Tuesday, 18 December 2018

மதுரையைச் சூழ்ந்துள்ள கோயில்கள்

மதுரையைச் சூழ்ந்துள்ள  கோயில்கள்

மதுரையைச் சூழ்ந்துள்ள கோயில்களைக் கல்லாடம் பட்டியிலிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஐயா நூ த லோ சு அவர்களுக்கும்,
நண்பர் திருமதி.தேமொழி அவர்களுக்கும் எனது நன்றி.

---------------------------------------------------------------------
நூ த லோ சு 
மயிலை 
N D Logasundaram <selvindls61@gmail.com>8 April 2015 at 00:40

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil <mintamil@googlegroups.com>
கல் லாடம் 61  
- - - - -        - - - - -        - - - - -        - - - - -        - - - - -
- - - - -        - - - - -        - - - - -        - - - - -        - - - - -
- - - - -        - - - - -        - - - - -        - - - - -        - - - - - 
வடதிருஆலவாய் திருநடுவூர்                                  22
வெள்ளியம்பலம் நள்ளாறு இந்திரை                    23  
பஞ்சவனீச்சரம் அஞ்செழுத்து அமைத்த                 24
சென்னிமாபுரம் சேரன் திருத்தளி                              25
கன்னி செங்கோட்டம் கரியோன் திருவுறை          26
விண் உ டைத்து (உ)ண்ணும் கண்ணிலி ஒருத்தன் 27
மறிதிரைக் கடலுள் மா வெனக் கவிழ்ந்த                  28 
களவுடற் பிளந்த ஒளிகெழு திருவேல்                       29
பணிப் பகை ஊர்தி அருட்கொடி இரண்டுடன்            30
முன்னும் பின்னும் முதுக்கொள நிறைந்த                31
அருவி அம்சாரல் ஒரு பரங்குன்றம்            32
சூழ்கொள இருந்த கூடலம்பெருமான்                        33
- - - - -        - - - - -        - - - - -        - - - - -        - - - - -
- - - - -        - - - - -        - - - - -        - - - - -        - - - - -
- - - - -        - - - - -        - - - - -        - - - - -        - - - - -

என 11 கோயில்கள் ஆலவாய் அண்ணல் கோயிலைச் சூழ்ந்துள்ள 
மற்ற கோயிஉல்களாக காட்டப்படுகின்றன 

இந்தப்ப் பாடல் வரிகளில் கூடலம் பெருமானைச் சூழ்ந்து நின்ற கோயில்கள் பட்டிலி டப்பட்டுள்ளன. 
இவற்றில் பரன்குன்றத் துடன் நிற்காது கரியோன் திவுறை என கள்ளழகர் கோயிலும் குறிக்கப்படுகின்றது.
இம்மையே நன்மை தருவர் கோயில் காஞ்சமலைக் கோயில் திருவேடகம் ஆப்பனூர் திருப்பூவணம் போன்றவை மற்றவையில் அடங்கும் எனலாம்  வெள்ளியம்பலம் (எது?) இன்றும் உள்ளது.

நூ த லோ சு 
மயிலை


--------------------------------------------------------------------------------------

தேமொழி <jsthemozhi@gmail.com>
8 Apr 2015, 06:49
to   mintamil <mintamil@googlegroups.com>

சங்கப் பாடல்களிலேயே  "நான்மாடக்கூடல்" என்பது வழக்கில் இருந்தது தெரிகிறது .....

நான் தேடியதில் கிடைத்த தகவல்கள் கீழே காண்க:

நான்மாடக்கூடல் என்பதற்கு வேறுவகையிலும் பொருள் கொள்ளப்பட்டிருப்பதும் காட்டப்பட்டுள்ளது...

கூடனெடுங்கொடி யெழவே (கலித். 31)
நான்மாடக் கூடன் மகளிரு மைந்தரும் (கலித். 92, 65).
குன்றத்தாற் கூடல் வரவு (பரிபா. 8, 28)
_____________________________________________________
பத்துப்பாட்டு மூலமும்
நச்சினார்க்கினியருரையும்


 [மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் :] பிறங்கிய மாடம் மலிபுகழ் கூடல்-பெரிய நான்மாடத்தாலே மலிந்தபுகழைக் கூடுதலையுடைய மதுரை (699) என மேலேகூட்டுக.
 "நான்மாடக் கூடன் மகளிரு மைந்தரும் (கலித். 92:65) என்பதும், ‘நான்குமாடம் கூடலின் நான்மாடக்கூடலென்றாயிற்று;
______________________________________________________


நான்மாடக் கூடல் மகளிரு மைந்தரும்
வானக் கடவளரும் மாதவருங் கேட்டீமின்
--21. வஞ்சின மாலை
சிலப்பதிகாரம் - 2. மதுரைக் காண்டம்
_______________________________________________________


“மாடமலி மறுகிற் கூடல்” (முருகு.71); 
“மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்” (மதுரைக்.429); 
“மாடக் கூடல்” (பரி.20 : 106); 
“மாட மதுரை”, “மாட மதுரையும்” (சிலப்.பதி. 203, 8 : 3, 9: 76, 15 : 112); “நான்மாடக் கூடன் மகளிரு மைந்தரும்” (கலித். 92) என்பதும், 

‘நான்கு மாடங் கூடலின் நான்மாடக்கூடலென்றாயிற்று; அவை 
திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர்; 

இனி, கன்னி, கரியமால், காளி, ஆலவாயென்றுமாம்’ என்னும் அதன் விசேடவுரையும், “அம்புத நால்களா னீடு கூடல்” (திருநள்ளாறும் திருவாலவாயும்; தே.) என்னும் திருவாக்கும், 
“மதிமலி புரிசை மாடக் கூடல்” (திருமுருகப் பாசுரம்) என்பதும், “ஈசனார் மகிழ்ந்த தானம்” (திருவால.நகர. 12) என்பது முதலிய திருவிருத்தங்கள் நான்கும், 
“கன்னிதிருமால்காளி யீசன் காக்குங் கடிமதில்சூழ் மாமதுரை” (திருவால.பயன் முதலியன. 5) என்பதும் இங்கே கவனிக்கத்தக்கவை.
__________________________________


சங்ககாலத்தில் கட்டடங்கள் செங்கற்களால் கட்டப்பட்டிருந்ததை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். அவை பல மாடங்களைக் கொண்டிருந்தன. மாடங்கள் மிகுந்தும் சிறந்தும் விளங்கிய மதுரை பற்றிப் புறநானூறு, மதுரைக்காஞ்சி, திருமுருகாற்றுப்படை, கலித்தொகை போன்ற நூல்கள் குறிப்பிடுகின்றன.
 

மாட மதுரை (புறம். 32)
மாடமலி மறுகிற்கூடல்  (திருமுருகு. 71)
மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் (மதுரைக்காஞ்சி, 429)
நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும் (கலித்தொகை, 92)
+
"மதிமலி புரிசை மாடக் கூடல்" (திருமுகப் பரசுரம்). 
___________________________________________________


நான்மாடக் கூடல் என்னும் என்னும் பெயர் மதுரையைக் குறிக்கிறது. எனினும் அது 'நான்கு மாடக் கூடல்' என்பதன் குறுக்கம்.

