Showing posts with label இந்துஷ்தான். Show all posts
Showing posts with label இந்துஷ்தான். Show all posts

Thursday, 27 June 2019

கம்பராமாயணத்தில் இந்து, இந்து என்றால் என்ன பொருள்?




கம்பராமாயணத்தில் 22 இடங்களில் இந்து என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

இந்து என்றால் என்ன பொருள்?
இந்துஸ்தான் என்றால் என்ன பொருள்?
இந்தியா என்றால் என்ன பொருள்?

இந்து என்றால் திங்கள், சந்திரன் என்று பொருள்.
சிவனது முக்கண்ணில் ஒன்று சூரியனாகவும், மற்றொன்று சந்திரனாகவும், மூன்றாவதான நெற்றிக்கண் தீயாகவும் (அக்னியாகவும்) கூறப்படுகிறது.  சோழர்கள் சூரியவம்சம் என்றும், பாண்டியர்கள் சந்திரவம்சம் என்றும், சேரர்கள் அக்னி வம்சம் என்றும் சிவபெருமானது அம்சங்களாக அவதரித்துத் தேசம் ஆண்டு வந்துள்ளனர்.

சந்திரனின் அம்சமான பாண்டியர்கள் பாரததேசத்தை முழுமையையும் ஆண்ட காரணத்தினால் இந்தப் பாரதநாட்டிற்கு இந்துதேசம் (இந்துஸ்தான்) என்று பெயர்.   இந்தியாவின் பண்டைய பெயர் இந்துஸ்தான் என்பதாகும்.  இந்தியாவிற்கு அருகே, பாக்கிஸ்தான் கிர்கிஸ்தான் கசகஸ்தான் அசர்பைஸ்தான் துர்க்மெனிஸ்தான் ஆப்கானிஸ்தான் உஷ்பெக்கிஸ்தான் பலுக்கிஸ்தான்  என்று பெயரில் நாடுகள் உள்ளன.  "ஸ்தானம்" என்றால் வடமொழியில் இடம் என்று பொருள். "ஸ்தான்" என்ற சொல் நாட்டைக் குறிக்கிறது.  பாக்கிசுத்தான் முதலான நாடுகளுக்கு அந்தப் பழைய பெயர்களே நிலைபெற்றுள்ளன.  ஆனால் இந்துதேசம் என்ற இந்துஸ்தானை மட்டும் இந்தியா என்ற தவறான பொருளற்ற பெயரில் வழங்கி வருகின்றனர். 

முத்தமிழ் ஆராய்ந்து தமிழ்வளர்த்த பண்டைய பாண்டியரின் தேசமே பாரததேசமாகும்.  இந்து (சந்திரன்) வம்சத்தினரான பாண்டியர் ஆண்ட காரணத்தினால் பாரததேசத்திற்கு இந்துஸ்தான் என்று பெயர்.
சிந்து நதியை அடுத்து இந்துஸ்தான் இருந்த காரணத்தினால் சிந்துநதிக்கு அப்பால் உள்ள இந்துஸ்தான் மக்களை இந்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியா என்ற சொல் பொருளற்றது.  இந்துஸ்தான் என்ற சொல்லே பொருளுடையது.

இந்தியா என்றால் இந்துஸ்தான்.
இந்து என்றால் சந்திரன்.
இந்துஸ்தான் என்றால் சந்திரகுலத்தவரான பாண்டியர்களது தேசம் என்று பொருள்.
இந்துக்கள் என்றால் இந்துஸ்தானை ஆண்ட சந்திரகுலத்தவரான பாண்டியர் என்று பொருள்.

கம்பராமாயணத்தில் 
இந்து என்ற சொல் இடம் பெற்றுள்ள 
பாடல் வரிகள் (22)


எங்கு நின்று எழுந்தது இந்த இந்து வந்து என் நெஞ்சு உலா - பால:13 51/1
இடை உறு திரு என இந்து நந்தினான் - பால:19 67/2
இணை நெடும் கண் ஓர் இந்து_முகத்தி பூ - பால:21 29/1
எஞ்சல்_இல் பொன் போர்த்து அன்ன இளவலும் இந்து என்பான் - அயோ:6 4/2
இந்து_மோலி அன்னானும் இரங்கினான் - அயோ:14 1/3
இந்து சூரியரை ஒத்து இருவரும் பொலியவே - ஆரண்:1 36/4
இந்து நன்_நுதல்-தன்னொடும் ஏகினார் - ஆரண்:3 26/4
இந்து காந்தத்தின் ஈர நெடும் கலும் - ஆரண்:6 73/3
இந்து நோக்கிய நுதலியை காத்து அயல் இருண்ட - ஆரண்:6 83/3
அயிர் உற கலந்த தீம் பாலாழி-நின்று ஆழி இந்து  செயிர் உற்ற அரசன் ஆண்டு ஓர் தேய்வு வந்துற்ற போழ்தில் - ஆரண்:10 107/1,2
ஒப்பு உடை இந்து என்று உதித்த ஊழி தீ - ஆரண்:14 99/2
இந்து வான் உந்துவான் எரி கதிரினான் என - கிட்:1 38/4
இந்து வான் ஓடலான் இறைவன் மா மௌலி போல் - கிட்:14 3/3
இந்து_நுதல் நின்னொடு இவண் எய்தி இகல் வீரன் - சுந்:5 9/1
இந்து ஆர் எயிறுகள் இறுவித்தார் சிலர் எரி போல் குஞ்சியை இருள்வித்தார் - சுந்:10 41/4
இந்து வெண்குடை நீழலில் தாரகை இனம் பூண்டு - சுந்:12 42/3
இந்து அன்ன நுதல் பேதை இருந்தாள் நீங்கா இடர் கொடியேன் - யுத்1:1 8/1
இந்து விண் நின்று இழிந்துளதாம் என - யுத்1:14 42/3
இந்து வெள் எயிறு இமைத்திட குருதி யாறு ஒழுக்கல் கொண்டு எழு செக்கர் - யுத்2:16 342/2
என்றுதான் அடியனேனுக்கு இரங்குவது இந்து என்பான் - யுத்2:17 9/1
இந்து வெள் எயிற்று அரக்கரும் யானையும் தேரும் - யுத்3:22 110/2
இந்து மண்டிலத்தின்-மேல் இரவி மண்டிலம் - யுத்4:37 61/3
நன்றி = http://tamilconcordance.in/KAMBANconc-1-i1.html#இந்து

பாக்கிஸ்தான் கிர்கிஸ்தான் கசகஸ்தான் அசர்பைஸ்தான் துர்க்மெனிஸ்தான் ஆப்கானிஸ்தான் உஷ்பெக்கிஸ்தான் பலுக்கிஸ்தான்  என்ற நாடுகளின் பெயர்கள் எல்லாம் அப்படியே பழைமை மாறாமல் இருக்க, இந்துஸ்தான் என்ற பெயரை மட்டும் இந்தியா என்று ஏன் மாற்றி வைத்தார்கள் என்று இப்போது புரிகிறதா?

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்




Wednesday, 26 June 2019

இந்து என்றால் ?

இந்து என்றால் ?




“இந்து என்றொரு மதமே கிடையாது.   துப்பாக்கி முனையில் நம் தேசத்தை ஆண்டு வெள்ளைக்காரனே இந்து மதத்திற்கு இந்து என்ற பெயரை வைத்தான்” என்று சிலர் சொல்லியும் எழுதியும் வருகின்றனர்.

இந்து, இந்துகள், இந்துஸ்தான் என்றால் என்ன பொருள்?
இந்து என்றால் சந்திரன் என்று பொருள்.

சிவனது ஒரு கண் சூரியன் ஆகும்,
சிவனது மறு கண் சந்திரன் ஆகும்,
சிவனது நெற்றிக்கண் அக்னி ஆகும்.

வாளொடு முன்தோன்றிய மூத்த குடியினாகிய தமிழர்கள் மொழியால் ஒருதாய் மக்களாக வாழ்ந்தாலும்,  சோழர்கள் தங்களைச் சூரியகுலத்தவர்  என்றும், பாண்டியர்கள் தங்களைச் சந்திரகுலத்தவர் வம்சத்தினர் என்றும், சேரர்கள் தங்களை அக்னி வம்சத்தினர் என்றும் கூறிவந்துள்ளனர்.
இந்து என்றால் சந்திரன் என்று பொருள்.
இந்துக்கள் என்றால் சந்திரகுலத்தவர் (பாண்டியர்) என்று பொருள்.


