Wednesday, 14 October 2020

இராமன் சங்கத் தமிழனா?

சங்க இலக்கியங்களிலும், காப்பியத்திலும் வரும் இராமன் கதைக் காட்சிகளை கீழே நோக்குக.

(அகநானூறு:70)

கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென,

இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்

குறுங் கண் அவ் வலைப் பயம் பாராட்டி,

கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன் 

நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே

அலர் வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்ற,

பலரும் ஆங்கு அறிந்தனர்மன்னே; இனியே

வதுவை கூடிய பின்றை, புதுவது

பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்

கானல் அம் பெருந் துறைக் கவினி மா நீர்ப்

பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்

விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்

வென் வேற் கவுரியர் தொல் முது கோடி

முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை,

வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த

பல் வீழ் ஆலம் போல,

ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.


(தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.)

- மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார்

(நன்றி  - https://www.tamilvu.org/library)

-------------- 

(புறநானூறு: 378)

.இலம்பா(டு) இழந்தஎன் இரும்பேர் ஒக்கல்

விரல்செறி மரபின செவித்தொடக் குநரும்செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்

அரைக்(கு)அமை மரபின மிடற்றுயாக் குநரும்

மிடற்(று)அமை மரபின அரைக்குயாக் குநரும்

கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை

வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை

நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்

செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாஅங்(கு)

அறாஅ அருநகை இனிதுபெற்(று) இகுமே"

---------------------------------------

(மதுரைக் காண்டம்: ஊர் காண் காதை  வரிகள் 45 - 49)

தாதை ஏவலின் மாதுடன் போகிக்

காதலி நீங்கக் கடுந்துய ருழந்தோன்

வேத முதல்வற் பயந்தோ னென்பது

நீயறிந் திலையோ நெடுமொழி யன்றோ 

-------------------------------------------

(மதுரைக் காண்டம் - புறஞ்சேரியிறுத்த காதை - வரிகள் 63- 65) 

பெருமகன் ஏவ லல்ல தியாங்கணும்

அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த

அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப் 

-----------------------------------



 

Tuesday, 18 August 2020

கிடைக்காது கிடைக்காது, கீழடியில் கிடைக்கவே கிடைக்காது.

கிடைக்காது கிடைக்காது, 
கீழடியில் வழிபாட்டுப் பொருட்கள் 
கிடைக்கவே கிடைக்காது. 




கீழடியில் கிடைத்துள்ள பொருட்களில் 3 பொருட்கள் முக்கியமானவை. ஒன்று சுடுமண்ணால் செய்யபெற்ற, (1) “கோரைப் பற்களுடன் காதுகள்வரை அகண்ட வாயை உடைய உருவபொம்மை”.  (2) “கழுத்தில் மாலையணிந்த மாட்டின் தலை”, (3) “பன்றியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள பவளம்”.




இந்த மூன்று பொருட்களும் வழிபாட்டில் இருந்தவையா? என்பதை உறுதியாகச் சொல்ல இயவில்லை என்கின்றனர்.

    இந்தக் கருத்தினை அடிப்படையாகக் கொண்டு, “இங்கு வாழ்ந்த இயற்கையை வழிபட்டுள்ளனர். இவர்களுக்கு மதங்கள் கிடையாது” என்றெல்லாம் விளக்கம் கொடுக்கின்றனர்.  

    பன்றி உருவம் பொறிக்கப்பட்ட பவளத்தைச் “சூது”பவளம் என்று குறிப்பிடுகின்றனர்.   

மேற்கண்ட கருத்துகளின் அடிப்படையில் கீழ்க்கண்ட ஐயங்கள் எழுகின்றன.
1) கோரைப்பற்களுடன் காதுகள்வரை வாய் அகன்ற உருவம் எதைக் குறிக்கிறது? இயற்கையில் இப்படியொரு உருவம் உள்ளதா? இந்த உருவத்திற்கும் இயற்கை வழிபாட்டிற்கும் என்ன தொடர்பு?   
    இது மதுரையின் காவல்தெய்வமான “மதுராபதித் தெய்வம்” போன்றது இல்லையா?

2) பவளத்தில் பொறிக்கப்பட்டுள்ள பன்றியின் உருவத்திற்கும் “சூது”க்கும் என்ன தொடர்பு? மதுரையில் சிவபெருமான் பன்றி அவதாரம் எடுத்துத் திருவிளையாடல் செய்தார் என்ற புராணக் கதைக்கும் தொடர்பு இல்லையா?

3) கழுத்தில் மாலையணிந்த மாட்டின் உருவம் நந்திவழிபாட்டுடன் தொடர்புடையது இல்லையா? அல்லது தமிழரின் “ஏறு தழுவுதல்” மற்றும் சல்லிக்கட்டு விளையாட்டுடன் தொடர்புடைய இல்லையா?

இந்தக் கேள்விகளுக்கு விடை தெரிந்தால்தானே கீழடியில் வழிபாட்டுப் பொருட்களே கிடைக்கவில்லை என்று உறுதியாகச் சொல்ல இயலும்?

கீழடியில் கிடைக்கவே கிடைக்காது.
கீழடிக்குக் கீழே எங்கு தோண்டித்தோண்டிப் பார்த்தாலும், சல்லடைபோட்டுச் சலித்துப் பார்த்தாலும், வழிபாடு தொடர்பான பொருட்கள் ஏதும் கிடைக்காது கிடைக்காது, கிடைக்கவே கிடைக்காது.  கீழடியில் வழிபாடு தொடர்பான பொருட்கள் ஏதும் கிடைக்க வாய்ப்பே இல்லை.  ஏனென்றால் இந்தத் தொன்மையான நகரமானது அங்கு வசித்த மக்களால் கைவிடப்பட்ட நகரமாகும்.  இங்கு வாழ்ந்த மக்கள் இப்போதிருக்கும் மதுரைக்குக் குடி பெயர்ந்து சென்றுள்ளனர்.

மணவூரிலிருந்து மதுரைக்கு -- 
தொல்லியல் ஆய்வுகள் நடைபெறும் இடத்திற்கு அருகே மணலூர் உள்ளது.  
மணலூர் மிகவும் தொன்மையான ஊராகும். மணலுரைப் பெருமணலூர் என்றும் மணவூர்புரம் என்றும் மகாபாரதம் குறிப்பிடுகிறது. இந்த ஊரை மணலூர் என்று பெரும்பற்றப் புலியூர் நம்பியின் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது. இந்த ஊரின் பழைய பெயர் மணவூர் என்கிறது பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணம்.  இந்த ஊரில் பிறந்த வளர்ந்த காந்திமதி என்ற பெண்ணை உக்கிரபாண்டியன் திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் மணலூருக்கு மணவூர் என்ற காரணப் பெயர் உண்டானது.  