திருவாலவாய் (மதுரை)
திருநள்ளாறு
திருமுடங்கை
திருநடுவூர்
ஆகியவை அக்கால நான்கு மாடக் கூடல்கள்.

நச்சினார்க்கினியர் விளக்கம்
கன்னி, கரியமால், காளி, ஆலவாய் என இவற்றை நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார். [1]
கூடல் என்பது கோபுரத்தைக் குறிக்கும்.

அடிக்குறிப்பு[தொகு]
கலித்தொகை பாடல் எண் 92, அடி 65-ல் வரும் 'நான்மாடக் கூடல்' என்னும் தொடருக்கு நச்சினார்கினியர் தரும் உரை
_________________________________________________________


திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை

66

...............  நிலாமுளைக்கும்
அங்கழ கச்சுதை மாடக்கூடல்
ஆலவா யின்க ணமர்ந்தவாறே.

நிலவொளி வெளிப்படுமாறு வெண்மையான சுண்ணாம்பினால் கட்டப்பட்ட மாடங்களையும் உடைய கூடல் ஆலவாயின்கண் விரும்பி உறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.



74

இரும்பலி யின்பினோ டெத்திசையும்
அடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல்
ஆலவா யின்க ணமர்ந்தவாறே.

 அவ்விழாவில் வழங்கும் பெருவிருந்தால் விளையும் மகிழ்வு எத்திசையும் பொருந்திப் பெருமை சேர்க்கும் மாடக் கூடல் ஆலவாயின் கண் மகிழ்ந்துறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.
___________________________ 


வான் ஆர் எழிலி மழை வளம் நந்த,
தேன் ஆர் சிமைய மலையின் இழிதந்து,
நான் மாடக் கூடல் எதிர்கொள்ள, ஆனா
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய
இருந்தையூர் அமர்ந்த செல்வ! நின் .. . .5
திருந்துஅடி தலை உறப் பரவுதும், தொழுது.

பரிபாடல் திரட்டு
முதற் பாடல்

உலகம் ஒரு நிறையாத் தான் ஓர் நிறையாப்
புலவர் புலக் கோலால் தூக்க, உலகு அனைத்தும்
தான் வாட, வாடாத தன்மைத்தே- தென்னவன்
நான்மாடக் கூடல் நகர்.

பரிபாடல் திரட்டு
ஏழாம் பாடல்

..... தேமொழி 





மதுரை பெயர்க்காரணம், ஊரும் பேரும்

மதுரை பெயர்க்காரணம்


Meaning of the name 'Madurai'

 

சிறப்புகள் மிகுந்த பழமையான ’மதுரை‘ மாநகருக்கு, மதுரை என்ற பெயர்  எதனால் ஏற்பட்டது ?

வீட்டுமனை(plots for sale) விற்பனையே சிறந்ததொரு வணிகமாக உள்ளது.  ஏக்கர் கணக்கில் இடங்களை வாங்கி, அந்த இடத்தை, வீட்டுமனை, சாலை, விளையாட்டுத் திடல், பூங்கா, வழிபாட்டுத் தலம் என்றெல்லாம் திட்டமிட்டுப் பிரித்து விற்பனை செய்கின்றனர். இந்த வணிகம் மிகக் குறுகிய காலத்தில் அதிகம் வருவாய் தரக்கூடிய ஒரு தொழிலாக உள்ளது. இவ்வாறு மக்கள் குடியிருப்புகள் திட்டமிட்டு உருவாக்கப்படுவதால் சாலை, குடிநீர், மின்சாரம், மற்றும் கழிவுநீர் வசதி என ஒரு வீட்டிற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செவ்வனே கிடைக்கின்றன.

இவ்வாறு இக்காலத்தில் திட்டமிட்டு நகரங்கள் உருவாக்கப்படுவது போன்று வாஸ்து இலக்கணப்படி திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மிகப் பழமையான நகரம் மதுரை ஆகும். இது உலகில் உள்ள தொன்மையான நகரங்களுள் மிகவும் நேர்த்தியாகத் திட்டமிடப்பெற்று குலசேகர பாண்டியமன்னனால் நிருமாணிக்கப் பெற்ற நகரம்.

மதுரைக்குக்  கடம்பவனம், ஆலவாய், நான்மாடக்கூடல், வெள்ளியம்பலம், தூங்காநகர் என்று பல சிறப்புப் பெயர்கள் உள்ளன. சிவபெருமான் தமது சடையிற் சூடிய பிறையினிடத்துள்ள அமிர்தமாகிய மதுவைத் தெளித்து, நாகம் உமிழ்ந்த விஷத்தை நீக்கிப் புனிதமாக்கியதால் மதுராநகர் எனப் பெயர் பெற்றது. சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக்கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது.  மதுரையை அழிக்க வருணன ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டானது .

மதுரை என்ற பெயர்  எதனால் ஏற்பட்டது ?
மதுரை என்ற சொல்லை இலக்கணப்படி பிரித்து எழுதினால் ம=குறில், து=குறில், ரை=நெடில். எனவே மது.ரை = நிரை நேர்
மதுரை என்பது “மது.ர்+ஐ“ என்று வரும்.  மதுர் என்றால் அழகு நிறைந்த என்றும், ஐ என்றால் தலைவன் என்றும் பொருள்.  எனவே, மதுரை என்ற சொல்லை தமிழ் இலக்கணப்படிப் பிரித்துப் படித்தால் “மதுரை“ என்ற சொல்லுக்கு “அழகிய தலைவன்“ அதாவது “சுந்தர ஈசுவரன்“ என்று பொருளாகிறது.  மதுரை = மதுர்+ஐ = அழகிய+தலைவன் = சுந்தர + ஈசுவரன்
மதுரை என்றால் “அழகிய தலைவன் = சுந்தர ஈசுவரன்” என்று பொருள்


மதுரை, மதுரை பெயர்க் காரணம்


எது அழகு? சுந்தரம் என்றால் என்ன?  
மொழிக்கு இலக்கணம் இருப்பது போன்று,  உடலுக்கும் இலக்கணம் உண்டு. உடலின் அமைப்பை (லட்சணத்தை) 32 ஆகப் பிரித்துக் கூறுகிறது சாமுத்திரிகாலட்சணம். இந்த எண் நான்கு (8 x 4 =32) மேனி இலக்கணங்களும் நேர்த்தியாக அமையப் பெற்ற ஒரே சிவலிங்கம் மதுரை சுந்தரேசுவரர்என்றும், இதன் காரணமாகவே இந்தச் சிவலிங்கத்திற்குச் “சுந்தரேசுவரர்“ என்று பெயர் வைத்துத் தேவர்கள் வழிபட்டதாகவும் பரஞ்சோதிமுனிவர் தமிழிலில் மொழிபெயர்த்துப் பாடியுள்ள திருவிளையாடல் புராணம் கூறுகிறது.  இதனால் சிவலிங்கத்திற்கான தமிழ்ப்பெயரே அந்த ஊருக்கும் ஆகிவந்துள்ளது.
எனவே, மதுரை என்றால் “அந்தமில் அழகன்“, “அழகியபிரான்“, “சுந்தரேசுவரன்“ என்று பொருள் கொள்ள வேண்டும்.

