Showing posts with label ஆராய்ச்சி மையம். Show all posts
Showing posts with label ஆராய்ச்சி மையம். Show all posts

Tuesday, 28 April 2020

திருவிளையாடல் புராணத்தில் வேதியர்

திருவிளையாடல் புராணத்தில்  
'வேதியர்' 
என்ற சொல் உள்ள பாடல்களின் தொகுப்பு

100.
சீத வேரி உண்டு அளி முரல் கமலம்மேல் செருந்தி
போத வேரியும் மலர்களும் சொரிவன புத்தேள்
வேத வேதியர் செம் கரம் விரித்து வாய் மனுக்கள்
ஓத வேமமும் அதகமும் உதவுவார் அனைய.
828.
கன்னியர்க்கு அரசு ஆயினாள் கடிமனை புகுந்த
மின் இயல் கடை மாதவர் வேதியர் ஏனோர்
எந் நிலத்து உள மன்னவர் யாவர்க்கும் முறையே
பொன் இயல் கலத்து அறு சுவைப் போனகம் அருத்தா.
908.
துங்கக் கலை வேதியர் தொல் மறை நூல்
சங்கற்ப விதிப்படி தன் துணைக்கை
அம் கைத் தளிர் பற்றி அகத்து உவகை
பொங்கப் புணரிப் புனல் ஆடினளே.
1073.
ஆதி இவ் இலிங்கம் தீண்டல் அருகர் அல்லாத வேத
வேதியர் முதலோர் இட்ட இலிங்கத்து இவ்விதியால் அர்ச்சித்து
ஓதிய விரதம் நோற்க அர்ச்சனைக்கு உரியர் அல்லாச்
சாதியர் பொருள் நேர்ந்து ஆதி சைவரால் பூசை  செய்தல்.
1078.
புலர்ந்த பின் நித்த வினை முடித்து அரம்பை பொதுளும் பாசிலை பதின் மூன்றின்
நலம் தரு தூ வெள்ளரிசி பெய்து இனிய நறிய காய் கறியொடு பரப்பி
அலந்தர வான் பால் நிறை குடம் பதின் மூன்று அரிசி மேல் வைத்தான் அடியில்
கலந்த அன்பினராய்ச் சிவாஅர்ச் சனைக்கு உரிய கடவுள் வேதியர் களை வரித்து.
1157.
வந்த வேதியனை இருந்த வேதியர்கள் வர எதிர்ந்து  இறைஞ்சி வேறு இருக்கை
தந்த வேலையில் அம் மறையவன் முனிவர் தமை முகம்  நோக்கி ஈது உரைப்பான்
பந்த வேதனை சாலவா வெறுப்பு இகந்த பண்பினன் ஆயினிர் நீவிர்
சிந்தை வேறு ஆகி முகம் புலர்ந்து இருக்கும் செய்தி யாது என அவர் சொல்வார்.
1353.
சித்த யோகிகள் செய்கின்ற ஆடல் மேல் செலுத்தி
வைத்த கண்களும் சிந்தையும் வாங்கலர் திகைத்துத்
தந்த மாள் வினைத் தொழில் மறந்து இருந்தனர் தகைசால்
முத்த வேதியர் ஆதிய முதுநகர் மாக்கள்.
1449.
இல் பூட்டிப் போயினர் எமரங்கள் எனக் கௌரி  இயம்ப மேரு
வில் பூட்டிப் புரம் பொடித்த வேதியர் நின் கை  தொட்டு விடு முன் யாத்த
கொல் பூட்டு விடும் திறந்து கடிது அடிசில் சமைத்து இடுதி எனக் குமரி தாளில்
அல் பூட்டு மடவாலும் அவ்வாறே அட்டில் புகுந்து அடிசில் ஆக்கி.
2005.
முக்கண் நாயகன் பொருட்டு என வேள்விகள் முடித்துத்
தொக்க வேதியர் இவர் புனல் சாலை இத் தொடக்கத்
தக்க பேர் அறம் புகழ் பயன் தமை நன்கு மதிக்கும்
பொக்க மாறிய நிராசையால் புரிந்தவர் இவர் காண்.
2757.
அண்ணல் வேதியர் ஒழுக்கமும் அன்பும் கண்டு யாக்கை
உள் நிலா உயிர் பொருள் புனலுடன் கவர்ந்து உள்ளக்
கண் இலான் மலம் கழீஇப் பத கமலமும் சூட்டி
வண்ண மாமலர்ச் செம்கரம் சென்னி மேல் வையா.
2861.
ஒல்லையில் அது மன்னற்கு உரையுமின் என மேரு
வில்லவன் அருள் பெற்ற வேதியர் பெருமான் போய்ச்
செல்லது தளை இட்ட திரு மகன் அருகு எய்தி
மல் அணி திணி தோளாய் வருவன பரி என்றார்.
2927.
நெருங்கு தூரிய முழக்கமும் தானையும் நிமிர
மருங்கு இலாதவர் வந்து எதிர் மங்கலம் ஏந்த
அரம் கொல் வேலினான் அருளிய வரிசை யோடு அணைந்து
புரம் கொல் வேதியர்க்கு அன்பர் தம் திரு மனை புகுந்தார்.
2970.
கண்ணும் இடும் கவசமும் போல் காரியம் செய்து   ஒழுகியதும் காலம் பார்த்து எம்
எண்ணரிய நிதி ஈட்டம் கவர்வதற்கோ நின் அமைச்சின் இயற்கை நன்று ஆல்
புண்ணிய வேதியர் மரபில் பிறந்தன என்று ஒரு பெருமை பூண்டாயே நீ
பண்ணிய காரியம் பழுது பிறரால் தண்டிக்கப் படுவர் என்றான்.
2976.
என்று ஏறிய புகழ் வேதியர் இரங்கும் துதி செவியில்
சென்று ஏறலும் விடை ஏறு சுந்தரன் மற்று இவர் செயலை
மன்று ஏறவும் முடிமேல் நதி மண் ஏறவும் முதியாள்
அன்று ஏறிய தேரோடும் விண் அடைந்து ஏறவும் நினைந்தான்.
3243.
இன்னமும் பல் நாள் எம்மை இடம் தொறும் பாடி எஞ்சும்
புன் நெறி ஒழுகுவாரை வென்று நம் புனித வீடு
பின்னர் நீ பெறுதி என்னா ஏடு தந்து ஆசி பேசி
மின் என மறைந்து நின்றார் வேதியர் ஆய வேடர்.
3255.
ஆதி ஆலயத்து அடலை கொண்டு ஆழி சூழ் காழிச்
சோதி வேதியர் பாண்டியன் சுரம் தணித்து உடலில்
பேதியாத கூன் நிமிர்த்தலால் பிறங்கு கற்பாதிப்
பூதி யாவினும் சிறந்தது அவ் வட்டில் வாய்ப் பூதி.

நன்றி - http://www.tamilvu.org/ta/library-l41d0-html-l41d0ind-139511

பாடல் தொகுப்பு
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஆராய்ச்சி அமைப்பாளர்
திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம்