Showing posts with label வைகை. Show all posts
Showing posts with label வைகை. Show all posts

Monday, 12 December 2022

சங்கப் பாடல்களில் கங்கை


"கங்கை" 7 இடங்களில் காணப்படுகின்றது.
கூடுதல் விளக்கம் வேண்டின் அந்த வரிகளை அழுத்தவும்
பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை - பெரு. அடி 431
கங்கை அம் பேரியாறு கடல் படர்ந்து ஆஅங்கு - மதுரை. அடி 696
கங்கை வாரியும் காவிரி பயனும் - பட்டின. அடி 190
கங்கை வங்கம் போகுவர் கொல்லோ - நற்றிணை பாடல் எண்: 189, அடி: 5
கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும் - நற்றிணை பாடல் எண்: 369, அடி: 9
மீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய - பரி பாடல் பாடல் எண்: 16, அடி: 36
மன்பதை எல்லாம் சென்று உண கங்கை - புற நானூறு பாடல் எண்: 161, அடி: 6

Tuesday, 17 May 2022

வைகையும் ஐகையும், தமிழரும் துருக்கியரும்

வைகையும் ஐகையும், தமிழரும் துருக்கியரும்

Aigai = Vaigai

ஐகை துருக்கியில் தொல்லியலாளர்களால் தோண்டிக் கண்டறியப்பட்டுள்ளது.

வைகை ஆற்றங்கரையில் கீழடியருகே தமிழரின் சங்ககால நகரநாகரிகம் தொல்லியலாளர்களால் தோண்டிக் கண்டறியப்பட்டுள்ளது.

பாண்டியநாட்டில் வைகைக் கரையில் அமைந்துள்ள மதுரையில் நடைபெற்ற திருவிளையாடல்களைப் பதிவு செய்துள்ள திருவிளையாடல் புராணத்தில் மூன்று இடங்கயில் துருக்கியைப் பற்றிய செய்திகள் உள்ளன.

1) மாணிக்கம் விற்ற படலத்தில் (படலம் எண் 17, பாடல் வரிசை எண் 1259), துருக்கி நாட்டிலிருந்து பச்சைக் கற்களைத் துருக்கி நாட்டிலிருந்து கொண்டு வந்து விற்ற செய்தியும்,
2) மெய்க்காட்டிட்ட படலத்தில் (படலம் எண் 30, பாடல் வரிசை எண் 1677),
குலபூடணபாண்டியன் பல்வேறு நாட்டிற்கும் ஓலை அனுப்பிப் படை திரட்டிய செய்து கூறப்படுகின்றது. அதில் துருக்க நாட்டிற்கும் ஓலை அனுப்பி செய்தி பதிவு செய்யப்பெற்றுள்ளது.

3) சுந்தரப்பேர் அம்பு எய்த படலத்தில் (படலம் எண் 50, பாடல் வரிசை எண் 2373) வங்கிய சேகர பாண்டியன் மீது விக்கிரமசோழன் படையெடுத்து வரும்போது,
சோழனுடைய படையில், போர்த்துணையாகி துருக்கரும் ஒட்டியரும், ஏனையோரும் இருந்தனர் என்ற செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், புராண காலத்திலிருந்தே தமிழரும் துருக்கியரும் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது. தமிழருக்கும் துருக்கருக்கமான தொடர்பை மேலும் வலுச் சேர்க்கும் வகையில் துருக்கியரின் தொன்மையான நாகரிகம் வாழ்ந்த இடம் ஐகை மாநகரம் தொல்லியலாளர்களால் தோண்டிக் கண்டறியப்பட்டுள்ளது. துருகிக்கியரின் ஐகை, தமிழரின் வைகை என்ற பெயர் அமைப்பும் சிறப்பாக உள்ளது வியப்பளிக்கிறது.

அன்பன் காசிசீர், முனைவர், கி. காளைராசன்
--------------------------------------------------

கற்றவை 1)
தமிழரும் துருக்கரும் 
https://thiruvillayadalpuranam-kalairajan.blogspot.com/2019/08/blog-post.html

--------------------------------------------------

கற்றவை 2)

Aigai, located in the Yunusemre district, is one of the 12 Aiol cities in Western Anatolia and has a long and fascinating history of 2,800 years.

Mentioned by both Herodotus and Strabo,  it was an ancient Greek, and later Roman city and bishopric in Aeolis. Initially, the city was in a possession of the Lydian Empire and later the Achaemenid Empire when it conquered the former.

Ruins of ancient city of Aigai, Turkey. Image credit: Hurriyet Daily News

Ruins of the ancient city of Aigai, Turkey. Image credit: Hurriyet Daily News

The discovery of thousands of artifacts and ancient roads during the excavations in the ancient city of Aigai, one of the 12 Aeolian cities in the western province of Manisa, the history of which dates back to the eighth century BC is drawing the attention of visitors.

During long-lasting archaeological excavations that began in 2004, many artifacts and structures of the ancient city of Aigai have been found and analyzed.

The 2017 excavations that revealed the headteacher's sarcophagus, are continuously conducted in the ancient city of Aigai in the western province of Manisa. Archaeologists successfully reunited the sarcophagus, of which the first pieces were unearthed in 2004. and announced that it belonged to a school principal.

Only a few months later, the archaeologist discovered a 2000-years old road located in Manisa Province, Turkey. It served as a war route at first and was then used by caravans.

In 2018, diggings in the area of Aigai exposed ancient meat and fish market, and two years ago, the team led by Yusuf Sezgin, an associate professor at Manisa Celal Bayar University’s (MCBU) Archaeology Department, found 2500-year-old objects made from goat bones.

Naturally, we must not forget an important discovery made in 2016, when archaeologists discovered a mosaic depicting the god Poseidon. The mosaic was found in the frigidarium part (a large cold pool at the Roman baths).

Mosaic depicting the Greek god Poseidon from the ancient Greek city of Aigai [Credit: AA]

Mosaic depicting the Greek god Poseidon from the ancient Greek city of Aigai. Image credit: Anadolu Agency

The bottom part of the mosaic has a partly ruined inscription in Greek: "Greetings to all of you bathing." Archaeologists believe that it dates back to the 3rd or 4th century BC.

Sezgin said that when excavations started in 2004, the number of visitors to the city, which was 1,000 on average, increased day by day and approached 15,000 over the last year.

“We have had a pandemic for a long time. We were all very bored in our homes. As a result, we have seen a great increase in the number of visitors since last year," stated the archaeologist.

"The 2022 excavation works will start as of May, Sezgin said: Due to its geography and nature, it is a very green area. Streams flow on both sides. In this respect, it is a pleasant place to visit. For this reason, we see that the number of visitors increased drastically, especially in the spring months. Excavations began in 2004 and are continuing.”

Sezgin stated they have two basic visions, one is archaeological excavations and the other is to help visitors easily visit the ancient city.

“We have seen that our efforts to uncover ancient roads, which we have been working on since 2004, had an impact on the number of visitors. When visitors come to the city, they walk the 2,000-year-old roads, and we see that they really enjoy it,” he added.

Sezgin stated that the artifacts unearthed from the ancient city would be exhibited at the Manisa Archaeology Museum, which is under construction and is planned to open soon.

“We have many artifacts because we have been working there for long years. Most of them are in the Manisa Archaeology Museum. The new museum, which is under construction, will serve in accordance with the modern age. It will open soon. There will be two specially designed halls for Aigai in the museum. One will display Aigai parliament sculptures, and the second hall will display other works.”

Written by Conny Waters - AncientPages.com Staff Writer

https://www.ancientpages.com/2022/05/16/countless-artifacts-structures-and-roads-discovered-in-ancient-city-of-aigai-turkey/?fbclid=IwAR3b9btlT4-RzaT6wTjsxgupPiipQTA72sxRoqSIoKF332h6bigTZRWqaJE

------------------------------------------------

Monday, 4 November 2019

கிருதுமாலில் தண்ணீர்

40 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் அவலம்: 
கிருதுமாலில் தண்ணீர் 
ஓடுவது எப்போது?

தினகரன் செய்தி -  
மதுரை: மதுரையின் இரண்டாவது தொன்மையான கிருதுமால் நதி தண்ணீர் இன்றி, 40 ஆண்டுகளாக வறண்டுள்ளது. நகர் பகுதியின் நிலத்தடி நீராதாரமான இந்த நதியில் வைகை தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.


