத்தி புராதிப புனித போக

மங்கலம் எவற்றினுக்குங் காரண வடிவம் ஆன

சங்கர நினது தெய்வத் தானங்கள் அனந்தம் இந்த

அங்கண் மா ஞாலம் வட்டத்து உள்ளன வைக தம்மில்.

 

1663.

செங்கோல் அனந்த குண மீனவள் தேயம் காப்பக்

கொங்கோடு அவிழ்தார்க் குல பூடனன் தன்னை ஈன்று

பொங்கு ஓத ஞாலப் பொறை மற்றவன் பால் இறக்கி

எம் கோன் அருளால் சிவமா நகர் ஏறினானே.

 

1666.

சவுந்தர சாமந்தன் எனத் தானை காவலன் ஒருவன்

சிவந்த சடை முடி அண்ணல் அடியவரே சிவம் ஆகக்

கவர்ந்து ஒழுகி அருச்சிக்கும் கடப்பாட்டின் நெறி நின்றோன்

உவந்து அரசற்கு இருமைக்கும் துணை ஆகி ஒழுகு  நாள்.

 

1684.

தெருட்டு அரு மறைகள் தேறா சிவபரம் சுடரோர்  அன்பன்

பொருட்டு ஒரு வடிவம் கொண்டு புரவி மேல் கொண்டு  போதும்

அருள் படை எழுச்சி காண்பான் போல ஆர் கலியின்  மூழ்கி

இருட்டுகள் கழுவித் தூய இரவி வந்து உதயம் செய்தான்.

 

1706.

வள்ளல் குல பூடணன் திங்கள் வாரம் தொடுத்து சிவதருமம்

உள்ள எல்லாம் வழாது நோற்று ஒழுகும் வலியால் தன் நாட்டில்

எள்லல் இல்லா வேதியரை இகழ்ந்தான் அதனான் மழை மறுத்து

வெள்ளம் அருக வளம் குன்றி விளைவு அஃகியது நாடு எல்லாம்.

 

1763.

பிருங்கி நந்தியே முதல் பெரும் தகைக் கணத்தரும்

மருங்கு இருந்த சனகாதி மா தவத்தர் நால்வரும்

ஒருங்கு இறைஞ்சி உண்ண உண்ண அமுதம் ஊறு சிவ கதைக்

கரும்பு அருந்த வாய் மலர்ந்து கருணை செய்யும் எல்லை வாய்.

 

1767.

இவளை நீர் சிந்தித் தான் முன் நீட்டிய வினையை நீக்கித்

தவலரும் சித்தி எட்டும் தரும் எனக் கருணை பூத்துச்

சிவபரம் சோதி எட்டுச் சித்தியும் தெளித்தல் செய்தான்

அவர் அது மறந்தார் உம்மை ஆழ் வினை வலத்தான் மன்னோ.

 

1782.

அறவும் சிறிய உயிர் தொறும் தான் பரம காட்டை அணுவாய்ச் சென்று

உறையும் சிறுமை அணி மா ஆம் உவரி ஞாலம் முதல் மேல் என்று

அறையும் சிவா அந்தம் ஆறா ஆறும் முள்ளும் புறனும் அகலாதே

நிறையும் பெருமை தனை அன்றோ மகிமா என்னும் நிரம்பிய நூல்.

 

1791.

உத்தம சிவ பத்திரில் பெரிது உத்தமன் புது விரைகலன்

மித்தை என்று வெண் நீறு கண்டிகை ஆரம் என்று  அணி மெய்யினான்

நித்த வேத புராணம் ஆதி நிகழ்த்திடும் பொருள் கண்ணுதல்

அத்தனனே பர தத்துவப் பொருள் என்று அளந்து அறி கேள்வியான்.

 

1825.

திரண்டு அதிர்ந்து எழுந்து வந்த சென்னி சேனை தன் நகர்க்

இரண்டு யோசனைப் புறத்து இறுக்கும் முன்னர் ஒற்றரால்

தெருண்டு தென்னனை மாட நீ கூடல் மேய சிவன் தாள்

சரண் புகுந்து வேண்டுக என்று சார்ந்து தாழ்ந்து கூறுவான்.

 

1876.

அதிக நல் அறம் நிற்பது என்று அறிந்தனை அறத்துள்

அதிகம் ஆம் சிவ புண்ணியம் சிவ அர்ச்சனை அவற்றுள்

அதிகம் ஆம் சிவ பூசையுள் அடியவர் பூசை

அதிகம் என்று அறிந்து அன்பரை அருச்சனை செய்வாய்.

 

1890.

பத்துமான் தடம் தேர் நூறு பனைக்கை மா நூற்றுப் பத்துத்

தத்துமான் அயுத மள்ளர் தானை இவ் அளவே ஈட்டி

இத்துணைக்கு ஏற்ப நல்கி எஞ்சிய பொருள்கள் எல்லாம்

சித்து உரு ஆன கூடல் சிவனுக்கே செலுத்தும் மன்னோ.

 

1925.

அன்பன் அடியார்க்கு இனியான் அனி நாள் அளந்து அல்கித்

தன் பன்னி யொடும் அயலார் சுற்றம் தமரோடும்

பின்பு அந்நிலையே இமவான் மகனைப் பிரியாத

இன்பன் உருவாய் சிவ மா நகர் சென்று இறை கொண்டான்.

 

1963.

பண் கொண்ட வேத முதல் இடை ஈறு நாடரிய பரமன்

 மாமனாகிய ஒரு வணிகன்

எண் கொண்ட காணி பொருள் கவர் ஞாதி மாதுலரை

  எதிர் ஏறி வென்ற படி இதுவாம்

தண் கொண்ட நேமி வரகுண தேவன் எய்து பழி

 தன்னைத் துடைத்து அனையம் அவன்

கண் கொண்டு காண உயர் சிவ லோகம் மதுரை தனில்

  வருவித்த காதை இனி மொழிவாம்.

 

1990.

மாழை மான் மட நோக்கிதன் மணாளனை வணங்கிப்

பிழை ஏழ் பவம் கடந்து நின் அடி நிழல் பெற்றோர்

சூழ நீ சிவபுரத்தில் வீற்று இருப்பது தொழுதற்கு

ஏழை யேற்கு ஒரு கருத்து வந்து எய்தியது எந்தாய்.

 

1992.

கோடி மாமதிக் கடவுளார் குரூச்சுடர் பரப்பி

நீடி ஒர் இடத்து உதித்து என மின் மினி நிகர்த்து

வாடி வான் இரு சுடர் ஒளி மழுங்க வான் இழிந்து

தேடினார்க்கு அரியான் உறை சிவபுரம் தோன்ற.

 

1994.

வருதியால் எனப் பணிந்து எழு வரகுணன் கொடு போய்க்

கருதி ஆயிரம் பெயர் உடை கடவுளன் முகத்தோன்

சுருதி ஆதி ஈறு அளப்பரும் சொயம் பிரகாசப்

பரிதி ஆள் சிவபுரம் இது பார் எனப் பணித்தான்.

 

2007.

மறைகளின் சத உருத்திர மந்திரம் நவின்றோர்

நிறை கொள் கண்டிகை நீறு அணி நீரர் யாரேனும்

குறி குணம் குலன் குறித்திடாது அன்பரைச் சிவன் என்று

அறியும் அன்பினால் பிறவி வேர் அறுத்தவர் இவர் காண்.

 

2008.

ஆன் அஞ்சு ஆடிய பரம் சுடர் இறை சிவஞான

தானம் செய்தவர் தருப்பணம் செய்தவர் சாம

கானம் செய்தவற்கு ஆலயம் கண்டு தாபித்தோர்

ஊனம் சேர் பிறப்பு அறுத்து வாழ் உத்தமர் இவர்காண்.

 

2009.

சிவனை அர்ச்சனை செய்பவர்க்கு இசைவன செய்தோர்

அவன் எனக் குறித்து அடியரைப் பூசை செய்து ஆறு

சுவைய இன் அமுது அருத்தினோர் தொண்டர் தம்  பணியே

தவம் எனப் புரிந்து உயர்ச்சியைச் சார்ந்தவர் இவர்காண்.

 

2017.

