Tuesday, 31 May 2022
Monday, 30 May 2022
அகரத்தில் சுடுமண் உறைகிணறு
31.05.2022
தினத்தந்தி செய்தி -
அகரத்தில் சுடுமண் உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சிவகங்கை திருப்புவனம், திருப்புவனம் யூனியனைச் சேர்ந்தது அகரம் கிராமம். இங்கு கடந்த வருடம் நடைபெற்ற 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியின்போது சிறிய, பெரிய பானைகள், ஓடுகள், சுடு மண்ணால் ஆன உறைகிணறுகள், சுடுமண்ணால் ஆன பொம்மைகள், பழங்கால செங்கல் சுவர் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது இங்கு 8-ம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு தோண்டப்பட்ட முதல் குழியில் மண்பாண்ட ஓடுகள், சிறிய பானைகள், சிறுவர்கள்-பெண்கள் விளையாடும் சில்லுவட்டுக்கள், கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், பழங்கால விலங்குகளின் எலும்புகள் உள்பட பல பொருட்கள் கிடைத்தன. 2-வது குழி தோண்டி அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டபோது சுடுமண் பாசிமணிகள், சிவப்பு நிற சிறிய மண் பானை போன்ற குடுவை கிடைத்து உள்ளது. தற்போது 3-வது குழி தோண்டி அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றபோது 2 அடுக்குகள் உடைய சுடுமண் உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. முதல் அடுக்கின் மேல்புறம் வட்ட வடிவில் அழகிய வேலைப்பாடுகளுடன் காட்சி அளிக்கிறது. இதன் மூலம் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பண்டைய தமிழர்கள் சிந்தனை செய்து, சுடுமண் உறைகிணறு உள்ளிட்ட நீர்நிலைகளை ஏற்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் செய்யும்போது இன்னும் கூடுதலாக சுடுமண் உறை அடுக்குகள் கிடைக்கலாம் என தெரிய வருகிறது.
https://www.dailythanthi.com/News/State/well-711446
கீழடி அகழ்வாராய்ச்சி சூடுமண் தலை கண்டுபிடிப்பு!
கீழடி அகழ்வாராய்ச்சி: பெண்ணின் தலை கண்டுபிடிப்பு!
Poonguzhali R Updated on 4 May, 2022 12:43 PM IST
Keeladi excavations: Head of Female has been Found!
கீழடி தொல்லியல் களம் என்பது இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் அகழாய்வு ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் தமிழ் நாடு தொல்லியல் துறையால் செயல்பட்டு வரும் ஒரு சங்க கால வசிப்பிடம் ஆகும். இந்த அகழாய்வு மையம் தமிழ்நாட்டில் மதுரைக்குத் தென்கிழக்கில் 12 கி.மீ தொலைவில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கீழடி ஊராட்சியில் உள்ள கீழடி கிராமத்தின் பள்ளிச்சந்தை திடல் மேட்டுப்பகுதியில் உள்ளது.
ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழாய்வு இதுவேயாகும். இது வைகை ஆற்றங்கரையில் உருவான தமிழர் பண்பாட்டை வெளிக்கொணர்கிறது. இத்தொல்லியல் களம் சுமார் கிமு 6-ஆம் நூற்றாண்டிற்கும், கிமு 5-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்திற்குரியது எனக்கணித்துள்ளனர். இந்த அகழ்வாய்வில் சிந்துவெளி நாகரிகத்திற்கும் தொடர்புள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி புராதன தளத்தில் பெண் சிலையின் தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கீழடி அகழ்வாராய்ச்சி ஆணையரும் தள இயக்குநருமான ஆர். சிவானந்தம் கூறுகையில், மாநில தொல்லியல் துறையின் எட்டாவது கட்ட அகழ்வாராய்ச்சியின் போது 105 செ.மீ ஆழத்தில் தலை கண்டெடுக்கப்பட்டது என்றும் இதன் எடை 74 கிராம் என்றும் கூறியுள்ளார். இந்த தலை, டெரகோட்டாவால் ஆனது என்றும், இதனை கையால் வடிவமைத்திருப்பதாகவும் அவர், கூறியுள்ளார்.
கிடைக்கப்பெற்ற தலையின் வடிவ அமைப்பானது, இரண்டு அடுக்குகளில் துல்லியமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. வலது பக்கம் இடதுபுறத்தை விட உயரமாக இருக்கும். சிகை அலங்காரம், நெற்றிக்கு மேலே, பின்னப்பட்ட முடியின் ஒரு இழை உள்ளது. தலையில் மேலும் மூன்று வரிசை ஜடைகள் காணப்படுகின்றன.
இது மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டு தெளிவாகக் காணப்படுகிறது. உயர்த்தப்பட்ட முடியில் பல இடையிடையே கீறல்கள் உள்ளன. நெற்றிக்கு மேலே உள்ள பின்னல் வரை, ஒரு ஜடையைச் சித்தரிக்கும் அலை அலையான கீறல்களால் குறிக்கப்பட்டுள்ளது. அதோடு, தலையில் நேரியல் கீறல்கள் உள்ளன.
சிலையின் நெற்றி தட்டையானது மற்றும் அதன் கண்கள் மெல்லிய கோடுகளால் வெட்டப்பட்டுத் திறந்திருக்கும் நிலையில் காணப்படுகின்றது. புருவங்கள் மற்றும் கண் இமைகளும் காணப்படுகின்றன. இதில் மூக்கு மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கின்றது. ஏனெனில் அது கூர்மையான அழகிய வடிவமாக உள்ளது. சிலையின் உதடுகள் ஆழமாக வெட்டப்பட்டு நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டுச் செய்யப்பட்டுள்ளன.
சற்று நீளமான இடது காதில் வட்டமான காதணி உள்ளது. வலது காது உடைந்து சேதமடைந்துள்ளது. தலை பகுதி மட்டும் கிடைத்ததாகவும், மற்ற பகுதிகள் உடைந்து காணவில்லை என்றும் தகவல்கள் கிடைக்கின்றன.
https://tamil.krishijagran.com/news/keeladi-excavations-head-of-female-has-been-found/
Wednesday, 25 May 2022
Sunday, 22 May 2022
கீழடியில் கிடைத்த இரும்பு
கீழடியில் கிடைத்த இரும்பு
![]() |
தினமலர் செய்தி --
திருப்புவனம் :கீழடியில் இரும்பு உருக்கும் தொழிற்சாலை இருந்திருக்க வாய்ப்புஉள்ளது என தொல்லியல்ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.கீழடியில் ஐந்து குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்து வருகின்றன. தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் இப்பணியில் சிவப்பு நிற பானைகள் கடந்த வாரம் கண்டறியப்பட்டன. இரண்டு பானைகளையும் நீண்ட சுவர் இணைக்கும் வகையில் அமைந்துஉள்ளது. சுவரின் அருகில் இரும்பு பொருட்களும், இரும்பை உருக்கும் போது வெளியாகும் கழிவுகளும் கிடைத்துள்ளன. நுண்துகள் மணற்பரப்பும் காணப்படுவதால் உலைகலனாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே மணலுார், கீழடியில் உலைகலன் கண்டறியப்பட்ட நிலையில் இதுவும் உலைகலனாக இருக்க வாய்ப்புஉள்ளது. எனவே கீழடியில் நெசவு மட்டுமல்லாது இரும்பு தொழிற்சாலையும் செயல்பட்டு வந்துள்ளது.
https://www.dinamalar.com/news_detail.asp?id=3035098