 மணவூரைத் தலைநகராக் கொண்டு குலசேகரபாண்டியன் அரசாண்டு வந்துள்ளான்.  அவனது ஆட்சிக் காலத்தில் தனஞ்சயன் என்னும் வணிகன் ஒருவன் இருந்தான்.  அவன் ஒருநாள் மேற்கே சென்று வணிகம் முடித்து இரவு மணவூருக்குத் திரும்பும் போது, கடம்பவனத்தின் ஊடே இருந்த சொக்கலிங்கப் பெருமானை (சிவலிங்கம்) கண்டு வழிபட்டான்.  அந்தச் சிவலிங்கத்தைத் தேவர்கள் வந்து பூசைகள் செய்து வழிபடுவதையும் கண்டான்.  விடிந்ததும் குலசேகரபாண்டியனிடத்தில் சென்று மணவூருக்கு மேற்கே உள்ள கடம்பவனத்தில் அவன் கண்ட அதிசயங்களைக் கூறினான்.  குலசேகர பாண்டியனும், மந்திரிகளுடன்  கடம்பவனத்திற்குள்  சென்று அந்தச் சிவலிங்கத்தைக் கண்டு வணங்கி நின்றான். அப்போது பாண்டியன் முன் சித்தர் ஒருவர் தோன்றி, இந்தக் காட்டை அழிந்து நகரமாக்கு என்று கூறினார்.  சித்தர் கூறியபடியே அந்தக் கடம்பமரங்கள் நிறைந்த காட்டை அழித்து, கோயிலைக் கட்டி, நகரத்தை உருவாக்கினான் குலசேகர பாண்டியன் என்கிறது திருவிளையாடற் புராணம் திருநகரங் கண்ட படலம்.

கைவிடப்பட்ட நகரம் - 
மணவூரில் குடியிருந்த மக்களெல்லாம் மணலூரைக் காலிசெய்து விட்டு, புலம்பெயர்ந்து சென்று புதிதாக உருவாக்கப் பெற்ற மதுரையில் குடியேறியுள்ளனர். இதனால் மணவூர் என்பது ஓர் கைவிடப்பட்ட நகரம் ஆகும்.  காலிசெய்யப்பட்ட நகரம் ஆகும்.
    மணவூரில் இருந்த மக்கள் இப்போதிருக்கும் மதுரை நகருக்குக் குடிபெயர்ந்து செல்லும் போது, அவர்கள் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டிருந்த பொருட்களை எல்லாம் எடுத்துச் சென்றிருப்பர்.  அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் வழிபாட்டுப் பொருட்களே தலையானவை ஆகும். எனவே வழிபாட்டில் உள்ள பொருட்களையே முதலாவதாகத் தலையில் தூக்கிவைத்து எடுத்துச் சென்றிருப்பார்கள்.  
    கீழடியருகே கண்டறியப்பட்டுள்ள மணவூர் நகரமானது ஓர் கைவிடப்பட்ட நகரம் என்பதால், இங்கு அகழாய்வில் அன்றைய மனிதர்கள் பயன்படுத்திக் கொண்டிருந்த எந்தவொரு பொருளும் கிடைக்க வாய்ப்பே இல்லை.

தொலைந்தது போனவை தோண்டி எடுக்கப்படுகின்றன -
கீழயில் மக்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களால் தொலைக்கப்பட்ட, அல்லது கைவிடப்பட்ட பொருட்களே தொல்லியலாளர்களால் தோண்டிக் கண்டறியப்பட்டு வருகின்றன.  வழிபாட்டுப் பொருட்கள் தொலைந்து போயிருந்தால், அவற்றை அந்த மக்கள் அப்போதே தேடிக் கண்டுபிடித்து எடுத்திருப்பார்கள்.  

மணவூரைப் பற்றிய குறிப்புகள் திருவிளையாடற் புராணத்தில் கீழ்க்கண்ட மூன்று பாடல்களில் உள்ளன.

1) திருவிளையாடல் புராணம் பாடல் எண் 473

இன் நரம்பு உளர் ஏழிசை எழான் மிடற்று அளிகள்
கின்னரம் பயில் கடம்பமா வனத்தினின் கீழ் சார்த்
தென்னகர் சேகரன் எனும் குலசேகரன் உலக
மன்னர் சேகரன் அரசு செய்து இருப்பது மணவூர்.

(பொருள் - இனிய நரம்புகளைத் தடவுதலினால் உண்டாகின்ற  ஏழிசை போன்று, கண்டத்திலிருந்து உண்டாகும் ஓசையினையுடைய வண்டுகள், கின்னரம் என்ற இசைபாடுகின்ற பறவையும், பெரிய கடம்பவனத்தின் கிழக்குப் பகுதியைச் சார்ந்த இடத்தில், உலகின்கண் உள்ள மன்னர்களுக்கு முடிபோல்பவனும், பாண்டிய மரபிற்கு மகுடம் என்று சொல்லப் படுபவனுமாகிய, குலசேகரபாண்டியன் ஆட்சி புரிந்து இருப்பதற்கு இடமாக உள்ளது மணவூராகும்.)

2) திருவிளையாடல் புராணம் பாடல் எண் 969

தீம் தண் புனல் சூழ் வடபுலத்து மணவூர் என்னும் திருநகர்க்கு
வேந்தன் பரிதி திரு மரபின் விளங்கும் சோம சேகரன் என்று
ஆய்ந்த கேள்வி அவனிடத்துத் திருமாது என்ன அவதரித்த
காந்திமதியை மணம் பேச இருந்தார் அற்றைக் கனை இருள்வாய்.

(பொருள் - இனிய தண்ணீரால் சூழப்பட்ட வடக்கே (வடதிசையில்) உள்ள மணவூர் (மணம் -- திருமணம் -- கல்யாணம்) என்னும் அழகிய நகரத்துக்கு, சூரியனது திருக் குலத்தில் வந்து விளங்கா நின்ற சோமசேகரன்  அரசனாவான் என்று கருதி, ஆராய்ந்த கேள்வியினையுடைய அம்மன்னனிடத்து, திருமகளைப் போல அவதரித்திருந்த காந்திமதியை மணம் பேசக் கருதியிருந்தார்கள்; அன்று செறிந்த இருளை யுடைய நள்ளிரவில் .....)

3) திருவிளையாடல் புராணம் பாடல் எண் 974

நென்னல் எல்லை மணம் பேச நினைந்தவாறே அமைச்சர் மதி
மன்னர் பெருமான் தமரோடு மணவூர் நோக்கி வழி வருவார்
அன்ன வேந்தன் தனைக் கண்டார் அடல் வேல் குமரன் அனையான் எம்
தென்னர் பெருமான் குமரனுக்கு உன் திருவைத் தருதி என அனையான்.

(பொருள் -  நேற்றைப் பொழுதில் மணவினை பேசுதற்கு நினைந்த வண்ணமே, சந்திர மரபில் வந்த அரசர் பெருமானாகிய சுந்தரபாண்டியன் தன்னுடைய அமைச்சரோடும் சுற்றத்தாரோடும்,  மணவூரை நோக்கி வழி வருகின்றார்கள்.  மணவூருக்கு மன்னனான சோமசேகரனைக் கண்டார்.  வெற்றி பொருந்திய வேலை யேந்திய முருகக் கடவுளை ஒத்தவனாகிய,  எங்களது பாண்டிய மன்னர் பெருமானின் திருப்புதல்வனாகிய உக்கிரவழுதிக்கு, உன் புதல்வியைத் தருவாய் என்று கூற,  அம் மன்னன் .....)