இனி வரும் பிறப்பு அறுத்து எமைக் காத்தியால் எனத் தம்

கனி அரும்பிய அன்பு எழு கருணை ஆர் அமுதைப்

பனி வரும் தடம் கண்களால் பருகி மெய் பனிப்ப

முனிவர் சங்கர சிவ சிவ என முறை முழங்க.

 

2020.

தன் புலன்களும் கரணமும் தன்னவே ஆக்கி

அன்பு உடம்பு கொண்டு அவன் எதிர் அருள் சிவ லோகம்

பின்பு பண்டு போல் மதுரையாப் பிராட்டியும் தானும்

முன்பு இருந்தவாறு இருந்தனன் சுந்தர மூர்த்தி.

 

2022.

நாயினேன் தன்னை நடுக்கும் பழி அகற்றித்

தாயின் நேர் ஆகித் தலை அளித்தாய் தாள் சரணம்

சேயினேன் காணச் சிவலோகம் காட்டிப் பின்

கோயில் நேர் நின்ற அருள் குன்றெ நின் தாள் சரணம்.

 

2024.

வெம்கண் பழியின் வினையேனை வேறு ஆக்கித்

திங்கள் குலக் களங்கம் தீர்த்தாய் நின் தாள் சரணம்

அம் கண் சிவபுரம் உண்டு அன்புடையார்க்கு என்பதை இன்று

எங்கட்குக் காட்டி இசைவித்தாய் தாள் சரணம்.

 

2030.

அன்ன தனித் தொல் மதுரை அன்று தொடுத்து இன்று எல்லை

தன் அனையது ஆகிய தலங்கள் சிகாமணி ஆகிப்

பொன் நகரின் வளம் சிறந்து பூ உலகில் சிவலோகம்

என்ன இசை படப் பொலிந்தது ஏழ் இரண்டு புவனத்தும்.

 

2031.

நெடியவன் பிரமன் தேட நீண்டவன் தென்னற்கு ஏழின்

முடியது ஆம் சிவ லோகத்தைக் காட்டிய முறை ஈது ஐயன்

படிமிசை நடந்து பாடிப் பாணன் தன் விறகு ஆளாகி

அடிமை என்று அடிமை கொண்ட அருள் திறம் எடுத்துச் சொல்வாம்.

 

2123.

மின் அவிரும் செம் பொன் மணி மாடக் கூடல் மேய

 சிவன் யாம் எழுதி விடுக்கும் மாற்றம்

நன்னர் முகில் எனப் புலவர்க்கு உதவும் சேர நரபாலன்

 காண்க தன் போல் நம்பால் அன்பன்

இன் இசை யாழ்ப் பத்திரன் தன் மாடே போந்தான்

 இருநிதியம் கொடுத்து வர விடுப்பதுஎன்னத்

தென்னர் பிரான் திரு முகத்தின் செய்தி நோக்கிச் சோர்

 பிரான் களிப்பு எல்லை தெரியான் ஆகி.

 

2148.

இறை அருள் வரிசை பெற்ற பத்திரனும் மேறு உயர்த்தவரை நாற்போதும்

முறையினால் வழிபட்டு ஒழுகுவான் ஆக முடிகெழு வரகுண வேந்து

மறை முதல் அடிகள் வந்து வந்தனையால் வழுத்துவான் சில் பகல் கழிய

நிறை பெரும் சுடரோன் திரு உரு அடைந்து நெறியினால் சிவபுரம் அடைந்தான்.

 

2256.

தந்தை தாய் இழந்து அலமரு குருளையத் தாயாய்

வந்து நாயகன் முலை கொடுத்து அருளிய வகையீது

அந்த வாறு இரு மைந்தரு மந்திரர் ஆகி

எந்தையார் சிவபுரம் புகுந்து இருந்தவாறு இசைப்பாம்.

 

2260.

அகில வேதமும் ஆகம பேதமும் நம்மைச்

சகல சிவ தயாபரன் என்று உரை சால்பால்

இகலில் சேதன அசேதனம் ஆகிய இரண்டும்

புகலில் வேறு அல எமக்கு அவை பொதுமைய அதனால்.

 

2264.