மதுரை என்றால் சுந்தரேசுரவன் என்று பொருள்.  சிவலிங்கத்திற்கான பெயரே ஊருக்கும் ஆகி நிலைபெற்றுள்ளது.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

வாசிக்கப்பட்டவை........................................................

மதுராபுரி = மதுர் + ஆர் + புரி
மதுர் = ஒரு நடிகரின் பெயர்?
மதுரா / மதுரம் = அழகிய+வாயல் = மதுரவாயல்
மதுராந்தகம்
மதுராஷ்டகம்
......................................................................................

திருவிளையாடற் புராணம்
மூர்த்திவிசேடப் படலம்

ஆலவா யலர்ந்த செம்பொ னம்புயப் பெருந்தீர்த் தத்தின்
மேலவாம் பெருமை தன்னை விளம்புவா ரெவரே யங்கண்
நீலமா மிடற்று முக்க ணிராமய னறிவா னந்த
மூலமா விலிங்க மேன்மை முறையினா லறைய லுற்றாம்.

     (இ - ள்.)திருவாலவாயின் கண் மலர்ந்த சிவந்த பொற்றாமரை ஆகிய, பெருமை பொருந்திய தீர்த்தத்தின் சிறப்புமிக்க பெருமைகளைக் கூறுவார் எவரே; அவ்விடத்து, மிக்க கருமையுடைய கண்டத்தினையும், மூன்று கண்களையும் உடைய,சோமசுந்தரக் கடவுளாகிய, ஞானானந்த வடிவான, பெருமை பொருந்திய மூல விலிங்கத்தின்,பெருமையை, முறைப்படி சொல்லுதல் உற்றோம்.

பொன்னெடு மேலு வெள்ளிப் பொருப்புமந் தரங்கே தாரம்
வன்னெடும் புரிசை சூழ்ந்த வாரண வாசி யாதிப்
பன்னருந் தலங்க டம்மிற் பராபர விலிங்கந் தோன்றும்
முன்னரிக் கடம்பின் மாடே முளைத்ததிச் சைவ லிங்கம்.

     (இ - ள்.) பொன்னாகிய நெடிய மேரு மலையும், கைலைமலையும், மந்தரமலையும், திருக்கேதாரமும், வலிய நெடிய மதில் சூழ்ந்த, காசி  முதலாகவுள்ள, சொல்லுதற்கரிய திருப்பதிகளின் கண், பராபர இலிங்கங்கள்  தோன்றுவதற்கு முன்பே, இக்கடம்ப மரத்தினடியில், இந்தச் சிவலிங்கம் தோன்றி அருளியது.

அப்பதி யிலிங்க மெல்லா மருட்குறி யிதனிற் பின்பு
கப்புவிட் டெழுந்த விந்தக் காரண மிரண்டி னாலும்
ஒப்பரி தான ஞான வொளிதிரண் டன்ன விந்தத்
திப்பிய விலிங்க மூல விலிங்கமாய்ச் சிறக்கு மன்னோ.

     (இ - ள்.) மகாமேரு முதலிய திருப்பதிகளிலுள்ள இலிங்கங்கள் அனைத்தும், அருட்குறியாகிய இந்தச் சிவலிங்கத்தினில் கிளைத்துத் தோன்றின.
இந்த இரண்டு ஏதுக்களாலும், ஒப்பில்லாத, ஞானவொளி திரண்டாற் போன்ற, இந்தத் திப்பிய இந்தத் திவ்விய இலிங்கமானது, மூல லிங்கமாகச் சிறந்து விளங்கும்.

இந்தமா விலிங்கத் தெண்ணான் கிலக்கண விச்சை மேனி
அந்தமி லழகன் பாகத் துமையொடு மழகு செய்து
சந்ததம் விளக்கஞ் செய்யுந் தகைமையை நோக்கிச் சோம
சுந்தர னென்று நாமஞ் சாத்தினார்* துறக்க வாணர்.

     (இ - ள்.) இந்தப் பெருமை பொருந்திய லிங்கத்தின் கண்,முப்பத்திரண்டு
இலக்கணங்களையுடைய,  ஞானவடிவாகிய,  முடிவில்லாத அழகினையுடைய இறைவன், ஒரு பாகத்தில் உமையம்மை யோடும், அழகினைச் செய்து, எப்போதும், அருள் பாலிக்கின்ற, தன்மையைக் கண்டு, தேவர்கள்,சோமசுந்தரன் என்று பெயர் கூறினார்கள்.

திருவிளையாடற் புராணப் பாடல்கள் - தமிழ் இணைப் பல்கலைக்கழகத்திற்கு நன்றி.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
-------------------------------

Monday, 17 December 2018

மதுரைக்கு மதுராநகர் என்ற பெயர் அமைந்த காரணம், ஊரும் பேரும்

புலிக்கரை ஐயனார் துணை

மதுரை மாநகருக்கு “மதுரா நகர்“ என்ற பெயர் அமைந்ததற்கானகாரணம்




மதுரை நகருக்குக் கடம்பவனம், ஆலவாய், நான்மாடக் கூடல், சிவபுரம், மன்றல், வான்நகர், வளநகர், விழவுநகர், திருநகர், கடிநகர், முதுநகர், முத்துநகர், தொல்நகர், தூங்கா நகர் முதலான பல்வேறு சிறப்புப் பெயர்கள் உள்ளன.  அவற்றுள் “மதுரா நகர்“ என்ற பெயரும் ஒன்று. பரஞ்சோதி முனிவர் வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து எழுதிய திருவிளையாடற் புராணத்தில் உள்ள கீழ்க்கண்ட பத்துப் பாடல்களில் மதுரா என்ற சொல் இடம் பெற்றுள்ளது.  இப் பத்துப் பாடல்களில், 513ஆவது பாடலிலும், 1624 பாடலிலும் “மதுரா நகர்“ என்ற பெயர் எவ்வாறு உண்டானது என்று விளக்கம் கூறப்பட்டுள்ளது. 
சிவபெருமான் தன் தலையில் அணிந்துள்ள வளர்பிறை மதி(திங்கள் அல்லது சந்திரன்) யின் அமுதத்தை மதுரை நகரில் தெளித்தான்.  பிரளயகாலத்தில் கடல்பொங்கி எழுந்து அழித்த மதுரையைச் சிவபெருமான் சிந்திய திங்களின் அமுது சிதறிச் சாந்தி செய்த காரணத்தினால் மதுரை நகருக்கு ‘மதுரா நகர்‘ என்ற பெயர் இட்டு அழைத்துள்ளனர் தமிழர்.  வானிலிருந்து அமிழ்தம் விழுந்த இந் நிகழ்ச்சியைத் திருக்குறளும் வான்சிறப்பு என்ற அதிகாரத்தின் முதற் குறளில்,
      “வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
      தான்அமிழ்தம் என்றுஉணரற் பாற்று“ (குறள் 11)
பதிவு செய்துள்ளது. மழையின் சிறப்பைப் புகழத் தலைப்பட்ட திருவள்ளுவர், “வானிலிருந்து விழுந்து அமிழ்தத்தை ஒத்த சிறப்புடையது மழை“ என்று சிறப்பிக்கிறார்.
மதுரா என்ற பெயர்தான் மதுரை என்று ஆனதாகச் சிலர் சொல்லியும் எழுதியும் வருகின்றனர்.  ஆனால் மதுரை மாநகரின் மற்றொரு பெயர்தான் மதுரா ஆகும்.  மதுரை என்பது சிவலிங்கத்திற்கான பெயராகும்.  சிவலிங்கத்தின் பெயர் மதுரை என்பதால் அதுவே ஊருக்கும் பெயராகி உள்ளது.  மதுரைப் பெயர்க்காரணம் பற்றிய விளக்கத்தை இதே வளைப்பூவில் “மதுரை - பெயர்க்காரணம்” என்ற தலைப்பில் காணலாம்.  

“மதுரா” என்ற சொல் இடம்பெரும் திருவிளையாடல் புராணப் பாடல்களின் தொகுப்பு

325.        
மான் மதச் சுந்தரன் கொடிய பழி அஞ்சு சுந்தரன் ஓர் மருங்கின் ஞானத்
தேன் மருவி உறை சோம சுந்தரன் தேன் செவ்வழியாழ் செய்யப் பூத்த
கான் மருவு தடம் பொழில் சூழ் ஆலவாய்ச் சுந்தரன் மீன் கணங்கள் சூழப்
பால் மதி சூழ் நான் மாடக் கூடல் நாயகன் மதுரா பதிக்கு வேந்தன்.

513.        
பொன் மயமான சடை மதிக் கலையின் புத்தமுது உகுத்தனர் அது போய்ச்
சின் மயமான தம் அடி அடைந்தார்ச் சிவமயம் ஆக்கிய செயல் போல்
தன் மயம் ஆக்கி அந்நகர் முழுதும் சாந்தி செய்து அதுவது மதுர
நன் மயம் ஆன தன்மையான் மதுரா நகர் என உரைத்தனர் நாமம்.

548.        
தூமரபின் வரு பெரு மங்கல கவிகட்கு இரு நிதியம் துகில் பூண்பாய்மா
காமர் கரி பரித் தடம் தேர் முதலாய பல் பொருளும் களிப்ப நல்கிக்
கோமறுகு களிதூங்கச் சுண்ணமொடும் எண்ணெய் விழாக் குளிப்ப நல்கி
மா மதுரா நகர் அன்றி மற்றும் உள நகர் எங்கும் மகிழ்ச்சி தூங்க.     

645.        
என்ற நாதன் மேல் அன்பையும் உயிரையும் இருத்தி ஆயம் சூழக்
குன்றம் அன்னது ஓர் மேல் கொடு தூரியும் குரைகடல் என ஆர்ப்ப
நின்ற தெய்வ மால் வரைகளும் புண்ணிய நீத்தமும் நீத்து ஏகி
மன்றல் மா மதுரா புரி அடைந்தனள் மதிக் குல விளக்கு அன்னாள்.

971.        
அன்னம் இறை கொள் வயன் மதுரைச் சிவன் யாம் அரச நீ ஈன்ற
பொன்னை அனையாள் தனை மதுரா புரியில் கொடுபோய் மறு புலத்து
மன்னர் மகுட மணி இடற மழுங்கும் கழல் கால் சுந்தரன் ஆம்
தென்னர் பெருமான் குமரனுக்குக் கொடுத்தி என்று செப்புதலும்.

1357.      
செல்லார் பொழில் சூழ் மதுரா புரிச் சித்தர் எல்லாம்
வல்லார் அவர் ஆடலை யார் உரை செய்ய வல்லார்
எல்லாரும் வியப்பு உற இத் தனிச் சித்த சாமி
கல்லானை தின்னக் கரும்பு ஈந்த கதையும் சொல்வாம்.

1461.      
திருத்தராய் மதுரா புரி மேவிய சித்தர் ஆகியச் செல்வர்
விருத்தராய் இளையவரும் ஆய் மழவும் ஆய் வேடம் கொண்டு அடல் ஏற்றின்
ஒருத்தர் ஆய் விளையாடிய ஆடலை உரைத்தனம் இனி மன்றுள்
நிருத்தர் ஆயவர் மாறி நின்று ஆடிய நிலை சிறிது உரை செய்வாம்.     

1624.      
அருள் கடல் அனைய ஆதிநாயகன் தன் அவிர் சடை அணி மதிக் கொழுந்தின்
பெருக்கு அடை அமுதத் தண் துளி சிறிது பிலிற்றினான் பிலிற்றிடலோடும்
பொருக்கு என எங்கும் பாலினில் பிரை போல் புரை அறக் கலந்து பண்டு உள்ள
திருக்கிளர் மதுரா நகரம் ஆப் புனிதம் செய்த அச்சிறுதுளி அம்மா.

2096.      
இகழ்ந்த கூற்று எறி சேவடிக்கு இடை அறா நேயம்
திகழ்ந்த பத்திரன் அன்பையும் தேவரைக் காப்பான்
அகழ்ந்த ஆழி நஞ்சு உண்டவன் அருளையும் வியந்து
புகழ்ந்து போய் மதுரா புரிப் புனிதனைப் பணியா.

3356.      
திரு மணி மைந்தன் மைந்தன் முடி சூட விற்ற திருமல்கு செல்வ சரணம்
மருமகன் என்று மாமன் உருவாய் வழக்கு வலிபேசு மைந்த சரணம்
குரு மொழி தந்து நாரை குருவிக்கு வீடு குடி தந்த எந்தை சரணம்
வரு பழி அஞ்சி வேட மகனுக்கு இரங்கு மதுரா புரேசசரணம்.
*****
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

Mon, 30 Mar 2015, 21:56

திருவிளையாடற் புராணப் பாடல்களை இணையத்தில் வழங்கியுள்ள தமிழ் இணைப் பல்கலைக்கழகத்திற்கு http://www.tamilvu.org/ நன்றி.

Friday, 23 November 2018

மதுரை அகழியும் கோட்டையும்

மதுரை அகழியும் கோட்டையும்




பண்டைய மதுரை கடல்கோளால் அழிந்துவிட்டது.  மணவூரை (தற்போது கீழடி அருகே அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நகரம்) ஆண்டு வந்து வங்கியசேகர பாண்டியனின் ஆட்சிக் காலத்தில்  வணிகன் ஒருவன்  அழிந்த மதுரையின் இருப்பிடத்தை கண்டுபிடித்து மன்னனிடம் தெரிவிக்கிறான்.  மன்னனும் மந்திரிகளுடன் பண்டைய மதுரை இருந்த இடத்தைக் கண்டு அங்கிருந்து கடம்பவனத்தை அகற்றி சிவலிங்கத்தை மையமாகக் கொண்டு வீதிகளை அமைத்து இன்றைய மதுரை நகரத்தை பழைமை போல் உருவாக்கினான்.  தன்னுடைய தலைநகரை மணவூரிலிருந்து மதுரைக்கு மாற்றி மக்களை எல்லாம் மதுரையில் குடியமர்த்தினான்[1].