இந்துஸ்தான் என்றால்  பாண்டியநாடு அல்லது பாண்டிநாடு அல்லது (திருதராஷ்டிரனின் தம்பியும், விதுரனின் அண்ணனுமான பாண்டுவின்நாடு) பாண்டுநாடு என்று பொருள்.
--------------------------------------------

இந்திரன் இந்துராணி என்ற பெயர்கள் தேவர்களின் தலைவனையும் தலைவியையும் குறிக்கின்றன..
இந்திரன் என்ற சொல் சங்கத் தமிழ்ப்பாடல்களில் உள்ளன.
இந்திர விழவின் பூவின் அன்ன - ஐங் 62/1
உண்டால் அம்ம இ உலகம் இந்திரர்/அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது என - புறம் 182/1,2
ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உரும் என - பரி 8/33
இந்திரன் பூசை இவள் அகலிகை இவன் - பரி 19/50

இந்திரன் ஆடும் தகைத்து - பரி 24/97

“ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி” (திருக்குறள் 25)

இந்திர தானம் பெறினும் இகழாரே - ஆசாரக் 34/3
இந்திரன் போல் வந்தான் இடத்து - திணை150:5 145/4
இந்திரனா எண்ணிவிடும் - நாலடி:35 6/4

இந்து என்ற சொல்  உள்ள தமிழ்ப் பாடல்கள்.
இந்தின் கரு வண்ணம் கொண்டன்று எழில் வானம் - கார்40 40/3
இந்து உருவின் மாந்தி இரும் கொண்மூ முந்து உருவின் - திணை150:3 104/2
"இந்து வார்சடை எம்மிறையே"- திருஞான சம்மந்தர்.
இந்து சூரியனை ஒத்து இருவரும் பொலியவே "- கம்பராமாயணம்.
"செக்கர்அத் தீயவன் வாயில் தீர்ந்து ; உக்கவான்  தனிஎயிறு  ஒத்த இந்து" -மூவருலா
"பொன்துவரை இந்துமரபில் இருக்கும் திருக்குலத்தில் வந்து மனுக்குலத்தை வாழ்வித்த"-மூவருலா.
--------------------------------------------------------------

பண் :காந்தார பஞ்சமம்
பாடல் எண் : 4
பூசு ரர்தொழு தேத்திய பூந்தராய்
ஈசன் சேவடி யேத்தி யிறைஞ்சிடச்
சிந்தை நோயவை தீர நல்கிடும்
இந்து வார்சடை யெம்இ றையே.