மதுரையில் வைகை நதிக்கு அடுத்து, பெரிய நதியாக கிருதுமால் நதி ஓடியுள்ளது. இந்த நதி தொன்மையான நதியாக இருந்துள்ளது. வைகை நதி மதுரையின் வடபகுதி மக்களுக்கும், விவசாயத்திற்கும் கைகொடுத்தது. கிருதுமால் நதி தென்பகுதி மக்களுக்காக உருவானது. இந்த நதி நாகமலை அருகே, துவரிமான் கண்மாயில் உற்பத்தியாகி  அச்சம்பத்து, விராட்டிபத்து, கொக்குளப்பி,  பொன்மேனி, எல்லீஸ் நகர், தெற்குவாசல், கீரைத்துறை, சிந்தாமணி வழியாக மதுரையை கடந்து, சிவகங்கை மாவட்டம் கரிசல்குளம், கொந்தகை கண்மாயை அடைந்து ராமநாதபுரம் மாவட்டம், கீழவலசை என்ற இடத்தில், குண்டாற்றில் கலக்கிறது.
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் 200 கிமீ தூரம் கிருதுமால் நதி செல்கிறது. இந்த நதி மூலம் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில், 40 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வந்தது. இந்த நதிக்கு தேவையான தண்ணீர் நாகமலை மற்றும் வைகை ஆற்றில் இருந்து துவரிமான் கண்மாய்க்கு வந்து சேர்ந்தது. இதனால் இந்த நதி வற்றாத நதியாக முன்பு ஓடிக்கொண்டிருந்தது. வைகையில் வெள்ளம் வரும்போது, இந்த நதியிலும் வெள்ளம் ஓடியுள்ளது.
40 ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலத்தடி நீருக்கும், பாசனத்துக்கும் பயன்பெற்ற கிருதுமால் நதி, இப்போது சீரழிந்து கிடக்கிறது. மதுரை நகரில் மட்டும் இந்த நதி முன்பு 120 அடி அகலத்தில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் ஓடியுள்ளது. காலம் செல்லச்செல்ல நதியின் இரண்டு கரையும் ஆக்கிரமிப்பு ஏற்பட்டு, தற்போது குறுகி விட்டது. கிருதுமால் நதி முகப்பு பகுதியில் தண்ணீராகவும், மதுரை நகருக்குள் வரும்போது சாக்கடையாகவும் ஓடிக்கொண்டுள்ளது. மதுரை நகரில் உள்ள கழிவுகளை மாநகராட்சி இந்த நதியில் கலந்துவிடுகிறது. பைபாஸ் ரோடு, எல்லீஸ் நகர், அழகப்பன் நகர், கீரைத்துறை, சிந்தாமணி போன்ற பகுதிகளில் உள்ள, சிறு தொழிற்சாலைகளின் கழிவு, சாயப்பட்டறை, தோல் பட்டறை கழிவு, ஆடு, மாடு, கோழி, பன்றி போன்றவற்றின் இறைச்சிக்கழிவுகள் நேரடியாக கலக்கின்றன. இந்தநதி முன்பு மதுரை தென்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்தது. இதில் தண்ணீர் ஓடும் போது மதுரையின் மையப்பகுதியில் நிலத்தடி நீர் உயர்ந்த நிலையில் இருந்தது. இந்த நதியின் ஆக்கிரமிப்பை அகற்ற அரசும் முன்வரவில்லை. இதனால் மதுரை நகரின் நிலத்தடி  நீர் மட்டம் தற்போது 700 அடிக்கு கீழ் சென்றுள்ளது.
2004ல் இந்த நதியை மேம்படுத்த ரூ.25 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. உலக வங்கி உதவியுடன் தமிழ்நாடு நீர்வள, நிலவள மேம்பாடு மூலம் ரூ.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்த நதியை சுத்தம் செய்கிறோம் என்றனர். அதேபோன்று, மாநகராட்சி சிறப்பு நிதியாக ரூ.250 கோடி ஒதுக்கியதாக  தெரிவித்தது.  இவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்தும், நதியை சுத்தம் செய்யவோ, ஆக்கிரமிப்பை அகற்றி, அதனை பராமரிக்கவோ அரசும், மாநகராட்சி நிர்வாகமும் மறுக்கிறது. காரணம் பாதாளச்சாக்கடை கழிவுநீரை மாநகராட்சி பல இடங்களில் கிருதுமால் நதியில் விட்டுள்ளது. கிருதுமால் நதி அசுத்தம் ஆவதற்கு மாநகாரட்சிதான் மிகப்பெரிய காரணம். தற்போது வடகிழக்கு பருவமழையால் அனைத்து கால்வாய்களிலும் தண்ணீர் செல்கிறது. ஆனால், தொன்மையான கிருதுமால் நதியில் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் வழக்கறிஞர் கனகவேல்பாண்டியன், முத்துகருப்பன் ஆகியோர் கூறுகையில், ‘‘மதுரை நகர் பகுதியில் முன்பு நிலத்தடி நீராதாரமாக இருந்த கிருதுமால் நதி, தற்போது தண்ணீர் இன்றி வறண்டுள்ளது. வைகையில் தற்போது மழைநீர் வெள்ளம் போல் ஓடுகிறது. வீணாக ஆற்றில் செல்லும் நீரில் ஒரு பகுதியை கிருதுமால் நதியில் திருப்பிவிட்டால், நகரில் நிலத்தடிநீர் மட்டம் உயரும். இந்த நதியில் ஆண்டுக்கொரு முறை தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் இந்த நதியில் உள்ள 3 மாவட்ட பாசன பகுதியிலும், பாசனம் நடைபெறும். இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

நன்றி - http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=538317
 2019-11-04@ 11:42:04

Wednesday, 10 July 2019

வையை நதியின் வேறு பெயர்கள்

வையை நதியின் வேறு பெயர்கள்


வையையும் வைகையும்

சங்ககாலத்தில் கூடல் நகரமும் வையை நதியும் இருந்துள்ளன. மதுரையும் வைகையும் இல்லை.  எனவே சங்கப்பாடல்களில் கூடலும் வையையும்  பாடப்பெற்றுள்ளன.   கடல்கோளால் கூடல் நகரம் (கீழடி யருகே) புதைந்து போனது,  வையை நதியானது உருமாறிப் பெயர்மாறிக் கிருதமால் நதியாக ஓடுகிறது.   கடல்கோளுக்குப் பின்னர் மதுரையும் வைகையும் புதிதாக உருவாகியுள்ளன.  இதனால் சங்ககாலத்திற்குப் பின்னாள் இயற்றப்பட்ட பாடல்களில் மதுரையும் வைகையும் பாடப் பெற்றுள்ளன.

வையை - வைகை 
வைகை நதிக்குச் சங்ககாலத்தில் “வையை” என்று பெயர்.
பிரளயத்தினால் கடல்கோள் உண்டாகி கடல்வெள்ளம் (சுனாமி) மதுரை வந்து அழித்துள்ளது.  இந்தக் கடல்கோளால் வையை என்ற பண்டைய நதியில் மண் சேர்ந்து மேடாகிவிட்டது.  பண்டைய வையை நதி இந்நாளில் கிருதமாலை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
கடல்கோளால் பாண்டியநாடு அழிந்து கடல்வெள்ளம் (சுனாமி) வற்றும்போது “வைகை” உருவாகியுள்ளது.   இதனால் சங்கப்பாடல்களில் எல்லாம் வையை என்ற பெயரும், பக்தி இலக்கியங்களில் எல்லாம் வைகை என்ற பெயரும் இடம் பெற்றுள்ளன.

வேறு பெயர்கள் -
வைகை நதிக்குச் சிவகங்கை, சிவஞான தீர்த்தம், வேகவதி, கிருதமாலை என்ற காரணப் பெயர்கள் உள்ளன.
பெயர்க்காரணம் -
கங்கையைத் தலையில் தாங்கித் தீர்த்தனாகிய சிவபெருமானின் இதழிச் சடை நின்றும் இழிந்து வரலால் வைகைக்குச் சிவகங்கை என்று ஒரு பெயர்.
சிவபெருமானின் (தீர்த்தன்) உருவம் தெளிவோர்க்கு ஞானம் தரலால் சிவஞான தீர்த்தம் என்ற பெயரும் உண்டு.
காலில் (வாய்க்காலில் அல்லது காற்றில் ) வேகமாக வரும் செய்தியாலே வேகவதி என்று பெயர்.
வைகைத் தீர்த்தத்திற்குக் கிருதமாலை என்று பெயர்.
(திருவிளையாடல் புராணம் பாடல் எண் 875)
தீர்த்தன் இதழிச் சடை நின்றும் இழிந்து வரலால் சிவகங்கை,
தீர்த்தன் உருவம் தெளி வோர்க்கு ஞானம் தரலால் சிவஞான
தீர்த்தம், காலில் கடுகி வரும் செய்தியாலே வேகவதி,
தீர்த்தம் கிருத மாலை, என வைகை நாமம் செப்புவர் ஆல்.