ஊரைச் சுற்றிலும் வட்டவடிவமான இமயமலையைத் தொட்டு அகழ்ந்தெடுத்து வைத்தது போன்றதொரு கோட்டையைக் கட்டினான்[2].  ஆமைகளும் மீன்களும் முதலைகளும் நிறைந்த அகழியை அமைத்தான்.
வங்கியசேகரபாண்டியன் புனர்நிர்மாணம் செய்து உருவாக்கிய மதுரைதான் இன்றைய மதுரை ஆகும்.  பாண்டியன் அமைத்த மதுரை மாநகரம் உள்ளது.  ஆனால் அவன் அமைத்த அகழியும் கோட்டையும் எங்கே காணோம்?

பாண்டியர் ஆட்சிக்குப் பின்னர் நாயக்கர் ஆட்சிக்காலத்திலும் அகழியும் கோட்டையும் இருந்துள்ளன.  1757ஆம் ஆண்டு வரைபடத்தில்  மதுரையின் அகழியும் கோட்டையும் காட்டப்பெற்றுள்ளன.



1843 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், தொல்லியல் சிறப்பு மிகுந்த அகழியையும் கோட்டையையும் அழிக்க முற்பட்டனர்.  மதுரையில் பழைய நினைவு சின்னங்களை அழித்ததால் அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். இதற்கான வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்றது. தீர்ப்பு மாவட்ட ஆட்சியருக்கு சாதகமாக வந்தது.




1843 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ந்தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேஸ்திரி வீதி தீர்ப்பு வந்த பின்னர் மாவட்ட ஆட்சியருக்கு உதவியாக துணைநிலை ஆய்வாளர் மாரட் என்பவர் நியமிக்கப்பட்டார். பிளாக் பர்னுக்கும், மாரட்டுக்கும் உதவியாக பெருமாள்பிள்ளை என்பவர் உதவியாக இருந்தார். வீதிகள் அமைக்கும் பணிக்கு மேஸ்திரிகள் நியமிக்கப்பட்டார்கள். பெருமாள் பிள்ளை வீதிகள் அமைக்க உதவியதால் அவருடைய பெயரிலும் வீதிகள் அமைக்கப்பட்டன.  (https://ta.wikipedia.org/wiki/ மதுரை_வரலாறு).

 

மதுரையில் சுமார் 5 கி.மீ. சுற்றளவு கொண்டிருந்த கோட்டையும் அகழியும் அன்னியர் ஆட்சிக்காலத்தில் அழிக்கப்பட்டது போகத் தற்போது  எஞ்சி  இருப்பது சுமார் 50 அகலம் கொண்ட ஒரு சிறு பகுதி மட்டுமே ஆகும்.  மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் அகழி இருந்த இடம் இப்போது இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக உள்ளது.  கோட்டையின் எஞ்சிய பகுதி புதுப்பிக்கப்பெற்று நினைவுச் சின்னமாக உள்ளது.

வங்கியசேகர பாண்டியன் அமைத்த அகழிக்கு வெளிப்புறம் அமைந்திருத்த  சாலையானது வெளிவீதிகளாக உள்ளன.  மதுரையின் கோட்டைக்கு உள்ளே அமைக்கப்பட்ட சாலையானது பெருமாள் மேஸ்திரி வீதிகளாகவும் மாரட் வீதியாகவும் உள்ளன.
 
(நன்றி – The Hindu, The West Gate of the old Fort of Madurai. Photo:G.Moorthy | Photo Credit: G_Moorthy)


அகழியும் கோட்டையும் அமைத்த மன்னனின் பெயரை மாமதுரை வீதிகளுக்குச் சூட்டாமல், தொன்மைச் சிறப்பு மிக்க தொல்லியல் தடையங்களை அழித்த மாரட் மற்றும் மேஸ்திரி இவர்களது பெயர்களால் வீதிகள் இன்றும் அழைக்கப்படுவது வியப்பாகவும் வருத்தமாகவும் உள்ளது.

அன்பன்
கி. காளைராசன்

திருவிளையாடல் புராணம் –  'இஞ்சி'  'எயில்'  'மதில்' ’ அகழி. வாயில் ’,    என்ற சொற்கள் உள்ள பாடல்களின் தொகுப்பு.

106.     
எறியும் வாளையும் அடிக்கடி எழுந்து உடல் பரப்பிப்
பறியும் ஆமையும் வாளோடு கேடகம் பற்றிச்
செறியும் நாள் மலர் அகழியும் சேண் தொடு புரிசைப்
பொறியுமே ஒன்றி உடன்று போர் புரிவன போலும்.       

110.     
மாக முந்திய கடி மதின்  மதுரை நாயகர் கைந்
நாகம் என்பதே தேற்றம் அந் நகர் மதில்  விழுங்கி
மேகம் நின்று அசைகின்ற அவ் வெம் சினப் பணிதன்
ஆகம் ஒன்று தோல் ஊரிபட நெளிவதே ஆகும்.

112.     
சண்ட பானுவும் திங்களும் தடைபடத் திசையும்
அண்ட கோளமும் பரந்து நீண்டு அகன்ற கோபுரங்கள்
விண்ட வாயில்  ஆல் வழங்குவ விட அரா வங்காம்
துண்ட போல் பவும் உமிழ்வன போல் பவும் உழலா.         

113.     
மகர வேலை என்று யானை போல் மழை அருந்து  அகழிச்
சிகர மாலை சூழ் அம் மதி திரைக் கரம் துழாவி
அகழ ஓங்கு நீர் வைகையால் அல்லது வேற்றுப்
பகைவர் சேனையால் பொரப் படும் பாலதோ அன்றே.


114.     
எல்லைத் தேர் வழித் தடை செயும் இம் மதில்  புறம்  சூழ்ந்து
தொல்லை மேவலர் வளைந்துழி உடன்று போர் ஆற்றி
வெல்ல மள்ளரும் வேண்டுமோ பொறிகளே வெல்ல
வல்ல அம் மதில்  பொழி செயு மறம் சிறது உரைப்பாம்.             

117.     
எள்ளி யேறு நரை இவுளி மார்பு இற எறிந்து குண்டு அகழி இடை விழத்
தள்ளி மீளும் உருள் கல்லிருப்பு முளை தந்து வீசி உடல் சிந்தும் ஆல்
கொள்ளி வாய் அலகை வாய் திறந்து கனல் கொப்பளிப்ப உடல் குப்புறத்
துள்ளி ஆடுவன கைகள் கொட்டுவன தோள் புடைப்ப சில கூளியே.