பொழிப்புரை :
இப்பூவுலகில் தேவர்கள் போன்று பெருமையாகக் கருதப்படுகின்ற அந்தணர்கள் வணங்கிப் போற்றும் திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனின் செம்மை வாய்ந்த திருவடிகளைத் துதித்து இறைஞ்சிடச் சந்திரனை அணிந்த நீண்ட சடைகளையுடைய இறைவன் நம் மனக்கவலைகளைப் போக்கி அருள்புரிவான் . ` தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது ` ( குறள் - 7) என்ற வள்ளுவர் வாக்கு இங்கு நினைவு கூர்தற்குரியது .
நன்றி = sivam.org
---------------------------------------------------
கம்பராமாயணத்தில் இந்து என்ற சொல் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் (22)
எங்கு நின்று எழுந்தது இந்த இந்து வந்து என் நெஞ்சு உலா - பால:13 51/1
இடை உறு திரு என இந்து நந்தினான் - பால:19 67/2
இணை நெடும் கண் ஓர் இந்து_முகத்தி பூ - பால:21 29/1
எஞ்சல்_இல் பொன் போர்த்து அன்ன இளவலும் இந்து என்பான் - அயோ:6 4/2
இந்து_மோலி அன்னானும் இரங்கினான் - அயோ:14 1/3
இந்து சூரியரை ஒத்து இருவரும் பொலியவே - ஆரண்:1 36/4
இந்து நன்_நுதல்-தன்னொடும் ஏகினார் - ஆரண்:3 26/4
இந்து காந்தத்தின் ஈர நெடும் கலும் - ஆரண்:6 73/3
இந்து நோக்கிய நுதலியை காத்து அயல் இருண்ட - ஆரண்:6 83/3
அயிர் உற கலந்த தீம் பாலாழி-நின்று ஆழி இந்து
  செயிர் உற்ற அரசன் ஆண்டு ஓர் தேய்வு வந்துற்ற போழ்தில் - ஆரண்:10 107/1,2
ஒப்பு உடை இந்து என்று உதித்த ஊழி தீ - ஆரண்:14 99/2
இந்து வான் உந்துவான் எரி கதிரினான் என - கிட்:1 38/4
இந்து வான் ஓடலான் இறைவன் மா மௌலி போல் - கிட்:14 3/3
இந்து_நுதல் நின்னொடு இவண் எய்தி இகல் வீரன் - சுந்:5 9/1
இந்து ஆர் எயிறுகள் இறுவித்தார் சிலர் எரி போல் குஞ்சியை இருள்வித்தார் - சுந்:10 41/4
இந்து வெண்குடை நீழலில் தாரகை இனம் பூண்டு - சுந்:12 42/3
இந்து அன்ன நுதல் பேதை இருந்தாள் நீங்கா இடர் கொடியேன் - யுத்1:1 8/1
இந்து விண் நின்று இழிந்துளதாம் என - யுத்1:14 42/3
இந்து வெள் எயிறு இமைத்திட குருதி யாறு ஒழுக்கல் கொண்டு எழு செக்கர் - யுத்2:16 342/2
என்றுதான் அடியனேனுக்கு இரங்குவது இந்து என்பான் - யுத்2:17 9/1
இந்து வெள் எயிற்று அரக்கரும் யானையும் தேரும் - யுத்3:22 110/2
இந்து மண்டிலத்தின்-மேல் இரவி மண்டிலம் - யுத்4:37 61/3

நன்றி - இந்து, இந்திரன் சொற்கள் அடங்கிய பாடல் தொகுப்பு = http://tamilconcordance.in/

------------------------------------------------
நண்பர் திரு. கிருஷ்ணகுமார் அவர்களின் பதில் இது-

Krishna Kumar தொல்தமிழ் நூற்கள் வாயிலாக ஹிந்துஸ்தானத்திற்கு பொருள் புரிந்து கொள்ள நல்ல முயற்சி காசிஸ்ரீ காளைராஜன் ஐயா
हिमालयं समारभ्य यावातू इंदु सरोवरं
तं देवनिर्मितं देशं हिन्दुस्तनम प्रचक्षते
ஹிமாலயம் ஸமாரப்ய யாவத் இந்து ஸரோவரம்
தம் தேவநிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷதே
இமய மலையிலிருந்து ஹிந்து மஹா சமுத்திரத்திற்கு இடைப்பட்டதான தேவர்களால் நிர்மாணிக்கப்பட்ட நிலப்பரப்பு ஹிந்துஸ்தானம் என்று சொல்லப்படுகிறது என ப்ருஹன்நாரதீய புராணம் சொல்லுகிறது.
சிந்து நதிக்குக் கீழ் இருக்கும் நிலப்பரப்பை ஹிந்த் என்றே அராபிய பார்ஸியர்களும் அழைத்தனர். இச்சொல்பயன்பாடு BCE 500க்கு முன்னாலிருந்தே அராபிய பார்ஸியர்களால் கையாளப்பட்டுள்ளது.
பரங்கிக் கும்பினியர் இந்த நாட்டை ஹிந்துஸ்தானம் என்று சுட்டுவதற்கு முன்னரேயே இந்த நிலப்பரப்பை ஆக்ரமித்த அராபிய பெர்ஷியர்கள் சிந்து நதிக்கு கீழ் இருக்கும் நிலப்பரப்பை ஹிந்த் என்று குறிப்பிடுகின்றனர்.
ஹிந்துஸ்தானம் எனும் இந்த நிலப்பரப்பில் வாழும் மக்கள் அனைவரும் ஹிந்துக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
இங்கு வசிக்கும் இஸ்லாமிய க்றைஸ்தவர்களும் ஹிந்துக்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.
ஹிந்துஸ்தானத்திலிருந்து அரேபிய ஹஜ் யாத்திரை செல்லும் இஸ்லாமிய சஹோதரர்களை அரேபியாவில் ஹிந்தி / ஹிந்துக்கள் என்றே அழக்கின்றனர்.
நாட்டின் சட்டங்கள் முஸ்லீம், க்றைஸ்தவ, யஹூதி, பார்ஸி மதங்களை ஒழுகும் சஹோதரர்களல்லாத அனைத்து சமயங்களை ஒழுகும் சஹோதரர்களை ஹிந்துக்கள் என்றே சுட்டுகிறது.
----------------------------------
हिमालयं समारभ्य यावातू इंदु सरोवरं
तं देवनिर्मितं देशं हिन्दुस्तनम प्रचक्षते
ஹிமாலயம் ஸமாரப்ய யாவத் இந்து ஸரோவரம்
தம் தேவநிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷதே

இந்த சுலோகத்தில் சமுத்திரத்திற்கு “இந்து” என்ற பெயர் வருகிறது.
தேசத்தின் பெயரைக் குறிப்பிடும்போது ஹிந்து வருகிறது.
-------------------------------------------

Friday, 25 January 2019

இந்துஸ்தான் என்றால் பாண்டியநாடு என்று பொருள்


இந்துஸ்தான்
பாண்டியநாடு என்று பொருள்


இந்தியாவின் பண்டைய பெயர் இந்துஸ்தான் என்பதாகும்.  இந்தியாவிற்கு அருகே, பாக்கிஸ்தான் கிர்கிஸ்தான் கசகஸ்தான் அசர்பைஸ்தான் துர்க்மெனிஸ்தான் ஆப்கானிஸ்தான் உஷ்பெக்கிஸ்தான் பலுக்கிஸ்தான்  என்று பெயரில் நாடுகள் உள்ளன.  "ஸ்தானம்" என்றால் வடமொழியில் இடம் என்று பொருள். "ஸ்தான்" என்ற சொல் நாட்டைக் குறிக்கிறது.
இந்து என்றால் சந்திரன்,  இந்துஸ்தான் என்றால் சந்திரர் தேசம், பாண்டியர் நாடு என்று பொருள்.  சந்திர வம்சத்திரரான பாண்டியர்கள், வடக்கே இமயமலையை எல்லையாகவும், தெற்கே குமரியை எல்லையாகவும் கொண்டு பாரததேசம் முழுவதையும் பலகாலம் ஆண்டுள்ளனர்.   இதற்கு ஏராளமான சங்க இலக்கியச் சான்றுகள் உள்ளன.  
சேரர்கள் அக்னி வம்சத்தினர், சோழர்கள் சூரிய வம்சத்தினர், பாண்டியர்கள் சந்திர வம்சத்தினர் என்கிறது திருவிளையாடல் புராணம்.   பரஞ்சோதி முனிவர் தமிழில் மொழிபெயர்த்துப் பாடியுள்ள திருவிளையாடல் புராணத்தில் இந்து என்ற சொல் இடம் பெற்றுள்ள பல பாடல்கள் உள்ளன.  இந்து என்றால் சந்திரன் என்று நாவலர், பண்டித . மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரை யெழுதியுள்ளார்கள்.
இந்து என்றால் சந்திரன் என்பதையும், இந்துஸ்தான் என்றால் பண்டைத் தமிழப் பாண்டியர்களது நாடு என்பதை அறிவோம்.   பண்டைய பாரதத்தைத் தமிழர் அரசாண்டது போன்று இன்றைய இந்தியாவைத் தமிழர் ஆள வேண்டும்.

திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழியில் " இந்து வார்சடை யீசனைப் பயந்தநான் முகனைத்தன் னெழிலாரும் " என்பார். 
தேவார பதிகத்திலும் ' இந்து வார்சடை யெம்மி றையே ' என்பார் திருஞான சம்மந்தர்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்


திருவிளையாடல் புராணத்தில்
'இந்து' என்ற சொல் உள்ள பாடல்களின் தொகுப்பு

திருவிளையாடல் புராணம் பாடல் எண் 212

அந்த வேலையி லச்சிவ தீர்த்தத்தில்
வந்து மூழ்கியம் மண்டபத் தேறியே
சந்தி யாதி தவமுடித் தீறிலா
இந்து சேகரன் றாணினைந் தேத்தியே.
   
