Showing posts with label ஓத்து. Show all posts
Showing posts with label ஓத்து. Show all posts

Wednesday, 19 January 2022

குறள் 134 ஓத்து என்றால் என்ன பொருள்

 கி. காளைராசன் to mintamil

17 Mar 2019, 21:36:14


“மறப்பினும் ஓத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்

பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்”

(அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:134)


ஓத்து என்றால் ஓதுதல் அல்லது படித்தல் என்று பொருள்.

நினைவாற்றல் குறைவாக இருந்து மறந்துவிட்டாலும் பரவாயில்லை ஓத்துக் (படித்துக்) கொள்ளலாம்.  ஆனால் பிறப்பு ஒழுக்கம் குறைந்தால் பிறப்பு கெட்டுவிடும் என்கிறார் திருவள்ளுவர்.


“மறப்பினும் படித்துக் கொள்ளலாகும், பார்ப்பான்

பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்”

ஞாபகமறதியாகித் தேர்வைச் சரியாக எழுதமுடியாவிட்டாலும் பரவாயில்லை. மீண்டும் படித்துக் கொள்ளலாம்.

ஆனால் ஒழுக்கம் தவறிப் “பிட்“ அடித்தால் debar ஆகி மாணவனின் மாண்பு கெட்டு விடும் என்பது போன்ற அறிவுரையை இந்தக் குறள் வழங்குகிறது.

அன்பன்

கி. காளைராசன்

திருக்குறள் ஓலைச்சுவடி இணையத் தமிழ்ப்பல்கலைக்கழக நூலகத்தில் வாசிக்கக் கிடைக்கிறது.

http://www.tamilvu.org/library/suvadi/s210/html/s2100052.htm

---------------------------------------------------------

On Sun, 17 Mar 2019 at 20:56, செல்வன் <hol...@gmail.com> wrote:

ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்-> தேவாரம், திருவாசகம் முதலான நூல்களை ஓதுபவர்களை ஓதுவார் என அழைக்கும் வழக்கம் உண்டு.


ஓதுதல் என்பது பொதுவாக ஆன்மிகநூல்களை தினமும் கடவுள் முன் பாராயணம் செய்வதையே குறிக்கும்.


படிப்பதை குறிக்க "கற்றல், கற்பது" எனும் வார்த்தைகள் உன்டு


ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம் என்பது தினமும் இறைநூல்களை ஓதுக, வழிபாடு செய்க எனும் பொருளில் வரும்.


அன்பன்

கி. காளைராசன்