172.     
கொடி முகில் துழாவு மிஞ்சிக் கோ நகர் வடகீழ்  ஞாங்கர்
முடி மிசை வேம்பு நாற முருகு அவிழ் ஆரும்  போந்தும்
அடி மிசை நாறத் தென்னர் வழி வழி அரசு செய்யும்
இடி முரசு உறங்கா வாயில்  எழுநிலை மாடக் கோயில்.             

187.     
ஆறு நீர்க் கடல் அன்று அது என நிறை அகழ் கார்
ஊரு ஆழி அன்று அது என ஓங்கு எயில்  எட்டாய்ச்
சாரு நேமியன்று அது எனச் சமைந்த கோபுரம் பொன்
மேரு அன்று அது எனச் சுடர் விசும்பு இழி விமானம்.         

244.     
அன்னிய தலங்கள் தம்மில் ஆற்றிய பிரமகத்தி
பொன்னினைக் களவு செய்தல் கள் உண்டல் புனித ஆசான்
பன்னியைப் புணர்தல் இன்ன பாதகம் அனைத்தும்  என்றும்
தன்னிகர் ஆல வாயில்  வதிபவர் தமை விட்டு ஏகும்.     

336.     
சென்னி பொருட்டு எயில் வாயில்  திறந்து அடைத்து   விடை பொறித்த செயலும் சென்னி
மன் இகல் இட்டு அமர் விளைப்ப மீனவற்கு நீர்ப்  பந்தர் வைத்த வாறும்
பொன்னனையாள் பொருட்டுஇ ரதவாத வினை  முடித்ததுவும் புகார்க்கு வேந்தன்
தன்னை அகன் குழி வீட்டித் தென்னவற்கு மற வாகை  தந்த வாறும்.

509.     
வலம் வயின் இமய வல்லி பொன் கோயில் மாளிகை   அடுக்கிய மதில்  வான்
நிலவிய கொடிய நெடிய சூளிகை வான் நிலா விரி  தவள மாளிகை மீன்
குலவிய குடுமிக் குன்று இவர் செம் பொன் கோபுரம்  கொண்டல் கண் படுக்கும்
சுல வெயில் அகழிக் கிடங்கு கம்மி நூல் தொல்  வரம்பு எல்லை கண்டு அமைத்தான்.

650.     
பித்திகை வெள்ளை புதுக்குவார் பெட்பு உறுவார்களும்  பெட்பு உறச்
சித்திர பந்தி நிறுத்துவார் தெற்றிகள் குங்குமம் நீவு வார்
வித்திய பாலிகை மென் தழை விரிதலை நீர் நிறை   பொன் குடம்
பத்தியின் வேதி நிரப்புவார் தோரணம் வாயில்  பரப்புவார். 

715.     
முகில் தவழ் புரிசை மூதூர் முதல் பெரு வாயில்  நீந்தி
அகில் தவழ் மாட வீதி வலம் பட அணைவான் ஆக
நகில் தழை பொலம் கொம்பு அன்ன நன்னகர் மகளிர்   அம் பொன்
துகில் தழை மருங்குல் ஆயத் தொகைபுறம் தழுவச்  சூழ்ந்தார்.           

1042.   
இன்னவாறு எழுந்த வேலை மஞ்சு உறங்கும் இஞ்சி சூழ்
நல் நகர்க் குணக்கின் வந்து நணுகும் எல்லை அரை இரா
மன்னவன் கனாவின் வெள்ளி மன்ற வாணர் சித்தராய்
முன்னர் வந்து இருந்து அரும்பு முறுவல் தோன்ற மொழிகுவார்.         

1044.   
கண் நிறைந்த அமளியின் கழிந்து வாயில்  பல கடந்து
உண் நிறைந்த மதி அமைச்சருடன் விரைந்து குறுகியே
மண் இறந்தத என முழங்கி வரு தரங்க வாரி கண்டு
எண் இறந்த அதிசயத்தன் ஆகி நிற்கும் எல்லைவாய்.   

1051.   
அஞ்சலி முகிழ்த்துச் சேவித்து அருகு உற வந்த வேந்தன்
இஞ்சி சூழ் கோயில் எய்தி இறைஞ்சினன் விடை கொண்டு ஏகிப்
பஞ்சின் மெல் அடியார் அட்ட மங்கலம் பரிப்ப நோக்கி
மஞ்சு இவர் குடுமி மாட மாளிகை புகுந்தான் மன்னோ.

1052.   
வளை எயில்  மதுரை மூதூர் மறி கடல் இவற்றின்  நாப்பண்
விளை வயன் நகரம் எல்லாம் வெள்ளி அம்பலத்துள்  ஆடும்
தளை அவிழ் கொன்றை வேணித் தம்பிரான் தனக்கே  சேர்த்துக்
களை கணாய் உலகுக்கு எல்லாம் இருந்தனன் காவல்  வேந்தன்.

1147.   
கன்னிப் பொன் எயில்  சூழ் செம் பொன் கடி நகர்க்கு  அணியன் ஆகிப்
பொன்னில் செய்து இழைத்த நீள் கோபுரத்தினைக்   கண்டு தாழ
உன்னித் தேர் இழிந்து எட்டோடு ஐந்து உறுப்பினால் பணிந்து எழுந்து
வன்னிச் செம் சுடர்க் கண் நெற்றி மன்னவன் மதுரை சார்ந்தான்.   

1148.   
அறத்துறை அந்தணாளர் துறந்தவர் அரன் தாள் பற்றிப்
புறத்துறை அகன்ற சைவபூதியர் புனிதன் கோயில்
நிறத்துறை அகத்துத் தொண்டர் திரண்டு எதிர் கொள்ள   முத்தின்
நிறத்துறை வைகை நீத்து நெடு மதில் வாயில்  புக்கான்.         

1339.   
சிறிது மூரலும் வெயர் வையும் திருமுகத்து அரும்பக்
குறுகி ஆவணம் சித்திர கூட நால் சந்தி
மருகு சூளிகை உபரிகை மாளிகை வாயில்
அறுகு சூழ் நிரைத்த தெற்றி இவ் விடம் தொறும்  அடைந்து.     

1465.   
பொன்னி நாடவன் வாயில்  உள்ளான் ஒரு புலவன்  வந்து அலர் வேம்பின்
கன்னி நாடனைக் கண்டு முன் பரவுவான் கனைகழல்  கரிகால் எம்
மன்னவற்கு அறுபத்து நால் கலைகளும் வரும் வாராது  உனக்கு ஒன்று
தென்னர் ஏறு அனையால் அது பரத நூல் தெரிந்திலை எனச் சொன்னான்.             

1508.   
வாயில்  உளார் தம் மன்னவன் முன் போய் மன்னா நம்
கோயிலின் மாடு ஓர் வேதியன் மாதைக் கொலை செய்தான்
ஆயினன் என்று ஓர் வேடனை முன் விட்டு   அவிந்தாளைத்
ஆயினன் வந்து இங்கு இட்டு அயர் கின்றான் தமியன்  என்றார்.         

1576.   
கூர்த்த வெண் கோட்டி யாவைக் குலோத்துங்க வழுதி  ஞாலம்
காத்து அரசு அளிக்கும் நாளில் கடிமதில்  உடுத்த  கூடல்
மாத் தனி நகருள் வந்து மறு புலத்தவனாய் யாக்கை
மூத்தவன் ஒருவன் வைகி முனைய வாள் பயிற்றி  வாழ்வான்.             