இந்தப் பாடலுக்கு,
நாவலர், பண்டிதர், . மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரை
அந்த வேலையில் - அப்பொழுதில்,
அச்சிவ தீர்த்தத்தில் வந்து மூழ்கி - வந்து அத் தீர்த்தத்தின்கண் நீராடி,
அம்மண்டபத்து ஏறியே - அந்தமண்டபத்திலேறி,
சந்தி ஆதி தவம் முடித்து - சந்தியா வந்தனம் முதலிய தவங்களை முடித்து, (சந்தியிற் செய்யப்படுவதனைச் சந்தி யென்றார், தவம் - செய்கடன்)
ஈறு இலா இந்து சேகரன் - அழிவில்லாத சந்திர சேகரனாகிய இறைவனுடைய,
தாள் நினைந்து ஏத்தி - திருவடிகளைத் தியானித்துத் துதித்து

285.       
பொரு அரிய தகர்த் திங்கள் துலாத் திங்கள் இவை உதிக்கும் போது மூழ்கின்
ஒரு பதினாயிர மடங்காம் சுறவு கவைத் தாள் அலவ உதிப்பின் மூழ்கின்
இருபதினாயிர மடங்காம் இந்து ரவியிடத்து ஒடுங்கு இந்து வாரம்
வருவது அறிந்து ஆடி மனு ஓதல் செயின் அனந்த மடங்கு உண்டாகும்.             
  
300.       
மனிதரில் உயர்ந்தோர் ஆதி மறையவர் தேவர் தம்மில்
பனிதரு திங்கள் வேணிப் பகவனே உயர்ந்தோள் வேட்டோர்க்கு
இனிது அருள் விரதம் தம்முள் அதிகம் ஆம் இந்து வாரம்
புனித மந்திரங்கள் தம்முள் போத ஐந்து எழுத்து மேலாம்.

542.       
மகவு இன்றிப் பல பகல்யான் வருந்தி அரும் தவம் புரிந்தேன் மைந்தன் பேறு
தக இந்த மகம் செய்தேன் அதுவும் ஒரு பெண் மகவைத் தந்தது அந்தோ
முக இந்து நிலவு ஒழுக வரு பெண்ணு முலை மூன்றாய் முகிழ்த்து மாற்றார்
நக வந்தது என்னேயோ என்று வகை இலனாகி நலியும் எல்லை.            

692.       
விரவு வானவர் நெருக்கு அற ஒதுக்குவான் வேத்திரப் படை ஓச்சி
அரவு வார் சடை நந்தி எம் பிரான் அவர் அணிமணி முடி தாக்கப்
பரவு தூளியில் புதைபடு கயிலை அம் பருப்பதம் பகல் காலும்
இரவி மண்டலத்து ஒடுங்கும் நாள் ஒடுங்கிய இந்து மண்டலம் மானும்.            

932.       
மாசு அறத் துறந்தோர் உள்ளம் ஆன வான் களங்கம் நீங்க
ஈசர் தம் கிழமை என்னும் இந்து ஆதிரை நாள் செய்த
பூசையின் பயன் தான் எய்த எரி பசும் பொன் கோள்வந்து
தேசு ஒடு கேந்திரத்தில் சிறந்த நல் ஓரை வாய்ப்ப.

946.       
இன்னணம் களிப்ப மூதூர் இந்து ஆதிரை நல் நாளில்
பொன்னவன் கேந்திரித்த புனித லக்கினத்தில் போந்த
தென்னவர் பெருமான் சேய்க்குச் சாதகச் செய்தி ஆதி
மன்னவர்க்கு இயன்ற வேத மரபினால் வயங்க ஆற்றி.    

1106.    
இந்து இரண்டு அனைய கூர்அம்பல் இருள் வரை நெஞ்சு போழ்ந்த
மைந்தனின் வலிய காளை வரைந்து எறி நேமி சென்னி
சிந்திடாது ஆகி அம் பொன் மணி முடி சிதறச் சோம
சுந்தர நாதன் பூசைத் தொழில் பயன் அளித்தது என்னா.

