Showing posts with label tsunami Live commentary. Show all posts
Showing posts with label tsunami Live commentary. Show all posts

Thursday, 27 June 2019

கடல்கோள் (பெருஞ் சுனாமி) வர்ணனை 1312

கடல்கோள் வர்ணனை
(Tsunami description in an ancient Tamil literature)


கடல்கோள் (பெருஞ் சுனாமி) நிகழ்விற்கு முன்னர்  
மலைகள் நடுங்கும்படியாக 
நிலநடுக்கம் உண்டாகுதல்


திருவிளையாடல் புராணம் பாடல் எண் 1313.
ஊழிநாள் வெடிக்கு மண்ட கடாகத்தி னொலிபோ லார்த்துப்
பாழிவா னுருமு வீழப் பணாடவி மணிகள் சிந்தி
ஆழிநீர் ஞாலந் தாங்கு மராவுட னெளியத் திக்கிற்
குழிமால் யானை நின்ற நிலைகெடத் துணுக்கங் கொள்க.


ஊழிநாள் வெடிக்கும் அண்ட கடாகத்தின் ஒலிபோல் ஆர்த்துப்
பாழிவான் உருமு வீழப் பணாடவி மணிகள் சிந்தி
ஆழி நீர் ஞாலம் தாங்கும் அரா உடல் நெளிய திக்கில்
சூழி மால் யானை நின்ற நிலை கெடத் துணுக்கம் கொள்ள.

(இ - ள்.)
ஊழி நாள் வெடிக்கும் அண்ட கடாகத்தின் ஒலிபோல் ஆர்த்துப் பாழிவான்உருமு வீழ - ஊழிக்காலத்தில் வெடிக்கின்ற அண்ட கடாகத்தின் ஓசைபோல ஒலித்து வலிய பெரிய இடியேறுகள் விழவும்,
ஆழி நீர் ஞாலம் தாங்கும் அரா - கடல் நீராற் சூழப்பட்ட இந்நிலவுலகைத் தாங்குகின்ற அனந்தன்,
பணாடவிமணிகள் சிந்தி உடல் நெளிய - ஆயிரம் படங்களிலுமுள்ள,
மணிகளைச் சிதறி உடலை நெளிக்கவும்,
திக்கில் - எண்டிசையிலுமுள்ள,
சூழிமால் யானை - முகபடாத்தையுடைய பெரிய யானைகள் (கிரானைட் மலைகள்),
நிலை கெடத் துணுக்கம் கொள்ள - நிலையழிய நடுக்கங் கொள்ளவும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------
கடல்கோள் (பெருஞ் சுனாமி) 
நிகழ்விற்குப் பின்னர் 
பெருமழை பெய்தல்

திருவிளையாடல் புராணம் பாடல் எண் 1312

பொள்ளென மேக மேழும் புகுந்துபார் தெரிய முந்நீர்ப்
பள்ளமும் வறப்ப முற்றப் பருகிமெய் கருகி மின்னித்
தெள்ளருந் திசையும் வானுஞ் செவிடுறப் பிலமும் பாரும்
விள்ளமால் வரைக ளெட்டும் வெடிபட மேருச் சாய.


     (இ - ள்.) 
மேகம் ஏழும் பொள்ளெனப் புகுந்து - ஏழு முகிலும் விரைந்து சென்று, 
பார்தெரிய முந்நீர்ப் பள்ளமும் வற்ற - நிலந் தோன்றக் கடலின் ஆழம் வற்றும்படி, 
முற்றப் பருகி - (நீரினை) முடியக் குடித்து, 
மெய் கருகி -  மேகங்கள் உடல் கறுத்து, 
மின்னி - மின்னல் வீசி, 
தெள் அருந்திசையும் வானும் செவிடு உற - கண்டு தெளிதற்கரிய திசைகளும் வானும் செவிடு படவும், 
பிலமும் பாரும் விள்ள - பாதலமும் நிலவுலகும் பிளக்கவும், 
மால்வரைகள் எட்டும் வெடிபட மேருச்சாய - பெரிய மலைகள் எட்டும்
வெடிக்கவும் மேருமலை சாயவும்.

 பொள்ளென விரைவுக் குறிப்பு;  "பொள்ளென வாங்கே புறம் வேறார்"     என்பது திருக்குறள் முந்நீராகிய பள்ளம் என்னலுமாம்.  பள்ளமும் என்பதில் உம்மை உயர்வு சிறப்பு. தெள்ளரும் - எல்லை கண்டு தெளிதலரிய. மால்வரைகள் - மேருவைச் சூழ்ந்த  குலவரைகள்.மேகம் ஏழும் வரைகள் எட்டும் மதுரைக் காண்டத்திற் கூறப்பட்டன; ஆண்டுக் காண்க. செவிடுற, விள்ள, வெடிபட, சாய
என்னும் எச்சங்கள் வருஞ் செய்யுளில் உருமு வீழ என்பது கொண்டு
முடியும். (6)
----------------------------------------------------------------
நன்றி = http://www.tamilvu.org