1613.   
கண்டவர் கடிநகர் கடிது ஓடிக் கௌரியன் அடி தொழுது அடி கேள் அம்
கொண்டல் கண் வளர் மதில்  வளை கூடல் குடவயின் ஒரு பெரு விடநாகம்
அண்டமும் அகிலமும் ஒரு வாய் இட்டு அயிர வருவதை என நீள் வாய்
விண்டு கொண்டு அனைவதை என லோடும் வெரு வலன் மதிகுல மறவீரன்.

1620.   
தீவிடம் உருத்துத் திணி இருள் கடுப்பத் திருநகர் எங்கணும் செறிந்த
காவிடம் கூவல் கயம் தலை சதுக்கம் கழகம் ஆவணம் அகழ் இஞ்சி
கோவிடம் மாடம் உபரிகை மேடை கோபுர அரங்கம் எலாம் பரந்து
தாவிட மயங்கி உறங்கினார் போலச் சாம்பினார் தனிநகர் மாக்கள்.           

1721.   
ஆய பொதியில் விளை பொன்னால் அசும்பு செய்து  விசும்பு இழிந்த
கோயில் அதனை அகம் புறமும் குயின்று ஞானக்  கொழுந்து அனையது
ஆயில் அறுகால் பீடிகை வான் தடவு கொடிய நெடிய  பெரு
வாயில்  பிறவும் அழகெறிப்ப வேய்ந்தான் மறையின்  வரம்பு அறிந்தான்.

1739.   
கற்புத் திரிந்தார் தமை நோக்கிக் கருத்துத் திரிந்தீர்  நீர் ஆழி
வெற்புத் திரிந்த மதில்  கூடல் மேய வணிகர்  கன்னியராய்ப்
பொற்புத் திரியாது அவதரிப்பீர் போம் என்று இட்ட சாபம் கேட்டு
அற்புத் திரிந்தார் எங்களுக்கு ஈது அகல்வது எப்போது என முனிவர்.           

1744.   
மன்னு மறையின் பொருள் உரைத்த மணிவாய் திறந்து  வளை கொண்மின்
என்னும் அளவில் பருவ முகில் இமிழ் இன்னிசை  கேட்டு எழில் மயில் போல்
துன்னு மணி மேகலை மிழற்றத் தூய வணிகர் குல   மகளிர்
மின்னு மணி மாளிகை நின்றும் வீதி வாயில் புறப்பட்டார்.     

1789.   
சந்து சூழ் மலயச் சிலம்பர் தவம் புரிந்த இயக்கி மார்க்
அந்த நால் இரு சித்தி தந்தது அறைந்தனன் அடி தொழா
வந்து மீன் வளவன் பொருட்டு வடாது வாயில்  திறந்து  அழைத்து
இந்து சேகரன் விடை இலச்சினை இட்டவாறு விளம்புவாம்.   

1790.   
தோடு வெட்டி மலைத்து வாள் விதிர் துணை  விழிக்குயில் இள முளை
கோடு வெட்டிய குறி கொள் மேனியர் குடி கொள் மா நகர் கடி கொள் பைங்
காடு வெட்டிய காரணக் குறி காடு வெட்டிய சோழன்    என்று
ஏடு வெட்டிய வண்டு சூழ் பொழில் எயில்  கொள் கச்சி உளான் அவன்.

1801.   
வறந்தவாறு கடந்து வந்து வடக்கு வாயில்  திறந்து  போய்
நிறைந்த காவல் கடந்து வீதிகள் நிந்தி நேரியர்  வேந்தனைச்
சிறந்த வாடக புனித பங்கய திப்பியப் புனல் ஆடுவித்து
அறம் தவாத அறை கான கண்டர் தம் ஆலயம்  புகுவித்தரோ.

1808.   
கங்குலின் அரும் கை குறைப்பான் எனச்
செம் கை நீட்டித் தினகரன் தோன்றலும்
எங்கள் நாயகன் இட்ட குறி அறிந்து
அங்கண் வாயில்  திறப்பவர் ஐயுறா.             

1809.   
மற்றை வாயில்  கண் மூன்றினும் வல்லை போய்
உற்று நோக்கினர் தாம் நென்னல் ஒற்றிய
கொற்ற மீனக் குறி பிழை யாமை கண்டு
எற்றி இது ஆம் கொல் என்று ஏந்தல் முன் எய்தினார்.     

1810.   
போற்றி மன்ன நம் பொன் அம் கயல் குறி
மாற்றி உத்தர வாயில்  கதவு அதில்
ஏற்று இலச்சினை இட்டனர் யாரை என்று
ஆற்றல் வேந்த அறிகிலம் யாம் என்றார்.   

1813.   
மட்டது அலம்பிய தாதகி மாலையான்
உட்ட தும்பி ஒழுகிய அன்பினால்
கட்டு இல் அங்கு எயில்  கச்சியில் காடு எலாம்
வெட்டி நம் புடை வித்திய பத்தியான்.

1814.   
வந்து நமை வழி பட வேண்டினான்
இந்த வாயில்  திறந்து அழைத்து இன் அருள்
தந்து மீள விடுத்துப் பின் ஆட் கொளீஇ
நந்த மால் விடை நாம் பொறித்தேம் எனா.

1939.   
சென்றவள் கங்குல் எல்லை தெரிந்தபின் எழுந்து வெள்ளி
மன்றவன் கோயில் வாயில்  வந்து வந்தனை செய்து அம் பொன்
குன்றவன் உரைத்த ஆற்றால் கொடுமைசால் வழக்குப் பூட்டி
வென்றவர் இருக்கை எய்தி விளம்புவாள் பலரும் கேட்ப.           


1982.   
பூசத் துறையில் புகுந்து ஆடியப் பொன்னித் தென்சார்
வாசத்து இடை மா மருதைப் பணிதற்கு வைகைத்
தேசத்தவன் கீழ்த்திசை வாயில்  கடந்து செல்லப்
பாசத் தளையும் பழியும் புற நின்ற அன்றே.             

1986.   
வரகுணன் அது கேட்டு ஐயன் மருதினை வளைத்து நீங்கற்கு
அருமையால் வாயில்  தோறும் அடிக்கடி வீழ்ந்து வீழ்ந்து
வரை துளைத்து அன்ன மேலை வாயிலால்  போவான் அன்ன
திருமணிக் கோபுரம் தன் பெயரினால் செய்து சின்னாள்.         

2065.   
நீல வண்ணன் தேறா நிமலன்
ஆல வாயில்  அமர்ந்தான் என்னே
ஆல வாயான் அலரில் வாசம்
போல் என் உளமும் புகுந்தான் என்னே.

2312.   
இந் நிலை நியமம் மூ ஐந்து எல்லை ஞான்று இயன்று பின் நாள்
அந் நிலை ஒழுகு நாரை ஆடக கமலம் தோய்வான்
வன் நிலை மதில்  சூழ் ஞாங்கர் வந்துழிப் பசியால் வெந்து
மின் நிலை வேல் போல் துள்ளும் மீன் கவர்ந்து உண்கும் என்னா.       

