Tuesday, 22 September 2020
Tuesday, 18 August 2020
கிடைக்காது கிடைக்காது, கீழடியில் கிடைக்கவே கிடைக்காது.
1) கோரைப்பற்களுடன் காதுகள்வரை வாய் அகன்ற உருவம் எதைக் குறிக்கிறது? இயற்கையில் இப்படியொரு உருவம் உள்ளதா? இந்த உருவத்திற்கும் இயற்கை வழிபாட்டிற்கும் என்ன தொடர்பு?
கீழடியில் கிடைக்கவே கிடைக்காது.
ஆராய்ச்சி அமைப்பாளர்
திருவிளையாடற் புராண ஆராய்ச்சி மையம்.
கற்றவை -
கீழடியில் கிடைத்தனவும், கிடைக்காதனவும்.
கீழடியில் கிடைத்தனவும், கிடைக்காதனவும்
இன்றைய தினமலரில் என் பார்வை -
https://www.dinamalar.com/news_detail.asp?id=2596936
தென்மாநிலத்தில் தொல்லியல் ஆய்வுகளே நடக்காதிருந்த நிலையில், மதுரைக்குத் தென்கிழக்கே 12 கி.மீ. தொலைவில் கீழடி மணலுார் கண்மாயை அடுத்துள்ள தென்னந்தோப்பில் தொல்லியல் ஆய்வை முதன்முதலாக மத்திய தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
மிகவும் தொன்மையான 2600 வருடங்களுக்கு முற்பட்ட நகர நாகரிகம் ஒன்றைத் தோண்டிக் கண்டறிந்து வெளிக் கொணர்ந்தார்.கீழடியில் பூமிக்குள் புதைந்துள்ள தமிழரின் தொன்மையான நகரைக் கண்டு உலகமே வியந்தது.அமர்நாத் மேற்கொண்ட ஆய்வைத் தொடர்ந்து தமிழக அரசின் தொல்லியல்துறையினர் பள்ளிச்சந்தை கொந்தகை, மணலுார், அகரம் போன்ற கிராமங்களிலும் தொடர்ந்து அகழாய்வு செய்து வருகின்றனர்.
தமிழரின் தொன்மையான நகரநாகரிகத்தை உலகறியச் செய்த மத்திய, மாநிலத் தொல்லியல் துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம்.
கிடைத்தன - கீழடி அகழாய்வில் சங்கத்தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பெற்ற பானை ஓடுகள், முதுமக்கள் தாழிகள், மனிதரின் மண்டையோடுகள், குழந்தைகளின் எலும்புகள், மிகப் பெரிய விலங்கின் எலும்பு, நத்தை ஓடுகள், நாணயங்கள், பன்றிச் சின்னம் பொறிக்கப்பட்ட பவள முத்திரை, சுடுமண்ணாலான மனிதஉருவங்கள், சுடுமண்ணாலான விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், தங்கக் காதணிகள், வளையல்கள், பிற அணிகலன்கள், தந்தத்தினால் ஆன சீப்பு, இரும்பு ஆயுதங்கள், செம்பு ஆயுதங்கள், சுடுமண்ணாலான தண்ணீர்த் துாம்புகள், மிக நீண்ட செங்கல் கட்டுமானங்கள் என எண்ணற்ற தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.
மகாராஷ்டிரம், குஜராத் போன்ற பகுதிகளில் பரவலாகக் காணப்படும் அகேட் மற்றும் கார்னீலியம் கற்களால் ஆன மணிகளும் கிடைத்துள்ளன. ரோம் நாட்டில் கி.மு. 2ம் நுாற்றாண்டில் புழக்கத்தில் இருந்த 'அரிட்டைன் பானை ஓடும்' கிடைத்திருக்கிறது.கீழடியில் கிடைத்துள்ள பொருட்களில் 3 பொருட்கள் முக்கியமானவை.
வழிபாட்டில் இருந்தவையா - ஒன்று சுடுமண்ணால் செய்யபெற்ற கோரைப் பற்களுடன் காதுகள்வரை அகண்ட வாயை உடைய உருவபொம்மை. மற்றொன்று கழுத்தில் மாலையணிந்த மாட்டின் தலை. மூன்றாவது பன்றியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள பவளம். இந்த மூன்று பொருட்களும் வழிபாட்டில் இருந்தவையா? என்பதை உறுதியாகச் சொல்ல இயவில்லை என்கின்றனர்.
இந்தக் கருத்தினை அடிப்படையாகக் கொண்டு, “இந்த நகர நாகரிகத்தில் மக்கள் வாழ்ந்த காலகட்டத்தில் இயற்கை வழிபாடு, மூதாதையர் வழிபாடுகள்தான் இருந்தன. மதங்கள் கிடையாது. அந்த காலகட்டத்தில் இயற்கையைக் கண்டுதான் மனிதன் பயந்தான். ஆகவே இயற்கையை வழிபட்டான். வழிபாட்டிற்கான உருவங்கள் கிடைக்காது” என்றெல்லாம் விளக்கம் கொடுக்கின்றனர்.
காவல் தெய்வம் - நீலிபன்றி உருவம் பொறிக்கப்பட்ட பவளத்தைச் சூதுபவளம் என்று குறிப்பிடுகின்றனர்.மேற்கண்ட கருத்துகளின் அடிப்படையில் கீழ்க்கண்ட ஐயங்கள் எழுகின்றன.1. கோரைப்பற்களுடன் காதுகள்வரை வாய் அகன்ற உருவம் எதைக் குறிக்கிறது. இயற்கையில் இப்படியொரு உருவம் உள்ளதா. சுடுமண்ணால் அழகிய மனிதத் தலையை செய்திட்ட பழந்தமிழர் எதற்காக இவ்வளவு அகோரமான உருவத்தைச் செய்துள்ளனர்.
இந்த உருவம் எதைக் குறிக்கிறது. இந்த உருவத்திற்கும் இயற்கை வழிபாட்டிற்கும் என்ன தொடர்பு. இது மதுரையின் காவல்தெய்வமான நீலி யின் உருவம் இல்லையா.
2. கழுத்தில் மாலையணிந்த மாட்டின் உருவம் நந்திவழிபாட்டுடன் தொடர்புடையது இல்லையா. அல்லது தமிழரின் ஏறு தழுவுதல் மற்றும் சல்லிக்கட்டு விளையாட்டுடன் தொடர்புடைய இல்லையா.
3. பவளத்தில் பொறிக்கப்பட்டுள்ள பன்றியின் உருவத்திற்கும் சூதுக்கும் என்ன தொடர்பு. மதுரையில் சிவபெருமான் பன்றி அவதாரம் எடுத்துத் திருவிளையாடல் செய்தார். பன்றி வம்சத்தினர் 12 பேர் அமைச்சர்களாய் இருந்து பாண்டிய நாட்டில் நல்லாட்சி நடத்தினர் என்று திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது.
இந்தக் கதைகளுக்கும் பவளத்தில் பொறிக்கப்பட்டுள்ள பன்றி உருவத்திற்கும் தொடர்பு இல்லையா. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிந்தால்தானே கீழடியில் வழிபாட்டுப் பொருட்களே கிடைக்கவில்லை என்று உறுதியாகச் சொல்ல இயலும்.
மணவூரிலிருந்து மதுரைக்கு - தொல்லியல் ஆய்வுகள் நடைபெறும் இடத்திற்கு அருகே மணலுார் உள்ளது.மணலுார் மிகவும் தொன்மையான ஊராகும். மணலுாரை பெருமணலுார் என்றும் மணவூர்புரம் என்றும் மகாபாரதம் குறிப்பிடுகிறது. இந்த ஊரை மணலுார் என்று பெரும்பற்றப் புலியூர் நம்பியின் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது. இந்த ஊரின் பழைய பெயர் மணவூர் என்கிறது பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணம்.
இந்த ஊரில் பிறந்த வளர்ந்த காந்திமதி என்ற பெண்ணை உக்கிரபாண்டியன் திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் மணலுாருக்கு மணவூர் என்ற காரணப் பெயர் உண்டானது.மதுரைக்கு அருகே வடக்குதிசையில் மணவூர் இருந்தது என்றொரு செய்தியையும் திருவிளையாடற் புராணம் பதிவு செய்துள்ளது.
கிடைக்கவே கிடைக்காது - கீழடிக்குக் கீழே எங்கு தோண்டித்தோண்டிப் பார்த்தாலும் வழிபாடு தொடர்பான பொருட்கள் கிடைக்கவே கிடைக்காது. ஏனென்றால் இந்தத் தொன்மையான நகர் அங்கு வசித்த மக்களால் கைவிடப்பட்ட நகரமாகும். இங்கு வாழ்ந்த மக்கள் புலம்பெயர்ந்து சென்று புதிதாக உருவாக்கப் பெற்ற மதுரையில் குடியேறியுள்ளனர். மதுரைக்கு குடிபெயர்ந்து செல்லும் போது, அவர்கள் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டிருந்த பொருட்களை எல்லாம் எடுத்துச் சென்றிருப்பர்.
அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் வழிபாட்டுப் பொருட்களே தலையானவை. எனவே வழிபாட்டில் உள்ள பொருட்களையே முதலாவதாகத் தலையில் துாக்கிவைத்து எடுத்துச் சென்றிருப்பார்கள். கீழடியில் மக்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களால் தொலைக்கப்பட்ட, அல்லது கைவிடப்பட்ட பொருட்களே தொல்லியலாளர்களால் தோண்டிக் கண்டறியப்பட்டு வருகின்றன.
வழிபாட்டுப் பொருட்கள் தொலைந்து போயிருக்க வாய்ப்பே இல்லை. அப்படியே தொலைந்து போயிருந்தாலும், அவற்றை அந்த மக்கள் அப்போதே தேடிக் கண்டுபிடித்து எடுத்திருப்பார்கள். மக்கள் புலம் பெயர்ந்து செல்லும் போது வழிபட்ட கோயில்கள், தெய்வ கோட்டங்களைக் கைவிட்டுச் சென்றிருப்பர். எனவே கோயில் கட்டுமானங்களின் எச்சங்கள் தொல்லியல் அகழாய்வில் கிடைத்திட அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
புதையுண்டுள்ள சிவாலயம் - அகழாய்வு செய்த இடத்திற்கு நேர் கிழக்கே 500 மீட்டர் தொலைவில் ஒரு சிவாலயம் மணலுார் கண்மாய்க்கரையில் புதையுண்டுள்ளது. இங்கு மிகப்பெரிய நந்தியையும், சிதைவுபட்டுள்ள சுற்றுச் சுவரையும் இன்றும் காணலாம். இந்த குறிப்பிட்ட இடத்தை அகழாய்வு செய்யாமல் சங்கத் தமிழர் இயற்கை வழிபாடுதான் செய்தார்கள், தெய்வ வழிபாடு செய்ய வில்லை என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
திருவிளையாடற் புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைத் தொல்லியலாளர்கள் கண்டறிந்துள்ள தொல்பொருட்களுடன் ஏன் பொருத்திப் பார்க்க மறுக்கின்றனர்? தொல்லியல் ஆய்வுகள் நடைபெறும் வரை திருவிளையாடற் புராணக்கருத்துகளைப் பலரும் புனைக்கதைகள் என்றே கூறிவந்துள்ளனர். புராணத்தில் கூறப்பட்டுள்ள கதைகளில் தமிழரின் தொன்மையான வரலாறும் புதைந்துள்ளன. சங்கத் தமிழரின் தொன்மையையும், திருவிளையாடற் புராணக் கதைகளின் உண்மையையும் உலகறியச் செய்வோம்.
-------------------------------------------
No matter where you dig in Keezhadi, you will not find any objects related to worship -
No matter where you dig in Keezhadi, you will not find any objects related to worship. This is because this ancient city was abandoned by the people who lived there. The people who lived here migrated and settled in the newly formed Madurai. When they migrated to Madurai, they would have taken all the objects they used daily with them.
Among the objects used daily, worship objects are the most important. Therefore, the objects used in worship would have been carried away first, hanging on their heads. When the people lived in Keezhadi, only the objects that were lost or abandoned by them are being excavated and discovered by archaeologists.
There is no way that the objects of worship could have been lost. Even if they had been lost, the people would have searched for them and retrieved them right away. When the people migrated, the temples and deity complexes they worshipped in would have been abandoned. Therefore, there is a high chance that the remains of temple structures will be found in archaeological excavations.