சந்திர குலத்தில் தோன்றிய  சுந்தரபாண்டியன்.  இவனது மகன் உக்கிரப்பெருவழுதி.  இவர்களது தலைநகருக்கு வடக்கே மணவூர் உள்ளது.
மணவூரைச் சூரியகுலத்தில் தோன்றிய சோமசேகரன் என்ற மன்னன் ஆண்டு வருகிறான்.  இவனது மகளாகிய காந்திமதியை உக்கிரப் பெருவழுதிக்குப் பெண்கேட்டுத் திருமணம் செய்து வைத்தனர் என்ற செய்தியை இந்தப் பாடல்களின் வழியா அறிய முடிகிறது.  மேலும் இங்கே குறிப்பிடப்படும் மணவூரானது பாண்டியர்களது தலைநகருக்கு வடக்கே உள்ளது என்ற செய்தியையும் அறிய முடிகிறது.
 இந்நாளிலும் இந்த ஊரானது மணலூர் என்றே அழைக்கப்படுகிறது.   இந்தப் பாடல்களின் வழியாகப் பாண்டியர் தலைநருக்கு வடக்கே மணலூர் என்ற மணவூர் இருந்துள்ளதை அறிய முடிகிறது.  

தற்போது தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ள நகருக்கு அருகே மணலூர் உள்ளது.  எனவே தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ள நகர நாகரிகமானது சுந்தரபாண்டியனால் ஆளப்பட்ட தொன்மையான கூடல் என்ற மதுரை யாகும் என்பது தெளிவாகிறது.  

கீழடி யருகே தொல்லியலாளர்கள் தோண்டிக் கண்டறிந்துள்ள நகரின் பெயர் கூடல் என்ற மதுரையாகும்.  இந்நகரைத் தலைநகராகக் கொண்டே சுந்தரபாண்டியனும், அவனது மகன் உக்கிரபாண்டியனும் அரசாண்டுள்ளனர் என்ற செய்தியை திருவிளையாடற் புராணப் பாடல்களின் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது.

தொல்லியல் ஆய்வுகள் நடைபெறும் வரை புராணக்கருத்துகளைப் பலரும் புனைக்கதைகள் என்றே கூறிவந்துள்ளனர்.  புராணத்தில் கூறப்பட்டுள்ள கதைகளில் தமிழரின் தொன்மையான வரலாறும் புதைந்துள்ளன.  மணவூரின் தொன்மையையும் புராணக் கதைகளின் உண்மையையும் உலகறியச் செய்வோம்.


அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஆராய்ச்சி அமைப்பாளர்
திருவிளையாடற் புராண ஆராய்ச்சி மையம்.

----------------------------------------------------
கற்றவை - 

கீழடியில் கிடைத்தனவும், கிடைக்காதனவும்.

 கீழடியில் கிடைத்தனவும், கிடைக்காதனவும்

இன்றைய தினமலரில் என் பார்வை -

https://www.dinamalar.com/news_detail.asp?id=2596936

தென்மாநிலத்தில் தொல்லியல் ஆய்வுகளே நடக்காதிருந்த நிலையில், மதுரைக்குத் தென்கிழக்கே 12 கி.மீ. தொலைவில் கீழடி மணலுார் கண்மாயை அடுத்துள்ள தென்னந்தோப்பில் தொல்லியல் ஆய்வை முதன்முதலாக மத்திய தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

மிகவும் தொன்மையான 2600 வருடங்களுக்கு முற்பட்ட நகர நாகரிகம் ஒன்றைத் தோண்டிக் கண்டறிந்து வெளிக் கொணர்ந்தார்.கீழடியில் பூமிக்குள் புதைந்துள்ள தமிழரின் தொன்மையான நகரைக் கண்டு உலகமே வியந்தது.அமர்நாத் மேற்கொண்ட ஆய்வைத் தொடர்ந்து தமிழக அரசின் தொல்லியல்துறையினர் பள்ளிச்சந்தை கொந்தகை, மணலுார், அகரம் போன்ற கிராமங்களிலும் தொடர்ந்து அகழாய்வு செய்து வருகின்றனர்.

தமிழரின் தொன்மையான நகரநாகரிகத்தை உலகறியச் செய்த மத்திய, மாநிலத் தொல்லியல் துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம்.

கிடைத்தன -   கீழடி அகழாய்வில் சங்கத்தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பெற்ற பானை ஓடுகள், முதுமக்கள் தாழிகள், மனிதரின் மண்டையோடுகள், குழந்தைகளின் எலும்புகள், மிகப் பெரிய விலங்கின் எலும்பு, நத்தை ஓடுகள், நாணயங்கள், பன்றிச் சின்னம் பொறிக்கப்பட்ட பவள முத்திரை, சுடுமண்ணாலான மனிதஉருவங்கள், சுடுமண்ணாலான விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், தங்கக் காதணிகள், வளையல்கள், பிற அணிகலன்கள், தந்தத்தினால் ஆன சீப்பு, இரும்பு ஆயுதங்கள், செம்பு ஆயுதங்கள், சுடுமண்ணாலான தண்ணீர்த் துாம்புகள், மிக நீண்ட செங்கல் கட்டுமானங்கள் என எண்ணற்ற தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.

மகாராஷ்டிரம், குஜராத் போன்ற பகுதிகளில் பரவலாகக் காணப்படும் அகேட் மற்றும் கார்னீலியம் கற்களால் ஆன மணிகளும் கிடைத்துள்ளன. ரோம் நாட்டில் கி.மு. 2ம் நுாற்றாண்டில் புழக்கத்தில் இருந்த 'அரிட்டைன் பானை ஓடும்' கிடைத்திருக்கிறது.கீழடியில் கிடைத்துள்ள பொருட்களில் 3 பொருட்கள் முக்கியமானவை.

வழிபாட்டில் இருந்தவையா -  ஒன்று சுடுமண்ணால் செய்யபெற்ற கோரைப் பற்களுடன் காதுகள்வரை அகண்ட வாயை உடைய உருவபொம்மை. மற்றொன்று கழுத்தில் மாலையணிந்த மாட்டின் தலை. மூன்றாவது பன்றியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள பவளம். இந்த மூன்று பொருட்களும் வழிபாட்டில் இருந்தவையா? என்பதை உறுதியாகச் சொல்ல இயவில்லை என்கின்றனர்.

இந்தக் கருத்தினை அடிப்படையாகக் கொண்டு, “இந்த நகர நாகரிகத்தில் மக்கள் வாழ்ந்த காலகட்டத்தில் இயற்கை வழிபாடு, மூதாதையர் வழிபாடுகள்தான் இருந்தன. மதங்கள் கிடையாது. அந்த காலகட்டத்தில் இயற்கையைக் கண்டுதான் மனிதன் பயந்தான். ஆகவே இயற்கையை வழிபட்டான். வழிபாட்டிற்கான உருவங்கள் கிடைக்காது” என்றெல்லாம் விளக்கம் கொடுக்கின்றனர்.

காவல் தெய்வம் -  நீலிபன்றி உருவம் பொறிக்கப்பட்ட பவளத்தைச் சூதுபவளம் என்று குறிப்பிடுகின்றனர்.மேற்கண்ட கருத்துகளின் அடிப்படையில் கீழ்க்கண்ட ஐயங்கள் எழுகின்றன.1. கோரைப்பற்களுடன் காதுகள்வரை வாய் அகன்ற உருவம் எதைக் குறிக்கிறது. இயற்கையில் இப்படியொரு உருவம் உள்ளதா. சுடுமண்ணால் அழகிய மனிதத் தலையை செய்திட்ட பழந்தமிழர் எதற்காக இவ்வளவு அகோரமான உருவத்தைச் செய்துள்ளனர்.

