Showing posts with label Indonesian plate. Show all posts
Showing posts with label Indonesian plate. Show all posts

Monday, 29 October 2018

கங்கை என்ற விண் நீர்க்கோள், Ganga Puranam Theory

கங்கை என்ற விண்ணீர்க் கோள் பூமியில் இமயமலைத் தொடரின் பள்ளத்தாக்கில் இறங்கி யுள்ளது.


கங்கை பூமியில் இறங்கும்போது அதிலிருந்து எரியும் தன்மையுடைய பொருட்கள் எல்லாம் எரிந்து பூமியில் விழுந்த காரணத்தினால் பூமியில் மிகப்பெரிய பாலைவனங்கள் தோன்றியுள்ளன.

கங்கை இமயமலைப் பகுதியில் இறங்கிய காரணத்தினால், கங்கையிலிருந்த களிமண் படிந்து பாறைகளா இறுகி இமயமலையை ஒரு மடிப்புமலையாக மாற்றியுள்ளது.


இமயமலை முகடுகளில் இருந்து கங்கை வழிந்து ஓடியபோது அதிலிருந்த களிமண் படிந்து பர்மா, இந்தோனியா, தாய்லாந்து, ஜாவா, சப்பான் நிலத்திட்டுகள் உருவாகி உள்ளன. 


கங்கை விழுந்த இடம் தக்களமேகன் பாலைவனமாக மாறியுள்ளது.  அதிவேகமானப் பூமியில் இறங்கிய கங்கை பூமியைத் துளைத்துச் சென்ற இடம் தக்களமேகன் பாலைவனமாக மாறியுள்ளது.  கங்கை துளைத்துச் சென்ற காரணத்தினால் தக்களமேகன் பாலைவனம் மிகவும் ஆழமான பாலைவனமாக உள்ளது.  

அதிவேகமாகப் பூமியில் இறங்கிய கங்கை என்ற வீண்ணீர்க்கோளானது  பூமியைத் துணைத்துச் சென்று மரினாடிரன்ச் என்ற இடத்தில் வெளியே வந்துள்ளது.  பூமியைத் துளைத்துச் சென்ற கங்கைநீர் வெளியே வந்த காரணத்தினால் மரினாடிசன்ச் மிகவும் ஆழமான கடலாக உள்ளது.
  

மரினாடிரன்ச் பகுதியிலிருந்து பூமியில் பரவிய கங்கைநீர் ஆல்ப்ஸ்மலையைக் கடந்து சென்று அதை ஒரு மடிப்புமலையாக மாற்றியுள்ளது.



கங்கை என்ற விண்ணீர்க்கோள் பூமியில் இறங்கிய காரணத்தினால் பூமியின் கடல்நீர் உப்புநீராக மாறியுள்ளது.  பூமியின் கடல்நீரின் அளவு கூடியுள்ளது.  கடல்மட்டம் பூமி யெங்கும் உயர்ந்துள்ளது.  பூமி யெங்கும் மடிப்புமலைகளும் மண்மலைகளும் தோன்றியுள்ளன.


அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்