Saturday, 25 February 2023

ஐராவதநல்லூர்

மதுரை 

ஐராவதநல்லூரில் வழிபாடு செய்தால்

தலைக்கு வருவன தலைப்பாகையோடு போகும்

 

(அருள்மிகு ஐராவதம் விநாயகர் கோயில்)

(அருள்மிகு ஐராவதம் விநாயகர் கோயில்)


(அருள்மிகு ஐராவதேசுவரர்)

(துர்வாச முனிவர் சிவலிங்க வழிபாடு செய்து சிவபெருமானிடம் இருந்து மலர் பெறுவதும், அந்த மலரை இந்திரனுக்கு அளிப்பதும்)

(ஐராவதம் ஐராவத கணேசரையும் ஐராவதேசுவரரையும் வணங்குதல்)

திருவிளையாடல் புராணம் -  சிவபெருமானது 64 திருவிளையாடல்களில், மதுரைக்காண்டத்தில் 18 படலங்கள் உள்ளன. கூடற்காண்டத்தில் 30 படலங்கள் உள்ளன.  திருவாலவாய்க் காண்டத்தில் 16 படலங்கள் உள்ளன.

மதுரைக் காண்டத்தில். இந்திரன் பழி தீர்த்த படலம் முதலாவது படலமாகும்.  இரண்டாவது படலமாக வெள்ளையானை சாபம் தீர்த்த படலம் இடம் பெற்றுள்ளது.  இப்படலம் ஆணவச் செயலால் சாபம் அடைந்த இந்திரனின் வாகனமான வெள்ளை யானையின் சாபத்தை போக்கிய சிவனின் கருணைமிகுந்த திருவிளையாடலைப் பற்றிக் கூறுகிறது.

கதைச் சுருக்கம் -  இந்திரன் சிவலிங்கத்தினைப் பூசை செய்து விசுவரூபனை கொன்ற பழியிலிருந்து தப்பித்தபின், இந்திரலோகத்திற்கு தேவர்களுடன் சென்றார்.   அங்கே இந்திரனுக்கு மாபெரும் வரவேற்பு கொடுக்கப்பட்டது.   இதனால் இந்திரன் மிகவும் மகிழ்ந்து தலைக்கணம் கொண்டான்.  அவனது வாகனமான ஐராவதமும் மிகவும் பெருமிதம் கொண்டு இருந்தது.

துர்வாசரின் சாபம் - அந்நாளில், துர்வாச முனிவர் சிவலிங்க பூசை செய்தார்.  அவரது பூசையை மெச்சிய சிவபெருமான் அவருக்குத் தன் சடைமுடியிலிருந்த தாமரை மலர் ஒன்றை எடுத்துக் கொடுத்து ஆசிர்வதித்தார்.  அந்த மலரைத் தன் கமண்டலத்தில் வைத்துப் பாதுகாத்து வந்தார்.   இந்திரனின் வெற்றியை வாழ்த்திப் போற்றும் வகையில் இந்திரனிடம் அந்த மலரை முனிவர் கொடுத்தார்.    வெற்றிச் செருக்கில் இருந்த இந்திரன் அந்த மலரை வாங்கி அவனது யானையான ஐராவதத்தின் மத்தகத்தின் மேல் வைத்தான்.   ஆனால் ஐராவதமோ அதன் துதிக்கையால் அந்த மலரை எடுத்துக் கீழே போடு அதன் காலால் நசுக்கி விட்டது. 

இதைக் கண்ட துர்வாசர் மிகவும் கோபம் கொண்டு “ உன் தலை பாண்டிய மன்னனின் சக்கராயுதத்தால் துண்டிக்கப்படட்டும்,  ஐரவாதம் அதனுடைய வெள்ளை நிறத்தையும் நான்கு தந்தங்களையும் இழந்து காட்டு யானையாக மாறிப் போகட்டும்” என்று சாபம் இட்டார்.

இது கேட்ட இந்திரன் பெரிதும் வருந்தி,  துர்வாசரிடம் “ஐம்புலன்களையும் வென்ற முனிவரே தாங்கள் பரிசாக அளித்த தாமரை மலரின் பெருமைகளை அறியாது அதனை தவறாகப் பயன்படுத்தி விட்டேன். எங்களுடைய தவறான செயலினை மன்னியுங்கள். எனக்கும், எனது வெள்ளை யானைக்கும் கொடுத்த சாபத்தினை மாற்றி அருளுங்கள்” என்று இந்திரன் வேண்டினான்.

சாப விமோசனம் - இந்திரனது பணிவு கண்டு கோபம் நீங்கிய முனிவர், “ உன் தலைக்கு வரும் ஆபத்து உன் முடிக்கு ஆகட்டும்,  காட்டுயானையாகி நூறாண்டு கழிந்தபின் மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரரின் பெருங் கருணையால் மீண்டும் வெள்ளை யானையாக மாறட்டும்” என்று கூறினார்.

சோமசுந்தரேசுவரர் அருளுதல் - முனிவரின் சாபத்தால் ஐராவதம் அதனுடைய வெண்மைநிறம் இழந்து காட்டுயானையாக மாறிப் பூலோகத்தில் காடுகளில் சுற்றித் திரிந்தது. நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் இறுதியில் கடம்ப வனத்தில் பொற்றாமரைக் குளத்தினையும், சொக்கநாதரையும் கண்டு பொற்றாமரைத் தீர்த்த நீரினைக் கொண்டு அபிசேகம் செய்து பொற்றாமரையால் சொக்கநாதரை வழிபட்டது.

ஐராவதத்தின் வழிபாட்டில் மனம் மகிழ்ந்த சோமசுந்தரேசுவரர் அதற்குக் காட்சி அருளி “உனக்கு வேண்டிய வரம் கேள்”  என்றார்.   அது கேட்ட ஐராவதம் பெரிதும் மகிழ்ந்து அருள்மிகு சோமசுந்தரேசுவரரைப் பணிந்து, “தங்களது விமானத்தினை தாங்கும் எட்டு யானைகளோடு நானும் ஒன்பதாவது யானையாகித் இந்த இந்திர விமானத்தைத் தாங்கவேண்டும், தங்களைப் பிரியாது இருக்க வேண்டும்.” என்று வேண்டிக் கொண்டது.  அதற்கு சொக்கநாதரும் “இந்திரன் என்னிடம் மிகுந்த அன்பு பூண்டவன். ஆதலால் அவனை நீ சுமப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும்” என்று கூறி பல வரங்களை அருளினார்.  வெள்ளையானை சோமசுந்தரருக்கு மேல்திசையில் ஐராவத தீர்த்தத்தையும், ஐராவதேச்சுரர் லிங்கத்திருமேனியையும், ஐராவத விநாயகப் பெருமானையும் உருவாக்கி வழிபட்டு வந்தது.

இந்திரன் தனது வெள்ளை யானையின் சாபம் நீங்கப் பெற்றதை அறிந்து அதனை அழைத்துவர தேவர்களை அனுப்பினான். அவர்களிடம் அந்த யானை “வருவேன்” என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டது.  பின் சொக்கநாதருக்கு கீழ்திசையில் ஐராவதநல்லூர் என்ற ஊரினை உருவாக்கியும், அவ்வூரில் இந்திரேச்சுரர் என்ற லிங்கத்தை உண்டாக்கியும் வழிபட்டு வந்தது.  இந்திரன் மீண்டும் தேவர்களை அனுப்பி ஐராவதத்தை அழைத்து வரச் சொன்னான். வெள்ளை யானையும் இந்திரனின் வேண்டுகோளை ஏற்று தேவலோகம் சென்றது.

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகட்டும் -  இந்திரனின் வாகனமாகிய ஐராவதம் என்ற வெள்ளையானை வழிபட்ட ஐராவதேச்சுரரை நாமும் வழிபடுவோம்.  இந்திரனின் தலைக்குவந்த ஆபத்து அவனது தலையிலிருந்த கீரிடத்துடன் நீங்கியது போன்று, சாபம் நீங்கி ஐராவதம் பொழிவு பெற்றது போன்று, நமது தீவினைகளும் இறையருளால் நீங்கப் பெற்று, இம்மையில் எல்லா வளங்களும் பெற்று, மறுமையில் இந்திரப் பதவி பெற்று இறுதியில் வீடுபேற்றினைப் பெறுவோம்.  

தல இருப்பிடம் -  மதுரை வண்டியூர் தெப்பக்குளத்திற்கு அருகே 1 கி.மீ. தொலைவில் ஐராவதநல்லூர் உள்ளது.

----------------------------------------------------

ஐராவதம் ஐராவதத் தீர்த்தத்தில் நீராடி, ஐராவத கணபதியை வணங்கி, ஐராவதேசுவரரை பணிந்த நிகழ்வைக் குறிப்பிடும் திருவிளையாடல் புராணம் 

பாடல் எண் 467
விடைகொடு வணங்கி யேகும்வெள் ளானை
    மேற்றிசை யடைந்துதன் பெயரால்
தடமுமற் றதன்பா லரனையுங் கணேசன்
     றன்னையுங் கண்டருச் சனைசெய்
திடையறா வன்புந் தானுமங் கிருக்கு
     மெல்லையிச் செய்திகேட் டருள்கூர்
கடவுளர் பெருமா னுழையரை விளித்தெங்
     களிற்றினைக் கொணர்கென விடுத்தான்.

விடைகொடு வணங்கி ஏகும் வெள்ளாணை
    மேல் திசை  அடைந்து தன் பெயரால்
தடமும் மற்று அதன் பால் ஆனையும் கணேசன் 
    தன்னையும் கண்டு அருச்சனை செய்து
இடையறா அன்பும் தானும் அங்கு இருக்கும்
    எல்லை இச் செய்தி கேட்டு அருள் கூர்
கடவுளர் பெருமான் உழையரை விளித்து எம்
    களிற்றினைக் கொணர்க என விடுத்தான்.

பொருள் -  விடை பெற்று வணங்கிச் செல்லும் வெள்ளையானையானது, மேற்குத் திக்கினை யடைந்து,  தனது பெயரால், ஓர் பொய்கையினையும், அப் பொய்கையில் சிவபிரானையும் மூத்த பிள்ளையாரையும் பிரதிட்டை செய்து,  அருச்சித்து,  நீங்காத அன்புந் தானுமாக அங்கிருக்கும் பொழுதில், இச் செய்தியைக் கேள்வியுற்று, கருணைமிக்க தேவேந்திரன், ஏவலாளரை அழைத்து,  எமது யானையைக் கொண்டு வாருமென அனுப்பினான்.

-------------------

பாடல் எண் 468
வல்லைவந் தழைத்தார் தம்மைமுன் போக்கி
     வருவலென் றெழுந்துகீழ்த் திசையோர்
எல்லைவந் தோரூர் தன்பெய ராற்கண்*
     டிந்திரேச் சுரனென+விறைவன்
றொல்லைவண் பெயரா லொன்றுகண் டரனைத்
     தூயபூ சனைசெய்தங் கிருப்பக்
கல்லைவன் சிறகு தடிந்தவ னின்னுங்
     களிறுவந் திலதெனப் பின்னும்.


வல்லை வந்து அழைத்தார் தம்மை முன் போக்கி
                   வருவல் என்று எழுந்து கீழ்த் திசை ஓர்
எல்லை வந்து ஓர் ஊர் தன் பெயரால் கண்டு
                   இந்திரரேச் சுரன் என இறைவன்
தொல்லை வண் பெயரால் ஒன்று கண்டு அரனைத்
                    தூயபூசனை செய்து அங்கு இருப்பக்
கல்லை வன் சிறகு தடிந்தவன் இன்னும் களிறு
                    வந்திலது எனப் பின்னும்.

பொருள் - விரைந்து வந்து அழைத்தவர்களை, வருவேன் என்று கூறி, முன்னே போகச் செய்து, அவணின்றும் எழுந்து கிழக்குத் திக்கில் ஓர் இடத்தை எய்தி, ஓர் ஊர் தன் பெயரால் அமைத்து,  தன் தலைவனது பழமையான அழகிய பெயரால்,  இந்திரேச்சுரன் என்று ஓர் சிவலிங்கமமைத்து,  அவ்விறைவனைத் தூய்மையான பூசனை செய்து கொண்டு அங்கேயே இருக்க, மலைகளைச் சிறகின் கண் வெட்டியவனாகிய இந்திரன்,  இன்னமும் யானை வரவில்லை என்று மீளவும்.

------------------------------------

பாடல் எண் 469.

மனத்தினுங் கடிய தூதரை விடுப்ப
     வானடைந் திறைவனை வணங்கிப்
புனத்தினுங் கடிய கல்லினும் பன்னாட்
     புன்கணோ யுறவரு சாபங்
கனத்தினுங் கரிய கண்டனைக் கண்டு
     களைந்ததுங் கிளந்துதிக் கயத்தின்
இனத்தினுங் கழிந்த தெய்வத வேழ
     மினிதுவீற் றிருந்தது மாதோ.


மனத்தினும் கடிய தூதரை விடுப்ப
    வான் அடைந்து   இறைவனை வணங்கிப்
புனத்தினும் கடிய கல்லினும் பன்னாள்
    புன்கணோ உற வரு சாபம்
கனத்தினும் கரிய கண்டனைக் கண்டு
    களைந்ததும் கிளந்து இக் கயத்தின்
இனத்தினும் கழிந்த தெய்வத வேழம்
    இனிது வீற்று இருந்தது மாதோ.

பொருள் -  மனத்தினை விட விரைந்து செலவினையுடைய தூதர்களை அனுப்ப (அவர்களோடும்),  விண்ணுலகை எய்தி இந்திரனை வணங்கி,  காட்டிலும் வலிய மலைகளிலும்,  பலநாடகள் வரை, துன்ப நோயானது மிகவந்த சாபத்தினை (நுகர்ந்ததும்), முகிலினுங் கரிய மிடற்றினையுடைய சோமசுந்தரக் கடவுளை, தரிசித்து,  (அச்சாபத்தைப்) போக்கியதும், கூறி, எண்டிசை யானைகளாகிய இனத்தினும், மிக்க தெய்வத்தன்மை பொருந்திய வெள்ளை யானையானது,  இனிதாக வீற்றிருந்தது .

------------------------------

பாடல் எண் 470

குடவயி னயிரா வதப்பெருந் தீர்த்தங்
     குடைந்தயி ராவத கணேசக்
கடவுளைத் தொழுதை ராவதேச் சுரத்துக்
     கடவுளைப் பணிந்தவர்
சாபத் 
தொடர்பினும் பாவத் தொடர்பினும் கழிவர்
     சுராதிபன் களிறுசென் னெறிபோய்
இடர்கெட வையை படிந்துதென் கரையி
     லிந்திரேச் சுரனடி பணிவார்.  
470.

குடவயின் அயிரா வதப் பெரும் தீர்த்தம் குடைந்து அயிராவத கணேசக்
கடவுளைத் தொழுது ஐராவதேச் சுரத்துக் கடவுளைப் பணிந்தவர் சாபத்
தொடர்பினும் பாவத் தொடர்பினும் கழிவர் சுராதிபன் களிறு செல் ஏறிபோய்
இடர் கெட வைகை படிந்து தென் கரையில் இந்திரேச் சுரன் அடி பணிவோர்.

பொருள் - மேற்குத் திசையிலுள்ள, பெருமை பொருந்திய அயிராவத தீர்த்தத்தில் நீராடி, அயிராவத விநாயகக் கடவுளை வணங்கி, அயிராவதேச்சுரப் பெருமானைத் தொழுதவர்கள், சாபத் தொடர்ச்சியினின்றும், தீவினைத் தொடர்ச்சியி னின்றும், நீங்குவர்; தேவேந்திரனது வெள்ளையானையானது, சென்ற வழியிலே சென்று,  துன்பம் ஒழிய வையையாற்றில் நீராடி, அதன் தென்கரையி லெழுந்தருளி யிருக்கும் இந்திரேச்சுரனுடைய திருவடிகளை வணங்குபவர்கள் 


471.

இம்மையி லறமுன் மூன்றா லெய்திய பயனை யெய்தி
அம்மையின் மகவா னீரே ழரும்பத மளவும் வானில்
வெம்மையில் போக மூழ்கி வெறுப்புவந் தடைய வுள்ளச்
செம்மையில் விளைபே ரின்பச் சிவகதிச் செல்வ ராவார்.

இம்மையில் அறமுன் மூன்றால் எய்திய பயனை எய்தி
அம்மையின் மகவான் நீர் ஏழ் அரும் பதம் அளவும் வானில்
வெம்மை இல் போகம் மூழ்கி வெறுப்பு வந்து அடைய  உள்ளச்
செம்மையில் விளை பேரின்ப சிவகதி செல்வார் ஆவார்.

பொருள் -   இப்பிறவியில், அற முதலிய மூன்றானும் வரும்பயனை நுகர்ந்து,  மறுமையில்,  பதி னான்கு இந்திரர்களின் அரிய காலம் வரையும், வெப்பமில்லாத (குளிர்ந்த) போகத்தில் திளைத்து, (பின் அதில்) உவர்ப்புத் தோன்ற, மனத்தூய்மையில் விளைகின்ற,  பேரின்பத்தை யளிக்கும் பரமுத்தியாகிய செல்வத்தையுடையவராவார்

---------------------------------------

நன்றி

1) படங்கள் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. இந்தப் படங்களை இணையத்தில் பதிவு செய்து வைத்துள்ள அன்பர்களுக்கு நன்றி.

2) திருவிளையாடல் புராணம் பாடல்களைப் இணையதளத்தில் பதிவு செய்து வைத்துள்ள “தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திற்கு” நன்றி.

ஐராவதநல்லூரில் பழமையான சிவலிங்கம் கண்டெடுப்பு

ஐராவதநல்லூரில் 

பழமையான சிவலிங்கம் கண்டெடுப்பு

மதுரை தெப்பக்குளம் முதல் விரகனூர் இடையே 60 அடி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மதுரையில் சாலை பணியின் போது, ஐராவதநல்லூர் அருகே கொந்தகை கால்வாய் பகுதியில் சாலையை தோண்டியபோது,  2 அடி உயரமுள்ள சதுஸ்ர சிவலிங்க சிலை கண்டெடுக்கப்பட்டது. 

இதனையடுத்து, அந்த சிவலிங்க சிலை, ஐராவதநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ் மூலமாக, தெற்கு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் மூலமாக மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள அரசு அருங்காட்சிய காப்பாளர் மருது பாண்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.

முதற்கட்ட ஆய்வில், சதுஸ்ர வடிவ லிங்க வழிபாடு கி.பி. 10 மற்றும் 11ஆம் நூற்றாண்டுகளில் பயன்பாட்டில் இருந்துள்ளது என்பதால் இது 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் முழுமையான ஆய்வுக்குப் பின்னர் தெயிவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி = https://www.instanews.city/tamil-nadu/madurai/madurai-south/shivalingam-found-during-road-works-madurai-1023321?infinitescroll=1


Monday, 12 December 2022

ஐஞ்சிறுகாப்பியங்களில் காசி

ஐஞ்சிறுகாப்பியங்களில் காசி

காசி நாட்டினும் சேடிய நாட்டினும் காணா - நீலகேசி:1 44/2
காசிநாட்டு அரசன் செங்கோல் கதிர் முடி கச்சன் என்பான் - சூளாமணி:6 536/2

நன்றி = http://tamilconcordance.in

கலிங்கத்துப் பரணியில் காசிபன்

கச்சியப்ப சிவசாரிய சுவாமிகள்  அருளிச் செய்த  கந்தபுராணம் -
“காசிபன்” புலம்புறு படலம்


   காசிபன் (1)
காதல் கூர்தரு மரீசி மகன் ஆகி வளரும் காசிபன் கதிர் அருக்கனை அளித்த பரிசும் - கலிங்:186/2

நன்றி 
http://tamilconcordance.in

--------------------------------

காசிபனார் என்பவர் அதிதியிடம் தேவர்களையும்திதியிடம் அசுரர்களையும் பெற்ற ஒருமுனிவர். 
காசிபனார் எழுதியது வள்ளுவமாலை. 14.  

--------------------------------

 கீரன் என்னும் இந்த அரசப் புலவரின் தந்தை காசிபன்.
 இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் உள்ளது. 

நற்றிணை 248 .
சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ,
பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்ப,
தண் புதல் அணிபெற மலர, வண் பெயல்
கார் வரு பருவம் என்றனர்மன்-இனி,
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர்,
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும்
பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும்
இன மயில் மடக் கணம் போல,
நினை மருள்வேனோ? வாழியர், மழையே! (நற்றிணை 248)

--------------------------------
கச்சியப்ப சிவச்சாரிய சுவாமிகள்
அருளிச் செய்தகந்தபுராணத்தில்   'காசிப' முனிவர் இடம் பெற்றுள்ள பாடல்களின் தொகுப்பு 

508.
மறை தேவரும் வசிட்டன் மரீசிமிகக்
குறி தாம் முனியத் திரி கோதமன் நல்
அறிவால் உயர் காசிபன் ஆதியராம்
துறவோர் தமது ஆற்றல் தொலைத்திலனோ.

1785.
வீறு காசிபன் சிறார்களாய் மேவிய அறுபான்
ஆறு கோடியது ஆகிய அவுணருக்கு அரசன்
மாறு இல் மங்கல கேசி ஆம் அரக்கியை மணந்து
பேறது ஆகவே சுரசை என்று ஒரு மகள் பெற்றான்.

1791.
வாச மாமலர் மடந்தையும் வந்து அடி வணங்கப்
பேச ஒணாதது ஓர் பேர் அழகு உருக் கொடு பெயர்ந்து
காசிபன் தனை அடைந்து நின் வல்லபம் காட்டி
ஆசை பூட்டியே அவனொடும் புணருதி அல்லில்.

1795.
மயிலை அன்னவள் அவுணர் தம் மன்னற்கும் இனைய
செயலை ஓதியே அவன் விடையும் கொடு சென்று
கயிலை என்ன நீறு ஆடியே காசிபன் இருந்து
பயிலும் நோன்பு உடை எல்லையை நாடியே படர்ந்தாள்.

1799.
சென்ற மாயை அக் காசிபன் இருக்கையில் திருவாழ்
மன்றல் வாவியும் தடங்களும் சோலையும் மணிசெய்
குன்று மாமலர்ப் பள்ளியும் மண்டபக் குழாமும்
தன் தன் ஆணையால் துண் எனச் சூழ்தரச் சமைத்தாள்.

1800.
இனைத்தெலாம் அவண் வருதலும் எந்தை தன் அடியை
மனத்தினில் கொடு பொறியினை உரத்தினால் வாட்டித்
தனித்து நோற்றிடும் காசிபன் புகுந்த அத் தகைமை
அனைத்தும் நோக்கி ஈது என்கொல் என்று அதிசயம்   அடைந்தான்.

1849.
யாது நின் குலம் யாது நின் வாழ் பதி
யாது நின் பெயர் யார் உனைத் தந்தவர்
ஓதுவாய் என்று உரைத்தனன் உள்ளுறு
காதலான் மிகு காசிபன் என்பவே.

1857.
மற்று இவ் வண்ணம் மயில் புரை சாயலாள்
சொற்ற காலை அனையவள் சூழ்ச்சியை
முற்றும் ஓர்ந்து முதிர் கலை யாவையும்
கற்று உணர்ந்திடு காசிபன் கூறுவான்.

1860.
ஈதலான் மற்று எனக்கு ஒரு பேறு இலை
ஆதலால் உனையே அடைந்தேன் எனக்
காதல் மாதும் அக் காசிபற் கண் உறீஇ
ஓதலாம் பரிசு ஒன்றை உணர்த்துவாள்.

1887.
தந்தை காசிபன் என்று ஓதும் தவமுனி அவன் பால் சார
வந்துளாள் யாயே அன்றோ மற்று இவர் தலைப் பெய்கின்ற
முந்து உறு புணர்ச்சி காண்டல் முறை கொலோ  புதல்வற்கு என்னாச்
சிந்தை செய்து அகன்றான் போன்று தினகரக் கடவுள் சென்றான்.

1903.
ஆனதோர் காலையில் அமரர் தம்மையும்
தானவர் தம்மையும் தந்த காசிபன்
வானகம் எழுதரும் மதியின் தெண்ணிலா
மேனியது அடைதலும் வெதும்பினான் அரோ.

1913.
இனையன மருட்கையால் இசைத்த காசிப
முனிவரன் என்பவன் முன்னை மாயையை
நினைபவன் ஆகியே நெடிது காதலால்
அனையவள் தனை விளித்து அரற்றல் மேயினான்.

1922.
கந்தார் மொய்ம்பில் காசிபன் என்போன் கடிது அம்கண்
வந்தாள் செய்கை காணுதலோடு மகிழ்வு எய்தி
அந்தா உய்ந்தேன் யான் என மின்கண்டு அலர்கின்ற
கொந்தார் கண்டல் போல் நகையொடும் குலவு உற்றான்.

1931.
புல்லலும் எதிர் தழீஇப் புகரில் காசிபன்
தொல்லையில் உணர்வொடு தொலைவில் செய்தவம்
வல்லை இல் வாங்குறு மரபில் அன்னவன்
மெல் இதழ் அமிர் தினை மிசைதல் மேயினாள்.

1960.
நீங்கிய சூர் முதல் நெறியின் ஏகியே
ஆங்கு அவர் அடி தொழுது அருள் செய் மேலையீர்
யாங்கள் செய்கின்றது என் இசைமின் நீர் என
ஓங்கிய காசிபன் உரைத்தல் மேயினான்.

2270.
அன்னது சரதமே அறிதிர் ஆதலால்
இன்னமும் மொழிகுவன் இயற்று நோன்பு என
முன்னுறு காசிப முனிவன் செப்பலும்
நல் நய மாயவள் நகைத்துக் கூறுவாள்.

2301.
ஆசிகள் செய்து நின் அரிய நோன்பு ஒரீஇக்
காசிப மெலிவது கழறுக என்றலும்
பேசினன் நிகழ்ந்தன பிரமன் கேட்டு உளம்
கூசினன் அவன் மனம் கொள்ளத் தேற்றுவான்.

2308.
மாறு அகல் நான்முகன் வாய்மை தேர்தலும்
தேறினன் மையல் நோய் தீர்ந்து காசிபன்
ஏறு அமர் கடவுளை இதயத்து உன்னியே
வீறு ஒடு நோற்றனன் வினையின் நீங்குவான்.

2310.
காசிபன் மாயையைக் கலந்த வண்ணமும்
ஆசுறும் அவுணர்கள் வந்த வண்ணமும்
பேசினம் அங்கு அவர் பெற்ற பேற்றினை
ஈசனது அருளினால் இனி இயம்புவாம்.

2389.
காலம் எண் இல தவம் புரி காசிப முனிவன்
பாலன் ஈண்டையில் வலியினோர் மகம் அது பயில
ஏல நீடு தீ உலகு எலாம் உருக்கியது என்னில்
மேலவன் செய்யும் பரிசு எலாம் யாவரே விதிப்பார்.

2404.
மாயை தரும் புதல்வா மா தவம் செய் காசிபற்கு
நேயம் உருகா நிருதர் குலத்து இறைவா
காயம் உடன் நின்னை யான் காணேனால் எங்கு  ஒளித்தாய்
தீய மகம் பல நாள் செய்து பெற்ற பேறு இதுவோ.

2431.
தந்தை ஆவான் காசிபனே தாயும் மாயை தான் என்பான்
மைந்தர் யாங்கள் ஒருமூவர் மக்கள் பின்னும் பலர் உண்டால்
எம் தம் அன்னை பணி தன்னால் யாங்கள் ஈசன்  தனக்காக
இந்த வனத்தில் மூவரும் இவ் வேள்வி தன்னை இயற்றினமே.

2467.
உன்னி உள்ளத்து உணர் உறு காசிபன்
தன்னின் வந்த தனயரை நோக்கியே
முன்னை நும் கண் முதல் குருப் பார்க்கவன்
அன்னவன் கண் அடைகுதிர் அன்பினீர்.

2476.
ஓங்கு வேள்வி உலப்புறச் செய்ததும்
ஆங்கனம் வந்து அரன் அருள் செய்ததும்
தாங்கரும் வளம் தந்ததும் காசிபன்
பாங்கர் வந்த பரிசும் பகர்ந்து மேல்.

2632.
அடைதலும் நடுவன் தன்பால் ஆங்கு ஒர் தூது எய்தி  நம்தம்
கடி நகர் கலந்த அந்தக் காசிப முனிவன் மைந்தர்
கொடிய வெம் சேனை என்னக் கூற்று எனும் கடவுள்  கேளா
இடி உறும் அரவம் என்ன ஏங்கினன் இரங்கு கின்றான்.

2688.
வாசவன் வளத்தை எல்லாம் அவுணர்கள் வவ்விச் செல்லப்
பேசரு மகிழ்ச்சி கொண்டு பின் அவர் பாங்கு ஏகக்
காசிபன் அளித்த மேன்மைக் காதலன் அனிகம் சூழ
ஓசை கொள் மறைகள் ஆர்க்கும் உயர் மகலோகம் புக்கான்.

2695.
காதலான் மிகு காசிபன் மைந்தன்
ஆதலால் அவுணர்க்கு இறை நின் மூ
தாதையான் சரதம் இது நின் சீர்
ஏதும் என் புகழ் யான் பிறன் அன்றே.

2714.
மாசு அறு பேர் ஒளி மான மீமிசைத்
தேசிகன் விரைவொடு செல்லும் எல்லையில்
காசிபன் அருள் மகன் கண்டு சேண் இடை
ஈசனை எதிர்ந்து என எதிர் கொண்டு ஏகினான்.

2718.
பங்கம் இல் காசிபன் பன்னி ஆகிய
நுங்கையைப் பயந்துளான் நுனித்த கேள்வியான்
சங்கை அற்று இருந்த தானவரைத் தாங்கினான்
எங்களுக்கு ஓர் துணை என்னும் தன்மையான்.

2780.
கண்டு தானவர் காசிபன் காதலன்
புண்ட ரீகப் பொலன் கழல் தாழ்ந்து எழா
அண்ட ஒணா மகிழ்வால் அடும் தேறலை
உண்டு உளாரின் உளம் களிப்பு எய்தினார்.

3071.
குணப்பெரும் குன்றம் அன்ன கோது இலா அறிவன்  இன்ன
புணர்ப்பினை இசைத்தலோடும் புரந்தரன் பொருமல்  நீங்கிக்
கணிப்பு இலா மகிழ்ச்சி எய்திக் காசிபன் சிறுவர் கொண்ட
அணிப் பெரும் திருவும் நாடும் அடைந்தனன் போன்று சொல்வான்.

3355.
காசிபன் தரும் கலதி கூற்றுவன்
பாசம் அன்ன கைப் பட்டு விம்மினாள்
வாசவன் தனி மனைவி வெம் கொலைப்
பூசை வாய்ப்படும் புள்ளின் பேடை போல்.

4267.
ஆயதோர் காசிபன் அதிதி தங்கள் பால்
சேயனாய் வந்த ஒரு சிந்தன் போன்று உலாய்த்
தூயவான் புவி எலாம் அளப்பச் சூழ்ந்திடு
மாயனே இவன் என மதிக்கின்றார் சிலர்.

4294.
தாதை ஆகியோன் காசிபன் ஆங்கு அவன் தனயன்
ஆதலால் உனக்கு அமரரைச் சிறை செய்வது அறனோ
வேத மார்க்கமும் பிழைத்தனை சிறு பொருள் விழைந்தாய்
நீதியால் உலகு அளிப்பதே அரசர் தம் நெறியே.

5472.
சீற்றமே தகு காசிபன் மதலை போர் செய்யும்
ஆற்றலார் தமை அடுவன் ஆல் விரைந்து என மதித்துக்
காற்றின் முந்து செல் தேர் இடைக் கடிது வந்து எய்திக்
கூற்றின் வெம் பசி தணிப்பது ஓர் சிலையினைக்   குனித்தான்.

5674.
என்று காசிபன் இடந்தனில் வந்தான்
அன்று தான் முதலா அசுரேசன்
வென்றியே கொடு வியப்பொடு இருந்தான்
உன் தன் ஓடு பொருது ஓடினன் இன்றே.

6943.
மைம் மலை இடை விராய் வதிந்த மோட்டுடைக்
கைம் மலை அரற்றியே கவிழ்வ காசிபன்
செம் மலை அரியென நோக்கித் தேம்பியே
விம்மலை எய்தியே வீழ்வது என்னவே.

7523.
துணிப்பு உறும் எல்லை வல்லே சுடர்க்கணை அநந்த  கோடி
தணப்பு அற விடுத்த லோடும் சண்முகன் அவற்றை எல்லாம்
கணைப் பெரு மழையால் மாற்றிக் காசிபன் தனது  செம்மல்
அணிப் படு தோள் மேல் பின்னும் ஆயிரம் பகழி   உய்த்தான்.

7559.
தொடர்ந்து தன் மனத்தில் செல்லும் தொல்லை மால் இரதத்தோடும்
கடந்த பேர் ஆடல் மிக்க காசிபன் தனயன் நின்ற
இடந்தலைப் படலும் அன்னான் எந்தையோடு இகல்   போர் ஆற்றி
அடுந்திறல் மாயை நீரால் அப்புறத்து அண்டம் போனான்.

சிலப்பதிகாரத்தில் காசி

'காசி' என்ற சொல் உள்ள
பாடல்கள்
1,
5,
4311273, ௐ

சிலப்பதிகாரத்தில் கங்கை

'கங்கை' என்ற சொல் உள்ள பக்கங்கள்
135488274281328456520598599
76079010551063106810791090109110931107
1110111111391154115611971234123512561264
128812891290

திருவிளையாடல் புராணத்தில் 'கங்கை'

திருவிளையாடல் புராணத்தில் 
'கங்கை' என்ற சொல் உள்ள பாடல்கள்

145.வழுக்கு அறு வாய்மை மாண்பும் கங்கை தன் மரபின்                                                   வந்த 
விழுக்குடி பிறப்பு மூவர் ஏவிய வினை கேட்டு ஆற்றும் 
ஒழுக்கமும் அமைச்சாய் வேந்தர்க்கு உறுதி சூழ்                                                வினையும் குன்றா 
இழுக்கு அறு மேழிச் செல்வர் வள மறுகு இயம்பல்                                                   உற்றாம்.
54
243.கங்கை காளிந்தி வாணி காவிரி கண்ண வேணி 
துங்க பத்திரை தீம் பாலி தூய தன் பொருநை 
                                                      முன்னாச் 
சங்கையில் நதிகள் முற்றும் ஆடிய தவத்தின் பேறும் 
மங்கல மதுரை தன்னில் வைகலும் வதிவோர்க்கு 
                                                      எய்தும்.
11
257.ஆற்றினுக்கு அரசு ஆம் கங்கை காவிரி ஆதி                                                 ஆறும் 
வேற்று உருவாய் முந்நீர் வேலையும் பிறவும் காரும் 
தோற்றுமுன் தன்னை ஆட்டச் சுந்தர மூர்த்தி                                                 செம்கண் 
ஏற்றினன் கண்ட தீர்த்தம் ஆகும் ஈது எவ்வாறு                                                 என்னின்.
2
263.ஐய இங்கிலிங்க மூர்த்திக்கு ஆட்டவும் அடியே                                                 மூழ்கி 
உய்யவும் கங்கை ஆதி நதிகளும் உலகத்து                                                 உள்ளோர் 
மைஅறு தடாக நீரும் மற்று இலை இருமைப் பேறும் 
செய்ய ஓர் திர்த்தம் இங்கு உண்டாக்கு என செப்ப                                                   லோடும்.
8
288.முன்னவன் அருளிச் செய்த காரண முறையால்                                                   அன்றி 
இன்னம் இப் புனித வாவிக்கு ஏதுவால் எய்து                                                    நாமம் 
மின் அவிர் சடையான் சென்னி மேவிய கங்கை                                                   நீரில் 
பின்னது கலந்த நீரால் பெறும் சிவகங்கை என்றும்.
33
413.கங்கைமுதல் அளவு இறந்த தீர்த்தம் எலாம் போய்                                             படிந்து காசி காஞ்சி 
அம் கனக கேதார முதல் பதிகள் பலபணிந்து                                              அவுணன் கொன்ற 
பொங்கு பழி விடாது அழுங்கி அரா உண்ண மாசுண்டு                                                பொலிவு மாழ்கும் 
திங்களனை யான் கடம்ப வனத்து எல்லை                                      அணித்தாகச் செல்லு மேல்வை.
70
555.மங்கல தூரியம் முழங்க மால் யானை உச்சி மிசை                                                      வந்த பூத 
கங்கை முதல் ஒன்பது தீர்த்தமும் நிரப்பிக் கதிர்                                        விடு பொன் கடம் பூசித்துப் 
புங்கவரை மந்திரத்தீ வளர்த்து அமுதம் அருத்தி எரி                                                பொன்னால் செய்த 
சிங்க மணி ஆதனத்தை நேசித்துப் பூசித்துத் தெய்வம்                                                        ஏற்றி.
37
608.கிடைப்பன உருளால் பாரைக் ஈண்டு பாதலத்தின் எல்லை 
அடைப்பன பரந்த தட்டால் அடையவான் திசைகள் 
                                                        எட்டும் 
உடைப்பன அண்டம் உட்டி ஒற்றிவான் கங்கை நீரைத் 
துடைப்பன கொடியால் சாரி சுற்றுவ பொன் திண்தேர்கள்.
9
658.அம் கனகம் செய் தசும்பின வாடை பொதிந்தன தோடு                                                        அவிழ் 
தொங்கல் வளைந்தன மங்கையர் துள்ளிய கவரியின்                                                        உள்ளன 
கங்கையும் வாணியும் யமுனையும் காவிரியும் பல துறை                                                        தொறும் 
மங்கல தூரிய மார்ப்பன மதமலை மேலன வருவன.
59
708.கங்கை காவிரி ஆதிய நவநிதிக் கன்னியர் குளிர்                                                 தூங்கப் 
பொங்குவார் திரைக் கொழுந்து எனக் கவரிகள் புரட்ட                                            வெண் பிறைக் கீற்றுத் 
துங்க வாள் எயிற்று இருள் உடல் குழி விழிச்சுடர்                                              அழல் செம்பங்கிச் 
சங்கவார் குழைக் குறிய குண்டோதரன் தண் மதி                                                 குடை தாங்க.
109
726.திங்கள் என்று எழுந்து நம்மைச் சுடுவது என் செம்                                                 தீ என்பார் 
புங்கவன் சென்னி மீதும் கிடப்பதே போலும் என்பார் 
அங்கு அவற்கு இந்த வெப்பம் இலை கொல் என்று                                              அயிற்பார் ஆற்றக் 
கங்கை நீர் சுமந்தான் என்பார் அதனையும் காண்மின்                                                       என்பார்.
127
747.மங்கல மகளி ரோடும் காஞ்சன மாலை வந்து 
கங்கையின் முகந்த செம்பொன் கரக நீர் அனையார்                                                   ஆக்கத் 
திங்கள் அம் கண்ணி வேய்ந்த சிவபரம் சோதி பாத 
பங்கயம் விளக்கி அந்நீர் தலைப் பெய்து பருகி                                                   நின்றாள்.
148
814.கங்கை ஆறு அலம்பும் ஓசை கடுக்கை வண்டு                                                   இரங்கும் ஓசை 
மங்கல முழவின் ஓசை மந்திர வேத ஓசை 
செம்கை ஆடு எரியின் ஓசை திருவடிச் சிலம்பின்                                                         ஓசை 
எங்கணும் நிரம்பி அன்பர் இரு செவிக்கு அமுதம்                                                         ஊற்ற.
16
875.தீர்த்தன் இதழிச் சடை நின்றும் இழிந்து வரலால்                                                      சிவகங்கை 
தீர்த்தன் உருவம் தெளி வோர்க்கு ஞானம் தரலால்                                                      சிவஞான 
தீர்த்தம் காலில் கடுகி வரும் செய்தியாலே வேகவதி 
தீர்த்தம் கிருத மாலை என வைகை நாமம் செப்புவர்                                                      ஆல்.
27
884.திருத்த யாத்திரை அதிகம் அவற்ற அதிகம் சிவன் 
                                                        உருவாம் 
திருத்த ஆம் கங்கை முதல் திரு நதிகள் தனித் தனி 
                                                        போய்த் 
திருத்த மாடு அவதரித்த திரு நதிகள் தனித் தனி 
                                                        போய்த் 
திருத்தமாய் நிறைதலினால் அவற்று இகந்து திரை 
                                                        முந்நீர்.
9
1003.செம் கை நீண்டு உருண்டு கணுக்கள் பெற்று அடைவே                           சிறுத்திடில் செல்வமோடு இன்பம் 
தங்கும் வள் உகிர் சேந்து உருண்டு கண் உள்ளம்                           கவர்வதாய்ச் சர சரப்பு அகன்றால் 
அங்கு அவை நல்ல அகங்கை மெல் எனச் சேந்து                 இடை வெளி அகன்று இடை உயர்ந்து 
மங்கலமாய்ச் சில் வரைகளின் நல்ல இலக்கண வரை                                                      உள மாதோ.
37
1130.அந் நெடு நாடு நீங்கி ஆடல் ஏறு உயர்த்த தோன்றல் 
பொன் நெடும் சடையில் தாழ்ந்து புனிதம் ஆம்                                                      தீர்த்தக் காசி 
நல் நெடு நகரம் எய்தி நளிர் புனல் கங்கை நீந்திக் 
கல் நெடு நெறி அநேக காவதம் கடந்த பின்னர்.
19
1198.சிறிது நாள் கழிந்து அகன்ற பின் கங்கையில் சிறந்த 
மறுவிலா வடமீன் புரை கற்பினாள் வயிற்றில் 
குறிய ஆல வித்து அங்குரம் போன்று ஒரு குமரன் 
நிறையும் நீர் உலகு உருட்டு குடை நிழற்ற வந்து                                                       உதித்தான்.
4
1319.விடையினை ஆலம் உண்ட மிடற்றினை கங்கை                                                       தாங்குச் 
சடையினை கூற்றை வென்ற தாளினை மேரு சாபப் 
படையினை அடியேம் துன்பப் பாட்டினை நீக்கி ஆளும் 
நடையினை ஆகி எங்கள் நல் உயிர் காத்தல்                                                        வேண்டும்.
13
1325.புனித நீராடிக் கண்டி பூண்டு வான் கங்கை ஆதி 
வனிதையர் பசும் பொன் கும்ப வாசநீர் வடித்து நீட்டப் 
பனிமலர் சந்தம் கந்தம் அணிகலன் பசும் பொன்                                                         ஆடை 
இனையன பிறவும் ஈன்று கற்பகம் எடுத்துக் காட்ட.
19
1490.ஈறு இலான் செழியன் அன்புக்கு எளியவன் ஆகி                                                      மன்றுள் 
மாறி ஆடிய கூத்து என்சொல் வரம்பினது ஆமே                                                      கங்கை 
ஆறுசேர் சடையான் தான் ஓர் அரும் பழிக்கு அஞ்சித்                                                      தென்னன் 
தேறலா மனத்தைத் தேற்றும் திருவிளை ஆடல்                                                      சொல்வாம்.
1
1719.செம் கண் அரி மான் பிடர் சுமந்த தெய்வ மணிப்                                                   பூந்தவிசு ஏற்றிச் 
சங்கம் முழங்க மறை முழங்கச் சாந்தம் திமிர்ந்து தாது                                                         ஒழுகத் 
தொங்கல் அணிந்து தசாங்க விரைத் தூப நறு நெய்ச்                                                    சுடர் வளைத்து 
கங்கை மிலைந்த கடவுள் எனக் கருதிப் பூசை வினை                                                        முடித்தான்.
15
1732.காது வேல் அன்ன கண்ணார் கங்கை நீர் சுமந்தது                                                         ஏதுக்கு 
ஓதுமின் என்றார் நும்பால் உண் பலி ஏற்க என்றான் 
ஏது போல் இருந்தது ஐய இசைத்த செப்பு என்றார்                                                         ஈசன் 
கோது உறா அமுது அன்னீர் நும் கொங்கை போல்                                                 இருந்தது என்றான்.
9
1742.கங்கை கரந்து மணி கண்டம் கரந்து நுதல் கண் கரந்து                                                         ஒரு பால் 
மங்கை வடிவம் கரந்து உழையும் மழுவும் கரந்து மழ                                                         விடை ஊர் 
அம் கண் அழகர் வளை வணிகர் ஆகி ஏனம் அளந்து                                                         அறியாச் 
செம் கமலச் சேவடி இரண்டும் திரை நீர் ஞால மகள்                                                         சூட.
19
1936.மாறு கொள் வழக்குத் தீர்க்க வல்லவர் அருளினாலே 
சீறு கொள் வடிவேல் கண்ணாள் சிறு துயில் அடைந்தாள்                                                           மெய்யில் 
ஊறு கொள் கரணம் ஐந்தும் உற்று அறி கனவில் கங்கை 
ஆறு கொள் சடையார் வேதச் செல்வராய் அடுத்துச்                                                     சொல்வார்.
11
1975.விழி ஆயிரத் தோன் பழி தீர்த்தனை வேதியன் தன் 
கழியாத மாபாதகம் தீர்த்தனை கௌவைக் கங்கைச் 
சுழி ஆறு அலைக்கும் சடையாய் எனைத் தொட்டு 
                                                    அலைக்கும் 
பழியான் அதுந் தீர்த்து அருள் என்று பணிந்து வீழ்ந்தான்.
13
2044.தறிந்த இந்தனம் தினந்தோறும் தாங்கி நீள் பங்கி 
பறிந்து தேய்ந்து அழுந்திய தலை உடையராய்ப் பரிந்து 
மறிந்த கங்கையும் பங்கு உறை மங்கையும் காணா 
தெறிந்த இந்தனச் சுமை திரு முடியின் மேல் ஏற்றி.
14
2254.துங்க மா முகம் ஒன்றுமே சூகர முகமா 
அங்கம் யாவையும் மானுட ஆக்கைய ஆக்கிக் 
கங்கை நாயகன் கடவுளர் நாயகன் கயல் கண் 
மங்கை நாயகன் கருணை ஆம் திரு உரு மறைந்தான்.
62
2395.வங்கிய சேகரன் கோல் வாழும் நாள் மேலோர் வைகல் 
கங்கை அம் துறை சூழ் கன்னிக் கடிமதில் காசி தன்னில் 
பங்கயசூ முளரிப் புத்தேள் பத்து வாம் பரிமா வேள்வி 
புங்கவர் மகிழ்ச்சி தூங்க மறை வழி போற்றிச் செய்தான்.
2
2396.நிரப்பிய வழி நாள் நவ் நீர் ஆடுவான் நீண்ட வீணை 
நரப்பிசை வாணி சாவித்திரி எனும் நங்கை வேத 
வரப்பிசை மநு ஆம் ஆயத்திரி எனும் மடவா ரோடும் 
பரப்பிசைக் கங்கை நோக்கிப் படருவான் எல்லை.
3
2472.பிணி அவிழ் கோதையாள் ஓர் பேதை தன் பதி தன் 
                                                        ஊடல் 
தணிய வந்து அடியில் வீழத் தன்னிழல் அனையான் 
                                                       சென்னி 
மணி இடைக் கண்டு கங்கை மணாளனை ஒப்பீர் எம்மைப் 
பணிவது என் என்று நக்குப் பரிவு மேல் பரிவு செய்தாள்.
40
2611.குடைக்காடன் பசிக்கு அன்னக் குழி அருத்தி வேட்கை 
                                               அறக் கொடுத்த கங்கைச் 
சடைக் காடன் புலவர் இகம் தணிவித்த முறை இது மேல் 
                                                      தன்னைப் பாடும் 
தொடைக் காடன் பகன் திகழ்ந்த தென்னவனை முனிந்து 
                                               தன்னைத் தொழுது போன 
இடைக் காடன் உடன் போய்ப் பின்பு எழுந்து அருளிப் 
                              பிணக்கு அறுத்த இயல்பு சொல்வாம்.
1
2838.கங்கையைச் சடை முடியின் மேல் கரந்தனை அவள் 
                                                          போல் 
எங்கள் தம்மையும் கரந்திடு என்று இரந்து காவேரி 
துங்கபத்திரை ஆதி ஆம் நதிகளும் சூழப் 
பொங்க வீழ்வ போல் ஒலியலும் கவரியும் புரள.
40
2843.கொய்யுளைப் பரி எழுந்த தூள் கோப்ப வான் கங்கை 
வையை ஒத்த ஏழ் பசும் பரி செம்பரி மாவாச் 
செய்தது ஒத்தது சிந்துரம் திசைக் கய முகத்துப் 
பெய்தது ஒத்தது ஆல் ஒத்தது பெரும் பகல் மாலை.
45
2921.வாசி வாணிகர்க்குத் தென்னன் வெண் துகில் வரிசையாக 
வீசினான் பாணற்கு ஏவல் செய்தவர் வெள்கு வாரோ 
கூசிலா நேசர்க் காப்பான் குதிரையின் இழிந்து ஏற்றம் தத் 
தூசினை இரண்டாம் கங்கை என முடி சூடி நின்றார்.
123
2977.கங்கைப் புனல் வடிவாகிய கவ்வைத் திரை வைகைச் 
சங்கச்சரி அறல் ஆம் மலர்த் தார் ஓதியை நோக்கா 
வங்கக் கடல் பேர் ஊழியில் வருமாறு என எவரும் 
இங்கு அற்புதம் அடையப் பெருக என்றான் அருள் 
                                                       குன்றான்.
52
2989.அடுத்து ஆயிரம் குண்டோதரர் எதிர் ஏற்று இருந்து 
                                                      அகல் வாய் 
மடுத்தாலும் அடங்காது என மதிப்பார் இது தனையும் 
எடுத்து ஆயிரம் முக கங்கையின் இறைவன் சடை ஏறக் 
கொடுத்தால் அலது அடங்காது இதன் கொடும் கோபமது 
                                                      என்பார்.
64
3006.குறட்கு நீர் அருத்தி வைகைக் குடிஞையாய் ஒழுகும் 
                                                       கங்கை 
அறம் குழல் பிரிவின் ஆற்றாது அன்பினால் அவளைக் 
                                                       காண்பான் 
மறக் கயல் நெடும் கணாளை வஞ்சித்து வடிவம் மாறிப் 
புறப்படு வாரைப் போலப் போதுவார் போத மூர்த்தி.
15
3083.வீதி தொறும் வீழ்ந்து வீழ்ந்து இறைஞ்சி ஆலயத்து 
                                               எய்தி மெய்மை ஆன 
கோதி அறிவு ஆனந்தச் சுடர் உரு ஆம் சிவகங்கை 
                                               தோய்ந்து மேனி 
பாதி பகிர்ந்தவள் காணப் பரானந்த தனிக் கூத்து 
                                               பயிலா நிற்கும் 
ஆதி அருள் ஆகிய அம்பலம் கண்டு காந்தம் நேர் 
                                               அயம் போல் சார்ந்தார்.
92
3226.சிங்கம் அனையார் எழுது முறை எதிர் ஆற்று ஏற 
                                                       தெரிந்தமரர் 
அம் கண் நறும் பூமழை பொழிந்தார் அறவோர் துகில் 
                                                விண் எறிது ஆர்த்தார் 
கங்கை அணிந்தார் திருத்தொண்டர் கண்ணீர்க் கடலில் 
                                                       அமிழ்ந்தினார்
வெம் கண் அமணர் நடுங்கி உடல் வெயர்வைக் கடலில் 
                                                       அமிழ்ந்தினார்.
53
3317.மங்கல ஓரை வருதினத்தில் வான் இழிந்த 
கங்கை படிந்து உலக நாயகனைக் கை தொழுது 
புங்கவர் முன் சங்கற்பம் செய்து அனுச்சை பூண்டு ஒழுகி 
அங்கு அவர் வாய் ஆசி மொழி கேட்டு அகம் மகிழ்ந்தே.
7
3335.சாம கண்டத்தன் தன்னைத் தான் அருச்சித்த தென்னர் 
கோமகன் பிரம சாயை குறைத்தது இப் பதியாம் கங்கை 
மா மகம் தோறும் வந்து வந்துதல் படிந்தோர் விட்டுப் 
போ மகம் போக மூழ்கும் புனித நீர்ப் பதியைக் காண்மின்.
25