இந்த உருவம் எதைக் குறிக்கிறது. இந்த உருவத்திற்கும் இயற்கை வழிபாட்டிற்கும் என்ன தொடர்பு. இது மதுரையின் காவல்தெய்வமான நீலி யின் உருவம் இல்லையா.

2. கழுத்தில் மாலையணிந்த மாட்டின் உருவம் நந்திவழிபாட்டுடன் தொடர்புடையது இல்லையா. அல்லது தமிழரின் ஏறு தழுவுதல் மற்றும் சல்லிக்கட்டு விளையாட்டுடன் தொடர்புடைய இல்லையா.

3. பவளத்தில் பொறிக்கப்பட்டுள்ள பன்றியின் உருவத்திற்கும் சூதுக்கும் என்ன தொடர்பு. மதுரையில் சிவபெருமான் பன்றி அவதாரம் எடுத்துத் திருவிளையாடல் செய்தார். பன்றி வம்சத்தினர் 12 பேர் அமைச்சர்களாய் இருந்து பாண்டிய நாட்டில் நல்லாட்சி நடத்தினர் என்று திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.

இந்தக் கதைகளுக்கும் பவளத்தில் பொறிக்கப்பட்டுள்ள பன்றி உருவத்திற்கும் தொடர்பு இல்லையா. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிந்தால்தானே கீழடியில் வழிபாட்டுப் பொருட்களே கிடைக்கவில்லை என்று உறுதியாகச் சொல்ல இயலும்.

மணவூரிலிருந்து மதுரைக்கு -  தொல்லியல் ஆய்வுகள் நடைபெறும் இடத்திற்கு அருகே மணலுார் உள்ளது.மணலுார் மிகவும் தொன்மையான ஊராகும். மணலுாரை பெருமணலுார் என்றும் மணவூர்புரம் என்றும் மகாபாரதம் குறிப்பிடுகிறது. இந்த ஊரை மணலுார் என்று பெரும்பற்றப் புலியூர் நம்பியின் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது. இந்த ஊரின் பழைய பெயர் மணவூர் என்கிறது பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணம்.

இந்த ஊரில் பிறந்த வளர்ந்த காந்திமதி என்ற பெண்ணை உக்கிரபாண்டியன் திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் மணலுாருக்கு மணவூர் என்ற காரணப் பெயர் உண்டானது.மதுரைக்கு அருகே வடக்குதிசையில் மணவூர் இருந்தது என்றொரு செய்தியையும் திருவிளையாடற் புராணம் பதிவு செய்துள்ளது.

கிடைக்கவே கிடைக்காது -  கீழடிக்குக் கீழே எங்கு தோண்டித்தோண்டிப் பார்த்தாலும் வழிபாடு தொடர்பான பொருட்கள் கிடைக்கவே கிடைக்காது. ஏனென்றால் இந்தத் தொன்மையான நகர் அங்கு வசித்த மக்களால் கைவிடப்பட்ட நகரமாகும். இங்கு வாழ்ந்த மக்கள் புலம்பெயர்ந்து சென்று புதிதாக உருவாக்கப் பெற்ற மதுரையில் குடியேறியுள்ளனர். மதுரைக்கு குடிபெயர்ந்து செல்லும் போது, அவர்கள் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டிருந்த பொருட்களை எல்லாம் எடுத்துச் சென்றிருப்பர்.

அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் வழிபாட்டுப் பொருட்களே தலையானவை. எனவே வழிபாட்டில் உள்ள பொருட்களையே முதலாவதாகத் தலையில் துாக்கிவைத்து எடுத்துச் சென்றிருப்பார்கள். கீழடியில் மக்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களால் தொலைக்கப்பட்ட, அல்லது கைவிடப்பட்ட பொருட்களே தொல்லியலாளர்களால் தோண்டிக் கண்டறியப்பட்டு வருகின்றன.

வழிபாட்டுப் பொருட்கள் தொலைந்து போயிருக்க வாய்ப்பே இல்லை. அப்படியே தொலைந்து போயிருந்தாலும், அவற்றை அந்த மக்கள் அப்போதே தேடிக் கண்டுபிடித்து எடுத்திருப்பார்கள். மக்கள் புலம் பெயர்ந்து செல்லும் போது வழிபட்ட கோயில்கள், தெய்வ கோட்டங்களைக் கைவிட்டுச் சென்றிருப்பர். எனவே கோயில் கட்டுமானங்களின் எச்சங்கள் தொல்லியல் அகழாய்வில் கிடைத்திட அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

புதையுண்டுள்ள சிவாலயம் -  அகழாய்வு செய்த இடத்திற்கு நேர் கிழக்கே 500 மீட்டர் தொலைவில் ஒரு சிவாலயம் மணலுார் கண்மாய்க்கரையில் புதையுண்டுள்ளது. இங்கு மிகப்பெரிய நந்தியையும், சிதைவுபட்டுள்ள சுற்றுச் சுவரையும் இன்றும் காணலாம். இந்த குறிப்பிட்ட இடத்தை அகழாய்வு செய்யாமல் சங்கத் தமிழர் இயற்கை வழிபாடுதான் செய்தார்கள், தெய்வ வழிபாடு செய்ய வில்லை என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

திருவிளையாடற் புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைத் தொல்லியலாளர்கள் கண்டறிந்துள்ள தொல்பொருட்களுடன் ஏன் பொருத்திப் பார்க்க மறுக்கின்றனர்? தொல்லியல் ஆய்வுகள் நடைபெறும் வரை திருவிளையாடற் புராணக்கருத்துகளைப் பலரும் புனைக்கதைகள் என்றே கூறிவந்துள்ளனர். புராணத்தில் கூறப்பட்டுள்ள கதைகளில் தமிழரின் தொன்மையான வரலாறும் புதைந்துள்ளன. சங்கத் தமிழரின் தொன்மையையும், திருவிளையாடற் புராணக் கதைகளின் உண்மையையும் உலகறியச் செய்வோம்.

-------------------------------------------

No matter where you dig in Keezhadi, you will not find any objects related to worship -

No matter where you dig in Keezhadi, you will not find any objects related to worship. This is because this ancient city was abandoned by the people who lived there. The people who lived here migrated and settled in the newly formed Madurai. When they migrated to Madurai, they would have taken all the objects they used daily with them.

Among the objects used daily, worship objects are the most important. Therefore, the objects used in worship would have been carried away first, hanging on their heads. When the people lived in Keezhadi, only the objects that were lost or abandoned by them are being excavated and discovered by archaeologists.

There is no way that the objects of worship could have been lost. Even if they had been lost, the people would have searched for them and retrieved them right away. When the people migrated, the temples and deity complexes they worshipped in would have been abandoned. Therefore, there is a high chance that the remains of temple structures will be found in archaeological excavations.

I have attached the full article.


----------------------------------
முனைவர். நா.ரா.கி.காளைராசன்

அமைப்பாளர், 

திருவிளையாடற் புராண ஆராய்ச்சி மையம், 82482 66418

https://www.dinamalar.com/news_detail.asp?id=2596936

என் பார்வையைத் தமிழ்மக்களிடம் கொண்டு சேர்த்த தினமலருக்கு நன்றி.

