இந்து இந்தியா என்ற பெயர்களை ஆங்கிலேயர்கள் வைத்தனர் என்று சிலர் சொல்லியும் எழுதியும் வருகின்றனர். ஆனால் இந்தியாவின் பழைய பெயர் இந்துஸ்தான் ஆகும். இந்துஸ்தான் என்ற பெயரைச் சுதந்திரம் பெறும்போது இந்தியா என மாற்றியுள்ளனர். அவ்வளவுதான்.
இந்துஸ்தான் என்றால்.....
கீழேயுள்ளது நண்பர் திரு கிருஷ்ணகுமார் அவரகளின் முகநூல் பதிவு. நல்லதொரு பதிவை வழங்கிய நண்பருக்கு நன்றி.
-----------------------------
தொல்தமிழ் நூற்கள் வாயிலாக ஹிந்துஸ்தானத்திற்கு பொருள் புரிந்து கொள்ள நல்ல முயற்சி காசிஸ்ரீ காளைராஜன் ஐயா
हिमालयं समारभ्य यावातू इंदु सरोवरं
तं देवनिर्मितं देशं हिन्दुस्तनम प्रचक्षते
ஹிமாலயம் ஸமாரப்ய யாவத் இந்து ஸரோவரம்
தம் தேவநிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷதே
இமய மலையிலிருந்து ஹிந்து மஹா சமுத்திரத்திற்கு இடைப்பட்டதான தேவர்களால் நிர்மாணிக்கப்பட்ட நிலப்பரப்பு ஹிந்துஸ்தானம் என்று சொல்லப்படுகிறது என ப்ருஹன்நாரதீய புராணம் சொல்லுகிறது.
சிந்து நதிக்குக் கீழ் இருக்கும் நிலப்பரப்பை ஹிந்த் என்றே அராபிய பார்ஸியர்களும் அழைத்தனர். இச்சொல்பயன்பாடு BCE 500க்கு முன்னாலிருந்தே அராபிய பார்ஸியர்களால் கையாளப்பட்டுள்ளது.
பரங்கிக் கும்பினியர் இந்த நாட்டை ஹிந்துஸ்தானம் என்று சுட்டுவதற்கு முன்னரேயே இந்த நிலப்பரப்பை ஆக்ரமித்த அராபிய பெர்ஷியர்கள் சிந்து நதிக்கு கீழ் இருக்கும் நிலப்பரப்பை ஹிந்த் என்று குறிப்பிடுகின்றனர்.
ஹிந்துஸ்தானம் எனும் இந்த நிலப்பரப்பில் வாழும் மக்கள் அனைவரும் ஹிந்துக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
இங்கு வசிக்கும் இஸ்லாமிய க்றைஸ்தவர்களும் ஹிந்துக்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.
ஹிந்துஸ்தானத்திலிருந்து அரேபிய ஹஜ் யாத்திரை செல்லும் இஸ்லாமிய சஹோதரர்களை அரேபியாவில் ஹிந்தி / ஹிந்துக்கள் என்றே அழக்கின்றனர்.
நாட்டின் சட்டங்கள் முஸ்லீம், க்றைஸ்தவ, யஹூதி, பார்ஸி மதங்களை ஒழுகும் சஹோதரர்களல்லாத அனைத்து சமயங்களை ஒழுகும் சஹோதரர்களை ஹிந்துக்கள் என்றே சுட்டுகிறது.