அவரை நின் கடைக் அமைச்சராக் கோடி என்ற அளவில்

சிவ பரம் சுடர் அருள் செயச் செழியர் கோ வேந்தன்

கவலரும் களிப்பு உடையனாய்க் கண் மலர்ந்து எழுமான்

தவழ் நெடும் திரைக் கரும் கடல் தத்தி நீந்து எல்லை.

 

2273.

இன்னவாறு ஒழுகும் பன்னிரு வோரும் ஈகையும் தருமமும் புகழும்

தென்னர் கோ மகற்கு வைகலும் பெருகத் திசை எலாம் விசயம் உண்டாக்கிப்

பன்னக ஆபரணன் சிவபுரம் அடைந்து பரன் கண நாதருள் கலந்து

மன்னி வீற்று இருந்தார் மன்னர் மன்னவனும் வான் பதம்

 அடைந்து வீற்று இருந்தான்.

 

2302.

முத்தர் ஆன முனிவர் குழாத் தொடும்

சுத்த ஆனந்த வாரியுள் தோய்ந்து தன்

சித்த மாசு கழீச் சிவம் ஆகிய

சத்தியத் தவ மா முனி தங்கும் ஆல்.

 

2310.

மடம்படு அறிவும் நீங்கி வல்வினைப் பாசம் வீசித்

திடம்படு அறிவு கூர்ந்து சிவ பரஞ்சோதி பாதத்து

திடம்படு அன்பு வா என்று ஈர்த்து எழ எழுந்து நாரை

தடம் படு மாடக் கூடல் தனி நகர் அடைந்து மாதோ.

 

2315.

செய்ய கால் மட நாரையும் சென்று தாழ்ந்து

ஐயனே இப் பிறவி அறுத்து நின்

மெய்யர் வாழ் சிவ லோகத்தின் மேவி நான்

உய்ய வேண்டும் ஒன்று இன்னமும் உண்டு அரோ.

 

2310.

மடம்படு அறிவும் நீங்கி வல்வினைப் பாசம் வீசித்

திடம்படு அறிவு கூர்ந்து சிவ பரஞ்சோதி பாதத்து

திடம்படு அன்பு வா என்று ஈர்த்து எழ எழுந்து நாரை

தடம் படு மாடக் கூடல் தனி நகர் அடைந்து மாதோ.

 

2317. என்று இத் தட மின் இலவாக நீ

நன்று சால் வர நல் கென வெள்ளி மா

மன்று உளானும் வரம் தந்து போயினான்

சென்று நாரை சிவலோகம் சேர்ந்தது ஆல்.

 

2405.

கழுமணி வயிரம் வேந்த கலன் பல அன்றிக் கண்டிக்

கொழுமணிக் கலனும் பூணும் குளிர்நிலா நிற்று மெய்யர்

வழுவறத் தெரிந்த செம் சொல் மாலையால் அன்றி ஆய்ந்த

செழு மலர் மாலையானும் சிவ அர்ச்சனை செய்யும் நீரார்.

 

2612.

இந்திரன் தன் பழி துரத்தி அரசு அளித்துப் பின்பு கதி இன்பம் ஈந்த

சுந்தரன் பொன் அடிக்கு அன்பு தொடுத்து நறும் சண்பகத்தார் தொடுத்துச் சாத்தி

வந்தனை செய் திருத்தொண்டின் வழிக்கு ஏற்பச் சண்பகப் பூமாற வேந்தன்

அந்தர சூட மணியாம் சிவ புரத்து நிறை செல்வம் அடைந்தான் இப்பால்.

 

2626.

கொலையினை ஓர் அவுணர் புரம் நோடி வரையில் பொடியாகக் குனித்த மேருச்

சிலையினையோ பழைய சிவ புரத்தினையோ அருவி மணி தெறிக்கும் வெள்ளி

மலையினையோ தம்மை மறந்து உனை நினைப்பார் மனத்தினையோ வாழ்த்தும் வேதத்

தலையினையோ எங்கு உற்றாய் எங்கு உற்றாய் என்று என்று தளரும் எல்லை.

 

2629.

படர்ந்து பணிந்து அன்பு உகுக்கும் கண்ணீர் சோர்ந்து ஆனந்தப் பௌவத்து ஆழ்ந்து

கிடந்து எழுந்து நாக்குழறித் தடுமாறி நின்று இதனைக் கிளக்கும் வேதம்

தொடர்ந்து அறியா அடி சிவப்ப நகர்ப் புலம்ப உலகு ஈன்ற தோகை யோடு இங்கு

அடைந்து அருளும் காரணம் என் அடியேனால் பிழை உளதோ ஐயா ஐயா.

 

2716.

ஆய வளம் பதியதனில் அமாத்தியரில் அரு மறையின்

தூய சிவ ஆகம நெறியின் துறை விளங்க வஞ்சனையான்

மாயன் இடும் புத்த இருள் உடைந்தோட வந்து ஒருவர்

சேய இளம் பரிதி எனச் சிவன் அருளால் அவதரித்தார்.

 

2749.

சரியை வல்ல மெய்த் தொண்டரும் சம்புவுக்கு இனிய

கிரியை செய்யும் நல் மைந்தரும் கிளர் சிவ யோகம்

தெரியும் சாதகக் கேளிரும் தேசிகத் தன்மை

புரியும் போதகச் செல்வரும் அளவு இலர் பொலிய.

 

2753.

இத்தகைப் பல தொண்டர் தம் குழத்து இடையால் அம்

ஒத்த பைங் குருந்து அடியினில் யோக ஆசனத்தில்

புத்தகத்து எழுதிய சிவஞான மெய்ப் போதம்

கைத்தலம் தரித்து இருப்பது ஓர் கருணையைக் கண்டார்.

 

2760.

தேனும் பாலும் தீம் கன்னலும் அமுதும் ஆய் தித்தித்து

ஊனும் உள்ளம் உருக்க உள் ஒளி உணர்ந்து இன்பம்

ஆனவாறு தேக்கிப் புறம் கசிவது ஒத்து அழியா

ஞான வாணி வந்து இறுத்தனள் அன்பர் தம் நாவில்.

 

2779.

சிந்தை ஆகிய செறுவினுள் சிவ முதல் ஓங்கப்

பந்த பாசம் வேர் அறக் களைந்து அருள் புனல் பாய்ச்சி

அந்தம் ஆதியின்று ஆகிய ஆனந்த போகம்

தந்த தேசிக உழவன் தன் கோயிலைச் சார்ந்தார்.

 

2788.

பொன் அம் கமலத் தடம் படிந்து புழைக்கை மதமா முகக் கடவுள்

தன்னம் கமல சரண் இறைஞ்சித் தனியே முளைத்த சிவக் கொழுந்தை

மின் அம் கயல் கண் கொடி மருங்கில் விளைந்த தேனை முகந்து உண்டு

முன்னம் கருத்து மொழி உடம்பு மூன்றும் அன் பாய்த் தோன்றினார்.

 

2790.

மெய் அன்பு உடையாய் அஞ்சலை நீ வேட்ட வண்ணம் விண் இரவி

வையம் பரிக்கும் பரி அனைய வயமாக் கொண்டு வருதும் என

ஐயன் திருவாக்கு அகல் விசும்பு ஆறு எழுந்தது ஆக அது கேட்டுப்

பொய் அன்பு பகன்றார் சிவன் கருணை போற்றி மனையில் போயினார்.

 

2798.

இறக்கினும் இன்றே இறக்குக என்று இருக்கினும் இருக்குக வேந்தன்

ஒறுக்கினும் ஒறுக்க உவகையும் உடனே ஊட்டினும் ஊட்டுக வானில்

சிறக்கினும் சிறக்க கொடிய தீ நரகம் சேரினும் சேருக சிவனை

மறக்கிலம் பண்டைப் பழவினை விளைந்தால் மாற்றுவார் யார் என மறுத்தார்.

 

2807.

சிலை அது பொறை தோற்றாது சிவன் அடி நிழலில் நின்றார்

நிலை அது நோக்கி மாய நெறி இது போலும் என்னாக்

கொலை அது அஞ்சா வஞ்சர் கொடும் சினம் திருகி வேதத்து

தலை அது தெரிந்தார் கையும் தாள்களும் கிட்டி ஆர்த்தார்.

 

2906.