I have attached the full article.
----------------------------------
முனைவர். நா.ரா.கி.காளைராசன்
அமைப்பாளர்,
திருவிளையாடற் புராண ஆராய்ச்சி மையம், 82482 66418
https://www.dinamalar.com/news_detail.asp?id=2596936
என் பார்வையைத் தமிழ்மக்களிடம் கொண்டு சேர்த்த தினமலருக்கு நன்றி.
Thursday, 25 June 2020
மதுரை மாநகரின் காவல் தெய்வங்கள்
மதுரை மாநகரின் காவல் தெய்வங்கள்
“கீட்டிசைக் கரிய சாத்தனுந் தென்சார்
கீற்றுவெண் பிறை நுதற் களிற்றுக்
கோட்டிளங் களபக் கொங்கையன் னையருங்
குடவயின் மதுமடை புடைக்குந்
தோட்டிளந் தண்ணந் துழாயணி மௌலித்
தோன்றலும் வடவயிற் றோடு
நீட்டிரும் போந்தி னிமிர்குழ லெண்டோ
ணீலியுங் காவலா நிறுவி ....” (திருவிளையாடற் புராணம் பாடல் எண் 514.)
உரை - கீட்டிசைக் கரிய சாத்தனும் தென்சார் கீற்று வெண்பிறை நுதல் களிற்றுக் கோட்டு இளம் களபக் கொள்கை அன்னை அரும் குடவயின் மதுமடை உடைக்கும் தோட்டு இளம் தண்ணம் துழாய் அணி மௌலித் தோன்றலும் வட எயிற்றோடு நீட்டிரும் போந்தின் நிமிர் குழல் எண் தோள் நீலியும் காவலா நிறுவி.
பொருள் -
மதுரையின் காவல் தெய்வங்களாக
1) கிழக்கே - கரிய சாத்தனும்
2) தெற்கே - கீற்று வெண்பிறை நுதல் களிற்றுக் கோட்டு இளம் களபக் கொள்கை அன்னை
3) மேற்கே - மதுமடை உடைக்கும் தோட்டு இளம் தண்ணம் துழாய் அணி மௌலி
4) வடக்கே - எயிற்றோடு நீட்டிரும் போந்தின் நிமிர் குழல் எண் தோள் நீலி
Thursday, 21 May 2020
தண்டபாணித் தெய்வம்
கையில் தண்டம் வைத்திருப்பவரைத் தண்டபாணி என்றுதானே சொல்லிட வேண்டும். ஆனால் ஆடையணிந்து, ஆபரணங்களும் அணிந்து, சடாமகுடம் தாங்கிச் சர்வ அலங்காரத்துடன், இடதுகாலை மடித்து, வலதுகாலைத் தரையில் ஊன்றி அமர்ந்து, இடதுகையில் தண்டம் ஏந்தி இருப்பவரைத் தண்டபாணித் தெய்வம் என்று சொல்லாமல் “லகுலீசர்” என்கின்றனர்.
மேலேயுள்ள தெய்வம் மதுரை அருகேயுள்ள அரிட்டாபட்டி குடைவரைக் கோயிலில் சிவலிங்கத்திற்கு வலப்பக்கம் உள்ளது. இந்தத் தெய்வத்தின் பெயர் இலகுலீசர் என்று எழுதி வைக்கப் பெற்றுள்ளது. சிவலிங்கத்திற்கு வலப்பக்கம் பிள்ளையார் உள்ளார்.
குலிசம் என்றால் எலும்பினால் செய்யப்பெற்ற வச்சிராயுதம் என்று பொருள். இதற்குத் தமிழில் சான்றுகள் நிறைய உள்ளன. (குலிசத் தமரர்கோன் = இந்திரன் - கம்பராமாயணம்). இலக்கியச் சான்றுகள் கீழே இணைக்கப் பெற்றுள்ளன.
தண்டம் வேறு, குலிசம் வேறு.
தண்டாயுதம் வேறு, குலிச ஆயுதம் வேறு.