Thursday, 25 June 2020

மதுரை மாநகரின் காவல் தெய்வங்கள்

மதுரை மாநகரின் காவல் தெய்வங்கள்

“கீட்டிசைக் கரிய சாத்தனுந் தென்சார்

     கீற்றுவெண் பிறை நுதற் களிற்றுக்

கோட்டிளங் களபக் கொங்கையன் னையருங்

     குடவயின் மதுமடை புடைக்குந்

தோட்டிளந் தண்ணந் துழாயணி மௌலித்

     தோன்றலும் வடவயிற் றோடு

நீட்டிரும் போந்தி னிமிர்குழ லெண்டோ

     ணீலியுங் காவலா நிறுவி ....” (திருவிளையாடற் புராணம் பாடல் எண் 514.)

உரை - கீட்டிசைக் கரிய சாத்தனும் தென்சார் கீற்று  வெண்பிறை நுதல் களிற்றுக் கோட்டு இளம் களபக் கொள்கை அன்னை அரும் குடவயின் மதுமடை உடைக்கும் தோட்டு இளம் தண்ணம் துழாய் அணி மௌலித் தோன்றலும் வட எயிற்றோடு நீட்டிரும் போந்தின் நிமிர் குழல் எண் தோள் நீலியும் காவலா நிறுவி.

பொருள் - 

மதுரையின் காவல் தெய்வங்களாக 

1) கிழக்கே - கரிய சாத்தனும் 

2) தெற்கே - கீற்று  வெண்பிறை நுதல் களிற்றுக் கோட்டு இளம் களபக் கொள்கை அன்னை 

3) மேற்கே - மதுமடை உடைக்கும் தோட்டு இளம் தண்ணம் துழாய் அணி மௌலி

4) வடக்கே - எயிற்றோடு நீட்டிரும் போந்தின் நிமிர் குழல் எண் தோள் நீலி


Thursday, 21 May 2020

தண்டபாணித் தெய்வம்

தண்டபாணி
கருப்புச் சட்டை போட்ட எல்லோரும் தி.க.வினர் என்று சொல்வது போலக் காவி கட்டிய எல்லோரைம் பாஜக.வினர் என்று சொல்லி வருகின்றனர்.  பரவாயில்லை.   ஆனால் போகிற போக்கில், கையில் தண்டம் வைத்துள்ள தெய்வத்தை “லகுலீசர்” என்று சொல்லிவிட்டுச் செல்கின்றனர். அவர் தலைக்கு மேலே எழுதியும் வைத்து விடுகின்றனர்.  

கையில் தண்டம் வைத்திருப்பவரைத் தண்டபாணி என்றுதானே சொல்லிட வேண்டும்.  ஆனால் ஆடையணிந்து, ஆபரணங்களும் அணிந்து, சடாமகுடம் தாங்கிச் சர்வ அலங்காரத்துடன், 
 இடதுகாலை மடித்து, வலதுகாலைத் தரையில் ஊன்றி அமர்ந்து, இடதுகையில் தண்டம் ஏந்தி இருப்பவரைத் தண்டபாணித் தெய்வம் என்று சொல்லாமல் “லகுலீசர்” என்கின்றனர்.   


மேலேயுள்ள தெய்வம்  மதுரை அருகேயுள்ள அரிட்டாபட்டி குடைவரைக் கோயிலில் சிவலிங்கத்திற்கு வலப்பக்கம் உள்ளது.  இந்தத் தெய்வத்தின் பெயர் இலகுலீசர் என்று எழுதி வைக்கப் பெற்றுள்ளது.  சிவலிங்கத்திற்கு வலப்பக்கம் பிள்ளையார் உள்ளார்.



இந்தக் குடை வரை கோயிலானது மலையைக் குடைந்து செய்யப்பட குடைவரை கோவில் ஆகும். இக்கோயில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது ஆகும். இக்கோயில் வாயிலில் துவாரகபாலகர்களும் , குடை வரையின் வெளிமுகப்பில் விநாயகரும் , கோவிலின் உள்ளே சிவலிங்கமும், இலகுலீசர் சிலைகளும் உள்ளது. இக்கோயில் அருகில் சிறு மண்டபத்தில் ஒரு பெண் தெய்வம் உள்ளது. அம்மண்டபம் தற்போது இடைச்சி மண்டபம் என அழைக்கப்படுகிறது. இக்கோவில் அருகில் நீர்ச்சுனைகள் உள்ளன. இவை தீர்த்தச்சுனை நீர் என அழைக்கபடுகிறது. (ref - ta.wikipedia.org/s/pob)
--------------------------
இலகுலீசர் - இலகுலீசர், லகுலீசர் அல்லது நகுலீசர் சிவநெறியின் உட்பிரிவுகளுள் ஒன்றான பாசுபத சைவத்தைத் தோற்றுவித்தவர். இவரை, ஏற்கனவே இருந்த பாசுபத சைவத்தை மறுமலர்ச்சிக்குள்ளாக்கியவர் என்று சொல்வோரும் உண்டு. கி.மு 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நம்பப்படும் இவர், குஜராத்தின் காயாவரோகண் பகுதியில், அந்தணர் குலத்தில் அவதரித்ததாகச்சொல்லப்படுகின்றார். பாசுபதம் புகழ்பெற்ற பிற்காலத்தில், சிவனின் அவதாரமாக மேனிலையாக்கப்பட்ட இவர், சிவசின்னங்களுடன் காட்சி தரும் சிற்பங்கள், தென்னகம் உட்பட, இந்தியாவெங்கணும் வடிக்கப்பெற்றன. இலகுலீசர் எனும் பெயருக்கேற்ப (இலகுடம் சங்கதம்: கோல்,மழு) அவை ஒரு கையில் தண்டாயுதம் தாங்கியவையாக அமைந்தன. (ref - ta.wikipedia.org/s/5mk1)
-----------------------------------
இலகுலீசர் = இல + குலீசர் என்று பிரித்துப் பொருள் காண வேண்டும்.
குலிசம் என்றால் எலும்பினால் செய்யப்பெற்ற வச்சிராயுதம் என்று பொருள்.  இதற்குத் தமிழில் சான்றுகள் நிறைய உள்ளன.  (குலிசத் தமரர்கோன் = இந்திரன்  - கம்பராமாயணம்).  இலக்கியச் சான்றுகள் கீழே இணைக்கப் பெற்றுள்ளன.

தண்டம் வேறு, குலிசம் வேறு.
தண்டாயுதம் வேறு, குலிச ஆயுதம் வேறு.
தண்டப்படை என்பது வேறு.  குலிசப் படை என்பது வேறு.

குலிசம் என்பது வச்சிராயுதம் ஆகும். இது முனிவரால் இந்திரனுக்கு வழங்கப் பெற்ற ஆயுதம் ஆகும். 
தண்டம் என்பது கர்லாக்கட்டை போன்ற ஆயுதம் ஆகும்.  இது முருகன் மற்றும் கருப்பணசாமி தெய்வங்களிடம் உள்ள ஆயுதம் ஆகும்.