1321.    
வந்து நான் மாடம் ஆகி வளைந்து நால் திசையும் சூழ்ந்து
சந்து வாய் தெரியாது ஒன்றித் தாம் ஒரு குடிலாய் மாடப்
பந்தி கோபுரம் செய் குன்றம் கால்கள் போல் பரிப்பப் போர்த்த
இந்து வார் சடையோன் ஏய எழிலிமா நகரம் எங்கும்.       

1789.    
சந்து சூழ் மலயச் சிலம்பர் தவம் புரிந்த இயக்கி மார்க்
அந்த நால் இரு சித்தி தந்தது அறைந்தனன் அடி தொழா
வந்து மீன் வளவன் பொருட்டு வடாது வாயில் திறந்து அழைத்து
இந்து சேகரன் விடை இலச்சினை இட்டவாறு விளம்புவாம்.

1964.    
இய மானன் இந்து ரவி எரி வான் இலஞ்சல் இல எறிகால் எனும் பகுதி இரு நால்
மயமான சுந்தரனை மனம் வாய் மெய் அன்பின் இறை வழிபாடு அடைந்து வர குணனாய்ச்
சய வேளை வென்ற வடிவினன் ஈறு இல் வென்றி பெறு சத வேள்வி இந்திரனை நிகர்வோன்
இயன் மேனி கொண்ட ஒளியினில் ஏழ் பசும் புரவி இனன் தேசு வென்ற வர குணனே.

2130.    
வந்து மதுரைப் பெருமானை வணங்கிக் கொணர்ந்த நிதி எல்லாம்
இந்து மருமான் நகர் உள்ளார் யாவும் அறிய யாவர்க்கும்
முந்தை வேத முதல்வர்க்கும் புலவோர் தமக்கு முறை நல்கிச்
சந்த யாழின் இசைப்பாணர் தருமம் அனையான் வைகினான்.

2453.    
கலையினால் நிறைந்த இந்து காந்த மண்டபத்தும் செய்த
மலையினும் எழுது மாட மருங்கினும் நெருங்கு சோலைத்
தலையினும் கமல வாவித் தடத்தினும் தண் முத்து ஆரம்
முலையினும் அன்றிக் கோடை முடிவிடம் காணார் மைந்தர்.

2691.    
நந்தி நாதனும் இனையனாய் அம் கயல் நாட்டத்து
இந்து வாண் நுதலாளும் அங்கு அனையளாய் இருப்பத்
தந்தி நால் இரண்டு ஏந்திய தபனிய விமானத்து
உந்து நீர்ச் சடையார் மணம் உன்னினார் மன்னோ.

2801.    
சிந்துர நுதன் மால் யானைச் செல்வப் பரிக்கு வேறு
மந்துறை அகன்ற ஆக வகுக்க சூழ் தண்ணீர் ஊட்ட
நந்து உறை தடங்கள் வேறு தொடுக நீள் நகரம் எங்கும்
இந்து உறை மாடம் எல்லாம் அழகு செய்திடுக என்றார்.

படிக்கப்பெற்றது -
Ref: 2
Mukherjee, The Foreign Names of the Indian Subcontinent (1989), p. 46: "They used the name Hindustan for India Intra Gangem or taking the latter expression rather loosely for the Indian subcontinent proper. The term Hindustan, which in the "Naqsh-i-Rustam" inscription of Shapur I denoted India on the lower Indus, and which later gradually began to denote more or less the whole of the subcontinent, was used by some of the European authors concerned as a part of bigger India. Hindustan was of course a well-known name for the subcontinent used in India and outside in medieval times." 

நன்றி -   ‘தமிழ் இணையப் பல்கலைக்கழகம்’ பதிவு செய்துள்ள திருவிளையாடல் புராணப் பாடல்கள் பயன்படுத்தப் பெற்றுள்ளன.  tamilvu.org/library/libindex.htm பதிவுகளுக்கு நன்றி.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
தை 11 (25.01.2019) வெள்ளிக்கிழமை