Showing posts with label குழி. Show all posts
Showing posts with label குழி. Show all posts

Sunday, 10 March 2019

திருவிளையாடற் புராணத்தில் ‘பத்தர்' என்ற சொல் இடம்பெற்றுள்ள பாடல்களின் தொகுப்பு


பரஞ்சோதி முனிவர் மொழிபெயர்த்துப் பாடியருளிய
திருவிளையாடற் புராணத்தில்
பத்தர்' என்ற சொல் இடம்பெற்றுள்ள பாடல்களின் தொகுப்பு

பத்தர் என்றால், துளை அல்லது குழி என்று பொருள்.  துளைகளுடன் கூடிய மீன்பிடிக்கப் பயன்படும் கருவிக்குப் பத்தை என்று பெயர்.
“நீர்ப் பத்தர்“ என்றால் “தண்ணீர் நிறைந்துள்ள குழி அல்லது பள்ளம்“ என்று பொருள்.  

593.       
கோலயாழ்த் தெய்வம் பராய்க் கரம் குவித்துக் கொழும் சுடர்ப் பசும் கதிர் விளக்கம்
போல நூல் பொல்லம் பொத்து பொன் நிறத்த போர்வை நீத்து அவிழ் கடி முல்லை
மாலை மேல் வீக்கிப் பத்தர் பின் கிடப்ப மலர்க்குழல் தோய் சுவர் கிடத்திச்
சேலை நேர் விழியாள் ஆடகம் திரித்துத் தெறித்தனள் பண் அறிந்து இசைப்பாள்.

2043.    
பழைய தோர் பொல்லாம் பொத்திய பத்தர் யாழ்க்கோன் தோள்
உழைய தாகி விட்டு எருத்தலைத்து ஊசல் ஆடிய ஒண்
குழைய காதினில் களவிணர்க் குறிய காய் தூக்கித்
தழையும் வார்சிகை சரிந்திடச் சுமை அடை தாங்கி.        

2057.    
குண்டு நீர் வறந்திட்டு அன்ன நெடும் கொடிக் குறுங்காய்ப் பத்தர்த்
தண்டு நீள் நிறத்த நல் யாழ் இடம் தழீஇ தெறித்துத் தாக்கிக்
கண்டு ஆடகம் திரித்துக் கௌவிய திவ விற் பாவ
விண்டு தேன் ஒழு கிற்று என்ன விக்கி மென் சுருதி கூட்டி.            

2097.    
பத்தர் யாழ் இசைக் கிழவனைப் பனைக்கை மான் எருத்தில்
வைத்து மாட நீள் நகர் வலம் செய்வித்து மலர்ந்த
சித்தம் ஆழ்ந்திட வரிசை கண் மிதப்புறச் செய்து
தத்து மான் தொடை தேரினான் தன் மனை புகுவான்.      

2103.    
இத் தொழில் அன்றி வேறு தொழில் இவற்கு இன்மையாலே
பத்திரன் இலம்பாது எய்த பொறுப்பரோ பழனக் கூடல்
சித்தவெம் அடிகள் வேந்தன் பொன்னறைச் செல்வம் வௌவிப்
பத்தர் யாழ் இடத் தோள் ஏந்திப் பாடுவான் காணவைப்பார்.    


பாடற் தொகுப்பு
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
மாசி 26 (10.03.2019) ஞாயிற்றுக் கிழமை.

நன்றி - திருவிளையாடற் புராணப் பாடல்களை இணையத்தில் பதிவு செய்து வைத்துள்ள தமிழ் இணையக் கல்விக் கழகத்தினருக்கு நன்றி.