அரிட்டாபட்டியில் குடவரைக்கோயிலில் சிவலிங்கத்திற்கு இடப்பக்கம் உள்ளவர் பிள்ளையார்.  வலப்பக்கம் உள்ளவர் தண்டபாணித் தெய்வம் ஆவர்.  இவர் பெயர் இலகுலீசர் அல்ல. குலீசர் என்பது குலிசம் (வச்சிராயுதம் ஏந்திய) இந்திரனைக் குறிக்கும்.  

---------------------------
(படத்தில் தண்டாயுதம் வழிபாடு)

(படத்தில் தண்டம் ஏந்திச் சண்டைக்குத் தயாரான நிலையில்)

(படத்தில் தண்டம் ஏந்திப் போரிடும் மகிசாசுரன்)

சங்கப்பாடல்கள், திருக்குறள் மற்றும் திருவிளையாடற் புராணத்தில் 'தண்டம்', ‘குலிசம்’ என்ற சொற்கள் உள்ள பாடல்களின் தொகுப்பு  கீழே இணைக்கப் பெற்றுள்ளது.

தண்டபாணித் தெய்வத்தை வணங்குதல் செய்வோம்.  தண்டனைகள் இல்லா வாழ்க்கை பெறுவோம்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
-----------------------------------------------------------------------------------------
திருக்குறளில் தண்டம் 
கடு மொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடு முரண் தேய்க்கும் அரம் - குறள் 57:7

திருவிளையாடற் புராணத்தில் 
163.
மழுக்கள் வச்சிரம் கார் முகம் வாளி முக் குடுமிக்
கழுக்கள் சக்கரம் உடம் பிடிகப் பண நாஞ்சில்
எழுக்கள் நாந்தகம் பலகை தண்டி இவை முதல் படையின்
குழுக்கள் ஒடி இகல் விந்தை வாழ் கூடமும் பல ஆல்.

370.
விழுங்கிய படை எலாம் வேறறத் திரண்டு
ஒழுங்கிய தான் முதுகம் தண்டு ஒன்றியே
எழும் கதிர்க் குலிசம் ஆம் அதனை எய்து முன்
வழங்குவன் கருணை ஒர் வடிவம் ஆயினான்.      
(பொருள் -  அவ்வாறு விழுங்கப்பட்ட படைகள் அனைத்தும் ஒன்றாகத் திரண்டு,  முதுகெலும்பைப் பொருந்தி ஒழுங்குபட்டது;  அது எழுகின்ற ஒளியையுடைய வச்சிரப்படை (குலிசம்) ஆகும். நீ சென்று கேட்பதற்கு முன்னே, கருணையே ஒரு உருவமாகிய அம்முனிவன் அந்த வச்சிரப் படையை உனக்குக் கொடுப்பான்)
    
379.
அம்முனி வள்ளல் ஈந்த அடுபடை முதுகந் தண்டைத்
தெம் முனை அடுபோர் சாய்க்கும் திறல் கெழு குலிசம் செய்து
கம்மிய புலவன் ஆக்கம் கரைந்து கைகொடுப்ப வாங்கி
மைம் முகில் ஊர்தி ஏந்தி மின் விடு மழைபோல்நின்றான்.    
(பொருள்  - அந்த முனியாகிய வள்ளலால் கொடுக்கப்பட்ட கொலைத் தொழிலை யுடைய படைகள் திரண்ட முதுகெலும்பினை, பகைவர் முனைகின்ற, கொல்லுகின்ற போரைப் பின்னிடச் செய்யும் வலிபொருந்திய வச்சிரப் படையாகச் (குலிசம்) செய்து, தேவதச்சன்  ஆக்கங் கூறி இந்திரனின்  கையில் கொடுக்க, அதைப் பெற்று, கரிய மேகத்தை ஊர்தியாகவுடைய இந்திரன் கையில் ஏந்தி, மின்னலை வீசும் முகில் போல் நின்றான்.)

386.
தொக்கன கழுகு சேனம் சொரி குடர் பிடுங்கி ஈர்ப்ப
உக்கன குருதி மாந்தி ஒட்டல் வாய் நெட்டைப் பேய்கள்
நக்கன பாடல் செய்ய ஞாட்பினுட் கவந்தம் ஆடப்
புக்கன பிணத்தின் குற்றம் புதைத்த பார் சிதைத்த தண்டம்.   

609.
செருவின் மா தண்டம் தாங்கிச் செல்லும் வெம் கூற்றம் என்ன
அருவி மா மதநீர் கால வரத்த வெம் குருதி கோட்டால்
கருவி வான் வயிறுக் ஈண்டு கவிழு நீர் ஆயம் காந்து
பருகிமால் வரை போல் செல்வ பரூஉப் பெரும் தடக்கையானை.

630.
சூலம் கண் மழுப் படை தோமரம் நேமி பிண்டி
பாலங்கள் கழுக் கடை வாள் படை தண்டம் நாஞ்சில்
ஆலம் கவிழ் கின்ற அயில் படை வீசி ஊழிக்
காலம் கலிக்கும் கடல் போன்ற களமர் ஆர்ப்பு.

637.
துண்டம் படவே துணித்து அக்கண வீரர் தம்மைத்
தண்டம் கொடு தாக்கினள் சாய்ந்தவர் சாம்பிப் போனார்
அண்டங்கள் சரா சரம் யாவையும் தானே ஆக்கிக்
கொண்டு எங்கு நின்றாள் வலி கூற வரம்பிற்று ஆமோ.

664.
முத்தில் பாளை செய்து அவிர் மரகதத்தின் ஆன் மொய்த்த பாசிலை துப்பின்
கொத்தில் தீம் பழம் வெண் பொனால் கோழரை குயின்ற பூகம் உந்துப் பின்
தொத்தில் தூங்கு பூச் செம் பொன்னால் பழுக்குலை தூக்கிப் பொன்னால் தண்டு
வைத்துப் பாசொளி மரகத நெட்டிலை வாழையும் நிரை வித்தார்.

707.
நிருதி ஆடி கொண்டு எதிர்வர அடிக்கடி நிதி முகத்து அளகைகோன்
கருதி ஆயிரம் சிதறிடத் தண்டி நன்கு ஆம் சுகர் வினை செய்யப்
பரிதி ஆயிரம் பணாடவி உரகரும் பல்மணி விளக்கு ஏந்தச்
சுருதி நாயகன் திருவடி முடியின் மேல் சுமந்து பின் புறம் செல்ல.

1105. காய்சின மடங்கல் அன்னான் கை வளை சுழற்றி வல்லே
வீசினான் குலிசம் தன்னை வீழ்த்தது விடுத்தான் சென்னித்
தேசினன் மகுடம் தள்ளிச் சிதைத்தது சிதைத்த லோடும்
கூசினன் அஞ்சிப் போனான் குன்று இற கரிந்த வீரன்.
(பொருள் - மிக்க சினத்தையுடைய சிங்கத்தை ஒத்த உக்கிரவழுதி, கையிலுள்ள திகிரிப்படையைச் சுழற்றி விரைந்து வீசினன்; அப்படையானது வச்சிரப் (குலிசம்) படையை அழித்து, குலிசம் படையை விடுத்தவனாகிய இந்திரனது, தலையிலுள்ள ஒளி வீசும் நல்ல முடியைக் கீழே வீழ்த்தி அழித்தது;
குலிசம் உடைந்ததைக் கண்ட உடனே, மலையின் சிறைகளை அறுத்த வீரனாகிய இந்திரன் நாணமும் அச்சமும் உடையனாய் ஓடினான்.)