2345.   
சித்தர் தம் சின கரத்து எழுந்து அருளினார் செழியன்
பைத்த ஆலவாய் கோலிய படி சுவர் எடுத்துச்
சுத்த நேமிமால் வரையினைத் தொட்டு அகழ்ந்து எடுத்து
வைத்தது ஆம் என வகுத்தனன் மஞ்சு சூழ் இஞ்சி.             

2346.   
தென் திசைப் பரங் குன்றமும் வடதிசை இடபக்
குன்றமும் குடக் கேடக நகரமும் குணபால்
பொன்றல் அம் கிழித்து எழு பொழில் பூவண நகரும்
என்று நால் பெரு வாயில்  கட்கு எல்லையாய் வகுத்தான்.         

2347.   
அனைய நீள் மதில் ஆலவாய் மதில் என அறைவர்
நனைய வார் பொழில் நகரமும் ஆலவாய் நாமம்
புனையல் ஆயது எப்போதும் அப் பொன்னகர் தன்னைக்
கனைய வார் கழல் காலினான் பண்டு போல் கண்டான்.           

2348.   
கொடிகள் நீள் மதில்  மண்டபம் கோபுரம் வீதி
கடி கொள் பும் பொழில் இன்னவும் புதியவாக் கண்டு
நெடிய கோளகை கிரீடம் வாள் நிழல் மணியால் செய்து
அடிகள் சாத்திய கலன்களும் வேறு வேறு அமைத்தான்

2360.   
அளந்து சூழ் திரு ஆலவாய் மதில்  இன்புறத் தக ஆழிபோல்
வளைந்த சோழ நெடும் படைக்கு எதிர் வஞ்சி வேய்ந்து  எழு பஞ்சவன்
கிளர்ந்த சேனை அதிர்ந்து கிட்டின கிட்டி அவ் இரு படைஞரும்
களம் சிறந்திட வஞ்சினம் கொடு கை வகுத்து அமர்  செய்வர் ஆல். 

2395.   
வங்கிய சேகரன் கோல் வாழும் நாள் மேலோர் வைகல்
கங்கை அம் துறை சூழ் கன்னிக் கடிமதில்  காசி தன்னில்
பங்கயசூ முளரிப் புத்தேள் பத்து வாம் பரிமா வேள்வி
புங்கவர் மகிழ்ச்சி தூங்க மறை வழி போற்றிச் செய்தான்.

2640.   
அடி பணிந்து ஏத்தினானை அருள் சுரந்து அசையு மின்னுக்
கொடி அணி மனையில் போக்கிக் கோமன வல்லியோடும்
உடன் உறை புலவரோடு ஒல்லை தன் கோயில் புக்கான்
வட திரு ஆல வாயில்  வந்து வீற்று இருந்த வள்ளல்.         

2660.   
சூழும் வார் திரை வையை அம் துறை கெழு நாட்டுள்
கீழையார் கலி முகத்தது நெய்தல் அம் கீழ் நீர்
ஆழ நீள் கரும் கழி அகழ் வளைந்து கார் அளைந்த
தாழை மூது எயில்  உடுத்தது ஓர் தண் துறைப் பாக்கம்.             

2799.   
அரிகணை தொடுத்து வேழம் அட்டவன் செழியன் வாயில்
தெரி கலை அமைச்சர் ஏற்றைச் தேசிக வடிவத்து தீண்டி
வரிகழல் சூட்டி ஆண்ட வண்ணம் இவ் வண்ணம் ஐயன்
நரிகளைப் பரிகள் ஆக்கி நடத்திய வாறும் சொல்வாம்.

2858.   
துன்னும் இன்னிய முழக்கமும் துரகத ஒலியும்
அன்ன வீரர் வாய் அரவமும் திசை செவிடு அடைப்பக்
கன்னி மா மதில்  சூழ் கடி நகர்க் கரைக் காதம்
என்ன எய்தினான் மறைப் பரிப் பாகன் அவ் எல்லை.

2860.   
மன்னவன் நெறி கோட மந்திரர் அடல் ஏறே
பன்னிற எழு முந்நீர்ப் பரவைகள் வருமா போல்
துன்னின வருகின்ற துரகதம் உள எல்லாம்
பொன் எயில் மணிவாயில்  புகுவன இது போதில்.         

2863.   
ஏந்து அரி அணை நீங்கி எழுதிய தலை வாயில்
போந்து அருகு ஒளிர் மாடம் புகுந்து அரி அணை மேவிக்
காந்தளின் விரல் நல்லார் கவரிகள் புடை வீச
ஆய்ந்தவர் புறம் சூழ வரு பரி வரவேற்பான்.

2946.   
கிட்டி ஓடினர் வெருட்டு வோர் கீழ் விழக் கடித்துத்
தட்டி ஓடுவ சில எதிர் தடுப்பவர் அடிக் கீழ்
ஒட்டி ஓடுவ சில கிடந்து ஊளை இட்டு இரங்கும்
குட்டியோடு அணைத்து எயில்  இறக் குதிப்பன சிலவே.             

2957.   
கங்குல் எல்லை காணிய நகர் கண் விழித்து ஆங்கு
மங்குல் தோய் பெரு வாயில்கள்  திறந்தலும் மாறா
தெங்கும் ஈண்டிய நரி எலாம் இம் என ஓடிப்
பொங்கு கார் இருள் துணி எனப் போயின கானம்.           

2983.   
கல் என்று அதிர் சும்மைப் புனல் கடி மா மதில்  புறம்  போய்
இல்லங்களும் சிறு துச்சிலும் மறித்திட்டு இரும் கடல்  வாய்ச்
செல்லும் கல நாவாய் பல திமில் போல் சுமந்து ஏகிப்
புல்லும் புரிசையும் தள்ளி உள் புகுகின்றதை அன்றே.

3024.   
ஆங்கு அவள் அப்போது அட்ட சிற்றுணவு அளித்தாள்  ஐயர்
வாங்கி அங்கு கையும் நாவும் கனல் எழ வாயில்  பெய்து
பாங்கு இரு கொடிறும் ஒற்றிப் பதம் உறப் பருகிக்  கொண்டு
நீங்கி முன் போல போந்து நெடும் கரை அடைக்கல் உற்றார்.

3162.   
வாயில்  எங்கணும் தூபமும் மங்கல விளக்கும்
தோய கும்பமும் கொடிகளும் சுண்ணமும் துவன்றச்
சேய காகள ஒலி மன்னன் செவிப் புலன் சுவைப்பக்
கோயில் எய்தினார் அமணர் தம் கோளரி அனையார். 

பாடல்கள்
நன்றி – தமிழ் இணையக் கல்விக் கழகம்
http://www.tamilvu.org/library



________________________________________
[1] திருவிளையாடல் புராணம்  49  திருவாலவாயான படலம்

[2] திருவிளையாடல் புராணம் பாடல் எண் 2345