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்
ஆராய்ச்சி அமைப்பாளர்
திருவிளையாடற் புராண ஆராய்ச்சி மையம்.


வையையும் வைகையும் பாடற் தொகுப்பு

பரிபாடலில் வையை
1. வகை சாலும் வையை வரவு - பரி 6/13
2. வரை சிறை உடைத்ததை வையை வையை/  திரை சிறை உடைத்தன்று கரை சிறை அறைக எனும் - பரி 6/22,23
3. தமிழ் வையை தண்ணம் புனல் - பரி 6/60
4. பெருக்கு அன்றோ வையை வரவு - பரி 6/70
5. சுருக்கமும் ஆக்கமும் சூள் உறல் வையை பெருக்கு அன்றோ பெற்றாய் பிழை - பரி 6/73,74
6. இன் இளவேனில் இது அன்றோ வையை நின் - பரி 6/77
7. வையை வயம் ஆக வை - பரி 6/78
8. வையை உடைந்த மடை அடைத்த_கண்ணும் - பரி 6/82
9. யாறு உண்டோ இ வையை யாறு - பரி 6/93
10. இ வையை யாறு என்ற மாறு என்னை கையால் - பரி 6/94
11. வாடற்க வையை நினக்கு - பரி 6/106
12. வந்தன்று வையை புனல் - பரி 7/10
13. தானையான் வையை வனப்பு - பரி 7/50
14. வையை பெருக்கு வடிவு - பரி 7/60
15. தாமம் தலை புனை பேஎம் நீர் வையை
16. நின் பயம் பாடி விடிவு உற்று ஏமாக்க - பரி 7/84,85
17. இனி மணல் வையை இரும் பொழிலும் குன்ற - பரி 8/51
18. வரு புனல் வையை மணல் தொட்டேன் தரு மண வேள் - பரி 8/61
19. வையைக்கு தக்க மணல் சீர் சூள் கூறல் - பரி 8/71
20. நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை/வரு புனல் அணிக என வரம் கொள்வோரும் - பரி 8/104,105
21. போந்தது வையை புனல் - பரி 10/8
22. யாம் வேண்டும் வையை புனல் எதிர்கொள் கூடல் - பரி 10/40
23. நெரிதரூஉம் வையை புனல் - பரி 11/15
24. சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை/வய தணிந்து ஏகு நின் யாணர் இறு நாள் பெற - பரி 11/39,40
25. மல்லல் புனல் வையை மா மலை விட்டு இருத்தல் - பரி 11/43
26. பாய் தேரான் வையை அகம் - பரி 11/61
27. நீர் ஒவ்வா வையை நினக்கு - பரி 11/73
28. வையை நினக்கு மடை வாய்த்தன்று - பரி 11/87
29. நீ உரைத்தி வையை நதி - பரி 11/92
30. தண்டு தழுவா தாவு நீர் வையையுள்/கண்ட பொழுதில் கடும் புனல் கை வாங்க - பரி 11/106,107
31. நறு நீர் வையை நய_தகு நிறையே - பரி 11/140
32. வளி வரல் வையை வரவு - பரி 12/8
33. அம் தண் புனல் வையை யாறு என கேட்டு - பரி 12/10
34. உரைதர வந்தன்று வையை நீர் வையை/கரை தர வந்தன்று காண்பவர் ஈட்டம் - பரி 12/32,33
35. வல்லதால் வையை புனல் - பரி 12/75
36. நன் பல நன் பல நன் பல வையை/நின் புகழ் கொள்ளாது இ மலர் தலை உலகே - பரி 12/101,102
37. பூத்தன்று வையை வரவு - பரி 16/19
38. வறாஅற்க வையை  நினக்கு - பரி 16/25
39. வாய்த்தன்றால் வையை வரவு - பரி 16/31
40. தேன் இமிர் வையைக்கு இயல்பு - பரி 16/38
41. கொடி தேரான் வையைக்கு இயல்பு - பரி 16/47
42. தொய்யா விழு சீர் வளம் கெழு வையைக்கும்/கொய் உளை மான் தேர் கொடி தேரான் கூடற்கும் - பரி 17/44,45
43. தான் நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து தரூஉம் வையை/தன் நாற்றம் மீது தடம் பொழில் தான் யாற்று - பரி 20/11,12
44. கூடல் விழையும் தகைத்து தகை வையை/புகை வகை தைஇயினார் பூம் கோதை நல்லார் - பரி 20/26,27
45. வையை மடுத்தால் கடல் என தெய்ய - பரி 20/42
46. வையை தொழுவத்து தந்து வடித்து இடித்து - பரி 20/60
47. ஊடினார் வையை அகத்து - பரி 20/67
48. தென்னவன் வையை சிறப்பு - பரி 20/97
49. பூ மலி வையைக்கு இயல்பு - பரி 20/111
50. சீர் அணி வையைக்கு அணி-கொல்லோ வையை_தன் - பரி 22/32
51. தீரமும் வையையும் சேர்கின்ற கண் கவின் - பரி 22/35
52. தீம் புனல் வையை திருமருத முன்துறையால் - பரி 22/45
53. காமரு வையை சுடுகின்றே கூடல் - பரி 24/4
54. நீர் அணி கொண்டன்று வையை என விரும்பி - பரி 24/5
55. முற்று இன்று வையை துறை - பரி 24/27
56. அகல் அல்கும் வையை துறை - பரி 24/33
57. தணிவு இன்று வையை புனல் - பரி 24/50
58. மழுபொடு நின்ற மலி புனல் வையை/விழு_தகை நல்லாரும் மைந்தரும் ஆடி - பரி 24/80,81
59. தான் தோன்றாது இ வையை ஆறு - பரி 24/87
60. வழி நீர் விழு நீர அன்று வையை/வெரு வரு கொல் யானை வீங்கு தோள் மாறன் - பரி 24/90,91
61. உரு கெழு கூடலவரொடு வையை/வரு புனல் ஆடிய தன்மை பொருவும்_கால் - பரி 24/92,93
62. தண் வரல் வையை எமக்கு - பரி 25/4
63. பரி_மா நிரையின் பரந்தன்று வையை - பரி 26/2
64. வையை உண்டாகும் அளவு - பரி 32/4
65. வையை வரு புனல் ஆடல் இனிது-கொல் - பரி 35/1

கலித்தொகையில் வையை
66. வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்-கொல் - கலி 27/20
67. வையை வார் அவிர் அறல் இடை போழும் பொழுதினான் - கலி 28/7
68. அறல் வாரும் வையை என்று அறையுநர் உளர் ஆயின் - கலி 30/16
69. வண்ண வண்டு இமிர்ந்து ஆனா வையை வார் உயர் எக்கர் - கலி 35/9
70. தார் முற்றியது போல தகை பூத்த வையை தன் - கலி 67/3
71. வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையை/கரை அணி காவின் அகத்து - கலி 92/12,13
72. பொரு கரை வாய் சூழ்ந்த பூ மலி வையை/வரு புனல் ஆட தவிர்ந்தேன் பெரிது என்னை - கலி 98/10,11
73. வையை புது புனல் ஆட தவிர்ந்ததை - கலி 98/31

அகநானூற்றில் வையை
74. வரு புனல் வையை வார் மணல் அகன் துறை - அகம் 36/9
75. மை எழில் உண்கண் மடந்தையொடு வையை/ஏர் தரு புது புனல் உரிதினின் நுகர்ந்து - அகம் 256/10,11
76. பெரு நீர் வையை அவளொடு ஆடி - அகம் 296/5

புறநானூற்றில் வையை
77. வையை சூழ்ந்த வளம் கெழு வைப்பின் - புறம் 71/10

மதுரைக்காஞ்சியில் வையை
78. அவிர் அறல் வையை துறை_துறை-தோறும் - மது 340
79. வையை அன்ன வழக்கு உடை வாயில் - மது 356

முத்தொள்ளாயிரத்தில் வையை
80. கொல் யானை மாறன் குளிர் புனல் வையை நீர் - முத்தொள் 84/3
81. வரி வளை நின்றன வையையார் கோமான் - முத்தொள் 80/3

சிலப்பதிகாரத்தில் வையை
82.  வையை என்ற பொய்யா குல_கொடி - மது 13/170
83.  வரு புனல் வையை மருது ஓங்கு முன் துறை - மது 14/72
84.  நீடு நீர் வையை நெடு மால் அடி ஏத்த - மது 18/4
85.  கையில் தனி சிலம்பும் கண்ணீரும் வையை_கோன் - மது 20/103
86.  உரவு நீர் வையை ஒரு கரை கொண்டு ஆங்கு - மது 23/185
87.  வையை பேரியாறு வளம் சுரந்து ஊட்டலும் - மது 23/212
88.  வையை ஒருவழிக்கொண்டு - வஞ்சி 29/62
89.  வானவன் எம் கோ மகள் என்றாம் வையையார்/ கோன்-அவன்-தான் பெற்ற கொடி என்றாள் வானவனை - வஞ்சி 29/118,119
90.  வாழ்த்துவோம் நாமாக வையையார் கோமானை - வஞ்சி 29/120
91.  வாழியரோ வாழி வரு புனல் நீர் வையை/சூழும் மதுரையார் கோமான்-தன் தொல் குலமே - வஞ்சி 29/124,125
92.  வரு புனல் வையை வான் துறை பெயர்ந்தேன் - வஞ்சி 30/108

தேவாரத்தில் வைகை
திருஞானசம்பந்தர் - திருமுறை 1,2,3
93. பார் ஆர் வைகை புனல் வாய் பரப்பி பல் மணி பொன் கொழித்து - தேவா-சம்:692/3
94. செடி ஆர் வைகை சூழ நின்ற தென் திருப்பூவணமே - தேவா-சம்:693/4
95. ஓடி நீரால் வைகை சூழும் உயர் திருப்பூவணமே - தேவா-சம்:697/4
96. மை ஆர் பொழிலின் வண்டு பாட வைகை மணி கொழித்து - தேவா-சம்:698/3
97.  அம் தண் புனல் வைகை அணி ஆப்பனூர் மேய - தேவா-சம்:958/1
98.  வைகையின் வடகரை மருவிய ஏடகத்து - தேவா-சம்:3145/2
99.  தன்னுள் ஆர் வைகையின் கரைதனில் சமைவுற - தேவா-சம்:3147/2
100.  கோடு சந்தனம் அகில் கொண்டு இழி வைகை நீர் - தேவா-சம்:3149/1


தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்) - திருமுறை 4,5,6 -
101. மருப்பு ஓட்டு மணி வயிர கோவை தோன்றும் மணம் மலிந்த நடம் தோன்றும் மணி ஆர் வைகை - தேவா-அப்:2272/2,3

பெரியபுராணத்தில் வைகை   
102. பற்றிய பொருளின் ஏடு படர் புனல் வைகை ஆற்றில் - 6.வம்பறா:1 799/3
103. ஏடுகள் வைகை-தன்னில் இடுவதற்கு அணைந்தார் என்பார் - 6.வம்பறா:1 807/1
104. வென்று உலகு உய்ய மீள வைகையில் வெல்வான் வந்தான் - 6.வம்பறா:1 810/3
105. மன்னிய வைகை ஆற்றின் கரை மிசை மருவ வந்தார் - 6.வம்பறா:1 811/4
106. பார் கெழு புகழின் மிக்க பண்பு உடை வைகை ஆறு - 6.வம்பறா:1 812/4
107. பொரு புனல் வைகை ஆற்றில் எதிர்ந்து நீர் கிழித்து போகும் - 6.வம்பறா:1 846/3
108. எங்களை வாழ முன்னாள் ஏடு வைகையினுள் இட்டார் - 6.வம்பறா:1 1230/4

திருப்புகழில் வைகை
109. வேற்று உருவில் போந்து மதுராபுரியில் ஆடி வைகை ஆற்றில் மணல் தாங்கும் மழுவாளி என தாதை புரம் - திருப்:756/11
110.  மாடை ஆடை தர பற்றி முன் நகைத்து வைகை ஆறின் மீது நடம் இட்டு மண் எடுத்து மகிழ் - திருப்:960/11
111.  ஆசித்தார் மனதில் புகும் உத்தம கூடற்கே வைகையில் கரை கட்டிட - திருப்:1317/13

நன்றி – தொடரடைவு   http://tamilconcordance.in
--------------------------------------------------------------

திருவிளையாடற் புராணத்தில்  
வையை வைகை வேகவதி கிருதமாலை.

' வையை ' என்ற சொல் உள்ள பாடல்கள்
968. 
வையைக் கிழவன் தன் அருமை குமரன் தனக்கு மணம் புணர்ச்சி
செய்யக் கருதும் திறம் நோக்கி அறிஞரோடும் திரண்ட அமைச்சர்
மை அற்று அழியா நிலத் திருவும் மரபும் குடியும் புகழ்மையும் நம்
ஐயற்கு இசையத் தக்க குலத்து அரசர் யார் என்று அளக்கின்றார்.        
2457.    
சுருப்புக் கமழ் தேம் கண்ணித் தொடுபைங் கழல் ஆடவரும்
கருப்புச் சிலை மன்னவனால் கருவிப் படை அன்னவரும்
விருப்புற்று எறிநீர் வையை வெள்ளைத் தரளம் தெள்ளிப்
பொருப்பில் குவிக்கும் புளினம் புறம் சூழ் சோலை புகுவார்.      
2660.    
சூழும் வார் திரை வையை அம் துறை கெழு நாட்டுள்
கீழையார் கலி முகத்தது நெய்தல் அம் கீழ் நீர்
ஆழ நீள் கரும் கழி அகழ் வளைந்து கார் அளைந்த
தாழை மூது எயில் உடுத்தது ஓர் தண் துறைப் பாக்கம்.   

---------------------------------------------------

'வைகை' என்ற சொல் உள்ள பாடல்கள்
108.       
குமிழ் அலர்ந்த செந்தாமரைக் கொடி முகிழ் கோங்கின்
உமிழ் தரும் பா ஞானம் உண்டு உமிழ்ந்த வாய் வேதத்
தமிழ் அறிந்து வைதிகம் உடன் சைவமும் நிறுத்தும்
அமிழ்த வெண் திரை வைகையும் ஒரு புறத்து அகழ் ஆம்.             
113.       
மகர வேலை என்று யானை போல் மழை அருந்து அகழிச்
சிகர மாலை சூழ் அம் மதி திரைக் கரம் துழாவி
அகழ ஓங்கு நீர் வைகையால் அல்லது வேற்றுப்
பகைவர் சேனையால் பொரப் படும் பாலதோ அன்றே.  
171.       
பெண் முத்தம் அனைய பேதைச் சிறுமியர் பெருநீர் வைகை
வெண் முத்தம் இழைத்த சிற்றில் சிதை பட வெகுண்டு நோக்கிச்
கண் முத்தம் சிதறச் சிந்தும் கதிர் முத்த மாலைத் தட்பத்
எண் முத்தின் நகைத்துச் செல்வச் சிறார்கள் தேர் உருட்டுவார்கள்.    
239.       
சுர நதி சூழ் காசிமுதல் பதிமறுமைக்கு கதி அளிக்கும் தூநீர் வைகை
வரநதி சூழ் திருவால வாய் சீவன் முத்தி தரும் வதிவோர்க்கு ஈது
திரன் அதிகம் பரகதியும் பின்கொடுக்கும் ஆதலின் இச் சீவன் முத்தி
புரன் அதிகம் என்பது எவன் அதற்கு அதுவே ஒப்பாம் எப் புவனத்து உள்ளும்.
330.       
புலி முனியும் பணி முனியும் தொழ வெள்ளி மன்றுள் நடம் புரிந்த வாறும்
வலி கெழு தோள் குண்டு அகட்டுக் குறட்கு அன்னக் குன்று அளித்த வகையும் பின்னும்
நலி பசி நோய் கெட அன்னக் குழி அசைத்துக் கொடுத்து நீர் நசைக்கு வைகை
அலைபுனல் கூய் அருத்தியதும் பொன்மாலைக் எழு கடலும் அழைத்த வாறும்.
470.       
குடவயின் அயிரா வதப் பெரும் தீர்த்தம் குடைந்து அயிராவத கணேசக்
கடவுளைத் தொழுது ஐராவதேச் சுரத்துக் கடவுளைப் பணிந்தவர் சாபத்
தொடர்பினும் பாவத் தொடர்பினும் கழிவர் சுராதிபன் களிறு செல் ஏறிபோய்
இடர் கெட வைகை படிந்து தென் கரையில் இந்திரேச் சுரன் அடி பணிவோர்.
875.       
தீர்த்தன் இதழிச் சடை நின்றும் இழிந்து வரலால்  சிவகங்கை
தீர்த்தன் உருவம் தெளி வோர்க்கு ஞானம் தரலால் சிவஞான
தீர்த்தம் காலில் கடுகி வரும் செய்தியாலே வேகவதி
தீர்த்தம் கிருத மாலை என வைகை நாமம் செப்புவர் ஆல்.
953.       
காற்றினும் கடிய மாவில் காவதம் பல போய் மீண்டும்
கூற்றினும் கொடிய சீற்றக் குஞ்சரம் உகைத்தும் வைகை
ஆற்றின் உய்யானத்து ஆவி அகத்தின் உள் இன்பம் துய்த்தும்
வேல் திறன் மைந்தரோடு மல் அமர் விளைத்து வென்றும்.            
1010.    
அங்கு அது கேடோர் யாரும் அகம் களி துளும்ப இப்பால்
கொங்கு அலர் நறும் தார் குஞ்சி உக்கிர குமரன் போந்து
மங்கல வரிசை மாண மத்த மான் சுமந்த வைகைச்
சங்கு எறி துறை நீராடித் தகும் கடி வனப்புக் கொள்வான்.            
1148.    
அறத்துறை அந்தணாளர் துறந்தவர் அரன் தாள் பற்றிப்
புறத்துறை அகன்ற சைவபூதியர் புனிதன் கோயில்
நிறத்துறை அகத்துத் தொண்டர் திரண்டு எதிர் கொள்ள  முத்தின்
நிறத்துறை வைகை நீத்து நெடு மதில் வாயில் புக்கான்.
1290.    
நறிய நெய் ஆதி ஆர நறும் குழம்பு ஈறா ஆட்டி
வெறிய கர்ப்புர நீர் ஆட்டி அற்புத வெள்ளம் பொங்க
இறைவனை வியந்து நோக்கி ஏத்துவான் எறிநீர் வைகை
துறைவ நீ என் கர்ப்பூர சுந்தரனேயோ என்றான்.
1344.    
பருவம் மாரிய பருவத்தில் வைகை நீர் பரந்து
வருவது ஆக்கியும் மீளவும் வறந்திடச் செய்தும்
பொருவி தீம் சுவையோடு அடையும் பொய்கையும் உவர்ப்புத்
தருவ ஆக்கியும் உவரியின் சுவையவாத் தந்தும்.  
1596.    
விரை செய் தார் அவன் யான் அங்கம் வெட்டினேன் அல்லேன் நீங்கள்
உரை செய்வது எவன் யார் என்போல் சித்தனை உடன்று மாய்த்து
வரை செய் தோள் விந்தைக்கு ஈந்தார் மற்று இது சுற்றம் வைகைத்
திரை செய் நீர்க் கூடல் எந்தை திரு உளச் செயல் கொல் என்றான்.       
1797.    
கல்லும் ஆர் அழல் அத்தமும் பல கலுழியும் குண கனை கடல்
செல்லும் மா நதி பலவும் வான் நிமிர் கன்னலும் செறி செந் நெலும்
புல்லு மாநிலனும் கழிந்து புறம் கிடக்க நடந்து போய்
வல்லு மா முலையார் கணம் பயில் வைகை அம் துறை எய்தினான்.  
1798.    
குறுகு முன்னர் அதிர்ந்து வைகை கொதித்து அகன் கரை குத்திவேர்
பறிய வன் சினை முறிய விண் தொடு பைந் தருக்களை உந்தியே
மறுகி வெள்ளம் எடுத்து அலைத்தர மன்னவன் கரை தன்னில் நின்று
இறுதியில் அவனைத் தொழற்கு இடையூறு இது என்று அஞர் எய்துவான்.     
1799.    
இழுதொடும் சுவை அமுது பென் கலன் இட்டு உணாது இரு கண் கணீர்
வழிய வந்து விலக்குவாரின் வளைந்தது ஆறு பகல் செய்யும்
பொழுது எழும் பொழுதோ மறுக்கம் விளைக்குமே இகல் பூழியன்
வழுதி அன்றியும் வைகையும் பகை ஆனது என்று வருந்தினான்.          
1806.    
மண்ணினை வளர்க்கும் வைகை வடகரை அளவு நண்ணிப்
புண்நிய நீற்றுக் காப்புப் புண்டர நுதலில் சாத்தி
உள் நிறை கருத்துக்கு ஏற்ப உறுதுணை உனக்கு உண்டாகி
நண்ணுக என்று பொன்னி நாடனை விடுத்து மீண்டு.        
1854.    
அறவன் நீ அல்லையோ உன் அகத்தினுக்கு இசைந்த செய்கென
இறைவனது அருளால் வானின் எழுமொழி கேட்டு  வைகைத்
துறைவனும் அறத்தின் ஆற்றால் சோழனைச் சிலமால் யானை
மற வயப் பரிபூண் மற்றும் வழங்கினான் விடுத்தான் பின்னர்.
1857.    
பரும் கை மால்வரைப் பூமியன் பைந்தமிழ் நாட்டின்
இரங்கு தெண் திரைக் கரங்களால் ஈர்ம் புனல் வைகை
மருங்கில் நந்தனம் மலர்ந்த பன் மலர் தூ உய்ப் பணியப்
புரம் கடந்தவன் இருப்பது பூவண நகரம்.      
1982.    
பூசத் துறையில் புகுந்து ஆடியப் பொன்னித் தென்சார்
வாசத்து இடை மா மருதைப் பணிதற்கு வைகைத்
தேசத்தவன் கீழ்த்திசை வாயில் கடந்து செல்லப்
பாசத் தளையும் பழியும் புற நின்ற அன்றே.
2194.    
முறை என இமையோர் வேண்ட முளைத்த நஞ்சாய் இன்று சான்றாய்
உறை என மிடற்றில் வைத்த உம்பரான் மதுரைக்கு ஆரம்
திறை என எறி நீர் வைகைத்து எற்கது குரு இருந்த
துறை என உளது ஓர் செல்வத் தொல் மணி மாடமூதூர்.  
2298.    
தேக்கு நீர் வைகை நாட்டு ஒரு தென் புலத்து
ஆக்கும் மாடவை வைப்பு ஒன்று உள அவ்வயின்
வீக்கு யாழ் செயும் வண்டுக்கு வீழ் நறவு
ஆக்கு தாமரை வாவி ஒன்று உள்ளது ஆல்.    
2387.    
பிணத்தினைக் கோலி புண் நீர் ஆற்றினை பெருக்கி உண் பேய்க்
கணத்தினை உதைத்து நூக்கிக் கரை உடைத்து ஒருவன் பூதம்
நிணத்தொடும் வரும் அந் நீத்தம் நேர் பட விருந்து கையால்
அணைத்து வாய் மடுக்கும் வைகை அருந்திய பூதம் என்ன.       
2445.    
தரை கிழித்து எழுநீர் வைகைத் தடம் கரை எக்கர் அல்குல்
அரமே கலை சூழ்ந்து என்ன அலர்ந்து தாது உகுப்ப ஞாழல்
மரகதம் தழைத்து வெண் முத்து அரும்பிப் பொன் மலர்ந்து வாங்கும்
திரை கடல் பவளக்காடு செய்வன கன்னிப் புன்னை.
2621.    
போன இடைக் காடனுக்கும் கபிலனுக்கும் அகத்து உவகை பொலியும் ஆற்றான்
ஞான மயம் ஆகிய தன் இலிங்க உரு மறைத்து உமையா நங்கை யோடும்
வானவர் தம் பிரான் எழுந்து புறம் போய் தன் கோயிலின் நேர் வடபால் வைகை
ஆன நதித் தென்பால் ஓர் ஆலம் கண்டு அங்கண் இனிது அமர்ந்தான் மன்னோ.
2627.    
சிலர் வந்து மன்னா ஓர் அதிசயம் கண்டனம் வைகைத் தென் சாராக
அலர் வந்தோன் படைத்த நாள் முதல் ஒரு காலமும் கண்டது அன்று கேள்வித்
தலை வந்த புலவரொடு ஆலவய் உடைய பிரான் தானே செம்பொன்
மலைவந்த வல்லியொடும் வந்து இறை கொண்டு உறை கின்றான் மாதோ என்றார்.        
2628.    
அவ்வுரை தன் செவி நுழைந்து புகுந்து ஈர்ப்ப எழுந்து அரசன் அச்சத்து ஆழ்ந்து
தெவ்வர் முடித் தொகை இடறும் கழல் காலான் அடந்து ஏகிச் செழுநீர் வைகை
கௌவை நெடும் திரைக் கரத்தால் கடிமலர் தூய உய்ப்ப பணியத் தென் கரைமேல் வந்து
மௌவல் இள முகை மூரல் மாதி னொடும் இருக்கின்ற மணியைக் கண்டான்.
2634.    
தென்னவன் இன்ன வண்ணம் ஏத்தினான் செம் பொன் கூடல்
மன்னவன் கேட்டா ஆகாய வாணியால் வைகை நாட
உன்னது சோத்த நாம் கேட்டு உவந்தனம் இனிய தாயிற்று
இன்னம் ஒன்று உளது கேட்டி என்றனன் அருளிச் செய்வான்.     
2714.    
தொடுத்த வறுமையும் பயனும் தூக்கி வழங்குநர் போல
அடுத்த வயல் குளம் நிரப்பி அறம் பெருக்கி அவனி எலாம்
உடுத்த கடல் ஒருவர்க்கும் உதவாத உவரி என
மடுத்து அறியாப் புனல் வைகைக் கரை உளது வாதவூர்.
2926      
ஞான நாயகன் அணையா நரி பரி வெள்ளம்
ஆன வாரு உரை செய்து மீண்டு அப் பரி நரியாய்ப்
போன வாறு கண்டு அமைச்சரைப் புரவலன் கறுப்ப
வான ஆறு போல் வைகை நீர் வந்தவாறு உரைப்பாம்.     
2977.    
கங்கைப் புனல் வடிவாகிய கவ்வைத் திரை வைகைச்
சங்கச்சரி அறல் ஆம் மலர்த் தார் ஓதியை நோக்கா
வங்கக் கடல் பேர் ஊழியில் வருமாறு என எவரும்
இங்கு அற்புதம் அடையப் பெருக என்றான் அருள் குன்றான்.    
2978.    
தும்பைச் சடை முடியான் ஒரு சொல்லாடவும் முன்னாள்
வம்பைப் பெரு முலையால் வரி வளையால் வடு அழுத்தும்
கொம்பைத் தவம் குலைப்பான் கடும் கோபம் கொடு நடக்கும்
கம்பை பெரு நதியில் கடும் கதியால் வரும் வைகை.
2982.    
வரை உந்திய மது முல்லையின் எய்பாற அயிர் மருதத்
தரை உந்திய கரும்பின் குறை சாறு ஓடு உவர் ஆறோடு
இரையும் தெழு தூர் நிர் வைகை இந் நகர் வைகும்
திரையும் தெழு கடல் தம்மிடம் சென்றால் அவை போலும்.          
2992.    
பண் சுமந்த மறை நாடரும் பொருள் பதம் சுமந்த முடியார் மனம்
புண் சுமந்த துயர் தீர வந்த பரி நரிகளாய் அடவி போன பின்
விண் சுமந்த சுர நதி எனப் பெருகு வித்த வைகை இது விடையவன்
மண் சுமந்து திரு மேனிமேல் அடி வடுச் சுமந்த கதை ஓதுவாம்.              
3006.    
குறட்கு நீர் அருத்தி வைகைக் குடிஞையாய் ஒழுகும் கங்கை
அறம் குழல் பிரிவின் ஆற்றாது அன்பினால் அவளைக் காண்பான்
மறக் கயல் நெடும் கணாளை வஞ்சித்து வடிவம் மாறிப்
புறப்படு வாரைப் போலப் போதுவார் போத மூர்த்தி.         
3040.    
ஆண் தகை வனப்பை நோக்கி அடிக்கவும் இல்லேம் அஞ்சி
ஈண்டினேம் என்று கூற இம் என அமைச்ச ரோடும்
பாண்டியன் எழுந்து நாம் போய்ப் பங்கு அடை பட்ட எல்லாம்
காண்டும் என்று எறிநீர் வைகைக் குடிஞை அம் கரையைச் சார்ந்தான்.         
3160.    
கையர் மாளவும் நீற்றினால் கவுரியன் தேயம்
உய்வது ஆகவும் இன்று நும் அருளினால் ஒலி நீர்
வைகை நாடன் மேல் வெப்பு நோய் வந்ததால் அதனை
ஐய தீர்த்திடல் வேண்டும் என்று அடியில் வீழ்ந்து இரந்தார்.         
3171.    
ஐய இச்சுரம் ஆற்றரிது ஆற்றரிது என்னா
வைகை நாடவன் வல் அமண் மாசு தீர்ந்து அடியேன்
உய்ய வேண்டுமேல் அதனையும் அடிகளே ஒழித்தல்
செய்ய வேண்டும் என்று இரந்தனன் சிரபுரக் கோனை.   
3217.    
உங்களேடும் எங்கள் ஏடும் உம்பர் வானளாய் விரைஇப்
பொங்கி ஓடும் வைகை நீரில் இடுக இட்ட போது தான்
அங்கு நீர் எதிர்க்கும் ஓலை வெல்லும் ஓலை அன்றியே
துங்க வேலை செல்லும் ஓலை தோற்கும் ஓலை யாவதே.
3223.    
ஊகம் தவமும் பழு மரத்தை உதைத்துக் கரை மாறிட ஒதுக்கிப்
பூகம் தடவி வேர் கீண்டு பொருப்பைப் பறித்துப் புடை பரப்பி
மாகம் துழாவிக் கடுகிவரும் வைகைப் புனலை மந்திரத்தால்
வேகம் தணிவித்து ஏடு எழுதி விடுத்தார் முன் போல் வெள்காதார்.     
3338.    
இந் நதி வெண் முத்து ஆரம் எனக் கிடந்து இலங்கும் சென்னி
மன்னவன் நாடு ஈது என்ப தமிழ் அறி வைகைப் பேர்யாறு
அந்நதி துறக்க மண்மேல் வழுக்கி வீழ்ந்தாங்குத் தோற்றித்
தென்னவன் நாடு சேய்த்தாத் தெரிவதே காண்மின் என்றான். 
3345.    
கொண்டல் படியும் திருவாப்பனூரும் தொழுது குளிர்திரைக்கை
வண்டு படியும் கமலமுக வைகைப் பிராட்டி எதிர் வண்ங்கிக்
கண்டு பணிந்து திசை எட்டும் விழுங்கி அண்டம் கடந்து உலகம்
உண்ட நெடியோன் என உயர் கோபுரம் முன் இறைஞ்சி உள்புகுதா.   
--------------------------------------------------------

'வேகவதி' என்ற சொல் உள்ள பாடல்கள்
875.       
தீர்த்தன் இதழிச் சடை நின்றும் இழிந்து வரலால்  சிவகங்கை
தீர்த்தன் உருவம் தெளி வோர்க்கு ஞானம் தரலால் சிவஞான
தீர்த்தம் காலில் கடுகி வரும் செய்தியாலே வேகவதி
தீர்த்தம் கிருத மாலை என வைகை நாமம் செப்புவர்  ஆல்.          

3228.    
பொருப்பே சிலையாய் புரம் கடந்த புனிதனே எத்தேவர்க்கும்
விருப்பேய் போகம் வீடுதரும் மேலாம் கடவுள் என நான்கு
மருப்பேய் களிற்றான் முடி தகர்த்தான் மருமான் அறியக் குருமொழி போல்
நெருப்பே அன்றி வேகவதி நீரும் பின்னர்த் தேற்றியதால்.

'கிருதமாலை ' என்ற சொல் உள்ள பாடல்கள்
875.       
தீர்த்தன் இதழிச் சடை நின்றும் இழிந்து வரலால்  சிவகங்கை
தீர்த்தன் உருவம் தெளி வோர்க்கு ஞானம் தரலால் சிவஞான
தீர்த்தம் காலில் கடுகி வரும் செய்தியாலே வேகவதி
தீர்த்தம் கிருத மாலை என வைகை நாமம் செப்புவர்  ஆல்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
புரட்டாசி 14 (01.10.2019) செவ்வாய் கிழமை. 

------------------
சென்னை மயிலாப்பூரில் வசித்து வரும் நு.த.லோகசுந்தரம் அவர்கள் N D Logasundaram <selvindls61@gmail.com>  
சிலப்பதிகாரம், கல்லாடம் மற்றும் பாண்டிக்கோவை இவற்றில்  “வையை” என்ற சொல் அடங்கியுள்ள பாடல்களைத் தொகுத்து வழங்கியுள்ளார்.
ஐயா அவர்களுக்கு நன்றி.

சிலம்பினில் ஒன்பது இடங்களில் “வையை” இடம் பெற்றுள்ளது.
------------- - - - - -
கடைகழி மகளிர் காதலஞ் செல்வரொடு
வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை
விரிபூந் துருத்தி வெண்மண லடைகரை
ஓங்குநீர் மாடமொடு நாவா யியக்கிப்
பூம்புணை தழீஇப் புனலாட் டமர்ந்து 75           14 ஊர்காண் காதை
---------------
ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்
பூவும் புகையும் புனைசாந்துங் கண்ணியும்
நீடுநீர் வையை நெடுமா லடியேத்தத்
தூவித் துறைபடியப் போயினாள் மேவிக் 5
குரவை முடிவிலோர் ஊரரவங் கேட்டு
விரைவொடு வந்தாள் உளள்                                18 துன்ப மாலை
--------------------- - - - -
மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் 3
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும்--வையைக்கோன்
கண்டளவே தோற்றான்அக் காரிகைதன் சொற்செவியில்
உண்டளவே தோற்றான் உயிர்                     20 வழக்குரை காதை
---------------------------- - - - -
மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கென
இரவும் பகலும் மயங்கினள் கையற்று
உரவுநீர் வையை ஒருகரைக் கொண்டாங்கு 185
அவல என்னாள் அவலித்து இழிதலின்              23 கட்டுரை காதை
----------------------------------- - - - -
விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும் 5
ஒடியா இன்பத் தவருடை நாட்டுக்
குடியுங் கூழின் பெருக்கமும் அவர்தம்
வையை பேரியாறு வளஞ்சுரந் தூட்டலும்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிதலும்         (கட்டுரை)
ஆரபடி சாத்துவதி யென்றிரு விருத்தியும் 10      23 கட்டுரை காதை
----------------------------------------- - - - -
இடைக்குல மகளிடமெய்தி ஐயையவள் மகளோடும்
வையையொரு வழிக்கொண்டு மாமலை மீமிசையேறிக்
கோமகடன் கோயில்புக்கு நங்கைக்குச் சிறப்பயர்ந்த       
செங்குட்டுவற்குத் திறமுரைப்பர் மன் 1           29 வாழ்த்துக்¡தை
-----------------------------------                (உரைப் பாட்டு மடை)

வானவ னெங்கோ மகளென்றாம் வையை ஆர்
கோனவன்றான் பெற்ற கொடியென்றாள்-வானவனை
வாழ்த்துவோம் நாமாக வையை ஆர் கோமானை   (ஆயத்தார் சொல்)
வாழ்த்துவாள் தேவ மகள் 12                            29 வாழ்த்துக்¡தை
-----------------------------------                (உரைப் பாட்டு மடை)

தொல்லை வினையால் துயருழந்தாள் கண்ணின்நீர்
கொல்ல உயிர் கொடுத்த கோவேந்தன் வாழியரோ
வாழியரோ வாழி வருபுனல்நீர் வையை               (வாழ்த்து)
சூழு மதுரையார் கோமான்றன் தொல்குலமே 13   29 வாழ்த்துக்¡தை
-----------------------------------                (உரைப் பாட்டு மடை)

யானது பொறேஎன் என்மகன் வாராய்
வருபுனல் வையை வான்றுறைப் பெயர்ந்தோன்
உருகெழு மூதூர் ஊர்க்குறு மாக்களின்
வந்தேன் கேட்டேன் மனையிற் காணேன் 110       30 வரந்தரு காதை
----------------------------------------
 மதிரை (மதுரை) யின் மிக  அண்ணி த்த தொடர்புடைய 
ஏறக்குறைய 10 நூற்றாண்டு நூல்கள் வழியும் காணலாம் 
-----------------------------------------

 ஈன்றசெங்கவிஎனத்தோன்றிநனிபரந்து 5
பாரிடைஇன்பம்நீளிடைப்பயக்கும்
பெருநீர் வையை வளைநீர்க்கூடல்
உடலுயிர்என்னஉறைதருநாயகன்                 2 கல்லாடம்  தாய்அறிவுகூறிவரைவுகடாதல்
-------------------------------- - - - -
வளர்குறிமயங்காவணிகன்ஆகியும்15
விழைதரும்உழவும்வித்தும்நாறும்
தழைதலின்வேளாண்தலைவன்ஆகியும்
விரிதிரை வையை த்திருநதிசூழ்ந்த
மதுரையம்பதிநிறைமைம்மலர்க்களத்தினன்     10 கல்லாடம் அறத்தொடுநிற்றல்
------------------------------ - - - -
சிஞ்சைஇடங்கரைபைஞ்சிலைச்சேலை
உடற்புலவுமாற்றும்படத்திரைவையை 25
நிறைநீர்வளைக்கும்புகழ்நீர்க்கூடல்
வெள்ளியம்பொதுவில்கள்ளவிழ்குழலொடும்       27கல்லாடம்  இரவுக்குறிவேண்டல் 
 ---------------------------------- - - - - -
ஊடிஆடுநர்த்திரையொடுபிணங்கித்
தோழியின்தீர்க்கும் வையை த்துழனியும் 35
அளவாஊழிமெய்யொடுசூழ்ந்து
நின்றுநின்றோங்கிநிலைஅறம்பெருக்கும்
ஆனாப்பெரும்புகழ்அருள்நகர்க்கூடல்          42 கல்லாடம் இயல்இடங்கூறல்
 ---------------------------------- - - - - -
தண்ணடைக்கணவற்பண்புடன்புணரும்
வையை மாமாதுமணத்துடன்சூழ்ந்த
கூடல்பெருமான்பொன்பிறழ்திருவடி
நெஞ்சுஇருத்தாதவஞ்சகர்போல 30   44 கல்லாடம் 
 ----------------------------------        தலைவற்குப்பாங்கிதலைவருத்தம்கூறல்

நீங்காதுஉறையும்நிமிர்கடைப்பெருமான் 20
உரகன்வாய்கீண்டமாதவன்போல
மண்ணகழ்ந்தெடுத்துவருபுனல் வையை யைக்
கூலம்சுமக்கக்கொற்றாள்ஆகி              49 கல்லாடம் முகிலொடுகூறல்
 ----------------------------------           
காலற்காய்ந்தகாலினன்கூடல்
திருமறுகுஅணைந்துவருபுனல் வையை 10
வரைபுரண்டென்னத்திரைநிரைதுறையகத்து
அணைந்தெடுத்தேந்தியஅரும்புமுகிழ்முலையோள்
 ----------------------------------                       55 கல்லாடம் உள்மகிழ்ந்துஉரைத்தல்

வையகம்அளித்தமணிஒளிக்கடவுள் 25
நெடுமறிக்கூடல்விரிபுனல் வையை யுள்
பிடிகுளிசெய்யும்களிறதுபோல
மயிலெனும்சாயல்ஒருமதிநுதலியை
 ----------------------------------             57 கல்லாடம் தன்னைவியந்துஉரைத்தல்

திரைநிரைதிரைத்துக்கரைகரைக்கொல்லும்
வையை நீர்விழவுபுகுந்தனம்எனஒரு 5
பொய்யினள்அன்றிமெய்யினைநீயும்
 ----------------------------------              89 கல்லாடம் ஐயம்உற்றுஓதல்

இறையோன்திருவடிநிறையுடன்வணங்கும்40
பெரும்புனல்ஊரஎம்இல்
அரும்புனல் வையை அம்புதுநீர்அன்றே
 ----------------------------------              90 கல்லாடம் தலைவனோடுஊடல்
வையையும் தையலும்
ஏற்பக்குடைந்தாடில்ஏசுவர்அல்லாக்கால்
மாற்றியிருந்தாள்ஏனவுரைப்பர்-வேற்கண்ணாய்
கொல்யானைமாறன்குளிர்புனல்வையை நீர்
எல்லாம்எனக்கோர்இடர்               84  முத்து-ஒள்-அயிரம்(முத்தொள்ளாயிரம்)
 ----------------------------------              
பூமருகண்ணினைவண்டாப்புணர்மெல்முலைஅரும்பாத்
தேமருசெவ்வாய்தளிராச்செருச்செந்நிலத்தைவென்ற
மாமருதானைஎம்கோன் வையை வார்பொழில்ஏர்கலந்த
காமரும்பூங்கொடிகண்டேகளித்தஎம்கண்இணையே        1 பாண்டிக்கோவை
 ----------------------------------
சினமாண்கடல்படைச்சேரலன்தென்நறையாற்றுவந்து
மனமாண்பகழிவைவேல்கொண்டகோன் வையை நாடுஅனைய
கனமாண்வனமுலைக்கைஆர்வரிவளைக்காரிகையீர்
இனமான்புகுந்ததுவோஉரையீர்இரும்புனத்தே                61 பாண்டிக்கோவை
 ----------------------------------
ஓங்கும்பெரும்புகழ்செங்கோல்உசிதன்உறுகலியை
நீங்கும்படிநின்றகோன் வையை வாய்நெடுநீரிடையாள்
தாங்கும்புணையொடுதாழும்தண்பூம்புனல்வாய்ஒழுகின்
ஆங்கும்வரும்அன்னதால்இன்னநாள்அவள்ஆர்அருளே       86 பாண்டிக்கோவை
-----------------------------------------------
நண்ணியபோர்மன்னர்வான்புகநட்டாற்றுஅமர்விளைத்த
மண்இவர்செங்கோல்வரோதயன் வையை நல்நாடுஅனையாய்
கண்ணியன்தண்ணந்தழையன்கழலன்கடும்சிலையன்
எண்ணியதுயாதுகொல்லோஅகலான்இவ்இரும்புனமே           90 பாண்டிக்கோவை
--------------------------------------------------
மின்னைமறைத்தசெவ்வேல்வலத்தால்விழித்துள்ஒன்னார்
மன்னைமறைத்தஎம்கோன் வையை சூழ்பௌவநீர்புலவம்
தன்னைமறைத்துஇளஞாழல்மகழும்தண்பூந்துறைவா
என்னைமறைத்துஇவ்இடத்தியயாதுகொல்எண்ணியதே           105 பாண்டிக்கோவை
--------------------------------------------------
திண்போர்அரசரைச்சேவூர்அழிவித்ததென்னன்நல்நீர்
மண்போல்அழிக்கும்செங்கோல்மன்னன் வையை நல்நாடுஅனையாள்
கண்போல்குவளைஅம்போதுஅங்குஓர்காளையைகண்டுஇரப்ப
தண்போதுஅவன்கொடுத்தான்அணிந்தாள்இத்தடம்கண்ணியே   129 பாண்டிக்கோவை
--------------------------------------------------
ஓங்கியவெண்குடைப்பைங்கழல்செங்கோல்உசிதன் வையை 
வீங்கியதண்புனல்*ஆடிவிளையாட்டுஅயர்பொழுதில்
தேங்கியதெள்திரைவாங்கஒழுகிநின்சேஇழையாள்
நீங்கியபோதுஅருள்செய்தனன்வந்துஓர்நெடும்தகையே            132 பாண்டிக்கோவை
--------------------------------------------------
திரைப்பால்இரும்புனல்சேவூர்எதிர்நின்றசேரலன்கோன்
வரைப்பால்அடையச்செற்றான் வையை அன்னாள்திறத்துவண்டுஆர்
விரைப்பாய்நறுங்கண்ணியாய்பொய்மைநீசொல்லின்மெய்ம்மைஎன்பது
உரைப்பார்பிறர்இனியாவர்கொல்லோஇவ்உலகின்உள்ளே         160 பாண்டிக்கோவை
--------------------------------------------------
கொங்கைதளரினும்கூந்தல்நரைப்பினும்ஏந்தல்மற்றுஇவ்
அங்கைஅடைக்கலம்என்றேகருதிஅருள்ககண்டாய்
கங்கைமணாளன்கலிமதனன்கடிமாமணற்றி
மங்கைஅமர்அட்டகோன் வையை நாடுஅன்னமாதரையே  180 பாண்டிக்கோவை
--------------------------------------------------
பண்தான்அனையசொல்லாய்பையஏகுபறந்தலைவாய்
விண்டார்படச்செற்றகோன் வையை சூழ்வியல்நாட்டகம்போல்
வண்டுஆர்பொழிலும்மணிஅறல்யாறும்மருங்குஅணைந்து
கண்டார்மகிழும்தகைமையதுயாம்செல்லும்கானகமே            182 பாண்டிக்கோவை
--------------------------------------------------
சிறியபைங்கண்களிறுஊர்ந்துதென்பாழியில்செற்றுஅதிர்ந்தார்
மறியவைவேல்கொண்டதென்னவன் வையை  நல்நாட்டகம்போல்
முறியபைம்போதுகள்மேல்வண்டுபாடிமுருகுஉயிர்க்கும்
நறியபைங்கானம்நையாதுநடக்கஎன்நல்நுதலே                          183 பாண்டிக்கோவை
--------------------------------------------------
தாக்கியபோர்வயவேந்தர்இருவர்க்கும்சந்திடைநின்று
ஆக்கியசெல்வதுகாதலித்தார்நமர்ஆர்அமருள்
வீக்கியவார்கழல்வேந்தர்தம்மானம்வெண்மாத்துடனே
நீக்கியகோன்நெடுநீர் வையை நாடுஅன்னநேரிழையே      242 பாண்டிக்கோவை
--------------------------------------------------
இன்பார்ப்புஒடுங்கவலம்சிறைகோலிஇடஞ்சிறையால்
அன்பால்பெடைபுல்லிஅன்னம்நடுங்கும்அரும்பனிநாள்
என்பால்படரொடுஎன்னாம்கொல்இருஞ்சிறைஏற்றமன்னர்
தென்பால்படச்சென்றகோன் வையை நாடுஅன்னசேயிழையே  247 பாண்டிக்கோவை
--------------------------------------------------
பங்கயப்பூம்புனல்நாடன்பராங்குசன்பாழிஒன்னார்
மங்கையர்க்குஅல்லல்கண்டான்மணிநீர் வையை வார்துறைவாய்
எம்கையைத்தீம்புனல்ஆட்டியஈரம்புலர்த்திவந்தும்
அங்கையின்சீறடிதீண்டிச்செய்யீர்செய்யும்ஆர்அருளே                   279 பாண்டிக்கோவை
--------------------------------------------------
விண்டுறைதெவ்வர்விழிஞத்துஅவியவெல்வேல்வலம்கைக்
கொண்டுஉறைநீக்கியகோன் வையை நாடுஅன்னகோல்வளைஇவ்
வண்டுஉறைகோதைவருந்தநல்லார்இல்லில்வைகுதலால்
தண்துறைசூழ்வயல்ஊரன்பெரிதும்தகவுஇலனே                               291 பாண்டிக்கோவை
--------------------------------------------------
வாடும்நிலைதனையேநீக்கிமண்காத்துவல்லத்துஎதிர்ந்தார்
ஓடும்நிலைகண்டான் வையை ஒள்நுதல்மங்கையரோடு
ஆடும்நிலையும்அல்லைஅவரோடுஅம்பூம்பொழில்வாய்
நீடம்நிலைமையும்அல்லைசொல்லாய்என்நெடும்தகையே              323 பாண்டிக்கோவை
--------------------------------------------------                                       
ஓடுகின்றதனைநின்றபேய்தொடர
வோடியோடியுளையப்பிடித்
தாடுகின்றகொடிமாடமுன்றில்விட
வையை கண்டருளியதனையே
--------------------------------------------------                                                               243 தக்கயாகப்பரணி


நூ த லோ சு
மயிலை