1171.
கண்டிகை தொடுத்து இரு கரத்தினொடு வாகு
தண்டின் இடு மாலை விட வாள் அரவு தள்ள
வெண் துகிலின் ஆன விரி கோவண மருங்கில்
தண்டரிய பட்டிகை வளைந்து ஒளி தழைப்ப.

1222.
மாதண்ட அவுணன் மாற்றம் மகபதி கேட்டு வந்து
கோதண்ட மேருக் கோட்டிக் கொடும் புரம் பொடித்தான் வெள்ளி
வேதண்டம் எய்தி ஆங்கு ஓர் வேள்வி யான் புரிவன் நீ அப்போது
அண்டர்க் கூட்ட வா வாய்ப் போது வாய் வல்லை என்றான்.

1415.
இங்கித நெடும் கோதண்டம் இடம் கையில் எடுத்து நார
சிங்க வெம் கணை தொட்டு ஆகம் திருக முன் இடத்தாள் செல்ல
அங்குலி இரண்டால் ஐயன் செவி உற வலித்து விட்டான்
மங்குலின் முழங்கும் வேழ மத்தகம் கிழிந்தது அன்றே.

1416.
கொண்டலின் அலறிச் சீறி வீழ்ந்தது கொடிய வேழம்
பிண்டது பாரும் சேடன் சென்னியும் பிளந்த தண்டம்
விண்டது போலும் என்னத் துண் என வெருவிப் போன
பண்டைய தருக்கும் வீறும் படைத்தன திசை மால் யானை.

1422.
எடுத்தனர் கையில் தண்டம் எறிந்தனர் மறிந்து சூழ் போய்த்
தடுத்தனர் கரகம் தூள் ஆத் தகர்த்தனர் பீலி யோடும்
தொடுத்தனர் உடுத்த பாயை துணி படக் கிழித்துக் கால்வாய்
விடுத்தனர் மானம் போக்கி விட்டனர் சில்லோர் தம்மை.

1516.
ஆற்ற ஒறுக்கும் தண்டமும் அஞ்சான் அறைகின்ற
கூற்றமும் ஒன்றெ கொன்ற குறிப்பு முகம் தோற்றான்
மாற்றவரேயோ மாவோ புள்ளோ வழி வந்த
கோல் தொடியைக் கொன்று என் பெற வல்லான் கொலை செய்வான்.

1532.
தெளியாதே யாம் இழைத்த தீத்தண்டம் பொறுத்தி என
விளி ஆவின் அருள் சுரந்து வேண்டுவன நனி நல்கி
அளி ஆனாம் மனத்து அரசன் அவனை அவன் இடைச் செலுத்திக்
கனி யானை விழ எய்த கௌரியனைப் போய்ப் பணிவான்.

1575.
வேதகம் தரத்து முக்கண் வேதியன் மறையோன் செய்த
பாதகம் தவிர்த்தவாறு பகர்ந்தனம் விஞ்சை ஈந்த
போதகன் மனைக்குத் தீங்கு புந்தி முன்னாகச் செய்த
சாதகன் தனைப் போர் ஆற்றித் தண்டித்த தண்டம்                                                      சொல்வாம்.

1593.
குரத்தியை நினைத்த நெஞ்சைக் குறித்து உரை நாவைத் தொட்ட
சரத்தினைப் பார்த்த கண்ணைக் காத்தனை கோடி என்று என்று
உரைத்து உரை தவற்றுக்கு எல்லாம் உறும் முறை தண்டம் செய்து
சிரத்தினைத் தடிந்து வீட்டித் திரு உரு மறைந்து நின்றான்.

1641.
பணி நா அசைக்கும் படி என்னக் கழுத்தில் வீர
மணி நா அசைப்ப நகைமுத்தின் வகுத்த தண்டை
பிணி நாண் சிறு கிண் கிணி பிப்பல மாலைத் தொங்கல்
அணி நாண் அலம்பச் சிலம்பு ஆர்ப்ப வடிகண் நான்கும்.              

2236.
மண்ணில் குதித்து வலிக்கண்டு வராக வேந்தை
எண்ணித் தலையில் புடைத்தான் கை இருப்புத் தண்டால்
புண்ணில் படு செம் புனல் ஆறு புடவி போர்ப்ப
விண்ணில் புகுந்தான் சுடர் கீறி விமான மேலால்.
(பொருள் - நிலத்திலே குதித்து, வலியினைக் கண்டு பன்றியரசனை மதித்து, கையிலுள்ள இருப்பு  உலக்கையாலே தலையில் அடித்தான்; அந்தப் புண்ணினின்று பொழியும் குருதியாறு புவியை மூட,  சூரிய மண்டலத்தைக் கிழித்து விமான மீதேறி விண்ணுலகடைந்தனன். )

2241.
இரும்பு செய் தண்டினை இம் என ஓங்கிப்
பொரும் படை சென்னி புடைத்து விளிந்தான்
விருந்தினர் ஆய் இருவோரும் விமானத்து
அரும் திறல் வானம் அடைந்தனர் அன்றே.
(பொருள் - இரும்பாற் செய்த தண்டத்தை, விரைந்து ஓங்கி,  போர் புரியும் பெண் பன்றியின் தலையில் அடித்து இறந்தனன்; அவ்விருவரும், விமானத்திலேறி, வீரசுவர்க்கத்துக்கு விருந்தினராகச் சென்றனர்.)

3191.
முண்டிதம் செய்த தலையராய் முறுக்கு உறி தூங்கும்
குண்டிகை கைத் தடம் கையராய்க் கோவணம் பிணித்த
தண்டு தாங்கிய சுவலராய்ச் சடையன் பேர் நாவில்
கொண்டு அசைத்தனராய் எங்கும் குலாவவும் கண்டேம்.
(பொருள் - முண்டிதம் செய்த தலையினை உடையராய்,  முறுக்கிய உறியில் தொங்கும் கமண்டலத்தை உடைய பெரிய கையினை உடையராய்,  கோவணங்கட்டிய கோலினைத் தாங்கிய பிடரினை உடையராய், சிவன் பெயரை நாவிற்கொண்டு கூறுபவராய்ப் பலர்,  எங்கும் உலாவுதலைப் பார்த்தேம்.)