வெண்ணிறம் சிவப்பு பொன் நிறம் கறுப்பு வேறு அற விரவிய நான்கு

வண்ணம் உள்ளனவும் வேறு வேறு ஆய மரபு மை வண்ணமும் வந்த

எண்ணிய இவற்றின் சிறப்பு இலக்கணத்தை இயம்புதும் கேள் என இகல் காய்

அண்ணல் அம் களிற்றார் அரு மறை பரிமேல் அழகியார் அடைவு உற விரிப்பார்.

 

2958.

ஈறு இலாச் சிவ பரம் சுடர் இரவி வந்து எறிப்பத்

தேறு வார் இடைத் தோன்றிய சிறு தெய்வம் போல

மறு இலாத பல் செம் கதிர் மலர்ந்து வாள் எறிப்ப

வீறு போய் ஒளி மழுங்கின மீன் கணம் எல்லாம்.

 

2960.

கவன வெம்பரி செலுத்தி மேல் கவலை தீர்ந்து உள்ளே

சிவம் உணர்ந்தவர் சிந்தை போல் மலர்ந்த செம் கமலம்

உவமையில் பரம் பொருள் உணர்ந்து உரை இறந்து இருந்தோர்

மவுன வாய் என அடங்கின மலர்ந்த பைம் குமுதம்.

 

2990.

வான் ஆறு இழி நதி ஆயிர முகத்தால் வருவது போல்

ஆனாது எழு நீத்தம் தணியாவாறு கண்டு அன்பு

தான் ஆகிய சிவன் அன்பரை ஒறுக்கும் தறு கண்ணர்

போனார் தமது அகத்தே உள பொருள் பேணுதல் கருதா.

 

3050.

கண் நுதல் நந்தி கண்த்தவர் விசும்பில் கதிர் விடு திப்பிய விமானம்

மண் இடை இழிச்சி அன்னை வா என்று வல்லை வைத்து அமரர் பூ மழையும்

பண் நிறை கீத ஒதையும் வேதப் பனுவலும் துந்துபி ஐந்தும்

விண் இடை நிமிரச் சிவன் அருள் அடைந்தோர் மேவிய சிவபுரத்து உய்த்தார்.

 

3062.

உம்மை நான் அடுத்த நீரால் உலகு இயல் வேத நீதி

செம்மையால் இரண்டு நன்றாத் தெளிந்தது தெளிந்த நீரான்

மெய்மை யான் சித்த சுத்தி விளைந்தது விளைந்த நீரால்

பொய்ம்மை வானவரின் நீந்திப் போந்தது சிவன் பால்  பத்தி.

 

3064. ச்சிதானந்தம் ஆம் அத் தனிப் பர சிவனே தன்னது

இச்சையால் அகிலம் எல்லாம் படைத்து அளித்து ஈறு செய்யும்

விச்சை வானவரைத் தந்த மேலவன் பிறவித் துன்பத்து

அச்சம் உற்று அடைந்த்தோர்க்கு ஆனா இன்பவீடு அளிக்கும் அன்னோன்.

 

3081.

அம் மகனை முடி சூட்டி அரசாக்கி வாதவூர் அமைச்சர் சார்பன்

மெய்ம்மை நெறி விளக்கி இரு வினை ஒப்பில் அரன் கருணை விளைந்த நோக்கான்

மும்மை மலத் தொடர் நீந்திச் சிவானந்தக் கடல் படிந்து முக்கண் மூர்த்தி

செம் மலர்த்தாள் நிழல் அடைந்தான் திறல் அரிமர்த்தனன் எனும் தென்பார் வேந்தன்.

 

3083.

வீதி தொறும் வீழ்ந்து வீழ்ந்து இறைஞ்சி ஆலயத்து  எய்தி மெய்மை ஆன

கோதி அறிவு ஆனந்தச் சுடர் உரு ஆம் சிவகங்கை  தோய்ந்து மேனி

பாதி பகிர்ந்தவள் காணப் பரானந்த தனிக் கூத்து  பயிலா நிற்கும்

ஆதி அருள் ஆகிய அம்பலம் கண்டு காந்தம் நேர் அயம் போல் சார்ந்தார்.

 

3085.

வண்டு போல் புண்டரிக மலரில் விளை சிவ அனந்த மதுவை வாரி

உண்டு வாசகம் பாடி ஆடி அழல் வெண்ணெய் என உருகும் தொண்டர்

விண் துழாவிய குடுமி மன்று உடையான் திருவாக்கான் மிகுந்த நேயம்

கொண்டு போய்க் குணதிசையில் அரும் தவர் வாழ் தபோவனத்தைக் குறுகி அம் கண்.

 

3086.

குறி குணங்கள் கடந்த தனிக் கூத்தன் உரு எழுத்து ஐந்தின் கொடுவாள் ஓச்சிப்

பொறி கரணக் காடு எறிந்து வீசி மனப் புலம் திருத்திப் புனிதம் செய்து

நிறை சிவமாம் விதை விதைத்துப் பசு போதம் களைந்து அருணன் நீர் கால் பாய

அறி உருவாய் விளைந்த தனிப் பார் ஆனந்த அமுது அருந்தாது அருந்தி நின்றார்.

 

3087.

மான் நிரையும் குயவரியும் வந்து ஒருங்கு நின்று ரிஞ்சா  மயங்கு கானத்து

ஆன் நிரைக கன்று என இரங்கி மோந்து நக்க ஆனந்த  அருள் கண்ணீரைக்

கான் நிறை புள்ளினம் பருகக் கருணை நெடும் கடல் இருக்கும் காட்சி போலப்

பால் நிற வெண் நீற்று அன்பர் அசை வின்றிச் சிவயோகம் பயிலும் நாளில்.

 

3097.

தோற்றம் இல்லாதவர் உங்கள் சிவனுக்கும் திரு நீற்றுக்கும்

தோற்றம் எப்படித் திட்டாந்தம் சொல்லுமின் என்றார்  தூயோர்

வேற்றுமை அற நாம் இன்னே விளக்குதும் அதனை  நீங்கள்

தோற்ற பின் நுமக்குத் தண்டம் யாது கொல் சொல்மின் என்றார்.

 

3103.

வேறு வேறு இறைவன் கீர்த்தி வினா உரையாகப் பாடி

ஈறு இலா அன்பர் கேட்ப இறை மொழி கொடுத்து மூங்கை

மாறினாள் வளவன் கன்னி மடவரல் வளவன் கண்டு

தேறினான் சிவனே எல்லாத் தேவர்க்கும் தேவன் என்னா.

 

3105.
மாசு அறு மணிபோல் பல் நாள் வாசக மாலை சாத்திப்

பூசனை செய்து பல் நாள் புண்ணிய மன்றுள் ஆடும்

ஈசனை அடிக் கீழ் எய்தி ஈறு இலா அறிவு ஆனந்தத்

தேசொடு கலந்து நின்றார் சிவன் அருள் விளக்க வந்தார்.

 

3118.

அரும் தமிழ்ப் பாண்டி வேந்தற்கு உறுதி ஆக்கம் செய்யும்

மருந்தினில் சிறந்த கற்பின் மங்கையர்க்கு அரசி யாரும்

பெருந்தகை அமைச்சு நீரில் குழைத்து அன்றி பிறங்கப் பேறு

தரும் திரு நீறு இடாராய் சிவ அடிச் சார்பில் நின்றார்.

 

3123.

ஏழ் இசை மறை வல்லாளர் சிவபாத இதயர் என்னக்

காழியில் ஒருவர் உள்ளார் கார் அமண் கங்குல சீப்ப

ஆழியில் இரவி என்ன ஒரு மகவு அளித்தி என்னா

ஊழியில் ஒருவன் தாளை உள்கி நோற்று ஒழுகி நின்றார்.

 

3127.

கரும் பினில் கோது நீத்துச் சாறு அடு கட்டியே போல்

வரம்பு இலா மறையின் மாண்ட பொருள் எலாம் மாணத்  தெள்ளிச்

சுரும்பு இவர் கொன்றை வேணிப் பிரான் இடம் தோறும் போகி

விரும்பிய தென் சொல் மாலை சிவ மணம் விளையச் சாத்தி.

 

3219.