குலிசம் என்பது வச்சிராயுதம் ஆகும். இது முனிவரால் இந்திரனுக்கு வழங்கப் பெற்ற ஆயுதம் ஆகும்.
அரிட்டாபட்டியில் குடவரைக்கோயிலில் சிவலிங்கத்திற்கு இடப்பக்கம் உள்ளவர் பிள்ளையார். வலப்பக்கம் உள்ளவர் தண்டபாணித் தெய்வம் ஆவர். இவர் பெயர் இலகுலீசர் அல்ல. குலீசர் என்பது குலிசம் (வச்சிராயுதம் ஏந்திய) இந்திரனைக் குறிக்கும்.
தண்டபாணித் தெய்வத்தை வணங்குதல் செய்வோம். தண்டனைகள் இல்லா வாழ்க்கை பெறுவோம்.
அன்பன்
-----------------------------------------------------------------------------------------
கடு மொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
(பொருள் - மிக்க சினத்தையுடைய சிங்கத்தை ஒத்த உக்கிரவழுதி, கையிலுள்ள திகிரிப்படையைச் சுழற்றி விரைந்து வீசினன்; அப்படையானது வச்சிரப் (குலிசம்) படையை அழித்து, குலிசம் படையை விடுத்தவனாகிய இந்திரனது, தலையிலுள்ள ஒளி வீசும் நல்ல முடியைக் கீழே வீழ்த்தி அழித்தது;
(பொருள் - நிலத்திலே குதித்து, வலியினைக் கண்டு பன்றியரசனை மதித்து, கையிலுள்ள இருப்பு உலக்கையாலே தலையில் அடித்தான்; அந்தப் புண்ணினின்று பொழியும் குருதியாறு புவியை மூட, சூரிய மண்டலத்தைக் கிழித்து விமான மீதேறி விண்ணுலகடைந்தனன். )
(பொருள் - இரும்பாற் செய்த தண்டத்தை, விரைந்து ஓங்கி, போர் புரியும் பெண் பன்றியின் தலையில் அடித்து இறந்தனன்; அவ்விருவரும், விமானத்திலேறி, வீரசுவர்க்கத்துக்கு விருந்தினராகச் சென்றனர்.)
(பொருள் - முண்டிதம் செய்த தலையினை உடையராய், முறுக்கிய உறியில் தொங்கும் கமண்டலத்தை உடைய பெரிய கையினை உடையராய், கோவணங்கட்டிய கோலினைத் தாங்கிய பிடரினை உடையராய், சிவன் பெயரை நாவிற்கொண்டு கூறுபவராய்ப் பலர், எங்கும் உலாவுதலைப் பார்த்தேம்.)
Tuesday, 28 April 2020
திருவிளையாடல் புராணத்தில் வேதியர்
100.
சீத வேரி உண்டு அளி முரல் கமலம்மேல் செருந்தி
போத வேரியும் மலர்களும் சொரிவன புத்தேள்
வேத வேதியர் செம் கரம் விரித்து வாய் மனுக்கள்
ஓத வேமமும் அதகமும் உதவுவார் அனைய.
828.
கன்னியர்க்கு அரசு ஆயினாள் கடிமனை புகுந்த
மின் இயல் கடை மாதவர் வேதியர் ஏனோர்
எந் நிலத்து உள மன்னவர் யாவர்க்கும் முறையே
பொன் இயல் கலத்து அறு சுவைப் போனகம் அருத்தா.
908.
துங்கக் கலை வேதியர் தொல் மறை நூல்
சங்கற்ப விதிப்படி தன் துணைக்கை
அம் கைத் தளிர் பற்றி அகத்து உவகை
பொங்கப் புணரிப் புனல் ஆடினளே.
1073.
ஆதி இவ் இலிங்கம் தீண்டல் அருகர் அல்லாத வேத
வேதியர் முதலோர் இட்ட இலிங்கத்து இவ்விதியால் அர்ச்சித்து
ஓதிய விரதம் நோற்க அர்ச்சனைக்கு உரியர் அல்லாச்
சாதியர் பொருள் நேர்ந்து ஆதி சைவரால் பூசை செய்தல்.
1078.