நன்றி = பாடல் தொகுப்பு உதவி  http://www.tamilvu.org/ta/library
---------------------------------------------------
சங்கப்பாடல்களில் 'தண்டம்', என்ற சொல் உள்ள பாடல்வரிகளின் தொகுப்பு  - (குறிப்பு - ‘குலிசம்’ என்ற சொல் சங்கப்பாடல்களில் கண்டறியப் பெறவில்லை)
தண்டம் இரண்டும் தலைஇ தாக்கி நின்றவை - பரி 10/60
தன் மார்பும் தண்டம் தரும் ஆரத்தாள் மார்பும் - பரி 20/64
 
விழு தண்டு ஊன்றிய மழு தின் வன் கை - பெரும் 170
தண்டு சேர் மள்ளரின் இயலி அயலது - நற் 260/3
தண்டு உடை கையர் வெண் தலை சிதவலர் - குறு 146/3
தண்டு உடை வலத்தர் போர் எதிர்ந்து ஆங்கு - பதி 41/12
தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன் - அகம் 274/8
தொடி தலை விழு தண்டு ஊன்றி நடுக்கு_உற்று - புறம் 243/12
என்னும் தண்டும் ஆயின் மற்று அவன் - அகம் 392/9
தண்டுவென் ஞாயர் மாட்டை பால் - கலி 85/36
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்து - குறு 156/3
நன்றி = பாடல் தொகுப்பு உதவி  http://tamilconcordance.in
---------------------------------------------------

Tuesday, 28 April 2020

திருவிளையாடல் புராணத்தில் வேதியர்

திருவிளையாடல் புராணத்தில்  
'வேதியர்' 
என்ற சொல் உள்ள பாடல்களின் தொகுப்பு

100.
சீத வேரி உண்டு அளி முரல் கமலம்மேல் செருந்தி
போத வேரியும் மலர்களும் சொரிவன புத்தேள்
வேத வேதியர் செம் கரம் விரித்து வாய் மனுக்கள்
ஓத வேமமும் அதகமும் உதவுவார் அனைய.
828.
கன்னியர்க்கு அரசு ஆயினாள் கடிமனை புகுந்த
மின் இயல் கடை மாதவர் வேதியர் ஏனோர்
எந் நிலத்து உள மன்னவர் யாவர்க்கும் முறையே
பொன் இயல் கலத்து அறு சுவைப் போனகம் அருத்தா.
908.
துங்கக் கலை வேதியர் தொல் மறை நூல்
சங்கற்ப விதிப்படி தன் துணைக்கை
அம் கைத் தளிர் பற்றி அகத்து உவகை
பொங்கப் புணரிப் புனல் ஆடினளே.
1073.
ஆதி இவ் இலிங்கம் தீண்டல் அருகர் அல்லாத வேத
வேதியர் முதலோர் இட்ட இலிங்கத்து இவ்விதியால் அர்ச்சித்து
ஓதிய விரதம் நோற்க அர்ச்சனைக்கு உரியர் அல்லாச்
சாதியர் பொருள் நேர்ந்து ஆதி சைவரால் பூசை  செய்தல்.
1078.
புலர்ந்த பின் நித்த வினை முடித்து அரம்பை பொதுளும் பாசிலை பதின் மூன்றின்
நலம் தரு தூ வெள்ளரிசி பெய்து இனிய நறிய காய் கறியொடு பரப்பி
அலந்தர வான் பால் நிறை குடம் பதின் மூன்று அரிசி மேல் வைத்தான் அடியில்
கலந்த அன்பினராய்ச் சிவாஅர்ச் சனைக்கு உரிய கடவுள் வேதியர் களை வரித்து.
1157.
வந்த வேதியனை இருந்த வேதியர்கள் வர எதிர்ந்து  இறைஞ்சி வேறு இருக்கை
தந்த வேலையில் அம் மறையவன் முனிவர் தமை முகம்  நோக்கி ஈது உரைப்பான்
பந்த வேதனை சாலவா வெறுப்பு இகந்த பண்பினன் ஆயினிர் நீவிர்
சிந்தை வேறு ஆகி முகம் புலர்ந்து இருக்கும் செய்தி யாது என அவர் சொல்வார்.
1353.
சித்த யோகிகள் செய்கின்ற ஆடல் மேல் செலுத்தி
வைத்த கண்களும் சிந்தையும் வாங்கலர் திகைத்துத்
தந்த மாள் வினைத் தொழில் மறந்து இருந்தனர் தகைசால்
முத்த வேதியர் ஆதிய முதுநகர் மாக்கள்.
1449.
இல் பூட்டிப் போயினர் எமரங்கள் எனக் கௌரி  இயம்ப மேரு
வில் பூட்டிப் புரம் பொடித்த வேதியர் நின் கை  தொட்டு விடு முன் யாத்த
கொல் பூட்டு விடும் திறந்து கடிது அடிசில் சமைத்து இடுதி எனக் குமரி தாளில்
அல் பூட்டு மடவாலும் அவ்வாறே அட்டில் புகுந்து அடிசில் ஆக்கி.
2005.
முக்கண் நாயகன் பொருட்டு என வேள்விகள் முடித்துத்
தொக்க வேதியர் இவர் புனல் சாலை இத் தொடக்கத்
தக்க பேர் அறம் புகழ் பயன் தமை நன்கு மதிக்கும்
பொக்க மாறிய நிராசையால் புரிந்தவர் இவர் காண்.
2757.
அண்ணல் வேதியர் ஒழுக்கமும் அன்பும் கண்டு யாக்கை
உள் நிலா உயிர் பொருள் புனலுடன் கவர்ந்து உள்ளக்
கண் இலான் மலம் கழீஇப் பத கமலமும் சூட்டி
வண்ண மாமலர்ச் செம்கரம் சென்னி மேல் வையா.
2861.
ஒல்லையில் அது மன்னற்கு உரையுமின் என மேரு
வில்லவன் அருள் பெற்ற வேதியர் பெருமான் போய்ச்
செல்லது தளை இட்ட திரு மகன் அருகு எய்தி
மல் அணி திணி தோளாய் வருவன பரி என்றார்.
2927.
நெருங்கு தூரிய முழக்கமும் தானையும் நிமிர
மருங்கு இலாதவர் வந்து எதிர் மங்கலம் ஏந்த
அரம் கொல் வேலினான் அருளிய வரிசை யோடு அணைந்து
புரம் கொல் வேதியர்க்கு அன்பர் தம் திரு மனை புகுந்தார்.
2970.
கண்ணும் இடும் கவசமும் போல் காரியம் செய்து   ஒழுகியதும் காலம் பார்த்து எம்
எண்ணரிய நிதி ஈட்டம் கவர்வதற்கோ நின் அமைச்சின் இயற்கை நன்று ஆல்
புண்ணிய வேதியர் மரபில் பிறந்தன என்று ஒரு பெருமை பூண்டாயே நீ
பண்ணிய காரியம் பழுது பிறரால் தண்டிக்கப் படுவர் என்றான்.
2976.
என்று ஏறிய புகழ் வேதியர் இரங்கும் துதி செவியில்
சென்று ஏறலும் விடை ஏறு சுந்தரன் மற்று இவர் செயலை
மன்று ஏறவும் முடிமேல் நதி மண் ஏறவும் முதியாள்
அன்று ஏறிய தேரோடும் விண் அடைந்து ஏறவும் நினைந்தான்.
3243.
இன்னமும் பல் நாள் எம்மை இடம் தொறும் பாடி எஞ்சும்
புன் நெறி ஒழுகுவாரை வென்று நம் புனித வீடு
பின்னர் நீ பெறுதி என்னா ஏடு தந்து ஆசி பேசி
மின் என மறைந்து நின்றார் வேதியர் ஆய வேடர்.
3255.
ஆதி ஆலயத்து அடலை கொண்டு ஆழி சூழ் காழிச்
சோதி வேதியர் பாண்டியன் சுரம் தணித்து உடலில்
பேதியாத கூன் நிமிர்த்தலால் பிறங்கு கற்பாதிப்
பூதி யாவினும் சிறந்தது அவ் வட்டில் வாய்ப் பூதி.

நன்றி - http://www.tamilvu.org/ta/library-l41d0-html-l41d0ind-139511

பாடல் தொகுப்பு
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஆராய்ச்சி அமைப்பாளர்
திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம்