Wednesday, 10 December 2025

கீழடியில் கிடைத்த மும்முலைப் பிராட்டி

 கீழடியில்  கிடைத்த  மும்முலைப் பிராட்டி




மும்முலைத் திருவழுமகள், மும்முலை நாயகி என மீனாட்சி அம்மன் அழைக்கப்படுகிறார்.

மதுரை மீனாட்சி அம்மன் (பார்வதி தேவியின் அம்சம்) மூன்று முலைகளுடன் பிறந்ததாகக் கூறப்படுகிறது. சிவபெருமானைக் கண்டதும், அந்த மூன்றாவது முலை மறைந்து, இரண்டு முலைகளுடன் அவள் திருமணத்திற்குத் தயாரானாள்.

மதுரை மீனாட்சி அம்மனாக அவதரித்த தடாதகை பிராட்டியார் புராணக் கதையுடன் தொடர்புடையது, அவர் மூன்று மார்புகளுடன் பிறந்து, சிவபெருமானைக் கண்டதும் நடுவில் உள்ள முலை மறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது

 

 திருப்பரங்குன்றம் கோயிலில் உள்ள சிற்பம்


மும்முலை பெண் அரசி 

கல்லாடம் [செய்யுள்30]

20  முனிவர் செங்கரஞ் சென்னி யாக்க வுருப்பசி முதலோர் முன்வாழ்த் தெடுப்ப மும்முலை யொருத்தியை மணந்துல காண்ட25  கூடற் கிறைவ    னிருதா ளிருத்துங் கவையா வென்றி நெஞ்சினர் நோக்கப் பிறவியுங் குற்றமும் பிரிந்தன போலப் பீரமு நோயு மாறின் வாரித் துறைவற் கென்னா தும்மே.(உரை) கைகோள்: களவு. தலைவிகூற்று.

துறை: இன்னலெய்தல்.

     (இ-ம்.) இதற்கு, “மறைந்தவற் காண்டல்” (தொல். கள. 20) என்னும் நூற்பாவின்கண் ‘வெறியாட் டிடத்து வெருவின் கண்ணும்’ எனவரும் விதிகொள்க.

1-5: வள்ளுறை.........................வெறியில்

வலிய உறையினை நீக்கி; திரிகின்ற வேலையுடைய மகனாகிய வேலனும்; முறத்திலே பரப்பிய நெல்லினை மூன்றும் இரண்டும் ஒன்றும்படக் கையால் அள்ளிப்பிடித்து உதோ எமக்கு முருகனும் அவன் ஏறும் மயிலின் எருத்தும் அவனது கோழிக் கொடியும் தோன்றுகின்ற என்று கூறுகின்ற குறிசொல்லுதலையுடைய கட்டுவித்தியரும் அவர் இது தெய்வத்தினாலாயது என்று கூறியதனால்; நடுங்குதற்குக் காரணமான துன்பத்தினால் வந்த மெலிவினையுடைய எஞ்செவிலித்தாயருங் கூடி; நிகழ்த்தாநின்ற இவ்வெறியாடலாலே என்க.

     (வி-ம்.) வள்-வலிமை. துளக்குதல்-சுழற்றுதல். வேன்மகன்-வேலன் (பூசாரி) அன்பு-முருகன் அன்பு என்னும் சொற்கு முருகு என்பதும் பொருளாகலின் முருகனை அன்பு என்றாள். அன்பே கடவுள் என்பது ஈண்டு நினைக. கழுத்தையுடைய மயில் என மாறிக்கூட்டிப் பொருள் கொள்ளினுமாம். மலையடி-போர் செய்யும் இயல்புடையன ஆதல் உணர்க. கட்டுவித்தியர் முறத்தில் நெல்லைப் பரப்பி அதனைக் கையால் அள்ளிப் பிடித்துக்கொண்டு தெய்வமேறப்

 



கல்லாடம் 

31. இன்னல் எய்தல்

வள்ளுறை கழித்துத் துளக்குவேல் மகனும்
மனவுமயிற் கழுத்து மாலை யாட்டியும்
நெல்பிடித்து உரைக்கும் குறியி னோளும்
நடுங்கஞர் உற்ற பழங்கண் அன்னையரும்
அயரும் வெறியில் தண்டா அருநோய்       (5)

ஈயாது உண்ணுநர் நெடும்பழி போலப்
போகாக் காலை புணர்க்குவது என்னோ?
நான்கெயிற்று ஒருத்தல் பிடர்ப்பொலிவரைப்பகை
அறுகால் குளிக்கும் மதுத்தொடை ஏந்த
முள்தாள் செம்மலர் நான்முகத்து ஒருவன்       (10)

எண்ணிநெய் இறைத்து மணஅழல் ஓம்ப
புவிஅளந்து உண்ட திருநெடு மாலோன்
இருகரம் அடுக்கிப் பெருநீர் வார்ப்ப
ஒற்றை ஆழியன் முயலுடல் தண்சுடர்
அண்டம் விளர்ப்பப் பெருவிளக்கு எடுப்ப       (15)

அளவாப் புலன்கொள விஞ்சையர் எண்மரும்
வள்ளையில் கருவியில் பெரும்புகழ் விளைப்ப
முனிவர் செங்கரம் சென்னி ஆக
உருப்பசி முத‍லோர் முன்வாழ்த்து எடுப்ப
மும்முலை ஒருத்தியை மணந்துலகு ஆண்ட       (20)

கூடற்கு இறைவன் இருதாள் இருத்தும்
கவையா வென்றி நெஞ்சினர் நோக்க
பிறவியும் கூற்றமும் பிரிந்தன போலப்
பீரமும் நோயும் மாறில்
வாரித் துறைவற்கு என்னா தும்மே?       (25)

-------------  (நன்றி  = https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0244.html )