அடியார் பதினாறாயிரவர் உள்ளார் சிவனை அவமதித்த

கொடியார் நீவிர் உமக்கு ஏற்ற தண்டம் இதுவோ கொன்றை மதி

முடியார் அருளாள் உங்களை நாம் வென்றேம் ஆயின் மூ இலை வேல்

வடிவான் நிரைத்த கழு முனை இடுவேம் அதுவே வழக்கு என்றார்.

 

3229.

பொய்யின் மறையின் புறத்து அமணர் புத்தர்க்கு அன்றி வாய்மை உரை

செய்யும் மறை நூல் பல தெரிந்தும் சிவனே பரம் என்பது அறியாதே

கையில் விளக்கினொடும் கிடங்கில் வீழ்வார் கலங்கி மனம்

ஐயம் அடைந்த பேதையர்க்கும் அறிவித்தனவே அவை அன்றோ.

 

3256.

சென்னி வெண் திங்கள் மிலைச்சிய சிவன் அருள் அடைந்த சம்பந்தர்

துன் இரும் சமணனைக் கழுமுனை ஏற்றித் துணித்த வாறு இசைத்தனம் வணிகக்

கன்னிதன் மன்றல் கரியினை மாற்றாள் காண அக் கண் நுதல் அருளால்

வன்னியும் கிணறும் இலிங்கமும் ஆங்கு வந்தவாறு அடுத்தினி உரைப்பாம்.

 

3279.

நன் நகர் உறக்கம் நீங்கி நடுக்கம் உற்று அழுங்கக் காழித்

தென்னகர் ஞானச் செல்வர் சிவன் நகர் தொறும் போய்ப் பாடி

அந் நகர் அடைந்தார் ஆங்கு ஓர் அணி மடத்து இருந்தார் கேட்டு ஈது

என் என ஆள் விட்டு ஆய்ந்து கோயிலின் இடை வந்து எய்தி.

 

3315.

பண்ணான் மறை முடியும் தேறாப் பரசிவனை

எண்ணால் அளவு இறந்த எக் கலையால் கண்டு உளக்

கண்ணால் அறியாதார் வீட்டு இன்பம் காண்பரோ

மண் ஆதி ஆறு ஆறு நீத்த தனி மாதவரே.

 

3331.

கரி முகத்து அவுணற் காய்ந்து கரி முகத்து அண்ணல் பூசை

புரிசிவ நகரம் ஈது தாரகற் பொருது செவ்வேள்

அரனை அர்ச்சித்தார்க் கீழ் மணல் குறியான் பால் ஆட்டிப்

பரன் முடி மாலை சூடும் சேய் வளம் பதி ஈது ஆகும்.

 

3342.

சரத வேதம் பரவு புனவாயில் நகரும் தவ சித்தர்

இரத வாதம் செய்து சிவன் உருவம் கண்ட எழில் நகரும்

வரதன் ஆகி அரன் உறையும் கானப் பேரு மலை மகளை

வரத யோக நெறி நின்று மணந்தார் சுழியல் வியன் நகரும்.

 

3360.

எனத் துதித்த வசிட்டாதி இருடிகளைக் குரு முனியை எறிதேன் நீப

வனத்து உறையும் சிவ பெருமான் இலிங்கத்தின் மூர்த்தியாய் வந்து நோக்கிச்

சினத்தினை வென்று அகம் தெளிந்தீர் நீர் செய்த பூசை துதி தெய்வத் தானம்

அனைத்தினுக்கும் எனைத்தும் உயிர்க்கும் நிறைந்து நமக்கு ஆனந்தம் ஆயிற்று என்னா.

 

3362.

உனக்கு அரிய வரம் இனி யாம் தருவது எவன் உனக்கு அரிதாம் ஒன்றும் காணேம்

எனக் கருணை செய்து இலிங்கத்து இடை இச்சை வடிவாய்ச் சென்று இருந்தான் ஆகத்

தனக்கு அரிய வரம் நல்கும் சிவலிங்கம் தன் பெயரால் தாபித்தான் தன்

இனக்கருணை வசிட்டாதி முனிவர்களும் தம் பெயரால்  இலிங்கம் கண்டார்.

 நன்றி = பாடல் தொகுப்பு உதவி  https://www.tamilvu.org/