புலர்ந்த பின் நித்த வினை முடித்து அரம்பை பொதுளும் பாசிலை பதின் மூன்றின்
நலம் தரு தூ வெள்ளரிசி பெய்து இனிய நறிய காய் கறியொடு பரப்பி
அலந்தர வான் பால் நிறை குடம் பதின் மூன்று அரிசி மேல் வைத்தான் அடியில்
கலந்த அன்பினராய்ச் சிவாஅர்ச் சனைக்கு உரிய கடவுள் வேதியர் களை வரித்து.
1157.
வந்த வேதியனை இருந்த வேதியர்கள் வர எதிர்ந்து இறைஞ்சி வேறு இருக்கை
தந்த வேலையில் அம் மறையவன் முனிவர் தமை முகம் நோக்கி ஈது உரைப்பான்
பந்த வேதனை சாலவா வெறுப்பு இகந்த பண்பினன் ஆயினிர் நீவிர்
சிந்தை வேறு ஆகி முகம் புலர்ந்து இருக்கும் செய்தி யாது என அவர் சொல்வார்.
1353.
சித்த யோகிகள் செய்கின்ற ஆடல் மேல் செலுத்தி
வைத்த கண்களும் சிந்தையும் வாங்கலர் திகைத்துத்
தந்த மாள் வினைத் தொழில் மறந்து இருந்தனர் தகைசால்
முத்த வேதியர் ஆதிய முதுநகர் மாக்கள்.
1449.
இல் பூட்டிப் போயினர் எமரங்கள் எனக் கௌரி இயம்ப மேரு
வில் பூட்டிப் புரம் பொடித்த வேதியர் நின் கை தொட்டு விடு முன் யாத்த
கொல் பூட்டு விடும் திறந்து கடிது அடிசில் சமைத்து இடுதி எனக் குமரி தாளில்
அல் பூட்டு மடவாலும் அவ்வாறே அட்டில் புகுந்து அடிசில் ஆக்கி.
2005.
முக்கண் நாயகன் பொருட்டு என வேள்விகள் முடித்துத்
தொக்க வேதியர் இவர் புனல் சாலை இத் தொடக்கத்
தக்க பேர் அறம் புகழ் பயன் தமை நன்கு மதிக்கும்
பொக்க மாறிய நிராசையால் புரிந்தவர் இவர் காண்.
2757.
அண்ணல் வேதியர் ஒழுக்கமும் அன்பும் கண்டு யாக்கை
உள் நிலா உயிர் பொருள் புனலுடன் கவர்ந்து உள்ளக்
கண் இலான் மலம் கழீஇப் பத கமலமும் சூட்டி
வண்ண மாமலர்ச் செம்கரம் சென்னி மேல் வையா.
2861.
ஒல்லையில் அது மன்னற்கு உரையுமின் என மேரு
வில்லவன் அருள் பெற்ற வேதியர் பெருமான் போய்ச்
செல்லது தளை இட்ட திரு மகன் அருகு எய்தி
மல் அணி திணி தோளாய் வருவன பரி என்றார்.
2927.
நெருங்கு தூரிய முழக்கமும் தானையும் நிமிர
மருங்கு இலாதவர் வந்து எதிர் மங்கலம் ஏந்த
அரம் கொல் வேலினான் அருளிய வரிசை யோடு அணைந்து
புரம் கொல் வேதியர்க்கு அன்பர் தம் திரு மனை புகுந்தார்.
2970.
கண்ணும் இடும் கவசமும் போல் காரியம் செய்து ஒழுகியதும் காலம் பார்த்து எம்
எண்ணரிய நிதி ஈட்டம் கவர்வதற்கோ நின் அமைச்சின் இயற்கை நன்று ஆல்
புண்ணிய வேதியர் மரபில் பிறந்தன என்று ஒரு பெருமை பூண்டாயே நீ
பண்ணிய காரியம் பழுது பிறரால் தண்டிக்கப் படுவர் என்றான்.
2976.
என்று ஏறிய புகழ் வேதியர் இரங்கும் துதி செவியில்
சென்று ஏறலும் விடை ஏறு சுந்தரன் மற்று இவர் செயலை
மன்று ஏறவும் முடிமேல் நதி மண் ஏறவும் முதியாள்
அன்று ஏறிய தேரோடும் விண் அடைந்து ஏறவும் நினைந்தான்.
3243.
இன்னமும் பல் நாள் எம்மை இடம் தொறும் பாடி எஞ்சும்
புன் நெறி ஒழுகுவாரை வென்று நம் புனித வீடு
பின்னர் நீ பெறுதி என்னா ஏடு தந்து ஆசி பேசி
மின் என மறைந்து நின்றார் வேதியர் ஆய வேடர்.
3255.
ஆதி ஆலயத்து அடலை கொண்டு ஆழி சூழ் காழிச்
சோதி வேதியர் பாண்டியன் சுரம் தணித்து உடலில்
பேதியாத கூன் நிமிர்த்தலால் பிறங்கு கற்பாதிப்
பூதி யாவினும் சிறந்தது அவ் வட்டில் வாய்ப் பூதி.
நன்றி - http://www.tamilvu.org/ta/library-l41d0-html-l41d0ind-139511
பாடல் தொகுப்பு
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஆராய்ச்சி அமைப்பாளர்
திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம்
திருவிளையாடல் புராணத்தில் வேதியன்
விண்ணவர் தம்மின் மேலாம் வேதியன் ஆகி நின்ற
பண்ணவன் தான் அந்நீரில் படிந்து தன்ன உச்சையாலே
அண்ணல் அம் கணத்தி நோரை மூழ்கு வித்து அனாதி ஆய
புண்ணிய விலிங்கம் தன்னுள் புகுந்து இனிது இருந்தான் மன்னோ.
776.
விண் தலத்து அவருள் ஆதி வேதியன் பாத தீர்த்தம்
முண்டகத் அவனும் மாலும் முனிவரும் புரந்தர் ஆதி
அண்டரும் நந்திதேவு அடுகணத்தவரும் ஏனைத்
தொண்டரும் புறம்பும் உள்ளும் நனைத்தனர் சுத்தி செய்தார்.
856.
அனையன் ஆகியும் நீர் நசை ஆற்றலன் வருந்தும்
வினையன் ஆகி வானதிச் சடை வேதியன் பாதத்து
இனைய நாதனும் தன் திரு முடியின் மீது இருக்கும்
நனைய நாள் மலர் ஓதியைப் பார்த்து ஒன்று நவில் வான்.
1156.
பிரணவம் உதித்தது அதன் இடை வேதம் பிறந்தன நைமி சாரணியத்து
அருள் நிறை முனிவர் கண்ணுவர் கருக்கர் ஆதியோர் அதிகரித்து அவற்றின்
பொருள் நிலை தெரியாது உள்ளமும் முகமும் புலர்ந்தனர் இருப்பவர் போதத்
இருள் மல வலி வென்றவன் அரபத்தன் என்று ஒரு வேதியன் வந்தான்.
1424.
மாதங்கம் தடிந்து தட்டாலை மண்டபத்து இருந்த வீரன்
பாதங்கள் கையால் பற்ரிப் பாண்டியன் இரந்து வேண்டிப்
போதங்கள் கடந்தாய் என்றும் பொலிய இங்கு இருத்தி என்ன
வேதங்கள் அருத்தம் சொன்ன வேதியன் அதற்கு நேர்ந்தான்.
1435.
பிச்சை வேண்டினான் அவற்குத் தன் பெண்ணினைக் கொடுப்பான்
இச்சை கூர்ந்து அரும் தவத்தினால் வருந்தி ஈன்று எடுத்த
விச்சை வேதியன் மனையொடு சுற்றமும் வினவாது
அச்சம் இன்றி நீர் எடுத்து அவன் அங்கையில் பெய்தான்.
1462.
வேந்தன் மீன வண் கொடியவன் ஆகிய விக்கிரமன் தன் தோள்
வந்து மண் பொறை இராச சேகரன் புயத்து இறக்கி ஐந்தரு நாடன்
பூம் தண் மா மலர் வேதியன் மாதவன் புரத்தின் மேல் பொலிந்து ஓங்கும்
சாந்த நீறு எனக் கண்ணித்த புண்ணியத் தனி முதல் நகர் சார்ந்தான்.
1508.
வாயில் உளார் தம் மன்னவன் முன் போய் மன்னா நம்
கோயிலின் மாடு ஓர் வேதியன் மாதைக் கொலை செய்தான்
ஆயினன் என்று ஓர் வேடனை முன் விட்டு அவிந்தாளைத்
ஆயினன் வந்து இங்கு இட்டு அயர் கின்றான் தமியன் என்றார்.
1510.
வேதியன் நிற்கும் தன்மை தெரிந்தான் மெலிவு உற்றான்
சாதியின் மிக்காய் வந்தது உனக்கு என் தளர் கின்றாய்
ஓதுதி என்னக் காவலனைப் பார்த்து உரை சான்ற
நீதி உளாய் கேள் என்று உரை செய்வான் நிகழ் செய்தி.
1536.
வெருவும் காய் சின மாறிய வேதியன்
மருவும் காதல் மனை எனும் பேரினாள்
திருவும் காமன் நல் தேவியும் மண் புனை
உருவும் காமுறு ஒப்புஇல் வனப்பினாள்.
1574.
அழிந்த வேதியன் மா பாதகம் தீர்த்தது அறிந்து வேந்து அமைச்சர் ஊர் உள்ளார்
ஒழிந்த பார் உள்ளார் வான் உளார் வியப்பம் உற்று நல் உரை உணர்வு எல்லாம்
கழிந்த பேர் அருளிக் கயவன் மேல் வைத்த காரணம் யாது எனக் கண்ணீர்
வழிந்து நான் மாடக் கூடல் நாயகனை வழுத்தினார் மகிழ்ச்சியுள் திளைத்தார்.
1575.
வேதகம் தரத்து முக்கண் வேதியன் மறையோன் செய்த
பாதகம் தவிர்த்தவாறு பகர்ந்தனம் விஞ்சை ஈந்த
போதகன் மனைக்குத் தீங்கு புந்தி முன்னாகச் செய்த
சாதகன் தனைப் போர் ஆற்றித் தண்டித்த தண்டம் சொல்வாம்.
1975.
விழி ஆயிரத் தோன் பழி தீர்த்தனை வேதியன் தன்
கழியாத மாபாதகம் தீர்த்தனை கௌவைக் கங்கைச்
சுழி ஆறு அலைக்கும் சடையாய் எனைத் தொட்டு அலைக்கும்
பழியான் அதுந் தீர்த்து அருள் என்று பணிந்து வீழ்ந்தான்.
2333.
வெள்ளநீர் வறப்ப ஆதி வேதியன் ஞாலம் முன்போல்
உள்ளவாறு உதிப்ப நல்கி உம்பரோடு இம்பர் ஏனைப்
புள்ளொடு விலங்கு நல்கிக் கதிர் உடல் புத்தேள் மூவர்
தள்ளரு மரபின் முன் போல் தமிழ் வேந்தர் தமையும் தந்தான்.
2524.
உணர்ந்த கேள்வியார் இரரோடு ஒல்லை போய்ப்
புணர்ந்த ஆயிரம் பொன்னும் இன் தமிழ்
கொணர்ந்த வேதியன் கொள்க இன்று என
மணந்த தாரினான் மகிழ்ந்து நல்கினான்.
2649.
மின் திரித்து அன்ன வேணி வேதியன் இடைக்காடன் பின்
சென்று மீண்டனை யான் கொண்ட பிணக்கினைத் தீர்த்த வண்ணம்
இன்று உரை செய்து முந்நீர் எறிவலை வீசி ஞாழன்
மன்றல் அம் குழலினாளை மணந்து மீள் வண்ணம் சொல்வாம்.
3121.
வேதியன் ஒருவன் கண்டி வேடமும் பூண்டோன் மெய்யில்
பூதியன் புண்டரிக புரத்தினும் போந்தோன் கூடல்
ஆதியைப் பணிவான் வந்தான் மங்கையர்க்கு அரசியாரும்
நீதிய அமைச்சர் ஏறு நேர்பட அவனை நோக்கா.
நன்றி - தமிழ் இணையப் பல்கலைக்கழகம் - http://www.tamilvu.org/ta/library-l41d0-html-l41d0ind-139511
பாடல் தொகுப்பு
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
ஆராய்ச்சி அமைப்பாளர்,
திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம்